ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, 17 June 2023

Tanom Tanata (Thillana)rAgA: paraju. dEsAdi tALA. Composer: Poochi Iyengar.

 A thillana is a rhythmic piece that is generally performed at the end of a concert and widely used in classical indian dance performances. A Thillana uses tala-like phrases in the pallavi and anupallavi, and lyrics in the charanam. It breaks in to many rhythmic adavu patterns and movements .It is the climax of the concert and can be compared like the final burning of camphor at the end of a ritual or prayer.

Picture
Tanom Tanata (Thillana)

Raagam: 
Paras
  •  15 maayamaaLava gowLa janya
  • Aa: S G3 M1 P D1 N3 S
  • Av: S N3 D1 P M1 G3 R1 S
TaaLam: Desh aadi
 
Language: Telugu
 
Composer:  
Pooci Sreenivaasa Aiyyangaar

Poochi Srinivasa Iyengar (Aug-16, 1860 – Jul-20, 1919), also known as Ramanathapuram Srinivasa Iyengar, was a singer and composer of Carnatic music. He was born in Ramanathapuram in Tamil Nadu on the 16th of August, 1860, to Narayana Iyengar and Lakshmi Ammal in Ramnad. He studied music under Patnam Subramania Iyer (1845 – 1902), a singer of Carnatic music and came in the sishya parampara of Saint Thyagaraja. He had a large number of disciples, of whom the most popular was Ariyakudi Ramanuja Iyengar. He composed over 100 songs and used the mudra Srinivasa in his compositions. He died on July 20, 1919.

 Tanata (Thillana)

தசகம் 16 ஸுதர்சனவிவாஹம் விவாஹம் 1_5'6-9'10-12

Devi-Narayaneeyam devnaagari


https://youtu.be/ztgs0N8WR4U

https://geetanjaliglobalgurukulam.blogspot.com/2023/06/dasaka-16-sudarsana-vivaham-tamil.htmlhttps://geetanjaliglobalgurukulam.blogspot.com/2023/06/dasaka-16-sudarsana-vivaham-tamil.html

 தசகம் 16ஸுதர்சனவிவாஹம்o


1. ச்ருத்வா வதூவாக்ய,மரம் குமாரோ
  ஹ்ருஷ்டோ பரத்வாஜ,முனிம் ப்ரணம்ய
  ஆப்ருச்ய மாத்ரா, ஸஹ தேவி! ஸ த்வாம்
  ஸ்மரன் ரதேனாSப புரம் ஸுபாஹோஹோ
       இந்த சூழ்நிலையில், தேவி தன்னிடம் கூறிய சசிகலையைக் காண வேண்டும் என்று ஸுதர்சனன் ஆவல் கொண்டான். அந்த நேரத்தில் சசிகலையிடமிருந்து, அந்த அந்தணன் வந்து, அங்கு நடந்தவைகளையும் "ஸுதர்சனன் சுயம்வரத்திற்கு வரவேண்டும், தன்னை மணந்து கொள்ள வேண்டும்" என்று சசிகலை தெரிவித்ததாகவும் கூறுகிறான். அதனால் ஸுதர்சனன் பரத்வாஜரைப் பார்த்து, தேவி தன்னிடம் கூறியவற்றையும், சசிகலையிடமிருந்து அந்தணர் கொண்டு வந்த செய்தியையும் கூறி, அவர் அனுமதியும் ஆசியும் பெற்றுத், தன் தாயையும் வணங்கி, காசி நகரம் நோக்கி ரதத்தில் புறப்படுகிறான். அங்கு உள்ள முனிவர்கள் "சுதர்சனா! உனக்குக் கோஸல நாடு மீண்டும் கிடைக்கும், நீ மீண்டும் அரசனாவாய்" என்று அவனுக்கு ஆசி கூறி அனுப்புகிறார்கள்.

2. ஸ்வயம்வராஹுத, மஹீபுஜாம் ஸ
  ஸபாம் ப்ரவிஷ்டோ, ஹதபீர் நிஷண்ணஹ
  கன்யா கலா பூர்ண,சசீ த்வஸா விஹி
  ஆஹுர் ஜனாஸ்தா,வபி வீக்ஷமாணாஹா
       ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருகிறான். அங்கு பல பெரிய பெரிய ராஜாக்கள் வந்திருக்கின்றனர். ஸுதர்சனனுக்கு ராஜ்யம் இல்லை, அவன் ராஜாவும் இல்லை. ஆனால் அவனிடம் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று இருக்கிறது. அது என்ன? பக்தி. தேவி பக்தி. அந்த பக்தியினால் உண்டான தைரியத்தால் அவன் அங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டதும் சில ராஜாக்கள் ஆகா! இவனன்றோ சசிகலைக்கு ஏற்றவன். இவன் சந்திரன் போலவும், அவள் கலையாகவும் இருக்கின்றனரே. இவர்களல்லவோ ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் என நினைக்கின்றனர்.

3. வதுச்ச தத்தர்,சனவர்திதானு-
  ராகா ஸ்மரந்தீ, தவ வாக்யஸாரம்
  ஸபாம் ந்ருபாணாம் அஜிதேந்த்ரியாணாம்
  ந ப்ராவிசத் ஸா, பித்ருசோதிதாSபி
       சபையில் அமர்ந்திருக்கும் ஸுதர்சனனை சசிகலா பார்க்கிறாள். ஆகா! இவன் தேவி சொன்னது போல் மிக அழகாக இருக்கிறான். எனக்கு ஏற்றவனாகவும் இருக்கிறான். நான் நினைத்ததை விட அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறாள். அவளின் தந்தை அவளை சுயம்வர மண்டபத்திற்கு அழைக்கிறார். ஆனால் சசிகலை " அப்பா! நான் ஏற்கனவே ஸுதர்சனனை மணாளனாக வரித்து விட்டேன். அதனால் நான் சுயம்வர மண்டபம் வர விரும்பவில்லை. என்னை ஸுதர்சனனுக்கே விவாஹம் செய்துவையுங்கள்" என்று சொன்னாள்.

4. சங்காகுலாஸ்தே, ந்ருவரா பபூவுஹு
  உச்சைர் யுதாஜித், குபிதோ ஜகாத
  மா தீயதாம் லோக,ஹிதானபிஜ்ஞா
  வதூரசக்தாய ஸுதர்சனாய
       எல்லா தேசத்து ராஜாக்களும் சபையில் கூடியிருந்தும், சசிகலை இன்னும் சுயம்வரம் மண்டபத்திற்கு வரவில்லை. சசிகலைக்கு ஸுதர்சனனிடம் பிரேமை.  ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அப்போது மிகவும் பிரபலமான ராஜாவான யுதாஜித் "சசிகலையை சுயம்வரத்திற்கு அழைத்த ராஜாக்களில், ஏதோ ஒரு ராஜாவிற்கு மட்டுமே கல்யாணம் செய்து தர வேண்டும். ஸுதர்சனன் ராஜாவல்ல. ராஜ கன்னிகையை மணக்க அவனுக்குத் தகுதியில்லை. ஸுதர்சனன் எதற்கும் தகுதியில்லாதவன். அவனுக்கு சசிகலையை கல்யாணம் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்".
 
5. பாலோSயமித்யேஷ, மயாSSச்ரமே ப்ராது
  உபேக்ஷித: ஸோSத்ர ரிபுத்வமேதிஹி
  மாSயம் ச வத்வா, வ்ரியதாம்; வ்ருதச்சேது
  ஹன்யாம் இமம்; தாம், ச ஹரேயமாசு
       பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் ஸுதர்சனனும் அவன் தாயான மனோரமாவும் இருந்த போது, அவர்களை பலவந்தமாகக் கொண்டு போக முயற்சி செய்தான் யுதாஜித். ஆனால் முனிவரின் சாபத்திற்கு பயந்து அவர்களை அப்படியே விட்டு வைத்தான். அன்று செய்த செயல் இன்று தவறாக ஆனது. அதனால் தான் ஒன்றும் அறியாத பாலகனாக இருந்த ஸுதர்சனன் வளர்ந்து, இப்படி எதிரியாக வந்து நிற்கிறான் என்று நினைத்தான். சுபாகுவிடம் சசிகலையை ஸுதர்சனனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால் ஸுதர்சனனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். (தேவீ பாகவதத்தில் இந்த சுயம்வரப் பகுதி மிக முக்யமாகச் சொல்லப் படுகிறது).

6. சுருத்வா யுதாஜித்,வசனம் ந்ருபாலா
  ஹிதைஷிண:கே,சிதுபேத்ய ஸர்வம்
  ஸுதர்சனம் ப்ரோசு; ரதாபி தீரஹ
  ஸ நிர்பயோ நைவ, சசால தேவி
       யுதாஜித்தின் மனதை அறிந்த சில நல்ல குணமுடைய ராஜாக்கள், ஸுதர்ஸனனிடம் சென்று "ராஜ புத்திரனே! இந்த சுயம்வரத்திற்கு நீயாக வந்தாயா? அல்லது யாரும் உன்னை அழைத்தார்களா? நீயோ தனியாக வந்திருக்கிறாய். உன் சகோதரனுக்கு அந்த கன்னிகையை மணமுடிக்க யுதாஜித் நிச்சயித்திருக்கிறான். உனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் எதற்கும் துணிந்தவன். அவன் இதற்காக யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். உனக்கோ சகாயம் செய்ய யாரும் துணை இல்லை. அதனால் நீ யோசித்து முடிவு செய். இல்லாவிட்டால் இப்பொழுதே நீ கிளம்பிப் போய்விடு. இதை உன் நலனுக்காகவே கூறினோம்" என்று சொன்னார்கள். ஸுதர்சனன் சொல்கிறான் "நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. என்னிடம் எந்த படை பலமும்  இல்லை. என் இஷ்ட தேவதை பகவதியின் விருப்பப்படி நான் இங்கு சுயம்வரத்திற்கு வந்தேன். அவள் விருப்பம் என்னவோ அதன் படிதான் எல்லாம் நடக்கும். இந்த உலகம் முழுவதும் அவள் விருப்படிதான் இயங்குகிறது. அதனால் எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும். அதை மாற்ற யாராலும் முடியாது.  என்னிடம் பகைமை காட்டும் யுதாஜித்திடமோ அல்லது அவருக்குத் துணை புரியும் மற்ற ராஜாக்களிடமோ எனக்குப் பகைமை இல்லை (இது ஸத் புத்தி உள்ளவர்களின் குணம்). அந்த பகவதி எல்லாம் பார்த்துக் கொள்வாள்எனக்கு எந்த பயமும் இல்லைஎன்று சொல்கிறான்.

7. ஏகத்ர புத்ரீசஸுதர்சனச்ச,
  யுதாஜிதன்யத்ர, பலீ ஸகோபஹ
  தன்மத்யகோமம்.க்ஷீ ந்ருபஸுபாஹுர்
  பத்தாஞ்சலிப்ராஹ, ந்ருபான் வினம்ரஹ              
       இந்த நேரத்தில் சுபாஹு நினைக்கிறார் ஸுதர்சனனைத்தான் மணப்பேன் என்று சசிகலை சொல்கிறாள். ஸுதர்சனன் சசிகலையை பலாத்காரமாக கொண்டு போக மாட்டான். அந்த தவறான செயலை அவன் செய்யவும் மாட்டான். சுயம்வரத்திற்கு வந்த அவனை நான் திரும்பிப் போ என்று சொல்ல மாட்டேன். அது நியாயம் இல்லை. ஆனாலும் சசிகலை அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வாள். அப்படி நடந்தால் யுதாஜித்தும் அவனைப் போன்ற மற்ற ராஜாக்களும் கோபம் கொண்டு சண்டைக்கு வருவார்கள். இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? என்ன செய்வது என்று மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வருகிறான். என்ன முடிவு அது?

8. “ந்ருபா வசோ மே, ச்ருணுதேஹ பாலா 
   நாSSயாதி புத்ரீ, மம மண்டபேSத்ர 
   தத்ஷம்யதாம், ச்வோத்ர, நயாம்யஹம் தாம்
   யாதாத்ய வோ விச்,ரமமந்திராணி”  
       சுபாஹு சுயம்வரம் மண்டபத்தில் கூடியிருக்கும் ராஜாக்களிடம் நானும் என் மனைவியும் எவ்வளவு அழைத்தும் என் மகள் இன்று மண்டபத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. எல்லோரும் தயை கூர்ந்து எங்களை மன்னிக்க வேண்டும். அவரவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் மாளிகையில் ஓய்வெடுக்க வேண்டும். நாளை மண்டபத்திற்கு சசிகலையை அழைத்து வருகிறேன் என்று ஒரு பொய்யைச் சொல்லி நிலைமையை சமாளித்தார். ஏன் என்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் மண்டபத்திற்கு வர சம்மதிக்க மாட்டாள் என்று. அந்த சூழ்நிலையில் வேறு என்ன செய்ய முடியும்?

9. கதேஷு ஸர்வேஷு, ஸுதர்சனஸ்து
  த்வாம் ஸம்ஸ்மரன் மாத்,ரு ஹிதானுஸாரீ
  ஸுபாஹுனா தன்,னிசி தே ந தத்தாம்
  வதூம் யதாவித்,யுதுவாக தேவி!  
       இதைக் கேட்டதும் சுயம்வரம் மண்டபத்தில் இருந்த யுதாஜிதிற்குக் கோபம் வருகிறது. அவர் சொல்கிறார் "உன் நடவடிக்கையில் எங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஸுதர்சனனுக்கு உன் மகளை மணம் செய்விக்க நினைக்காதே. என் பேரனுக்கோ அல்லது வேறு ராஜகுமாரனுக்கோ கல்யாணம் செய்து வை. அதில் எனக்கு சம்மதம் தான். ஆனால் என் எதிரியான ஸுதர்சனுக்கு விவாஹம் செய்விக்க நினைத்தால் உனக்கும் எனக்கும் பகை உண்டாகும். இதை உன் மகளிடம் சொல்லி முடிவு செய்" என்று சொல்கிறார். சுபாகுவிற்கு மிகவும் கவலை வருகிறது. மனைவியுடன் சென்று மகளிடம் பேசுகிறார். ஆனால் சசிகலையோ பிடிவாதமாக ஸுதர்சனைத்தான் விவாஹம் செய்து கொள்வேன் என்று முடிவாகச் சொல்கிறாள். மகளின் நல்வாழ்வை மனதில் எண்ணி நள்ளிரவில் ஸுதர்சனனை அழைத்துக் கொண்டு ஒரு ரகஸ்ய இடத்திற்குச் சென்று, தேவியின் முன்னிலையில், மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கிறார். ஸுதர்சனனும் தன் அன்னை மனோரமாவின் ஆசியைப் பெற்று சசிகலையை மணந்து கொள்கிறான்.

10. ப்ராதர் யுதாஜித், ப்ரபலோ விவாஹ
   வார்தாம் நிசம்யாSSத்,தருஷா ஸஸைன்யஹ
   ஸுதர்சனம் மாத்ரு,வதூஸமேதம்  
   யாத்ரோன் முகம், பீமரவோ ருரோத
       வாத்ய கோஷங்களைக் கேட்ட மற்ற ராஜாக்கள் சுபாகு மகளுக்குச் ஸுதர்சனனை விவாஹம் செய்து வைத்து விட்டான் என்று புரிந்து கொள்கின்றனர். அதனால் ஸுதர்சனன் போகும் வாயில் வழியில் யுதாஜித்தும் மற்ற ராஜாக்களும் தங்களை அவமானப்படுத்திய அனைவரையும் எதிர் கொள்ளத் தயாராகப் படைகளுடன் நிற்கின்றனர். அதே நேரத்தில் சசிகலையையும் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு சுபாகு ஏற்பாடு செய்திருந்த ரதத்தில் ஏறி, ஸுதர்சனனும் அங்கு வருகிறான்.

11. ததோ ரணே, கோரதரே, ஸுபாஹுஹு
   க்ளீம் க்ளீமிதீசானி! ஸமுச்ச சார
   தத்ராSSவிராஸீ:,ஸமராங்,கணே த்வம்
   ஸிம்ஹாதிரூடா, ஸ்வஜனார்த்தி ஹந்த்ரீ
       காமராஜ பீஜ மந்திரமான "க்ளிம் க்ளிம்" என்ற மந்திரத்தை ஜபித்தபடி ஸுதர்சனன் ரதத்தில் வருகிறான். ஆனால் சசிகலையை கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் மற்ற ராஜாக்கள் சத்ராஜித் யுதாஜித்துடன் படைகளுடன் நிற்கிறார்கள். சுபாகு தன் மகளையும் மருமகனையும் காப்பாற்ற அவர்களுடன் யுத்தம் செய்கிறார். எதிரிகள் பாண மழை பொழிகிறார்கள். அதனால் அவர் தேவி உபாஸனை செய்யும் ஸுதர்சனனை உதவிக்கு அழைக்கிறார். அப்பொழுது ஸுதர்சனனுக்கு உதவி செய்ய தேவி யுத்த களத்தில் தோன்றுகிறாள். அந்த மஹா தேவி எப்படியிருந்தாள்? திவ்ய வஸ்த்ரங்கள் தரித்தவளாக மந்தார புஷ்பமாலை சூடி, திவ்ய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, நானாவிதமான ஆயுதங்களுடன் சிம்மவாஹனத்தில் தோன்றினாள். ஆண்கள் யுத்தம் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணா என்று யுதாஜித் அன்னையைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறான். அன்னைக்கும் யுதாஜித்திற்கும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது.

12. த்வன்னாம காயன்கதயன் குணாம்ஸ்தே
  த்வாம் பூஜயம்ச்,சாத்ர நயாமி காலம் ;
  ஸ்வப்னேபி த்ருஷ்ட ,   மயா த்வம் அம்பே!
  க்ருபாம் குரு த்வம், மயி ; தே நமோஸ்து     
       இந்த நாராயணீயம் எழுதிய ஆசிரியர் நினைக்கிறார் சுபாகு, சசிகலை, ஸுதர்சனன் இவர்களுக்கு அன்னை நேரிலோ அல்லது கனவிலோ காட்சி கொடுத்தாள். நானும் இந்த தேவியைத்தான் த்யானம் செய்கிறேன். ஆனால் கனவிலோ நினைவிலோ அன்னையைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் வருந்துகிறார். அன்னையின் கருணைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
16 ஆம் பதினாறாம் தசகம் முடிந்தது

தசகம் 17 ஸுதர்சன கோஸலப்ராப்தி

 



Devi-Narayaneeyam devnaagari

தசகம் 17

ஸுதர்சன கோஸலப்ராப்தி
1. யுதாஜிதம் சத்ரு,ஜிதம் ச ஹத்வா
  ரணாங்கணஸ்தா, நுதிபி: ப்ரசன்னா
  ஸுபாஹு முக்யான,னுக்ருஹ்ய பக்தான்
  ஸர்வேஷு பச்யத்ஸு  திரோததாத          
       யுத்தத்தில் ஸுதர்சனனைக் கொன்றே தீருவேன் என்று முழக்கமிட்ட யுதாஜித்தை, அன்னை வதம் செய்தாள். ஸுதர்சனனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்ருஜித்திற்கு சசிகலையை விவாஹம் செய்வதற்காகத்தான் இந்த யுத்தம் நடந்தது. ஆனால் யுத்தத்தில் அவனும் மாண்டான். இவர்களின் மரணத்திற்குக் காரணம் அம்பாளிடமும் பக்தி இல்லை, நல்ல ஸத் ஜனங்களிடமும்  விரோதம்.  சுபாஹு பக்தியுடன் தேவியை துதித்தான். அன்னை பக்தர்களைக் காப்பாற்றினாள். யுத்தம் முடிந்ததும் அன்னை மறைந்து விடுகிறாள்.

2. ப்ருஷ்டோ ந்ருபான் ப்ராஹ, ஸுதர்சனஸ்தான்
  த்ருஷ்டா பவத்பி:, கலு ஸர்வசக்தா
  யா நிர்குணா யோகி,பிரப்ய த்ருச்யா
  த்ருச்யா ச பக்தை:, ஸகுணா வினீதைஹி        
       யுத்தத்தில் யுதாஜித், சத்ருஜித் இருவரும் இறந்த பிறகு சுபாகுவும், ஸுதர்சனனும் தேவியைத் துதிக்கிறார்கள். சுபாகுவின் பக்திக்கு மெச்சிய அன்னை அவன் விருப்பப்படி காசி நகரத்தை ஒரு முக்தி க்ஷேத்ரமாக விளங்கும் படி அனுக்ரஹித்து, காசியில் சகல சம்பத்தும் இருக்கும், உலகம் உள்ளளவும் நான் இந்த காசியில் வாசம் செய்வேன் என்று சொன்னாள். உன்னை பூஜிக்காமல் இதுகாரும் நான் வாளா இருந்தேனே என வருந்திய ஸுதர்சனனிடம், அயோத்திக்குச் சென்று தன்னை முக்காலமும் கிரமப்படி பூஜித்து வரும்படிச் சொன்னாள். இதைக் கண்ட மற்ற அரசர்கள் அவர்களிடம் "நீங்கள் துதிக்கின்றீர்களே இங்கு யுத்தம் செய்த அந்தப் பெண் யார்? என்று வினவினார்கள். ஸுதர்சனன் அன்னையின் மகிமையைச் சொல்கிறார். இது தேவி பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸுதர்சனன் சொல்கிறார், சகுணையும் நிர்குணையும் அவளே. நிர்குணையான தேவியை யோகிகள் கூடப் பார்க்க முடியாது. ஆனால் சகுணையான தேவியை பக்தர்களால் காண முடியும். யுதாஜித், சத்ருஜித் ஆகிய துர் புத்தி கொண்டவர்கள் முன் கூட அன்னை காட்சி தந்தாள். ஆனால் அவர்களால் அன்னையை அறிந்து  கொள்ள முடியவில்லை. அதனால் வணங்கவோ துதிக்கவோ செய்ய முடியவில்லை. காரணம் மனதில் பக்தி இல்லை. தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற நினைவு தான் காரணம்.

3. யா ராஜஸீதம், ஸ்ருஜதீவ சக்திர்

  யா  ஸாத்விகீ பா,லயதீவ விச்வம்
  யா தாமஸீ ஸம்,ஹரதீவ ஸர்வம்
  ஸத் வஸ்து ஸைவான்,யதஸத் ஸமஸ்தம்   
       தேவர்களும் ப்ரம்மாவும் கூட அறிந்து கொள்ள முடியாத பெருமை உடையவள் தேவி. அப்படியிருக்க நான் என்னவென்று சொல்வேன்? அனைத்திற்கும் ஆதியான சக்தி அவள் தான். அவள்  முக்குண  சக்தி கொண்டவள். அவளின் ரஜோகுணத்தால் உலகம் தோன்றுகிறது. சத்வ குணத்தால் உலகம் காப்பாற்றப்படுகிறது. தமோகுணத்தால் உலகம் அழிக்கப் படுகிறது. அவளே அந்த நிர்குண பராசக்தியும் ஆவாள். வேண்டுவோர் வேண்டும் பயனைத் தரும் காரணமும் அவளே.

4. பக்தார்த்தி ஹந்த்ரீ, கருணாமயீ ஸா
  பக்தத்ருஹாம் பீ,திகரீ ப்ரகாமம்;
  வஸன் பரத்வாஜ,த போவனாந்தே
  சிராய மாத்ரா ஸஹ தாம் பஜேSஹம்       
       இந்த அன்னை உலகத்திற்கே மாதா. அனைத்து ஜீவன்களும் அவளின் குழந்தைகள். அவளின் கருணைக்கு அளவே இல்லை. நம்முடைய துக்கம் துடைப்பவள், போக்குபவள் அவள் தான். தன் பக்தனுக்கு யாரும் துன்பம் தந்தால் அவர்களை அன்னை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். அவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தருவாள். காசி நகரத்தில் யுதாஜித், சத்ருஜித் இவர்களோடு யுத்தம் செய்து சுபாஹு, ஸுதர்சனன், சசிகலை இவர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். ஸுதர்சனன் சிறு வயது முதல் அர்த்தம் தெரியாமலே சொல்லி வந்த காமராஜ பீஜ மந்திரம் அவனுக்கு அன்னையின் அனுக்ரஹத்தைத் தந்தது.

5. தாமேவ பக்த்யா, பஜதேஹ புக்தி
  முக்திப்ரதாம் அஸ்து, சுபம் ஸதா வஹ
  ச்ருத்வேதமானம்,ரமுகா ஸ்ததே தி
  ஸம்மந்த்ரய பூபாச்ச, ததோ நிவ்ருத்தாஹா     
       எல்லா அரசர்களும் அந்தப் பெண் யார் என்று கேட்டதற்கு அன்னையின் மகிமை, பெருமை, சிறப்பு அனைத்தும் சொல்கிறான் ஸுதர்சனன். கண்கூடாக அவர்கள் அன்னையை யுத்த களத்திலும் பார்த்தார்கள். அனைவரும் இனி நாங்களும் தேவியை பூஜிப்போம் என்று அன்னையின் பக்தர்களாக அவரவர் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

6. ஸுதர்சனோ மாத்ரு,வதூ ஸமேதஹ
  ஸுபாஹு மாப்ருச்ச்ய, ரதாதி ரூடஹ
  புரீம்அயோத்யாம், ப்ரவிசன் புரேவ
  ஸீதாபதிஸ்தோ,ஷயதி ஸ்ம ஸர்வானு    
       பிறகு ஸுதர்சனன் சுபாகுவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவி சசிகலை, தாயார் மனோரமாவுடன், காசி நகரத்திலிருந்து கிளம்பி, கோஸல ராஜ்யம் வந்து சேர்கிறான். ஸுதர்சனனைக் கண்ட மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் அவர்களை வரவேற்கின்றனர். அந்த காட்சி எப்படி இருந்தது என்றால் ராம ராவண யுத்தம் முடிந்து வெற்றியுடன் திரும்பிய ராமனுக்கு அயோத்தி மக்கள் தந்த வரவேற்பு போல் இருந்ததாம்.

7. லீலாவதீம் ப்ராப்ய, விமாதரம் ச
  நத்வா விஷண்ணாம், ஹதபுத்ரதாதாம்
  ஸ்துக்த்திபி; கர்ம,கதீ: ப்ரபோத்ய
  ஸ ஸாந்த்வயாமாஸ, மஹேசி! பக்தஹ
       அயோத்திக்குச் சென்ற ஸுதர்சனன், தன் தாயாரான லீலாவதியைத் தான் முதலில் நமஸ்கரித்தான். இதைப் போலவே ராமனும் அயோத்தி திரும்பியவுடன் முதலில் கைகேயியைத் தான் நமஸ்கரித்தான். லீலாவதி ஆரம்ப காலத்தில் மனோரமாவுடனும் ஸுதர்சனனிடமும் மிகவும் அன்பாகத்தான் இருந்தாள். அவள் தந்தை யுதாஜித்தால் தான் பிரச்சனைகள் வந்தது. தன் கணவனை இழந்த மனோரமா தன் மகனுடன் அன்று எப்படி அனாதையாக இருந்தாளோ, அப்படி இன்று லீலாவதியும் தன் மகனை இழந்து ,கணவனையும் இழந்து தனித்து நின்றாள். ஸுதர்சனன் அவளுக்கு ஆறுதல் சொல்லி, யுதாஜித்தும் சத்ருஜித்தும் தன்னால் யுத்தத்தில் கொல்லப் படவில்லை. தேவிதான் அவர்களை வதம் செய்தாள் என்று நிலையை விளக்கி, எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. நான் சிறிதும் இந்த ராஜ்யத்திற்கு ஆசைப்படவில்லை. நாம் வெறும் பொம்மலாட்ட பொம்மைதான். அவள் ஆட்டிவைப்பது போல் அனைவரும் ஆடுகிறோம். இதற்கு நாம் யாரும் காரணம் இல்லை என்று சொன்னான். மேலும் நான் உங்களை என் தாய் போல் கவனித்துக் கொள்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். வயதானவர்களுக்கும் துக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் சொல்வது மிக மிக உயர்ந்த குணம்.

8. ஜனேஷு பச்யதஸு, ஸுதர்சனோத்ர
  த்வாம் பூஜயித்வா, குருணாSபிஷிக்த
  ராஜ்யே த்வதீயம், க்ருஹாமாசு க்ருத்வா
  பூஜாவிதானா,தி ச ஸம்வ்ரு தத்த           
       ஸ்வர்ண மயமாயும் மணிமயமாயுமுள்ள சிம்மாசனம் ஒன்றைச் செய்து, வேத வாத்ய கோஷங்களுடன் தேவியை அதில் பிரதிஷ்டைச் செய்து, பூஜை செய்தான். பிரஜைகளையும் தேவியை பூஜிக்க வேண்டும் என்று சொன்னான். நவராத்ரியில் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்தான். அது போல் சுபாகுவும் காசியில் தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, பூஜித்து, மக்களையும் பூஜிக்கச் சொன்னான்.

9. தஸ்மின் ந்ருப்பே த்வத்,ஸதனானி க்ருத்வா
  ஜனா: ப்ரதிக்ரா,மமபூஜயம்ஸ்த்வாம்
  காச்யாம் ஸுபாஹுச்ச, ததாகரோத் ; தே
  ஸர்வத்ர பேது: கருணா கடாக்ஷாஹா
       ஒரு ராஜ்யத்தில் ராஜா எப்படியோ மக்களும் அப்படியே. ராஜா தேவியை பூஜிப்பதால் அனைவரும் தேவியை பக்தியுடன் பூஜித்து வந்தனர். எல்லோரும் தேவி பக்தர்கள் ஆக ஆனார்கள். ஒவ்வொரு ஊரிலும் அன்னையின் ஆலயம் கட்டினார்கள். அதுமட்டும் இல்லாமல் பூஜையும் முறைப்படி செய்து வந்தனர். எல்லோருக்கும் அன்னையின் கருணா கடாக்க்ஷமும் கிடைத்தது. ஸுதர்சனனின் ராஜ்யமும்  சுபாஹுவின் ராஜ்யமும் சிறப்பாக நடந்து வந்தன.

10. ந கர்மணா ந, ப்ரஜயா தனேன
   ந யோகஸாங்க்யா,தி விசிந்தயா ச
   ந ச வ்ரதே,னாபி ஸுகானுபூதிர்
   பக்த்யைவ மர்த்ய:, ஸுகமேதி மாதஹ       
       பக்தி இல்லாத மனிதனின் வாழ்க்கை வீண்தான். பக்தி இருந்தால் தேவியின் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். பக்தி இல்லை என்றால் எல்லாம் துக்கமயம் தான். பக்தனுக்கு எல்லாம் இன்ப மயம். பக்தியே அனைத்திலும் சிறந்தது.

11. நாஹம் ஸுபாஹுச்ச, ஸுதர்சனச்ச
   ந மே பரத்வாஜ,முனி: சரண்யஹ
   குரு: ஸுஹ்ருத், பந்துரபி த்வமேவ
   மஹேச்வரி த்வாம், ஸததம் நமாமி    
       சுபாஹு ஒரு நல்ல பக்தன். ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்றதால் பக்தனானான். எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று இந்த கவிஞன் ஏங்குகிறார்.
எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை. நீதான் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என வேண்டுகிறார்.
தசகம் பதினேழு முடிந்தது.

Siva maanasa Puja stotram









https://youtu.be/787CLtHgBLo 


Siva maanasa Puja stotram