ENQUIRY geetanjaliglobalgurukulam

Friday, 1 September 2023

29 ഏകോനത്രിംശദശകഃ - ദേവീപീഠോത്പത്തിഃ

 

29 ഏകോനത്രിംശദശകഃ - ദേവീപീഠോത്പത്തിഃ

അഥൈകദാഽദൃശ്യത ദക്ഷഗേഹേ ശാക്തം മഹസ്തച്ച ബഭൂവ ബാലാ . വിജ്ഞായ തേ ശക്തിമിമാം ജഗത്സു സർവേഽപി ഹൃഷ്ടാ അഭവൻ ക്ഷണശ്ച .. 29-1.. ദക്ഷഃ സ്വഗേഹാപതിതാം ചകാര നാമ്നാ സതീം പോഷയതി സ്മ താം സഃ . സ്മരൻ വചസ്തേ ഗിരിശായ കാലേ പ്രദായ താം ദ്വൗ സമതോഷയച്ച .. 29-2.. ഏവം ശിവഃശക്തിയുതഃ പുനശ്ച ബഭൂവ ഗച്ഛത്സു ദിനേഷു ദക്ഷഃ . ദൈവാച്ഛിവദ്വേഷമവാപ ദേഹം തത്പോഷിതം സ്വം വിജഹൗ സതീ ച .. 29-3.. ദുഃഖേന കോപേന ച ഹാ സതീതി മുഹുർവദന്നുദ്ധൃതദാരദേഹഃ . ബഭ്രാമ സർവത്ര ഹരഃ സുരേഷു പശ്യത്സു ശാർങ്ഗീ ശിവമന്വചാരീത് .. 29-4.. രുദ്രാംസവിന്യസ്തസതീശരീരം വിഷ്ണുഃ ശരൗഘൈർബഹുശശ്ചകർത . ഏകൈകശഃ പേതുരമുഷ്യ ഖണ്ഡാ ഭൂമൗ ശിവേ സാഷ്ടശതം സ്ഥലേഷു .. 29-5.. യതോ യതഃ പേതുരിമേ സ്ഥലാനി സർവാണി താനി പ്രഥിതാനി ലോകേ . ഇമാനി പൂതാനി ഭവാനി ദേവീപീഠാനി സർവാഘഹരാണി ഭാന്തി .. 29-6.. ത്വമേകമേവാദ്വയമത്ര ഭിന്നനാമാനി ധൃത്വാ ഖലു മന്ത്രതന്ത്രൈഃ . സമ്പൂജ്യമാനാ ശരണാഗതാനാം ഭുക്തിം ച മുക്തിം ച ദദാസി മാതഃ .. 29-7.. നിർവിണ്ണചിത്തഃ സ സതീവിയോഗാച്ഛിവഃ സ്മരംസ്ത്വാം കുഹചിന്നിഷണ്ണഃ . സമാധിമഗ്നോഽഭവദേഷ ലോകഃ ശക്തിം വിനാ ഹാ വിരസോഽലസശ്ച .. 29-8.. ചിന്താകുലാ മോഹധിയോ വിശീർണതോഷാ മഹാരോഗനിപീഡിതാശ്ച . സൗഭാഗ്യഹീനാ വിഹതാഭിലാഷാഃ സർവേ സദോദ്വിഗ്നഹൃദോ ബഭൂവുഃ .. 29-9.. ശിവോഽപി ശക്ത്യാ സഹിതഃ കരോതി സർവം വിയുക്തശ്ച തയാ ജഡഃ സ്യാത് . മാ മാഽസ്തു മേ ശക്തിവിയോഗ ഏഷ ദാസോഽസ്മി ഭൂയോ വരദേ നമസ്തേ .. 29-10..









25 പഞ്ചവിംശദശകഃ - മഹാസരസ്വത്യവതാരഃ



 

25 പഞ്ചവിംശദശകഃ - മഹാസരസ്വത്യവതാരഃ

സുംഭാദിവധം
അഥാമരാഃ ശത്രുവിനാശതൃപ്താശ്ചിരായ ഭക്ത്യാ ഭവതീം ഭജന്തഃ .
മന്ദീഭവദ്ഭക്തിഹൃദഃ ക്രമേണ പുനശ്ച ദൈത്യാഭിഭവം സമീയുഃ .. 25-1..

സുംഭോ നിസുംഭശ്ച സഹോദരൗ സ്വൈഃ പ്രസാദിതാത്പദ്മഭവാത്തപോഭിഃ .
സ്ത്രീമാത്രവധ്യത്വമവാപ്യ ദേവാൻ ജിത്വാ രണേഽധ്യൂഷതുരൈന്ദ്രലോകം .. 25-2..

ഭ്രഷ്ടശ്രിയസ്തേ തു ഗുരൂപദേശാദ്ധിമാദ്രിമാപ്താ നുനുവുഃ സുരാസ്ത്വാം .
തേഷാം പുരശ്ചാദ്രിസുതാഽഽവിരാസീത്സ്നാതും ഗതാ സാ കില ദേവനദ്യാം .. 25-3..

തദ്ദേഹകോശാത്ത്വമജാ പ്രജാതാ യതഃ പ്രസിദ്ധാ ഖലു കൗശികീതി .
മഹാസരസ്വത്യഭിധാം ദധാനാ ത്വം രാജസീശക്തിരിതീര്യസേ ച .. 25-4..

ഹിമാദ്രിശൃംഗേഷു മനോഹരാംഗീ സിംഹാധിരൂഢാ മൃദുഗാനലോലാ .
ശ്രോത്രാണി നേത്രാണ്യപി ദേഹഭാജാം ചകർഷിഥാഷ്ടാദശബാഹുയുക്താ .. 25-5..

വിജ്ഞായ സുംഭഃ കില ദൂതവാക്യാത്ത്വാം മോഹനാംഗീം ദയിതാം ചികീർഷുഃ .
ത്വദന്തികേ പ്രേഷയതിസ്മ ദൂതാനേകൈകശഃ സ്നിഗ്ധവചോവിലാസാൻ .. 25-6..

ത്വാം പ്രാപ്യ തേ കാലികയാ സമേതാമേകൈകശഃ സുംഭഗുണാൻ പ്രഭാഷ്യ .
പത്നീ ഭവാസ്യേതി കൃതോപദേശാസ്തത്പ്രാതികുല്യാത്കുപിതാ ബഭൂവുഃ .. 25-7..

സുംഭാജ്ഞയാ ധൂമ്രവിലോചനാഖ്യോ രണോദ്യതഃ കാലികയാ ഹതോഽഭൂത് .
ചണ്ഡം ച മുണ്ഡം ച നിഹത്യ കാലീ ത്വത്ഫാലജാ തദ്രുധിരം പപൗ ച .. 25-8..

ചാമുണ്ഡികേതി പ്രഥിതാ തതഃ സാ ത്വാം രക്തബീജോഽധ യുയുത്സുരാപ .
യദ്രക്തബിന്ദൂദ്ഭവരക്തബീജസംഘൈർജഗദ്വ്യാപ്തമഭൂദശേഷം .. 25-9..

ബ്രഹ്മേന്ദ്രപാശ്യാദികദേവശക്തികോട്യോ രണം ചക്രുരരാതിസംഘൈഃ .
തത്സംഗരം വർണയിതും ന ശക്തഃ സഹസ്രജിഹ്വോഽപി പുനഃ കിമന്യേ .. 25-10..

രണേഽതിഘോരേ വിവൃതാനനാ സാ കാലീ സ്വജിഹ്വാം ഖലു ചാലയന്തീ .
ത്വച്ഛസ്ത്രകൃത്താഖിലരക്തബീജരക്തം പപൗ ഗർജനഭീതദൈത്യാ .. 25-11..

ത്വയാ നിസുംഭസ്യ ശീരോ നികൃത്തം സുംഭസ്യ തത്കാലികയാഽപി ചാന്തേ .
അന്യേഽസുരാസ്ത്വാം ശിരസാ പ്രണമ്യ പാതാലമാപുസ്ത്വദനുഗ്രഹേണ .. 25-12..

ഹതേഷു ദേവാ രിപുഷു പ്രണമ്യ ത്വാം തുഷ്ടുവുഃ സ്വർഗമഗുഃ പുനശ്ച .
തേ പൂർവവദ്യജ്ഞഹവിർഹരന്തോ ഭൂമാവവർഷൻ ജഹൃഷുശ്ച മർത്യാഃ .. 25-13..

മാതർമദീയേ ഹൃദി സന്തി ദംഭദർപാഭിമാനാദ്യസുരാ ബലിഷ്ഠാഃ .
നിഹത്യ താൻ ദേഹ്യഭയം സുഖം ച ത്വമേവ മാതാ മമ തേ നമോഽസ്തു .. 25-14..

28 அஷ்டாவிம்ʼஶத³ஶக꞉ - ஶக்த்யவமானதோ³ஷ꞉


https://youtu.be/GlGGGD5Dilw
         28 அஷ்டாவிம்ʼஶத³ஶக꞉ -    ஶக்த்யவமானதோ³ஷ꞉ppt

ஹாலாஹலாக்²யானஸுரான் புரா து 

        நிஜக்⁴னதுர்விஷ்ணுஹரௌ ரணாந்தே .

ஸ்வேனைவ வீர்யேண ஜயோ(அ)யமேவம்ʼ
 தௌ மோஹிதௌ த³ர்பமவாபதுஶ்ச .. 28-1..

ததோ விதி⁴ஸ்தௌ தருவத்³விசேஷ்டௌ தேஜோவிஹீனாவபி⁴வீக்ஷ்ய பீ⁴த꞉ .
நிமீலிதாக்ஷ꞉ ஸகலம்ʼ விசிந்த்ய ஜானன் ஸுதான் த³க்ஷமுகா²னுவாச .. 28-2..

புத்ரா ஹரிம்ʼ பஶ்யத தூ⁴ர்ஜடிம்ʼ ச யௌ நஷ்டஶக்தீ க²லு ஶக்திகோபாத் .
ததோ ஜக³த்³பா⁴ரயுதோ(அ)ஸ்மி யூயம்ʼ ஶக்திம்ʼ தபோபி⁴꞉ குருத ப்ரஸன்னாம் .. 28-3..

ஶக்தே꞉ ப்ரஸாதே³ன ஹி பூர்வவத்தௌ ஸ்யாதாம்ʼ யஶோவ்ருʼத்³தி⁴ரனேன வ꞉ ஸ்யாத் .
ஶக்திஶ்ச யத்ராவதரத்யமோக⁴மேதத்குலம்ʼ யாதி க்ருʼதார்த²தாம்ʼ ச .. 28-4..

ஶக்தே꞉ கடாக்ஷைர்ஜக³தோ(அ)ஸ்து ப⁴த்³ரமேவம்ʼ நிஶம்யாஶு ஹிமாத்³ரிமேத்ய .
த³க்ஷாத³யோ த்⁴யானஜபாதி³பி⁴ஸ்த்வாமாராத்⁴ய ப⁴க்த்யா(அ)ப்³த³ஶதானி நின்யு꞉ .. 28-5..

த்³ருʼஷ்டா புரஸ்தைஸ்து நுதா த்வமாத்த² பீ⁴த்யாலமார்த்யா ச ஹிதம்ʼ த³தா³மி .
கௌ³ரீ ச லக்ஷ்மீஶ்ச மமைவ ஶக்தீ தே ஶம்ப⁴வே ப்ராக்³ ஹரயே ச த³த்தே .. 28-6..

தௌ ஶக்திஸாஹாய்யத ஏவ தை³த்யாந்நிஜக்⁴னது꞉ ஸத்யமித³ம்ʼ து தாப்⁴யாம் .
ஹா விஸ்ம்ருʼதம்ʼ ஶக்த்யவமானதோ³ஷாத்³விநஷ்டஶக்தீ க²லு தாவபூ⁴தாம் .. 28-7..

தௌ பூர்வவத்ஸ்தாமிஹ ஶக்திரேகா ஜாயேத த³க்ஷஸ்ய குலே மதீ³யா .
க்ஷீராப்³தி⁴தோ(அ)ன்யா ச புராரிராத்³யாம்ʼ க்³ருʼஹ்ணாது பஶ்சாதி³தராம்ʼ ச விஷ்ணு꞉ .. 28-8..

ஸர்வே ஸ்வஶக்திம்ʼ பரிபூஜ்ய மாயாபீ³ஜாதி³மந்த்ரான்விதி⁴வஜ்ஜபந்த꞉ .
விராட்ஸ்வரூபம்ʼ மம ரூபமேதத்ஸச்சித்ஸ்வரூபம்ʼ ச ஸதா³ ஸ்மரேத .. 28-9..

ப்ரயாத துஷ்டா ஜக³தாம்ʼ ஶுப⁴ம்ʼ ஸ்யாதே³வம்ʼ த்வமாபா⁴ஷ்ய திரோத³தா⁴த² .
காருண்யதஸ்தே கி³ரிஶோ ஹரிஶ்ச ஶக்தாவபூ⁴தாம்ʼ நிஜகர்ம கர்தும் .. 28-10..

மாத꞉ கடாக்ஷா மயீ தே பதந்து மா மா(அ)ஸ்து மே ஶக்த்யவமானபாபம் .
ஸர்வான்ஸ்வத⁴ர்மான் கரவாண்யபீ⁴தோ ப⁴த்³ரம்ʼ மம ஸ்யாத்ஸததம்ʼ நமஸ்தே .. 28-11..

தசகம் 28

சக்த்யவமானதோஷம்ppt

சக்தியை அசட்டை செய்த ஹரிஹரரின் கதையை இங்கு பார்க்கப் போகிறோம்.

1. ஹாலாஹலாக்யான,சுரான் புரா து
நிஜக்னதுர் விஷ்ணு,ஹரௌ ரணாநதே
ஸ்வேனைவ வீர்யேண, ஜயோSயமேவம்
தௌ மோஹிதௌ, தர்ப்பம் அவாப துச்ச

ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அஸுரக் கூட்டம், ப்ரம்ம தேவரிடம் வரத்தைப் பெற்று மூஉலகத்தையும் தங்கள் பராக்ரமத்தால் கைப்பற்றினர். ருத்திரரும், விஷ்ணுவும் அவர்களுடன் 60,000 வருடங்கள் பெரும் போர் புரிந்து அஸுரர்களைக் கொன்றனர். வெற்றிக்குக் காரணம் தங்களின் பராக்ரமமே என்று, தங்களின் மனைவிகளான கௌரி மஹாலக்ஷ்மி ஆகிய சக்திகளை மறந்தார்கள். அவர்கள் கர்வம் கொண்டனர். அவர்களின் கர்வத்தைக் கண்டு தேவிகள் சிரித்தனர். தங்களின் சொந்த சக்திகளை மதிக்காமல், மாயா மோகத்தால் தகாத வார்த்தைகளையும் சொல்ல சக்திகள் அவர்களிடமிருந்து பிரிய, அவர்கள் சலனமற்றவர்கள் ஆனார்கள்.

2. ததோ விதிஸ்தௌ, தருவத்விசேஷ்டௌ
தேஜோ விஹீனாவ,பிவீக்ஷ்ய பீதஹ
நிமீலிதாக்ஷ: ஸகலம் விசிந்த்ய
ஜானன் ஸுதான் தக்ஷ,முகானுவாச

பிரம்மா, விஷ்ணுவும் ருத்ரரும் சக்தியின்றி சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்தார். மிகவும் கவலையில் ஆழ்ந்தார். ஏன் இப்படி நடந்தது? என்று யோசித்தார். இது பராசக்தியின் கோபத்தின் விளைவு என்பதை அறிந்தார். சில காலம் வரை, தன் சக்தியின் பிரபாவத்தால் அவர்களுடையத் தொழிலைச் செய்தார்? எவ்வளவு காலம் இப்படிச் செய்ய முடியும்? அதனால் தன் புத்திரர்களான தக்ஷன், மனு முதலியவர்களையும், ஸனகாதிகளையும் அழைத்தார்.

3. புத்ரா ஹரிம் பச்,யத துர்ஜடிம் ச
யௌ நஷ்டசக்தீ, கலு சக்திகோபாது
ததோ ஜகத் பார,யுதோSஸ்மி; யூயம்
சக்திம் தபோபி:, குருத ப்ரஸன்னாம்

ப்ரம்மா சொன்னார் ” புத்திரர்களே! பராசக்தியின் கோபத்தால் ஹரிஹரர்கள் சக்தியின்றி மரம் போல் அசையாமல் நிற்கிறார்கள் . நான் எவ்வளவு நாட்கள் அவர்களின் ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்ய முடியும்? அதனால் என்னால் தவம் செய்து பராசக்தியை சந்தோஷப் படுத்த முடியவில்லை. தவமே ஒருவரின் சக்தியை பலப்படுத்தும். முன் போல் அவர்கள் சக்தி உடையவர்களாக ஆக வேண்டும். அதனால் நாம் எல்லோரும் தவம் செய்து அந்த பராசக்தியைச் சந்தோஷப் படுத்த வேண்டும்” என்றார்.

4. சக்தே: ப்ரஸாதேன ஹி பூர்வவத் தௌ
ஸ்யாதாம்; யசோவ்ருத்திரனேன வவ: ஸ்யாது
சக்திச்ச யத்ரா,வதரத்ய மோகம்
ஏதத் குலம், யாதி, க்ருதார்த்ததாம் ச

பரம பக்தியுடன் கூடிய தவத்தை நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுதான் தேவீ அனுக்ரஹம் செய்து, அவர்கள் மீண்டும் சக்தியைப் பெறுவார்கள் . சக்தி ப்ரஸாதித்தால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று ப்ரம்மா சொன்னார். எந்தக் குலத்தில் அன்னை அவதரிக்கிறாளோ, அந்தக் குலம் கீர்த்தியும், புகழும் அடையும்.

5. சக்தே: கடாக்ஷைர், ஜகதோஸ்து பத்ரம்
ஏவம் நிசம்யாSSசு, ஹிமாத்ரிமேத்ய
தக்ஷாதயோ த்யான,ஜபாதிபிஸ்த்வாம்
ஆராத்ய பக்த்யாSப்த,சதானி நின்யுஹு

சக்தி ப்ரஸாதித்தால் உலகத்திற்கே நன்மை வரும். இதைகேட்டவுடன் தக்ஷன் முதலானோர் உடனே கிளம்பி, இமயமலைச்சாரலை அடைந்து, த்யானம், தவம் செய்தார்கள். 100 வருடங்கள் கடந்தன.

6. த்ருஷ்டா புரஸ்தைஸ்து, நுதா த்வமாத்த
பீத்யாSலமார்த்யா ச, ஹிதம் ததாமி;
கௌரீ ச லக்ஷ்மீச்ச மமைவ சக்தீ;
தே சம்பவே ப்ராக், ஹரயே ச தத்தே

ஸச்சிதானந்த ஸ்வரூபிணீயாகிய அம்பாள், பாசம், அங்குசம், அபயம், வரத முத்திரைகளுடன், மூன்று கண்களுடன், கருணையுடன் பிரஸன்னமானாள். தக்ஷப்ரஜாபதிகள் வேதாந்த வாக்யத்தால் துதித்தார்கள். அம்பாள் வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்று சொன்னாள். அவர்கள் ஹரிஹரர்களின் சரீரத்திற்குச் சாந்தியும், அவர்கள் விட்டுப் பிரிந்தச் சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என்று வேண்டினார்கள். என் குலத்தில் தாங்கள் அவதரிக்க வேண்டும் என்றும் தக்ஷன் பிரார்த்தித்தான். அம்பாள் சொன்னாள் “ஏன் விஷ்ணுவும், சிவனும் சலனமற்றவர்கள் ஆனார்கள்? சிருஷ்டிக்கு முன் சிவனுக்கு, சக்தி என்ற சக்தியையும், விஷ்ணுவிற்கு லக்ஷ்மி என்ற சக்தியையும் தந்திருந்தேன் ( 10 ஆவ்து தசகத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது).

7. தௌ சக்தி சாஹாய்,யத ஏவ தைத்யான்
நிஜக்னது: ஸத்ய,மிதம் து தாப்யாம்
ஹா! விஸ்ம்ருதம்; சத்த்ய,யவமான தோஷாது
வினஷ்ட சக்தீ, கலு தாவ பூதாம்

ஹாலாஹலர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்தது, அவர்களுடைய சக்தியால் அல்ல. அவர்களிடமிருந்த சக்திகளின் சக்தியால் தான். ஆனால் அவர்கள் தாங்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று அஹங்காரம் கொண்டார்கள். புவனேஸ்வரி, சக்திகளை அவர்களிடம் தரும் பொழுதே சக்திகளை ஆதரவுடன் நடத்த வேண்டும் , அலக்ஷ்சியம் செய்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தாள். அன்று சொன்னது இன்று நடந்தது. சிவனும் விஷ்ணுவும் சக்திகளைத் துச்சமாக நினைத்ததால் சலனமற்றவர்கள் ஆனார்கள்.

8. தௌ பூர்வ,வத் ஸ்தா,மிஹ; சக்திரேகா
ஜாயேத தக்ஷஸ்ய, குலே மதீயா
க்ஷீராப்திதோன்யா ச;, புராரிராத்யாம்
க்ருஷ்ணாது; பச்சாதி,தராம் ச விஷ்ணுஹு

அம்பாள் சொன்னாள் ” இனி ஒரு பொழதும் இப்படிப்பட்ட அபராதம் எனக்கு நிகழாமல் இருக்க வேண்டும். இப்பொழுது என்னைப் பிரார்தித்த படியால், ஒரு சக்தி தக்ஷனது க்ரஹத்திலும் ஒரு சக்தி பாற்கடலிலும் தோன்றுவார்கள். என்னுடைய கருணையால் அவர்களைச் சிவனும் விஷ்ணுவும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கால தாமதம் ஆகும். அதுவரை அவர்கள் சலனமில்லாமல் இருக்க வேண்டாம். இப்பொழுது அவர்களின் தொழிலைச் செய்ய என் கருணையால் அவர்களிடம் சக்தி உண்டாகும். இது தற்காலிகமே. இனிமேல் சக்தியை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னாள். தக்ஷனது ஆசையையும் பூர்த்தி செய்தாள்.

9. ஸர்வே ஸ்வசக்திம், பரிபூஜ்ய மாயா-
-பீஜாதிமந்த்ரான், விதிவஜ்ஜ பந்தஹ
விராட் ஸ்வரூபம் மம, ரூபமேதத்,
ஸச்சித்ஸ்வரூபம், ச ஸதா ஸ்மரேத

அம்பாள் மேலும் சொன்னாள் எல்லோரும் தன் சக்தியை ஆதரிக்க வேண்டும். என்னுடைய மூன்று ரூபத்தையும் சதா த்யானம் செய்ய வேண்டும். 1. விராட் ரூபம். அண்ட சராசரங்களிலும் சக்தியாக இருப்பது விராட் ரூபம். சக்தி இல்லாவிட்டால் எதுவும் ஜடம் தான். (மின்சாரம், ஃபன், பல்பு) ப்ரக்ருதிக்குச் சக்தி தருபவள் அம்பாள்தான். (ஸர்வ வ்யாபி). 2. இப்பொழுது காணும் ரூபம். சுந்தரியான பெண் ரூபம். அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். 3. சச்சிதானந்த ஸ்வரூபம். பரமானந்த ஸ்வரூபம். தண்ணீரில் அலை வந்தாலும் நுரை வந்தாலும் ஆதாரம் தண்ணீர் தான். அதுபோல இந்த உலகில் இருப்பது எல்லாமே சச்சிதானந்தம் தான். எல்லாம் ஒரே தேவி மயம் தான். பலவாக நினைப்பது பிரமைதான்.

10. ப்ரயாத துஷ்டா;, ஜகதாம் சுபம் ஸ்யா
தேவம் த்வமாபாஷ்ய, திரோததாத;
காருண்ய தஸ்தே, கிரிசோ ஹரிச் ச
சக்தாவபூதாம், நிஜகர்ம கர்த்தும்

இப்படிச் சொல்லி விட்டு மணித்வீப வாஸியான அம்பள் மறைந்தாள். சிவனும் விஷ்ணுவும் தத்தம் செயல்களைச் செய்யத் தொடங்கினார்கள். இப்படியாக உலகத்தில் சக்திகள் தக்ஷனுக்கும், ஸமுத்ரராஜனுக்கும் மகளாக அவதாரம் செய்யும் வரை தற்காலிகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தாள் தேவி.

11. மாதஹ! கடாக்ஷா, மயி தே பதந்து;
மா மாSஸ்து மே சக்த்ய,வமானபாபம்
ஸர்வான் ஸ்வதர்மான், கரவாண்யபீதஹ
பத்ரம் மம ஸ்யாத், ஸததம் நமஸ்தே.

சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் சக்தியை அலக்ஷியம் செய்த தோஷம் வந்தது. தனக்கு அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது, தான் எப்பொழுதும் தனக்குரிய தர்மங்களைச் செய்து கொண்டு வாழவேண்டும் என்று இதன் ஆசிரியர் தேவியிடம் பிரார்த்தனைச் செய்கிறார்.

தசகம் இருபத்தி எட்டு முடிந்தது


தசகம் 27 சதாக்ஷி அவதாரம் அம்பாள் சாகம்பரியாகவும், சதாக்ஷியாகவும் அவதாரம் செய்த கதை

27 ஸப்தவிம்ʼஶத³ஶக꞉ - ஶதாக்ஷ்யவதார꞉

ppt






தை³த்ய꞉ புரா கஶ்சன து³ர்க³மாக்²ய꞉ ப்ரஸாதி³தாத்பத்³மப⁴வாத்தபோபி⁴꞉ . அவைதி³கம்ʼ வைதி³கமப்யக்³ருʼஹ்ணான்மந்த்ரம்ʼ ஸமஸ்தம்ʼ தி³விஷஜ்ஜயைஷீ .. 27-1.. வேதே³ க்³ருʼஹீதே தி³திஜேன விப்ரா꞉ ஶ்ருதிஸ்தி²ரா விஸ்ம்ருʼதவேத³மந்த்ரா꞉ . ஸாந்த்⁴யானி கர்மாண்யபி நைவ சக்ரு꞉ க்ஷிதிஸ்த்வவேதா³த்⁴யயனா ப³பூ⁴வ .. 27-2.. ஹ்ருʼதேஷு மந்த்ரேஷ்வகி²லேஷு பூஜாயஜ்ஞாதி³ பூ⁴மௌ ந க்ருʼதம்ʼ மனுஷ்யை꞉ . ஸுரா அஶக்தாஸ்தத³லாப⁴கி²ன்னா தை³த்யேன யுத்³தே⁴ ப³லினா ஜிதாஶ்ச .. 27-3.. த்யக்த்வா தி³வம்ʼ தே கி³ரிக³ஹ்வரேஷு நிலீய வர்ஷாணி ப³ஹூனி நின்யு꞉ . வ்ருʼஷ்டேரபா⁴வாத்³த⁴ரணீ ச ஶுஷ்கஜலாஶயா தர்ஷனிபீடி³தா(அ)பூ⁴த் .. 27-4.. ஸர்வே த்ருʼஷார்தாஶ்ச ஹிமாத்³ரிமேத்ய த்வாம்ʼ த்⁴யானபூஜானுதிபி⁴ர்ப⁴ஜந்த꞉ . ப்ரஸாத³யாமாஸுரனேககோடிப்³ரஹ்மாண்ட³கர்த்ரீமகி²லார்திஹந்த்ரீம் .. 27-5.. த்³ருʼஷ்டா த³யார்த்³ராக்ஷிஶதா த்வமேபி⁴꞉ க்ருʼபாஶ்ருவர்ஷைர்னவராத்ரமுர்வ்யாம் . ஜலாஶயான்பூர்ணஜலாம்ʼஶ்சகர்த² ஜனா꞉ ஶதாக்ஷீத்யபி⁴தா⁴ம்ʼ த³து³ஸ்தே .. 27-6.. க்ஷுத்பீடி³தானாம்ʼ ச சராசராணாம்ʼ ஸர்வத்ர நானாவித⁴மன்னமிஷ்டம் . ஸ்வாதூ³னி மூலானி ப²லானி சாதா³꞉ ஶாகம்ப⁴ரீதி ப்ரதி²தா ததோ(அ)பூ⁴꞉ .. 27-7.. தை³த்யஸ்து விஜ்ஞாய ஸமஸ்தமஸ்த்ரஶஸ்த்ரை꞉ ஸஸைன்ய꞉ ப்ரஹரன் வபுஸ்தே . ரணாங்க³ணே ஸாயகவித்³த⁴கா³த்ர꞉ ஸஶப்³த³முர்வ்யாம்ʼ தருவத்பபாத .. 27-8.. ஸ சாஸுராத்மா க²லு வேத³மந்த்ரான் சிரம்ʼ பட²ம்ʼஸ்த்வாமபி⁴வீக்ஷமாண꞉ . க³தாயுராவிஶ்ய பராத்மனி த்வய்யவாப முக்திம்ʼ மிஷதாம்ʼ ஸுராணாம் .. 27-9.. வேதா³ன்ஹ்ருʼதானப்³ஜப⁴வானனே த்வம்ʼ புனஶ்ச நிக்ஷிப்ய ஜக³த்ஸுரக்ஷாம் . க்ருʼத்வா நுதா தே³வக³ணைர்னரைஶ்ச துஷ்டா திரோ(அ)பூ⁴꞉ கருணார்த்³ரநேத்ரா .. 27-10.. ப⁴க்தஸ்ய வை து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஸுக²ப்ரதா³ து³ர்க³மஹந்த்ரி மாத꞉ . து³ர்கே³தி நாம்னா விதி³தா ச லோகே விசித்ரரூபாஸ்தவ தே³வி லீலா꞉ .. 27-11.. கோ(அ)ப்யஸ்தி சித்தே மம து³ர்க³மோ(அ)யம்ʼ ஜ்ஞாதஸ்த்வயா நைவ மயா து தே³வி . ய꞉ ஸந்ததம்ʼ த்³ருஹ்யதி மே தமாஶு ஸம்ʼஹ்ருʼத்ய மாம்ʼ ரக்ஷ நமோ நமஸ்தே .. 27-12..


தசகம் 27

சதாக்ஷி அவதாரம்

அம்பாள் சாகம்பரியாகவும், சதாக்ஷியாகவும் அவதாரம் செய்த கதை

https://onedrive.live.com/edit.aspx?resid=9854A1791CB05F1C!1056&app=PowerPoint&wdnd=1&wdPreviousSession=0a49171a%2D7a63%2D4cbe%2D875d%2Dfb2b4e081ed2&wdNewAndOpenCt=1693723372822&wdo=4&wdOrigin=wacFileNew&wdTpl=blank&wdPreviousCorrelation=bb5c9903%2D7576%2D4b12%2D8c9f%2Dfade6c6d7a94

அம்பாள் சாகம்பரியாகவும், சதாக்ஷியாகவும் அவதாரம் செய்த கதையை இந்த தசகத்தில் அறிந்து கொள்ளப் போகிறோம். துவஷ்டாவின் புத்திரனான மஹா பலசாலியான வ்ருத்தாஸுரன்வ்ருத்ராஸுரனை இந்திரனால் கொல்லப்பட்டான். ஆனால் சுசூதர் வ்ருத்தாஸுர வதம் வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் :தேவியால் தான் நடந்தது என்று சொல்லியிருக்கிறார். வியாஸரும் இதைச் சொல்லியிருக்கிறார்.

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 6 வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் :

7) இந்த்ரன் ஶ்ரீபராஶக்தி அனுக்ரஹத்தால் வ்ருத்ராஸுரனை ஸம்ஹரித்தல்.

மஹா தபஸ்வியும் பிரஜாபதியும் ஆன துவஷ்டா என்று ஒருவர் இருந்தார். துவஷ்டா பிராம்ணர்களை விரும்புபவர். தேவ காரியங்களைச் செய்வதில் கெட்டிக்காரர். அவருக்கு இந்திரனிடம் பகை. அதனால் மூன்று தலைகளை உடைய ஒரு மகனைத் தோற்றுவித்தார். ஒரு முகத்தால் வேத அத்தியயனம் செய்தும், ஒரு முகத்தால் மது அருந்தியும், ஒரு முகத்தால் எல்லா உலகத்தையும் ஒரே சமயத்தில் காணக்கூடியவனாகவும் இருந்தான். அவன் பெயர் திரிசிரஸ். அவன் போகங்களைத் துறந்து, செய்வதற்கரிய தவம் செய்தான். தவத்தால் அவன் தர்மத்தைக் கைக்கொண்டவனாகவும், இந்திரியங்களை அடக்கியவனாகவும் மென்மையான இயல்பை உடையவனாகவும் இருந்தான். அவன் கடுமையான தவம் செய்வதைக் கண்ட இந்திரன், பயந்து இதை இப்படியே விடக்கூடாது என்று, அவனைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து, வஜ்ராயுதத்தை அவன் மேல் பிரயோகித்தான். அந்த தபஸ்வி உயிரிழந்து மலைச் சிகரம் போல் சாய்ந்தான். தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு துவஷ்டா மிக்வும் கோபம் கொண்டு “ஒரு பாபமும் செய்யாத முனிவனான என் மகனைக் கொன்றவனை அழிக்க இன்னொரு புத்திரனைத் தோற்றுவிப்பேன். என் வீரியத்தையும், தவத்தின் வலிமையையும் தேவர்கள் பார்க்கட்டும்” என்று சொல்லி, அதர்வண மந்திரங்களால் அக்னியில் 6 நாட்கள் ஹோமம் செய்த பின், அதிலிருந்து அக்னி போல் ஒரு புருஷன் தோன்றினான்.

அந்தப் புத்திரனைக் கண்ட துவஷ்டா “நீ இந்திரனுக்குப் பகைவனாக ஆவாய்” என்று சொன்னார். துன்பத்திலிருந்து காப்பதற்கு நீசக்தி உள்ள்வனாக இருப்பதால் இனி நீ ‘வ்ருத்ரன்’ என்று பிரசித்தமாவாய். உன் சகோதரன் திரிசிரன் பெருமை உடையவனாகவும், தவவலிமை உடையவனாகவும் இருந்தான். அவனுக்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தவறும் செய்யாத, அவனது தலைகளை, இந்திரன் வஜ்ராயுதத்தால் வெட்டினான். பாவச் செயல் செய்தவனும், மானங்கெட்டவனும், கெடுபுத்தி உடையவனும், கொடியவனும், பாவியும், பிரும்மஹத்தியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த இந்திரனை நீ கொல்ல வேண்டும்” என்று சொன்னார். இந்திரனை வதைப்பதற்குச் சக்தியுடைய தெய்வீக ஆயுதங்களைச் சிருஷ்டி செய்து கொடுத்தார். மஹா பல சாலியான விருத்ரன் தேரில் ஏறிக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். மானஸோத்ரம் என்னும் பர்வதத்திற்கு வந்து அஸுரர்களுடன் கூடி, வருணன், யமன், அக்னி, அனைவரையும் பின் வாங்கச் செய்தான். தந்தையிடம் சந்தோஷமாக இதைச் சொன்ன போது, துவஷ்டா “நீ பிரும்மாவை ஆராதித்து சிறந்த வரம் பெற்று அந்த இந்திரனையும் கொன்றுவிடு” என்று சொன்னார்.

100 வருடம் தவம் செய்தபின் பிரும்மன் ஹம்ஸ வாகத்தில் காட்சி தந்தார். அவரிடமிருந்து, இரும்பு போன்ற உலோகங்களினாலும், மரக்கட்டை, மூங்கில், போன்ற ஈரமாகவோ அல்லது உலர்ந்தோ இருக்கக் கூடிய எந்த ஆயுதத்தாலும் மரணம் வரக்கூடாது. தேவர்களாலும் அவர்களது சேனைகளாலும் வெல்ல முடியாத வீரியம் என்னிடம் விருத்தி அடைய வேண்டும்” என்று வரம் கேட்டான். அவரும் கேட்ட வரத்தைத் தந்தார். ஒரு பக்கம் தேவர்களும், மறுபக்கம் துவஷ்டாவின் புத்திரனும் போருக்குக் கூடினர். விருத்ரனின் வரத்தால் தேவர்கள் தோல்வியைத் தழுவி, யாக பாகங்களை இழந்து, மலைகளிலும், குகைகளிலும் வசித்தனர். தேவர்கள் விஷ்ணுலோகம் சென்று ஹரியை புருஷஸுக்தத்தால் துதித்தனர். லக்ஷ்மீபதியான அந்த ஜகந்நாதர் அவர்கள் முன் தோன்றினார். “நீங்கள் பயப்பட வேண்டாம். அந்த பகவதியை ஸ்தோத்தரித்துச் சரணடையுங்கள். அவள் உங்களுக்கு உதவி செய்வாள். அந்த தேவியையே நான் எப்பொழுதும் பூஜிக்கிறேன்” என்றார். தேவர்களும் தனிமையான இடத்தில் தியானமும், ஜபமும், தவமும் செய்தனர்.

அந்த தேவி ஸர்வாபரண அலங்காரங்களுடன், கையில் பாசம், அங்குசம், வரம், அபயம் என்ற முத்திரைகளுடன், சலங்கை ஒலிக்கும் ஒட்யாணத்துடன், கழுத்தில் அட்டிகை, கையில் கங்கணம், காலில் கொலுசு, தலையில் கிரீடம் ஆகியவைகளுடன், முகத்தில் சிரிப்புத் தவழ, மூன்று கண்களுடன், கருணைக் கடலாய், ஸச்சிதானந்த ரூபிணியாய் காட்சி தந்தாள். தேவர்கள் நமஸ்கரித்தனர். விருத்தாஸுரனைக் கொல்லும் உபாயத்தை தேவர்கள் வேண்டினர். அன்னை தன் சக்தியை அவர்களுக்குக் கொடுத்தாள். சந்தர்ப்பத்திற்காக இந்திரன் காத்திருந்தான். ஒருநாள் கடற்கரையில் அந்திப் பொழுதில், ஹரியை நினைத்தான். ஹரி வஜ்ராயுதத்தின் நடுவில் புகுந்தார். அப்பொழுது ஸமுத்திரத்தில் நீரின் நுரை, மலை போல் எழுந்தது. அது ஈரமும் இல்லை. காய்ந்ததும் இல்லை. ஆயுதமும் இல்லை. அந்த நுரையைக் கையில் எடுத்தான். பராசக்தியை வேண்டினான். சக்தி தன் அம்சத்தை அதில் புகுத்தினாள். ஹரி புகுந்திருக்கும் வஜ்ராயுதத்தை நுரையால் மறைத்தான். அதை விருத்ரன் மேல் எறிந்தான். அவன் மலை போல் வீழ்ந்தான். தேவியை அனைவரும் பூஜித்தனர். தேவி விருத்ரனைக் கொன்றதால் “வ்ருத்ர நிஹந்த்ரீ’ என்று மூ உலகத்தாலும் போற்றப் படுகிறாள்.. இந்திரனால் கொல்லப்பட்டதால் இந்திரனும் விருத்ரனைக் கொன்றான் என்று சொல்லப் படுகிறான்.ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 6 வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் :

இனி சதாக்ஷி அவதாரத்தைப் பார்ப்போம்.ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 6 வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் :

இனி சதாக்ஷி அவதாரத்தைப் பார்ப்போம்.

1. தைத்ய: புரா கச்,சன துர்க்கமாக்யஹ
ப்ராஸாதிதாத் பத்ம,பவாத் தபோபிஹி
அவைதிகம் வைதிகமப்ய க்ருஷ்ணான்-
மந்த்ரம் ஸமஸ்தம், திவிஷஜ்ஜயைஷீ

ஹிரண்யாட்க்ஷனின் வம்சத்தில் ருரு என்பவனுக்கு துர்கமன் என்னும் அஸுரன் பிறந்தான். துர்கமன், தேவர்களுக்குப் பலம் தருவது வேதம் தான். அதை எப்படியாவது அபஹரித்து, தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்று, ப்ரம்மவை நினைத்து, அன்ன ஆகாரம் இன்றி ஆயிரம் வருடம் தவம் செய்தான். ப்ரம்மா காட்சி தந்தார்.

 ‘மூன்று உலகத்திலும் அந்தணர்கள், தேவர்கள் இவர்களிடம் இருக்கும் வேத 

மந்திரங்கள் எனக்குச் சொந்தமாக வேண்டும்.

 தேவர்களை எல்லாம் வெற்றி கொள்ளும் ஆற்றல் வேண்டும்”

 என்று அஸுரன் வேண்டினான். ப்ரம்மாவும் தந்தார்.

2. வேதே க்ருஹீதே, திதிஜேன விப்ராஹா
ச்ருதிஸ்திரா விஸ்ம்ருத வேதமந்த்ராஹா
ஸாந்த்யானி கர்மாண்,யபி நைவ சக்ருஹு
க்ஷிதி ஸ்த்வ வேதா, த்யயனா பபூவ

பிராமணர்கள் வேதங்களைச் சொல்வது வழக்கம். அஸுரன் சாமர்த்தியமாக வேத மந்திரங்களை ப்ரம்மாவிடமிருந்து வாங்கி விட்டான். அதனால் பிராமணர்கள் வேத மந்திரங்களை மறந்து போனார்கள். அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஔபாசனம், சிரார்த்தம், ஹோமம், ஜபம், யக்ஜம் போன்றவைகளை அனுஷ்டிக்க முடியவில்லை. சந்யாவந்தன ஜபம் கூட இல்லாமல் போனது. உலகில் வேத மந்திர சப்தமே இல்லை. வேதம் சொல்லித் தருவதும் கற்றுக் கொள்வதும் இல்லாமல் போனது.

3. ஹ்ருதேஷீ மந்த்ரேஷ்,வகிலேஷு பூஜா
யஜ்ஞாதி பூமௌ, ந க்ருதம் மனுஷ்யைஹி
ஸுரா அசக்தா,ஸ்ததலாபகின்னா
தைத்யேன யுத்தே, பலினா ஜிதாச்ச

எல்லா மந்திரங்களும் அஸுரன் கையில் அகப்பட்டு விட்டது. மனிதன் மந்திரங்களை மறந்து போனான். பூஜை யக்ஞம் போன்ற கர்மங்கள் மனிதனால் செய்ய முடியாமல் போனது. மனிதர்கள் செய்யும் யக்ஞமும் பூஜையும் தேவர்களைப் புஷ்டியாக்கும். பூஜையும் யக்ஞமும் இல்லாததால் தேவர்கள் பலம் இழந்து போனார்கள். மூப்பற்றவர்களான தேவர்கள் வயோதிகர்கள் ஆனார்கள். அந்த நேரத்தில் துர்கமன் ஸ்வர்க்கலோகத்தை ஆக்ரமித்தான். பல நாட்கள் யுத்தம் நடந்தது. தேவர்கள் தோல்வியைத் தழுவினர்

4. த்யக்த்வா திவம் தே, கிரிகஹ்வரேஷு
நிலீய வர்ஷாணி பஹூ னி நின்யுஹு
வ்ருஷ்டேரபாவாத், தரணீ ச சுஷ்க
ஜலாசயா தர்ஷநிபீடிதாபூது

அஸுரன் தன் சகாக்களுடன் ஸ்வர்க்கலோகம் வந்தான். தேவர்களை அங்கிருந்து விரட்டினான். அதனால் அவர்கள் பர்வத குகைகளில் மறைந்திருந்தார்கள். பூமிக்கு மழை தருபவன் யார். இந்திரன். இந்திராதி தேவர்கள் ஸ்வர்க்கத்தில் இல்லாததால் மழை இல்லாமல் போனது. ஆறு, குளம் எல்லாம் வற்றிப் போனது. ஜீவராசிகள் தாகத்தால் தவித்தன. பஞ்சத்தால் இறக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை அதிகமானது.

5. ஸர்வே த்ருஷார்த்தாச்ச, ஹிமாத்ரிமேத்ய
த்வாம் த்யானபூஜா,நுதிபிர் பஜந்தஹ
ப்ரஸாதயாமா,ஸுரநேககோடி
ப்ரம்மாண்ட க்ர்த்ரீம், அகிலார்த்தஹந்த்ரீம்

இப்படி அனர்த்தங்கள் அதிகமானதால் எல்லோரும் இமாலய மலைக்குச் சென்று தேவியைத் துதித்தார்கள். சிலர் த்யானம் செய்தார்கள். ப்ரம்மாண்ட கோடி சிருஷ்டிக்கும் காரணமான தேவிக்கு இவர்களின் துன்பம் தீர்ப்பது ஒரு சிரமமா? அது அவளால் மட்டும் தானே முடியும்? அவர்களின் த்யானமும், பூஜையும், ஸ்துதியும் தேவியைச் சந்தோஷப்படுத்தியது.

6. த்ருஷ்டா தயார்த்ராக்ஷி, சதா த்வமேபிஹி
க்ருபாச்ரு வர்ஷைர், நவராத்ரமுர்வ்யாம்
ஜலாசயான் பூர்ண,ஜலாம்ச்ச கர்த்த
ஜனா: சதாக்ஷீத்,யபிதாம் ததுஸ்தே

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே (இரண்டு முறைச் சொல்ல வேண்டும்)

நூறு கண்களுடன் தேவி அவர்களுக்குக் காட்சி தந்தாள். அதனால் தான் அவளுக்கு சதாக்ஷி என்று பெயர். ஒன்பது நாட்கள் அன்னையின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த க்ருபா வர்ஷத்தால் பூமியில் ஆறு குளங்கள் நிரம்பி வழிந்தன.

7. க்ஷுத்பீடிதானாம் ச, சராசராணாம்
ஸர்வத்ர நாநாவித மன்னமிஷ்டம்
ஸ்வாதூநி மூலானி, பலானி சாதாஹா
சாகம்பரீதி ப்ரதிதா ததோSபூஹு

எல்லோரும் தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டார்கள் அல்லவா? சதாக்ஷி தேவியின் அருளால் துக்கம் தீர்ந்தது. தண்ணீர் கிடைத்தாலும் பசி தீர வேண்டுமே? உணவு வேண்டுமல்லவா? அதனால் அனைவருக்கும் அன்னமும் தந்தாள். அனைவருக்கும் வேண்டிய பழங்களையும் தந்தாள். அதனால் சாகம்பரி என்றும் அழைக்கப்பட்டாள். சாகம் என்றால் ஸத்யம் அல்லது செடி, பழங்கள், காய்கரிகள் என்று பொருள். அதைத் தந்தவள் சாகம்பரி.

8. தைத்யஸ்து விஜ்ஞாய, ஸமஸ்தமஸ்த்ர
சஸ்த்ரை: ஸஸைந்ய:, ப்ரஹரன் வபுஸ்தே
ரணாங்கணே ஸாய,கவித்த காத்ரஹ
ஸசப்த முர்வ்யாம், த்ருவத் பபாத

வேதத்தைக் கையில் வைத்திருந்த அஸுரர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. மூவுலகத்திலும் அனைத்து ஜீவன்களும் படும் கஷ்டத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராமல் திடீரென மழை பொழிந்தது. அதன் காரணமாக எல்லோருடைய பசியும் தாகமும் தீர்ந்தது. துர்கமாஸுரன் இதைப் பார்த்தான். ஆச்சர்யமடைந்தான். இதற்குக் காரணம் தேவிதான் என்று புரிந்து கொண்டான். உடனே தேவியுடன் யுத்தத்திற்குத் தயாரானான். தனது அஸுர சைன்யத்துடன் தேவியுடன் மோதினான். கோரமான யுத்தம் நடந்தது. தேவியுடன் மோதினால் ஜெயிக்கவா முடியும்? அன்னையின் பாணங்களுக்கு இறையானான். பூமியில் சாய்ந்தான். அவன் உடலிலிருந்து ஒரு ஒளி தோன்றி தேவியின் திரு மேனியில் மறைந்தது.

9. ஸ சாஸுராத்மா, கலு வேதமந்த்ரான்
சிரம் படம்ஸ்த்வாம் அபி வீக்ஷமாணஹ
கதாயுராவிச்ய, பராத்மனி த்வயி
அவாப முக்திம், மிஷதாம் ஸுராணாம்

தேவர்களை வெற்றி கொள்வதற்காகத் தானே துர்கமாஸுரன் வேதத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டான். அப்பொழுதாவது அவன் அந்த வேதத்தைப் படித்திருக்கலாமல்லவா? அப்படி அவன் படித்திருந்தால் விசுத்தி கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அதைப் படிக்காமல் தானே வைத்திருந்தான். வேத மந்திரத்தின் சக்தியை அவன் ப்ரம்மாவிடமிருந்து பெற்றதால் அதன் பயனாக தேவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஸாயுஜ்ய முக்தியும் அடைந்தான்.

10. வேதான் ஹ்ருதான ப்ஜ, பவாந நே த்வம்
புனச்ச நிக்ஷிப்ய, ஜகத்ஸு ரக்ஷாம்
க்ருத்வா நுதா தேவ,கணைர் நரைச்ச
துஷ்டா திரோSபூ: கருணார்த்ர நேத்ரா

அஸுரனிடமிருந்து காப்பாற்றிய வேதத்தை மீண்டும் ப்ரம்மாவிடம் தந்தாள். இந்த உலகத்தைப் பசி, தாகம், பஞ்சம் போன்ற பெரிய கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றினாள். தேவர்களும் மனிதர்களும் அனைவரும் தேவியை பக்தியுடன் வணங்கினார்கள். தேவி சந்தோஷத்துடன் எல்லோரையும் “துர்க்கை, சதாக்ஷி என்ற என் நாமங்களை எவன் ஜபிக்கிறானோ, அவன் மாயையைக் கடப்பான்” என்று சொல்லி அனுக்ரஹம் செய்து மறைந்து போனாள்.

11. பக்தஸ்ய வை துர்க்கதி நாசினீ த்வம்
ஸுகப்ரதா துர்க்க,மஹந்த்ரி! மாதஹ
துர்க்கேதி நாம்நா, விதிதா ச லோகே;
விசித்ரரூபா,ஸ்தவ தேவி! லீலாஹா

அம்பாள் பக்தர்களின் கஷ்டத்தைத் தீர்ப்பவள் என்பதுப் பல கதைகளில் சொல்லப்பட்டது. துர்கமன் என்னும் அஸுரனையும் வதம் செய்தாள். யதார்த்தமாகப் பார்த்தால் தேவர்களை விட அஸுரர்களுக்குத்தான் அனுக்ரஹம் செய்திருக்கிறாள். துர்கமனுக்கு ஸாயுஜ்ய முக்தியும் தந்தாள். தேவர்கள் மீண்டும் மீண்டும் சுக துக்கங்களில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அஸுரனால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்தன. துர்கமனை வதைத்ததும் ஒரு அனுக்ரஹமே. துர்கமனை வதைத்ததால் தேவி துர்கை என்று அழைக்கப் படுகிறாள். பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் யாரோ அவளே துர்கா எனப்படுபவள்.

12. கோப்யஸ்தி சித்தே, மம துர்க்கமோSயம்
ஞாதஸ்த்வயா, நைவ, மயா து தேவி!
ய: ஸந்ததம் த்ருஹ்யதி மே தமாசு
ஸம்ஹ்ருத்ய மாம் ரக்ஷ, நமோ நமஸ்தே

துர்கமாஸுரனை அழிக்க தேவி சதாக்ஷி ஆனாள். என் மனதிலும் ஒரு துர்கமாஸுரன் இருக்கிறான். அவன் வேதத்தை அபஹரிக்கிறான். அதாவது தனக்கும் தேவையான அளவு வேத ஞானம் இல்லை என்று சொல்கிறார். அந்த அஸுரனை வதம் செய்து வேத ஞானத்தைத் தர வேண்டும் என்று ஆசிரியர் தேவியிடம் யாசிக்கிறார்.

இருபத்தி ஏழாம் தசகம் முடிந்தது



















 

தசகம் 26

ஸுரதகதை

1. ராஜா புராஸீத், ஸுரதாபிதானஹ
ஸ்வாரோசிஷே சைத்ர,குலாவதம்ஸஹ
மன்வந்தரே ஸத்ய,ரதோ வதான்யஹ
ஸம்யக்ப்ரஜாபாலன மாத்ரநிஷ்டஹ

ஒரு குறிப்பிட்ட காலத்தின் அளவு, மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. அதுபோல 14 மன்வந்திரங்கள் உண்டு. ப்ரம்மாவின் ஒரு பகல் கல்பம் எனப்படும். 1000 சதுர் யுகமும் 14 மன்வந்திரமும் சமமான கால அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு மனு உண்டு. அந்த மனுவின் பெயரால் அந்த மன்வந்திரம் அழைக்கப்படும். முதல் மனு ஸ்வாயம்புவன். அந்த மன்வந்திரம் ஸ்வாயம்புவ மன்வந்திரம் எனப்படும். இரண்டாவது மனு ஸ்வாரோசிஷன். அந்த மன்வந்திரம் ஸ்வாரோசிஷ மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது மன்வந்திரத்தில் நடந்த ஒருகதை இந்த தசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. சைத்ர வம்சத்தில் ஜனங்களை நன்கு காப்பவனும், விரோதிகள் இல்லாதவனும், தனுர்வேதத்தை அறிந்தவனும், பிராமணர்களை பூஜிப்பவனும், தான தர்மங்கள் செய்பவனும், ஸத்கர்மங்களில் ப்ரீதி உடையவனும் ஆகிய ஸுரதன் என்னும் ஒரு நல்ல ராஜா இருந்தான்.

2. வீரோSபி தைவாத், ஸமரே ஸ கோலா
வித்வம்ஸிபி: சத்ருபலைர் ஜித: ஸன்
த்யக்த்வா ஸ்வராஜ்யம், வனமேத்ய சாந்தம்
ஸுமேதஸம் ப்ராப முனிம் சரண்யம்

கோலங்கள் என்றால் பன்றிகள். இதை அடித்துச் சாப்பிடுபவர்கள் கோலாவித்வம்ஸிகள் எனப்படுவர். இவர்கள் தங்களிடம் பலம் இருக்கிறது என்று நினைத்து, மதத்தினால், ஸுரதன் ஆளும் ராஜ்யத்தைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டனர். அதனால் ஸுரதனின் நகரை அடைந்து, அவனுடன் யுத்தம் செய்தனர். யுத்தத்தில் ஸுரதன் தோல்வி அடைந்தான். ராஜா ஸுரதன் மிலேஸ்ஸியர்களை விட பலத்தில் குறைந்தவன் அல்ல. ஆனாலும் தோல்வி அடைந்தது தெய்வத்தின் செயலே ஆகும். ஸுரதன் மிகுந்த வருத்தத்துடன் காட்டிற்குச் சென்று அங்கு சுமேதஸ் என்னும் ஒரு ரிஷியைச் சரண் அடைந்தான்.

3. தபோவனம் நிர்பயமாவஸன் த்ரு-
-ச்சாயாச்ரித: சீதளவாதப்ருத்தஹ
ஸ ஏகதா ராஜ்ய,க்ருஹாதிசிந்தா
பர்யாகுல: கம்,சிதபச்யதார்த்தம்

அந்த ஆஸ்ரமத்தில் முனிவரின் சீடர்கள் வேதாத்யயனம் செய்யும் சப்தம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான். பயமும் கவலையும் இல்லாமல் இருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவன் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு இருந்தான். குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் அவன் மனமோ தன்னுடைய ராஜ்யம், மனைவி, மக்கள், உறவினர்கள், தன்னுடைய செல்வம் இவைகளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவைகளிடம் அவனுக்கு அத்துணை பற்று. அவன் மனம் இவைகளின் நிலையை நினைத்துப் பதறியது. அப்பொழுது அங்கு ஒருவன் வந்தான். அவனும் துக்கத்தில் இருந்தான்.

4. ராஜா தமூசே ஸுரதோஸ்மி நாம்நா
ஜிதோSரிபிர் ப்ரஷ்ட,விபூதிஜாலஹ
க்ருஹாதி சிந்தா,மதிதாந்த ரங்கஹ
குதோSஸி, கஸ்த்வம், வத மாம் ஸமஸ்தம்

வந்தவன் துக்கத்தில் இருக்கிறான் என்பதைச் ஸுரதன் புரிந்து கொண்டான். அவனிடம் சென்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எல்லா விபரமும் கேட்டான்.

5. ச்ருத்வேதி ஸ ப்ரத்யவதத் – “ஸமாதி
நாமாஸ்மி வைச்யோ, ஹ்ருதஸர்வ வித்தஹ
பத்னீஸுதாத்யை:, ஸ்வ க்ருஹான்னிரஸ்த
ஸ்ததாSபி ஸோத்கண்ட மிமான் ஸ்மராமி”

வந்தவன் ஒரு வைசியன். அவன் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவன். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்தான். மனைவியும், மகன்களும் செல்வத்தை அபஹரித்துக் கொண்டு அவனை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். அவர்கள் தன்னை விரட்டினாலும் அவர் மனம் அவர்களையே நினைத்துக் கவலைப் பட்டது. ஸுரதனும் சமாதியும் ஒரே நினைவுடன் கூடிய மன அவஸ்தையில் தான் இருந்தார்கள்.

6. அநேந ஸாகம், ஸுரதோ விநீதோ
முனிம் ப்ரணம் யாSS ஹ, ஸமாதிநாமா
க்ருஹாந்நிரஸ்தோSபி, க்ருஹாதி சிந்தாம்
கரோதி ஸோத் கண்ட,மயம் மஹர்ஷே!

ஸுரதன் சமாதியை சுமேதஸ் முனிவரிடம் அழைத்துச் சென்றான். அவருக்கு அவனை அறிமுகப் படுத்தினான். “இவர் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவர். வியாபாரத்தில் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவன் மனைவியும் மக்களும் இவரை விரட்டி விட்டனர். ஆனாலும் இவர் அவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டு அவர்களை நினைத்துக் கவலைப்படுகிறார் என்று சொன்னான். முனிவரை மஹர்ஷே! என்று அழைக்கிறான். மஹரிஷி என்றால் முன்னும் பின்னும் அதாவது நடந்தது நடக்கப்போவது எல்லாம் அறிந்தவர்கள் என்று பொருள் .

7. ப்ரம்மைவ ஸத்யம், பரமத்விதீயம்
மித்யா ஜகத் ஸர்வ,மிதம் ச ஜானே
ததாSபி மாம் பாத,த ஏவ ராஜ்ய
க்ருஹாதிசிந்தா, வத தஸ்ய ஹேதும்

மஹரிஷியே! சாமதியின் நிலையினை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் என் நிலையும் அதுதான். இந்த உலகம் கனவைப் போல் பொய் என்று தெரியும். இந்த ராஜ்யம், வீடு அனைத்தும் மித்தை என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த ஞானம் சமாதிக்கு இல்லை. அவருக்கு மோஹம் இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த நானும் மோஹம் அடைகின்றேனே? இதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் குழந்தைகள் எல்லாம் மரணம் அடைய, மனம் மிகவும் வருந்தித் தானும் தற்கொலைச் செய்து கொள்ள தண்ணீரில் குதிக்க முயற்சிக்கிறான். அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? ஆத்மீகத்தில் உயர்ந்தவனா? அல்லது தாழ்ந்தவனா? உயர்ந்தவன் என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தற்கொலை என்ற சிந்தனையே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒருவர் இருந்தார்i. ஆனால் அவர் யார் தெரியுமா? அவர் தான் மஹானான வஸிஷ்ட முனிவர். அவருக்கு ஞானம் இருந்தாலும் பற்று போகவில்லை. அவருடைய அடுத்த ஜன்மத்தில் ஸுரதனாகப் பிறந்தார். அதனால் தான் எல்லாம் தெரிந்த நானும் ஏன் இப்படி என்று கேட்க்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்து ஆனந்தம் அனுபவித்த பின் தான் முக்தி என்று தேவி அவருக்கு பின்னால் அனுக்ரஹம் செய்யப் போகிறாள். ஏன் என்றால் ஆசை மிச்சம் இருந்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே நியதி.

8. ஊசே தபஸ்வீ – ச்ருணு; பூப! மாயா
ஸர்வஸ்ய ஹேது; ஸகுணா குணா ஸா;
பந்தம் ச மோக்ஷம், ச கரோதி ஸைவ
ஸர்வேSபி மாயா,வசகா: பவந்தி

எல்லா உயிர்களின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணம் மாயைதான். அந்த மாயா அகுணை. அம்பாள் நிர்குணை. அம்பாளின் காளி, லக்ஷ்மி அவதாரங்கள் ஸகுணை. ஒருவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் ஏற்படும் ஆசைதான் பந்தம். இந்த மமதையையும் (மோஹம்), பந்தத்தையும் ஏற்படுத்துவது யார்? தேவிதான். இதிலிருந்து விடுதலை தருவதான அந்த மோக்ஷத்தைத் தருவது யார்? அதுவும் அந்த தேவிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று உலகத்திலும் இந்த மாயையின் வசப்படாதவர்கள் யாரும் இல்லை.

9. ஞானம் ஹரேரஸ்தி, விதேச்ச, கிந்து
க்வசித் கதாசின், மிளிதௌ மிதஸ்தௌ
விமோஹிதௌ கஸ்த்வமரே! நு கஸ்த்வம்
ஏவம் விவாதம், கில சக்ரது: ஸ்ம

ப்ரம்மம் மட்டுமே ஸத்யம். இந்த உலகம் மாயை. இது ஸுரதனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் எனக்கு ஏன் மமதை வந்தது என்று கேட்கிறான். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஞானத்தால் மட்டும் மாயா மோஹத்திலிருந்து விடுபட முடியாது. ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ப்ரம்மமே ஸத்யம், மற்றதெல்லாம் மாயை என்கிற ஞானம் உண்டு. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்த பொழுது, தங்களில் யார் பெரியவர்? என்ற சர்ச்சை ஏற்பட்டது. ப்ரம்மா சொன்னார் “நானே இந்த உலகைப் படைக்கும் கர்த்தா. அதனால் நானே பெரியவன்” என்றார். உனக்கு ஆபத்து வரும் காலங்களில் உன்னைக் காப்பாற்றியது யார்? நான் தானே! அதனால் நானே பெரியவன் என்றார் விஷ்ணு. அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியது. உடனே ஒரு அசரீரியும் கேட்டது. “இந்த சிவலிங்கத்தின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கின்றாரோ அவரே பெரியவர்” என்றது. உடனே விஷ்ணு அடியைக்காண பாதளம் நோக்கியும், ப்ரம்மா முடியைக் காண ஆகாயம் நோக்கியும் சென்றனர். விஷ்ணு தன்னால் முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.

பிரம்மா சிவனின் தலையிலிருந்து விழுகின்ற ஒரு தாழம் பூவைப் பார்த்து, அதனுடன் பேசி, அதைத் தான் சிவனின் முடியைக் கண்டதற்கானச் சாட்சியாகக் கொண்டு வந்தார். விஷ்ணு அந்த தாழம்பூவிடம் கேட்க, அதுவும் ப்ரம்மா தன்னைச் சிவனின் முடியிலிருந்தே கொண்டு வந்தார் என்று பொய் சாட்சி சொல்லியது. இதில் நம்பிக்கை இன்றி விஷ்ணு சிவனைத் த்யானித்தார். சிவனும் அங்கு வந்தார். ஏ தாழம்பூவே! நீ பொய் சொன்னதால் இனி என் பூஜைக்கு அருகதை ஆகமாட்டாய் என்று சிவன் சொன்னார். ப்ரம்மா வெட்கித் தலை குனிந்தார். சிவன் தாழம்பூவை நிராகரிப்பதற்கும், நம்மில் யார் பெரியவர் என்று ஞானம் மிகுந்த ப்ரம்மாவும் விஷ்ணுவும் விவாதம் செய்வற்கும் காரணம் என்ன? மாயைதான். எந்த நேரத்தில் இந்த மாயையில் அகப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது. இதில் அகப்படாமல் இருக்க ஒரேவழி தான் உண்டு. அந்த ஞானஸ்வரூபிணியான பராசக்தியை வணங்க வேண்டும். இந்த மோஹத்திலிருந்து காப்பாற்ற அவளால் மட்டுமே முடியும்.

10. ஞானம் த்விதைகம், த்வப்ரோக்ஷ, மன்யது
பரோக்ஷமப்யேத தவேஹி ராஜன்!
ஆத்யம் மஹேச்யா: க்ருபயா விரக்த்யா
பக்த்யா மஹத் ஸங்கமதச்ச லப்யம்

தனக்கு ஏன் இப்படி வீடு, மனைவி, ராஜ்யம் என்ற மோஹம் வந்தது என்ற ஸுரதனின் கேள்விக்குப் பதில் சொல்கிறார். இந்த புத்தி மோஹம் என்பது எந்த ஞானிக்கும் வரலாம். இதற்காகத்தான் ப்ரம்மா விஷ்ணுவின் கதையைச் சொன்னார். அதன் பின் ஞானத்தின் ரூபத்தையும் விளக்குகிறார். ஞானம் என்பது இரண்டு விதம். அபரோக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானம் ஒருவனை பந்த விமுக்தன் ஆக்கும். அது தேவி பக்தியாலும் மஹாத்மாக்களின் அனுக்ரஹாத்தாலும் மட்டுமே கிடைக்கும். போக விரக்தி வரவேண்டும். இது தேவியின் க்ருபை இருந்தால் தான் இது முடியும்.

11. ய ஏததாப்னோதி, ஸ ஸர்வமுக்தோ;
த்வேஷச்ச ராகச்ச, ந தஸ்ய பூப!;
ஞானம் த்விதீயம் கலு சாஸ்த்ரவாக்ய-
விசாரதோ புத்திமதைவ லப்யம்

அபரோக்ஷ ஞானம் உள்ளவனுக்கு ராகம், த்வேஷம் இல்லை. ப்ரம்மமே ஸத்யமானது. இந்த உலகம் மாயை. காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே ப்ரம்மம் தான் என்பதை உணர்வான். எல்லாம் ஒன்றுதான் என்றால் ராகம் ஏது? த்வேஷம் ஏது? ப்ரம்மத்தைத் தவிர வேறு பலதும் உண்டு என்றால் தான் ராக த்வேஷத்திற்கு இடம் உண்டு. ஒன்றிடமும் அவனுக்குப் பற்று இல்லை. அவன் பந்த விமுக்தன். ப்ரம்மம் மட்டும் ஸத்யம். இந்த உலகம் மாயை என்று அறிய, வேதாந்த சாஸ்திரங்கள் படித்தால் போதும். புத்தி உள்ளவனால் மட்டுமே இதைப் படிக்க முடியும். ஆனாலும் படித்தது எல்லாம் அனுபவத்தில் வரவேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இது பரோக்ஷ ஞானம். சாஸ்திரங்கள் படித்தவன் பந்த விமுக்தன் என்று சொல்ல முடியாது. அவன் மனதில் ராகமும், த்வேஷமும் விலக வேண்டும். ஸுரதன் சாஸ்திரம் தெரிந்தவன் ஆனாலும் தான் ராஜா என்ற அபிமானம் அவனிடம் இன்னும் இருக்கிறது. பந்தம் விலகாததற்கு இதுதான் காரணம் என்று பதில் சொன்னார்.

12. சமாதிஹீணோ ந ச சாஸ்த்ரவாக்ய
விசாரமாத்ரேண, விமுக்திமேதி
தேவ்யா: கடாக்ஷைர், லபதே ச புத்திம்
முக்திம் ச ஸா கே,வல பக்திகம்யா

மஹாவாக்யங்களைப் படிப்பதால் சாஸ்திரங்களையும் சித்தாந்தங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது பரோட்க்ஷ ஞானம். சாதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அபரோக்ஷ ஞானம் வரும். அப்பொழுது தான் பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கும். ஸமம், தமம், திதிச்ச, உபரதி, ச்ரத்தா, சமாதானம் இவைகள் ஞான சாதனைகளின் வழிகள். விஷய போக சக்திகள் தோஷம் தான் தரும். மனதை போக விஷயங்களிலிருந்து விலக்கி கட்டுப் படுத்த வேண்டும். அதுதான் ஸமம். இந்திரியங்களை அதனதன் போக்கில் அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அது தமம். எந்த துக்கத்தையும் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். இது திதிக்க்ஷா. மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்த்தாலும் நினைத்தாலும் பகவான் சிந்தனையுடன் இருக்கப் பழக வேண்டும். இது உபரதி. சாஸ்த்திரத்திலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும். இது சிரத்தை. புத்தி ப்ரம்மத்திலேயே லயிப்பது. இது ஸமாதானம். இவைகளை நிரந்தரமாக அனுஷ்டித்தால் உள்மனதிற்குச் சக்தி கிடைக்கும். இப்படியாக பரோக்க்ஷ ஞானத்தை அபரோக்க்ஷ ஞானமாக மாற்றிக் கொள்ளலாம். ஸுரதன் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொன்னாலும் அவன் அபரோக்க்ஷ ஞானம் உடையவனாக மாட்டான்.

13. ஸம்பூஜ்ய தாம் ஸாக,மனேன துர்க்காம்
க்ருத்வா ப்ரஸன்னாம், ஸ்வஹிதம் லபஸ்வ
ச்ருத்வா முனேர் வாக்ய, முபௌ மஹேசி!
த்வாம் பூஜயாமா, ஸதுரித்தபக்த்யா

மஹரிஷி சொன்ன விபரங்களை ஸுரதனும், சமாதியும் கேட்டார்கள். மாயா பகவதியைப் பூஜித்து, அன்னையின் அனுக்ரஹம் பெற்றுவிட்டால், மாயை அருகில் வரமுடியாது. புத்தியும், முக்தியும் கிடைக்கும் என்று மஹரிஷி சொன்னதைக் கேட்டு, இருவரும் தேவி பூஜையைத் தொடங்கினார்கள்.

14. வர்ஷத்வயாந்தே, பவதீம் ஸ மீஷ்ய
ஸ்வப்னே ஸதோஷா,வபி தாவத்ருப்தௌ
தித்ருக்ஷ ய ஜாக்ரதி சாபி பக்தா-
வாசேரதுர் த்வௌ, கடின வ்ரதானி

பக்தியுடன் தேவியை இரண்டு வருட காலம் பூஜை செய்தார்கள். ஒருநாள் கனவில் தேவியைக் கண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் பூரண திருப்தி வராமல் தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் தேவியைக் காண வேண்டும் என்று நினைத்துக், கடுமையான விரதம் இருந்தார்கள். ஒரு வருடம் ஓடியது. ஆனாலும் தேவி காட்சி தரவில்லை. தேவியைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் மரணம் அடைய வேண்டும் என்று தீர்மானித்துத், தங்கள் உடலிலிருந்துச் சதையை வெட்டி மாமிசம், இரத்தம் இவைகளால் ஹோமம் செய்யத் தொடங்கினார்கள்.

15. வர்ஷத்ரயாந்தே, ஸுமுகீம் ப்ரஸன்னாம்
த்வாம் வீக்ஷ்ய தௌ துஷ்டுவது: ப்ரஹ் ருஷ்டௌ
தைவாத் ஸமாதிஸ் த்வதனு க்ரஹே ண
லப்த்வா பரம் ஞான, மவாப முக்தீம்

16. போகா விரக்த: ஸு ரதஸ்து சீக்ரம்
நிஷ் கண் டகம் ராஜ்யமவாப பூயஹ
மந்வந்தரே பூபதிரஷ்டமே ஸ
ஸாவர்ணி நாமா, ச மனுர் பபூவ

அவர்கள் மாமிசம் இரத்தம் இவைகளால் ஹோமம் செய்ய ஆரம்பித்ததும், தேவி அவர்கள் முன் காட்சி தந்தாள். இருவரும் தேவியை நமஸ்கரித்தனர். “வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றாள்” ஸுரதன் “சத்ரு பலத்தை அழித்து, என் அரசு மீண்டும் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டான். தேவி ” உன் சத்ருவை நீ வெற்றி கொள்வாய். அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து, உடல் வீழ்ந்த பின், சூர்யனிடம் பிறவி அடைந்து மனுவாக விளங்குவாய்” என்று வரம் தந்தாள். ஆனால் சமாதி ” தளைகளைப் போக்கக் கூடியதும் மோக்க்ஷத்தைத் தரக் கூடியதுமான ஞானம் வேண்டும்” என்று கேட்டான். அன்னை அவரவர் விருப்பப்படி வரம் தந்தாள். இருவருக்கும் தேவி ஒன்றாகத்தான் காட்சி தந்தாள். சமாதி விமுக்தன். ஸுரதன் போகா ஸக்தன். மந்திரிகளுடன் சென்று ஸுரதன் ராஜ்ய சுகம் அனுபவித்தான். இரண்டாவது மன்வந்திரத்தில் பிறந்த ஸுரதன் தேவி த்யானத்தால், அடுத்த பிறவியில் 8 ஆவது மன்வந்திரத்தில் ஸாவர்ணி என்னும் பெயருடன் பிறந்தான்.

17. த்வம் புக்திகாமாய, ததாஸி போகம்
மு முக்ஷவே ஸம்,ஸ்ருதிமோசனம் ச
கிஞ்சின்ன ப்ருச்சாமி, பரம் விமூடஹ
நமாமி தே பாத,ஸரோஜயுக்மம்

தேவி சக்திமயமானவள் கேட்டதைத் தரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவள். ஸுரதனுக்கும், சமாதிக்கும் அவரவர் விருப்பம் என்னவோ அதைத் தந்தாள். தேவியிடம் நான் என்ன கேட்பது? பக்தியா?புக்தியா? முக்தியா? நான் போக விமுக்தன் அல்ல. அதனால் முக்தி கேட்க முடியாது. மூடனான நான் அன்னையை வணங்க மட்டுமே முடியும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார்.

இருபத்தி ஆறாம் தசகம் முடிந்தது