https://youtu.be/FNPzCoVsEvY
தசகம் 15
ஸுதர்சணகதை (தேவீ
தர்சனம்)
1. ஏவம் தவைவ க்ருபயா, முனிவர்யசீத-
-சாயாச்ரிதோ ஹதபய: ஸ, ஸுதர்சனோயம்
வேதத்வனிச்ரவணபூத, ஹ்ருதாச்ரமாந்தே
ஸம்மோதயன் முனிஜனான், வவ்ருதே குமாரஹ
ஸுதர்சனனும் அவன் அன்னையும் ஆஸ்ரமத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஸுதர்சனன் தினமும் ஆஸ்ரமத்தில் தெய்வீக மந்திர சப்தத்தைக் கேட்டு வந்தான். ஸுதர்சனனின் சுபாவத்தைக் கண்டு முனிவர்கள் அனைவரும் மிகவும் நல்ல குழந்தை என்று சந்தோஷப்பட்டனர்.
2. ஆபால்யமேஷ, முனிபாலகசங்கமேன
க்ளீம் க்ளீ மிதீச்வரி! ஸதா, தவ பீஜமந்த்ரம்
தத்ரோச்சசார; க்ருபயாSஸ்ய, புர: கதாசித்
ஆவிர்பபூவித நதம், தமபாஷதாச்ச
தேவியின் அனுக்ரஹம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை படகு சீக்கிரம் எந்த கஷ்டமும் இல்லாமல் கரை வந்து சேரும். அதற்கு உதாரணம் தான் இந்த ஸுதர்சனின் கதை. தந்தை இறந்ததும் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு அனாதையாக பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தான். அவனுடைய சக நண்பர்கள் எல்லோரும் முனி குமாரர்களே. அவன் காதில் தினமும் விழுந்து கொண்டிருப்பது மந்திர சப்தமே. முனி குமாரர்கள் "க்ளீம் க்ளீம்" என்று உச்சரிக்கும் மந்திர சப்தத்தைக் கேட்டு அவனுக்கு அதில் ஒரு ஈடுபாடு வந்தது. முனி குமார்கள் சொல்வது தேவியின் காமராஜ பீஜ மந்திரம். ஆனால் ஸுதர்சனன் அதன் பொருள் புரியாமல் சந்தோஷமாக அதை 5 வயது முதல் 11 வயது வரைச் சொல்லி வந்தான். பரத்வாஜரும் அவனுக்கு உபநயம் செய்வித்து, அவனுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்தார். அவன் அனைத்தையும் எளிதில் அறிந்து கொண்டு, பண்டிதனாக ஆனாலும் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையும் மறவாமல் செய்து வந்தான். ஒரு நாள் நதிக்கரையில் வந்து கொண்டிருக்கும் பொழுது தேவீ அவனுக்குக் காட்சி தந்தாள்.
3. ப்ரீதாSஸ்மி தே ஸுத! ஜகஜ்,ஜனனீ மவேஹி
மாம் ஸர்வகாம,வரதாம்; தவ பத்ரமஸ்து;
சந்த்ரானனாம், சசிகலாம், விமலாம் சுபாஹோஹோ
காசீச்வரஸ்ய தனயாம், விதிநோத் வ ஹ த்வம்
சிவந்த நிறம், சிவந்த நிற ஆடை, சிவந்த ஆபரணம் ஆகியவைகளுடன் கருட வாகனத்தில்
மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணீயாக அன்னை தோன்றி ஸுதர்சனனை "மகனே"
என்று அழைக்கிறாள். அவனுக்கு வில்லும், அம்பும், அம்பராத் துணியும், வஜ்ரகவசமும் தந்து "நீ காசிராஜன் மகள் சசிகலையை விவாஹம் செய்துகொள். உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும்" என்று சொன்னாள்.
4. நஷ்டா பவே,யுரசிரேண, தவாரிவர்க்கா
ராஜ்யம் ச யைர,பஹ்ருதம், புனரேஷ்யஸி த்வம்
மாத்ருத்வயேன, ஸசிவைச்ச, ஸமம் ஸ்வதர்மானு
குர்யா: ஸதேதி, ஸமுதீர்ய திரோததாத
மேலும் “உன்னுடைய எதிரிகள் எல்லோரும் அழிந்து போவார்கள். ராஜ்யம் உனக்கே கிடைக்கும். உன் தாயாரான மனோரமாவோடு, லீலாவதியையும் உன் தாயாராக நினைக்க வேண்டும். எந்தவிதமான விரோத மனப்பான்மையும் இருக்கக் கூடாது. யுதாஜித்திற்கு உதவியாக இருந்த மந்திரிகள் அவர்கள் கடமையைத் தான் செய்தார்கள். எனவே அவர்களிடமும் விரோத மனம் காட்டக் கூடாது. ஒரு ராஜாவிற்கு ராகத்வேஷம் இருக்கக் கூடாது. எனவே ராஜ தர்மங்களை நீ அனுஷ்டிக்க வேண்டும் " என்று சொல்லி மறைந்தாள்.
5. ஸ்வப்னே த்வயா, சசிகலா, கதிதாS"ஸ்தி பார-
-த்வாஜாச்ரமே, ப்ரதித,கோஸலவம்சஜாதஹ
தீமான் ஸுதர்சன,இதி த்ருவஸந்தி புத்ர
ஏனம் பதிம் வ்ருணு; தவாஸ்து சுபம் ஸதே"தி
ஸுதர்சனனுக்கும் சசிகலைக்கும் திருமணம் செய்வித்து சசிகலாவின் தந்தை சுபாகுவிற்கு அனுக்ரஹம் செய்ய தேவீ நினைத்தாள். அதனால் ஸுதர்சனனுக்குக் காட்சி தந்த தேவீ காசிராஜன் மகள் சசிகலையின் கனவிலும் தோன்றினாள். சசிகலையிடம், “உன்னை விவாஹம் செய்து கொள்ளப் பிறந்திருக்கும் துருவஸந்தி என்னும் கோசல நாட்டு ராஜாவின் மகன் ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருக்கிறான்” என்று சொல்லி மறைந்தாள்.
6. ஸ்வப்னானுபூத,மன்ருதம் கிம்ருதம் ந வேதி
ஸுப்தோத்திதா து மதி,மத்யபி ந வ்யஜானாது
ப்ருஷ்டாத் ஸுதர்சன,கதாம்,ஸுமுகீ த்விஜாத் ஸா
ச்ருத்வாSனுரக்த் ஹ்ருதயைவ பபூவ தேவீ
சசிகலை கண் விழித்ததும் தான் தேவியைப் பார்த்ததும், தேவி சொன்னதும், நிஜமா அல்லது கனவா என்று ஒன்றும் புரியவில்லை. ஆயினும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாள்.
நந்தவனத்திற்குச் சென்று தான் கண்ட கனவைத் தன் தோழியிடம் சொல்லி மகிழும் போது அங்கு ஒரு பிராமணர் வர, அவரைக்கண்டு நமஸ்கரித்து "எங்கிருந்து வருகிறீர்"? என வினவுகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அந்த ஆஸ்ரமத்தில் ஏதும் அதிசியமாக உலகில் இல்லாதது உண்டா? எனக் கேட்கிறாள். குணத்திலும், உருவத்திலும், சிறப்பாக ப்ரம்மனால் படைக்கப் பட்டிருக்கும் புருஷனுக்குரிய சகல லட்க்ஷணங்களும் உடைய ஸுதர்சனன் தான் அந்த அதிசயம். நீ அவனை மணந்து கொண்டால் ஸ்வர்ணமும், மாணிக்கமும் இணந்த அழகு போல் ஆகும் என்று சொன்னார். தான் சொப்பனத்தில் கண்டது உண்மைதான் என்ப் புரிந்து கொள்கிறாள். அவனையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறாள்.
7. ஞாத்வா ஸுபாஹுரிதம் ஆகுல மானஸஸ்தாம்
அஸ்மான்னிவர்த்தயிதும் ஆசு ஸஹேஷ்ட பத்ன்யா
க்ருத்வா ப்ரயத்னம் அகிலம், விபலம் ச பச்யன்னு
நிச்சாஸ்வயம்,வரவிதிம், ஹிதமேவ மேநே
ஸுதர்சனனுக்கு எந்த ராஜ்யமும் இல்லை. அவன் காட்டில் ஒரு ஆஸ்ரமத்தில் இருப்பவன். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. காட்டில் இருப்பவனுக்கு எந்த வேலை இருக்க முடியும்? ராஜ்யம் இல்லாத ஒருவனைத் தன் மகள் காதலிப்பது காசி ராஜனான சுபாகுவிற்குச் சிறிது வருத்தத்தைத் தருகிறது. தன் மகளிடம் அவனிடம் ராஜ்யம் இல்லை, செல்வம் இல்லை. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் நீ கஷ்டப் படுவாய் என்று சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சிக்கிறார். அதனால் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அந்த காலத்தில் சுயம்வரம் என்பது மூன்று வகை. 1. இச்சா சுயம்வரம் (விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுப்பது) 2. வீர சுயம்வரம். வீர தருமத்தால் கன்னிகையை வரிப்பது. உதாரணம் பீஷ்மர்) 3.
பந்தய சுயம் வரம். ( ராமன், அர்ஜுனன்) இதில் இந்த முதல் வகை சுயம்வரத்தை ஏற்பாடு செய்கிறார். ராஜாக்களின் அழகு, பலம், வீரம், செல்வம் இவைகள் எல்லாம், தன் மகளின் மனத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் சசிகலை என்ன செய்தாள்?
8. கச்சித் கதாசன ஸுதர்சன,மேத்ய விப்ரஹ
ப்ராஹாSSகத:, சசிகலா,வசஸாSஹமத்ர;
ஸா த்வாம் ப்ரவீதி - ந்ருபபுத்ர! ஜகஜ்ஜனன்யா
வாசா வ்ருதோஸி பதி;, ரஸ்மி தவைவ தாஸீ
ருக்மிணி தேவீ எப்படி ஒரு அந்தணரிடம் செய்தி அனுப்பினாளோ, அதைப் போல் சசிகலாவும் அந்தணரிடம் ஒரு கடிதம் அனுப்புகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்று, அனைத்தையும் ஸுதர்சனிடம் சொல்கிறார். சசிகலைக்கு சுயம்வரம் ஏற்பாடு நடக்கிறது என்றும் சொல்கிறார்.
9. அத்ராSSகதா ந்ருபதயோ, பஹவஸ்தவமேத்ய
தேஷாம் ஸுதீர! மிஷதாம், நய மாம் ப்ரியாம் தே
ஏவம் வதூவசன; மாநய தாம் ஸுசீலாம்
பத்ரம் த்வாஸ்த்வி, தமுதீர்ய ஜகாம விப்ரஹ
சுயம் வரத்திற்கு அழகு, படை பணம், பலம் வீரம் உடைய எல்லா ராஜாக்களும் காசி நகரம் வர ஆரம்பித்தார்கள். ஆனால் சசிகலைக்கு யாரிடமும் விருப்பமில்லை. அவள் ஸுதர்சனனை
மட்டுமே காதலித்தாள். வீரனும் ராஜா த்ருவஸந்தியின் புதல்வனுமான ஸுதர்சனன், தன்னை விவாஹம் செய்தல் மிகவும் பொருத்தமே என்று நினைத்தாள். அந்த அந்தணர் சொல்லியது போல் கட்டாயம் ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருவான். தன்னை விவாஹம் செய்து கொள்வான் என்று நம்பினாள்.
10. ஸ்வப்னே ச ஜாக்ரதி ச, பச்யதி பக்தவர்யஹ
த்வாம் ஸந்ததம் தவ வசோ, மதுரம் ச்ருணோதி
ஐஸ்வர்யமாசு லபதேபி ச முக்தி,மேதி
த்வத்பக்திமேவ மம தேஹி; நமோஜனன்யை
ஸுதர்சனனுக்கு அன்னை நேரில் காட்சி தந்தாள். சசிகலாவிற்குக் கனவில் காட்சி தந்தாள். அவர்களுடன் அன்னை பேசினாள். அவர்களுக்கு நிச்சயம் ஐஸ்வர்யமும் மோட்க்ஷமும் கிடைக்கும். தாயே அவர்களைப் போல் எனக்கும் உன்னிடம் பக்தி வர வேண்டும் என்று இந்த கவிஞன் அன்னையை நமஸ்கரிக்கிறார்.
தசகம் பதினைந்து முடிந்தது
தசகம் 16