VIDEO
18 அஷ்டாத³ஶத³ஶக꞉ - ராமகதா²
ஸூர்யான்வயே தா³ஶரதீ² ரமேஶோ ராமாபி⁴தோ⁴(அ)பூ⁴த்³ப⁴ரதோ(அ)த² ஜாத꞉ .
ஜ்யேஷ்டானுவர்த்தீ க²லு லக்ஷ்மணஶ்ச ஶத்ருக்⁴னநாமா(அ)பி ஜக³த்³விதா⁴த்ரி .. 18-1..
விமாத்ருʼவாக்யோஜ்ஜி²தராஜ்யபோ⁴கோ³ ராம꞉ ஸஸீத꞉ ஸஹலக்ஷ்மணஶ்ச .
சரன் ஜடாவல்கலவானரண்யே கோ³தா³வரீதீரமவாப தே³வி .. 18-2..
தம்ʼ வஞ்சயன் ராவண ஏத்ய மாயீ ஜஹார ஸீதாம்ʼ யதிரூபதா⁴ரீ .
ராமஸ்ய பத்னீவிரஹாதுரஸ்ய ஶ்ருத்வா விலாபம்ʼ வனமப்யரோதீ³த் .. 18-3..
ஶ்ரீநாரதோ³(அ)ப்⁴யேத்ய ஜகா³த³ ராமம்ʼ கிம்ʼ ரோதி³ஷி ப்ராக்ருʼதமர்த்யதுல்ய꞉ .
த்வம்ʼ ராவணம்ʼ ஹந்துமிஹாவதீர்ணோ ஹரி꞉ கத²ம்ʼ விஸ்மரஸீத³மார்ய .. 18-4..
க்ருʼதே யுகே³ வேத³வதீதி கன்யா ஹரிம்ʼ ஶ்ருதிஜ்ஞா பதிமாப்துமைச்ச²த் .
ஸா புஷ்கரத்³வீபக³தா தத³ர்த²மேகாகினீ தீவ்ரதபஶ்சகார .. 18-5..
ஶ்ருதா தயா(அ)பூ⁴த³ஶரீரிவாக் தே ஹரி꞉ பதிர்பா⁴வினி ஜன்மனி ஸ்யாத் .
நிஶம்ய தத்³த்⁴ருʼஷ்டமனாஸ்ததை²வ க்ருʼத்வா தபஸ்தத்ர நினாய காலம் .. 18-6..
தாம்ʼ ராவண꞉ காமஶரார்த்³தி³த꞉ ஸம்ʼஶ்சகர்ஷ ஸா ச ஸ்தவனேன தே³வீம் .
ப்ரஸாத்³ய கோபாருணலோசநாப்⁴யாம்ʼ நிரீக்ஷ்ய தம்ʼ நிஶ்சலமாததான .. 18-7..
ஶஶாப தம்ʼ ச த்வமரே மத³ர்தே² ஸபா³ந்த⁴வோ ராக்ஷஸ நங்க்ஷ்யஸீதி .
ஸ்வம்ʼ கௌணபஸ்ப்ருʼஷ்டமஶுத்³த⁴தே³ஹம்ʼ யோகே³ன ஸத்³யோ விஜஹௌ ஸதீ ஸா .. 18-8..
ஜாதா புன꞉ ஸா மிதி²லேஶகன்யா காலே ஹரிம்ʼ த்வாம்ʼ பதிமாப தை³வாத் .
ஸ ஹன்யதாம்ʼ ஸத்வரமாஶரேந்த்³ரஸ்தந்நாஶகாலஸ்து ஸமாக³தஶ்ச .. 18-9..
தத³ர்த²மாராத⁴ய லோகநாதா²ம்ʼ நவாஹயஜ்ஞேன க்ருʼதோபவாஸ꞉ .
ப்ரஸாத்³ய தாமேவ ஸுரா நராஶ்ச காமான் லப⁴ந்தே ஶுப⁴மேவ தே ஸ்யாத் .. 18-10..
இத்யூசிவாம்ʼஸம்ʼ முனிமேவ ராம ஆசார்யமாகல்ப்ய ஸலக்ஷ்மணஸ்த்வாம் .
ஸம்பூஜ்ய ஸுஸ்மேரமுகீ²ம்ʼ வ்ரதாந்தே ஸிம்ʼஹாதி⁴ரூடா⁴ம்ʼ ச புரோ த³த³ர்ஶ .. 18-11..
ப⁴க்த்யா நதம்ʼ தம்ʼ த்³ருதமாத்த² ராம ஹரிஸ்த்வமம்ʼஶேன மதா³ஜ்ஞயைவ .
ஜாதோ நரத்வேன த³ஶாஸ்யஹத்யை த³தா³மி தச்ச²க்திமஹம்ʼ தவேஹ .. 18-12..
ஶ்ருத்வா தவோக்திம்ʼ ஸ ஹனூமதா³த்³யை꞉ ஸாகம்ʼ கபீந்த்³ரை꞉ க்ருʼதஸேதுப³ந்த⁴꞉ .
லங்காம்ʼ ப்ரவிஷ்டோ ஹதராவணாத்³ய꞉ புரீமயோத்⁴யாமக³மத்ஸஸீத꞉ .. 18-13..
ஹா தே³வி ப⁴க்திர்ன ஹி மே கு³ருஶ்ச ந சைவ வஸ்துக்³ரஹணே படுத்வம் .
ஸத்ஸங்க³திஶ்சாபி ந தே பதந்து க்ருʼபாகடாக்ஷா மயி தே நமோ(அ)ஸ்து .. 18-14..
தசகம் 18
ராமகதை
சூர்யவம்சத்தில் அயோத்தியில் தசரதன்
என்னும் அரசன்
அரசாண்டு வந்தான் .
அவருக்கு ராமன் ,
பரதன் , லக்ஷ்மணன் ,
சத்ருக்னன் என்னும்
நான்கு குமாரர்கள்
பிறந்தார்கள் . தாசரதி என்னும்
பெயர் நால்வருக்கும்
பொருந்தும் . கோசலை க்கு கோ கௌச லை க்கு
ராமனும் ,
கைகேயிக்கு பரதனும் , சுமித்திரைக்கு சு ப த்திரைக்கு
லக்ஷ்மணனும் சத்ருக்னனும்
பிறந்தார்கள் .
2. விமாத்ரு
வாக்யோஜ் , ஜித
ராஜ்யபோகோ
ராம ;
ஸஸீத :, ஸஹலக்ஷ்மணச்ச
சரண்
ஜடாவல் , கலவாந்
அரண்யே
கோதாவரீ
தீரம் , அவாப
தேவி !
தசரத குமாரர்கள்
வளர்ந்து வந்தார்கள் .
யுவராஜா பட்டத்திற்கான
நேரமும் வந்தது .
மூத்த குமாரனான
ராமனுக்குப் பட்டம்
கட்ட முடிவு
செய்தனர் . ஆனால்
கைகேயி , தன்
மகன் பரதனுக்கே
பட்டம் சூட்ட
வேண்டும் , அது
தவிர ராமன்
14 ஆண்டுகள் காட்டிற்குப்
போகவேண்டும் என்று
அடம் பிடித்தாள் .
தசரத மகாராஜாவால்
ஒன்றும் செய்ய
முடியவில்லை . தன்
பத்னியான சீதையையும்
உடன் அழைத்துக்
கொண்டு ராமன்
புறப்பட்டான் . லக்ஷ்மணனும் அவர்களுடனே
சென்றான் . மூவரும்
கோதாவரி நதியை
அடைந்தனர் . அங்கு
சூர்ப்பனகை , ராமனின்
அழகைக் கண்டு ,
ஆசையுடன் ராமனிடம்
நெருங்க , லக்ஷ்மணன்
அவளின் மூக்கை
அறுத்து , அவமானப்படுத்தி
அனுப்பிவிட்டான் .
3. தம்
வஞ்சயன் , ராவண
ஏத்ய மாயீ
ஜஹார
ஸீதாம் , யதிரூபதாரீ
ராமஸ்ய
பத்னீ , விரஹாதுரஸ்ய
ச்ருத்வா
விலாபம் , வனமப்யரோதீது
ராவணனின் ஆணைப்படி ,
மாரீசன் பொன்
மானாக உருவம்
கொண்டு , சீதையின்
கண் முன்
அங்கும் இங்கும்
உலவினான் . சீதை
பொன் மானைக்
கேட்க , ராமன்
அதன் பின்
சென்றார் . சிறிது
நேரத்தில் , லக்ஷ்மணா !
சீதே ! என்று
அழுகை சத்தம்
கேட்டது . உடனே
லக்ஷ்மணனும் அங்கு
போனான் . ராமனும்
லக்ஷ்மணனும் இல்லாத
அந்த நேரத்தில் ,
ராவணன் சந்நியாசி
வேஷத்தில் அங்கு
வந்து , சீதையைத்
தூக்கிச் சென்றான் .
ராம லக்ஷ்மணர்கள்
திரும்பி வந்தபோது ,
ஜடாயு மூலம்
சீதையை ராவணன்
தூக்கிச் சென்றதை
அறிகின்றனர் . சீதையைக் காணாத
ராமன் அழுதான் .
ராமன் அழுவதைக்
கண்ட அந்தக்
காடும் அழுதது .
4. ஸ்ரீ
நாரதோப்யேத்ய , ஜகாத ராமம்
கிம்
ரோதிஷி ப்ரா , க்ருத மர்த்யதுல்யஹ :?
த்வம்
ராவணம் , ஹந்து , மிஹாவதீர்ணோ
ஹரி
:, கதம் விஸ்மர , ஸீதமார்ய ?
அந்த
நேரத்தில் நாரத
மகரிஷி அங்கு
வந்தார் . ராமன்
அழுவதைப் பார்த்தார் .
அவருக்குப் பழைய
சம்பவங்களை நினைவு
படுத்தினார் . ராமா !
நீ பாமர
மக்களைப் போல்
அழலாமா ? தாங்கள்
சாதாரண மனிதன்
இல்லை . இராவண
வதத்திற்காக அவதாரம்
செய்த மஹாவிஷ்ணு .
இதைத் தாங்கள்
மறந்தீர்களா ? என்றார் .
5.
க்ருதே யுகே ,
வேதவதீதி கன்யா
ஹரீம் ச்ருதிஞா ,
பதிமாப்துமைச்சத்
ஸா புஷ்கர
த்வீப , கதா
ததர்த்த
மேகாகினி தீவ் , ரத பச்சகார
நாரதர்
மேலும் சொல்ல
ஆரம்பித்தார் . க்ருத யுகத்தில்
குஸத்வஜன் என்று
ஒரு ராஜா
இருந்தார் . அவருக்கு
ஒரு பெண்
குழந்தை பிறந்தது .
அதற்கு சிறுவயது
முதல் வேதம்
நன்றாகத் தெரிந்தபடியால்
அதற்கு “ வேதவதீ ”
என்று பெயர்
வைத்தனர் . வேதவதிக்கு
சிறுவயது முதல்
விஷ்ணுவைக் கல்யாணம்
செய்து கொள்ள
வேண்டும் என்று
ஆசை . அதற்காக
ஒரு புஷ்கர
க்ஷேத்ரத்தில் கடுமையான தவம்
செய்ய ஆரம்பித்தாள்
.
6.
ச்ருதா தயாபூத் ,
அசரீரிவாக் - தே
ஹரி : பதிர்பாவினி
ஜன்மனி ஸ்யாது
நிசம்ய தத்
ஹ்ருஷ்ட , மனாஸ்ததைவ
க்ருத்வா தபஸ்தத்ர ,
நினாய காலம்
வேதவதியின்
தவத்திற்குப் பலன் கிடைத்தது .
“ அடுத்த ஜன்மத்தில்
விஷ்ணு உனக்குப்
பதியாவார் ” என்று
ஒரு ஆகாசவாணி
ஒலித்தது . வேதவதீ
தவத்தை மேலும்
தொடர்ந்து கொண்டு
அங்கேயே இருந்தாள் .
7.
தாம் ராவண :
காம , சரார்தித :
ஸம்
ச்சகர்ஷ ; ஸா
ச , ஸ்தவனேன தேவீம்
ப்ரஸாத்ய கோபாருண , லோசனாப்யாம்
நிரீக்ஷ்ய தம் ,
நிச்சல , மாததான
வேதவதீ
அங்கு தவம்
செய்து வரும்பொழுது ,
ஒருநாள் ராவணன்
அங்கு வந்தான் .
வேதவதியின் அழகில்
மோகம் கொண்டான் .
அவளைத் தன்
மனைவி ஆகும்படி
கட்டாயப் படுத்தினான் .
அவள் நிராகரிக்க ,
அவளின் தலை
முடியைப் பிடித்து
பலவந்தப் படுத்தினான் .
அவள் தன்
ஜ்வலிக்கும் கண்களால்
ராவணனைப் பார்த்தாள் .
அவள் பார்வையின்
தீர்க்கத்தைக் கண்ட ராவணன்
ஸ்தம்பித்து நின்றான் . அவனால் கை கால்களைக் கூட அசைக்க முடியவில்லை . ராவணன்
தேவியை மனதில் ,
மீண்டும் துதித்ததால் ,
கை கால்களை
அசைக்க முடிந்தது .
8.
சசாப தம்
ச , த்வமரே !
மதர்த்தே
ஸாபாந்தவோ , ராக்ஷஸ !,
நம்க்ஷ்யஸீ ! தி
ஸ்வம் கௌணபஸ் ,
ப்ருஷ்ட , மசுத்த
தேஹம்
யோகேன ஸத்யோ ,
விஜஹௌ ஸதீ
ஸா
வேதவதீ
ராவணனை சபித்தாள் .
" என்னைத் தொட்ட
காரணத்தால் நீ
உன் உறவினர்களுடன்
அழிவது நிச்சயம் .
விஷ்ணுவிற்குப் பத்னியாக நினைத்த
இந்த உடலை
நீ தொட்டதால் ,
இது அசுத்தமானது .
இதை நான்
வைத்திருக்க மாட்டேன் "
என்று தன்னுடைய
உடலை விட்டாள் .
9.
ஜாதா புன :
ஸா , மிதிலேசகன்யா
காலே ஹரிம்
த்வாம் , பதிமாப
தைவாது
ஸ ஹன்யதாம்
ஸத் , வரமாச
ரேந்த்ரஹ
ஸ்தன்னாச காலஸ்து ,
ஸமாகதச்ச
நாரதர்
சொன்னார் , வேதவதிக்கு
அடுத்த ஜன்மத்தில்
விஷ்ணு கணவனாவார்
என்று அசரீரி
சொன்னதல்லவா ? அந்த
வேதவதி தான்
இந்த சீதை .
ராமனான விஷ்ணுவே
அவள் கணவன் .
அன்று வேதவதி
தந்த சாபம்
ராவணனுக்குச் சீக்கிரம் பலிக்கட்டும் .
ராவணனையும் மற்ற
ராக்ஷசர்களையும் அழிக்கட்டும் . ராவணன் அழியும்
காலம் நெருங்கிவிட்டது
என்றார் .
10.
ததர்த்தமாரா , தய
லோகநாதாம்
நவாஹயக்ஞேந , க்ருதோபவாஸ :
ப்ரஸாத்ய தாமேவ ,
ஸுரா நராச்ச
காமான் லபந்தே ;
சுபமேவ தே
ஸ்யாது
ராவண
வதம் செய்வதற்கு ,
ராமன் உபவாசம்
இருக்க வேண்டும் .
நவாக யக்ஜம்
செய்ய வேண்டும் .
தேவியின் கதைகள்
கேட்கவேண்டும் , தேவியின் நாமத்தை
ஜபிக்க வேண்டும் ,
தேவியின் கீர்த்தனைகள்
பாட வேண்டும் ,
தேவியை பூஜை
செய்ய வேண்டும் .
இப்படியாக ஒன்பது
நாளும் தேவியின்
ஆராதனை நடக்க
வேண்டும் . இதுதான்
நவாக யக்ஜம்
எனப்படும் . இதனால்
தேவி சந்தோஷமடைந்து
அனுக்ரஹிப்பாள் . அதன் பின்
ராவண வதம்
நடக்கும் . அன்னையின்
அனுக்ரஹத்தால் தான் தேவர்களும்
மனிதர்களும் தன
தேவைகளை அடைகிறார்கள் .
ராமனுக்கும் நன்மையே
வரும் என்று
சொல்லிவிட்டு நாரதர் மறைந்தார் .
11.
இத்யூ சிவாம்ஸம் ,
முனிமேவ ராம
ஆசார்யமா , கல்ப்ய ,
ஸ லக்ஷ்மணஸ்த்வாம்
ஸம்பூஜ்ய , ஸுஸ்மேர , முகீம் வ்ரதாந்தே
ஸிம்ஹாதி ரூடாம்
ச புரோ
ததர்ச
அந்த நாரதரையேத் தன்
குருவாக ஏற்று ,
ராமன் நவாக
யக்ஜம் செய்தார் .
9 ஆவது நாளின்
முடிவில் தேவி
சிம்ம வாகனத்தில்
ராமனுக்குக் காட்சி
தந்தாள் .
12.
பக்த்யா நதம்
தம் , த்ருதமாத்த ராம !
ஹரிஸ் த்வமம்சேன ,
மதாஞயைவ
ஜாதோ நரத்வேன ,
தசாஸ்ய ஹத்யை
ததாமி தச்சக்தி ,
மஹம் தவேஹ
13.
ச்ருத்வா தவோக்திம் ,
ஸ ஹனு
மதாத்யைஹி
ஸாகம் கபீந்த்ரை :, க்ருதஸேது பந்தஹ
ஸங்காம் ப்ரவிஷ்டோ ,
ஹத ராவணாத்யஹ
புரீம யோத்யாம் ,
அகமத் ஸ
ஸீதஹ
தேவியைக்
கண்ட ராமன்
நமஸ்கரித்தார் . தான் யார்
என்பதை மறந்திருந்த
ராமருக்கு தேவி
நினைவுபடுத்தினாள் . ராமன் சாட்ஷாத்
அந்த மகாவிஷ்ணுவேதான் .
விஷ்ணுவின் அம்சமாக
தசரதனுக்கு மகனாகப்
பிறந்தார் . இந்த
அவதாரத்தின் காரணமே
ராவண வதம்
தான் . தேவியின்
ஆணைப்படியே அவர்
மனிதனாக அவதரித்தார் .
ராமன் மறந்திருந்த
பூர்வ கதையை
நினைவுபடுத்தினாள் . ராவணனை வதம்
செய்வதற்கான சக்தியையும்
தந்தாள் . வேதவதீ
த்ரேதா யுகத்தில்
சீதையாகப் பிறந்திருக்கிறாள் .
அவளின் சாபத்தால் ,
ராவணன் மரணம்
அடைய வேண்டும் .
சீதையை ராவணன்
அபஹரித்தது , ராவண
வதத்திற்குக் காரணமாகிறது . அன்னையின்
அனுக்ரஹத்துடன் ராமன் அனுமன் ,
வானரப்படை இவைகளின்
உதவியுடன் சீதையைத்
தேடி , இலங்கையில்
இருப்பதை அறிந்து
கொள்கிறான் . சமுத்ரத்தில்
பாலம் கட்டி ,
இலங்கை சென்று ,
ராவணை வதம்
செய்து , சீதையை
மீட்டு , சீதா
லக்ஷ்மண சமேதராக
அயோத்தி வந்தார் .
அம்பாளின் கருணை
இருந்தால் எந்த
காரியமும் சாத்தியமாகும்
என்பதற்கு இது
உதாரணமாகிறது .
14.
ஹா ! தேவி !
பக்திர் , நஹி
மே குருச்ச
ந சைவ
வஸ்து , க்ரஹ
ணே படுத்வம்
ஸத்ஸங்கதிச் சாபி ,
ந , தே
பதந்து
க்ருபா கடாக்ஷா ,
மயி , தே
நமோஸ்து
ராமாய ராம
பத்ராய
ராமசந்ராய வேதஸே
ரகு நாதாய
நாதாய
ஸீதா பதயே
நமஹ
ராமனுக்கு
நாரதர் குருவாக
அமைந்தார் . எனக்கு
குருவோ ஸத்சங்கமோ
எதுவுமே இல்லை .
அதனால் நீதான்
எனக்குத் துணை
என்று இதன்
ஆசிரியர் தேவியை
வணங்குகிறார் .
பதினெட்டாம்
தசகம் முடிந்தது