ENQUIRY geetanjaliglobalgurukulam

Monday, 12 June 2023

pittha pirai சுந்தரமூர்த்தி சுவாமிகள்

பித்தா பிறைசூடீ பாடலை எழுதியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவார். இந்த பாடல் பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் ஆகும். இந்த பாடலின் திருமுறை ஏழாம் திருமுறை ஆகும்.

Divyaprabhandham Ponmar Perumal temple

திருநீற்றுப் பதிகம்:..மந்திரமாவது நீறு பாடல் வரிகள்


 ஆஹா என்ன ஒற்றுமை!!! அம்பாளின் கருணைக்கு நான் அடிமை 🙏


திருநீற்றுப் பதிகம்:https://youtube.com/shorts/tTBGU2HVpgw?feature=share


https://youtu.be/NaC49YWwB54

https://youtu.be/NaC49YWwB54

திருமுறை : இரண்டாம் திருமுறை

பதிகம் : 66

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

நாடு : பாண்டியநாடு

பண் : காந்தாரம்

தலம் : திருஆலவாய்(மதுரை)

சிறப்பு : வெப்பத்தினால் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்க பாட வேண்டிய பதிகம்.


திருச்சிற்றம்பலம்


மந்திரமாவது நீறு பாடல் வரிகள்:


பாடல் : 1


மந்திர மாவது நீறு

வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு

துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு

சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 2


வேதத்தி லுள்ளது நீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு

புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு

உண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 3


முத்தி தருவது நீறு

முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு

தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு

பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 4


காண இனியது நீறு

கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம்

பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு

மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 5


பூச இனியது நீறு

புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு

பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு

வந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 6

அருத்தம தாவது நீறு

அவலம் அறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு

வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு

புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த

திருஆல வாயான் திருநீறே.


பாடல் : 7


எயிலது வட்டது நீறு

விருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு

பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு

சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்

தாலவா யான் திருநீறே.


பாடல் : 8


இராவணன் மேலது நீறு

எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு

பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு

தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி

ஆலவா யான்திரு நீறே.


பாடல் : 9


மாலொ டயனறி யாத

வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள்

மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும்

இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம்

மாலவா யான்திரு நீறே.


பாடல் : 10


குண்டிகைக் கையர்க ளோடு

சாக்கியர் கூட்டமுங்கூட

கண்டிகைப் பிப்பது நீறு

கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார்

ஏத்துந் தகையது நீறு

அண்டத்த வர்பணிந் தேத்தும்

ஆலவா யான்திரு நீறே.


பாடல் : 11

ஆற்றல் அடல்விடை யேறும்

ஆலவா யான்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும்

பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னனுடலுற்ற

தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும்

வல்லவர் நல்லவர் தாமே.


திருச்சிற்றம்பலம்


#aalayamselveer #thiruneetrupathigam #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaram

Tags திருநீற்றுப் பதிகம் | மந்திரமாவது நீறு விளக்கம் | மந்திரமாவது நீறு பாடல் வரிகள் | மந்திரமாவது நீறு பாடல் விளக்கம் | thiruneetru pathigam | thiruneetru pathigam lyrics | thiruneetru pathigam in tamil | thiruneetru pathigam meaning in tamil | thiruneetru pathigam padal | thiruneetru pathigam manthiramavathu neeru | manthiramavathu neeru | manthiramavathu neeru lyrics meaning in tamil | manthiramavathu neeru meaning |

திருநீற்றுப் பதிகம் மந்திரமாவது நீறு

[12/06, 14:40] geetanjaliglobalgurukulam: ஆஹ என்ன ஒற்றுமை!!!!!!