ENQUIRY geetanjaliglobalgurukulam

Tuesday, 13 June 2023

தேவீ நாராயணீயம் full tam meaning blog

 

    தேவீ நாராயணீயம்

 

 

 

ஆசிரியர் : பலேலி  நாராயண  நம்பூதிரி

தேவீ நாராயணீயம்

 

நான் கேட்டும்படித்தும் தெரிந்து கொண்டவைகளின் தொகுப்பு.

தேவீ நாராயணீயம் என்பது தேவீ பாகவதத்தின் குறுகிய வடிவம் தான். தேவீ பாகவதம் படித்தால் என்ன பலன் கிடைக்குமோ அது தேவீ நாராயணீயத்தைப் படித்தாலும் நிச்சயமாகக் கிடைக்கும். பாலேலி  ஸ்ரீ நாராயண நம்பூதிரி இதை 430 ஸ்லோகங்களில் 41 தசகங்களில் எழுதி இருக்கிறார்.

 

தசகம் 1

தேவீ மஹிமை அவிக்னம் அஸ்து

1. யஸ்மின்நிதம், யத இதம், யதிதம், யதஸ்மாது

  உத்தீர்ணரூபம், அபிபச்யதி யத் சமஸ்தம்

  நோ த்ருச்யதே , வசஸாம் மனஸச்ச தூரே

  யத் பாதி சா தி மஹஸே ப்ரணமாமி தஸ்மை

ஆதி தேவியிடமிருந்து தான் அனைத்தும் உண்டாகிறது. அன்னையின் சக்தியை இவ்வளவு தான் என்று அளவிட்டுச் சொல்ல முடியாது. அனைத்திற்கும் அவளே காரண கர்த்தா. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்திற்கும் அவளே மூலகாரணம்யாருடைய உதவியும் தேவிக்குத் தேவையில்லை. நாம் நாராயணீயமோ அல்லது பாகவதமோ எதைப் படித்தாலும் அன்னைக்கு அது பற்றிக் கவலையில்லை. நமக்கு எதைச் செய்வதற்கும் இந்த்ரியங்களின் உதவி தேவை. அன்னைக்கு இந்த்ரியங்கள் கிடையாது. உபநிஷத்துக்களில் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் அன்னை புரிந்து கொள்ள முடியாத ப்ரம்மதத்வம். அப்படிப்பட்ட தேவியை நான் வணங்குகிறேன்.

 

1.   ஸ்த்ரீ புமான் சுரதைத்ய நராதயோ

  க்ளீபம் பூதமபி கர்மகுணா தயச்ச

  பூமம்ஸ்த்வமேவ ஸதநாத்ய விகார்ய நந்தம்

  ஸர்வம் த்வயா ஜகதிதம் விததம் விபாதி

பூதா, பிரம்மம், பரமாத்மா, ஆதி தேவி அனைத்தும் ஒன்றுதான். இந்த ஆதி தேவியின் ரூபம் எப்படி இருக்கும்? யாரும் சொல்ல முடியாது. ஆனாலும் நமக்கு அன்னையின் கருணையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. எதைப் பார்த்தாலும் இது பிரம்மமோ, அதற்கு இந்த குணம் இருக்குமோ, இந்த ரூபம் இருக்குமோ என்று கற்பனை செய்து கொள்கிறோம். அது ஆணா, பெண்ணா, தேவனா, அசுரனா, அல்லது அலியா யாருக்கும் தெரியாது. எதுவானாலும் அது ப்ரம்மமே. அதற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஜனனம், மரணம் இல்லை. ஆனால் அது இல்லை யென்றால் எந்த வேலையும் நடக்காது. அந்த ப்ரம்மமான தேவியை நமஸ்கரிக்கிறேன்.

 

3. ரூபம்ந தேSபி பஹுரூப ப்ருதாத்த சக்திஹி

  நாட்யம் தனோஷி நடவத் கலு விச்வரங்கே

  வர்ஷாணி தே ஸரஸநாட்ய- கலாவிலீநா

  பக்தா அஹோ! ஸஹ்ருதயா க்ஷணவன்னயந்தி

ப்ரம்மம் ஒரு நடிகன் போலத்தான். ஒரு நடிகன் நாடக மேடையில் திருடனாகவும், போலீஸ்காரனாகவும் நடிக்கிறான். நாடகம் முடிந்ததும் அவன் வேஷம் கலைகிறது. அவன் மீண்டும் முன்போலவே ஆகிறான். அந்த நாடகத்தில் போடும் வேஷத்திற்கேற்ப அவன் செய்யும் பாவமோ அல்லது புண்யமோ அவனை பாதிப்பதில்லை. அதுபோல் நாம் செய்யும் செயல்கள் எதிலும் அது  பாவமோ, புண்யமோ பிரம்மத்திற்குச் சம்பந்தமில்லை. நாம் செய்யும் கர்மங்களின் புண்ணியம் பாபம் இரண்டும் நம்மையே சாரும்.

 

4.  ரூபானுஸாரி கலு நாம ததோ புதைஸ்த்வம்

  தேவீதி தேவ, இதி சாஸி நிகத்யமானா

  தேவ்யாம் த்வயீர்யஸ உமா கமலாS வாக்வா

  தேவே து ஷண்முக உமா,பதி ரச்யுதோ வா

ப்ரம்மத்திற்கு ரூபம், நாமம் இல்லை. ஆண் என்றால் ராமன், கிருஷ்ணன். பெண் என்றால் உமா, சரஸ்வதி, லக்ஷ்மி என்று சொல்கிறோம். ஞானம், முக்தி தேவை என்றால் பார்வதியை பூஜிக்கிறோம். செல்வம் வேண்டும் என்றால் லக்ஷ்மியை பூஜிக்கிறோம். படிப்பு, பாட்டு, அறிவுக்கு சரஸ்வதியை பூஜிக்கிறோம். ஆனால் விஷ்ணு, ராமன், லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாமே ஒன்று தான். அதுவே அந்த ப்ரம்மம்.

 

5.  த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்

  ப்ரம்மாண்டஸர்க பரிபாலன சம்ஹ்ருதீச்ச

  ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு! நிஜாஞயைவ

  பக்த்தேஷ்வனன்ய சரணே,ஷீ க்ருபாவதீ

ப்ரம்மம் அரூபமாக இருந்தாலும் எல்லா மதத்தினரும் அதை இஷ்ட தெய்வமாக ராமன், சிவன், விஷ்ணு, அல்லா, ஜீஸஸ் என்று அவரவர் விருப்பம் போல, ப்ரம்மத்தைத் தான் பூஜிக்கின்றனர். ப்ரம்மத்தை சக்தி ரூபமாக பூஜிப்பது தேவீ நாராயணீயம். சக்தியும் ப்ரம்மமே. ஒரு ராணி எல்லோருக்கும் இதைச் செய், அதைச் செய் என்று கட்டளை இடுவது போல, சக்தியும் ப்ரம்மாவை நீ படைப்பினைச் செய், விஷ்ணுவை நீ காக்கும் தொழிலைச் செய், ருத்ரனை நீ அழிக்கும் தொழிலைச்  செய் என்று புருவ அசைப்பில் கட்டளை தருகிறள். அவர்கள் அனைவரும், அன்னையை வணங்கிப் பின் அவரவர் தொழிலைச் செய்கின்றனர்.

 

6.  மாதா கரோதி தனயஸ்ய க்ருதே சுபானி

  கர்மாணி, தஸ்ய பதனே ப்ருசமேதி துக்கம்

  வ்ருத்தௌ சுகம் : தவ கர்ம , நாபி துக்கம்

  த்வம் ஹ்யேவ கர்மபலதா ஜகதாம் விதாத்ரீ

       ஒரு செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் நாமே  காரணம். அந்த அந்த கர்ம பலனை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. இதன் காரணத்தால் துக்கம், மகிழ்ச்சி, கஷ்டம், நஷ்டம், பிரிவு, சேர்க்கை போன்ற இரட்டைகளை அனுபவிக்க நேரிடுகிறது. தேவிக்குக் கர்மபந்தக் கட்டு இல்லை. அதனால் சுகம், துக்கம் எதுவும் இல்லை. நமக்கு சுகம் தருபவள் அவள். அதனால் அவளைப் பணிவதே  நமக்கு  நல்வழி தரும்.

 

7. ஸர்வத்ர வர்ஷஸி தயா, மத யேவ வ்ருஷ்ட்யா

  ஸிக்த: ஸுபீஜ இவ வ்ருத்திமுபைதி பக்தஹ

  துர்பீஜவத் வ்ரஜதி நாசம் அபக்த ஏவ;

  த்வம் நிர்க்ருணா விஷமா லோகமாதஹ

உழுது பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. மழை எல்லா விதைக்கும் ஒரே மாதிரி தான் பெய்கிறது. அதற்கு எந்த பாரபக்ஷமும் இல்லை. அதைப் போல் நாம் அனவரும் அன்னையின் குழந்தைகள். அன்னை காட்டும் கருணை மழையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், சந்தோஷத்திற்கும், கஷ்டத்திற்கும் கர்ம பலனே காரணம். அன்னையின் கருணையில் பாரபக்ஷமில்லை.

 

8. ஸர்வோபரீச்வரி! விபாதி ஸுதாஸ முத்ரஹ

  ஸ்தன்மத்யத: பரிவ்ருதே விவிதை; ஸுதுர்க்கைஹி

  சத்ராயிதே த்ரிஜகதாம் பவதீ மணி த்வீ

  பாக்யே சிவே! நிஜபதே ஹஸிதான,னா ஸ்தே

அமிர்தகடலின் மத்தியில், கடம்பவன காடுகளால் சூழப்பட்டு, சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட மணித்வீபம் என்னும்  அரண்மனையில்  அந்தப்புரத்தில் பரமசிவனுடைய மடியில்,  ஆனந்த சல்லாபத்துடன்  சயனித்திருக்கும் அன்னையே! உன்னை நான் வணங்குகிறேன்.

 

9. யஸ்தே புமானபிததாதி மஹத்வ முச்சைஹி

  யோ நாம காயதி ச்ருணோதி தே விலஜ்ஜஹ

  யச்சாதனோதி ப்ருசமாத்ம நிவேதனம் தே

  ஸ்வான்யகானி விதுனோதி யதா தமோSர்க்கஹ

தேவியை நாம் ஸ்தோத்ரம், பாராயணம், பூஜை, பஜனை போன்றவைகளால் சந்தோஷப்படுத்த வேண்டும். நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்பொழுதான் நாம் செய்த பாபம் போகும். அஞ்ஞான இருட்டு விலகி ஒளி கிடைக்கும்.

 

10. த்வாம் நிர்குணாம் ஸகுணாம் புமான்விரக்தோ

  ஜானாதி, கிஞ்சிதபி நோ விஷயேஷு ஸக்தஹ

  ஞேயா பவ த்வமிஹ மே பவதாபஹந்த்ரீம்

  பக்திம் ததஸ்வ, வரதே! பரிபாஹி மாம் த்வம்

இந்த்ரியங்களை அதனதன் போக்கில் அலையவிடாமல் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். உலக போக சுக ஆசையை விட்டுவிட வேண்டும். அப்போது அன்னை நமக்குத் தெரிவாள். அப்பொழுது பேரானந்த சுகம் கிடைக்கும்.

தாயே! அப்பேர்பட்ட அந்த பக்தியை எனக்குத் தா என்று இந்நூலின் ஆசிரியர் வேண்டுகிறார்.

முதல் தசகம் முடிந்தது


 

தசகம் 2

ஹயக்ரீவ கதை

1.  ரணேஷு தைத்யேஷு ஹதேஷு தேவாஹா 

  புரா ப்ரஹ்ருஷ்டா ஸஹதாத்ரு சர்வாஹா 

  யியக்ஷவோ யக்ஜபதிம் விநீதாஹா 

  ப்ரபேதிரே விஷ்ணும் அனந்த வீர்யம்

       தேவாஸுர யுத்தம் 14 ஆண்டுகள் நடந்து முடிந்தது. அஸுரர்கள் ஒழிந்தார்கள் என தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த வெற்றியைக் கொண்டாட ஒரு யக்ஞம் செய்ய நினைத்தார்கள். நல்ல காரியம் செய்ய நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டும் அல்லவா? அதனால் தேவர்கள் எல்லோரும் ப்ரம்மாவிடம் சென்று இதைச் சொன்னார்கள். உடனே ப்ரம்மாவும் சம்மதம் தெரிவித்து, யக்ஞத்தின் அதிபதி விஷ்ணுதான், அதனால் அவரிடம் இதைச் சொல்வோம் வாருங்கள் என்று அனைத்து தேவர்களுடன் ப்ரம்மா வைகுண்டம் சென்றார்.

 

2.  த்ருஷ்ட்வா நித்ராவசகம் ப்ரபும் தம்

  அதிஜ்ய சாபாக்,ரஸமர்ப்பிதாஸ்யம்

  ஆச்சர்யம் ஆபுர் விபுதா நகோபி

  ப்ராபோதயத் தம், கலு பாபபீத்யா

வைகுண்டத்தில் ஜனார்த்தனனைக் காணவில்லை. பின் எங்கு சென்றிருப்பார் என்று தேவர்கள் யோசித்தார்கள்.   ப்ரம்மா தன்னுடைய ஞான த்ருஷ்டியில் அவர் இருக்கும் இடம் அறிந்து, அனைவரும் அங்கு சென்றார்கள். அங்கே விஷ்ணு யுத்தத்தினால் மிகவும் களைத்தவராக, வில்லின் அடிப்பாகம் பூமியில் இருக்க, அதன் மேல் பாகத்தில் தன் முகவாயைப் பதித்தபடி, யோக நித்திரையில் இருப்பதைப் பார்த்தார்கள். அதனால் ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள் அனைவரும் யோக நித்திரையில் இருப்பவரை எப்படி எழுப்புவது? என்ன செய்வது? எனக் கவலை கொண்டனர்.

 

3. ஹரேஸ்ததானீம் அஜஸ்ருஷ்ட வம்ர்யா

  முகார்ப்பணா குஞ்சித சாபமௌர்வீ

  பக்னா, தனுச்சாSர்ஜம் அவாப ஸத்யஹ

  ஸ்தேனா- பவத் ஸோSபி நிக்ருத்த கண்டஹ

       தூங்கும் போது எழுப்புவது பாபம். விஷ்ணுவை எழுப்பினால் அவரின் கோபத்திற்கு ஆளாவோம். ஆனால் யக்ஞமும் நடந்தாக வேண்டும். என்ன செய்வது என்று ருத்ரன் யோசிக்கிறார். அப்பொழுது ப்ரம்மா, கரையானைப் படைத்தால் அது வில்லின் அடிப்பாகத்தில் உள்ள நாணை அரித்துவிடும். நாண் அறுந்தவுடன் சப்தம் வரும். அந்த சப்தத்தில் விஷ்ணு விழித்திடுவார். தேவர்கள் நினைத்தது நடக்கும் என்று கூறினார். எல்லோரும் இதை ஆமோதிக்க, ப்ரம்மா கரையானைப் படைத்து வில்லின் நாணை அரிக்கும்படிச் சொன்னார். ஆனால் கரையானோ நான் எப்படிச் செய்ய முடியும்? தூங்குபவரை எழுப்புவது, பேசும்போது குறுக்கே பேசுவது, கணவன் மனைவியின் அன்பில் குறுக்கிடுவது இவை எல்லாம் பிராம்ணனைக் கொன்ற  பாபத்தைத் தரும் (ப்ரம்மஹத்தி தோஷம்) செயல்கள். அப்படி நான் இதைச் செய்வதால் எனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது. லாபம் இருந்தால் செய்வேன் என்றது. ப்ரம்மாவும் யக்ஞத்தில் ஹோமத்தில் நெய் விடும் போது ஹோமகுண்டத்திற்கு வெளியே விழும் நெய்த் துளிகளை உன் பங்காகப் பெற்றுக்கொள் என்றார். ப்ரம்மாவின் ஆணைப்படி கரையான் வில்லின் அடிப்பாக நாணை அரித்தது. திடீரென ஒரு பெரும் சப்தம் கேட்டது. விஷ்ணுவின் தலை எங்கோ போய் விழுந்தது.

 

4. காயாத் சிரஸ்துத் பதிதம் முராரேஹே

  பச்யத்ஸு தேவேஷு பபாத ஸிந்தௌ

  சேத: ஸுராணாம் கதனே நிமக்னம்

  ஹாஹேதி சப்தஹ ஸுமஹானபூச்ச

       திடீரென ஏற்பட்ட சப்தத்தால் தேவர்கள் பயந்தனர். உலகமே கவலை கொண்டது. பூமி அதிர்ந்தது. கடல் பொங்கியது. கடல்வாழ் ஜீவன்கள் ஓன்றும் புரியாமல் தவித்தன. காற்று வேகமாக வீசியது. சூரியன் பூமியைத் தொட்டது. மலை அசைந்தது. எல்லாம் விபரீதமாக இருக்கிறதே என்ன நடக்கப் போகிறதோ என தேவர்கள் கவலை கொண்ட பொழுது மணிமகுடத்துடன் கூடிய விஷ்ணுவின் தலை ஓடிப்போய் எங்கோ விழுந்தது. எங்கு விழுந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும் ப்ரம்மாவும், மஹாதேவனும் விஷ்ணுவின் தலையில்லாத உடலைப் பார்த்தனர். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எப்படி நடந்தது? யாரும் அழிக்க முடியாத விஷ்ணுவிற்கு எப்படி இது நடந்தது? அசுரனோ, ராக்ஷசனோ இதற்குக் காரணம் அல்ல. நாமேதான் இதற்குக் காரணம் என்று அனைவரும் வருந்தினர்.

 

5. கிமத்ர க்ருத்யம் பதிதே ஹரௌ நஹ

  குர்ம: கதம் வே,தி மிதோ ப்ருவாணான்

  தேவான் விதாதாஹபவேன்ன கார்யம்

  அகாரணம்; தைவம் அஹோ! பலீயஹ

தேவர்களைக் காப்பவன், ஆபத்திற்கு உதவுபவன் இந்த விஷ்ணு. அவரை விட்டால் தேவர்களுக்கு வேறு ஆதரவு இல்லை. இனி நமக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என கவலை கொண்டனர். விஷ்ணுவிற்கு மரணம் வராது என ப்ரம்மாவிற்குத் தெரியும். அதனால் எல்லோரையும் சமாதானம் செய்கிறார். எந்த காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். விஷ்ணுவின் தலை போனதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒரு பிறவியில் ஒருவன் உடலை எடுத்துவிட்டால், சந்தோஷம், துக்கம் இரண்டையும் அனுபவித்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் வேண்டாம். தெய்வ சக்திக்கு முன் எதுவும் ஈடாக முடியாது. முன்காலத்தைப் பார்த்தால் சம்பு என்னுடைய தலையைக் கிள்ளி எறிந்தார். இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் தோன்றின. அதனால் வானுலகம் விட்டு அவர் மானஸரோவரில் இருக்க நேர்ந்தது. இதைப் போலவே ஹரியின் தலையும் கடலில் விழுந்து இருக்கலாம் என்றார். கர்ம பலனை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும்.

 

6, த்யாயேத தேவீம் கருணார்த்ர சித்தாம்

  ப்ரஹ்மாண்ட ஸிருஷ்ட்யா,திக ஹேதுபூதாம்

  ஸர்வாணி கார்யாணி விதாஸ்யதே நஹ

  ஸா ஸர்வசக்தா, ஸகுணாSகுணா

       கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதல் தருபவள் தாய் தான். கஷ்டம் வந்தால் எல்லோரும் அவளிடம் தான் செல்வோம். அந்த தேவி ஸர்வ சக்தி. அவளே அனைத்திற்கும் காரணம். அவள் க்ருபாவதி. சகுணையும் நிர்குணையும் அவளே. ரூபத்துடனோ ரூபமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் த்யானிக்கலாம். அவளே உலகின் தாய். மூலப்ரக்ருதி. மூன்று உலகையும் ரக்ஷிப்பவள். அசையும் அசையாத அனைத்தையும் காப்பவள். எல்லோரும் அவளை த்யானம் செய்யுங்கள். அவளைச் சரணடையுங்கள். நமக்கு வழி கிடைக்கும் என்றார் ப்ரம்மா.

 

7.  இத்யூசுஷ: ப்ரேரணயா விதாதுஹு

  ஸ்த்வாமேவ வேதா நுநுவு: ஸுராஸ்ச

  திவி ஸ்திதா தேவகணாம்ஸ்த்வமாத்த

  பத்ரம் பவேத் வோ ஹரிணேத்ருசேன

       அனைத்து தேவர்களும் அன்னையை வணங்கினர். சரணடைந்தனர். வேதமும் அன்னையை துதித்தது.

(வேதமானது "தேவீ! பகவதீ! மஹாமாயா! உலக நாயகியே! உன்னை வணங்குகிறோம். சங்கரனின் ப்ரிய நாயகியே! நெற்றியில் சந்திரக்கலை சூடியவளே! காயத்ரீ ரூபமானவளே! கீர்த்தி உடையவளே! ப்ரம்ம, விஷ்ணு, சிவனால் வணங்கப் பெறுபவளே! அசையும், அசையாத அனைத்திற்கும் உயிரானவளே! உன் பெயரைச் சொல்லவோ, உன் புகழைப் பாடவோ யாராலும் முடியாதவளே! தாயே! எந்த முயற்சியும் இன்றி உலகம் தோன்ற காரணமானவளே! உன் சக்தியை யாரால் அறிய முடியும் அம்மா! வேதமாகிய என்னாலும் அது முடியாத ஒன்று தாயே! விஷ்ணுவின் தலை கடலில் விழுந்தது தெரியாதது போல் இருக்கிறாயே? விஷ்ணு ஏதேனும் பாபம் செய்தாரா? பின் எப்படி இது நடந்தது? உன்னை வணங்குபவரிடத்தில் பாபம் எப்படி அம்மா இருக்கும்? ஏன் தேவர்களிடத்தில் பாரபக்ஷம் காட்டுகிறாய்? விஷ்ணுவின் தலை இப்படி ஆனது பெரிய ஆச்சர்யமல்லவா? நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். உன்னைப் பணிந்தவரைக் காப்பவளாயிற்றே நீ. விஷ்ணுவின் தலையைப் பொருத்த ஏன் அம்மா இன்னும் தாமதம்? விஷ்ணு ஏதேனும் கர்வம் கொண்டாரா? அதனால் இப்படி விளையாடினாயா? அல்லது விஷ்ணுவினால் தோல்வியைத் தழுவிய தைத்யர்கள் கடும் தவம் செய்து இப்படி வரம் பெற்று அதனால் இப்படி ஆனதா? ஸமுத்ரராஜன் மகளான லக்ஷ்மி தேவியிடம் உனக்குக் கோபமா? லக்ஷ்மியும் உன் ஸ்வரூபம் தானே! தவறு இருந்தால் மன்னிக்கக் கூடாதா? உன் அடி பணிந்தோரை இப்படி சோதிக்கலாமா? விஷ்ணுவின் தலை எங்கு போனது என்று கூடத் தெரியவில்லையே? எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதியில்லை தாயே! விஷ்ணுவின் உயிரை மீட்டுக்கொடு தாயே! தேவர்களுக்கு அமிர்தம் போல் உலகிற்கு உயிர் தருபவளே! நீ தான் எங்கள் துயரத்தைப் போக்கவேண்டும்" என்று அங்கங்களுடன் ஸாமகானத்தில் வேண்டியது.) அவர்களின் துதியால் மகிழ்ச்சியடைந்த தேவீ வானில் தோன்றினாள். உங்களுக்கு விஷ்ணுவால் நன்மை வரும் என்று சொன்னாள்.

 

8.  தைத்யோ ஹயக்ரீவ இதி ப்ரசித்தோ

  மயைவ தத்தேன வரேண வீரஹ

  வேதான் முனீம்ச்சாபி ஹயாஸ்ய மாத்ர

  வத்யோ ப்ருசம் பீடயதி ப்ரவாது

       விஷ்ணுவினால் நன்மை வரும் என்று தேவீ சொன்னாள். விஷ்ணுவின் தலை விழுந்ததால் என்ன நன்மை வரப்போகிறது?

       ஹயக்ரீவன் என்னும் ஒரு தைத்யன் சரஸ்வதி ஆற்றின் கரையில் 1000 வருடங்கள் அன்னையை நினைத்து கடும் தவம் செய்தான். அன்னையும் ஸிம்ம வாகனத்தில் காட்சி தந்து "வேண்டிய வரம் கேள்" என்றாள். ஹயக்ரீவனும் "தேவர்களாலோ, அசுரர்களாலோ தோற்கடிக்க முடியாதவனாகவும், ஒரு அழிவில்லாத யோகியாகவும், இறப்பு என்பதே இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்" என வரம் கேட்டான். உடனே தேவீ " பிறப்பும் இறப்பும் உலகின் இயற்கை. அதை மாற்ற முடியாது. வேறு வரம் கேள்" என்றாள். "மரணம் தவிர்க முடியாதது என்றால் குதிரைத் தலையுடைய ஒருவனைத் தவிர வேறு யாராலும் மரணம் சம்பவிக்கக் கூடாது" என வரம் கேட்டான். அன்னையும் அப்படியே வரம் தந்தாள். அதுமுதல் அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். மூவுலகிலும் தன்னைக் கொல்ல குதிரைத் தலை உடைய எவரும் இல்லை என கொக்கரித்தான்இதன் காரணமாக அன்னை குதிரைத் தலை ஒன்றை விஷ்ணுவின் உடலில் பொருத்துமாறு விஸ்வகர்மாவிற்கு ஆணை இட்டாள்.

 

9.தைவேன க்ருத்தம் ஹரீசீர்ஷ; மத்ய

 ஸம்யோஜ்யதாம் வாஜிசிரோஸ்ய காயே

 ததோ ஹயக்ரீவதயா முராரீர் 

 தைத்யம் ஹயக்ரீவமரம் நிஹந்தா

உலகில் காரணமில்லாமல் ஏதும் நடக்காது. விஷ்ணுவின் தலை போனதற்கும் ஏதேனும் காரணம் இருக்குமல்லவா? ஒரு நாள் லக்ஷ்மி தேவியானவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த விஷ்ணு கேலியாகச் சிரித்தார். லக்ஷ்மி தேவிக்கு ஏன் அப்படிச் சிரித்தார்? என்ன காரணம்? வேறு ஏதேனும் பெண்ணை நினைத்து அப்படிச் சிரித்தாரோ? என பலவாறு யோசித்து தமோகுண உந்தலினால் மிகுந்த கோபம் கொண்டு "உன் தலை விழட்டும்" எனச் சாபம் தந்தாள். இதுதான் விஷ்ணுவிற்குத் தலை போனதன் காரணம். அன்னை விஷ்ணுவிற்கு குதிரைத் தலையைப் பொருத்தும்படி விஸ்வகர்மாவிற்கு ஆணை தந்தாள். குதிரைத் தலையுடன் விஷ்ணு ஹயக்ரீவர் ஆகிறார்அசுரனைக் கொல்ல இது காரணமாகிறது.

 

10.த்வமேவ முக்த்வா ஸதயம் திரோதாஹா

  ஸ்த்வஷ்ரா கபந்தேச்வசிரோ முராரேஹே

  ஸம்யோஜிதம் பச்யதி தேவஸங்கே

  ஹயானன: ஸ்ரீ,ஹரிருத்திதோபூது

       தேவர்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். மஹாமாயாவின் அருளால் விஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். சில காலம் சென்ற பின் அசுரனைக் கொன்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நன்மை செய்தார்.

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே"

 

11. தைத்யம் ஹயக்ரீவம் அஹன் ஹயாஸ்யோ

   ரணே முராரிஸ்த்வ தனுக்ரஹேண

   ஸதா ஜகன்மங்களதே! த்வதீயாஹா

   பதந்து மே மூர்த்னி க்ருபாகடாக்ஷாஹா

       விஷ்ணுவின் தலை போனதால் விஷ்ணுவிற்கும் ஆபத்தில்லை. தேவர்களுக்கும் துன்பமில்லை. அது அவர்களுக்கு அனுக்ரஹமாயிற்று. தேவியின் அனுக்ரஹத்தால் ஹயக்ரீவர் தோன்றினார். அசுரன் அழிந்தான். தேவியின் அருள்  இருந்தால் எல்லாம் நன்மை ஆகும். விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரமும் ஹயக்ரீவ அஸுரனின் கதையும் சேர்ந்தது இந்த தசகம்.

இரண்டாம் தசகம் முடிந்தது


 

தசகம் 3

மஹகாளி அவதாரம்

1.  ஜகத்ஸு ஸர்வேஷு புரா விலீனேஷு

  ஷ்வேகார்ணவே சேஷதனௌ ப்ரஸுப்தே

  ஹரௌ, ஸுராரீ மதுகைட பாக்யௌ

  மஹாபலாவப்ஸு விஜஹ்ரதுர் த்வௌ

முன்பு ஒரு காலத்தில் ப்ரளயம் ஏற்பட மூன்று உலகமும் ஸமுத்திரத்தில் மூழ்கின. அப்பொழுது வாசுதேவன் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் காதிலுள்ள அழுக்கிலிருந்து மஹா பலசாலியான மது, கைடபன் என்னும் இரு தைத்யர்கள் தோன்றினர். அவர்கள் அந்தக் கடலில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

2.ஸமா: ஸஹஸ்ரம் யதசித்தவ்ருத்தீ

  வாக்பீஜமந்த்ரம் வரதே! ஜபந்தௌ

  ப்ரஸாதிதாயா அஸுரௌ பவத்யாஹா

  ஸ்வச்சந்தம் ருத்யுத்வம் அவாபதுஸ்தௌ

அப்பொழுது அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. நாம் விளையாடும் இந்த கடலுக்கு யார் ஆதாரம்? யார் இதைப் படைத்தது? இது எப்படி உண்டானது? நாம் எப்படி உண்டானோம்? நமது தந்தை யார்? இப்படியெல்லாம் யோசித்தனர். அப்பொழுது கைடபன் மதுவிடம் இந்த ப்ரளய ஜலத்தில் நம்மை நிலை பெறச் செய்யும் சக்திதான் இந்த கடலுக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றான். மதுவும் அதை ஒத்துக்கொண்டான். அப்பொழுது ஆகாஸத்தில் அழகிய ஒளியுடன் வாக்பீஜ அக்ஷர ஒலியும் கேட்டது. இது வெறும் அக்ஷரமல்ல. இதில் ஏதோ சக்தி இருக்கிறது என்று நினைத்து அந்த சக்தியை நினைத்து 1000 வருடம் தவம் செய்தனர். தவத்தை மெச்சிய அன்னை அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் வேண்டியபடி "தேவர்களாலோ அஸுரர்களாலோ வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும், தாங்கள் விரும்பினால் மட்டுமே மரணம் உண்டாகும்" என்ற வரத்தினையும் பெற்றனர்.

 

2.  ஏகாம்புதௌ தௌ தரளோர்மிமாலே

  நிமஜ்ஜனோன்மஜ்ஜன- கேளிலோலௌ

  யத்ருச்சயா வீக்ஷிதம் அப்ஜயோனிம்

  ரணோத்ஸுகாவூ,சதுரித்தகர்வௌ

வரத்தினைப் பெற்ற அசுரர்கள் தனக்கு நிகரான வல்லவர்கள் யாரும் இல்லை என்ற மமதையுடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு நாள் தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் ப்ரம்மனைப் பார்த்தனர்.  நான்கு தலை உடைய அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.

 

4. பத்மாஸனம் வீரவரோபபோக்யம்

  பீருபோக்யம், வராகபோக்யம்

  முஞ்சேத மத்யைவ; யாஸி சேத் த்வம்

  ப்ரதர்ச, ஸ்வம் யுதி சௌர்யவத்வம்

தன் வலிமையில் கர்வம் கொண்டு வேறு யாரும் யுத்தம் செய்ய இல்லாத காரணத்தால், வலுக்கட்டாயமாக ப்ரம்மனை எங்களுடன் யுத்தம் செய். இல்லாவிட்டால் தாமரை மலரை விட்டு ஓடிப்போ. யுத்தம் செய்ய வலிமை இல்லாத உனக்குத் தாமரை ஆசனம் எதற்கு? இந்த ஆசனம் வீரர்களுக்கு உகந்தது. நீ உடனே ஓடிப்போய் விடு என்று அச்சுறுத்தினர். இதைக் கேட்டு ப்ரம்மா பயந்து நடுங்கினார்.

 

5. இதம் ஸமாகர்ண்ய பயாத் விரிஞ்சஹ

  ஸுஷுப்தி நிஷ்பந்தம் அமோகசக்திம்

  ப்ரபோதனார்த்தம் ஹரிமித்தபக்த்யா

  துஷ்டாவ; நைவாசலதம்பு ஜாக்ஷஹ

பயந்து போன ப்ரம்மா, இந்த அஸுரர்களுடன் சண்டை போடுவது நம்மால் முடியாத காரியம். எனவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தூங்கும் விஷ்ணுவை எழுப்புவதே ஒரே வழி. நம்மைக் காப்பாற்ற அவரால் தான் முடியும் என்று தாமரைத் தண்டினுள் சென்று விஷ்ணுவை "நாராயணா" " கோவிந்தா" "மதுசூதனா" "ஆபத்பாந்தவா" " அனாதரட்ஷகா" என்று பலவித நாமங்களால் அழைத்தார்

 

6. அஸ்பந்ததா த்வஸ்ய கயாபி சக்த்யா

  க்ருதேதி மத்வா மதிமான் விரிஞ்சஹ

  ப்ரபோதயைனம் ஹரி மேவமுக்த்வா

  ஸ்தோத்ரைர் விசித்ரைர்  பவதீமனௌஷீது

எவ்வளவு அழைத்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? அவரை அப்படி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது நித்ராசக்தி அல்லவா? அவர் இப்பொழுது நித்ரா சக்தியின் வசத்தில் இருக்கிறார். அதனால்தான் நான் அழைத்தும் எழுந்திருக்க முடியவில்லை என்று யோசித்து அந்த ஆதிசக்தியான மஹாமாயாவைச் சரணடைகிறார். "தாயே! உன்னைப் பணிந்தேன். நான் ஆபத்தில் இருக்கின்றேன். என்னைக் காப்பாற்று. நீ என்னைக் காப்பாற்ற நினைத்தால் இந்த விஷ்ணுவை எழுப்பு. இல்லையேல் என்னையோ அல்லது அஸுரர்களையோ கொன்று விடு. என்னைக் காப்பாற்ற நினைத்தால் ஏன் இந்த அஸுரர்களைப் படைத்தாய்? என்னைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறதுஎன்று வேண்டினார்.

 

7. நுதிப்ரஸன்னா ப்ஜபவஸ்ய தூர்ணம்

   நி: ஸ்ருத்ய விஷ்ணோஸகலாம் கதஸ்வம்

  திவி ஸ்திதா; தத்க்ஷணமேவ  தேவோ

  நித்ராவிமுக்தோ ஹரிருத்திதோ பூது

அப்பொழுது விஷ்ணுவின் உடலிலிருந்து அம்பிகையின் அருளால் ஒளிமயமான தாமஸ ரூபமான சக்தி வெளிப்பட்டது. ஆகாசத்தில் சுந்தரி ஆக, தமோகுண தேவியாக காளி அவதரித்தாள். அந்த சக்தி வெளி வந்ததும் விஷ்ணு தன் உடலை லேசாக அசைத்தார். ப்ரம்மன் ஆனந்தம் அடைந்தார்.

 

8. அதைஷ பீதம் மதுகைட பாப்யாம்

  விரிஞ்சமாலோக்ய ஹரிர் ஜகாத

  அலம்பயேனா, ஹமிமௌ ஸுராரீ

  ஹந்தாஸ்மி சீக்ரம் ஸமரே த்ர பச்ய

கண் விழித்த விஷ்ணு "ப்ரம்மனே! நீ ஏன் இங்கு தாமரை மலரை விட்டு வந்தாய்? ஏன் பயப்படுகிறாய்? ஏன் துக்கம்? என்று கேட்க ப்ரம்மனும் நடந்தவை அனைத்தையும் கூறுகிறார் என்னைக் காத்தருள வேண்டும் என வேண்டினார். விஷ்ணுவும் கவலை வேண்டாம் நான் அவர்களை ஒரு நிமிடத்தில் அழித்து விடுகிறேன் என்று சமாதானம் கூறினார்.

 

9. ஏவம் ஹரௌ வக்தரி தத்ர தைத்யௌ

  ரணோத்ஸுகௌ ப்ராபது ரித்தகர்வௌ

  தயோர விஞ்ஞாய பலம் முராரீர்

  யுத்யோத்யதோSபூதஜ ரக்ஷணார்த்தம்

அப்போது ப்ரம்மாவைத் தேடி மது கைடபர்கள் அங்கு வந்தார்கள்ப்ரம்மாவைப் பார்த்து இந்த தூங்கு முஞ்சியுடன் சேர்ந்தாயா? எங்களுடன் சண்டைக்கு வா. உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார் என்று அறைகூவல் விடுத்தனர். இதைக் கேட்ட ஜனார்த்தனன் என்னுடன் சண்டை போடு. உங்கள் கர்வத்தை அடக்குகிறேன் என்றார். ப்ரளய ஜலத்தில் ஆதாரமில்லாமல் நிற்கும் மதுகைடபர்களுடன் பிறகு  சண்டையைத் துவங்கினார்.

 

10. பிமேமி ராகாதிமஹாரிபுப்யோ

   ஜேதும் யதிஷ்யேஹமிமான் ஸுசக்தான்;

   ததர்த்தசக்திம் மம தேஹி நித்யம்;

   நித்ராலஸோ மா பவானி மாதஹ

விஷ்ணு எதிரியை அழிக்க யுத்தம் செய்யப் புறப்பட்டார். ஆனால் வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கும் எதிரிகள்  காமம், க்ரோதம், லோபம், மதம், ஆச்சர்யம் ஆகியவைகள். இவைகள் மிகப் பெரிய எதிரிகள். இவைகள் மிகவும் ஆபத்தானவை. இவைகளே மனிதனை மீண்டும் மீண்டும் பிறப்புச் சூழலில் சிக்க வைக்கின்றன. இவைகளைப் பணிய வைக்க பக்தி தான் சிறந்த சாதனை. எந்த காரியத்தைச் செய்தாலும் அது பூர்த்தி அடைய அன்னையின் அனுக்ரஹம் வேண்டும்.

தாயே! அப்படிப்பட்ட அனுக்ரஹத்தை எனக்குத் தா என ஆசிரியர் நாரயண நம்பூதிரி வேண்டினார்.

மூன்றாம் தசகம் முடிந்தது

 

தசகம் 4

மதுகைடப வதம்

 

1. த்வம் தாமஸீ ஸுப்தர,மாதவாங்கஜா

  ச்யாமா ருசா மோ,ஹனதாம்ரலோசனா

  ஏகார்ணவே கோர,ரணோத்ஸுகான் ஹரீம்

  தைத்யௌ தௌ ஸ்மேர,முகீ ஸமைக்ஷதாஹா

நேத்ரம், முகம், மூக்கு, தோள், இருதயம் ஆகிய சர்வ அங்கங்களிலும் வியாபித்திருந்த நித்ராதேவியான தாமஸ குண சக்தி வெளிப்பட்டு, கண் சிவக்க, கறுப்பு நிறத்துடன் பராசக்தியுடன் ஆகாசத்தில் கண்ணுக்குத் தெரியாமல் நின்று கேலியாக அசுரர்களைப் பார்த்துச் சிரித்தாள்.

 

2. பசயத்யஜே பாஹு,ரணம் முராரிணா

  க்ருத்வா மது: ச்ராந்திம்,அவாப,ஸத்வரம்

  அப்யேத்ய யுத்தம் குருதே ஸ்ம கைடபஹ

  ச்ராந்தே தஸ்மின்ன் அக்ருதாSSஹவம் மதுஹு

முதலில் மது என்பவன் வேகமாக ஓடி விஷ்ணுவுடன் மற்போர் செய்கிறான். மது கொஞ்சம் சளைத்ததும் கைடபன் சண்டை செய்கிறான். இவன் சளைத்ததும் மீண்டும் மது வருகிறான். இப்படி மாறி மாறி விஷ்ணுவிடம் யுத்தம் செய்கிறார்கள்.

 

3. ஏவம் முஹு; ஸங்கர,விச்ரமாவுபௌ

  பர்யாயதோ வர்ஷ,சஹஸ்ரபஞ்சகம்

  க்ளானிம் விநா சக்ரது; ரச்யுத: க்ளமாது

  விச்ராந்திமிச்சன்ன,ஸுரௌ ஜகாத தௌ

இப்படியாக மாறி மாறி இடைவெளி இல்லாமல் யுத்தம் செய்கிறார் விஷ்ணு. 5000 வருடங்கள் போர் நடக்கிறது மிகவும் சோர்ந்து போகிறார். இந்த அஸுரர்களின் பலம் இப்படி வளர்ந்து கொண்டே போகிறதே! ஆனால் நம் பலமும் வீரமும் எங்கே போனது எனத் தெரியவில்லையே!. இவர்களை ஏதாவது உபாயம் செய்தே ஜயிக்க முடியும் என யோசித்து அவர்களிடம் சொல்கிறார். என்ன சொல்கிறார்?

 

4. ச்ராந்தேன பீதேன, பாலகேன

  ப்ரபு:புமான் நைவ, கரோதி ஸம்யுகம்

  மத்யே,ரணம் த்வௌ, க்ருத விச்ரமௌ யுவாம்

  ஏக: கரோம்யேவ, நிரந்த,ராஹவம்

யுத்தத்தில் சோர்வடைந்தவன், நிராயுதபாணியானவன், பாலகன், கீழே விழுந்தவன் இவர்களுடன் யுத்தம் செய்வது வீரர்க்கு அழகல்ல. இது தர்மமும் அல்ல. நீங்கள் இருவரும் மாறி மாறி யுத்தம் செய்தீர்கள். அதனால் நீங்கள் களைப்படையவில்லை. ஆனால் நான் இடைவிடாமல் யுத்தம் செய்தேன். அதனால் நான் சிறிது இளைப்பாறியதும் யுத்தம் மீண்டும் தொடங்குவோம். இது உறுதி என்றார்.

 

5. ஞாத்வா ஹரீம் ச்ராந்த,முபௌ விதூரதஹ

  ஸம்தஸ்ததுர், விச்,ரமஸௌக்ய வாம்ஸ்ததஹ

  த்வாமேவ துஷ்டாவ, க்ருபா,தரங்கிணீம்

  ஸர்வேஸ்வரீம் தைத்ய-ஜயாய மாதவஹ

அசுரர்களும் சரி என்று ஒத்துக் கொண்டு தூரத்தில் சென்று அமர்ந்து இளைப்பாறினர். விஷ்ணு யோசித்தார். இவர்களுக்கு ஏதோ வரம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் சண்டை செய்தாலும் இவர்களுக்கு மரணம் சம்பவிக்கவில்லை என யோசித்து தன் ஞான த்ருஷ்டியால் தேவியிடம் வரம் பெற்றதை அறிந்து கொண்டார்.

 

6. தேவீ ப்ரஸீதைஷ,ரணே ஜிதோSஸ்ம்யஹம்

  தைத்யத்வயேனாப்,ஜபவம் ஜிகாம்ஸுனா;

  ஸர்வம் கடாக்ஷைஸ்தவ ஸாத்ய; மத்ர மாம்

  ரக்ஷே தி வக்தா,ரமபாஷதா ஹரீம்

எவ்வளவு சண்டை செய்தும் இவர்கள் சளைக்கவில்லை. யுத்தம் செய்தால் யாருக்கு ஜயம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. அதனால் இவர்கள் மரணத்தை விரும்பும் படியான உபாயம் செய்ய வேண்டும். அதற்கும் தேவியின் அருள் வேண்டும் என்று அன்னையைத் துதிக்கிறார்

 

7. யுத்தம் குரு த்வம், ஜஹி தௌ, மயா ப்ருசம்

  ஸம்மோஹிதௌ, வக்ர,த்ருசே த்யயம் த்வயா

  ஸஞ்சோதிதோ ஹ்ருஷ்ட,மனா மஹார்ணவே

  தஸ்தௌ ரணாயா,யயதுச்ச தானவௌ

தேவீ காட்சி தருகிறாள். மாதவா! இப்பொழுது யுத்தம் செய். ஜயம் உண்டாகும் என அனுக்ரஹம் செய்கிறாள். விஷ்ணு முஷ்டி யுத்தம் செய்கிறார். அஸுரர்களின் மீது அன்னை காம வலையை வீசுகிறாள். மோகம் கொண்ட அஸுரர்கள் வெறி கொண்டவர்கள் போல் தேவியைப் பார்த்து மயங்கி நிற்கின்றனர். சண்டையில் சளைக்கின்றனர்.

 

8. பூயோபி குர்வன், ரணமச்யுதோ ஹசன்

  காமாதுரௌ தே, முகபத்மதர்சனானு

  தாவா துஷ்டோSஸ்ம்யதுலௌ ரணே யுவாம்

  ததாம்யஹம் வாம் வரமேஷ வாஞ்சிதம்

சிறிது நேரம் யுத்தம் செய்கிறார்கள். உடனே தேவியின் சங்கீத கானத்தில் மயங்கி மோஹத்தில் மூழ்குகின்றனர். இந்த நல்ல சமயத்தைப் பயன்படுத்தி " உங்கள் வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்று விஷ்ணு சொல்கிறார்.

 

9. தாவூசதுர் "வித்தி ஹரே! யாசகௌ

  ஆவாம் ததாவஸ்தவ, வாஞ்சிதம் வரம்

  நா ஸத்யவாசௌ ஸ்வ" இதீரிதோ ஹரிஹி

  ஸ்த்வாம் ஸம்ஸ்மரன், சத்ரு,ஜிகீஷ்யா ப்ரவீது

தேவி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வரம் வாங்கினால் தாழ்ந்தவராகி விடுவோம் என்று " விஷ்ணுவே! எங்களை யாசர்கர்கள் என்று நினைத்தாயா? எங்கள் இனத்தவரிடம் நீ யாசகம் பெற்றதை மறந்தாயா? உனக்கு வேண்டிய வரத்தை நாங்கள் தருகிறோம். வேண்டியதைக் கேள் என்றனர்.

 

10. "மஹ்யம் வரம் யச்சத,மத்ய மே யதோ

   வத்யௌ யுவாம் ஸ்யாதம்" இதீரிதாவுபௌ

   த்ருஷ்ட்வாப்ஸு லீனம், ஸகலம் ஸமூசதுஹு

   ஸ்த்வம் ஸத்யவாங் நௌ, ஜஹி நிர்ஜலே ஸ்தலே

உடனே விஷ்ணு நல்ல காலம் பிறந்தது என மகிழ்ந்து, உங்களுக்குக் கொடுக்கும் திறமும், என் யுத்தத்தில் மகிழ்ச்சியும் இருந்தால் இந்த யுத்தத்தில் என் கையால் நீங்கள் மரணம் அடைய விரும்ப வேண்டும் என்ற வரம் கேட்டார். ஆகா! இவன் நம்மை வஞ்சித்து விட்டானே. இவனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு மோஹினியுடன் வாழலாம் என நினைத்தோமே. மோசம் போனோமே என்று வருந்தி, ஜலமில்லாமல் விசாலமான இடத்தில் எங்களைக் கொல்வாயாக! என்று சொன்னார்கள்.

 

11. 'அஸ்த்வேவ' மித்யா,த்ருதவாங் முதாஹரிஹி

   ஸ்வோரௌ ப்ருதாவுன்னமிதே ஜலோபரி

   க்ருத்வாரிணா தச்,சிரஸி ததாSசினது

   ஸ்வச்சந்தம்ருத்யு, தவ மாயயா ஹதௌ

விஷ்ணு விஸ்வரூபம் எடுத்துத் துடைகளை விசாலமாக்கி பூமியாகக் காண்பித்து அதில் அஸுரர்களின் தலையை வைக்கச் சொன்னார். சக்ராயுதத்தால் கொன்றார். அஸுரர்கள் பரலோகம் சென்றனர்.

 

12. த்வேஷச்ச, ராகச்ச, ஸதா, மமாம்பிகே!

   தைத்யௌ ஹ்ருதி ஸ்தோ; Sத்ர விவேகமாதவஹ

   ஆப்யாம் கரோத்யேவ ரணம், ஜயத்வயம்;

   துப்யம் மஹாகாளி! நம; ப்ரஸீத மே

இதைக் கண்டு கலி நமஸ்காரம் செய்தார். ராகத்வேஷம் தான் அஸுரர்கள். இதை வெற்றி கொள்ள விவேகம் வேண்டும். அதற்கு விஷ்ணு மனசில் வரவேண்டும். அதற்கு அன்னையின் அருள் வேண்டும்.

 

"நமஸ்தே சரண்யே சிவே சாணுகம்பே

நமஸ்தே ஜகத் வ்யாபிகே விஸ்வ ரூபே

நமஸ்தே சரண்யே ஜகத்வந்த்ய பாதார விநேத்

நமஸ்தே  பாஹிமாம் பத்ரகாளி

நான்காம் தசகம் முடிந்தது

 

தசகம் 5

ஸீத்யும்னகதா

 

1. ஜாதா ஸுதேளா, மனுஸப்தமஸ்ய

  ஸம்ப்ரார்திதோSநேந, முனிர் வஸிஷ்டஹ

  சம்போ: கடாக்ஷேண ஸுதாம் குமாரம்

  சக்ரே; காலேன, பபூவ ராஜா

மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார். மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளாமனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள்

 

2. ஸுத்யும்னநாமா ம்ருகயா விஹாரீ

  கதோ ஹயாரூட, இளாவ்ருதம் ஸஹ     

  ஸ்த்ரீத்வம் புன: ப்ராப்ய ஸுதம் ஹிமாம் சோர்

  வவ்ரே பதிம்; புத்ரமஸுத சைஷா

       ஒருநாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு  அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர்.

 

3.ந்யவேதயத் ஸா குரவே வஸிஷ்டாய

  ஏஷா கதாசின்னிஜ பும்ஸ்த்வகாமம்;

  தத்ஸாதனார்த்தம். ஹரமேவ தத்யௌ  

  முனி: ப்ரஸன்னஸ்தமுவாச சம்புஹு

ஸுத்யுனன் இளா என்ற பெயருடன் வசித்து வந்தான். நாணத்தால் அரண்மனைக்குப் போகவில்லை. ஒரு நாள் சந்திரனின் புதல்வன் புதன், இளாவைப் பார்த்து இருவரும் மோகித்து இளா கர்பவதி ஆகி, புரூரவன் என்னும் குழைந்தையைப் பெற்றெடுத்தாள்தன் நிலை எண்ணி வருந்தி மீண்டும் ஆணாக நினைத்தாள். தன் குல குருவான வஸிஷ்டரை நினைத்தாள். அவரும் ஞான திருஷ்டியால் இதை அறிந்து மகாதேவரை நோக்கித் தவம் செய்தார்.

 

4. "இளாவ்ருதம் மா புருஷ: ப்ரயாது

   ப்ரயாதி சேத் ஸோ&ஸ்த்வ,பவா ததைவ

   ஏவம் மயா நிச்சிதமேவ ஸௌம்ய!

   கௌர்யா: ப்ரஸாதாய, பவான் ப்ரியோமே

இளாவ்ருதம் என்னும் அந்த உத்யாவனத்திற்கு ஒருநாள் ஸனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்களின் காந்தி எங்கும் பரவியது. அன்னையும் ஈசனும் உல்லாசமாக இருந்த நேரம் ஆதலால், அவர்கள் மீண்டும் தபோவனம் நோக்கித் திரும்பிச் சென்றனர். அன்னை, ஸனகாதிகளின் ஒளி கண்டு ஈசனிடமிருந்து விலகி நாணம் கொண்டாள். காரணம் அறிந்த பின் இருவரும் அந்த உத்யாவனத்தில் ப்ரவேசிப்பவர்கள் பெண்ணாக ஆகட்டும் என சபித்தனர். வஸிஷ்டரின் தவத்தால் மகாதேவன் அவர் முன்னால் தோன்றினார். வஸிஷ்டரும் பெண்ணுருவம் கொண்ட ஸுத்யும்னன் ஆணாக வேண்டினார். ஆனால் மகாதேவனோ சாபத்தை மாற்ற முடியாது என்ன செய்வது என யோசித்தார்.

 

5. பக்ஷபேதோSத்ர மமாஸ்தி, கௌரி

  பவாம்ச்ச த்ருப்தௌ, பவதாம் மதீயௌ

  இத: பரம் தஸ்ய, மனோரபத்யம்

  மாஸம் புமான் ஸ்யாத், வனிதா மாஸம்

சாபத்தை மாற்றினால் பார்வதிக்குக் கோபம் வரும். வரம் தராவிட்டால் வஸிஷ்டர் வருந்துவார். பார்வதியும் வஸிஷ்டரும் வருத்தப் படாமல் ஒரு வரத்தைத் தர வேண்டும் என மஹாதேவன் நினைத்தார். அதனால் ஒரு மாதம் பெண்ணாகவும் ஒருமாதம் ஆணாகவும் இருக்க வரம் அருளினார்.

 

6. ஏவம் சிவோக்தேன மனோரபத்யம்

  லப்த்வா பும்ஸ்த்வம் தரணீம் சசாஸ,

  ஸ்த்ரீத்வே ஹர்ம்யேஷு, நிநாய காலம்:

  ஜனோ சைனம், ந்ருபம் அப்ய நந்தது

ஆணுருவத்தோடு நகரம் சென்ற ஸுத்யும்னன் வியாஸரிடமிருந்து தான் பெண்ணாக மாறின காரணம் அறிந்து கொள்கிறான். பெண்ணாக மாறின போது அந்தப்புர வாசமும், ஆணாக மாறியதும் அரசாட்சி நிமித்தம் கொலு மண்டபத்திலும் இருந்து காலம் தள்ளி வந்தான். விபரம் அறிந்த மக்கள் அவன் ஆட்சியை விரும்பாமல் அலக்ஷியம் செய்து வந்தனர்.

 

7. புரூரவஸ்யாத்ம ஸுதே&ர்பயித்வா

  ராஜ்யம் விரக்தோ வனமேத்ய பூபஹ

  ஸ்ரீநாரதாத் லப்த,னவார்ணமந்த்ரோ

  பக்த்யா தத்யௌ பவதாரிணீம் த்வாம்

இதை அறிந்து கொண்ட ஸுத்யும்னன் தன் மகனான புரூரவனுக்கு யௌவனம் வந்ததும் ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்தான். ஆரண்யம் சென்று நாரத மஹரிஷியிடம் நவாக்ஷர மந்த்ர உபதேசம் பெற்றுப் பல வருடங்கள் ஜபம் செய்து வந்தான்.

 

8. ஸிம்ஹாதிரூடாமருணாப்ஜ நேத்ராம்

  த்வாம் ஸுப்ரஸன்னாம், அபி வீக்ஷ்ய நத்வா

  ஸ்துத்வா பக்த்யா, ஸ்திரபும்ஸ்த்வமேஷ

  லேபேS ஸாயுஜ்யம், அவாப சாந்தே.

பக்திக்கு மெச்சிய அன்னை ஸிம்ஹ வாஹினியாக காட்சி தந்தாள். அன்னையை பல ஸ்தோத்ரங்கள் சொல்லி நமஸ்கரித்தான். (தேவீ! திவ்யமாயும், வேத ப்ரசித்தமாகவும், லோகச்க்ஷேமகரமாயும் இருக்கும் உன் ஸ்வரூபம் என்னால் பார்க்கப்பட்டது. தேவர்கள் வணங்கக் கூடியதும் மோட்க்ஷத்தைத் தரக்கூடியதுமான உன் பாத கமலத்தை நமஸ்கரிக்கிறேன். பூமியில் உன் ஸ்வரூபத்தை யார் அறிவார்? நான் என்ன பாக்யம் செய்தேன். தீனனாகிய என்னிடத்தில் உன் தயையைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சம்பு, நாராயணன், ப்ரம்மன், இந்திரன், சூரியன், சந்த்ரன் போன்றவர்களே உன் மகிமை அறியமாட்டார்கள். அப்படியிருக்க குண ஹீனனான மானிடன் எப்படி அறிவான்? உன்னை சங்கரர் மட்டுமே அறிவார். நீ ஸத்வ குண ஸம்பன்னையாக பாற்கடலில் உதித்த லக்ஷ்மியாக, ரஜோகுண சரஸ்வதியாக, தமோகுண துர்கையாகவும் இருக்கின்றாய். இதனால் த்ரிகுணையாக எவரும் உன்னை அறிவார்கள். எவராலும் அறியக் கூடாத நிர்குணையும் நீயே! சகுணை என்பார்க்கு நிர்குணையாகவும், நிர்குணை என்பார்க்கு சகுணையாகவும் இருக்கிறாய். அதனால் உன்னை யாரும் அறியமுடியவில்லை. பக்தி உள்ளோருக்கு அனுக்ரஹம் செய்பவளல்லவா நீ! உன்னால் படைக்கப்பட்ட ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் ஆனந்தம் அடையவில்லை. அதனால் உன் பாதகமலத்தை அடிக்கடி நமஸ்கரிக்கிறார்கள். அம்மா! சகல தேவர்களுக்கும் தேவனான விஷ்ணு உன் பாத்தில் விழுகிறார். நீயே லக்ஷ்மி என்றால் அப்படி உன் பாதத்தில் விழுவாரா? அதனால் நீ அவரை ஆளுகின்ற சக்தி அல்லவா? திவ்ய அலங்காரமும், சாந்தமும் உடையவளே! அதனால் தான் அவர் மார்பகத்தை கட்டிலாக்கி மின்னல் போல் வாசம் செய்கிறாயா? நீ அவரை விட்டு விலகினால் சக்தியாகிய உன் அனுக்ரஹம் இல்லாதவராக மாட்டாரா? ப்ரம்மா, தேவகணங்கள் அனைத்தும் உன்னால் உண்டாக்கப் பட்டவையே. நீ சாமர்த்யசாலி. உன் சக்தியை நான் என்னவென்று சொல்வது? புருஷர்கள் எல்லாம் உன்னால் ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களே. அதனால் உன்னை வணங்குகிறார்கள். நீ புருஷரூபம் இல்லாதவளாயுமில்லை, புருஷனாயும் இல்லை. தேவீ! நீ ஆணோ பெண்ணோ, ஸகுணையோ, நிர்குணையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ எவ்விதமானவள் என அறியும் புத்தியும் எனக்கு இல்லை. எந்த விதமாயும் இல்லாத உன்னை நான் பக்தி பாவத்தோடு த்யானிக்கிறேன். உன்னிடம் ஸ்திரமான பக்தியை வேண்டுகிறேன். என்னுடைய மரணகாலத்தில் எனக்கு உன் பக்தியைத் தர வேண்டும் என்று ஸ்தோத்திரம் செய்து வேண்டிணான்). தேவியின் பாத கமலத்தைச் சரண் அடைந்தான். உண்மை பக்தனுக்கு அன்னை ஸாயுஜ்ய பதவி தந்தாள். முனிவர்களுக்கும் கிடைத்தற்கரிய நாசமில்லாத பதவியை அடைந்தான்.

 

9. சௌர்யம் , வீர்யம் பௌருஷம் மே

  நைவாஸ்தி ஸ்த்ரீ, ஸஹஜா திதிக்ஷா;

  மூடோ , ஜானம்ய, சுபம் சுபம் ;

  தேயம் த்வயா மே சுபமேவ மாதஹ

 

10. பச்யானி மாத:! ப்ரவரான் குரும்:! ஸ்தே

   காருண்யதோ மாம், ஸுபதா நயந்து

   ஸத்ஸங்க,ஸம்பா,வித சித்த வ்ருத்திர்

   பவானி; தே, தேவி! நம: ப்ரஸீத

       இந்தஇரண்டு ஸ்லோகங்களிலும் இதன் ஆசிரியர் அன்னையை வேண்டிக் கொள்கிறார். பவதாரிணீ! புருஷ குணமோ, பெண் குணமோ எதுவும் நான் அறியேன். பக்தியும் என்னிடம் இல்லை. அம்மா ! உன்னை மட்டுமே நான் அறிவேன். நல்லது கெட்டது எதுவும் எனக்குத் தெரியாது. எப்படிக் கரையேறுவது என்றும் தெரியவில்லை. குருவின் உபதேசம் ஞானக் கண்ணைத் திறக்கும். எனக்கு குருவும் யாரும் இல்லை. அதனால் உன்னை அம்மா! என்று அழைத்தேன். எனக்கு நல்லது எதுவோ அதைக் கொடு தாயே! என்னைக் கரையேற்று தாயே! என வேண்டினார்.

ஐந்தாம் தசகம் முடிந்தது

 

தசகம் 6

வ்யாஸ நாரத ஸமாகமம்

 

1.  த்வதிச்சயா தேவீ! புலஸ்த்யவாசா

  பராசராத் விஷ்ணு, புராணாகர்த்துஹு

  முனேர் ஹரிர் லோக,ஹிதாய தீபாத்

  யதா ப்ரதீபோSஜனி, க்ருஷ்ண நாமா

      புராணங்களில் மிகப் பழமையானது விஷ்ணு புராணம். புலஸ்த்ய மஹரிஷி எழுதும்படிச் சொன்னதால் பராசரர் அதை எழுதினார். இது தேவியின் ஆசை தான். அவர் மனதில் இதை எழுதும்படி தோன்றச் செய்தவள் அன்னை தானே. ஒரு நாள் பராசரர் தீர்த்த யாத்திரைச் செய்யும் பொழுது காளிந்தி என்னும் யமுனா நதிக்கரைக்கு வருகிறார். நதியைக் கடப்பதற்கு ஓடக்காரன் தன் மகளான மச்சகந்தியை ஓடத்தில் அவரை அக்கரையில் சேர்க்கும்படிச் சொல்கிறான். அவள் பராசரருடன் நதியில் செல்லும் போது தோணி செல்லும் ரம்யமான சூழ்நிலையில், அவளது அங்க லாவண்யங்களைக் கண்டு விதியின் காரணமாக காம இச்சைக் கொள்கிறார் பராசரர். ஆனால் அவளோ, ஐயா! நல்ல குலத்தில் பிறந்தவரும், ஆசாரசீலரும், ஞானவைராக்யமும் உடைய நீர் என் அருகில் வரலாமா? என் உடலில் வீசும் மச்ச நாற்றம் உமக்குத் தெரியவில்லையா? நாம் இருவரும் ஒத்த ஆசாரம் உள்ளவர்கள் அல்லவே? நீர் என்கையைப் பிடிப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உம்மை ஓடத்திலிருந்து தள்ளிவிட்டால் என்ன செய்வீர்? பயப்படாதீர்! நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றாள். அவள் அறிவினைக் கண்டு மகிழ்ந்த அவர் மேலும் இச்சை கொண்டார். அவள் கையை பிடித்தபடியே கரையை அடைந்ததும் "உன் மீது மச்ச வாடை அடிக்கிறது என்றாயே. அதை இப்பொழுதே மாற்றுகிறேன்" என்று அவளிடம் சுகந்த பரிமள நறுமணம் வீசும்படிச் செய்தார். என் மனதில் காம இச்சை தோன்றியதற்கு தேவியின் இச்சைதான் காரணம். இந்த உலகத்தில் விஷ்ணு அம்சமான சத் புத்திரன் ஜனிக்க வேண்டிய நேரம். நீ ஒன்றும் கவலைப்படாதே! என்று சொன்னார். அவளைசத்யவதீஎன்றும் அழைத்து இனி நீ எனக்கு ஒத்தவள் தானே என்றார்? பராசரரின் சரஸ மொழிகளைக் கேட்டு, நான் சம்மதித்தாலும் இப்பொழுது பகல் நேரம் அல்லவா? மனிதர்களான நமக்கு இது தகுமா என்றாள். உடனே அவர் தன் தவ வலிமையால் பகலை இரவாக்கினார். அப்பொழுது சத்யவதீ ஐயா! நீர் என்னைப் புணர்ந்த பின் கர்ப்பவதி ஆக்கி விட்டுச் சென்ற பின் நான் பிதாவையும்  உம்மையும் இழந்து பிறர் கேலிக்கு ஆளாவேனே என்றாள். சத்யவதீ! நான் சென்ற பின் நீ மீண்டும் கன்னி ஆவாய். பரிமள காந்தியுடன் கற்பிற் சிறந்தவள் என போற்றப் படுவாய். நீ விரும்பியவன் உனக்குக் கணவனாவான். இப்பொழுது என்னால் உண்டாகும் புத்திரன் விஷ்ணு அம்சம் நிறைந்தவனாக, மிகுந்த ஞானம் உடையவனாக, மூஉலகமும் போற்றும் பிரசித்தி உடையவனாக இருப்பான் என்றார்.

      சத்யவதீ! நான் ஊர்வசீ ரம்பா போன்ற எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் உன் வயப்பட்டது விதியே என்று சொல்லி அவளோடு கூடி பின் யமுனையில் ஸ்நானம் செய்து ஆரண்யம் சென்றார். சத்யவதீ இரண்டாவது மன்மதனோ என்று சொல்லும்படியான ஒரு மகனைப் பெற்றாள். அவர் கிருஷ்ண த்வைபாயனர் எனப் பெயரிடப்பட்டார். தபோ வலிமையால் பிறந்தவராதலால் பிறந்தவுடன் தாயைப் பிரிந்து நீ நினைக்கும் போது வருவேன் என்று சொல்லி தவம் செய்ய காட்டிற்குச் சென்றார்.

 

2.  வேதம் சதுர்தா விததத், க்ருஷ்ண-

  த்வைபாயனோ வ்யாஸ, இதி ப்ரஸித்தஹ

  வேதாந்த ஸூத்ராணி, புராணஜாலம்

  மஹேதிஹாஸம் , மஹாம்ச்சகார

கிருஷ்ணாவதாரம் முடியும் நேரத்தில் த்வாபர யுக முடிவில் வ்யாஸர் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரில் தோன்றினார்வரப்போகிற கலியின் கொடுமையை எண்ணி அதுவரை ஒன்றாக இருந்த வேதத்தை 4 வேதங்களாகப் பிரித்தார். வேதத்தை வரையரை செய்ததால் வேத வ்யாஸர் எனப் பெயர் பெற்றார். அதை சுகர் போன்ற மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்தார். ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் இந்த வ்யாஸர் பிறக்கிறார். இவர் 28 ஆவது வ்யாஸராவார். 29 ஆவது வ்யாஸராக அஸ்வத்தாமா பிறக்கிறார்.

 

3.  தப: ப்ரவ்ருத: களவிங்கபோதம்

  மாத்ரா ஸம்லாளி,தமாச்ரமாந்தே

  பச்யன்னதந்யாம், அனபத்யதாம் ஸ்வாம்

  ஸபுத்ரபாக்யாதி,சயம் தத்யௌ

ஒரு சமயம் வ்யாஸர் சரஸ்வதி நதிக்கரையில் ஆச்ரமத்தில் இருக்கும் போது ஆண் பெண் ஆகிய இரு ஊர்க்குருவிகளின் லீலா வினோதத்தையும், தன் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகளிடம் காட்டும் பரிவையும் பார்த்தார். வளர்ந்த பிறகு தாய் தந்தையரை அறியமுடியாத இப்பறவைகளுக்கு இத்தனை பரிவு என்றால், மனிதருக்கு புத்திரர்களிடம் வாஞ்சை இருப்பதில் ஆச்சர்யமென்ன? நூல்களில் புத்திர சுகமே உயர்ந்தது என்றும், புத்திரன் இல்லாதவருக்கு சுவர்க்கம் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று அது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது. வேத வாக்யமும் நிரூபணமாகிறது. இதை நினைத்துத் தனக்குப் புத்திரன் இல்லையே என வருத்தப்படுகிறார்.

 

4.  ஸத்புத்ரலாபாய, தபச்சிகீர்ஷு

  ஸ்தீவ்ரம் மஹாமேருஸமீவமேத்ய

  ‘ஆராதனீய:' இதி க்ஷணம :

  சிந்தாதுரோ லோக,குரு: ஸ்திதோSபூத்

புத்திரன் வேண்டும் என்ற ஆசை உடையவராக, மேருமலையில் தவம் புரியச் செல்கிறார். ஸத் புத்திரன் பெறுவதற்கு ருத்ரன், விஷ்ணு, ப்ரம்மன், இந்திரன், சூரியன், கணேசன், அக்னி, வருணன் என்று எந்த தெய்வத்தை உபாஸிக்கலாம் என்று யோசிக்கிறார்.

 

5.  ஸ்ரீநாரதஸ்,தத்ர, ஸமாகதஸ்த்வத்

  க்ருபா கடாக்ஷாங்,குரவன் மஹர்ஷிஹி

  அர்க் யாதி: ஸம்பூஜித ஆஸனஸ்தோ

  வ்யாஸேன ப்ருஷ்ட: பரஹஸன்னிவாSS

அப்பொழுது தெய்வாதீனமாக நாரதர் அங்கு வருகிறார். வ்யாஸரும் மகிழ்ந்து அர்க்யம், பாத்யம், ஆஸனம் கொடுத்து க்ஷேம லாபங்களை விஜாரிக்கிறார். நாரதர் வ்யாசரின் கவலைக்குக் காரணம் கேட்கிறார். ஸ்த் புத்திரன் பெற எந்த தெய்வத்தை உபாஸிப்பது எனக் கேட்க, இதைக் கேட்டு நாரதருக்கு சிரிப்பு வருகிறதாம்.

 

6.  கிம் சிந்தயா க்ருஷ்ண! பஜஸ்வ தேவீம்;

  க்ருபாவதி வாஞ்சி,ததானதக்ஷா

  அஹேதுரேஷா கலு ஸர்வஹேதுர்

  நிரஸ்த ஸாம்யாதிசயா" நிரீஹா

ஹ்ருதய கமலத்தில் தேவியின் பாத கமலத்தை த்யானம் செய்யும். அவள் உன் விருப்பத்தை முடித்து வைப்பாள் என்று சொன்னார். (தன் தகப்பனாரான ப்ரம்மாவும் லோக ரட்க்ஷகரான மாஹாவிஷ்ணுவைத், த்யானம் செய்யும் போது யாரை த்யானிக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர் கூறின பதிலையே நாரதரும் இப்போது சொன்னார்).

 

7.  ஸைஷா மஹா,சக்திரிதி ப்ரஸித்தா;

  யதாஜ்ஞ்யா ப்ரம்ம,ரமேச ருத்ராஹா

  ப்ரம்மாண்டஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச

  குர்வந்தி காலே, தே ஸ்வதந்த்ராஹா

இந்த ஜகமானது அன்னையிடமிருந்தே வந்தது. ப்ரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியவர்களுக்கும் படைத்து, காத்து, அழிக்கும் சக்தியை தந்தவள். அனைத்து ஜீவன்களுக்கும் சக்தி தருவது அவள்தான். பேசுவது, கேட்பது, நடப்பது, ஏன் சாப்பிடுவது கூட அவளின் சக்திதான். அந்த சக்தி இல்லாவிட்டால் எதுவும் அசையாது. அவளே ஸமஷ்டி சக்தி, மஹாசக்தி ரூபிணீ.

 

8.  யஸ்யாச்ச தே, சக்திபிரேவ ஸர்வ

  கர்மாணி குர்வந்தி;, ஸுராஸீராத்யாஹா

  மர்த்யா ம்ருகா: க்ருஷ்ண! பதத்ரிணச்ச

  சக்தேர் விதேயா: , இஹாவிதேயஹ?   

அனைத்திற்கும் சக்தி தருபவள் அவளே. அவளின்றி அணுவும் அசையாது. மது கைடபர்களை வதைக்க யார் அனுக்ரஹித்தது? மஹாவிஷ்ணு மச்ச, வராக, வாமன அவதாரங்கள் எடுத்ததும் அவளின் விருப்பமே. விஷ்ணுவின் தலை விழுந்து, குதிரைத்தலை பெற்றதும் அவளின் அருளே. யாரும் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. அவளின் அருளே முக்கியம். இதில் உனக்குச் சந்தேகம் என்ன? என்று நாரதர் சொன்னார்.

 

9.  ப்ரத்யக்ஷமுக்யைர், ஸா ப்ரமாணைர்

  ஞேயா தபோபிஹி கடினைர் வ்ரதைச்ச

  வேதசாஸ்த்ராத்,யயனேன சாபி;

  பக்த்யைவ ஜானாதி, புமான் மஹேசீம்

தேவியைக் காண்பது எப்படி? எப்படி ப்ரத்யக்ஷமாவாள்? சப்தம் கேட்டு அன்னையைப் பார்க்க முடியாது. புலன்களாலும் அறிய முடியாது. இந்த்ரியங்களாலும் காண முடியாது. தீ இல்லாமல் புகையாது. புகை இருப்பதால் தீ கட்டாயம் இருக்கும். வேத சாஸ்த்ரங்கள் படித்தாலும், அறிந்தாலும் போதாது. தேவை உண்மை பக்தியே.

 

10.  தாமேவ பக்த்யா, ஸததம் பஜஸ்வ

   ஸர்வார்த்ததாம் க்ருஷ்ண! தவாஸ்து பத்ரம்;

   இத்யூசுஷி, ப்ரம்மஸுதே கதே :

   வ்யாஸஸ்தபோர்தம், கிரிமாருரோஹ

இவ்வாறு நாரதர் சொன்னதைக் கேட்ட சத்யவதி மகனான வ்யாஸர் உண்மையை உணர்ந்து அன்னையை த்யானம் செய்ய நிச்சலன புத்தியுடன் மேருமலை நோக்கிச் சென்றார்.

 

11. இஹாஸ்மி பர்யாகுல சித்தவ்ருத்திர்

   குரும் பச்யாமி, மஹத்தமம்

   ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ

   ப்ரஸீத மே த்வாம், சரணம் வ்ரஜாமி

வ்யாஸ முனிவருக்கு சரியான நேரத்தில் அவரின் சந்தேகம் தீர்க்க குருவான நாரதர் வந்தார். எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் யாரிடம் கேட்பேன்? அதனால் தேவி நீதான் எனக்கு அன்னையாகவும், குருவாகவும் வந்து நல்வழி படுத்த வேண்டும் என்று இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்

ஆறாம் தசகம் முடிந்தது


தசகம் 7

சுகோத் பத்தி    

 

1. க்ருஷ்ணஸ்ய தஸ்யாரணித: சுகாக்யஹ-

  ஸ்தவ ப்ரஸாதாத ஜனிஷ்ட புத்ரஹ

  ஹ்ருஷ்டோ முனிர் மங்களகர்ம சக்ரே

  தத்ரேSதிதேயா வவ்ருஷு: ஸுமானி

நாரதர் உபதேசப்படி த்யானம் செய்த வ்யாஸருக்கு சிவன் காட்சி தந்து நல்ல ஸத் புத்திரன் ஜனிப்பான் என்று அருள் செய்கிறார். புத்திரன் ஜனிக்க வேண்டும் என்றால் விவாகம் செய்து கொள்ள வேண்டும். தன் மன நிலையில் அது தகுந்ததல்ல என்று நினைக்கிறார். அப்பொழுது இந்திரன் க்ருதாப்ஜி என்ற அப்ஸரசை அனுப்புகிறார். க்ருதாப்ஜி ஆகாசத்தில் தோன்றி வ்யாஸரைத் தன் வசம் இழுக்க முற்பட்டாள். வ்யாஸர் வித்யாசமான மனநிலை உடையவராதலால், அவர் மனதிற்கும். புத்திக்கும் போராட்டம் ஏற்படுகிறது. மனம் அப்ஸரஸின் அழகிலிலும் லாவண்யத்திலும் ஈடுபட்டாலும் அறிவு காம வழியில் செல்வதைத் தடுக்கிறது. முன்பு புரூரவன் ஒரு பெண்ணால் அவமானம் அடைந்தான். அதாவது ஸீத்யும்னன் பெண்ணுருவாக இருந்த போது அவனுக்கும் புதனுக்கும் பிறந்தவன் புரூரவன். அவன் நீதி தவறாது அரசாட்சி செய்து யாகங்களையும் தானங்களையும் செய்து வந்தான். இந்த புரூரவ சக்ரவர்த்தியின் பெருமையும் புகழும் கேட்டு இந்த்ரலோகத்து ஊர்வசி இவனை மணந்து கொள்ள விரும்பினாள். மானிடனிடத்தில் மோகம் கொண்டதால் ப்ரம்மன் அவளை பூலோகத்திற்குப் போகும்படிச் சபித்தார். பூலோகம் வந்து புரூரவனை காந்தர்வ மணம் புரிந்தாள். அப்பொழுது அவள் சில நிபந்தனைகளைச் சொன்னாள். 1. என்னை மறவாமல் ரட்க்ஷிக்க வேண்டும். 2. நான் கொடுக்கும் நெய்யை தினந்தோறும் சாப்பிட வேண்டும். வேறு எதையும் சாப்பிடக்கூடாது. 3. என்னிடம் இருக்கும் உரணங்களை உம்மிடம் தருகிறேன். அதைக் களவு போகாமல் காக்க வேண்டும். 4. நீர் நிர்வாணியாகவும் பிற பெண்களுடன் சேரும் போதும் நான் பார்க்கமாட்டேன். இதில் எது தவறினாலும் நான் உம்மைப் பிரிந்து விடுவேன் என்று சொல்ல, அரசனும் சம்மதித்து, அவளின் மோகத்தால் மதி இழந்து, நாடு, அரசநீதி, மக்கள் அனைத்தையும் மறந்து பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இந்த சூழ்நிலையில் இந்திரன் பல நாட்களாக ஊர்வசியைக் காணவில்லையே என்று, அவள் இருக்கும் இடம் பூலோகத்தில் புரூரவஸின் அந்தப்புரம் என்று அறிந்து, கந்தர்வர்களை அழைத்து, அவளின் உயிருக்கு உயிரான உரணங்களை நீங்கள் கவர்ந்து வந்தால் அவள் தானகவே வருவாள் எனவே உடனே புறப்படுங்கள் என்றார். அதன்படி கந்தர்வர்கள் உரணங்களைக் கவர்ந்து செல்ல இதை அறிந்த ஊர்வசி " ஐயோ! என் உயிர் போன்ற உரணங்கள் களவு போனதே! ! அரசனே! கேட்பார் யாரும் இல்லையா? நீ எந்தப் பெண்ணுடன் உறங்குகிறாய்? நான் உன்னைப் பிரியும் காலம் வந்ததேஎன்று உரத்த குரலில் அழுதாள். குரல் கேட்டு அரசன் வேகமாக ஓடி வந்தான். அப்பொழுது கந்தர்வர்கள் மாயையால் ஒரு மின்னலை உண்டாக்கினார்கள். நிர்வாணமாயிருக்கும் அரசனைப் பார்த்தாள் ஊர்வசி. உடனே அவனைப் பிரிந்து போனாள்

நிபந்தனைகளை மீறியதால் தானே இப்படி நடந்தது. இப்பொழுது நான் ஆடைகளை உடையவனாக இருக்கிறேன் . ஊர்வசி மீண்டும் வரமாட்டாளா என்ற ஆசையுடன் அவளைத் தேடித் தேடி அலைந்து குருக்ஷேத்ரத்தில் ஊர்வசியைக் கண்டான். புரூரவன் ஊர்வசியிடம் " பெண்ணே! என்னைவிட்டுப் போகாதே! நீ என்னைப் பிரிந்தால் என் உயிர் போய்விடும். அந்தப் பழி உன்னையே சேரும்" என்று புலம்பினான். ஊர்வசி சொன்னாள் "அரசனே! உன் புத்தி எங்கு போனது? நான் ஒரு வேசி அல்லவா? வேசியின் அன்பு நிலையானதாகுமா? ஒரு நல்ல குலத்து அரசன் பெண்களிடமும் கள்வர்களிடமும் அன்பு காட்டலாமா? இது நீதியா? நீதி மறந்த நீர் என்முன் நிற்காதே. போ!” என்று விரட்டினாள். அரசன் மிகுந்த துக்கம் அடைந்தான்.

அது போல் தான் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறார். தான் செய்ய வேண்டிய அக்னி காரியங்களைச் செய்ய, அரணியில் மத்தைப் பூட்டி அக்னி உண்டாக்க முயலும் போது, க்ருதாப்ஜி ஒரு கிளி உருவம் எடுத்து அங்கும் இங்கும்மாக ஆகாசத்தில் சிங்காரமாக ஊர்ந்தாள்அதைக் கண்ட வ்யாஸர் உணர்ச்சி வசப்பட அவரது வீர்யம் சிதறி அரணியில் விழுகிறது. அந்த அரணியிலிருந்து இவரை போல் ஒரு புத்திரன் ஜனிக்கிறான். இரண்டாவது அக்னி போன்று தோன்றிய அக்குழந்தையைக் கையில் எடுத்துத் தழுவி கங்கா ஸ்நானம் செய்வித்து சாதகாதி கர்மங்களைச் செய்து, சுக ரூபியான அப்ஸரின் மோகத்தால் உண்டான புத்ரனானதால் சுகன் என்று பெயர் வைத்தார்.

 

2. கேசிஜ் ஜகு: கேசன வாத்யகோஷம்

  சக்ருச்ச நாகே நந்ருது: ஸ்த்ரியச்ச

  வாயுர் வவௌ ஸ்பர்சஸுக: ஸீகந்தஹ

  சுகோத்பவே ஸர்வஜனா: ப்ரஹ்ருஷ்டாஹா

ஆகாஸத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் துந்துபி முதலிய பஞ்சவாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாடினர். நாரதர் முதலிய ரிஷிகள் ஆசீர்வதித்தனர். காற்று சுகந்தமாக வீசியதாம். உலகத்தில் உள்ள அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.

 

3. பால: ஸத்யோ வவ்ருதே, ஸுசேதா

  ப்ருஹஸ்பதேராத்தஸமஸ்த வித்யஹ

  தத்வா விநீதோ குருதக்ஷிணாம்

  ப்ரத்யாகதோ ஹர்ஷயதி ஸ்ம தாதம்

வ்யாஸர் மகனுக்கு உபநயனம் செய்வித்தார். சுகர் தேவ குருவான ப்ரகஸ்பதியிடம் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவருக்கு குருதட்ஷணையும் கொடுத்துவிட்டுப் பின் வ்யாஸரிடம் வந்தார். வித்தைகளைக் கற்றுணர்ந்த தன் மகன் எந்த கர்வமும் இல்லாமல் அடக்கமாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் கொண்டார்.

 

4. யுவானமேகாந் ததப; ப்ரவ்ருத்தம்

  வ்யாஸ: கதாசித் சுகமேவமூசே

  "வேதாம்ச்ச சாஸ்த்ராணி வேத்ஸி புத்ர;

  க்ருத்வா விவாஹம் பவ ஸத்க்ருஹஸ்தஹ

எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்யாஸி போல் இருக்கும் சுகரிடம், வ்யாஸர் "விவாஹம் செய்துகொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு செய்ய வேண்டிய தேவ யக்ஜம், பிதுர்யக்ஜம் போன்ற கர்மங்களை மனைவியுடன் செய்து, பிதுர்க்கடனினின்று எனக்கு விமோசனம் தர வேண்டும். புத்திரன் இல்லாதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று தர்ம சாஸ்த்ரங்கள் சொல்கின்றது. இல்லறதர்மம் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லறத்திலிருந்தும் முக்தி அடையலாம். அனைவரும் சந்யாஸிகள் ஆனால் எப்படி சிருஷ்டி உற்பத்தியாகும். அதனால் நீ விவாஹம் செய்துகொள்" என்று ஒரு தந்தையின் இயல்பான குணத்துடன் சொன்னார்.

 

5. ஸர்வாச்ரமாணாம் கவயோ விசிஷ்டா

  க்ருஹாச்ரமம் ஸ்ரேஷ்டதரம் வதந்தி;

  தமாச்ரித ஸ்திஷ்டதி லோக ஏஷ;

  யஜஸ்வ தேவான் விதிவத் பித்ரும்ச்ச

ஏகாந்த சந்யாஸ தர்மத்தைவிட இல்லறதர்மம் மிகவும் உயர்ந்தது. எல்லாவகையிலும் உயர்ந்ததாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நீ விவாஹம் செய்து கொண்டு குழந்தைகளை உற்பத்தி செய்து நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதான் நம் முன்னோர்கள் கரையேறுவார்கள். உன்னுடைய கடமைகளைச் சரிவர செய்து, பித்ருக்களைத் தர்ப்பணம் முத்லியவைகளால் திருப்திபடுத்தி புத்ர பௌத்ரர்களைப் பெற்று சந்தோஷமாக இருந்து எங்களைக் கரையேற்ற வேண்டும் என்றார். இள வயதில் திருமணம் செய்து கொண்டால் தான், புத்ர பௌத்ரர்களைப் பெற்றுக் கடமைகளைச் செய்துப் பின் தவம் செய்யப் போக முடியும். சுகர் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் கரையேற முடியாது என்று நினைக்கிறார். அதனால் விவாஹம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

 

6. தவாஸ்து ஸத்புத்ர; ருணாதஹம்

  முச்யேய; மாம் த்வம் ஸுகினம் குருஷ்வ;

  புத்ர: ஸுகாயாத்ர பரத்ர ஸ்யாது

  த்வாம் புத்ர! தீவ்ரைரலேபே தபோபிஹி

உன்னைப் புத்திரனாகப் பெற நான் பலகாலம் தவம் செய்தேன். அதனால் நீ இளவயதில் திருமணம் செய்து, உனக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறந்து, அதாவது கொள்ளுப் பேரன் பிறந்து பார்க்க வேண்டும், என்னைக் கரையேற்ற வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்படகூடிய இயற்கையான ஆசை. இந்த ஆசைதான் வ்யாஸர் மனதிலும் வந்தது.

 

7. கிஞ்ச ப்ரமாதீனி ஸதேந்த்ரியாணி

  ஹரந்தி சித்தம் ப்ரஸபம் நரஸ்ய

  பச்யன் பிதா மே ஜனனீம் தபஸ்வீ

  பராசரோபி ஸ்மரமோஹிதோSபூது

 

8. ஆச்ரமாதா ச்ரமேதி தத்தது

  கர்மாணி குர்வன் ஸுகீ ஸதா ஸ்யாது

  க்ருஹாச்ரமோ நைவ பந்தஹேதுஹு

  ஸ்தவயா தீமன்! க்ரியதாம் விவாஹ:

இல்லற வாழ்வில் நியாயமான முறையில் பொருளைச் சம்பாதித்து, விதித்த கர்மங்களைக் கிரமப்படிச் செய்தால் பந்தத்தினின்றும் விடுபடலாம். விதித்த கர்மங்களை முறைப்படிச் செய்பவனுக்குச் சாதிக்க முடியாதது எது? இல்லற வாழ்க்கையில் தேவர்களையும், பித்ருக்களையும், மனிதர்களையும் த்ருப்தி அடையச் செய்து, விதித்த கர்மங்களைச் சரிவரச் செய்து, ஸத் புத்திரனைப் பெற்று, அவனை இல்லறத்தில் ஈடுபடுத்திப், பின் வானப்ரஸ்தாச்ரமத்தை அடைந்து, சில காலம் அதில் இருந்து பின் சந்யாஸ ஆச்சிரமம் அடைவாய்.

      இல்லறத்தில் ஈடுபடாதவனுக்கு இந்த்ரியங்களையும் புலன்களையும் வெல்வது எளிதல்ல. விஸ்வாமித்திரர் மேனகயைக் கண்டு மோகித்து சகுந்தலையை பெற்றார். என் பிதாவான ப்ராசரர் மச்சகந்தியை மோகித்தார். ப்ரம்மனும் தன் புத்ரியிடம் மோகம் கொண்டு பின் சிவனால் தெளிவடைந்தான். இதை எல்லாம் யோசித்து நான் சொன்னபடி விவாஹம் செய்து கொள் என்றார். சுகரிடம் எள்ளளவும் மாற்றம் இல்லாததால் மன வேதனை அடைந்து அழுகிறார்.

 

9. ஏவம் ப்ருவாணோபி சுகம் விவாஹா-

  -த்யஸக்தமா ஜ்ஞாய பிதேவ ராகீ

  புராணகர்த்தா ஜகத்குரு:

  மாயாநிமக்னோSச்ருவிலோசனோSபூது

வ்யாஸர் ஜகத் குரு, புராணங்களை எழுதியவர். அவர் ஏன் அழ வேண்டும்? தபஸ் செய்ய  சக்தி குறைந்ததா? இல்லை. தேவியிடம் பக்தி குறைந்ததா ? இல்லை. பின் ஏன் அழ வேண்டும்? பாசம். மகன் விவாஹம் செய்து கொள்ளவில்லையே என்ற பாசம். மாயை. ஜகமே மாயையில் உழலுகிறது. ஆனால் சுகர் பல ஜன்மங்களாக என்னைத் தொடர்ந்து வந்த மாயை கிழவனாகி, இப்பிறவியில் என்னை விட்டு விலகி விட்டது. எனவே விவாஹம் என்னும் மாயையில் சிக்க மாட்டேன். முற்றும் துறந்த முனிவர்களையும் மாயையில் சிக்க வைக்கும் அந்த மாயாசக்தியை நான் வழிபடுவேன் என்று சொல்கிறார். சுகர் சுக போகங்களிலிருந்து விலகி நிற்கிறார்.

 

10. போகேஷு மே நிஸ்ப்ருஹதாSஸ்து மாதஹ

  ப்ரலோபிதோ மா கரவாணி பாபம்;

  மா பாததாம் மாம் தவ தேவி! மாயா;

  மாயாதிநாதே! ஸததம் நமஸ்தே

      இந்த சுகர் எப்படி மாயையிலிருந்து விலகி அதன் பிடியில் சிக்காமல், மன உறுதியுடன் இருக்கிறாரோ அப்படிப் பட்ட மன உறுதியை எனக்கும் தா என்று இந்த கவிஞன் வேண்டுகிறார்.

ஏழாம் தசகம் முடிந்தது


 

தசகம் 8

பரமஞானோபதேசம்

 

1.  அதாSSஹகிருஷ்ணஹ : ச்ருணு சிந்தயாலம்;

  க்ருஹாச்ரமஸ்தே, பந்தக்ருத் ஸ்யாது;

  பந்தஸ்ய முக்தேச்ச மனோ ஹி ஹேதுர்;

  மனோஜயார்த்தம் பஜ விச்வதாத்ரீம்

வ்யாஸர் இவ்வளவு சொல்லியும் சுகரின் மனது விவாஹத்திற்குத் தயாராகவில்லை. அதனால் வ்யாஸர் மீண்டும் சொல்கிறார். விவாஹம் செய்து கொண்டு க்ரஹஸ்தாச்சிரமம் மேற்கொண்டால் பந்தம் ஏற்படும் என நீ பயப்படுகிறாய். பந்தத்திற்குக் காரணம் விவாஹம் இல்லை. நான், எனது என்ற மமதையும், அகந்தையும் தான் ஒருவனை பந்தப்படுத்துகிறது. விவாஹம் அதற்குக் காரணம் இல்லை. "நான் செய்யும் எல்லா செயல்களுக்கும் காரணம் அந்த லோகமாதாவே. அவள் ஆணைபடி நான் செய்கிறேன். நான் கர்த்தா இல்லை. என்னை செய்விப்பவள் அவளே. அதனால் அவளே கர்த்தா ஆகிறாள்" என்ற இந்த நினைவுடன் நீ எந்த செயலைச் செய்தாலும் அகந்தை வராது. எல்லாம் அவள் செயல் என நினைத்து எந்தச் செயலைச் செய்தாலும் பந்தம் வராது. இப்படி மனதை நீ ஜெயித்து விட்டால் உன்னால் முடியாதது எதுவும் இல்லை. இப்படி மனதை ஜெயிக்க உபாயம் என்ன வென்றால் தேவியை பூஜை செய், அவளின் பெருமையை யாராவது சொன்னால் அதைக் கேள். தேவியை நாம ஜபம் செய். இது போன்ற பக்தி சாதனைகளை விடாமுயற்சியுடன் செய்யும் போது தேவி உன் மனதில் வந்து அமர்ந்து விடுவாள். தேவி மனதில் வந்துவிட்டால், அகந்தை மமதை எல்லாம் அங்கு இருக்க முடியுமா? எங்கோ ஓடிப் போய்விடும். அதனால் நீ கல்யாணம் செய்து கொண்டு, தேவியை மனதில் நிறுத்தி, ஸ்வதர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று சொன்னார்.

 

2. யஸ்யா: ப்ராஸாதே, ஸபலம் ஸமஸ்தம்

  யதப்ரஸாதே, விபலம் ஸமஸ்தம்

  மாஹாத்ம்யமஸ்யா, விதிதம் ஜகத்ஸு

  மயாக்ருதம் பாகவதம் ச்ருணு த்வம்

என்ன தபஸ் செய்தாலும், எந்த தர்மானுஷ்டானம் செய்தாலும், இதை நான் செய்ய வில்லை. நான் செய்யும் அனைத்துச் செயலும் அன்னையை மகிழ்விப்பதற்கே என்ற நினைவுடன் செய்யும் போது மனதிற்கு பலம் கிடைக்கும். எதைச் செய்தாலும் தேவி சந்தோஷப்படவில்லை என்றால், அதற்கு எந்தப் பயனும் இல்லை. இது தேவி பாகவதத்தில் மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் எழுதிய தேவி பாகவதத்தை நீ படி என்றார்.

 

2.   விஷ்ணுர், ஜகத்யேக, ஸமுத்ரலீனே

  பால: சயானோ வடபத்ர ஏகஹ

  ஸ்வபாலதாஹேது விசாரமக்னஹ

  சுச்ராவ காமப்ய சரீரிவாசம்

வேத வ்யாஸ மஹரிஷி தான் எழுதிய தேவி பாகவதத்தின் மூல கதை, அதன் அர்த்தம் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்ல ஆரம்பிக்கிறார். ப்ரளய காலத்தில் உலகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. ஆனால் விஷ்ணு மட்டும் ஒரு அரச இலையில் குழந்தையாகப் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு நான் எப்படி குழந்தையாக மாறினேன்? என்னை யார் இப்படி மாற்றினார்கள்? என யோசிக்கிறார். அப்பொழுது ஆகாசவாணி போல் ஒரு சப்தம் கேட்கிறது.

 

3.   ஸனாதனம் ஸத்யமஹம்; மதன்யது

  ஸத்யம் ஸ்யா, தஹமேவ ஸர்வம்"

  ச்ருத்வேதமுன் மீலித த்ருஷ்டிரேஷ

  ஸ்மிதானனாம் த்வாம், ஜனனீம் ததர்ச

      அந்த அசரீரி " நேற்று காணப்பட்ட, இன்று காண்கின்ற, நாளை காணப் போகும் அனைத்து பொருள்களும் நானே. நானே சத்யம்" என்று சொன்னது. மண், குடமமாக மாறுகிறது, உடைந்தால் மீண்டும் மண் துண்டுகளாகிறது. இதில் மண் மட்டுமே ஸ்திரமானது. இது போல பொன்னை உருக்கிப் பல நகைகள் செய்தாலும், அவைகளை உருக்கினால் மீண்டும் பொன்னாகிறது. பொருள் பலவாக உருவாகினாலும் ஆதாரமான பொருள் ஒன்றுதான். இதைப் போல பலவிதமாகத் தோன்றினாலும் நானே சத்யம். காணும் பொருள்கள் எல்லாம் நானே. இதுவே உண்மை என்றது. இந்த ஸத்ய வார்த்தைகள் யாரால் சொல்லப்பட்டது? இதைச் சொன்னது யார்? ஆணா? பெண்ணா? என்று அவர் ஆலோசிக்கும் பொழுது, இந்த ஸத்யமான வார்த்தைகள் முகுந்தனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிய, ஆச்சர்யமாக கண்களை அகல விரித்து, புன்சிரிப்புடன் பார்க்கும் போது, சிரித்த முகத்துடன் குழந்தையைத் தாவி அணைக்கவரும் தாயைப் போன்று அன்னை முகுந்தனுக்கு சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். மஹாவிஷ்ணுவும் அன்னையைப் பார்க்கிறார். அவர் பார்த்த தேவியின் ஸ்வரூபம் எப்படி இருந்தது?

 

4.  சதுர்புஜா சங்ககதாரிபத்ம

  தரா க்ருபாத்யை: ஸஹ சக்திஜாலைஹீ

  ஸ்திதா ஜலோபர்யம், அலாம்பரா த்வம்

  ப்ரஹ்ருஷ்ட,சித்தம் ஹரிமேவ,மாத்த

      நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் திவ்யமான வஸ்த்ரங்களும், ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அனேக சக்திகளால் சூழப்பட்டு, மிகுந்த ஒளியுடன் ப்ரகாஸமாக தண்ணீரின் மேல் தேவி நின்று கொண்டு புன்னகை செய்கிறாள். இதைப் பார்த்த விஷ்ணு, மிகுந்த ஆனந்தம் அடைகிறார்.

 

5.  "கிம் விஸ்ம,யேனாச்யுத! விஸ்ம்ருதாஹம்

  த்வயா பராசக்தி,மஹா ப்ரபாவாது!

  ஸா நிர்குணா வாங்மனஸோரகம்யா;

  மாம் ஸாத்விகீம் சக்தி, மவேஹி லக்ஷ்மீம்

     பால முகுந்தன் முன் காட்சி தந்த அன்னை ஸாத்வீகி. அதாவது ஸாத்வீக சக்தி உடையவள். அவளே மஹாலக்ஷ்மி. அவளின் புத்தி மனம் வாக்கு, செயல் எல்லாமே நன்மையை மட்டுமே தரக்கூடியது. அதாவது நல்லதையே நினைப்பாள், நல்லதையே சொல்வாள், நல்லதையே செய்வாள். ஆனால் பராசக்திக்கு இந்த குணங்கள் கிடையாது. அவள் குணாதீதைஎல்லா குணங்களுக்கும் மேற்பட்டவள். பராசக்தி இப்படி இருப்பாள் இந்த குணம் உடையவள் என்று எதையும் உதாரணமாகக் காட்டவோ சொல்லவோ முடியாது. பால முகுந்தன் முன் தோன்றிய மஹாலக்ஷ்மி பேசத் தொடங்குகிறாள்.

 

7. ச்ருதஸ்த்வயா யஸ்த்வசரீரிசப்தோ

  ஹிதாய தே தேவ! தயா உக்தஹ

  அயம் ஹி ஸர்வ, ச்ருதிசாஸ்த்ர,ஸாரோ;

  மா விஸ்மரேமம், ஹ்ருதி ரக்ஷணீயம்

நான் மட்டுமே ஸத்யம் என்று அசரீரியாகச் சொன்னவள் எல்லா குணங்களுக்கும் மேற்பட்டவளான நிர்குண  பராசக்தி. தேவி என்பது ஒன்றுதான். இரண்டல்ல. எல்லாவற்றிற்கும் காரணம் அவள் ஒருவளே. வேதங்களும் வேதாந்தங்களும் எதைச் சொல்கின்றதோ அவள் இவளே தான். இந்த தத்வத்தை நீ மறக்காதே. மனசில் நிறுத்திக்கொள் என்றாள். தேவி பேசும் சப்தத்தை கேட்க முடியுமா என்ற சந்தேகம் உனக்கு வேண்டாம். பால முகுந்தனிடம் தேவி பேசும் சப்தத்தை நீ கேட்டாயல்லவா? நீ கேட்டும் இருக்கலாம் அல்லது உன் மன சக்தியால் அதை உணர்ந்தும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கனவல்ல. உண்மைதான் என்றார் வ்யாஸர்.

 

8. நாத: பரம் ஞேயமவேஹி கிஞ்சிது

  ப்ரியோSஸி தேவ்யாஹா, ச்ருணு மே வசஸ்த்வம்

  த்வன்னாபி பத்மாத், த்ருஹிணோ பவேத்,

  : கர்த்தா ஜகத், பாலய தத் ஸமஸ்தம்

மஹாலக்ஷ்மி சொல்கிறள்" ஸத்யம் என்பது ஒன்று தான். அது பலதாகத் தோன்றினால் அது உண்மை இல்லை. ஸத்யம் ஒன்றுதான் என்று உணர்வதே பரம ஞானம். தேவிக்கு உம்மிடம் விசேஷமான ப்ரியம் இருந்த படியால், இந்த பாகவத ரகஸ்யத்தை தானே நேரில் வந்து உமக்கு உபதேசித்தாள் . இதை விட சிறந்த சாஸ்த்திரங்கள் மூஉலகிலும் இல்லை. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறையும் ப்ரளயம் முடிந்து ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் காலத்தில், தேவி ஸகுணை வடிவமாகத் தோன்றுவாள். நான் அவளின் ஸகுணை ரூபமானவள். உன் நாபிக் கமலத்தில் ப்ரம்மன் உதிக்கப் போகிறான். அவன் ஒப்பில்லாத தவம் செய்து ராஜஸ சக்தியுடன், பூஉலகைப் படைப்பான். அவர் படைத்த உலகை காக்கும் காவல் கடவுள் நீரே ஆவீர் என்று கூறினாள்இந்த ப்ரளய காலத்தில் தான் மது கைடபர்கள் தோன்றி மஹாவிஷ்ணுவால் கொல்லப்படுகிறார்கள். (இது 4 ஆவது அத்யாயத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.)

 

9. ப்ரூமத்யத: பத்மபவஸ்ய கோபாது

  ருத்ரோ பவிஷ்யன் ஸகலம் ஹரேச்ச

  தேவீம் ஸதா ஸம்ஸ்மர: தேSஸ்து பத்ரம்

  ஏவம் நிகத்யாசு திரோததாத

ப்ரம்மனின் புருவத்தின் நடுவிலிருந்து ருத்ர மூர்த்தி தோன்றி, தாமஸ சக்தி உடையவராக எல்லாவற்றையும் அழிக்கும் ஸம்ஹார கர்த்தா ஆவார். சாத்வீக சக்தி ஆகிய நான் உம்முடைய இருதயத்தில் வசிப்பேன் என்று சொல்லி மறைந்து விடுகிறாள். வ்யாஸர் மேலும் சொல்கிறார்நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. கல்யாணம் செய்து கொள்வதால் பந்தம் ஏற்படாது. பந்தத்திற்குக் காரணம் மனசு தான். இந்த மனதை நீ ஜெயிக்க வேண்டும். அதனால் நீ அந்த தேவியை த்யானம் செய்என்று சுகருக்குச் சொன்னார்.

 

10. ஹரேரிதம் ஞானமஜஸ்ய லப்தம்

  அஜாத் ஸுரர்வேஷச்ச, ததோ மமாபி;

  மயா த்விதம் விஸ்தரத; ஸுதோக்தம்;

  யத் ஸுரயோ பாகவதம் வதந்தி

விஷ்ணு " நான் மாத்திரம் ஸத்யம் " என்று தேவி சொன்ன இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். ப்ரம்மா விஷ்ணுவிடம் நீங்கள் என்ன ஜபம் செய்கின்றீர்? உம்மைவிட மேலான கடவுள் இருக்கின்றாரா? என்று கேட்கிறார். விஷ்ணு சொல்கிறார் "உமக்கும் எனக்கும் இருக்கும் சக்தியை நினைத்துப் பாருங்கள். அதற்குக் காரணம் அந்த சிவசக்தி ரூபிணியே. அவள் ஆதி அந்தம் இல்லாதவள். அனைத்திற்கும் ஆதாரமானவள். அசையும் அசையாத அனைத்தும் அவளால்தான் படைக்கப் படுகிறது. அவள் கருணையால் மட்டுமே மனித ஜன்மம் எடுத்தவன் முக்தி அடைய முடியும். இந்த ப்ரபஞ்சம் தோன்றக் காரணம் அவளே. அவளே அந்த மேலான தெய்வம். அந்த அன்னை பாகவத சாரமான அர்த்த ஸ்லோகத்தை எனக்கு உபதேசித்தாள். அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் துவாபர யுகத்தில் பாகவதமாகப் போகிறது என்றார். உடனே ப்ரம்மன் அந்த மந்திரத்தை விஷ்ணுவிடமிருந்து உபதேசம் பெற்றார். ப்ரம்மனிடமிருந்து நாரதரும், நாரதரிடமிருந்து நானும் உபதேசம் பெற்றேன். அதை நான் தேவி பாகவதமாக எழுதினேன். அதை நீ என்னிடம் உபதேசம் பெற்றுப் படிப்பாயாக என்றார் வ்யாஸர்.

 

11.  தேவ்யா மஹத்வம் கலு வர்ண்யதே த்ர

யத்பக்திமாப்தஸ்ய க்ருஹே பந்தஹ

  யத்பக்தி ஹீனஸ்த்வக்ருஹேSபி பத்தோ

  ராஜாபி முக்தோ ஜனகோ க்ருஹஸ்தஹ

இந்த தேவி பாகவதத்தை நீ சிரத்தையுடன் படித்தால் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அன்னையே காரணம். அவள் ஆட்டி வைக்கும்படி ஆடும் பொம்மலாட்ட பொம்மை நாம். சூத்ரதாரி அவளே என்பது புரியும். அதனால் நீ தேவியை மனதில் நிறுத்திக் கொண்டு க்ரஹ்ஸ்தாச்ரமம் மேற்கொண்டால் பந்தப்பட மாட்டாய். இது நிச்சயம். இதற்கு உதாரணம் விதேக நாட்டு (மிதிலை) ஜனக மஹாராஜா.

 

12. விதேஹராஜம் தமவாப்ய ப்ருஷ்ட்வா

   ஸ்வதர்மசங்கா: பரிஹ்ருத்ய தீரஹ

   பலேஷ்வஸக்த: குரு கர்ம; தேந

   கர்மக்ஷ்ய: ஸ்யாத்; தவ பத்ரமஸ்து,

அவர் ராஜா, க்ரஹஸ்தன். ராஜ்ய பரிபாலனம் செய்பவர். ஆனாலும் எந்த பந்தமும் இல்லாத ஜீவன் முக்தன். ப்ரம்ம ஞானமுடைய ராஜரிஷி. சாந்த குணமுடைய யோகீ. அவர் உன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார் என்று சொன்னார். க்ரஹஸ்தன், ராஜா ஆனாலும் ஜீவன் முக்தன் என்று சொல்கிறாரே? இது எப்படி முடியும்? என்று சுகருக்குச் சந்தேகம் வருகிறது. ஜனக மஹாராஜாவை நேரில் சந்தித்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள் என்று வ்யாஸர் சொன்னார்,

 

13. ச்ருத்வேதி ஸத்ய : சுக ஆச்ரமாத்

   ப்ரஸ்தாய வைதேஹ,புரம் ஸமேத்ய

   ப்ரத்யுத்கத: ஸர்வஜனைர் ந்ருபாய

   ன்ய வேதயத் ஸ்வாக,மனஸ்ய ஹேதும்

தந்தையின் ஆசீர் வாதத்துடன் சுகர் மிதிலை  புறப்படுகிறார். அந் நாட்டு நுழைவாயிலில் நிற்கும் காவலாளி, சுகரைத் தடுக்கிறான். எங்களின் கேள்விக்குப் பதில் சொன்னால் மட்டுமே நகரின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறான். காவலாளியின் அனைத்து வினாவிற்கும் தகுந்த பதிலை சுகர் சொன்னபின் அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சுகருக்கு உபசாரங்கள் செய்து முடிந்த பின் ,அவர் ஜனக மஹாராஜாவிடம் ப்ரம்மசர்யம், க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாஸம் இவைகளுக்கான தர்மங்களைச் சொல்ல வேண்டும். க்ரஹஸ்தாச்ரமம் பந்தப்படுத்தாது. மனசு தான் காரணம் என்று என் தந்தை சொல்கிறார். அதனால் என் சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

 

14. க்ருஹஸ்ததர்மஸ்ய மஹத்வமஸ்மாது

   விஞாய தீமான் சுகோ நிவ்ருத்தஹ

   பித்ராச்ருமம் ப்ராப்ய ஸுதாம் பித்ருணாம்

   வ்யாஸேSதிஹ்ருஷ்டே, க்ருஹிணீம் சகார

      வ்யாஸர் சொன்ன அதே விளக்கங்களை ஜனகரும் சொல்கிறார். பந்தம் வேண்டாம் என்று, தபஸ் செய்ய காட்டிற்குச் சென்றாலும், ஒரு மானையோ, முயலையோப் பார்த்து ஆசைப்பட்டால் அதுவும் பந்தத்தை ஏற்படுத்தும். எதன் மேல் ஆசை வைத்தாலும் அது பந்தமே. மனதை எடுத்து வைத்துவிட்டு எங்காவது போக முடியுமா? வீடானாலும், காடானாலும் மனசு தான் காரணம். அதனால் க்ரஹஸ்தாச்ரமத்தால் பந்தம் வராது என்று சொல்ல சுகரும் மனக் குழுப்பம் நீங்கி தெளிவடைந்து தந்தையிடம் மீண்டும் சென்று திருமணத்திற்கு சம்மதம் தருகிறார். பித்ரு தேவதைகளின் புத்ரியான பீவரீ என்னும் கன்னிகையை கல்யாணம் செய்து கொள்கிறார்.

 

15. உத்பாத்ய புத்ராம்சசதுர: ஸுதாம்

   க்ருஹஸ்ததர்மான் விதினாSSசரன் ஸஹ

   ப்ரதாய சைனாம் முனயேSணுஹாய

   பபூவ காலே க்ருதஸர்வக்ருத்யஹ

க்ருஷ்ணன், கௌரப்ரமன், பூரிதன், தேவஸ்ருதன் என்ற நான்கு மகன்களும், கீர்த்தி என்ற ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். க்ரஹஸ்தாச்ரம தர்மப்படி வாழ்ந்து வருகிறார். மகன்களுக்குச் செய்ய வேண்டிய உபநயனம் போன்றவைகளையும் செய்வித்து, உரிய வயதில் மகளை அணுஹன் என்னும் மஹானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அவர்களுக்கு ப்ரமதத்தன் என்னும் மகனும் பிறக்கிறான்.

 

16. ஹித்வாSSச்ய்ரமம் தாத,மபீசசைல

   ச்ருங்கே, தபஸ்வீ ஸஹ,ஸோத்பதன் கே

   பபௌ பாஸ்வா,னிவ, தத்வியோக

   கின்னம் சிவோ வ்யாஸ,மஸாந்த்வ யச்ச

      தன் பிதாவின் விருப்பப்படி க்ரஹஸ்தாச்ரம கடமைகளைச் சரிவர முடித்து விட்டு, கைலாய மலைக்குச் சென்று த்யானம் செய்து, சித்தியும் அடைந்து, மலையினின்றும் எழும் உதய சூரியனைப் போல கைலாய மலையிலிருந்து மேலே எழும்பினார். அப்பொழுது கைலாய மலையில் இரண்டு சிகரம் இருப்பது போல் தோன்றியது. இவர் எழுந்த வேகத்தில் கைலாய மலையும் சிறிது அசைந்தது. அதன் பிறகு சுகர் ஆகாஸ ஸஞ்சாரியாய் ரிஷிகளால் துதிக்கப்பட்டு வந்தார். மகனைப் பிரிந்த வ்யாஸர் துயரம் தாங்காமல் கைலாயமலை வந்து மகனே! மகனே! என்று கதறி அழுத போது, பார்வதி பரமேஸ்வரன் அவருக்குக் காட்சி தந்து "உன் மகன் யாரும் அடைய முடியாத ஆகாஸ சஞ்சார பதவி அடைந்திருக்கிறான். அவனால் உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது என்று ஆறுதல் சொன்னார். அப்படியும் வ்யாஸர் ஆறுதல் அடையாததால், வ்யாஸரின் அருகில் சுகர் சாயா ரூபமாக தோன்றும்படி அனுக்ரஹம் செய்து மறைந்தனர்.

 

17.  ஸர்வத்ர சங்கா,குலமேவ சித்தம்

   மமேஹ விக்ஷிப்,தமதீரமார்த்தம்;

   கர்த்தவ்யமூடோSஸ்மி, ஸதா சிவே!; மாம்

   தீரம் குரு த்வம்; வரதே! நமஸ்தே.

      இந்த ஸ்லோகத்தில் தேவி நாராயணீயத்தின் ஆசிரியர் தன் கருத்தைச் சொல்கிறார். நாம் எப்போதும் நல்ல செயல்களையேச் செய்ய வேண்டும் என நினைக்க வேண்டும். அதைச் செய்ய ஆரம்பிக்கவும் வேண்டும். அப்படி நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கும் போது, அதைச் செய்ய முடியாமல் மனத்தின் கவனம் வேறு திசையில் மாறும் போது, அந்த மனதிற்கு விக்ஷித்த மனம் என்று பெயர். இதைச் செய்தால் இப்படி ஆகுமோ, அதைச் செய்தால் அப்படி ஆகுமோ என்று சந்தேகத்துடன் குழும்பும் உறுதியில்லாத தீர்மானிக்க முடியாத மனம், சங்காகுல மனம். செய்யகூடியது எது, செய்யக்கூடாது எது என்று புரியாமல், இதைச் செய்யலாமா, அதைச் செய்ய வேண்டாமா என்று கலக்கம். அந்த மனதிற்குக் கர்த்தவ்ய மூடதா என்று பெயர். இதைப் போன்று குழுப்பங் சந்தேகங்களும் இல்லாத மனம் வேண்டும் என்றால் அதற்கும் தேவியின் அனுக்ரஹம் வேண்டும் என்று சொல்கிறார்

எட்டாம் தசகம் முடிந்தது

 

மஹாபாரத கதை

      இஷ்வாகு வம்சத்தில் மஹாபிஷன் என்று ஒரு ராஜா. அவன் 1000 அஸ்வமேத யாகமும், 100 வாஜபேய யாகமும் செய்து இந்திரபதம் அடைந்தான். ஒருநாள் அனைத்து தேவர்களுடன் மஹாபிஷனும் ப்ரம்மசபையில் கூடி இருந்த போது கங்கை மாதாவும் வந்திருந்தாள். திடீரென பெருங் காற்று வீச கங்கையின் மேலாடை சற்று விலக, அதைக் கண்டு மஹாபிஷன் கங்கையிடம் காதல் கொள்ள, கங்கையும் அவனை பிரியத்துடன் பார்த்தாள். இதைக் கண்ட ப்ரம்மன் அவர்களை பூமியில் பிறந்து சிற்றின்பங்களை அனுபவித்து, அதன் பின் புண்ணியங்களைச் செய்து பின் வாருங்கள் என்று சாபம் தந்தான்.

      இது இப்படி இருக்க அஷ்ட வஸுக்களும் பூலோகத்தைச் சஞ்சாரம் செய்து வரும் பொழுது, அஷ்ட வஸுக்களில் ஒருவரான தியா என்பவர் தன் மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் நந்தினி என்னும் காமதேனுவைக் கவர்ந்து சென்றார். நந்தினியைக் காணாத வசிஷ்டர், ஞான திருஷ்டியால் அறிந்து, தியாவை தெய்வத்தன்மை நீங்கி நீண்டநாள் மனிதனாக இருப்பாய் என்றும், தியாவிற்குத் துணை இருந்த மற்ற வஸுக்களை ஓர் ஆண்டு மனித ஜன்மம் எடுத்து, மீண்டும் தெய்வத்தன்மை அடைவீர்கள் என சாபம் தந்தார். சாபம் பெற்ற வஸுக்கள் கங்கைக் கரையில் வந்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்திலிருந்து சாபம் பெற்ற கங்கை எதிரே வர, "தாங்கள் சந்தனு மஹாராஜாவை மணந்து கொண்டு, எங்களை குழந்தைகளாகப் பெற்று, இந்த கங்கை நதியில் விடுவீர்களானால் நாங்கள் சாப விமோசனம் பெறுவோம் " என்று சொல்ல கங்கையும் சம்மதித்தாள்.

      ஒரு நாள் குரு வம்சத்து அரசனான ப்ரதீபன் கங்கை நதிக்கரையில் சூர்ய நமஸ்காரம் செய்யும் பொழுது, கங்கை ஒரு அழகான பெண் உருவம் கொண்டு அவனது வலது துடையில் உட்கார்ந்தாள். ப்ர்தீபன் "பெண்ணே! நீ யார்? என்று கேட்க, கங்கையும் தான் அவனை மணக்க விரும்புவதாகக் கூறினாள். உடனே அவர் சொன்னார் "அம்மா! வலதுடையில் அமரத்தக்கவர்கள் புத்ரன், புத்ரி, மருமகள் அல்லாவா? எனவே நீ என் மகனுக்கு மனைவி ஆவாய்" என்று சொன்னார். சாபம் பெற்ற மஹாபிஷன் இவருக்கு மகனாகப் பிறந்தார். அவர்தான் சந்தனு மஹாராஜா.

      சந்தனு மஹாராஜா ஒரு நாள் கங்கைக் கரையின் பக்கம் வந்து கொண்டிருந்த போது, கங்கை ஒரு பெண் உருவில் உலாவிக் கொண்டிருந்தாள். அவள் அழகில் சந்தனு மயங்கினான். அவளைத் தன் மனைவி ஆகவேண்டும் என்றும் கேட்டான். கங்கையும் இவன் தான் அந்த மஹாபிஷன் என்று அறிந்து கொண்டாள். நான் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டால் மணந்து கொள்கிறேன் என்றாள். 1. நான் எந்த செயலைச்  செய்தாலும், அது தீய செயலாக இருந்தாலும் அதற்குக் காரணம் கேட்கக் கூடாது. 2. என்னிடம் பிரியமில்லாத வார்த்தைகளை எப்பவும் பேசக் கூடாது. 3. என் செயலை எப்பொழுது நீ மறுக்கின்றாயோ அப்பொழுது உன்னை விட்டுப் பிரிந்து விடுவேன் என்றாள். அரசனும் சம்மதிக்க அவருடன் அரண்மனை சென்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். கங்கையும் கர்பவதி ஆகி முதல் புத்திரனைப் பெற்றதும் கங்கையில் விட்டாள். இப்படியாக ஏழு வஸுக்களையும் புத்திரர்களாகப் பெற்று கங்கையில் விட்டாள். சந்தனு மஹாராஜா வருத்தம் கொண்டார். தனது 7 பிள்ளைகளையும் ஜலத்தில் விட்டு விட்டாளே. இந்த 8 ஆவது குழந்தையையாவது நாம் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று சந்தனு மஹாராஜா நினைக்கும் பொழுது கங்கை நந்தினியை அபஹரித்த 8 வது வஸுவைப் பிள்ளையாகப் பெற்றாள். சந்தனூ மஹாராஜா கங்கையிடம் இந்தக் குழந்தையையாவது விட்டு விடு என்று வேண்டினார். கொடுத்த வாக்கினை மீறியதால் நான் உங்களைப் பிரியும் நேரம் வந்து விட்டது. அஷ்ட வஸுக்களுக்குச் சாப விமோசனம் தரவே நான் உங்களுக்குப் பத்தினி ஆனேன். நந்தினியைக் கவர்ந்த 8 ஆவ்து வஸுவே இந்தக் குழந்தை. தாயின்றி வளரும் பிள்ளை சுகம் பெற மாட்டான். இவன் தெய்வத்தன்மை கொண்டவன் என்பதை நீங்கள் அறியவேண்டும். இவனுக்கு  கங்கேயன் என்று பெயர். அதனால் நானே இந்தக் குழந்தையை யௌவனம் வரை வளர்த்து மீண்டும் நீங்கள் இவ்வனத்திற்கு வரும் போது தருகிறேன் .அப்பொழுது என்னையும் நீங்கள் காணலாம் என்று சொல்லி கங்கை மறைந்து விட்டாள்.

      சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வனத்திற்கு வேட்டை ஆடச் சென்றார். திடீரென கங்கையில் வெள்ளம் பெருக்கெடுப்பதையும் அதில் அதிரூப லாவண்யமான ஒரு சிறுவன் தனுஷை நாட்டி பாணங்களை விட்டு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டார்.. அவனை நீ யார்? என்று கேட்க அவன் பதில் கூறாமல் கங்கையில் மறைந்தான். சந்தனு தன் மகனையும் கங்கையையும் நினைத்தார். கங்கையும் உடனே தோன்றினாள். உங்கள் மகன் உங்கள் வம்சத்திற்குக் கீர்த்தியையும், அழியாத புகழையும் தர வல்லவன். இதோ காங்கேயனை உங்களிடம் ஒப்படைத்தேன் என்று சொல்லி கங்கை மறைந்தாள். காங்கேயனுக்கு இளவரசு பட்டம் கட்டி சந்தனு மகிழ்ச்சியுடன் இருந்தார்.

      சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வேட்டையாட வனம் சென்றார். தெய்வாதீனமாக  கங்கை கரை ஓரம் அடைந்தார். அங்கு சுகந்த பரிமள வாசனைக் காற்று வீசியது. இதுவரை அறியாத இந்த மணம் எங்கிருந்து வீசுகிறது? என அதன் வழியே சென்றபோது யமுனை நதிக் கரையில் ஒரு அழகிய  பெண்ணைக் கண்டார். அவள் அழகில் மயங்கி "நீ யார்?" என வினவ, அவள் தான் வலைஞர் தாசனின் மகள் என்று சொன்னாள். சந்தனு மஹாராஜா அவளைத் தன் துணைவியாக வேண்டும் என்று கேட்க, அவளும் தன் தந்தை சம்மதித்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றாள். அந்த மீனவனும் தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளை ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொல்ல, காங்கேயன் இருக்க இது எப்படி சாத்யம் என்று, அரண்மனை திரும்பி காதல் வயப்பட்டு மனச் சோர்வுடன் இருந்தார். தந்தையின் துயர் தீர்க்காத மகன் இருந்தும் பயன் இல்லை என்று, மந்திரி ப்ராதானிகள் மூலம் தந்தையின் துயருக்குக் காரணம் அறிந்து, சத்யவதியின் தந்தையை சந்தித்து, சத்யவதியின் பிள்ளைகளே ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்வார்கள் என்றும், தான் விவாஹம் செய்து கொள்வதில்லை என்னும் பீஷ்ம விரதத்தை அனுஷ்டித்தேன் என்றும் சத்யம் செய்து சத்யவதியை தந்தைக்கு மணம் செய்வித்தார். சந்தனுவிற்கு சத்யவதிக்கு முன் வ்யாஸர் பிறந்த செய்தி தெரியாது.

      சந்தனு சத்யவதிக்கு சித்ராங்கதன், விசித்ரவீரியன் என இரு மகன்கள் பிறந்தார்கள். வாரிசு இல்லாமல் அவர்கள் இறந்து போனதால், வ்யாஸரை ப்ரார்த்தித்து, மூத்த மருமகளிடம் சம்போகிக்கச் செய்தாள். ,அவள் வ்யாஸரின் நகம் முடி கண்டு அஞ்சி கண்ணை மூடிக் கொண்டதால் குருடனாக திருதராஷ்டிரனையும், இளைய மருமகள் நாணத்தால் தன் உருவம் காட்டாமல் வெண்மை வர்ணம் பூசிக்கொண்டதால், நீங்காத வெண்மை நிறமுடைய வ்யாதி கொண்ட பாண்டுவையும் பெற்றெடுத்தார்கள். குருடனும் ,வியாதியாளனுமாகப் பிறந்ததால் அரசுரிமைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்று, மீண்டும் இளைய மருமகளை வ்யாஸரிடம் அனுப்பினாள். ஆனால் அவளோ தன்னுடைய தாதியை அனுப்பினாள். அவள் வ்யாஸரிடம் முழு மனதுடன் சென்றதால், தர்மாத்மாவும், ஞானமுடையவரும் ஆசாரசீலருமான, யமனின் அம்சமான விதுரர் பிறந்தார். பின் பாண்டுவிற்கு முடி சூட்டி, விதுரரை மந்திரியாக்கி பீஷ்மர் ஆணைப்படி அரசாளும்படிச் செய்தாள் சத்யவதி.

      திருதராஷ்ட்ரன் சௌபலை, காந்தாரி என இருவரைத் திருமணம் செய்து கொண்டார். சௌபலைக்கு யுயுத்ஸு என்னும் மகனும், காந்தாரிக்கு துரியோதனனுடன் 100 பிள்ளைகளும் பெற்றாள். பாண்டுவுக்கு குந்தி, மாத்திரி என இரு மனைவியர்கள். குந்தி திருமணத்திற்கு முன் துர்வாஸருக்குப் பணிவிடை செய்து அவர் மகிழ்ச்சி அடைந்ததால், குந்திக்கு சில மந்திரங்களை உபதேசம் செய்தார். சில நாள் சென்று குந்தி தான் அறிந்த மந்திரத்தின் மகிமையை அறிந்து கொள்ள அதில் ஒரு மந்திரத்தை உச்சரித்த பொழுது, சூர்ய பகவான் தோன்றி, அவளை கர்பவதியாக்கி, அவளுக்கு கவசகுண்டலத்தோடு கூடிய கர்ணனை மகனாகக் கொடுத்தார். குந்தி திருமணம் ஆகாது பிறந்த குழந்தை என அஞ்சி, அதை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட, அது அதிரதன் என்னும் தேர்ப்பாகன் கையில் கிடைத்தது. அக்குழந்தையே கர்ணன்.

      பின் பாண்டு குந்தி, மாத்திரி இருவரையும் மணந்து கொண்டு, ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற போது, குந்தமென் என்னும் முனிவர், மான் உருவத்தில் தன் மனைவியைப் புணரும் போது, மிருகம் என்று எண்ணி பாணத்தை விட்டான். அவர் நீ உன் மனைவியைப் புணரும் பொழுது மரணம் அடைவாய் எனச் சாபம் தந்தார்.

      ஒரு நாள் பாண்டு கங்கைக் கரை வழியே தன் மனைவியருடன் போகும் பொழுது, ஒரு ஆஸ்ரமத்தில் முனிவர்கள்" அபுத்ரஸ்யகதிர்நாஸ்தி" அதாவது புத்திரன் இல்லாதவனுக்குக் கதி இல்லை எனச் சொல்வதைக் கேட்டு, குந்தியிடம் "என்னால் உனக்குப் புத்திரபாக்யம் இல்லை. அதனால் இந்த முனிவரிடம் சென்று புத்திர பாக்யம் பெறுவாய்" என்று சொன்னார். அதற்குக் குந்தி தான் துர்வாஸரிடம் உபதேசம் பெற்றதைச் சொல்லி, யமதர்மராஜனை நினைத்து மந்திரத்தைச் ஜபிக்க தருமரையும், வாயுபகவானிடம் பீமனையும், இந்திரனிடம் அர்ஜுனனையும் பெற்றெடுத்தாள்மாத்திரிக்கு அஸ்வினீ தேவதைகளின் மந்திரத்தை உபதேசிக்க, அவளும் நகுல, சகாதேவரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் பாண்டு புத்திரர்கள் எனப்பட்டனர். ஒரு நாள் மாத்திரியிடம் பாண்டு சுகிக்கும் பொழுது மரணம் அடைந்தார். நகுல சகாதேவரை குந்தியிடம் ஒப்படைத்து விட்டு மாத்திரியும் நாயகனுடன் மரணம் அடைந்தாள். குந்தியோடு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் சென்றனர். பாண்டுவின் சாபம் தெரிந்தவர்கள் குழந்தைகளைச் சந்தேகிக்க, குந்தியின் வேண்டு கோளுக்கு இணங்கி, யமன் முதலானோர், இக்குழந்தைகள் தேவ அம்சம் கொண்டவர்கள் என்று சொல்ல, இது சத்தியம் என்று குழந்தைகளை அன்புடன் நடத்தி வந்தனர். பாண்டவர்களுக்கு த்ரௌபதி மனைவியானாள். அவள் பொதுவாக இருந்தாலும் மஹா பதிவிரதை. அவளுக்கு 5 குழந்தைகள். கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்து அபிமன்யுவைப் பெற்றான். அவன் மனைவி உத்தரை. பாரத யுத்தத்தில் த்ரௌபதியின் 5 மகன்களும், அபிமன்யுவும் இறந்தார்கள். உத்தரையின் மகனை அஸ்வத்தாமா தன் பாணத்தால் மாய்த்தார். இதை அறிந்த கிருஷ்ணன் அக்குழந்தைக்கு உயிர் கொடுத்தார். தன் குலம் அழியும் காலத்தில் பிறந்ததால் இவன் "பரீக்ஷித்" என்று பெயர் கொண்டான். பிறகு சிலகாலம் பாண்டு புத்திரர்களிடம் இருந்துவிட்டு திருதராஷ்ட்ரர் தன் மனைவி, விதுரர் இவர்களுடன் ஆரண்யம் சென்ற போது குந்தியும் அவர்களுடன் சென்றாள்.. தாயைக் கனவிவிலே கண்ட தருமர் தன் சகோதரர்கள் ,உத்திரை, நகரத்தார் சூழ ஆரண்யம் சென்று , சதயூபர் ஆஸ்ரமத்தில் அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அங்கு விதுரர் இல்லாததால் கங்கைக் கரை வழியே ஆரண்யம் சென்று, யோகத்திலிருக்கும் விதுரரை நமஸ்க்கரித்தார். தருமர் பலமுறை அழைத்தும் அவர் காதில் விழாத நிலையில், விதுரர் முகத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி அது தருமருடைய முகத்தில் சென்று மறைந்தது. இருவரும் யமன் அம்சத்தினர் ஆனதால் தருமரிடம் சென்று ஒன்றியது. இதுபோல் தருமரும் யமதர்மனிடம் அடக்குவார். வ்யாஸரும், நாரதமுனிவரும் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டதும் குந்தி கர்ணனையும், காந்தாரி தன் 100 பிள்ளைகளையும், சுபத்ரை அபிமன்யுவையும் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். வ்யாஸர் இவர்களது விருப்பத்தைக் கேட்டு மனம் இரங்கி, தேவியை த்யானித்து, அன்னையின் கருணையினால் அனைவரும் அவர்கள் முன் தோன்றிப் பின் மறைந்தார்கள். பாண்டவர்கள் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் சென்றனர். பிறகு திருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி மூவரும் காட்டிற்குச் சென்று தீயில் ப்ரவேசித்தனர். கௌரவ வம்சம் அழிந்தபின் யாதவர்களும் பிராமண சாபத்தால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு அழிந்தனர். பலராமனும் தேகத்தை விட்டார். கிருஷ்ணனும் வேடனின் பாணத்தால் இறந்து போனார். கிருஷ்ணன் இறந்ததைக் கேட்டு வசுதேவரும், பலராமருடன் ரேவதியும், கிருஷ்ணனுடன் அவரது மனைவியர் ருக்மிணி, சத்யபாம, சாம்பவி அனைவரும் இறந்தனர். அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று அங்குள்ள அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியதும், துவாரகை ஜலத்தில் மூழ்கிப் போயிற்று. கோபிகா ஸ்த்ரீகள் திருடர்களால் துன்பம் அடைந்து இறந்து போயினர். அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தை அனிருத்ரன் மகன் வஜ்ரனுக்குப் பட்டாபிஷேகம் செய்தான். தருமரும் உத்தரையின் மகன் பரீக்ஷித்திற்கு அஸ்தினாபுர ராஜ்ய பரிபாலம் தந்து விட்டு வனத்திற்குச் சென்றார். இமயமலைச் சாரலில் உள்ள வனத்தில் பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் அடைய வேண்டிய கதியை அடைந்தனர்.

      பரீக்ஷித்து பரிபாலனம் செய்து வரும் போது ஒரு நாள் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். பசி, தாகம் இரண்டும் அவனை வாட்ட, நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகியைப் பார்த்துத் தண்ணீர் கேட்டான். அவர் நிஷ்டையில் இருந்ததால் எந்த பதிலும் இல்லாததால்  கோபம் கொண்டு அங்கு இறந்து கிடந்த ஒரு பாம்பை அவர் கழுத்தில் சுற்றினான். அப்பொழுதும் பதில் இல்லை.. சுற்றிய பாம்பால் அவர் கழுத்தைப் பற்றி இழுத்தான். பயன் உண்டா? இல்லை. அவர் யோக நிலையிலிருந்து மாறவில்லைபசுவின் வயிற்றில் பிறந்த  மஹா தபஸ்வியான அவரது மகன் அங்கு வந்தார். தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் பார்த்தான். உடனே கோபம் கொண்டு 'என் தந்தையின் கழுத்தில் இறந்த இந்த பாம்பைச் சுற்றியவன் இன்னும் 7 நாட்களில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் (பாம்பு) கடித்து இறப்பான்" என்று சாபம் தந்தார். முனிகுமாரன் தந்த சாபத்தை அறிந்த அரசன், எப்படியாவது அதற்குப் பரிகாரம் தேடவேண்டும், இல்லையெறால் சாபம் பலித்துவிடும் என்று, பண்டிதர்களை அழைத்து அதற்கு வழி தேடினான். புத்திமான்களின் உபாயம் நிச்சயம் சித்தியாகும் என்று ஒரு உதாரணம் சொன்னான்.

      ஒரு சமயம் ஒரு ரிஷிபத்னீ விஷம் தீண்டி இறந்து விட்டாள். ஆனால் அவள் கணவனான ருரு மஹரிஷி தன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தார். எனவே முயற்சி இருந்தால் காரிய சித்தி கிடைக்கும். பிருகு மஹாமுனிவரின் பத்னி புலோமை என்பவள். அவர்களது மகன் யவனன். யவனனின் மனைவி சுகன்யை, இவள் சர்யாதி என்னும் அரசனின் மகள். இவர்களது மகன் பிரமாதி. பிரமாதியின் மனைவி பிரதாபி. ருரு மஹரிஷி இவர்களின் புதல்வன். இவர் மேனகையின் பெண்ணைக் கண்டு விருப்பம் கொண்டார். மேனகை என்னும் கந்தர்வப் பெண் விசுவாவசு என்னும் கந்தர்வனோடு நதிக்கரையில் கிரீடித்து கர்பமடைந்தாள். மேனகை ஸ்தூலகேசருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு ஒரு அழகானப் பெண் குழந்தையை பெற்றுவிட்டுத் தன் உலகம் சென்றாள். அதற்குப் பிரமத்வரை என்று பெயர். ருரு மஹரிஷி பிரமத்வரைக் கண்டு மோகித்துத் தன் தந்தையிடம் தன் விருப்பத்தைக் கூறினார். இரு மஹரிஷிகளும்  ஒன்று கூடி திருமணத்தை நிச்சயித்தனர். அதுசமயம் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்த பிரமத்வரை, விஷம் தீண்டி இறந்தாள். அங்கு வந்த கணவனாக வேண்டிய ருரு மஹரிஷி தானும் மிகவும் வேதனை அடைந்து தானும் உயிர்விட நினைத்தார். துர் மரணம் மேல் உலகத்திலும் தன்னை விரும்பியவளுடன் சேர்க்காது என்று நினைத்து, ஆற்றில் இறங்கி ஸ்நானம் செய்து கையில் நீரை எடுத்து "நான் பக்தியுடன் இதுநாள் வரை சகல காரியங்களையும் அதாவது, ஆராதனை, பூஜை, ஹோமங்கள், ஜபம், காயத்ரி ஜபங்கள் போன்றவைகளை, முறைப்படிச் செய்திருந்தால் என் பிராண நாயகி உயிர் பெற்று எழ வேண்டும். இல்லையென்றால் நான் என் உயிரை விடுவேன்" என்று இஷ்ட தெய்வத்தை வேண்டி ஜலத்தை பூமியில் விட்டார். ருருவின் நம்பிக்கையைப் பார்த்து கால தூதன் "உன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தால் அவள் உயிர் பெறுவாள்" என்றார். அவரும் அப்படியே செய்தார். காலதூதன் தர்மராஜனிடம் சென்று நடந்ததை சொல்ல, அவரும் மனம் இரங்கி பிரமத்வரையை உயிர்ப்பித்தார். ருரு கால தேவனுக்குத் தன் நன்றியைச் சொன்னார்." நீ உயிரை எடுப்பவன் அல்ல. கொடுப்பவன்" என்றார்.

      ருரு மஹரிஷியின் நம்பிக்கைப் போல் தானும் ஏதேனும் வழி தேட வேண்டும் என நினத்துத், தன்னை காப்பாற்றக் கூடிய மணிமந்திர ஔஷதங்களினாலேயும், கவசம் போன்ற மந்திரிகளின் யோசனைப்படியும், 7 மதில்கள் கொண்ட ஒரு கோட்டையை அமைத்து அதில் மந்திரிகளுடன் குடி புகுந்தான். ஔஷதங்களில் வல்லமையுடையவர்களையும், அவர்களின் தொழிலைச்  சரிவரச் செய்ய கௌரமுகர் என்ற மஹரிஷியையும் ஏற்பாடு செய்தான். பிராமணோத்தமர்களை அங்கு இருக்கும்   அனைவரையும் சோதிக்கும் படியும், மந்திரி குமாரர்களை உப்பரிகையில் யாரும் போகாது இருக்கவும், கோபுரத்வாரத்தில் யானைகளைக் கட்டி அங்கு வரும் காற்றினை காதசைவால் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டு கோட்டையின் உள்ளிருந்து அரசாக்ஷி செய்தான். அப்பொழுது மந்திர வித்தை அறிந்த கஸ்யபன் என்னும் பிராமணன், அரசன் இருக்கும் இடமான கோட்டைக்குப் போக நினைத்தான். அந்த சமத்தில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் நாக லோகத்திலிருந்து பூலோகம் வந்தான். ஒரு பிராமணன் போல் வேஷம் தரித்து, கஸ்யபரைப் பார்த்து, அவர் எங்கு போகிறார் என்றும் கேட்டான். கஸ்யபர்" பரீக்ஷித்து மஹாராஜாவை தக்ஷகன் என்னும் பாம்பு கடிக்கப் போகிறது. அந்த விஷத்தால் ராஜா இறக்காமல் இருப்பதற்கான மந்திர சித்தி என்னிடம் உள்ளது அதனால் நான் அங்கு போகிறேன் என்று சொன்னார். உடனே சர்பராஜன் " நான் தான் தக்ஷகன். அவரைக் கடிக்கவே நான் போகிறேன். உம்மால் அவரைக் காப்பாற்ற முடியுமா? உமக்கு அந்த சக்தி உள்ளதா? நீர் பேசாமல் திரும்பிப் போய்விடும்" என்றார். கஸ்யபர் "என் மந்திர பலத்தால், சக்தியால் நான் அவரைப் பிழைக்க வைப்பேன்" என்றார். சர்பராஜன் ஒரு மரத்தைக் கடித்து சாம்பலாக்கினான். உடனே கஸ்யபர் அந்த சாம்பலை ஒன்று திரட்டி,கையில் நீரை எடுத்து மந்திரத்தை ஜபித்து அதன் மீது தெளித்தார். உடனே அந்த மரம் வளர்ந்து இலை, பூ காய், பழங்களுடன் ஓங்கி வளர்ந்தது. தக்ஷகன் அவரின் மந்திர சக்தியின் வல்லமையை அறிந்தான். "நீவீர் அந்த ராஜாவைக் காப்பாற்றுவதால் என்ன லாபம் அடையப் போகிறீர்?" என்று கேட்டான். கஸ்யபரும் தனம் வேண்டியே இதைச் செய்யப் போகிறேன். என்றார். தக்ஷகன் தான் அவருக்கு வேண்டிய அளவு பணம் தருவதாகச் சொன்னான். கஸ்யபர் யோசித்தார். தன்னுடைய ஞானத்தால் இது தவிர்க்க முடியாத மரணம் என்று அறிந்தார். அதனால் தக்ஷகனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டுத் தன் இருப்பிடம் திரும்பினார்.

      இந்த பரீக்ஷித்து மஹாராஜாவைப் போல் யாரும் இருந்ததில்லை. யாராவது செத்த பாம்பை பிராமணன் கழுத்தில் போடுவானா? இந்த பாபத்திற்கான கதியை அவன் அடைந்தே தீருவானே. மணி மந்திரங்களும். ஔஷதமும் இவனைக் காப்பாற்ற முடியுமா? மரணத்தை யாரால் வெல்ல முடியும்? தான தருமங்களால் ஸ்வர்கத்தை அடையலாம். இறப்பைத் தடுக்க முடியுமா? இதை அறியாவனாக இருக்கிறானே என்று தக்ஷகன்  நினைத்தான். பின் தன்னுடன் இருக்கும் நாகங்களை தவ வேடம் கொண்ட பிராமணர்களைப் போல் கையில் நல்ல உயர்ந்த பழங்களுடன் அரண்மனை நோக்கிச் செல்லுங்கள் என்று சொல்லி, அந்த பழத்தினுள் கிருமி ரூபத்தில் புகுந்தான். அரண்மனைக்குச் சென்றவர்களை காவலாளி உள்ளே விடவில்லை. அரசனின் ஆயுளை வேண்டி மந்திரித்துக் கொண்டுவந்த பழம் இது. என்று கூற, அவர்கள் அரசனிடம் தெரிவித்தனர். பழத்தைக் கொண்டு வாருங்கள். நாளை அவர்களைச் சந்திகிறேன் என்று அரசன் சொல்லி அனுப்பினார். அரசன் அவர்கள் கொடுத்த பழத்தில் அழகான ஒரு பழத்தை எடுத்து இரண்டாகப் பிளந்தான். அதில் ஒரு புழுவைக் கண்டான். சூரியன் மறையும் நேரம் இது. விஷத்தால் பயம் இல்லை என்று சொல்லி அந்த புழுவைத் தன் கழுத்தில் விட்டான். தக்ஷகன் தன் உருவத்தை எடுத்து அவரின் கழுத்தைக் கடித்தான். அரசனைத் தன் விஷ அக்னியால் தகித்து விட்டுச் சென்றுவிட்டான். சாபத்தினால் விஷம் தீண்டி பரீக்ஷித்து மஹாராஜா இறந்தான்.

      அதன் பிறகு அவர் மகனான, குழந்தையான, ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள். ஜனமேஜயன் வேத சாஸ்திரங்களையும், தனுர்வித்தைகளையும் நீதி நூல்களையும் ஐயம் இன்றிக் கற்று அதன் படி அரசாண்டு வந்தான். காசி ராஜன் மகளான வபுஷ்டையை மணந்து கொண்டான். மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வந்தான்இந்த சூழ்நிலையில் உத்துங்கனென்னும் மஹரிஷி, பரீக்ஷித்தை கொன்ற தக்ஷகனைக் கொல்ல யாரை அணுகுவது என்று யோசித்து, அவன் மகனான ஜனமேஜயனிடம் சென்றார். அவனிடம் "ராஜாவே! உன் சத்ருவை நீ அறிந்து கொள்ளாமல் சிறு பிள்ளை போல் கவலையில்லாமல் சந்தோஷமாக இருக்கின்றாயே!" என்றார்யார் அந்தப் பகைவன்? என்று ஜனமேஜயன் கேட்க முழு விபரமும் சொன்னார். மந்திரிகளிடமும் விபரம் அறிந்து, கவிஜாதரின் சாபத்தால்தான் தக்ஷகன்  பிதாவைக் கடித்தான். அவனுக்குத் தன் பிதாவிடம் ஏதும் பகை இல்லை என்றும் அறிந்தான். அதனால் தக்ஷகன் என் தந்தைக்கு எதிரி அல்லவே? என்றான். அவர் சொன்னார் ராஜாவே! உன் தந்தையைக் காக்க வந்த அந்தணனை பணம் தந்து யார் திருப்பி அனுப்பியது? தக்ஷகன் தானே? அவன் எதிரியா? நண்பனா? என்றார்.

            ருரு மஹரிஷி தன் மனவியாகப் போகின்றவளைக் கடித்தததற்காகச் சர்பங்கள் எல்லாவற்றையும் கொன்று வந்தார். ஒரு சமயம் காட்டில் மிகவும் வயதான, பால் நிறமுள்ள இரண்டு தலைகளும் கொண்ட "டுண்டுபம்" என்னும் பாம்பை அடிக்கத் தடியை ஓங்கினார். அந்த சர்பம் " மஹரிஷியே! நான் என்ன தவறு செய்தேன்”? என்று கேட்டது. "உன் இனமே என் மனைவியைக் கடித்தது. அதனால் உங்கள் இனத்தைக் கொல்வதே என் சபதம்" என்றார்.' உன் மனைவியைக் கடித்த சர்பத்தைத் தானே கொல்ல வேண்டும். நான் என்ன சர்பமா? என்னை ஏன் அடித்தீர்? என்னைக் கொல்ல உம்மால் முடியுமா? என்றது. உடனே மஹரிஷி நீ யார்? என்று கேட்டார். அந்த சர்பம் சொல்லியது" எனக்கு மேககன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அக்னிஹோத்திரம் செய்யும் பொழுது பாம்பு போல் ஒன்றைப் போட்டு "பாம்பு! பாம்பு!" என்று அலறிக் கத்தினேன். அவனும் பயந்து நடுங்கி ஓடினான். பின்பு அது உண்மைப் பாம்பல்ல ,பொய்பாம்பு என்று அறிந்து "அட மூடனே! பொய்யான பாம்பைக் காட்டி என்னை பயம் காட்டினாயே. உண்மையான பாம்பின் ரூபத்தை அடைவாயாக" என்று சபித்தான். பின் நான் மன்றாடி மன்னிப்புக் கேட்டபடியால் ருரு மஹரிஷியால் உன் சாபம் நீங்கும் என்று கூறினான். அதன்படி என் சாபம் உம்மால் நீங்கியது. ' மஹரிஷியே! நான் ஒன்று சொல்கிறேன். நீர் எந்த ஜீவ ஜந்துக்களையும் கொல்லக் கூடாது. கருணை காட்ட வேண்டும்" என்று சொல்லி பிராமணன் உருவம் எடுத்தார். ருரு மஹரிஷியும் அன்று முதல் சர்பங்களைக் கொல்வதை விடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். “ருரு  மஹரிஷி தன் பத்தினியைக் கடித்ததற்காகப் பாம்புகளைக் கொன்றார். உன் தந்தையைக் கடித்த ஸர்பங்களை நீ கொல்லாவிட்டால் உன் தந்தைக்குத் துர்கதிதான். அதனால் நீ சர்பயாகம் செய்" என்று அந்த ஜனமேஜயனைச் சந்தித்த உத்துங்க மஹரிஷி  கூறினார். என் தந்தை நற்கதியை அடைய வேண்டும் என்று ஸர்ப யாகத்திற்கான, ஏற்பாடுகளைச் செய்து கங்கா தீரத்தில் யாகசாலை கட்டி யாகம் செய்ய ஆரம்பித்தான். இதை அறிந்த தக்ஷகன் இந்திரனிடம் அபயம் கேட்டான். இதைத் தன் தவ வலிமையால் உத்துங்க மஹரிஷி அறிந்து, அவர்களைத் தன் மந்திர சக்தியால் யாக சாலைக்கு ஓடி வரும்படிச் செய்தார். அப்பொழுது தக்ஷகன் ஆஸ்தீகர் என்னும் ரிஷியை சந்தித்து விபரம் சொல்ல, அவரும் யாகசாலை வந்து ஜனமேஜயனை சந்தித்தார். ஜனமேஜயனும் முனிவரே! நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க அவரும் யாகத்தை நிறுத்தும்படிச் சொன்னார். முனிவர் சொன்னதை எப்படி மறுப்பது? அதனால் யாகத்தை நிறுத்தினான். துக்க மடைந்த ஜனமேஜயன் வ்யாஸரைச் சந்தித்து துர்கதி அடைந்துவிட்ட என் தந்தைக்கு ஸ்வர்கம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? மேலும் இந்த ஆஸ்திக ரிஷி யார்? அவர் ஏன் யாகத்தை நிறுத்தினார்" என்று கேட்டார். வ்யாஸர் சொன்னார் "கேட்பதற்கு ஆச்சர்யமானதும் புண்யமானதுமான ஒரு புராணம் உள்ளது. அதைக் கேட்டால் மனச் சாந்தியும், உன் பிதாவிற்கு ஸ்வர்கலோகமும் கிடைக்கும். இதை என் மகனான சுகருக்கும் நான் உபதேசித்திருக்கிறேன். நீயும் கேட்டால் பரம சுகமும், நித்யத்வமும், சர்வ சம்பத்தும் கிடைக்கும். அதுதான் தேவீ புராணம்" என்றார். தேவீபுராணம் கேட்க நான் ஆவல் உடையவனாக இருக்கிறேன். இருப்பினும் அந்த ஆஸ்தீக ரிஷி யார்? ஏன் யாகத்தை நிறுத்தினார்? இந்த சர்பங்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? என ஜனமேஜயன் கேட்டான். வ்யாஸர் சொல்ல ஆரம்பித்தார்.

      ஜாத்காரு என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவர் ப்ரம்மச்சாரி. ஒருநாள் வனத்தில் செல்லும் போது அவருடைய பிதுர்க்கள் ஒரு கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பித்ருக்கள் "எங்கள் நிலையைப் பார்த்தாயா? நீ விவாஹம் செய்து நல்ல புத்திரனைப் பெற்றால் தான் நாங்கள் ஸ்வர்கம் செல்லமுடியும்" என்றார்கள். எனக்கு வருபவள் என் பெயரை உடையவளாகவும், என் மனப்படி நடப்பவளாகவும், என்னால் தேடப்படாதவளாகவும் இருந்தால் மணந்து கொள்வேன் என்றார் ஜாத்காரு மஹரிஷி.

      இது இப்படி இருக்க ஒரு நாள் காசிப மஹரிஷியின் பத்னிகளான கத்துரு, வினதை இவர்கள் சூரியனின் குதிரையின் நிறம் என்ன என்று சர்ச்சை செய்ய, விநதை அது வெண்மை நிறம் என்றாள். அவள் கத்துருவிடம் நீ இந்தக் குதிரையின் நிறம் என்ன என்று சொல்?அது வெண்மையாக இல்லை என்றால் நான் உனக்கு அடிமை என்றாள். நீ எனக்கு வேலைக்காரியாகத்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, கத்துரு தன் மகன்களான சர்பங்களை அழைத்து, சூரியனின் குதிரையை விஷ ஜ்வாலையால் கறுப்பாக்குங்கள் என்றாள். சில சர்பங்கள் மறுத்தன. உடனே அவள் நீங்கள் ஜனமேஜயன் செய்யப் போகிற யாகத்தில் வீழ்ந்து இறக்கக் கடவது என சபித்தாள். மற்ற சர்பங்கள் தாய் சொல்லைத் தட்டக் கூடாது என்று, ஆகாயத்தில் சென்று குதிரையின் வாலை சுற்றிக் கொண்டு, அதை கறுப்பு நிறம் போல் தோன்றச் செய்தது. கத்துரு  வினதையைப் பார்த்து நீ வெண்மை நிறம் என்று சொன்னாயே, அது கறுப்பாகவல்லவா இருக்கிறது? என்று சொல்ல, வினதையும் கறுப்பு நிறமான குதிரையைப் பார்த்துவிட்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். கத்துரு வினதயை சிறையில் அடைத்தாள். வினதை சிறையில் கஷ்டப்படுவதை அறிந்த அவளது மகன் கருடன் "தாயே நீங்கள் கவலையை விடுங்கள். நான் இருக்கிறேன்." என்றான். வினதை சொன்னாள் மகனே! நான் உன் பெரிய தாயின் அடிமை. அவளை நான் இப்போது அவள் சொல்லும் இடம் தூக்கிச் செல்லவேண்டும் இதுவே என் கவலை" என்றாள். நான் இருக்க கவலை ஏன்? என்று இருவரும் கத்துருவைப் பார்க்கச் சென்றனர். கருடன் "தாயே! உங்களை நான் தூக்கிச் செல்கிறேன் " என்று சொல்ல ஸர்பங்களும், கத்துருவும் அதன் மீது ஏறி அரைக் கணத்தில் கடற்கரைச் சென்றனர். கத்துரு மகிழ்ந்தாள். சமயம் பார்த்து கருடன் என் தாய் விடுதலை அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். இந்திரலோகம் சென்று அமிர்த கலசத்தைக் கொண்டுவா என்றாள். கருடனும் இதோ அமிர்த கலசம் என்று தர்பயைப் பரப்பி அதன் மீது கலசத்தை வைத்துவிட்டுத் தன் தாயை மீட்டுக் கொண்டு போய்விட்டான். ஸ்நானம் செய்த பின் அமிர்தம் அருந்தலாம் என்று சர்பங்கள் குளிக்கச் சென்றன. அந்த சமயம் இந்திரன் கலசத்தை எடுத்துச் சென்று விட்டான். சிதறி இருந்த அமிர்தத்தை சர்பங்கள் ருசிக்க, அவைகளின் நாக்கு இரண்டாகப் பிளந்தது. அந்த நேரத்தில் சாபம் கொண்ட வாசுகியும் மற்ற சர்பங்களும் ப்ரம்மனிடம் சரண் அடந்ததார்கள். அவர் வாசுகியின் தங்கையை ஜரத்காரு என்னும் மஹரிஷிக்குக் கல்யாணம் செய்து வையுங்கள், அவர்களுக்கு ஆஸ்திகன் என்னும் மகன் பிறப்பான். அவனால் உங்கள் மரண பயம் நீங்கும் என்று சொன்னார். அதன்படி வாசுகி ஜரத்காருவிற்குத் தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்தார். அவர் சொன்னார் அவள் எனக்கு விருப்பம் இல்லாததை எப்பொழுது செய்கிறாளோ அப்பொழுது நான் அவளைப் பிரிவேன் என்றார். ஒரு நாள் நான் இப்பொழுது தூங்கப் போகிறேன். என்னை எந்த காரணத்திற்காகவும் எழுப்பாதே என்றார். மாலை வந்தது. சந்த்யாவந்தனம் செய்ய வேண்டுமே? அது தர்மம் ஆயிற்றே என்று அவரை எழுப்பினாள். மஹரிஷி கோபம் கொண்டு சொல்லை மீறி விட்டாய். நான் போகிறேன். நீ உன் தமயனிடம் போ! என்றார். அவள் சொன்னாள் நமக்கு இன்னும் சந்தான பாக்யம் கிடைக்கவில்லையே? என்றாள். அவர் "அஸ்து" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவள் வாசுகியிடம் மீண்டும் போனாள். பத்தாவது மாதம் குழந்தை பெற்றாள். தந்தை "அஸ்து" என்றதால் ஆஸ்திகர் எனப் பெயர் கொண்டார். இவரின் தாய் சர்பத்தின் வம்ஸம் அல்லவா?அதனால் ஸர்பங்களைக் யாகத்தில் விழுந்து  இறக்காமல் காப்பாற்றினார். சில ஸர்பங்கள் யாகத்தில் இறந்ததற்கு அவைகளின் அன்னையான கத்துருவின் சாபமே காரணம். சில ஸர்பங்கள் பிழைத்ததற்குக் காரணம் ப்ரம்மாவின் அனுக்ரஹமே. அதனால் ஆஸ்திகரிடம் உனக்குக் கோபம் வேண்டாம் . அவரை பூஜிப்பாய் உனக்கு நன்மை உண்டாகும் என்றார். நீ பல புண்ணிய கர்மங்களும் தானம் ,தர்மங்கள் செய்தும் உன் தந்தை ஸ்வர்கம் அடையவில்லை. அதனால் தேவிக்கு கோவில் கட்டி ஆராதனைகள் செய்தால் சகல சம்பத்தும் கிடைக்கும். தேவி பாகவதம் கேட்பது யாகம் செய்யும் பலனைத்தரும். மனதில் தேவியை நினைப்பவன் பாக்யவான் ஆவான். சகல தேவர்களும் தேவியை ஆராதிக்கின்றனர். இது தேவியினால் விஷ்ணுவிற்கு உபதேசிக்கப் பட்டது. இதைப் படிப்பவரும் கேட்பவரும் எல்லா நன்மைகளும் அடைவார்கள். பித்ருக்களும் ஸ்வர்கம் சேர்வார்கள். எல்லா விருப்பமும் நிறைவேரும் என்று சொன்னார்

 

 

தசகம் 9

புவனேச்வரீ தர்சனம்

 

1.   ஏகார்ணவேSஸ்மின், ஜகதி ப்ரலீனே

  தைத்யௌ ஹரிர் ப்ரம்ம,வதோத்யதௌ தௌ

  ஜகான தேவி: த்வதனுக்ரஹேண

  த்வதிச்சயைவாSS,கமதத்ர ருத்ரஹ

      முன் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ப்ரளயத்தில் மூழ்கியது. எந்த ஜீவ ராசிகளையும் காணவில்லை. எங்கும் ஒரே ஜலமயம். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரம்மன் மட்டும் இருந்தார். ப்ரம்மனுக்குச் சந்தேகம் வந்தது. இந்த ப்ரளயத்தில் நாம் எப்படி உண்டானோம்? இந்த தாமரை எப்படி வந்தது? இதற்கு ஆதாரம் எது? பூமி இருந்தால் தானே தாமரை உண்டாகும்? எனவே முதலில் இந்த பூமியைக் கண்டுபிடிப்போம் என்று நினைத்தார். பல வருங்களாகத் தேடியும் பூமியைப் பார்க்க முடியவில்லை. அப்பொழுது "நீ தவம் செய்" என்ற குரல் கேட்டது. அதன்படி ப்ரம்மன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தார். மீண்டும் "நீ ஸ்ருஷ்டி செய் " என்ற குரல் கேட்டது. எதைச் ஸ்ருஷ்டிப்பது? இங்கு ஏதும் காண்வில்லையே? என யோஜித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு பெரும் சப்தம் கேட்டது. கண்முன் மது கைடபர்கள் நின்றுகொண்டு ப்ரம்மனை வலுச் சண்டைக்கு இழுத்தனர். ப்ரம்மன் பயந்து நடுங்கி, தாமரைத் தண்டை பிடிதுக் கொண்டு இறங்கி பீதாம்பரதாரியான விஷ்ணுவைப் பார்க்கிறார். அங்கு ஆதிசேஷன் மடியில் உறங்கும் மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருந்தார். பலமுறை அவரை அழைத்தும் எழுந்திருக்கவில்லை. அதனால் நித்ராதேவியை த்யானம் செய்தார். நித்ராதேவியிடமிருந்து விடுபட்டு 5000 ஆண்டுகள் மது கைடபர்களுடன் போர் செய்தார். அவர்கள் அழிந்த பிறகு ப்ரம்மனும் விஷ்ணுவும் இருந்த போது ருத்ரனும் அங்கு வந்தார்.

 

2.  ஏகோ விமானஸ்,தரஸாSSகத: காது

  த்ரிமூர்த்ய - விஞாத கதி ஸ்வதீயஹ

  த்வத்ப்ரேரிதா, ஆரு,ருஹு ஸ்தமேதே;

  சோத்பதன் வ்யோம்,னி ,சார சீக்ரம்

      மும்மூர்த்திகள் மூவரும் அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் இருக்கும் போது, தேவி அவர்கள் முன் தோன்றி ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்யும்படி அனுக்ரஹம் செய்தாள். எங்கும் ஒரே ஜலமயம். ப்ரஜைகள் யாருமே இல்லை எப்படி ஸ்ருஷ்டிப்பது? என்று கேட்டார்கள். தேவி புன்னகை செய்தாள். அப்பொழுது ஆகாஸத்திலிருந்து திடிரென ஒரு விமானம் வந்து இறங்கியது. யாருமே எதுவுமே இல்லாத இந்த இடத்தில் இந்த விமானம் எப்படி வந்தது என்று ஆச்சர்யத்துடன் பார்க்கும் பொழுது, அன்னை பகவதியானவள் "இதில் ஏறிக் கொள்ளுங்கள் அற்புதங்களைக் காட்டுகிறேன்" என்றாள். அந்த பகவதியைத் த்யானித்து மிக அழகான அந்த விமானத்தில் மும்மூர்த்திகளும் ஏறி அமர்ந்தனர். தேவி தன் சக்தியினால் விமானத்தை மேலே எழுப்பினாள்.

 

3.   வைமானிகாச்சோத்,கதய: ஸசக்ரம்

       திவம் ஸபத்மோத், பவஸத்ய லோகம்

       ஸருத்ர,கைலாஸ,மமீ ஸவிஷ்ணு

       வைகுண்ட மப்யுத்,புளகா அபச்யன்னு

      மனோவேகத்தை விட வேகமான அந்த விமானம் ஒரு இடத்தில் நின்றது. அங்கு பூமி, புஷ்பங்கள். குயில்கள், மரங்கள், வனம், நதிகள்,, புருஷர்கள், பெண்கள், ஆறுகள், மிருகங்கள், யக்ஞசாலைகள் அனைத்தும் பார்த்தனர். அங்கு பாரிஜாத மர நிழலில் காமதேனுவும், ஐராவதமும், மேனகை முதலிய அப்ஸரஸுக்களும், கந்தர்வர்களும், இந்திரன், வருணன், குபேரன், யமதர்மன், சூரியன், அக்னி ஆகியோர் இருந்தனர். ஆகா! இது ஸ்வர்கமல்லவா? இதை யார் நிர்மாணம் செய்தது என்ற சந்தேகம் வந்தது. அதற்குள் விமானம் வேறு ஓர் இடத்திற்குச் சென்றது. அங்கு சத்ய லோகமும், ப்ரம்மன் சபையும், அந்த சபையில் சர்வ தேவதைகளாலும் நமஸ்கரிக்கக் கூடிய ப்ரம்மனும் இருந்தான். கடல், நதிகள் மலைகள், தேவ ஸர்பங்கள் ஆகியவைகளும் இருந்தன. அந்த ப்ரம்மன் நான்கு தலைகளை உடையவராக இருந்தார். இந்த ஸ்ருஷ்டி கர்த்தா யார்? நாம் காண்பது கனவா? நிஜமா? என்று இப்படி யோஜிக்கும் போது விமானம் வேறு இடத்திற்குச் சென்றது. அங்கு யக்ஷர்கள், கிளி, குயில், வீணை, மிருதங்கம் போன்றவைகளின் இனிமையான சப்தத்தால் மிக மிக ரமணீயமாக இருந்தது. அதுவே கைலாஸம். அங்கு  ஐந்து முகம் உடைய சிவன் வினாயகர், சுப்ரமண்யன், நந்திதேவர், பூதகணங்கள் ஆகியவர்களுடன் இருந்தார். பின் விமானம் வைகுண்டம் சென்றது. அங்கு விமானத்தில் இருந்த நாராயணன், பீதாம்பர தாரியாக, நான்கு கைகளுடன், ஆபரணங்கள் அணிந்து கொண்டு, லக்ஷ்மிதேவி சாமரம் வீச, கருட வாகனத்தில் இருந்தார். நாம் தான் த்ரிமூர்த்திகள் என்று நினைத்தோமே இங்கும் இருக்கிறார்களே இப்படியும் இருக்குமா? என்று ஆச்சர்யப்படுகிறார்கள்

 

4.  அத்ருஷ்ட பூர்வானி தராம் ஸ்திரிமூர்த்தீன்

  ஸ்தானானி தேஷாம், அபி த்ருஷ்டவந்தஹ

  த்ரிமூர்த்தயஸ்தே , விமோஹமாபுஹு

  ப்ராப்தோ, விமானச்ச, ஸுதாஸமுத்ரம்

      இப்படி ஸ்வர்கம், ஸத்ய லோகம், கைலாஸம், வைகுண்டம் என்று இவைகளைப் பார்த்து ஆச்சர்யத்துக் கொண்டு, நாம் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும், போது விமானம் பாற்கடலை அடைகிறது.

 

5.  த்வத்ப்ரூல,தாலோல, தரங்கமாலம்

  த்வதீயமந்தஸ்,மித சாருஃபேனம்

  த்வன்மஞ்சுமஞ்சீர, ம்ருது ஸ்வநாட்யம்

  தவத்பாதயுக்மோபம, ஸௌக்யதம்

      அந்த பாற்கடலில் அங்கும் இங்கும், முன்னும் பின்னும் அசையும் அலைகளைப் பார்த்தால் அன்னையின் புருவம் போலவும், நீர்க்குமிழிகளைப் பார்த்தால் தேவியின் சிரிப்பு போலவும், அந்த அலை ஓசைகள் தேவியின் பாத சிலம்பொலி போலவும் இருந்ததாம். தேவியின் பாதத்திற்கு எத்தனை சிறப்பும் பெருமையும் உன்டோ அவை அனைத்தும் பாற்கடலுக்கும் உண்டு.

 

6.  தந்மத்யதஸ்தே, தத்ருசுர் விசித்ர

  ப்ராகாரநாநாத்ரு,லதாபரீதம்

  ஸ்தாநம் மணித் வீபம் அத்ருஷ்ட பூர்வம்

  க்ரமாத் சிவே! த்வாம் ஸகீஸமேதாம்

இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

      ஓம்  பாலார்க்க -ரவித்யுதி-மிந்துகிரீடாம்

      துங்ககுசாம் நயனத்ரயயுக்தாம் |

      ஸ்மேர-முகீம் -வரதாங்குச' பாசாம்-

      பீதிகராம் ப்ரபஜே புவனேசீம் ||.

 

அமிர்த கடலின் நடுவில் மணித்வீபம் என்னும் ஒரு தீவு. அதைச் சுற்றி 18 கோட்டைகள். அதன் நடுவில் நான்கு மண்டபங்கள் இருக்கின்றன. சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம். அந்த ஏகாந்த மண்டபத்தில் சிவவடிவமான ஒரு கட்டில். அந்த கட்டில் பரம அற்புதமாகவும், மங்களகரமாகவும், கோடிசூர்ய ப்ரகாஸத்துடன் ஜ்வலித்தது. அதில் மிக மிக அழகான ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் சிவந்த நிற வஸ்த்ரம், சிவந்த கண்கள், கோடி மின்னலைப் போன்ற தேஜஸ், சிவந்த அதரங்கள், கோடி ல்க்ஷ்மிகளும் கூட ஈடாக முடியாத மங்களத்துடன், அபயம், வரதம், பாசம் அங்குசம் ஆகியவைகளைக் கொண்ட  நான்கு கைகளுடன், ஹ்ரீம் காரமான சக்தி பீஜத்தைச் சொல்லும் பட்க்ஷிக் கூட்டத்துடன், ஸ்வர்ண மயமான கேயூரம், அங்கதம், ரத்னாபரணங்களை அணிந்தவளாகவும், ஸ்ரீசக்ரரூபமான காதணிகளை அணிந்தவளாகவும், ஹ்ருல்லேகை, புவனேசி என்னும் என்னும் பெயர்களைக் கொண்டவளாகவும், தேவ கன்னிகைகளால் சூழப்பட்டவளாகவும், எண்கோண வடிமான ஸ்ரீச்க்ர பீடத்தில் அமர்ந்திருந்தாள். அன்னையைப் பார்த்த மும்மூர்த்திகளுக்கும் யார் இந்தப் பெண்? மிகவும் அழகாக இருக்கிறாளே? ப்ரம்ம விஷ்ணு சிவன், ருத்ரர் அனைவரும் வணங்குகிறார்களே  என ஆச்சர்யப்பட்டனர்!

 

7.  ஞாத்வா த்ருதம் த்வாம் ஹரிராஹ - "தாதஹ!"

  த்ரிநேத்ர! தந்யா வயமத்ய நூநம்;

  ஸுதாஸமுத்ரோS; மநல்பபுண்யைஹி

  ப்ராப்யா ஜகந்மாத்ரு,நிவாஸ பூமிஹி

      எங்கும் நிறைந்தவளும், அல்பமதி உடையோர்களால் அறியமுடியாதவளும், யோகத்தால் அறிய கூடியவளும், புண்ணியம் செய்யாதவர்களால் வணங்கக் கூட முடியாதவளும், எல்லாவற்றிற்கும் ஆதியானவளும், ப்ரளய காலத்தில் அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு விளையாடுபவளும் ஆகிய இவள் மஹாமாயா. மஹாபூஜ்யா. இச்சா சக்தியும் அவளே. பராசக்தியும் அவளே. நித்யமும் அநித்யமும் அவளே. ஸர்வ பீஜ ஸ்வரூபிணி. அன்னையைச் சுற்றி இருக்கும் சக்திகள் அனைத்தும் தேவின் அம்சமே. நாம் பூர்வ ஜன்மத்தில் செய்த தவத்தின் பலனே இந்த ஸ்வரூப தரிசனம் நமக்குக் கிடைத்தது என்று நினைத்தனர்.

 

8.  ஸா த்ருச்யதே ரா,கிஜனை ரத்ருச்யா

  மஞ்சே நிஷண்ணா, பஹுசக்தியுக்தா;

  ஏஷைவ த்ருக; ஸர்வ,மிதம் த்ருச்ய,

  மஹேதுரேஷா கலு ஸர்வஹேதுஹூ

      புண்யம் செய்தவர்களுக்கு மட்டும் தான் மங்கள ஸ்வரூபியான இந்த தேவி தரிசனம் கிடைக்கும்அன்னையின் கட்டிலின் 4 கால்களாக ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா, ஸ்திதி கர்த்தாவான விஷ்ணு, ஸம்ஹார கர்த்தாவான ருத்ரன், திரோதன கர்த்தாவான ஈஸ்வரன். இதற்கு மேல் உள்ள பலகை சதாசிவ ப்ரம்மம். இதன் மேல் தேவி அமர்ந்திருக்கிறாள். இந்த ப்ரபஞ்சத்தின் இரண்டு கரங்கள் த்ருஷ், த்ருஷ்யம் ஆகும். த்ருஷ் என்பது கண்ணால் காண்பது. த்ருஷ்யம் என்பது அனுபவத்தால் உணர்வது. தன் மாத்திரைகள் 5. சப்தம் என்பது தன் மாத்திரை. அதைக் கேட்க முடியும். ஆனால் பார்க்க முடியாது. அது போல் ருசியை உணர முடியும் பார்க்க முடியாது. இந்த த்ருஷ்யம் மாறலாம் ஆனால் த்ருஷ்டிகள் மாறாது. அதைப் போல் நாம் தேவியை மனதில் காணலாம். நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படிப் பார்க்கிறோம். ஆனால் கண்ணால் பார்க்க முடியாது. அந்த தேவியே அனைத்திற்கும் காரணம்.

 

9.  பால: சயானோ வடபத்ர ஏக

ஏகார்ணவேSபச்யம்,இமாம் ஸ்மிதாஸ்யாம்;

       யயைவ மாத்ரா, பரிலாளிதோS

       மேநாம் ஸமஸ்தார்த்தி,ஹரம் வ்ரஜேமா.

      உலகம் முழுவதும் ப்ரளயத்தில் மூழ்கி இருக்கும் போது விஷ்ணு மட்டும் ஒரு சின்ன அரச இலையில் படுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவி ஒரு குழந்தையின் தொட்டிலை ஒரு தாய் ஆட்டுவது போல் ஆட்டினாள். எந்த ப்ரளயமும் இவளை பாதிக்கவில்லை. அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இதுதான் நம் அன்னை என்று நினைத்தாராம். இந்த சத்யத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் விஷ்ணுமட்டுமே.

 

10.  ருத்யாமஹே த்வாரி, யதி ஸ்துவாமஹ

   ஸ்தத்ர ஸ்திதா ஏவ வயம் மஹேசீம்:

   இத்யச்யு,தேனாபி,ஹிதே விமாநஹ

   ஸ்த்வத்கோபுர த்வாரம்,அவாப தேவி

      மும் மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு சொல்கிறார் "நாம் இந்த தேவியின் சந்திதானத்தை அடைந்து நமஸ்கரிப்போம். இந்த மஹாமாயா ஸ்வரூபிணியான தேவியின் பாதத்தின் அருகில் சென்று ஸ்தோத்திரம் செய்வோம். ஒரு சமயம் அன்னையின் தோழிகளான துவார பாலகிகள் தேவியின் அருகில் போக முடியாமல் நம்மைத் தடுத்தால், அங்கேயே நின்று கொண்டு ஒரே சித்தமாக அன்னையின் ஸ்தோத்ரங்களைப் படிப்போம்" என்றார்.

 

11.ஆயாம்யஹம் சித்த,நிரோதரூப

  விமான,தஸ்தே பதமத்,விதீயம்

  கேநசித் ருத்த,கதோ பவானி;

  த்வாமேவ மாதஹ! சரணம் வ்ராஜாமி

      ஏகாந்த த்யானம் என்னும் விமானத்தில் ஏறிச் சென்றால் தேவியிடம் போக முடியும். அதற்கான முயற்சியை இப்பொழுதே தொடங்குங்கள். தடைகள் வரக் கூடாது என்று அன்னையைச் சரணம் அடையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது விமானம் கோபுர துவாரத்தை அடைகிறது.

ஒன்பதாம் தசகம் முடிந்தது


 

 

தசகம்10

சக்தி ப்ரதானம்

1. ததோ விமாநா,தஜ விஷ்ணுருத்ராஹா

  த்வத் கோபுர த்வார்ய, வருஹ்ய ஸத்யஹ

  ஸ்த்ரிய: க்ருதாதேவி தவேச்சயைவ

  ஸவிஸ்மயாஸ், த்வந்,நிகடம் ஸமீயுஹு

      தேவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடனும் சந்தோஷத்துடனும், கோபுர துவாரம் அருகில் வந்தனர் மும்மூர்த்திகள். அவர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அப்பொழுது தேவி கோபுர துவாரத்தை அடைத்து விட்டு அவர்கள் மூவரையும் பெண்ணாக மாற்றினாள்.

 

2. க்ருதப்ரணா மா.ஸ்தவ பாதயுக்ம-

   -நகேஷு விச்வம் ப்ரதி பிம்பிதம்தே

  விலோக்ய ஸாச்சர்யம், அமோக வாக்பிஹி

  ப்ருதக் ப்ருதக் துஷ்டு,வு ரம்பிகே த்வாம்

      பெண்ணாக மாறிய அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சர்யமடைந்தனர். இது தேவியின் கருணையே என்று நினைத்து தேவியை நமஸ்கரித்தனர். அப்பொழுது கண்ணாடி போன்ற அன்னையின் பாத நகத்தில் ப்ரம்மாண்டங்களையும், ப்ரம்மாதி தேவர்கள் மூவரையும், அண்ட சராசரங்களையும், இந்த்ரன் வாயு, அக்னி, நாரதர், மேருமலை மற்றும் தாமரைமலரில் நான்முகனை சத்யலோகத்திலும், விஷ்ணுலோகத்தில் ஆதிசேஷன் மேல் மஹாவிஷ்ணுவையும், கைலாயத்தில் ருத்ரனையும், மற்றும் மது கைடபர்கள் ஆகிய அனைத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்தனர். அன்னையின் பாத தரிசனத்தில் அற்புதங்களைக் கண்டபடியே 100 வருடங்கள் ஆயிற்று. ஒருநாள் மஹாவிஷ்ணு தேவியை துதிக்கத் தொடங்கினார். மூலப்ரக்ருதியாகிய தேவியே! உனக்கு நமஸ்காரம். சித்தியும் நீயே! விருத்தியும் நீயே! உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம். உன் பாதத்தில் கண்ட காட்சியினால் நீயே ஸர்வ ப்ரபஞ்ச ஸ்வரூபிணீ என அறிந்தேன். மது கைடபரிடமிருந்து எங்களை காப்பாற்றியது நீயல்லவா? உன்னுடைய இருப்பிடமான மணித்வீபத்திற்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட பரமானந்தத்தை எப்படிப்பட்டது என்று சொல்ல முடியாது. அது எல்லையில்லாத ஓர் ஆனந்தம். உன்னுடைய தரிசனம் மஹாப்பெருமை உடையது. நாங்கள் தான் மும்மூர்த்திகள் என நினைத்திருந்தோம். ஆனால் உன் நகத்திலே மும்மூர்த்திகளைப் பார்த்தோமே! அவர்கள் வேறு நாங்கள் வேறா? எல்லாம் ஒன்றா? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எப்படித் தெரிந்து கொள்வது? புத்திமான்களிடம் நீயே புத்தியாகவும், சக்திமான்களிடம் நீயே சக்தியாகவும் இருக்கிறாய். வைராக்யம், செல்வம், கீர்த்தி, அழகு, சந்தோஷம் அனைத்துமே நீயாக இருக்கிறாய். இவைகள் அனைத்தையும் தருபவளும் நீதான். நீ மஹாவித்யா ஸ்வரூபிணீ. உன் பாதங்களில் நான் நமஸ்கரிக்கிறேன். சர்வ மங்களத்தையும் தரக்கூடிய மங்கள ரூபிணியே! உன்னை சரணாகதி அடைகிறேன் எனக்கு அகண்டஞானத்தைத் தருவாயாக! என்று தேவியை வணங்கினார்.

      அடுத்து ருத்ரன் துதிக்கிறார். ஹே! சிவே! உன்னுடைய மூன்று குணங்களே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் மூன்றிற்கும் காரணம். உன்னால் உண்டாக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் நாங்களா காரணம்? ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் உன் சக்தியே! விமானத்தில் நாங்கள் கண்ட உலகங்களை நாங்களா படைத்தோம்? பவானி! நீயே சொல்! எங்களைப் பெண்ணாக மாற்றியதால் அல்லவா உன் பெருமைகளை நாங்கள் அறிந்தோம்? ஜனன பந்தத்தை நிவர்த்தி செய்யும் உன் பாத தரிசனம் கிடைக்கப் பெற்றோம். யாகம் செய்வதாலோ, தவம் செய்வதாலோ, சமாதி நிஷ்டைகளினாலோ ஒருவன் முக்தி அடைய முடியாது. ஆனால் உன் பாதத்தை அலம்பிய நீரை உட்கொள்பவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும். அதனால் உனக்கு என்னிடம் கொஞ்சமாவது கருணை இருந்தால் நவாக்ஷரமந்திரத்தை எனக்கு உபதேசம் செய். என்னைக் கரையேற்றுவாய் என வேண்ட அன்னையும் உபதேசம் செய்தாள். ருத்ரரும் காமத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அந்த நவாக்ஷரி மந்திரதை பீஜாக்ஷரத்துடன் பேரானந்தத்துடன் ஜபிக்க ஆரம்பித்தார்.

      அடுத்து ப்ரம்மன் துதிக்கிறார். ஹே அம்ப! நான்கு பிரிவினை உடைய ஸர்வ ப்ரபஞ்சத்தையும் உன் கடைக்கண் பார்வையில் உண்டாக்கும் சக்தி கொண்டவள் நீ! என்னிடம் எதற்குப் படைக்கும் தொழிலைத் தரவேண்டும்? உனக்கு சாமர்த்யம் இல்லையா? மது கைடபர்கள் யுத்தத்தில் விஷ்ணுவால் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்ததா? அல்லது ருத்ரரால் கொல்ல முடிந்ததா? நீதானே எங்களக் காத்து அவர்களைக் கொன்றாய். நீ ஜனனம் மரணம் இல்லாத ஆதி என்பது உண்மைதான். ஆனால் தனக்கு மேல் ஒரு கடவுள் இல்லாதவராகவும் நித்யானந்தராகவும் இருக்கும் பரமசிவன் உன் லீலா வினோதங்களை ஆனந்தமாக பார்க்கிறார் என்று மெய்ஞானிகள் கூறுகிறார்கள். மாயா ஸ்வரூபிணியான நீயும் மாயாதீதரான பரமசிவனையும் தவிர மூன்றாவதாக யாரும் இல்லை என்பதே உண்மை. ஆனால் இது வேத வாக்யத்தைப் பொய் ஆக்குகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. வேதம் பரமசிவமானது "ஏகமேவாத்விதீயம்" என்று சொல்கிறது. ப்ரம்மம் ஒன்றுதான் என்று சொல்கிறது. அப்படியானால் அது நீயா? பரமசிவமாநீ ஆணா? பெண்ணா? அப்பொழுது அன்னை சொல்கிறாள்" நீங்கள் உள்ளே வரும் போது என்னை தேவீ என்ற உணர்வோடு வந்ததால் என்னை சக்தியாகப் பார்க்கிறீர்கள். என்னை சிவன் என்ற உணர்வோடு வந்திருந்தால் சிவனாகப் பார்த்திருப்பீகள். இந்த உண்மையை உங்களுக்கு உணர்த்தவே இந்த நாடகம். சிவனும் சக்தியும் ஒன்றேஎன்று சொன்னாள். உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் காலத்தில் ப்ரம்மா அன்னையின் ஆணைப்படி ஆணாகவோ பெண்ணாகவோ படைக்கிறார். ஸ்ருஷ்டியில் பேதம் இருக்கிறது. ஆனால் இறுதியில் லயம் அடையும் போது ஆண் பெண் என்ற வித்யாசம் இல்லை. அனைத்தும் ஒன்றே. இறந்த பின் செய்யும் சிரார்தங்களில் கூட ஆண் பெண் இருவருக்கும் மந்திரங்கள் ஒன்றே. அறியாமையே பேதத்திற்குக் காரணம்.

 

3. நுதிப்ரஸன்னா, நிஜஸர்க சக்திம்

  மஹாஸரஸ்வத்ய பிதாமஜாய

  (ரக்ஷார்த்த சக்திம்- ஹரயே மஹால-

  -க்ஷ்ம்யாக்யாம் லீலா,நிரதே! ததாத)

      ப்ரம்மாவிற்கு ஸ்ருஷ்டிக்கும் சக்தியை அன்னை தருகிறாள். அந்த ஸ்ருஷ்டி சக்தியின் பெயர் ஸரஸ்வதி. அவள் ரஜோ குணம் உடையவள். இவளை உன் மனைவியாகக் கொண்டு, உற்பத்திக்குக் காரணமான உத்பீஜம், அங்கஜம், ஏகஜம், சராயுஜம் ஆகிய நான்கு வகை பீஜங்களைத் தந்து. சத்யலோகம் சென்று, கால, கன்ம (கர்மம்,) சுபாவங்களுக்கு ஏற்ப ஸ்ருஷ்டியைத் தொடங்கு (நம்முடைய அடுத்த ஜன்மத்தை நாம் தான் நிச்சயிக்கிறோம் என்பது இதில் தெரிகிறது). உன்னுடைய ஸ்ருஷ்டிக்குத் தடங்கல் வரும் போது ஹரி அவதரிப்பார். உனக்கு உதவி செய்வார் என்று சொன்னாள். மஹாவிஷ்ணுவிற்கு ஸர்வ சம்பத்தையும் தருகின்ற மஹாலக்ஷிமியைத் தந்தாள். இவள் எப்போதும் உன் மார்பில் வீற்றிருப்பாள். மங்கள ஸ்வரூபிணீ. அனைவராலும் வணங்கக்கூடிய பெருமை கொண்டவள். அனைவரும் என்னிடமிருந்து தோன்றியவர்கள். அதனால் ஹரியும் சிவனும், ஒன்றே. இதை பேதப் படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்று சொன்னாள். இந்த விஷ்ணு சத்வகுணம் மேலோங்கியவராக பரமார்த்த சிந்தனையுடன் இருப்பார் என்று சொல்லி பீஜாக்ஷரத்தோடு நவாக்ஷரமந்திரத்தை ஜபியுங்கள். இது உங்களுக்கு சர்வ காரிய சித்தியையும் கொடுக்கும். என் முக்குணத்திலிருந்து தோன்றிய நீங்கள் எல்லோராலும் பூஜிக்கத் தக்க கடவுள் ஆவீர்கள் என்று சொன்னாள்.

 

4. கௌரீம் மஹாகாள்ய, பிதாம் தத்வா

  ஸம்ஹார சக்திம் கிரிசாய மாதஹ                          

  நவாக்ஷரம் மந்த்ர, முதீரயந்தீ

  பத்தாஞ்சலிம் ஸ்தான், ஸ்மித பூர்வமாத்த

      மஹாகாளிகௌரி என்னும் சக்தியை சிவனுக்குக் கொடுத்து, கைலாயம் சென்று அவளுடன் இருப்பாயாக! ரஜஸ், ஸத்வ குணங்கள் உம்மிடம் இருந்தாலும் நீர் தமோ குணம் மேலிட்டவராகவே இருப்பீர். ஸ்ருங்கார லீலைகளில் ரஜோகுணமும், அசுர வதத்தில் தமோ குணமும், தபஸ் செய்கையில் ஸத்வ குணமும் கொள்ளல் வேண்டும். உன்னிடம்  ஸகுணையாகவும்நிர்குணையாகவும் நான் இருப்பேன். ஆனால் நான் எதற்கும் காரணமாக மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் இடையூறு வரும் காலத்தில், நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் வருவேன். ஆதி புருஷரையும் என்னையும் நினைத்தால் காரியம் சித்தியாகும் என்று சொல்லி மறைந்தாள். மது கைடபர் வதத்தில் விஷ்ணுவிற்கு சக்தி தந்தது மஹாகாளிதான். அது தமோகுண சக்தியான புவனேஸ்வரி அவதாரம். ஆனால் இப்பொழுது சிவனுக்கு கொடுத்திருக்கும் மஹாகாளிகௌரி புவனேஸ்வரியின் அம்சம். அம்சத்தில் அவதாரத்தை விடசக்தி குறைவுதான்.

 

5. ப்ரஹ்மன் ஹரே ருத்ர மதீயசக்தி

  த்ரயேண தத்தேன, ஸுகம் பவந்தஹ

  ப்ரமாண்ட ஸர்க, ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச

  குர்வந்து மே சா,ஸநயா விநீதா

      ப்ரம்மாவிற்கு உற்பத்தி, விஷ்ணுவிற்கு காத்தல், ருத்ரனுக்கு அழித்தல் ஆகிய தொழில்களைத் தந்தாள். இவர்கள் அன்னையின் கட்டளைகளைச் செய்பவர்களே அன்றி சுதந்தரமானவர்கள் அல்லர். தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. அனைத்தும் அன்னையின் சக்தியே. நம்முடைய கண், காது, வாய், மூக்கு போன்ற எதுவும் அதனதன் வேலைகளைச் செய்ய சக்தி வேண்டும். தேவியின் அருள் வேண்டும். இல்லை என்றால் எதுவும் இயங்காது.

 

6. மான்யா பவத்பி: கலு சக்தயோ மே

  ஸ்யாத் சக்திஹீனம், ஸகலம் வினிந்த்யம்

  ஸ்மரேத மாம் ஸந்,ததம் ஏவமுக்த்வா

  ப்ரஸ்தாபயாமா,ஸித தாம்ஸ்த்ரீ மூர்த்தீன்

      இப்படி மும் மூர்த்திகளுக்கும். சக்தியையும் கொடுத்து, அவர்களை ஆதரவுடன் நடத்த வேண்டும் என்றும் சொன்னாள். பெண்ணிற்கு மரியாதையும் அணுசரணையும் ஆதரவும் கிடைக்காவிட்டால் அந்த குடுபம் விளங்காது. சக்தியும் அங்கிருந்து போய்விடுவாள். மீதமிருப்பது வெறும் ஜடம் தான். பார்வை இல்லாத கண்ணால் என்ன பயன்? கணவனும் மனையும் இணைந்து செயல்பட்டால் குடும்பம் க்ஷேமமடையும். மனைவியே கணவனின் ஜீவநாடி. அவள் இல்லையென்றால் அவனின் பாதி சக்தி போயிற்று. சக்தியால் தானே செயல்பட முடியும். ஆனால் சிவனால் முடியாது. என்னை மறந்தால் நான் உங்களைவிட்டுச் சென்று விடுவேன் என்றும் அன்னை கூறுகிறாள்.

 

7. நத்வா த்ரயஸ்தே, பவதீம் நிவ்ருத்தாஹா

  பும்ஸ்த்வம் கதா ,ருருஹுர் விமானம்

  ஸத்யஸ்திரோதா:, ஸுதாஸமுத்ரோ

  த்வீபோ விமானச்ச, திரோபபூவூ

      மும் மூர்த்திகள் மூவரும் அவரவர் சக்திகளுடன் தேவியை நமஸ்கரித்துவிட்டு, கோபுர வாசலை விட்டு வெளியே வந்ததும், அவர்கள் மீண்டும் முன்போல் ஆண்களாக மாறினார்கள். மீண்டும் விமானத்தில் ஏறி வந்து கொண்டிருந்த போது, தேவியும், மணித்வீபமும், சமுத்திரமும், விமானமும் அனைத்தும் மறைந்து போனது. இது என்ன அதிசயம் என நினைத்த போது, அவர்கள் முன்பு மது கைடபர்களுடன் எங்கு யுத்தம் செய்தார்களோ, அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

 

8. ஏகார்ரணவே பங்,கஜ ஸன்னிதௌச

  ஹதாஸுரே தே, கலு தஸ்திவாம்ஸ:

  த்ருஷ்டம்னு ஸத்யம்? கிமு புத்திமோஹஹ?

  ஸ்வப்னோ நு கிம்வே,தி வ்யஜாநன்

            நாம் விமானத்தில் சென்றது பொய்யா? நிஜமா? என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இன்னதென்று வருணிக்க முடியாததும்,  அடைய முடியாததும்,  எல்லையற்ற மகிமையுடன் கூடிய மஹாமாயா உருவினளாகி இந்த உலகம்  முழுவதையும் தேவி திகைக்க வைக்கிறாள்

 

9. ததஸ்த்ரயஸ்தே, கலு ஸத்யலோக                          

  வைகுண்ட கைலாஸ, க்ருதாதிவாஸாஹா

  ப்ரமாண்ட ஸ்ருஷ்ட்யா,திஷு தத்தசித்தாஹா

  ஸ்த்வாம் ஸர்வ,சக்தாம் அப ஜந்த தேவி

      மும்மூர்த்திகள் மூவரும் அவரவர் இடமான சத்யலோகம், விஷ்ணுலோகம், கைலாயம் சென்று, அன்னை நம்முடன் இருக்கிறாள் நமக்கு உதவி செய்வாள் என்று, அவரவர் தொழிலைச் செய்யத் துவங்கினர்.

 

10.ஸுதாஸமுத்ரம் தரளோற்,மிமாலம்

  ஸ்தானம் மணித்வீப, மனோபமம்தே

  மஞ்சே நிஷண்ணாம், பவதீம் சித்தே

  பச்யானி தே, தேவி நம: ப்ரஸித

      மும்மூர்த்திகள் தேவியைப் பார்த்தது கனவா? நினைவா? யாருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஆனால் எதைச் செய்யவும் தேவியின் அனுக்ரஹம் வேண்டும். அதற்கு அந்த தேவியை நாம் உபாசிக்க வேண்டும். அப்போது நம் மனக் கண்ணில் அன்னை தெரிவாள்.

பத்தாம் தசகம் முடிந்தது

தசகம் 11

ப்ரம்ம நாரதஸம்வாதம்

 

1. ஸ்ரீநாரத: பத்மஜமே,கதாஹா

  பிதஸ்த்வ்யா, ஸ்ருஷ்ட,மிதம் ஜகத் கிம்?

  கிம் விஷ்ணுநா வா, கிரிசேன வா கிம்?

  அகர்த்ருகம் வா, ஸகலேச்வர: கஹ?

       ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் அவரவர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஒருநாள்  நாரதர் சத்யலோகம் வருகிறார். அவர் ப்ரம்மாவிடம் கேட்கிறார் "இந்த உலகம் எப்படி உண்டானது? இதற்கு யார் காரணம்? இந்த கேள்வியை இதற்கு முன் பலரிடம் கேட்டிருக்கிறேன். சிலர் சிவன் என்றும், சிலர், விஷ்ணு என்றும், சிலர் சக்தி என்றும், சிலர் ப்ரக்ருதியில் வரும் மார்க்கம் தான் ஜகத் என்றும் சொல்கின்றனர். கர்த்தா இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது. எனவே நிச்சயம் யாராவது ஒருவர் இதை உண்டாக்கி இருக்க வேண்டும். அது யார்?" என்று கேட்கிறார்.

 

2. இதீரிதோஜ:, ஸுதமாஹ, ஸாது

  ப்ருஷ்டம் த்வயா, நாரத மாம் ஸ்ருணு த்வம்

  விபாதி தேவீ, கலு ஸர்வசக்தி-

  -ஸ்வரூபிணீ; ஸா, புவனஸ்ய ஹேதுஹு

       ப்ரம்மா நாரதரின் இந்தக் கேள்வியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அவர் சொன்னார் சர்வ சக்தி ஆகிய தேவியே இதற்குக் காரண கர்த்தா என்று சொன்னார்.

 

3. ஏகம் பரம் ப்ரம்ம, ஸத த்விதீயம்

  ஆத்மேதி வேதாந்த,வசோபிருக்தா

  ஸா புமான் ஸ்தரீ, ; நிற்குணா ஸா

  ஸ்த்ரீத்வம் பும்ஸ்த்வம், குணைர் ததாதி

       வேதாந்த வாக்யங்கள் ப்ரம்மம், பரமாத்மா என்பது ஒன்றுதான். அது இரண்டல்ல. அந்த ப்ரம்மம் தேவிதான். அந்த தேவி பெண்ணுமில்லை, ஆணுமில்லை. ஆனால் குணங்களால் பெண்ணாகவும் ஆணாகவும் இருக்கிறாள். அவள் நடத்தும் நாடகத்திற்கு ஏற்ப மாறுகின்றாள். யுத்தம் என்று வந்தால் ஆண் போல் சண்டை செய்கிறாள். அதே நேரம் பக்தர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்றால் ஒரு தாய் போல் பெண்ணாகிறாள்.

 

4. ஸர்வம் ததாவாஸ்யமிதம் ஜகத்;,

  ஸா-ஜாதா ஸர்வம், தத ஏவ ஜாதம்;

  தத்ரைவ ஸர்வம், பவேத் ப்ரலீனம்

  ஸைவாகிலம் நாஸ்தி, கிஞ்சநாந்யது

       இந்த உலகம் முழுவதும் தேவியால் தான் உண்டாக்கப் பட்டது. உபநிஷத்துக்களும் இதைத் தான் சொல்கின்றன. உதாரணமாக கடலில் அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் எப்படி உண்டாகிறது? கடல் என்ற உற்பத்தி ஸ்தானம் இருப்ததால் தானே? இந்த அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் அடங்கிய பின் எங்கு செல்கிறது? மீண்டும் கடலில் தானே. அதைபோலவே அனைத்தும் அன்னையிடமிருந்து உண்டாகி அவளிடமே லயமடைகிறது.

 

5. கௌணானி சா,அந்த: கரேந்த்ரியாணி

  ஸா நிற்குணா வாங்,மதிகோசரா

  ஸா ஸ்தோத்ர மந்த்ரை:, சகுணா மஹத்பிஹி

  ஸம் ஸ்தூயதே, பக்த, விபன்னிஹந்த்ரீ

       ஸகுணையும் அவள்தான். நிர்குணையும் அவள்தான். ஸகுணை என்றால் எப்படி இருப்பாள் என்று வார்த்தையால் வருணிக்க முடியும். மனதால் சங்கல்பமும் செய்யலாம். ஆனால் நிர்குணையை வருணிக்க முடியாது. மனதால் சங்கல்பம் செய்யவோ புத்தியால் ஊகிக்கவோ முடியாது. புத்தியும் மனமும் குணமயமானது. முக் குணங்களால் சூழப்பட்ட மனதால் நிர்குண ப்ரம்மத்தை எவ்வாறு அறிய முடியும்? குணங்கள் அஹங்காரத்தினின்றும் தோன்றியவை. பரமாத்மா அஹங்காரத்திற்கு அப்பாற்பட்டவர். பித்த நீரால் வ்யாபிக்கப் பட்ட நாவினை உடையவன் உறைப்பு, இனிப்புச் சுவைகளை அறியமுடியுமா? சித்தத்தில் அஹங்கார நிவர்த்தி உண்டானால் தான் பரமாத்மாவை தரிசிக்க முடியும். அதனால் ஸகுணையும் நிர்குணையும் ஆன அன்னையை குணமயமான மனதாலோ அல்லது புத்தியாலோ அறியமுடியாது. எனவே நீ ஸகுண பரமாத்மாவை ஸ்தோத்ரம் செய் என்றார் ப்ரம்மா. நாம் சொல்லும் ஸ்தோத்ரங்கள் எல்லாம் ஸகுணையான அன்னைக்கே. நிர்குணையை வார்த்தைகளால் ஸ்தோத்ரம் செய்ய முடியாது.

 

6. ஸுதா ஸமுத்ரே, வஸதீயமார்யா

  த்வீபே விசித்ராத்-பூதசக்தி யுக்தா;

  ஸர்வம் ஜகத் யத்,வசகம்; வயம்

  த்ரிமூர்த்தயோ நாம, யதாச்ரிதா: ஸ்மஹ

       நிர்குணையான தேவி எங்கும் எதிலும் நிறைந்திருப்பாள். ஆனால் ஸகுணையான தேவி தூய்மையான இடத்தில் இருப்பாள். சிந்தாமணிக் க்ரஹ்த்தில் உள்ள நான்கு மண்டபங்களில் ஒன்றான ஸ்ருங்கார மண்டபத்தில் சதா பாடிக் கொண்டே இருகின்றாளாம் அன்னை. அதில் இருந்து கொண்டு பக்தர்களுக்குக் கேளிக்கைகளையும், முக்தி மண்டபத்திலிருந்து மோட்க்ஷத்தையும், ஞான மண்டபத்திலிருந்து ஞானோபதேசத்தையும் தருகிறாள், ஏகாந்த மண்டபத்திலிருந்து பூலோகத்தையும் காப்பாற்றுகிறாள். மும் மூர்த்திகளும் இந்த ஏகாந்த மண்டபத்தில் தான் அன்னையை தரிசனம் செய்தனர்.

 

7. தத் தத்தசக்தி, த்ரயமாத்ரபாஜஹ

  த்ரிமூர்த்தய: புத்ர, வயம் வினீதாஹா

  ததாஜ்ஞா ஸாது, ஸதாபி குர்மோ

  ப்ரமாண்ட ஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ரிதீச்ச

       ப்ரம்மா, நாரதரிடம் மும்மூர்த்திகளாகியத் தாங்கள் விமானம் மூலம் சென்றது, தேவியை ஏகாந்த மண்டபத்தில் தரிசித்தது அனைத்தையும் சொல்கிறார். நாரதருக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும் ஒன்றும் அறியாதவர் போல் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். நாங்கள் அன்னை இட்ட கட்டளைகளை மட்டுமே செய்யக் கூடியவர்கள். எதையும் தன்னிச்சையாகச் செய்யமுடியாது. நாங்கள் சுதந்தரர் அல்லர் என்று ப்ரம்மா சொல்கிறார்.

 

8. தைவேன மூடம், கவிமாத,னோதி

  ஸா; துர்பலம் து, ப்ரபலம் கரோதி;

  பம்கும் கிரீம் லங்க,யதேச; மூகம்

  க்ருபாவதீ சா, தனுதே ஸுவாசம்

       தேவியின் சிறப்பும், பெருமையும், சக்தியும் ப்ரம்மாவிற்கு நன்கு தெரியும். அன்னையின் நகத்தில் அகில அண்டத்தையும் பார்த்தவர் அவர். மேலும் மதுகைடபர்கள் வதத்தில் அன்னையின் சக்தியை அறிந்து கொண்டவர். தேவி எந்த வேலையையும் அனாயாஸமாக செய்யக் கூடியவள். மூடனைப் பண்டிதன் ஆக்கவும், முடவனை நடக்கச் செய்யவும், ஊமையைப் பேசச் செய்யவும், குருடனைப் பார்க்க வைக்கவும் செய்யக்கூடியவள். பக்தருக்கு எது அசாத்யமோ அதைச் சாத்யமாக்கும் கிருபாவதி தேவி. அன்னையின் க்ருபையை அறிந்து கொள்ள நிறைய கதைகள் இருக்கின்றன.

 

9. யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம்

  தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண

  ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண

  விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம்

       இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?

 

10. இதீரிதோஜேன, முனி : ப்ரஸன்னஹ

   தவ ப்ரபாவம், கருணார்த்ர சித்தே

   வ்யாஸம் ததான் யாம், யதோசிதம்

   ப்ரபோதயா மாஸ, பவித்ரவாக்பிஹி

       இந்த சமயத்தில் தான் வ்யாஸர் தனக்குப் புத்திரன் வேண்டும் என்று தபஸ் செய்ய நினைக்கிறார். யாரை நோக்கி தபஸ் செய்தால் புத்ர பாக்யம் சீக்கிரம் கிடைக்கும் என்று நினைத்துப் புரியாமல் இருக்கும் நேரத்தில், நாரதர் அங்கு சென்று தேவியை நினைத்து தபஸ் செய்யும்படிச் சொல்கிறார். தேவியின் மஹாத்மியத்தைக் கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்குச் சொன்னார். (ஸ்கந்த புராணம்) ஸ்த்ரீயாகவும் புருஷனாகவும் மாறி மாறி ஸுத்யும்னன் நாரதரிடம் நவாக்ஷரீமந்திரம் அறிந்துகொண்டதை முன்பு பார்த்தோம். சீதாதேவியைப் பிரிந்து வருந்தும் ஸ்ரீராமருக்கும் நாரதர் தேவியின் மஹிமையைக் கூறுகிறார். ராமரும் தேவி பூஜை செய்கிறார். இது தேவி பாகவதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. ஜனமேஜயன் செய்த தேவி பூஜையால் பரீக்ஷித்து நற்கதி அடைந்தான்.

 

11. மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா;

  மே மதிஸ்த்வத்ஸ் மரணை ஸக்தா;

  வா ச்யவக்தா, கார்ய கர்தா;

  நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே

       நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.

பதினொன்றாம் தசகம் முடிந்தது

 

தசகம் 12

உதத்யஜனனம்

1. புரா த்விஜ: கச்,சன தேவதத்தஹ

  நாம ப்ரஜார்தம், தமஸாஸமீபே

  குர்வன் மகம் கோபி,லசாபவாசா

  லேபே ஸுதம் மூட,மனந்த து:கஹ

       கோசல தேசத்தில் தேவதத்தன் என்னும் ஒரு பிராம்மணன், தனக்குப் புத்திர பாக்யம் வேண்டும் என்று தமஸா நதிக் கரையில் யாகசாலை அமைத்து, வேதாத்யாயனத்தில் சிறந்த அந்தணர்களை அழைத்து யாகம் செய்யத் தொடங்கினான். அப்பொழுது சாமவேத அந்தணரான கோபிலர் சாமகானம் செய்யும் பொழுது, மூச்சை அடக்கிச் சொல்ல வேண்டிய இடத்தில் அப்படிச் செய்ய முடியாமல் சுவாசத்தை விட்டு விட்டு ஸ்வரபங்கமாகச் சொன்னார். அதைக் கண்ட தேவதத்தன் " பிராம்ணரே! நான் புத்திர பாக்யம் வேண்டி இந்த யாகத்தைச் செய்கிறேன். ஆனால் நீரோ ஸாமகானத்தைச் ஸ்வர பங்கமாகச் சொல்கிறீரே! இது அமங்கலம் அல்லவா? இது என்ன மூடத்தனம்?" என்று அவரைக் கோபித்தான். உடனே கோபிலர் எனக்கு வயதான காரணத்தால் ஸாமகானம் இசைக்கும் பொழுது சிறிது ஸ்வரபங்கம் வந்தது. இதற்காக என்னை நீர் கோபித்தல் ஆகாது. என்னை மூடனென்று சொன்ன உனக்கு மூடனாகவே புத்திரன் பிறக்கட்டும்' என்று சபித்தார். தேவதத்தன் உடனே' அய்யா! நான் ஏற்கனவே புத்திரன் இல்லையே என்று துக்கத்தில் இருக்கிறேன். மூடனாகப் புத்திரனைப் பெறுவது அதைவிட துக்கம் அல்லவா? என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று சரணாகதி அடைந்தான். கோபிலரும் அவன் துக்கம் தணிக்க வேண்டி மூடனாக ஜனித்தாலும் காலம் செல்லச் செல்ல அவன் வித்வானக மாறுவான் என்று அனுக்கிரஹம் செய்தார்.

 

2. உதத்ய நாமா வவ்ருதே பாலோ

  மூடஸ்து த்ருஷ்டம், ததர்ச கிஞ்சித்

  ச்ருதம் சுச்ராவ, ஜகாத நைவ

  ப்ருஷ்டோ, ஸ்நா, ஜபாதி சக்ரே

       சிறிது காலம் சென்ற பின் தேவதத்தன் மனைவி கர்பமானாள், ரோஹிணி நட்க்ஷத்திரத்தில் குமாரனைப் பெற்றாள் "உதத்தியன்" என்று பெயரும் வைத்தார்கள். அவன் வளந்து வந்தான். உரிய வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இப்படியாக 12 வருடம் கழிந்தது. ஆனால் உதத்தியனுக்கு சந்தியாவந்தன மந்திரம் கூடச் சொல்லத் தெரியவில்லை. அவனுடைய சக வயதுக் குழந்தைகளும் அவனைக் கேலி செய்யத் துவங்கினர். பெற்றவர்களும் குருடனாகவோ, முடவனாகவோ இருந்தாலும் கல்வி அறிவு இருந்தால் அவன் உயந்தவனே. இப்படி மூடனாக இருப்பதால் பயன் யாது? என்று மனம் வருந்தினர். உதத்யனும் அவமானத்தால் மனம் வருந்தி ஒரு நாள் காட்டிற்குச் சென்றுவிட்டான்.

 

3. இதஸ்ததோடன், ஸமவாப்த கங்கஹ

  ஜலே நிமஜ்ஜன், ப்ரபி பம்ஸ்த தேவ,

  வஸன் முநீநா,மூடஜே ஷு வேத

  மந்த்ராம்ச்ச ச்ருண்வன், ஸதினானி நிந்யே

       பின் அந்த வனத்திலிருந்துச் சென்று கங்கைக் கரையின் ஓரத்தில் ஒரு குடிலை அமைத்துக் கொண்டு, கங்கையில் குளிப்பதும், அந்த நீரை உட்கொள்வதும், அங்கிருந்த முனிவர்கள் செய்யும் பூஜையைப் பார்ப்பதும், அவர்கள் தரும் பழங்கள் போன்ற பிரசாதங்களைச் சாப்பிடுவதும் ஆக இப்படியே காலம் கழித்தான். அவன் தீயவர்கள் யாருடனும் சேராமல் இப்படி முனிவர்களின் ஸத்சங்கம் கிடைத்தது அன்னையின் அருள் அல்லவா!

 

4. க்ரமேண ஸத்ஸங்க, விவ்ருத்த ஸத்வஹ

  ஸத்யவ்ரத: ஸத்ய,தபாச்ச பூத்வா

  நாஸத்ய வாக், த்வத், க்ருபயா மூடோபி

  யுன்மீலிதாந்தர், நயனோ பபூவ

       அவனுக்கு ஸத் சங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமோ குணம் நீங்கி ஸத்வ குணம் வந்தது. அன்னையின் அருளால் அவன் அகக்கண் திறந்தது. மெதுவாகப் பேச ஆரம்பித்தான். அவன் பொய்யே பேசாமல் எப்பொழுதும் உண்மையையே பேச ஆரம்பித்தான். அதனால் அவனை "ஸத்யவ்ரதன்" என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பிறருக்கு இது நன்மை தரும், இது தீமை தரும் என்று எதையும் உணராது வனத்தில் பயமில்லாமல் இருந்து வந்தான்.

 

5. குலம் பவித்ரம், ஜனனீ விசுத்தா

  பிதா ஸத்கர்ம,ரத: ஸதா மே,

  மயா க்ருதம் நைவ நிஷித்தகர்ம

  ததாபி மூடோ,ஸ்மி ஜனைச்ச நிந்த்யஹ

       இந்த கட்டில் மிருகத்தைப் போல் உலாவிக் கொண்டு வாழ்ந்து வருவதும்  ஒரு வாழ்க்கையா? என் தாயும் தந்தையும் உயர்ந்தவர்களே! ஆனாலும் நான் எப்படி இப்படி மூடனாகப் பிறந்தேன்? இது தெய்வத்தின் செயலோ? பின் வேறு ஏது காரணம் இருக்க முடியும்? என்று யோசிக்கிறான்.

 

6. ஜந்மாந்தரே கிம், நு க்ருதம் மயாகம்?

  கிம் வா வித்யார்,திஜனஸ்ய தத்தா?

  க்ரந்தோப்ய தத்த: கிமு? பூஜ்ய பூஜா

  க்ருதா கிம் வா, விதிவன்ன ஜானே

       தெய்வத்தை நிந்திப்பதால் என்ன பயன்? என் கர்ம பயன் அப்படி யிருந்தால் என்ன செய்ய முடியும்? என் பூர்வ ஜன்மத்தில், கற்ற வித்தையைப் பிறருக்குச் சொல்லித் தராமல் இருந்திருக்கலாம்? அல்லது ஒரு புத்தகமாவது தந்து உதவாமல் இருந்திருக்கலாம்?

 பிராம்மணர்களைப் பூஜிக்காமல் இருந்திருக்கலாம்? அதனால் தான் நான் பிராமிணர் குலத்தில் பிறந்தும் மூடனாக இருக்கிறேன் என்று யோசித்தார்.

 

7. நாகாரணம் கார்ய,மிதீர்யதே ஹி

  தைவம் பலிஷ்டம், துரதிக்ரமம்

  ததோத்ர மூடோ, விபலீக்ருதோஸ்மி

  வந்திய த்ருவத்னிர், ஜலமேகவச்ச

       இது போன்ற பாபங்கள் நான் ஏதோ செய்து இருக்கிறேன். ரூபவதியானவள் மலடியானது போலும், தழைத்த மரம் பழம் தராதது போலும், செழிப்பான பசு, பால் தராதது போலவும் என் ஜன்மம் வீணானது. செய்த பாபங்களுக்கான பரிகாரமும் செய்யவில்லை. இப்பொழுது யோசிப்பது வீண். நமக்கு தெய்வம் தான் துணை என்று நினைத்தான். கங்கையில் ஸ்நானமும், மஹரிஷிகளின் நெருக்கமும் அவனை இப்படி நினைக்க வைத்தது. கோபிலர் கூறியது நடக்கப் போகிறது. இப்படியே 14 வருடங்கள் கழித்தான். இருந்தும் அவன் பூஜையோ, ஜபமோ, காயத்ரி மந்திரமோ எதையுமே அறியவில்லை. ஆயினும் பொய் பேசாதவனாக இருந்தபடியால் அவனை ஸத்யவ்ரதன் என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.

 

8. இத்யாதி ஸஞ்சின் த்ய, வநே ஸ்தித:

  கதாசித் ஏகம், ருதி ராப்ளு தாங்கம்

  பீபத்ஸரூபம், கிடிமேஷ பச்யன்

  "அநய்யய்ய " இத்யுத், ஸ்வன முச்சசார

       ஒரு சமயம் ஒரு கொடிய வேடன் விட்ட அம்பினால் அடிபட்ட பன்றி ஒன்று, உடல் முழுவதும் இரத்தம் பெருகி நனைந்தபடி ஸத்யவ்ரதன் முன் வந்தது. அதைக் கண்டதும் இரக்கத்துடன் தன் உடலும் நடுங்க ஐயய்யோ! என்று சொல்லத் துவங்கினான்.

 

9. சரேண வித்த: , கிரிர் பயார்ரத்தஹ

   ப்ரவேபமானஹ. முனிவாஸ தேசே

   அந்தர் நிகுஞ்சஸ்ய, கதச்ச தைவாது

  அத்ருச்ய தாமாப, பயார்திஹந்த்ரி

       ஜீவர்களைக் காக்கும் க்ருபாவதியான தேவிதான் அந்த பன்றியை அங்கு அனுப்பி இருக்கிறாள். அந்த பன்றியும் துன்பத்துடன் அருகில் இருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டது.

 

10. வினா மகாரம், வினா பக்திம்

    உச்சார்ய வாக் பீஜ,மனும் பவித்ரம்

    ப்ரஸன்ன புத்தி: க்ருபயா தவைஷ

    பபூவ தூரீக்ருத,ஸர்வபாபஹ

       "அய்யய்யோ" என்று சொல்ல ஆரம்பித்து, அதைச் சொல்ல முடியாமல் "ஐம்", "ஐம்" "ஐம்" என்று சொன்னான். இது ஸாரஸ்வத பீஜாக்ஷர மந்திரம். இதுவரை அறியாததும் கேட்காததுமான இந்த மந்திரம் அவன் வாயிலிருந்து மூன்று முறை வந்தது. இது தேவியின் அனுக்ரஹம்தான். அன்னையும் அவன் வாக்பீஜ மந்திரத்தை ஜபித்தான் என்று அவன் மூடத்தனத்தை நீக்கி நல்ல புத்தியை அளித்தாள்.

 

11. நாஹம் கவிர், கான, விசக்ஷணோ

    நடோன சில்பாதிஷு ப்ரவீணஹ

    பச்யாத்ர மாம், மூடம் அனன்ய பந்தும்

    ப்ரஸன்ன புத்திம், குரு மாம் நமஸ்தே

       உதத்யனன் மூடனாகப் பிறந்தாலும் அன்னையின் அருளால் கங்கைக் கரையை அடைந்து ஸத் ஸங்கம் கிடைக்கப் பெற்று, வாக்பீஜ மந்திரமும் தன்னை அறியாமல் சொன்னான். ப்ரகாஸமான புத்தியை அடைந்தான். இந்த ஸ்தோத்திரத்தை எழுதும் நானும் மந்த புத்தி உடையவன் தான். எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் உறவினர் இல்லை. உதத்யனைப் போல் என்னையும் ப்ரஸன்ன புத்தி உடையவனாக ஆக்கு என்று இதன் ஆசிரியர் வேண்டினார்.

பன்னிரெண்டாம் தசகம் முடிந்தது

தசகம் 13

உதத்யமஹிமை

 

1.அதாகத: கச்சித் அதிஜ்ய தன்வா

 முனிம் நிஷாத:, ஸஹஸா ஜகாத

  த்வம் ஸத்யவாக் ப்ரூஹி, முனே த்வயா கிம்

  த்ருஷ்ட: கிடி; ஸா,யகவித்த தேஹஹ?

       அந்தப் பன்றியை வேட்டை ஆடுவதற்காக  வந்த வேடன், தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் ஸத்யவ்ரதனைப் பார்த்து "ஐயா! என் அம்பினால் அடிபட்டு வந்த பன்றி ஒன்று இவ்வழியே வந்ததா? நீங்கள் ஸத்யவ்ரதன் என்பதை நான் அறிவேன். எனவே பொய் கூறாமல் உண்மையைச் சொல்லவேண்டும்" என்று சொன்னான்.

 

2. த்ருஷ்டஸ்த்வயா சேத், வத ஸுகர: க்வ

  கதோ வாத்ருச்,யத கிம் முநீந்த்ர

  அஹம் நிஷாத:, கலு வன்யவ்ருத்திர்

  மமாஸ்தி தாரா,திக போஷ்யவர்கஹ

       மேலும் அந்த வேடன் சொன்னான் "ஐயா! என் குடும்பம் பசியால் வாடிக்கொண்டிருக்கிறது. அவர்களின் பசியைப் போக்கி அவர்களை ரக்ஷிக்கும் கடமை எனக்கு இருக்கிறது. ப்ரம்மன் என்னை வேடனாகத்தான் படைத்திருக்கிறான். எனக்கு வேட்டை யாடுவதைத் தவிர வேறு தொழில் தெரியாது. அது புண்ணியமோ பாபமோ எனக்குத்  தெரியாது என் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் கூறும் அனைத்தும் உண்மையே. ஆகவே தாங்களும் உண்மை கூற வேண்டும்என்று ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனைப் போலப் பேசினான்.

 

3. ச்ருத்வா நிஷாதஸ்ய, வசோ முனி:

  தூஷ்ணீம், ஸ்திதச்சின்,தயதி ஸ்ம காடம்

  வாதாமி கிம் த்ருஷ்ட, இதீர்யதே சேது

  ஹன்யாதயம் தம்; மம சாப்யகம் ஸ்யாது

       பன்றியை பார்த்தீர்களா? அது எங்கே போயிற்று? என்ற வேடனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறான் உதத்யனன். பன்றி இங்குதான் புதரில் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் வேடன் அதைக் கொல்வான். அது ஹிம்சைக்குத் துணை போன பாபத்தைத் தரும். பன்றியைக் காணவில்லை என்று சொன்னால் அது அசத்யம் ஆகும். ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா? கூடாது. எனவே என்ன பதில் சொல்வது என ஆலோசிக்கிறான்.

 

4. ஸத்யம் நரம் ரக்ஷதி ரக்ஷிதம் சேது

  அஸத்யவக்தா, நரகம் வ்ரஜேச்ச

  ஸத்யம் ஹி ஸத்யம், ஸதயம் கிஞ்சிது

  ஸத்யம் க்ருபாசூன்ய, மிதம் மதம் மே

       பொய் சொல்லக்கூடாது என்பது சரிதான். ஆனால் உண்மை பேசினால் ஒரு உயிர் போகும். அதனால் இந்த உயிர் போகாமல் இருக்கப் பொய் சொல்வதா? அல்லது பொய் பேசக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்வதா? என யோசிக்கிறான். எல்லா சத்யமும் சத்யமாகாது. எதில் கருணை அதாவது க்ருபை இருக்கிறதோ அதுதான் சத்யமாகும் என்ற முடிவிற்கு வருகிறான்.

 

5. ஏவம் முனேச் சின்,தயத: ஸ்வகார்ய-

  -வ்யக்ரோ நிஷாத:, புனரேவ,மூசே

   த்ருஷ்டஸ்த்வயா கிம், கிடிர் கிம் வா

   த்ருஷ்ட: ,சீக்ரம், கதயாத்ர ஸத்யம்

       இப்படி ஸத்யவ்ரதன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது வேடன் பன்றியைக் கண்டீர்களா? இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கள். இல்லாவிட்டால் பன்றி எங்காவது ஓடிவிடும். என் குடும்பம் பட்டினி ஆகிவிடும். சீக்கிரம் சொல்லுங்கள் என்கிறான்.

 

6. முனிஸ்த,மாஹா த்ர, புன: புன: கிம்

  நிஷாத மாம் ப்ருச்,சஸி மோஹமக்னஹ?

  பச்யன் பாஷேத, நச ப்ருவாணஹ

  பச்யே தலம் வாக்பி; ரவேஹி ஸத்யம்

       தேவியினால் அனுக்ரஹிக்கப் பட்ட ஸத்யவ்ரதன் ஒரு கவிஞனைப் போல் "எவன் பார்க்கின்றானோ அவன் சொல்வதில்லை. எவன் சொல்கிறானோ அவன் பார்ப்பதில்லை" என்றான். கண் பார்த்தாலும் அது பேசுமா? பேசாது. வாய் பேசுகிறது அது பார்க்க முடியுமா? முடியாது. எனவே இது உண்மைதானே. இப்படி அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தான்.

 

7. உன்மாதினோ ஜல்,பனமேத தேவம்

  மத்வா நிஷாத: ஸஹஸா ஜகாம;

  நாஸத்ய முக்தம், முனினா கோலஹ

  ஹதச்ச சர்வம், தவ தேவி! லீலாஹா

       இவன் என்ன இப்படி பார்ப்பதில்லை, சொல்வதில்லை என்று பயித்தியம் போல் உளறுகிறானே என்று வேடன் நினைக்கிறான். ஆனால் ஸத்யவ்ரதன் சொன்னது ஸத்யம்தான். அவன் பொய்யும் சொல்லவில்லை, பன்றியும் காப்பாற்றப்பட்டது. அது தேவியின் க்ருபை. ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா என்ற கேள்வி வரலாம். வேடனுக்கு வேட்டை ஆடுவது அவன் தொழில். அது அவனுக்கு நியாயமே. பாபமல்ல. ஆனால் அவன் துரத்தி வந்த பன்றியை ஹிம்சைக்குக் காட்டிக் கொடுப்பது நியாயமல்ல. தர்ம நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றல்லஅதற்குச் சில விதி விலக்குகள் இருக்கிறது. அதனால் தான் பன்றியைக் காப்பாற்றினார்.

 

8. த்ரஷ்டா பரம் ப்ரம்ம, ததேவ ஸ்யாது

  இதி ச்ருதி: ப்ராஹ; பாஷதே ஸஹ

  ஸதா ப்ருவாணஸ்து, பச்யதீதம்

  அயம் ஹி ஸத்ய, வ்ரதவாக்ய ஸாரஹ

       உதத்யனன் சொன்னது அந்த நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கச் சொன்ன பதில் அல்ல. உபநிஷத்துக்களின் தத்வம்.

" யா பஸ்யதி நஸாப்ரூதே யாப்ரூதே ஸா நபஸ்யதி /

அஹோ வ்யாத ஸ்வகார்யார்த்தின் கிம ப்ருச்சஸி புந: புநஹ //

       ப்ரம்மத்தை உணந்தவன் ப்ரம்மமாகிறான். தானே ப்ரம்மம் என்று உணர்ந்தவன் அதிகம் பேசமாட்டான். அதிகம் பேசுபவர்களுக்கு ப்ரம்ம தத்வம் அசாத்யமாகும். அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிப்போம். ஆனால் சொல்லமுடியாது. மௌனமாக இருந்தால் தான் அந்த ஆனந்தம் கிடைக்கும். பேசிக்கொண்டே இருந்தால் த்யானத்தில் மனம் நிலைக்காது. அவன் பக்தனும் ஆகாமாட்டான்.

 

9. பூய: ஸாரஸ்,வத பீஜ மந்த்ரம்

  சிரம் ஜபன் ஞான,நிதி: கவிச்ச

  வால்மீகிவத் ஸர்வ,திசி ப்ரஸித்தஹ

  பபூவ பந்தூன், ஸமதர்பயச்ச

       உதத்யனன் கோபிலரின் சாபத்தால் மூடனாகப் பிறந்தான். அவன் ஞானி ஆவான் என்றும் அவர் அனுக்ரஹித்தார். அது உண்மை ஆயிற்று. அடிபட்ட பன்றியைக் கண்டு பயத்தினால் உதத்யனன் உளறிய வார்த்தைகளைத் தன் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொன்னதாக நினைத்து அவனை உலகம் போற்றும் கவிஞனாக்கினாள் தேவீ. ஒரு பெரும் கொள்ளைக்காரன் ராம நாமம் சொன்னதால் வால்மீகீ என்னும் கவிஞனாக மாறினான். தேவீ மூடனைக் கவிஞன் ஆக்குவாள். மூடனைப் பேசவைப்பாள். உதத்யனன் கதை இதற்கு ஒரு உதாரணமாகும். அந்த பரதேவதை எல்லோராலும் பூஜிக்கத் தக்கவள். பக்தியுடன்  பூஜித்தால் அன்னை எதுவும் தருவாள்.

 

10. ஸ்ம்ருதா நதா தேவி, ஸுபூஜிதா வா

   ச்ருதா நுதா வா, கலு வந்திதா வா

   ததாஸி நித்யம், ஹிதமா ச்ரிதேப்யஹ

   க்ருபார்த்ர சித்தே, ஸததம் நமஸ்தே

       தேவியை வணங்குவதற்குப் பலவிதமான வழி முறைகள் உள்ளன. தேவியின் நாமத்தைச் சொல்வது, அவளின் கதைகளைக் கேட்பது, தேவியின் பெருமையைப் பாட்டாகப் பாடுவது, கதைகளைப் படிப்பது, த்யானம் செய்வது, பூஜை செய்வது போன்று பல வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு வழியைச் சிரத்தையுடன் செய்தால் அன்னை காட்சி தருவாள்.

 

தசகம் பதிமூன்று முடிந்தது

 

 

 

தசகம் 14

ஸுதர்சனகதைபரத்வாஜாச்ரமப்ரவேசம்

 

1. ராஜா புராSSஸீத், கில கோஸலேஷு

 தர்மைக,நிஷ்டோ, த்ருவஸந்திநாமா

 ஆஸ்தாம் ப்ரியே, அஸ்ய மனோரமா

 லீலாவதீ சேதி, த்ருடானுரக்தே

       கோஸல தேசத்தில் சூர்ய வம்சத்தில் துருவசிந்து என்னும் அரசன் தர்மாத்மாவாகவும், சத்ய சந்தனாகவும், வர்ணாச்ரம தர்மத்தைத் தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அவரவருடைய தர்மத்தைத் கடைபிடிக்கும்படிச் செய்பபவனாகவும் இருந்து கொண்டு, அயோத்தியை எல்லா வளங்களுடனும் அரசாண்டு வந்தான். கலிங்க நாட்டு அரசனான வீரசேனன் மகளான மனோரமாவையும், உஜ்ஜயினி நாட்டு ராஜாவான யுதாஜித் என்பவரின் மகளான லீலாவதியையும் மணந்து கொண்டு, இரு மனைவியருடனும் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

 

2. மனோரமாSஸூத, ஸுதர்ஷனாக்யம்

  குமாரகம், சத்ருஜிதம், ஸாந்யா;

  ஸம்வர்த்தயம்,ஸ்தௌ, ம்ருகயாவிஹாரீ

  வனே ந்ருபோ ஹா!, ஹரிணா ஹதோபூது

       சில காலம் இப்படிச் சந்தோஷமாகச் செல்ல, லீலாவதிக்கு சத்ருஜித் என்னும் மகனும், மனோரமாவிற்கு ஸுதர்சனன் என்னும் மகனும் பிறந்தனர். ஒரு நாள் வேட்டை ஆடுவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் கொண்ட துருவசிந்து காட்டிற்கு வேட்டை ஆடச் சென்ற போது, ஒரு கொடிய புலியினால் தாக்கப்பட்டு அதன் நகத்தால் கீறப்பட்டு மரணம் அடைந்தார்.  

 

3. விசிந்தயன், ராஜ,குலஸ்ய வ்ருத்தம்

  தஜ்,ஜ்யேஷ்ட புத்ரஸ்ய, ஸுதர்சனஸ்ய

  ராஜ்யாபிஷேகாய குருர்,வஸிஷ்டஹ

  ச்சகாரமந்த்ரம், ஸசிவை: ஸமேதஹ

       துருவசிந்து மரணம் அடைந்ததும் யாருக்குப் பட்டபிஷேகம் செய்வது? ஸுதர்சனனுக்கா அல்லது சத்ருஜித்திற்கா? என்று அனைவரும் யோசிக்கும் பொழுது, குல குருவான வஸிஷ்டரும், மந்திரிகளும் தர்ம பத்தினியான மனோரமாவின் புதல்வன், அரசனுக்குரிய நல்ல சாந்த குணமும், நல்ல ரூபமும் உடையவனாக இருப்பதால் ஸுதர்சனனே பட்டத்திற்கு உரியவன் என நிச்சயித்தனர்.

 

 

 

4. மாதாமஹ: சத்ருஜிதோ யுதாஜிது

  அப்யேத்ய ஸத்யோ,Sமிதவீர்யஷாலீ

  ராஜ்யே, ஸ்வதௌஹித்ரம்,இஹாபி,ஷிக்தம்

  கர்த்தும் குபுத்தி: குருதேஸ்ம யத்நம்

       இந்த நேரத்தில் லீலாவதியின் தந்தையான, உஜ்ஜயினிக்கு ராஜாவான யுதாஜித்தும், மனோரமாவின் தந்தையான கலிங்க ராஜாவான வீரசேனனும், தத்தம் பேரன்களுக்குப் பட்டம் கட்ட நினைத்து அங்கு வந்து சேர்ந்தனர். தர்மபத்தினியின் குமாரனாக இருந்தாலும் ஸுதர்சனன் ஒரு அப்பாவி அவனின் சாந்த குணம் அரசாட்சிக்கு ஏற்றதல்ல, அதனால் மூத்தவனான தன் பேரன் சத்ருஜித்திற்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று யுதாஜித் சொல்கிறார்.

 

5. மனோரமாயா அபி வீரஸேனஹ

  பிதாப்யு,பேத்யாSSசு ருரோத தஸ்ய

  யத்நம் பலீ; ஸ்வ,ஸ்வஸுதாஸுதாபி-

  -ஷேகைக புத்தி, கலு தாவபூதாம்

       இதைக் கேட்டவுடன் மனோரமாவின் தந்தை வீரசேனன் எப்படிப் பேசாமல் இருப்பார்? மூத்த மனைவியான, தர்மபத்னியான, என் மகளின் மகனான ஸுதர்சனனே ராஜா ஆகத் தகுதி உள்ளவன் என்று சொல்கிறார்.

 

6. க்ருத்வா விவாதம் , ததோ ந்ருபௌத்வௌ

  கோரம் ரணம் சக்ரதுரித்த ரோஷௌ

  யுதாஜிதா தத்ர, து வீரஸேனோ

  தைவாத் ஹதோபூத், ஹரிணா கரீவ

       இருவரும் இதை விவாதித்து, முடிவில் இருவரும் யுத்தத்திற்குத் தயாராகினர். யுத்தத்தில் இரு பக்க வீரர்களும் சண்டையிட்டுப் பலர் மாண்டு போனார்கள்போரின் முடிவில் யுதாஜித்தின் வாளுக்கு வீரசேனன் பலியாகி மரணம் எய்தினான்.

 

7. ராஜ்யேSபிஷித்த:, கலு சத்ருஜித் ஸஹ

  பாலஸ்ததோSயம், ரிபுபித் யுதாஜிது

  தௌஹித்ர ராஜ்யம், ஸுகமேகநாதஹ

  சசாஸ வஜ்ரீவ, திவம் மஹேசி

       வீரசேனன் மரணம் அடைந்ததும் ச்த்ருஜித்திற்குப் பட்டம் கட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் பாலகன் அல்லவா? அதனால் அவன் பாட்டனாரான யுதாஜித் ராஜ்ய பரிபாலனம் செய்கிறார். கோஸல நாடு சகல சம்பத்துக்களும் நிறைந்து ஒரு சொர்க்கம் போல் இருக்கும் ஒரு ராஜ்யம். அதை ஆள்பவன் இப்பொழுது ஒரு பாலகன். அதனால் யுதாஜித்தைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்? தன் இஷ்டப்படி ராஜ்யத்தை ஆண்டு வருகிறான் யுதாஜித்.

 

8. பத்யு: பிதுச் சாபி, ம்ருதேரநாதா

  பீதா விதள்ளா,பித மந்த்ரி,யுக்த்தா

  மனோராமா பால,ஸுதா த்வரண்யே

  யயௌ பரத்வாஜ,முனிம் சரண்யம்

       யுதாஜித் தான் நினைத்தை அடைந்தான். கோஸல ராஜ்யத்தை ஆளத் தொடங்கினான். ஆனால் மனோரமாவிற்குக் கவலை வந்துவிட்டது. தன் தந்தையோ யுத்தத்தில் இறந்துவிட்டான். நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. முன்பு நம்மை ஆதரித்த மந்திரிகள் கூட இப்பொழுது யுதாஜித்தை ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களால் தனக்கும் தன் மகனுக்கும் எந்த நேரமும் துன்பம் வரலாம். நமக்கு இந்த கஷ்டம் தெய்வாதீனமாய் வந்துவிட்டது. இதை நினைத்து நினைத்து கவலைப்படுவதில் எந்த உபயோகமும் இல்லை. எப்படியாது தன்னையும் மகனையும் காத்துக் கொள்ள வழி தேட வேண்டும் என்று ஆலோசிக்கிறாள். நம்பிக்கைக்குப் பாத்திரமான விதள்ளன் என்னும் ஒரு மந்திரியை அழைத்து யோசனைக் கேட்கிறாள். அவரின் யோஜைனைப்படி தன் பிதாவின் ராஜ்யத்தைப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு, தன் மகனுடன் காட்டு வழியாகப் போகிறாள். அங்கு சில கள்வர்களால் வழி மறிக்கப் பட்டு, இருந்த சில ஆபரணங்கள் பணம் எல்லாவற்றையும் இழந்து விடுகிறாள். மனம் வருந்தி அழுகிறாள். எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று ஒரு நதிக்கரையில் ஒரு படகைப் பிடித்து கங்கைக் கரையை அடைகிறாள். பின் அங்கிருந்து திரிகூட பர்வதம் அடைந்து பரத்வாஜ ஆஸ்ரமத்தை அடைகிறாள்.

 

9. தபோநிதிர் தீந,ஜனானு கம்பி

  ஞாத்வா முனிஸ்தாம், த்ருவஸந்தி,பத்னீம்

  உவாச-வத்ஸே! வச நிர்பயைவ

  தபோவனேத்ராஸ்து சுபம் தவேதி

       மனோரமா எந்தக் காரியத்தை நினைத்துப் புறப்பட்டாளோ அது நடந்தது. பரத்வாஜர் ஒரு சிறந்த தபஸ்வி. மிகுந்த இரக்க மனம் கொண்டவர். அழுதுகொண்டும், பயத்தினால் மனமும் நடுங்கிக் கொண்டிருக்கும் மனோரமாவிடம், சகல விபரங்களும் அறிந்து கொள்கிறார். "அம்மணீ! கவலையை விட்டு விடும். இங்கு நீங்கள் சுகமாக பாதுகாப்பாக இருக்கலாம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. உன் குமாரன் மீண்டும் அரசனாவான். இதில் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு இனி துன்பம் வராதுஎன்று ஆசீவதித்தார். விதள்ளன் மிண்டும் ராஜ்யம் திரும்பினார்.

 

10. அல்போSப்யு,பேக்ஷ்யோ, ரிபுர் ரோகோபி

   ஏவம் ஸ்மன்னாசு, ந்ருபோ யுதாஜிது

   தாம் ஹர்துகாம:, ஸஸுதாம் மஹர்ஷேஹே

   ப்ராபாSSச்ரமம் மந்த்ரி,வரேண ஸாகம்

       ஒருவனுக்கு வியாதி, விரோதி இரண்டும் ஒன்று போலத்தான். வியாதி இருந்தாலும் அல்லது  விரோதிகள் இருந்தாலும் உடனே நிவர்த்திக்க வேண்டும். இல்லையென்றால் அது மிகுந்த துன்பத்தைத் தரும். யுதாஜித் மனோரமாவையும் ஸுதர்சனனையும் எதிரிகளாக நினைக்கிறான். சில காலம் சென்று  இவர்கள் ராஜ்யத்தை மீண்டும்  அபகரிக்க முயற்சி செய்வார்கள். அதனால் கஷ்டம் வரும்அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்று முடிவு செய்கிறான். அவர்கள் இருக்கும் இடம் தேடி அலைகிறான். பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறான்.

 

11. மாநிதஸ்தேன தபஸ்வினா

   மனோரமாம் நைவ, ஸுதம் லேபே;

   ப்ரஹர்த்து காமோSபி, முனிம் மந்த்ரி

   வாசா நிவ்ருத்த:,ச்ருத கௌசிகோSபூது

       யுதாஜித் வருவதை அறிந்து கொண்ட மனோரமா, யுதாஜித் என்ன செய்வானோ என்று மிகவும் பயப்படுகிறாள். அப்பொழுது அங்கு வந்த யுதாஜித்திடம், யாரும் இங்கு வரவில்லை என்று முனிவர் சொல்கிறார். உண்மையைச் சொல்லாவிட்டால் பலத்காரமாக அவர்களைச் கொண்டு செல்வேன் என்று மிரட்டுகிறான். "என்னைச் சரண் அடைந்தவர்களை நான்  உன்னோடு அனுப்பமாட்டேன். முன்பு விசுவாமித்ரர் எப்படிப் பசுவை வஸிஸ்டரிடமிருந்து அபகரித்தாரோ, அப்படி, உனக்குச் சக்தி இருந்தால் அழைத்துக் கொண்டு போ" என்றார் பரத்வாஜர். யுதாஜித் மந்திரிகளிடம் ஆலோசனைக் கேட்கும் பொழுது அவர்கள் முன்பு விஸ்வாமித்திரர் ராஜாவாக இருந்த பொழுது, வஸிஷ்டரிடம் காமதேனுவை அபகரிக்க முயற்சி செய்து, முடிவில் க்ஷத்ரிய பலத்தை விடத்  தபோ பலம் மிகுந்த சக்தி உடையது என அறிந்து தானும் கடின தவம் செய்து, ப்ரம்ம தேஜோ பலத்தை அடைந்தார். எனவே நாம் இவரை பகைத்துக் கொள்ளலாகாது. பெண்ணான மனோரமாவாலும், பண பலமில்லாத ஸுதர்சனாலும் எந்த ஆபத்தும் வராது என்று சொன்னார்கள். யுதாஜித்தும் தன் கோபம் தணிந்து பரத்வாஜரை வணங்கித் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.

 

12. ஏவம் முனிஸ்தாம், ஸஸுதாம் ரரக்ஷ

   பீதோஸ்மி ஸம்ஸார,யுதாஜிதோSஹம்

   மே ஸஹாயோஸ்தி, விநா த்வயைஷ

   நூபுரம் தே, சரணம் நமாமி

       மனோரமாவிற்கும் ஸுதர்சனுக்கும் அபயம் தர பரத்வாஜர் இருந்தார். யுதாஜித் என்கின்ற கொடியவனான ஸம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றினார். தாயே! நான் இந்த ஸம்சாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு யாரும் இல்லை. நீ மட்டுமே துணை. நான் உன் பாதத்தில் சரணடைகிறேன்என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் அன்னையை வேண்டிக் கொள்கிறார்.

பதிநான்காம் தசகம் முடிந்தது

 

தசகம் 15

ஸுதர்சணகதை (தேவீ தர்சனம்)

1. ஏவம் தவைவ க்ருபயா, முனிவர்யசீத-

  -சாயாச்ரிதோ ஹதபய: , ஸுதர்சனோயம்

  வேதத்வனிச்ரவணபூத, ஹ்ருதாச்ரமாந்தே

  ஸம்மோதயன் முனிஜனான், வவ்ருதே குமாரஹ

       ஸுதர்சனனும் அவன் அன்னையும் ஆஸ்ரமத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஸுதர்சனன் தினமும் ஆஸ்ரமத்தில் தெய்வீக மந்திர சப்தத்தைக் கேட்டு வந்தான். ஸுதர்சனனின் சுபாவத்தைக் கண்டு முனிவர்கள் அனைவரும் மிகவும் நல்ல குழந்தை என்று சந்தோஷப்பட்டனர்.

 

2. ஆபால்யமேஷ, முனிபாலகசங்கமேன

   க்ளீம் க்ளீ மிதீச்வரி! ஸதா, தவ பீஜமந்த்ரம்

   தத்ரோச்சசார; க்ருபயாSஸ்ய, புர: கதாசித்

   ஆவிர்பபூவித நதம், தமபாஷதாச்ச

       தேவியின் அனுக்ரஹம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை படகு சீக்கிரம் எந்த கஷ்டமும் இல்லாமல் கரை வந்து சேரும். அதற்கு உதாரணம் தான் இந்த ஸுதர்சனின் கதை. தந்தை இறந்ததும் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு அனாதையாக பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தான். அவனுடைய சக நண்பர்கள் எல்லோரும் முனி குமாரர்களே. அவன் காதில் தினமும் விழுந்து கொண்டிருப்பது மந்திர சப்தமே. முனி குமாரர்கள் "க்ளீம் க்ளீம்" என்று உச்சரிக்கும் மந்திர சப்தத்தைக் கேட்டு அவனுக்கு அதில் ஒரு ஈடுபாடு வந்தது. முனி குமார்கள் சொல்வது தேவியின் காமராஜ பீஜ மந்திரம். ஆனால் ஸுதர்சனன் அதன் பொருள் புரியாமல் சந்தோஷமாக அதை 5 வயது முதல் 11 வயது வரைச் சொல்லி வந்தான். பரத்வாஜரும் அவனுக்கு உபநயம் செய்வித்து, அவனுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்தார். அவன் அனைத்தையும் எளிதில் அறிந்து கொண்டு, பண்டிதனாக ஆனாலும் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையும் மறவாமல் செய்து வந்தான். ஒரு நாள் நதிக்கரையில் வந்து கொண்டிருக்கும் பொழுது தேவீ அவனுக்குக் காட்சி தந்தாள்.

 

3. ப்ரீதாSஸ்மி தே ஸுத! ஜகஜ்,ஜனனீ மவேஹி

  மாம் ஸர்வகாம,வரதாம்; தவ பத்ரமஸ்து;

  சந்த்ரானனாம், சசிகலாம், விமலாம் சுபாஹோஹோ

  காசீச்வரஸ்ய தனயாம், விதிநோத் த்வம்

       சிவந்த நிறம், சிவந்த நிற ஆடை, சிவந்த ஆபரணம் ஆகியவைகளுடன் கருட வாகனத்தில்  மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணீயாக அன்னை தோன்றி ஸுதர்சனனை "மகனே" என்று அழைக்கிறாள். அவனுக்கு வில்லும், அம்பும், அம்பராத் துணியும், வஜ்ரகவசமும் தந்து "நீ காசிராஜன் மகள் சசிகலையை விவாஹம் செய்துகொள். உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும்" என்று சொன்னாள்.

 

4. நஷ்டா பவே,யுரசிரேண, தவாரிவர்க்கா

  ராஜ்யம் யைர,பஹ்ருதம், புனரேஷ்யஸி த்வம்

  மாத்ருத்வயேன, ஸசிவைச்ச, ஸமம் ஸ்வதர்மானு

  குர்யா: ஸதேதி, ஸமுதீர்ய திரோததாத

       மேலும்உன்னுடைய எதிரிகள் எல்லோரும் அழிந்து போவார்கள். ராஜ்யம் உனக்கே கிடைக்கும். உன் தாயாரான மனோரமாவோடு, லீலாவதியையும் உன் தாயாராக நினைக்க வேண்டும். எந்தவிதமான விரோத மனப்பான்மையும் இருக்கக் கூடாது. யுதாஜித்திற்கு உதவியாக இருந்த மந்திரிகள் அவர்கள் கடமையைத் தான் செய்தார்கள். எனவே அவர்களிடமும் விரோத மனம் காட்டக் கூடாது. ஒரு ராஜாவிற்கு ராகத்வேஷம் இருக்கக் கூடாது. எனவே ராஜ தர்மங்களை நீ அனுஷ்டிக்க வேண்டும் " என்று சொல்லி மறைந்தாள்.

 

5. ஸ்வப்னே த்வயா, சசிகலா, கதிதாS"ஸ்தி பார-

  -த்வாஜாச்ரமே, ப்ரதித,கோஸலவம்சஜாதஹ

  தீமான் ஸுதர்சன,இதி த்ருவஸந்தி புத்ர

  ஏனம் பதிம் வ்ருணு; தவாஸ்து சுபம் ஸதே"தி

       ஸுதர்சனனுக்கும் சசிகலைக்கும் திருமணம் செய்வித்து சசிகலாவின் தந்தை சுபாகுவிற்கு அனுக்ரஹம் செய்ய தேவீ நினைத்தாள். அதனால் ஸுதர்சனனுக்குக் காட்சி தந்த தேவீ காசிராஜன் மகள் சசிகலையின் கனவிலும் தோன்றினாள். சசிகலையிடம், “உன்னை விவாஹம் செய்து கொள்ளப் பிறந்திருக்கும் துருவஸந்தி என்னும் கோசல நாட்டு ராஜாவின் மகன் ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருக்கிறான்என்று சொல்லி மறைந்தாள்.

 

6. ஸ்வப்னானுபூத,மன்ருதம் கிம்ருதம் வேதி

   ஸுப்தோத்திதா து மதி,மத்யபி வ்யஜானாது

   ப்ருஷ்டாத் ஸுதர்சன,கதாம்,ஸுமுகீ த்விஜாத் ஸா

   ச்ருத்வாSனுரக்த் ஹ்ருதயைவ பபூவ தேவீ

       சசிகலை கண் விழித்ததும் தான் தேவியைப் பார்த்ததும், தேவி சொன்னதும், நிஜமா அல்லது கனவா என்று ஒன்றும் புரியவில்லை. ஆயினும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாள்.

  நந்தவனத்திற்குச் சென்று தான் கண்ட கனவைத் தன் தோழியிடம் சொல்லி மகிழும் போது அங்கு ஒரு பிராமணர் வர, அவரைக்கண்டு நமஸ்கரித்து "எங்கிருந்து வருகிறீர்"? என வினவுகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அந்த ஆஸ்ரமத்தில் ஏதும் அதிசியமாக உலகில் இல்லாதது உண்டா? எனக் கேட்கிறாள். குணத்திலும், உருவத்திலும், சிறப்பாக ப்ரம்மனால் படைக்கப் பட்டிருக்கும் புருஷனுக்குரிய சகல லட்க்ஷணங்களும் உடைய ஸுதர்சனன் தான் அந்த அதிசயம். நீ அவனை மணந்து கொண்டால் ஸ்வர்ணமும், மாணிக்கமும் இணந்த அழகு போல் ஆகும் என்று சொன்னார். தான் சொப்பனத்தில் கண்டது உண்மைதான் என்ப் புரிந்து கொள்கிறாள். அவனையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறாள்.

 

7. ஞாத்வா ஸுபாஹுரிதம் ஆகுல மானஸஸ்தாம்

  அஸ்மான்னிவர்த்தயிதும் ஆசு ஸஹேஷ்ட பத்ன்யா

  க்ருத்வா ப்ரயத்னம் அகிலம், விபலம் பச்யன்னு

  நிச்சாஸ்வயம்,வரவிதிம், ஹிதமேவ மேநே

       ஸுதர்சனனுக்கு எந்த ராஜ்யமும் இல்லை. அவன் காட்டில் ஒரு ஆஸ்ரமத்தில் இருப்பவன். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. காட்டில் இருப்பவனுக்கு எந்த வேலை இருக்க முடியும்? ராஜ்யம் இல்லாத ஒருவனைத் தன் மகள் காதலிப்பது காசி ராஜனான சுபாகுவிற்குச் சிறிது வருத்தத்தைத் தருகிறது. தன் மகளிடம் அவனிடம் ராஜ்யம் இல்லை, செல்வம் இல்லை. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் நீ கஷ்டப் படுவாய் என்று சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சிக்கிறார். அதனால் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அந்த காலத்தில் சுயம்வரம் என்பது மூன்று வகை. 1. இச்சா சுயம்வரம் (விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுப்பது) 2. வீர சுயம்வரம். வீர தருமத்தால் கன்னிகையை வரிப்பது. உதாரணம் பீஷ்மர்) 3. பந்தய சுயம் வரம். ( ராமன், அர்ஜுனன்) இதில் இந்த முதல் வகை சுயம்வரத்தை ஏற்பாடு செய்கிறார். ராஜாக்களின் அழகு, பலம், வீரம், செல்வம் இவைகள் எல்லாம், தன் மகளின் மனத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் சசிகலை என்ன செய்தாள்?

 

 

 

8. கச்சித் கதாசன ஸுதர்சன,மேத்ய விப்ரஹ

  ப்ராஹாSSகத:, சசிகலா,வசஸாSஹமத்ர;

  ஸா த்வாம் ப்ரவீதி - ந்ருபபுத்ர! ஜகஜ்ஜனன்யா

  வாசா வ்ருதோஸி பதி;, ரஸ்மி தவைவ தாஸீ

       ருக்மிணி தேவீ எப்படி ஒரு அந்தணரிடம் செய்தி அனுப்பினாளோ, அதைப் போல் சசிகலாவும் அந்தணரிடம் ஒரு கடிதம் அனுப்புகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்று, அனைத்தையும் ஸுதர்சனிடம் சொல்கிறார். சசிகலைக்கு சுயம்வரம் ஏற்பாடு நடக்கிறது என்றும் சொல்கிறார்.

 

9. அத்ராSSகதா ந்ருபதயோ, பஹவஸ்தவமேத்ய

  தேஷாம் ஸுதீர! மிஷதாம், நய மாம் ப்ரியாம் தே

  ஏவம் வதூவசன; மாநய தாம் ஸுசீலாம்

  பத்ரம் த்வாஸ்த்வி, தமுதீர்ய ஜகாம விப்ரஹ

       சுயம் வரத்திற்கு அழகு, படை பணம், பலம் வீரம் உடைய எல்லா ராஜாக்களும் காசி நகரம் வர ஆரம்பித்தார்கள். ஆனால் சசிகலைக்கு யாரிடமும் விருப்பமில்லை. அவள் ஸுதர்சனனை  மட்டுமே காதலித்தாள். வீரனும் ராஜா த்ருவஸந்தியின் புதல்வனுமான ஸுதர்சனன், தன்னை விவாஹம் செய்தல் மிகவும் பொருத்தமே என்று நினைத்தாள். அந்த அந்தணர் சொல்லியது போல் கட்டாயம் ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருவான். தன்னை விவாஹம் செய்து கொள்வான் என்று நம்பினாள்.

 

10. ஸ்வப்னே ஜாக்ரதி , பச்யதி பக்தவர்யஹ

   த்வாம் ஸந்ததம் தவ வசோ, மதுரம் ச்ருணோதி

   ஐஸ்வர்யமாசு லபதேபி முக்தி,மேதி

   த்வத்பக்திமேவ மம தேஹி; நமோஜனன்யை

       ஸுதர்சனனுக்கு அன்னை நேரில் காட்சி தந்தாள். சசிகலாவிற்குக் கனவில் காட்சி தந்தாள். அவர்களுடன் அன்னை பேசினாள். அவர்களுக்கு நிச்சயம் ஐஸ்வர்யமும் மோட்க்ஷமும் கிடைக்கும். தாயே அவர்களைப் போல் எனக்கும் உன்னிடம் பக்தி வர வேண்டும் என்று இந்த கவிஞன் அன்னையை நமஸ்கரிக்கிறார்.

தசகம் பதினைந்து முடிந்தது

 

 

 

தசகம் 16

ஸீதர்சன விவாஹம்

 

1. ச்ருத்வா வதூவாக்ய,மரம் குமாரோ

  ஹ்ருஷ்டோ பரத்வாஜ,முனிம் ப்ரணம்ய

  ஆப்ருச்ய மாத்ரா, ஸஹ தேவி! த்வாம்

  ஸ்மரன் ரதேனாS புரம் ஸுபாஹோஹோ

       இந்த சூழ்நிலையில், தேவி தன்னிடம் கூறிய சசிகலையைக் காண வேண்டும் என்று ஸுதர்சனன் ஆவல் கொண்டான். அந்த நேரத்தில் சசிகலையிடமிருந்து, அந்த அந்தணன் வந்து, அங்கு நடந்தவைகளையும் "ஸுதர்சனன் சுயம்வரத்திற்கு வரவேண்டும், தன்னை மணந்து கொள்ள வேண்டும்" என்று சசிகலை தெரிவித்ததாகவும் கூறுகிறான். அதனால் ஸுதர்சனன் பரத்வாஜரைப் பார்த்து, தேவி தன்னிடம் கூறியவற்றையும், சசிகலையிடமிருந்து அந்தணர் கொண்டு வந்த செய்தியையும் கூறி, அவர் அனுமதியும் ஆசியும் பெற்றுத், தன் தாயையும் வணங்கி, காசி நகரம் நோக்கி ரதத்தில் புறப்படுகிறான். அங்கு உள்ள முனிவர்கள் "சுதர்சனா! உனக்குக் கோஸல நாடு மீண்டும் கிடைக்கும், நீ மீண்டும் அரசனாவாய்" என்று அவனுக்கு ஆசி கூறி அனுப்புகிறார்கள்.

 

2. ஸ்வயம்வராஹுத, மஹீபுஜாம்

  ஸபாம் ப்ரவிஷ்டோ, ஹதபீர் நிஷண்ணஹ

  கன்யா கலா பூர்ண,சசீ த்வஸா விஹி

  ஆஹுர் ஜனாஸ்தா,வபி வீக்ஷமாணாஹா

       ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருகிறான். அங்கு பல பெரிய பெரிய ராஜாக்கள் வந்திருக்கின்றனர். ஸுதர்சனனுக்கு ராஜ்யம் இல்லை, அவன் ராஜாவும் இல்லை. ஆனால் அவனிடம் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று இருக்கிறது. அது என்ன? பக்தி. தேவி பக்தி. அந்த பக்தியினால் உண்டான தைரியத்தால் அவன் அங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டதும் சில ராஜாக்கள் ஆகா! இவனன்றோ சசிகலைக்கு ஏற்றவன். இவன் சந்திரன் போலவும், அவள் கலையாகவும் இருக்கின்றனரே. இவர்களல்லவோ ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் என நினைக்கின்றனர்.

 

3. வதுச்ச தத்தர்,சனவர்திதானு-

  ராகா ஸ்மரந்தீ, தவ வாக்யஸாரம்

  ஸபாம் ந்ருபாணாம் அஜிதேந்த்ரியாணாம்

  ப்ராவிசத் ஸா, பித்ருசோதிதாSபி

       சபையில் அமர்ந்திருக்கும் ஸுதர்சனனை சசிகலா பார்க்கிறாள். ஆகா! இவன் தேவி சொன்னது போல் மிக அழகாக இருக்கிறான். எனக்கு ஏற்றவனாகவும் இருக்கிறான். நான் நினைத்ததை விட அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறாள். அவளின் தந்தை அவளை சுயம்வர மண்டபத்திற்கு அழைக்கிறார். ஆனால் சசிகலை " அப்பா! நான் ஏற்கனவே ஸுதர்சனனை மணாளனாக வரித்து விட்டேன். அதனால் நான் சுயம்வர மண்டபம் வர விரும்பவில்லை. என்னை ஸுதர்சனனுக்கே விவாஹம் செய்துவையுங்கள்" என்று சொன்னாள்.

 

4. சங்காகுலாஸ்தே, ந்ருவரா பபூவுஹு

  உச்சைர் யுதாஜித், குபிதோ ஜகாத

  மா தீயதாம் லோக,ஹிதானபிஜ்ஞா

  வதூரசக்தாய ஸுதர்சனாய

       எல்லா தேசத்து ராஜாக்களும் சபையில் கூடியிருந்தும், சசிகலை இன்னும் சுயம்வரம் மண்டபத்திற்கு வரவில்லை. சசிகலைக்கு ஸுதர்சனனிடம் பிரேமைஏதோ பிரச்சனை இருக்கிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அப்போது மிகவும் பிரபலமான ராஜாவான யுதாஜித் "சசிகலையை சுயம்வரத்திற்கு அழைத்த ராஜாக்களில், ஏதோ ஒரு ராஜாவிற்கு மட்டுமே கல்யாணம் செய்து தர வேண்டும். ஸுதர்சனன் ராஜாவல்ல. ராஜ கன்னிகையை மணக்க அவனுக்குத் தகுதியில்லை. ஸுதர்சனன் எதற்கும் தகுதியில்லாதவன். அவனுக்கு சசிகலையை கல்யாணம் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்".

 

5. பாலோSயமித்யேஷ, மயாSSச்ரமே ப்ராது

  உபேக்ஷித: ஸோSத்ர ரிபுத்வமேதிஹி

  மாSயம் வத்வா, வ்ரியதாம்; வ்ருதச்சேது

  ஹன்யாம் இமம்; தாம், ஹரேயமாசு

       பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் ஸுதர்சனனும் அவன் தாயான மனோரமாவும் இருந்த போது, அவர்களை பலவந்தமாகக் கொண்டு போக முயற்சி செய்தான் யுதாஜித். ஆனால் முனிவரின் சாபத்திற்கு பயந்து அவர்களை அப்படியே விட்டு வைத்தான். அன்று செய்த செயல் இன்று தவறாக ஆனது. அதனால் தான் ஒன்றும் அறியாத பாலகனாக இருந்த ஸுதர்சனன் வளர்ந்து, இப்படி எதிரியாக வந்து நிற்கிறான் என்று நினைத்தான். சுபாகுவிடம் சசிகலையை ஸுதர்சனனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால் ஸுதர்சனனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். (தேவீ பாகவதத்தில் இந்த சுயம்வரப் பகுதி மிக முக்யமாகச் சொல்லப் படுகிறது).

 

6. சுருத்வா யுதாஜித்,வசனம் ந்ருபாலா

  ஹிதைஷிண:கே,சிதுபேத்ய ஸர்வம்

  ஸுதர்சனம் ப்ரோசு; ரதாபி தீரஹ

  நிர்பயோ நைவ, சசால தேவி

       யுதாஜித்தின் மனதை அறிந்த சில நல்ல குணமுடைய ராஜாக்கள், ஸுதர்ஸனனிடம் சென்று "ராஜ புத்திரனே! இந்த சுயம்வரத்திற்கு நீயாக வந்தாயா? அல்லது யாரும் உன்னை அழைத்தார்களா? நீயோ தனியாக வந்திருக்கிறாய். உன் சகோதரனுக்கு அந்த கன்னிகையை மணமுடிக்க யுதாஜித் நிச்சயித்திருக்கிறான். உனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் எதற்கும் துணிந்தவன். அவன் இதற்காக யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். உனக்கோ சகாயம் செய்ய யாரும் துணை இல்லை. அதனால் நீ யோசித்து முடிவு செய். இல்லாவிட்டால் இப்பொழுதே நீ கிளம்பிப் போய்விடு. இதை உன் நலனுக்காகவே கூறினோம்" என்று சொன்னார்கள். ஸுதர்சனன் சொல்கிறான் "நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. என்னிடம் எந்த படை பலமும்  இல்லை. என் இஷ்ட தேவதை பகவதியின் விருப்பப்படி நான் இங்கு சுயம்வரத்திற்கு வந்தேன். அவள் விருப்பம் என்னவோ அதன் படிதான் எல்லாம் நடக்கும். இந்த உலகம் முழுவதும் அவள் விருப்படிதான் இயங்குகிறது. அதனால் எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும். அதை மாற்ற யாராலும் முடியாது.  என்னிடம் பகைமை காட்டும் யுதாஜித்திடமோ அல்லது அவருக்குத் துணை புரியும் மற்ற ராஜாக்களிடமோ எனக்குப் பகைமை இல்லை (இது ஸத் புத்தி உள்ளவர்களின் குணம்). அந்த பகவதி எல்லாம் பார்த்துக் கொள்வாள்எனக்கு எந்த பயமும் இல்லைஎன்று சொல்கிறான்.

 

7. ஏகத்ர புத்ரீசஸுதர்சனச்ச,

  யுதாஜிதன்யத்ரபலீ ஸகோபஹ

  தன்மத்யகோமம்.க்ஷீ ந்ருபஸுபாஹுர்

  பத்தாஞ்சலிப்ராஹந்ருபான் வினம்ரஹ              

       இந்த நேரத்தில் சுபாஹு நினைக்கிறார் ஸுதர்சனனைத்தான் மணப்பேன் என்று சசிகலை சொல்கிறாள். ஸுதர்சனன் சசிகலையை பலாத்காரமாக கொண்டு போக மாட்டான். அந்த தவறான செயலை அவன் செய்யவும் மாட்டான். சுயம்வரத்திற்கு வந்த அவனை நான் திரும்பிப் போ என்று சொல்ல மாட்டேன். அது நியாயம் இல்லை. ஆனாலும் சசிகலை அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வாள். அப்படி நடந்தால் யுதாஜித்தும் அவனைப் போன்ற மற்ற ராஜாக்களும் கோபம் கொண்டு சண்டைக்கு வருவார்கள். இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? என்ன செய்வது என்று மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வருகிறான். என்ன முடிவு அது?

 

8. “ந்ருபா வசோ மே, ச்ருணுதேஹ பாலா 

   நாSSயாதி புத்ரீ, மம மண்டபேSத்ர 

   தத்ஷம்யதாம், ச்வோத்ர, நயாம்யஹம் தாம்

   யாதாத்ய வோ விச்,ரமமந்திராணி”  

       சுபாஹு சுயம்வரம் மண்டபத்தில் கூடியிருக்கும் ராஜாக்களிடம் நானும் என் மனைவியும் எவ்வளவு அழைத்தும் என் மகள் இன்று மண்டபத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. எல்லோரும் தயை கூர்ந்து எங்களை மன்னிக்க வேண்டும். அவரவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் மாளிகையில் ஓய்வெடுக்க வேண்டும். நாளை மண்டபத்திற்கு சசிகலையை அழைத்து வருகிறேன் என்று ஒரு பொய்யைச் சொல்லி நிலைமையை சமாளித்தார். ஏன் என்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் மண்டபத்திற்கு வர சம்மதிக்க மாட்டாள் என்று. அந்த சூழ்நிலையில் வேறு என்ன செய்ய முடியும்?

 

9. கதேஷு ஸர்வேஷு, ஸுதர்சனஸ்து

  த்வாம் ஸம்ஸ்மரன் மாத்,ரு ஹிதானுஸாரீ

  ஸுபாஹுனா தன்,னிசி தே தத்தாம்

  வதூம் யதாவித்,யுதுவாக தேவி!  

       இதைக் கேட்டதும் சுயம்வரம் மண்டபத்தில் இருந்த யுதாஜிதிற்குக் கோபம் வருகிறது. அவர் சொல்கிறார் "உன் நடவடிக்கையில் எங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஸுதர்சனனுக்கு உன் மகளை மணம் செய்விக்க நினைக்காதே. என் பேரனுக்கோ அல்லது வேறு ராஜகுமாரனுக்கோ கல்யாணம் செய்து வை. அதில் எனக்கு சம்மதம் தான். ஆனால் என் எதிரியான ஸுதர்சனுக்கு விவாஹம் செய்விக்க நினைத்தால் உனக்கும் எனக்கும் பகை உண்டாகும். இதை உன் மகளிடம் சொல்லி முடிவு செய்" என்று சொல்கிறார். சுபாகுவிற்கு மிகவும் கவலை வருகிறது. மனைவியுடன் சென்று மகளிடம் பேசுகிறார். ஆனால் சசிகலையோ பிடிவாதமாக ஸுதர்சனைத்தான் விவாஹம் செய்து கொள்வேன் என்று முடிவாகச் சொல்கிறாள். மகளின் நல்வாழ்வை மனதில் எண்ணி நள்ளிரவில் ஸுதர்சனனை அழைத்துக் கொண்டு ஒரு ரகஸ்ய இடத்திற்குச் சென்று, தேவியின் முன்னிலையில், மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கிறார். ஸுதர்சனனும் தன் அன்னை மனோரமாவின் ஆசியைப் பெற்று சசிகலையை மணந்து கொள்கிறான்.

 

10. ப்ராதர் யுதாஜித், ப்ரபலோ விவாஹ

   வார்தாம் நிசம்யாSSத்,தருஷா ஸஸைன்யஹ

   ஸுதர்சனம் மாத்ரு,வதூஸமேதம்  

   யாத்ரோன் முகம், பீமரவோ ருரோத

       வாத்ய கோஷங்களைக் கேட்ட மற்ற ராஜாக்கள் சுபாகு மகளுக்குச் ஸுதர்சனனை விவாஹம் செய்து வைத்து விட்டான் என்று புரிந்து கொள்கின்றனர். அதனால் ஸுதர்சனன் போகும் வாயில் வழியில் யுதாஜித்தும் மற்ற ராஜாக்களும் தங்களை அவமானப்படுத்திய அனைவரையும் எதிர் கொள்ளத் தயாராகப் படைகளுடன் நிற்கின்றனர். அதே நேரத்தில் சசிகலையையும் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு சுபாகு ஏற்பாடு செய்திருந்த ரதத்தில் ஏறி, ஸுதர்சனனும் அங்கு வருகிறான்.

 

11. ததோ ரணே, கோரதரே, ஸுபாஹுஹு

   க்ளீம் க்ளீமிதீசானி! ஸமுச்ச சார

   தத்ராSSவிராஸீ:,ஸமராங்,கணே த்வம்

   ஸிம்ஹாதிரூடா, ஸ்வஜனார்த்தி ஹந்த்ரீ

       காமராஜ பீஜ மந்திரமான "க்ளிம் க்ளிம்" என்ற மந்திரத்தை ஜபித்தபடி ஸுதர்சனன் ரதத்தில் வருகிறான். ஆனால் சசிகலையை கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் மற்ற ராஜாக்கள் சத்ராஜித் யுதாஜித்துடன் படைகளுடன் நிற்கிறார்கள். சுபாகு தன் மகளையும் மருமகனையும் காப்பாற்ற அவர்களுடன் யுத்தம் செய்கிறார். எதிரிகள் பாண மழை பொழிகிறார்கள். அதனால் அவர் தேவி உபாஸனை செய்யும் ஸுதர்சனனை உதவிக்கு அழைக்கிறார். அப்பொழுது ஸுதர்சனனுக்கு உதவி செய்ய தேவி யுத்த களத்தில் தோன்றுகிறாள். அந்த மஹா தேவி எப்படியிருந்தாள்? திவ்ய வஸ்த்ரங்கள் தரித்தவளாக மந்தார புஷ்பமாலை சூடி, திவ்ய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, நானாவிதமான ஆயுதங்களுடன் சிம்மவாஹனத்தில் தோன்றினாள். ஆண்கள் யுத்தம் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணா என்று யுதாஜித் அன்னையைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறான். அன்னைக்கும் யுதாஜித்திற்கும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது.

 

12. த்வன்னாம காயன்கதயன் குணாம்ஸ்தே

  த்வாம் பூஜயம்ச்,சாத்ர நயாமி காலம் ;

  ஸ்வப்னேபி த்ருஷ்ட ,   மயா த்வம் அம்பே!

  க்ருபாம் குரு த்வம்மயி ; தே நமோஸ்து     

       இந்த நாராயணீயம் எழுதிய ஆசிரியர் நினைக்கிறார் சுபாகு, சசிகலை, ஸுதர்சனன் இவர்களுக்கு அன்னை நேரிலோ அல்லது கனவிலோ காட்சி கொடுத்தாள். நானும் இந்த தேவியைத்தான் த்யானம் செய்கிறேன். ஆனால் கனவிலோ நினைவிலோ அன்னையைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் வருந்துகிறார். அன்னையின் கருணைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

16 ஆம் பதினாறாம் தசகம் முடிந்தது

 

தசகம் 17

ஸுதர்சன கோஸலப்ராப்தி

1. யுதாஜிதம் சத்ரு,ஜிதம் ஹத்வா

  ரணாங்கணஸ்தா, நுதிபி: ப்ரசன்னா

  ஸுபாஹு முக்யான,னுக்ருஹ்ய பக்தான்

  ஸர்வேஷு பச்யத்ஸு  திரோததாத          

       யுத்தத்தில் ஸுதர்சனனைக் கொன்றே தீருவேன் என்று முழக்கமிட்ட யுதாஜித்தை, அன்னை வதம் செய்தாள். ஸுதர்சனனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்ருஜித்திற்கு சசிகலையை விவாஹம் செய்வதற்காகத்தான் இந்த யுத்தம் நடந்தது. ஆனால் யுத்தத்தில் அவனும் மாண்டான். இவர்களின் மரணத்திற்குக் காரணம் அம்பாளிடமும் பக்தி இல்லை, நல்ல ஸத் ஜனங்களிடமும்  விரோதம்சுபாஹு பக்தியுடன் தேவியை துதித்தான். அன்னை பக்தர்களைக் காப்பாற்றினாள். யுத்தம் முடிந்ததும் அன்னை மறைந்து விடுகிறாள்.

 

2. ப்ருஷ்டோ ந்ருபான் ப்ராஹ, ஸுதர்சனஸ்தான்

  த்ருஷ்டா பவத்பி:, கலு ஸர்வசக்தா

  யா நிர்குணா யோகி,பிரப்ய த்ருச்யா

  த்ருச்யா பக்தை:, ஸகுணா வினீதைஹி        

       யுத்தத்தில் யுதாஜித், சத்ருஜித் இருவரும் இறந்த பிறகு சுபாகுவும், ஸுதர்சனனும் தேவியைத் துதிக்கிறார்கள். சுபாகுவின் பக்திக்கு மெச்சிய அன்னை அவன் விருப்பப்படி காசி நகரத்தை ஒரு முக்தி க்ஷேத்ரமாக விளங்கும் படி அனுக்ரஹித்து, காசியில் சகல சம்பத்தும் இருக்கும், உலகம் உள்ளளவும் நான் இந்த காசியில் வாசம் செய்வேன் என்று சொன்னாள்உன்னை பூஜிக்காமல் இதுகாரும் நான் வாளா இருந்தேனே என வருந்திய ஸுதர்சனனிடம், அயோத்திக்குச் சென்று தன்னை முக்காலமும் கிரமப்படி பூஜித்து வரும்படிச் சொன்னாள். இதைக் கண்ட மற்ற அரசர்கள் அவர்களிடம் "நீங்கள் துதிக்கின்றீர்களே இங்கு யுத்தம் செய்த அந்தப் பெண் யார்? என்று வினவினார்கள். ஸுதர்சனன் அன்னையின் மகிமையைச் சொல்கிறார். இது தேவி பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸுதர்சனன் சொல்கிறார், சகுணையும் நிர்குணையும் அவளே. நிர்குணையான தேவியை யோகிகள் கூடப் பார்க்க முடியாது. ஆனால் சகுணையான தேவியை பக்தர்களால் காண முடியும். யுதாஜித், சத்ருஜித் ஆகிய துர் புத்தி கொண்டவர்கள் முன் கூட அன்னை காட்சி தந்தாள். ஆனால் அவர்களால் அன்னையை அறிந்து  கொள்ள முடியவில்லை. அதனால் வணங்கவோ துதிக்கவோ செய்ய முடியவில்லை. காரணம் மனதில் பக்தி இல்லை. தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற நினைவு தான் காரணம்.

 

3. யா ராஜஸீதம், ஸ்ருஜதீவ சக்திர்

  யா  ஸாத்விகீ பா,லயதீவ விச்வம்

  யா தாமஸீ ஸம்,ஹரதீவ ஸர்வம்

  ஸத் வஸ்து ஸைவான்,யதஸத் ஸமஸ்தம்   

       தேவர்களும் ப்ரம்மாவும் கூட அறிந்து கொள்ள முடியாத பெருமை உடையவள் தேவி. அப்படியிருக்க நான் என்னவென்று சொல்வேன்? அனைத்திற்கும் ஆதியான சக்தி அவள் தான். அவள்  முக்குண  சக்தி கொண்டவள். அவளின் ரஜோகுணத்தால் உலகம் தோன்றுகிறது. சத்வ குணத்தால் உலகம் காப்பாற்றப்படுகிறது. தமோகுணத்தால் உலகம் அழிக்கப் படுகிறது. அவளே அந்த நிர்குண பராசக்தியும் ஆவாள். வேண்டுவோர் வேண்டும் பயனைத் தரும் காரணமும் அவளே.

 

4. பக்தார்த்தி ஹந்த்ரீ, கருணாமயீ ஸா

  பக்தத்ருஹாம் பீ,திகரீ ப்ரகாமம்;

  வஸன் பரத்வாஜ, போவனாந்தே

  சிராய மாத்ரா ஸஹ தாம் பஜேSஹம்       

       இந்த அன்னை உலகத்திற்கே மாதா. அனைத்து ஜீவன்களும் அவளின் குழந்தைகள். அவளின் கருணைக்கு அளவே இல்லை. நம்முடைய துக்கம் துடைப்பவள், போக்குபவள் அவள் தான். தன் பக்தனுக்கு யாரும் துன்பம் தந்தால் அவர்களை அன்னை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். அவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தருவாள். காசி நகரத்தில் யுதாஜித், சத்ருஜித் இவர்களோடு யுத்தம் செய்து சுபாஹு, ஸுதர்சனன், சசிகலை இவர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். ஸுதர்சனன் சிறு வயது முதல் அர்த்தம் தெரியாமலே சொல்லி வந்த காமராஜ பீஜ மந்திரம் அவனுக்கு அன்னையின் அனுக்ரஹத்தைத் தந்தது.

 

5. தாமேவ பக்த்யா, பஜதேஹ புக்தி

  முக்திப்ரதாம் அஸ்து, சுபம் ஸதா வஹ

  ச்ருத்வேதமானம்,ரமுகா ஸ்ததே தி

  ஸம்மந்த்ரய பூபாச்ச, ததோ நிவ்ருத்தாஹா     

       எல்லா அரசர்களும் அந்தப் பெண் யார் என்று கேட்டதற்கு அன்னையின் மகிமை, பெருமை, சிறப்பு அனைத்தும் சொல்கிறான் ஸுதர்சனன். கண்கூடாக அவர்கள் அன்னையை யுத்த களத்திலும் பார்த்தார்கள். அனைவரும் இனி நாங்களும் தேவியை பூஜிப்போம் என்று அன்னையின் பக்தர்களாக அவரவர் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

 

6. ஸுதர்சனோ மாத்ரு,வதூ ஸமேதஹ

  ஸுபாஹு மாப்ருச்ச்ய, ரதாதி ரூடஹ

  புரீம்அயோத்யாம், ப்ரவிசன் புரேவ

  ஸீதாபதிஸ்தோ,ஷயதி ஸ்ம ஸர்வானு    

       பிறகு ஸுதர்சனன் சுபாகுவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவி சசிகலை, தாயார் மனோரமாவுடன், காசி நகரத்திலிருந்து கிளம்பி, கோஸல ராஜ்யம் வந்து சேர்கிறான். ஸுதர்சனனைக் கண்ட மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் அவர்களை வரவேற்கின்றனர். அந்த காட்சி எப்படி இருந்தது என்றால் ராம ராவண யுத்தம் முடிந்து வெற்றியுடன் திரும்பிய ராமனுக்கு அயோத்தி மக்கள் தந்த வரவேற்பு போல் இருந்ததாம்.

 

7. லீலாவதீம் ப்ராப்ய, விமாதரம்

  நத்வா விஷண்ணாம், ஹதபுத்ரதாதாம்

  ஸ்துக்த்திபி; கர்ம,கதீ: ப்ரபோத்ய

  ஸாந்த்வயாமாஸ, மஹேசி! பக்தஹ

       அயோத்திக்குச் சென்ற ஸுதர்சனன், தன் தாயாரான லீலாவதியைத் தான் முதலில் நமஸ்கரித்தான். இதைப் போலவே ராமனும் அயோத்தி திரும்பியவுடன் முதலில் கைகேயியைத் தான் நமஸ்கரித்தான். லீலாவதி ஆரம்ப காலத்தில் மனோரமாவுடனும் ஸுதர்சனனிடமும் மிகவும் அன்பாகத்தான் இருந்தாள். அவள் தந்தை யுதாஜித்தால் தான் பிரச்சனைகள் வந்தது. தன் கணவனை இழந்த மனோரமா தன் மகனுடன் அன்று எப்படி அனாதையாக இருந்தாளோ, அப்படி இன்று லீலாவதியும் தன் மகனை இழந்து ,கணவனையும் இழந்து தனித்து நின்றாள்ஸுதர்சனன் அவளுக்கு ஆறுதல் சொல்லி, யுதாஜித்தும் சத்ருஜித்தும் தன்னால் யுத்தத்தில் கொல்லப் படவில்லை. தேவிதான் அவர்களை வதம் செய்தாள் என்று நிலையை விளக்கி, எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. நான் சிறிதும் இந்த ராஜ்யத்திற்கு ஆசைப்படவில்லை. நாம் வெறும் பொம்மலாட்ட பொம்மைதான். அவள் ஆட்டிவைப்பது போல் அனைவரும் ஆடுகிறோம். இதற்கு நாம் யாரும் காரணம் இல்லை என்று சொன்னான். மேலும் நான் உங்களை என் தாய் போல் கவனித்துக் கொள்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான்வயதானவர்களுக்கும் துக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் சொல்வது மிக மிக உயர்ந்த குணம்.

 

8. ஜனேஷு பச்யதஸு, ஸுதர்சனோத்ர

  த்வாம் பூஜயித்வா, குருணாSபிஷிக்த

  ராஜ்யே த்வதீயம், க்ருஹாமாசு க்ருத்வா

  பூஜாவிதானா,தி ஸம்வ்ரு தத்த           

       ஸ்வர்ண மயமாயும் மணிமயமாயுமுள்ள சிம்மாசனம் ஒன்றைச் செய்து, வேத வாத்ய கோஷங்களுடன் தேவியை அதில் பிரதிஷ்டைச் செய்து, பூஜை செய்தான். பிரஜைகளையும் தேவியை பூஜிக்க வேண்டும் என்று சொன்னான். நவராத்ரியில் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்தான். அது போல் சுபாகுவும் காசியில் தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, பூஜித்து, மக்களையும் பூஜிக்கச் சொன்னான்.

 

9. தஸ்மின் ந்ருப்பே த்வத்,ஸதனானி க்ருத்வா

  ஜனா: ப்ரதிக்ரா,மமபூஜயம்ஸ்த்வாம்

  காச்யாம் ஸுபாஹுச்ச, ததாகரோத் ; தே

  ஸர்வத்ர பேது: கருணா கடாக்ஷாஹா

       ஒரு ராஜ்யத்தில் ராஜா எப்படியோ மக்களும் அப்படியே. ராஜா தேவியை பூஜிப்பதால் அனைவரும் தேவியை பக்தியுடன் பூஜித்து வந்தனர். எல்லோரும் தேவி பக்தர்கள் ஆக ஆனார்கள். ஒவ்வொரு ஊரிலும் அன்னையின் ஆலயம் கட்டினார்கள். அதுமட்டும் இல்லாமல் பூஜையும் முறைப்படி செய்து வந்தனர். எல்லோருக்கும் அன்னையின் கருணா கடாக்க்ஷமும் கிடைத்தது. ஸுதர்சனனின் ராஜ்யமும்  சுபாஹுவின் ராஜ்யமும் சிறப்பாக நடந்து வந்தன.

 

10. கர்மணா , ப்ரஜயா தனேன

   யோகஸாங்க்யா,தி விசிந்தயா

   வ்ரதே,னாபி ஸுகானுபூதிர்

   பக்த்யைவ மர்த்ய:, ஸுகமேதி மாதஹ       

       பக்தி இல்லாத மனிதனின் வாழ்க்கை வீண்தான். பக்தி இருந்தால் தேவியின் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். பக்தி இல்லை என்றால் எல்லாம் துக்கமயம் தான். பக்தனுக்கு எல்லாம் இன்ப மயம். பக்தியே அனைத்திலும் சிறந்தது.

 

11. நாஹம் ஸுபாஹுச்ச, ஸுதர்சனச்ச

   மே பரத்வாஜ,முனி: சரண்யஹ

   குரு: ஸுஹ்ருத், பந்துரபி த்வமேவ

   மஹேச்வரி த்வாம், ஸததம் நமாமி    

       சுபாஹு ஒரு நல்ல பக்தன். ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்றதால் பக்தனானான். எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று இந்த கவிஞன் ஏங்குகிறார்.

எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை. நீதான் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என வேண்டுகிறார்.

தசகம் பதினேழு முடிந்தது.

 

தசகம் 18

ராமகதை

1. ஸூர்யாந்வயே தாச,ரதீ ரமேசோ

  ராமாபிதோSபூத், பரதோத ஜாதஹ

  ஜேஷ்டானுவர்த்தீ, கலு லக்ஷ்மணச்ச

  சத்ருக்னநாமாபி, ஜகத் விதாத்ரி!

       சூர்யவம்சத்தில் அயோத்தியில் தசரதன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவருக்கு ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்னும் நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். தாசரதி என்னும் பெயர் நால்வருக்கும் பொருந்தும். கோசலைக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும், சுபத்திரைக்கு லக்ஷ்மணனும் சத்ருக்னனும் பிறந்தார்கள்.

 

2. விமாத்ரு வாக்யோஜ்,ஜித ராஜ்யபோகோ

  ராம; ஸஸீத:, ஸஹலக்ஷ்மணச்ச

  சரண் ஜடாவல்,கலவாந் அரண்யே 

  கோதாவரீ தீரம், அவாப தேவி!

       தசரத குமாரர்கள் வளர்ந்து வந்தார்கள். யுவராஜா பட்டத்திற்கான நேரமும் வந்தது. மூத்த குமாரனான  ராமனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்தனர். ஆனால் கைகேயி, தன் மகன் பரதனுக்கே பட்டம் சூட்ட வேண்டும், அது தவிர ராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள். தசரத மகாராஜாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் பத்னியான சீதையையும் உடன் அழைத்துக் கொண்டு ராமன் புறப்பட்டான். லக்ஷ்மணனும் அவர்களுடனே  சென்றான். மூவரும் கோதாவரி நதியை அடைந்தனர். அங்கு சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு, ஆசையுடன் ராமனிடம் நெருங்க, லக்ஷ்மணன் அவளின் மூக்கை அறுத்து, அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான்.

 

3. தம் வஞ்சயன், ராவண ஏத்ய மாயீ

  ஜஹார ஸீதாம், யதிரூபதாரீ

  ராமஸ்ய பத்னீ, விரஹாதுரஸ்ய

  ச்ருத்வா விலாபம், வனமப்யரோதீது       

       ராவணனின் ஆணைப்படி, மாரீசன் பொன் மானாக உருவம் கொண்டு, சீதையின் கண் முன் அங்கும் இங்கும் உலவினான். சீதை பொன் மானைக் கேட்க, ராமன் அதன் பின் சென்றார். சிறிது நேரத்தில், லக்ஷ்மணா! சீதே! என்று அழுகை சத்தம் கேட்டது. உடனே லக்ஷ்மணனும் அங்கு போனான். ராமனும் லக்ஷ்மணனும் இல்லாத அந்த நேரத்தில், ராவணன் சந்நியாசி வேஷத்தில் அங்கு வந்து, சீதையைத் தூக்கிச் சென்றான்ராம லக்ஷ்மணர்கள் திரும்பி வந்தபோது, ஜடாயு மூலம் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அறிகின்றனர்சீதையைக் காணாத ராமன் அழுதான். ராமன் அழுவதைக் கண்ட அந்தக் காடும் அழுதது.

 

4. ஸ்ரீ நாரதோப்யேத்ய, ஜகாத ராமம்

  கிம் ரோதிஷி ப்ரா,க்ருத மர்த்யதுல்யஹ:?

  த்வம் ராவணம், ஹந்து,மிஹாவதீர்ணோ

  ஹரி :, கதம் விஸ்மர,ஸீதமார்ய

அந்த நேரத்தில் நாரத மகரிஷி அங்கு வந்தார். ராமன் அழுவதைப் பார்த்தார். அவருக்குப் பழைய சம்பவங்களை நினைவு படுத்தினார். ராமா! நீ பாமர மக்களைப் போல் அழலாமா? தாங்கள் சாதாரண மனிதன் இல்லை. இராவண வதத்திற்காக அவதாரம் செய்த மஹாவிஷ்ணு. இதைத் தாங்கள் மறந்தீர்களா? என்றார்.

 

5. க்ருதே யுகே, வேதவதீதி கன்யா

  ஹரீம் ச்ருதிஞா, பதிமாப்துமைச்சத்

  ஸா புஷ்கர த்வீப,கதா ததர்த்த

  மேகாகினி தீவ்,ரத பச்சகார         

நாரதர் மேலும் சொல்ல ஆரம்பித்தார். க்ருத யுகத்தில் குஸத்வஜன் என்று ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சிறுவயது முதல் வேதம் நன்றாகத் தெரிந்தபடியால் அதற்குவேதவதீஎன்று பெயர் வைத்தனர். வேதவதிக்கு சிறுவயது முதல் விஷ்ணுவைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. அதற்காக ஒரு புஷ்கர க்ஷேத்ரத்தில் கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தாள் .

 

6. ச்ருதா தயாபூத், அசரீரிவாக் - தே

  ஹரி: பதிர்பாவினி ஜன்மனி ஸ்யாது

  நிசம்ய தத் ஹ்ருஷ்ட,மனாஸ்ததைவ

  க்ருத்வா தபஸ்தத்ர, நினாய காலம்      

வேதவதியின் தவத்திற்குப் பலன் கிடைத்தது. “அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு உனக்குப் பதியாவார்என்று ஒரு ஆகாசவாணி ஒலித்தது. வேதவதீ தவத்தை மேலும் தொடர்ந்து கொண்டு அங்கேயே இருந்தாள்.

 

7. தாம் ராவண: காம,சரார்தித: ஸம்

  ச்சகர்ஷ; ஸா ஸ்தவனேன தேவீம்

  ப்ரஸாத்ய கோபாருண,லோசனாப்யாம்

  நிரீக்ஷ்ய தம், நிச்சல,மாததான

வேதவதீ அங்கு தவம் செய்து வரும்பொழுது, ஒருநாள் ராவணன் அங்கு வந்தான். வேதவதியின் அழகில் மோகம் கொண்டான். அவளைத் தன் மனைவி ஆகும்படி கட்டாயப் படுத்தினான். அவள் நிராகரிக்க, அவளின் தலை முடியைப் பிடித்து பலவந்தப் படுத்தினான். அவள் தன் ஜ்வலிக்கும் கண்களால் ராவணனைப் பார்த்தாள். அவள் பார்வையின் தீர்க்கத்தைக் கண்ட ராவணன் ஸ்தம்பித்து நின்றான்அவனால் கை கால்களைக் கூட அசைக்க முடியவில்லை. ராவணன் தேவியை மனதில், மீண்டும் துதித்ததால், கை கால்களை அசைக்க முடிந்தது.

 

8. சசாப தம் , த்வமரே! மதர்த்தே

  ஸாபாந்தவோ, ராக்ஷஸ!, நம்க்ஷ்யஸீ! தி

  ஸ்வம் கௌணபஸ், ப்ருஷ்ட,மசுத்த தேஹம்

  யோகேன ஸத்யோ, விஜஹௌ ஸதீ ஸா

வேதவதீ ராவணனை சபித்தாள். "என்னைத் தொட்ட காரணத்தால் நீ உன் உறவினர்களுடன் அழிவது நிச்சயம். விஷ்ணுவிற்குப் பத்னியாக நினைத்த இந்த உடலை நீ தொட்டதால், இது அசுத்தமானது. இதை நான் வைத்திருக்க மாட்டேன்" என்று தன்னுடைய உடலை விட்டாள்.

 

9. ஜாதா புன: ஸா, மிதிலேசகன்யா

  காலே ஹரிம் த்வாம், பதிமாப தைவாது

  ஹன்யதாம் ஸத்,வரமாச ரேந்த்ரஹ

  ஸ்தன்னாச காலஸ்து, ஸமாகதச்ச

நாரதர் சொன்னார், வேதவதிக்கு அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு கணவனாவார் என்று அசரீரி சொன்னதல்லவா? அந்த வேதவதி தான் இந்த சீதை. ராமனான விஷ்ணுவே அவள் கணவன். அன்று வேதவதி தந்த சாபம் ராவணனுக்குச் சீக்கிரம் பலிக்கட்டும். ராவணனையும் மற்ற ராக்ஷசர்களையும் அழிக்கட்டும். ராவணன் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்றார்.

 

10. ததர்த்தமாரா,தய லோகநாதாம்

   நவாஹயக்ஞேந, க்ருதோபவாஸ:

   ப்ரஸாத்ய தாமேவ, ஸுரா நராச்ச

   காமான் லபந்தே; சுபமேவ தே ஸ்யாது

ராவண வதம் செய்வதற்கு, ராமன் உபவாசம் இருக்க வேண்டும். நவாக யக்ஜம் செய்ய வேண்டும். தேவியின் கதைகள் கேட்கவேண்டும், தேவியின் நாமத்தை ஜபிக்க வேண்டும், தேவியின் கீர்த்தனைகள் பாட வேண்டும், தேவியை பூஜை செய்ய வேண்டும். இப்படியாக ஒன்பது நாளும் தேவியின் ஆராதனை நடக்க வேண்டும். இதுதான் நவாக யக்ஜம் எனப்படும். இதனால் தேவி சந்தோஷமடைந்து அனுக்ரஹிப்பாள். அதன் பின் ராவண வதம் நடக்கும். அன்னையின் அனுக்ரஹத்தால் தான் தேவர்களும் மனிதர்களும் தன தேவைகளை அடைகிறார்கள். ராமனுக்கும் நன்மையே வரும் என்று சொல்லிவிட்டு நாரதர் மறைந்தார்.

 

11. இத்யூ சிவாம்ஸம், முனிமேவ ராம

  ஆசார்யமா,கல்ப்ய, லக்ஷ்மணஸ்த்வாம்

  ஸம்பூஜ்ய, ஸுஸ்மேர,முகீம் வ்ரதாந்தே

  ஸிம்ஹாதி ரூடாம் புரோ ததர்ச

அந்த நாரதரையேத் தன் குருவாக ஏற்று, ராமன் நவாக யக்ஜம் செய்தார். 9 ஆவது நாளின் முடிவில் தேவி சிம்ம வாகனத்தில் ராமனுக்குக் காட்சி தந்தாள்.

 

12. பக்த்யா நதம் தம் , த்ருதமாத்த ராம!

   ஹரிஸ் த்வமம்சேன, மதாஞயைவ

   ஜாதோ நரத்வேன, தசாஸ்ய ஹத்யை

   ததாமி தச்சக்தி, மஹம் தவேஹ

13. ச்ருத்வா தவோக்திம், ஹனு மதாத்யைஹி

   ஸாகம் கபீந்த்ரை:,க்ருதஸேது பந்தஹ

   ஸங்காம் ப்ரவிஷ்டோ, ஹத ராவணாத்யஹ

   புரீம யோத்யாம், அகமத் ஸீதஹ

தேவியைக் கண்ட ராமன் நமஸ்கரித்தார். தான் யார் என்பதை மறந்திருந்த ராமருக்கு தேவி நினைவுபடுத்தினாள். ராமன் சாட்ஷாத் அந்த மகாவிஷ்ணுவேதான். விஷ்ணுவின் அம்சமாக தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இந்த அவதாரத்தின் காரணமே ராவண வதம் தான். தேவியின் ஆணைப்படியே அவர் மனிதனாக அவதரித்தார். ராமன் மறந்திருந்த பூர்வ கதையை நினைவுபடுத்தினாள். ராவணனை வதம் செய்வதற்கான சக்தியையும் தந்தாள். வேதவதீ த்ரேதா யுகத்தில் சீதையாகப் பிறந்திருக்கிறாள். அவளின் சாபத்தால், ராவணன் மரணம் அடைய வேண்டும். சீதையை ராவணன் அபஹரித்தது, ராவண வதத்திற்குக் காரணமாகிறது. அன்னையின் அனுக்ரஹத்துடன் ராமன் அனுமன், வானரப்படை இவைகளின் உதவியுடன் சீதையைத் தேடி, இலங்கையில் இருப்பதை அறிந்து கொள்கிறான். சமுத்ரத்தில் பாலம் கட்டி, இலங்கை சென்று, ராவணை வதம் செய்து, சீதையை மீட்டு, சீதா லக்ஷ்மண சமேதராக அயோத்தி வந்தார். அம்பாளின் கருணை இருந்தால் எந்த காரியமும் சாத்தியமாகும் என்பதற்கு இது உதாரணமாகிறது.

 

14. ஹா! தேவி! பக்திர், நஹி மே குருச்ச

   சைவ வஸ்து, க்ரஹ ணே படுத்வம்

   ஸத்ஸங்கதிச் சாபி, , தே பதந்து

   க்ருபா கடாக்ஷா, மயி, தே நமோஸ்து

   ராமாய ராம பத்ராய

   ராமசந்ராய வேதஸே

   ரகு நாதாய நாதாய

   ஸீதா பதயே நமஹ

ராமனுக்கு நாரதர் குருவாக அமைந்தார். எனக்கு குருவோ ஸத்சங்கமோ எதுவுமே இல்லை. அதனால் நீதான் எனக்குத் துணை என்று இதன் ஆசிரியர் தேவியை வணங்குகிறார்.

பதினெட்டாம் தசகம் முடிந்தது

தசகம் 19

பூமியின் துக்கம்

 

1. புரா தரா துர்,ஜனபாரதீனா

  ஸமம் ஸுரப்யா, விபுதைச்ச, தேவி!

  விதிம் ஸமேத்ய, ஸ்வதசாமுவாச;

  சாநயத் க்ஷீ,ரபயோநிதிம் தான்

துர் ஜனங்கள் கணக்கில்லாமல் பூமியில் அதிகமாக ஜனிக்க ஆரம்பித்ததும், பூமியின் பாரம் மிகவும் அதிகமாக ஆரம்பித்தது. பூமிதேவி ஸ்வர்க்கம் சென்று, இந்த்ராதி தேவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லைஅதனால் காமதேனுவுடனும் தேவர்களுடனும் பிரம்மாவிடம் சென்றாள். பூதேவியே! உன் பாரத்தைக் குறைப்பதற்கு நான் சக்தி உடையவன் அல்லன் என்று சொல்லி, பிரம்மா எல்லோரையும் பாற்கடலுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.

 

2. ஸ்துதோ ஹரி: பத்ம,பவேன ஸர்வம்

  ஞாத்வாSகிலான் ஸாஞ்,சலிபந்தமாஹ

  ப்ரம்மன்! ஸீரா நைவ, வயம் ஸ்வதந்த்ரா;

  தைவம் பலீய:! கிமஹம் கரோமி?

       அனைவருடனும் பாற்கடலுக்குச் சென்ற பிரம்மா, புருஷஸூக்த ஜபம் செய்தார். மனம் குளிர்ந்த விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, அனைவரையும் கைகூப்பி  வரவேற்றார். அவர்கள் வந்த காரணத்தை அவரே அறிந்து கொண்டார். விஷ்ணு சொன்னார் "பூமியின் துக்கத்தை நானோ பிரம்மாவோ தீர்க்க முடியாது. அவரவர் கர்மத்தையும் விதியையும் மாற்ற யாராலும் முடியாது. அதனால் பூமியின் பாரத்தைக் குறைக்க என்னால் என்ன செய்ய முடியும்"? என்றார்

 

3. தைவேன நீத: கலு மத்ஸ்யகூர்ம

  கோலாதி ஜன்மான்ய, வசோSஹமாப்தஹ

  ந்ருஸிம்ஹ பாவா,ததி பீகரத்வம்

  ஹயான னத்வாத், பரிஹாஸ்யதாம்

       தெய்வமானாலும் விதியை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இது அவருடைய சொந்த அனுபவம். அவருக்கு வைகுண்டம் என்னும் ஒரு இடம் உண்டு. லக்ஷ்மி என்ற அழகிய பத்னியும் உண்டு. ஆனால் அவரால் அங்கு சுகமாக வாழ முடிந்ததா? அது தெய்வத்தால் தீர்மானம் செய்யப்படுகிறது. மீனாக, ஆமையாக, பன்றியாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கூடிய நரசிம்ம அவதாரம் எடுத்தார். குதிரைத்தலையுடன் ஹயக்ரீவ அவதாரம் செய்தார். இதையெல்லாம் யாராவது விரும்புவார்களா? இதன் காரணங்களை தேவர்களும் அறிவார்கள். இப்படியிருக்க அவரால் எப்படி பூமியின் பாரத்தைக் குறைக்க முடியும்?

 

4. ஜாத: புநர் தாச,ரதிச்ச துக்காது

  துக்கம் கதோஹம், விபினாந்தசாரீ

  ராஜ்யம் நஷ்டம்; தயிதா ஹ்ருதா மே;

  பிதா ம்ருதோஹா!; ப்ளவகா; சஹாயா:

       விஷ்ணு தன் விதியை நொந்து கொள்கிறார். மச்ச, கூர்ம அவதார காலம் மிகவும் குறைவுதான். ஆனால் தசரத குமாரனாக, ராமனாக, அவதரித்த துக்கம் இன்று நினைத்தாலும் துக்கத்தையேத்  தருகிறது. சீதாவைப் பிரிந்த போது, லக்ஷ்மணன் மட்டுமே அருகில் உதவியாக இருந்தான்அதன் பிறகு உதவிக்கு வந்தது யார்? குரங்குகள் மட்டுமே!

 

5. க்ருத்வா ரணம் பீம,மரிம் நிஹத்ய

  பத்னீம் ராஜ்யம், புநர் க்ருஹீத்வா

  துஷ்டாபவாதேன பதிவ்ரதாம் தாம்

  விஹாய ஹா! துர்ய,சஸாSபிஷிக்தஹ

       குரங்குகளின் உதவியால்தான் ராவணனை வதம் செய்ய முடிந்தது. கற்ப்புக்கரசியான சீதையை மீட்டு அயோத்தி வந்து, இழந்த ராஜ்ஜியம் மீண்டும் பெற்று, பட்டாபிஷேகமும் நடந்ததுஏதோ ஒரு துஷ்டன் சீதையைப் பழிக்க, அதன் காரணமாக இன்றும் எல்லோரிடமும் பழிச்சொல் கேட்கிறேன் என்றார் ராமன். ராமனுக்கு  மூன்று விதமான பட்டாபிஷேகம். 1. நஷ்டமான பட்டாபிஷேகம் 2. உண்மையான பட்டாபிஷேகம் 3. துஷ்கீர்த்தியால் பட்டாபிஷேகம். இப்படி மூன்று விதமான பட்டாபிஷேகம்.  

 

6. யதி ஸ்வதந்த்ரோ&ஸ்மி, மமைவ மார்த்திர்

  ஸ்யாத்; வயம், கர்ம, கலாப பத்தாஹா

  ஸதாSபி மாயா,வசகா, ஸ்ததோSத்ர

  மாயாதி நாதாம், சரணம் வ்ரஜாமஹ

       தான் கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவன் இல்லை என்றால் இப்படித் துக்கம் வருமா? இந்த விஷ்ணு, இதைக் கேட்கும் தேவர்கள், பூமி எல்லோருமே கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவர்களே! எல்லோரும் மாயைக்கு அடிமையானவர்களே! இந்த மாயை இல்லாதவர் யார்? அது தேவிமட்டுமே! இந்த கர்மபந்த விடுதலை பெற ஒரே வழி தேவியைத் துதிப்பது தான். அதனால் பூமியின் துக்கம் தீர்க்க தேவியினால் மட்டுமே முடியும்

 

7. இதீரிதைர் பக்தி,விநம்ர சீர்ஷைர்

  நிமீலி,தாக்ஷைர், விபுதை: ஸ்ம்ருதா த்வம்

  ப்ரபாதஸந்த்யேவ, ஜபாஸுமாங்கீ

  தமோனி ஹந்த்ரீ, புர: ஸ்திதாSSத்த

       விஷ்ணுவின் பேச்சைக் கேட்ட அனைவரும் பக்தியுடன் தலை குனிந்து, ஒன்றாக தேவியைத் துதித்தார்கள். இருளை நீக்கும் காலை நேர செந்நிற ஒளி போல, தேவியும் உடனே அவர்கள் முன், தோன்றினாள். அந்த தேவி என்ன சொன்னாள்?

 

8. ஜானே தஸாம் வோ, வஸுதேவ புத்ரோ

  பூத்வா ஹரிர் துஷ்ட,ஜனான் நிஹந்தா;

  ததர்த்தசக்தீ,ரஹமஸ்ய தத்யா-

  மம்சேன ஜாயே, நந்தபுத்ரீ

       விஷ்ணு வசுதேவ புத்திரனாக யது குலத்தில் அம்சாவதாரம் செய்வார். அவரே துஷ்டர்களை சம்ஹாரம் செய்வார். அதற்கானச் சக்தியை நான் தகுந்த சமயத்தில் அவருக்குத் தருவேன். நானும் அம்சமாக கோகுலத்தில் யசோதையிடம் தோன்றுவேன். அனைத்து தேவ காரியத்தையும் முடித்து வைப்பேன் என்று சொன்னாள்

 

9. யூயும் ஸாஹாய்,யமமுஷ்ய கர்தும்

  அம்சேன தேவா, த்யிதா ஸமேதாஹா

  ஜாயேத்வ முர்வ்யாம்;, ஜகதோSஸ்து பத்ரம்

  ஏவம் வினிர்திச்ய, திரோததாதா

       தேவி மேலும் சொன்னாள் பூபார நாசத்தை விஷ்ணு நடத்துவார், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்வார். இது உலகிற்கு நன்மை தரும். தேவர்களாகிய நீங்களும் உங்கள் பத்னிகளுடன் தோன்றி தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லி மறைந்தாள்.

 

10. விசித்ர துஷ்டா,ஸுர பாவபார

   நிபீடிதம் மே, ஹ்ருதயம் மஹேசி!

   அத்ராவதீர்யேதம், அபாகுரு; த்வம்

   மாதா ஹி மே; தே வரதே; நமோஸ்து

       அம்மா! என் மனதிலும் தீய சிந்தனைகள் பெருகி வருகின்றனகாம க்ரோதாதிகளும் நிறைந்திருக்கிறரர்கள். அதனால் தாங்கள் என் இதயத்தில் அவதரித்து இவைகளைச் சம்ஹாரம் செயுங்கள் என்று இதன் ஆசிரியர் வேண்டுகிறார்.

பத்தொன்பதாம் தசகம் முடிந்தது

 

தசகம் 20

தேவகீ புத்ரவதம்

       காளிந்தி நதிக்கரை ஓரத்தில் ஒரு மதுவனம் நம் இருந்தது. அதில் லவணன் என்னும் ஒரு அஸுரன் இருந்தான். அவன் தன் தவ வலிமைக் காரணமாக மஹரிஷிகளைத் துன்பப்படுத்தி வந்தான். லக்ஷ்மணனின் தம்பியான சத்ருக்னன், அந்த அஸுரனைக் கொன்று, அவ்வனத்திற்கு மதுராபுரி என்று பெயர் வைத்து, தன் இரு மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஸ்வர்கம் சென்றான். சூரிய வம்சம் அழியும் நேரத்தில், யாதவர்கள் அங்கு குடி புகுந்தனர். யயாதி புத்திரனான சூரசேனன் அவர்களை ரட்க்ஷித்து வந்தான். அந்த சூர சேனனுக்கு வருணனின் சாபத்தால், காசிபர் மகனாகப் பிறந்தார். அவரே வஸுதேவர். இவர் தன் தந்தை இறந்த பிறகு, வைசிய விருத்தியில் ஜீவனம் செய்து வந்தார். அப்பொழுது உக்ரசேனன் மதுராவை ஆண்டு வந்தான். அவனுக்கு கம்ஸன் பிறந்தான். காசிபரின் மனைவியாகிய அதிதியும் வருண சாபத்தால் தேவகனுக்கு மகளாகப் பிறந்து தேவகீ என்று அழைக்கப்பட்டாள்.

 

1.அதோருபுண்யே, மதுராபுரே து

 விபூஷுதே மௌக்,திக மாலிகாபிஹி

 ஸ்ரீ தேவகீ சௌரி விவாஹ,ரங்கே

 ஸர்வை: ச்ருதம் வ்யோ,மவச: ஸ்புடார்த்தம்

       துஷ்டர்களை அழிப்பதற்கு தேவ லோகத்தில் நடந்தவைகளைப் பார்த்தோம். இனி பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறோம்பாற்கடலிலிருந்து திரும்பி வந்த தேவர்களும், ப்ரம்மனும் இனி நமக்குக் கவலை இல்லை. கிருஷ்ணன் பிறப்பார். நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நிம்மதியாக இருக்கின்றனர். பூமியில் மதுராபுரியில் வசுதேவர் தேவகிக்குக் கல்யாணம் நடக்கிறது. தன் பிரிய சகோதரியைக் கணவன் வீட்டில் கொண்டுவிட வசுதேவர் தேவகியைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டுத் தானே தேரை ஓட்டிக் கொண்டு போகிறான். போகும் வழியில் அவனுக்கு அசரீரி கேட்கிறது. யார் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? இது ஒன்றும் கம்ஸனுக்குப் புரியவில்லை.

 

2."அவேஹி போ தேவக, நந்தனாயாஹா

  ஸுதோSஷ்டம: கம்ஸ, தவாந்தக: ஸ்யாது"

  ஸ்ருத்வேதி தாம் ஹந்து,மஸிம் ததானஹ

  கம் ஸோ நிருத்தோ, வஸுதேவமுக்யைஹி

       "தேவகியின் 8 ஆவது புத்ரன் உன்னைக் கொல்வான்" என்ற இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும், கம்ஸனுக்கு பயம் வந்துவிடுகிறது. தன் உயிருக்கு ஆபத்து என்றதும், தங்கை இருந்தால் தானே புத்திரன் பிறப்பான் என்று, அவளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து, கொல்வதற்கு வாளை எடுக்கிறான். வஸுதேவரின் நண்பர்களும், யாதவர்களும், “தங்கையைக் கொல்லாதேஇது பாபம் என்று தடுக்கிறார்கள். அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. அவர்களுக்கும் கம்ஸனுக்கும் சண்டை நடக்கிறது.

 

3. அதாSSஹசௌரி:, ச்ருணு கம்ஸ! புத்ரானு

  ததாமி தேSஸ்யா:, சபதம் கரோமி

  ஏதத் வசோ மே, வ்யபிசர்யதே சேது

  மத்பூர்வஜாதா, நரகே பதந்து

யாருடைய பேச்சையும் காதில் வாங்காத கம்ஸனைப் பார்த்து வஸுதேவர் சொல்கிறார்

"தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளியும் உன்னிடம் தந்து விடுகிறேன். இது சத்யம். நான் வாக்குத் தவறினால் என் முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வர்" என்றார். எல்லோரும் இதுவே சரி என்று சொன்னார்கள்.

 

4. ச்ரத்தாய சௌரேர், வசனம் ப்ரசாந்த-

  -ஸ்தாம் தேவகீம் போஜ,பதிர் முமோசஹ

  ஸர்வே துஷ்டா, யதவோ நகர்யாம்

  தௌ தம்பதீ சோஷ,துராத்த மோதம்

       வஸுதேவர் சொன்ன வார்த்தயை மீற மாட்டார் என்று நம்பிக்கை வைத்து, கம்ஸன் கோபத்தை விட்டுச் சாந்தமானான். தேவகீ வஸுதேவர் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தனர்.

 

5. காலே ஸதீ புத்ரம்,அஸுத; தாதஹ

  கம்ஸாய நிச்சங்க,மதாத் ஸுதம் ஸ்வம்

  ஹந்தா மேSயம், சிசுரித்யுதீர்ய

  தம் ப்ரத்யதாத், போஜபதிச்ச தஸ்மை

       தேவகீ யௌவனம் அடைந்து கர்பவதியாகி, ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வஸுதேவரும் குழந்தயைக் கேட்க, அவளும் இக்குழந்தயைக் காப்பதற்கு ஏதும் பிராயச்சித்தம் செய்ய முடியாதா? என்று கேட்கிறாள். நல்வினை தீவினையால் வரும் பயன்களை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று சொல்லிக் குழந்தையை கம்ஸனிடம் கொண்டு தருகிறார். சத்யவானான வஸுதேவரிடம் கம்ஸன் சொல்கிறான் "8 ஆவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறது. இது எனக்கு எதிரி அல்ல. அதனால் உம்மிடமே இருக்கட்டும்" என்று வஸுதேவரிடம் குழந்தையைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான்.

 

6. அதாSSசு பூபார, வினாசனாக்ய

  த்வன்நாடகப்ரேக்ஷண கௌதுகேன

  ஸ்ரீநாரத: ஸர்வவிதேத்ய கம்ஸம்

  அத்ருச்ய ஹாஸம், ஸகலம் ஜகாத

       8 ஆவது குழந்தைதானே எனக்கு எதிரி. மற்ற குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் என்று சொன்ன கம்ஸனின் வார்த்தை கேட்டு, மந்திரிகளும் மற்றவர்களும் சந்தோஷித்தனர். அப்பொழுது நாரதர் வருகிறார். அவருக்கு வஸுதேவர் தேவகிக்குப் பிறக்கும் குழந்தகளின் பூர்வ சரித்திரம் தெரியும். பூமியின் பாரத்தைக் குறைப்பது தேவியின் திட்டமல்லவா? அதற்கு அவரால் ஆனதைச் செய்ய வேண்டுமல்லவா? அதனால் நாரதர் சொல்கிறார்,

 

7. த்வம் பூப! தைத்ய: கலு காலநேமிஹி

  ஜகத்ப்ரஸித்தோ, ஹரிணா ஹதச்ச

  ததோSத்ர ஜாதோஸி ஸுரா ஹரிஸ்ச

  த்வாம் ஹந்துமிச்சந்,த்ய துனாSபி சத்ரும்

       கம்ஸா! நீ முன் ஜன்மத்தில் காலநேமி என்னும் உலகம் முழுவதும் அறிந்த ஒரு அஸுரன். யுத்தத்திலே நீ விஷ்ணுவால் கொல்லப்பட்டாய். இந்த ஜன்மத்தில் நீ உக்ரசேனனுக்கு மகனாக, யது வம்சத்தில் பிறந்திருக்கிறாய். ஆனாலும் உன்னைத் தேவர்களும் விஷ்ணுவும் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள். உன்னைக் கொல்வதற்கே அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று நாரதர் தன்னுடைய கலகத்தை ஆரம்பித்தார்.

 

8. தேவாஸ்த,தர்த்தம் நர ரூபி,ணோத்ர

  வ்ரஜே ஜாதா, வஸீதே வமுக்யாஹா

  நந்தா தயச்ச த்ரிதசா; இமே

  விஸ்ரம்பணீயா, பாந்தவாஸ்தே

       தேவர்கள் உன்னைக் கொல்வதற்கான திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள். அவர்கள் மானிட ரூபத்தில் அவதரித்திருக்கிறார்கள். சிலர் மதுராவிலும், சிலர் நந்தகோபர் இருக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். உனக்கு இது தெரியவில்லை. எல்லோரும் நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். ஏன் வஸுதேவரும், நந்தகோபரும் கூட நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.

 

9. த்வம் வ்யோம வாணீம், ஸ்மர; தேவகஸ்ய

  புத்ர்யா: ஸுதேஷ்வ, ஷ்டமதாம் கத: ஸன்

  த்வாம் நிஹந்தா, ஹரிரேவ; சத்ருஹு

  அல்போSபி நோபேக்ஷ்ய, இதீர்யதே ஹி

       உனக்கு ஒரு அசரீரி வாக்கு கேட்டதே! 8 ஆவது குழந்தை உன்னைக் கொல்லும் என்று சொன்னதே! அந்த 8 ஆவது குழந்தை யார் என்று உனக்குத் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை. அந்த விஷ்ணுவே தான் 8 ஆவது குழந்தையாக அவதரிக்கப் போகிறார். நீ பூர்வ ஜன்மத்தில் கால நேமியாக இருந்த போதும் அவர்தான் உன்னைக் கொன்றார். அவர் உன் ஜன்ம விரோதி. சத்ரு அல்பன் ஆனாலும்  அலட்க்ஷயம் செயக்கூடாது.

 

10. ஸர்வாத் மஜானாம், ந்ருப! மேளனேஸ்யாஹா

   ஸர்வேSஷ்டமா: ஸ்யு:, ப்ரதமே ஸர்வே

   மாயாவினம் வித்தி, ஹரிம் ஸதேதி

   கதே முனௌ க்ரோ,தமியாய கம்ஸஹ

       நீ முதல் குழந்தயை ஏன் கொல்ல வேண்டும் என்று விட்டு விட்டாய். ஒன்றை நீ அறிந்து கொள். அந்த விஷ்ணு மாயாவி. எதையும் செய்யக் கூடியவன். எட்டு குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்தால் எது 8 ஆவது குழந்தை? வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக எண்ணிப்பார்? எது 8 ஆவது குழந்தை? முதல் குழந்தை கூட 8 ஆவது ஆகலாமே? எனவே கம்ஸா! நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்

 

11, தேவகீ, ஸூனு,மரம் ஜகான

   காராக்ருஹே தாம், பதிமப்ய பத்னாது

   தயோ: ஸுதான் ஷட், கலு ஜாதமாத்ரான்

   ஹத்வா க்ருதம் ஸ்வம், ஹிதமேவ மேனே

       கம்ஸன் மீண்டும் தேவகியிடம் சென்று கொடுத்த குழந்தயை வாங்கி கற்பாறையில் அடித்துக் கொன்று விடுகிறான். தேவகீயையும் வஸுதேவரையும் சிறையில் வைக்கிறான். அதன் பின் பிறந்த 6 குழந்தைகளையும் அப்படியே கொன்று விடுகிறான். இவர்கள் சிறையில் இருக்கும் வரை நமக்கு பயம் இல்லை என்று நினைக்கிறான்.

 

12. காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா

   மா ஜாது பாபம், கரவாணீ தேவி!

   மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே

   பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.

       சரீரத்தாலேயும், மனதினாலேயும் ஒருவன் நல்லதையேச் செய்ய வேண்டும். அது நல்ல கதியைத் தரும். செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் நல்லதோ தீயதோ எந்த கதியும் இல்லை. செய்யக் கூடாததைச் செய்தால் அதோகதிதான். மனதாலும், உடலாலும் நான் எந்த பாபச் செயல்களையும் செய்யக்கூடாது. நான் எப்போதும் தேவிக்கு ப்ரியமுடையவனாக இருக்க வேண்டும் என்று இந்த கவி வேண்டுகிறார்.

இருபதாம் தசகம் முடிந்தது

 

 

 

 

 

 

தசகம் 21

நந்தஸுதாவதாரம்

 

       முனிவர்களில் சிறந்தவர் என்று போற்றப் படுபவரும், ப்ரம்மஞானியுமான நாரதர் கம்ஸனிடம் ஏன் எல்லா குழந்தைகளையும் கொல்லும்படிச் சொன்னார்? பாபம் செய்பவர்களும், அதைச் செய்யத் தூண்டுபவர்களும் பாபம் செய்பவர்கள் தானே? எந்த கர்ம பலத்தால் இந்தக் குழந்தைகள் இறந்தன? ஜனமேஜயன் இந்தச் சந்தேகத்தை வ்யாஸரிடம் கேட்கிறான். வ்யாஸர் அதற்குப் பதில் சொல்கிறார்.      

 

1. ஸர்வேSபி ஜீவா, நிஜகர்மபத்தா:

  ஏதே ஷடாஸன் த்ருஹிணஸ்ய பௌத்ராஹா

  தந்நிந்தயா தைத்யகுலே ப்ரஜாதாஹா

  புனச்ச சப்தா, ஜனகேன தைவாலு

       தேவியைத் தவிர இந்த உலகில் எல்லோரும் கர்மவினைகளை அனுபவிக்கத் தான் வேண்டும். குழந்தைகள் இறந்ததன் காரணம் அவர்களின் கர்ம பலன். ஸ்ருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், மரீசி ரிஷிக்கும், ஊர்ணைக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ப்ரம்மா தான் சிருஷ்டித்த, சரஸ்வதியிடம் ஆசை கொள்வதைக் கண்ட, இவர்கள் கேலியாகச் சிரித்தனர். ப்ரம்மா அவர்களை, அஸுரர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறக்கச் சாபம் தந்தார். அவர்கள் கால நேமிக்குப் புத்திரர்களாகப் பிறந்தனர். அடுத்த பிறவியில் ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தனர். இனிமேலும் நாம் இப்படி ஜன்மம் எடுக்க வேண்டாம் என்று நினைத்தனர். மனதை அடக்கி தவமும் செய்தனர். ப்ரம்மாவைத் துதித்ததால், ஹிரண்யகசிபு கோபம் கொண்டு, அவர்களைப் பாதாளம் செல்லும்படிச் சபித்தான். மேலும் நீங்கள் தேவகியின் கர்பத்தில் தோன்றி, முற்பிறவித் தந்தையான காலநேமியான கம்ஸனால், கருணையின்றி கொல்லப் படுவீர்கள் என்று சபித்தான்.

 

2. தேநைவ தே சௌரி,சுதத்வமாப்த்தா

  ஹதாச்ச கம்ஸேன,து ஜாதமாத்ராஹா

  ஸ்ரீ நாரதே,நர்ஷிவரேணே தேவி!

  ஞாதம் புராவ்ருத்,தமிதம் ஸமஸ்தம்

 

3. ப்ராக் தம்பதீ சாதி,திகச்யபௌ ஹா!

  ஸ்வகர்மதோஷேண, புனச்ச ஜாதௌ

  தௌ தேவகீசுர,ஸுதௌ ஸ்வபுத்ர

  நாசாதிபிர் துக்க, வாபதுச்ச

       இந்த காலநேமிதான் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இந்தக் கதை எல்லாம் நாரதருக்குத் தெரியும். நாரதர் பொய் பேசாதவர். கலகத்தில் ப்ரியம் உடையவர் போல் காணப் படுபவர். தேவ காரியத்தைச் சாதிப்பதற்காக இப்படிச் செய்கிறார். 6 குழந்தைகளுக்கும் மோட்க்ஷம் கிடைப்பதற்காக இப்படி ஒரு யோஜனையை கம்ஸனுக்குச் சொன்னார். ஸ்ருஷ்டி முதல் ப்ரளயம் வரை தேவி நடத்தும் நாடகத்திற்கு, நாரதர்  இப்படி நன்மையில் முடியும் கலகத்தைச் செய்கிறார். தேவ காரியங்கள் நினைத்தபடி முடிய வேண்டுமல்லவா? அதனால் தான் இப்படி கலகத்தைச் செய்கிறார். கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது வழக்கம். மஹாவிஷ்ணுவையேக் குழந்தையாகப் பெற்ற தேவகீ, வஸுதேவருக்கு, ஏன் இப்படிக் கஷ்டம் வந்தது? இது எல்லோருக்கும் வரும் சந்தேகந்தான். இதற்கும் காரணம் இருக்கிறது. ராமாவதாரத்தில் வானரங்களாகப் பிறந்து ஸ்ரீராமனுக்கு உதவி செய்த தேவர்கள், கிருஷ்ணாவதாரத்தில் யாதவர்களாகப் பிறந்தனர். வஸுதேவர் யார்? அவர் கஸ்யப முனிவரின் அம்சம். கஸ்யபரின் மனைவிகள் அதிதீ ஸிரஸா. அவர்கள் தான் தேவகீ ரோஹிணீயாகப் பிறக்கிறார்கள். வருணனின் சாபத்தால், கஸ்யபர் வஸுதேவராகப் பிறக்கிறார். கஸ்யபர் யாகம் செய்வதற்காக வருணனிடம் பசுவை இரவலாக வாங்கிச் சென்றார். யாகம் முடிந்த பின் திருப்பித் தர வேண்டுமல்லவா? வருணன் பலமுறைக் கேட்டும் கஸ்யபர் தரவில்லை. அதனால் கஸ்யபருக்கு "பசுபாலகனாய் பிறக்கக் கடவாய்" என்று வருணன் சாபம் தந்தார். "தாயைப் பிரிந்த பசுக்களின் கண்ணீர் போல் அதிதியும் பூமியிலே தன் குழந்தைகள் சாவதைக் காண்பாள். சிறைவாசமும் துக்கமும் அடையட்டும்" என்றும் சாபம் கொடுத்தார். ப்ரம்மாவிடம் இதை வருணன் சொன்னபோது, ப்ரம்மாவும் "அம்சத்தால் நீ மனைவியுடன் பூமியில் யதுகுலத்தில் பிறந்து பசு பாலனம் செய்வாய்" என்று சாபம் தந்தார்இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் குமாரனான இந்திரன் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாகச் சிதைத்தார் அல்லவா? அதனால் அவளும் "உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்" என்று சாபம் தந்தாள்இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் புத்திரர்கள் தேவர்கள். திதியின் புத்திரர்கள் அஸுரர்கள். அதிதியின் புத்திரனான இந்திரன் போல் தனக்கும் குழந்தை வேண்டும் என்று திதி ஆசைப்படுகிறாள். கர்பவதி ஆகிறாள். ஆனால் அதிதி, தன் மகனான இந்திரனிடம் சொல்ல அதனால் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாக இந்திரன் சிதைத்தார். அதனால் திதியும் "உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்" என்று சாபம் தந்தாள்.  அந்த அதிதி தான் தேவகி. இவர்கள் எல்லோரும் நல்லவர்களே. இருப்பினும் பிறவிச் சுழலில் துரோக புத்தியுடன் காணப்படுகிறார்கள். பூபாரத்தைக் குறைக்க தேவர்களின் பிராஜாபதியான கஸ்யபர்  வஸுதேவராகப் பிறக்கிறார் அவருக்கு ஆனகதுந்துபி என்றும் பெயர் உண்டு. விஷ்ணு அம்சாவதாரமாக, இவருக்கு பிள்ளையாகப் பிறக்கிறார். அன்னை, யசோதைக்கு மகளாகப் பிறக்கிறாள். தேவ காரியங்களை முடித்து வைக்கிறாள்தேவகியின் 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்தில் மாற்றி விடுகிறாள். விஷ்ணுவை கோகுலம் சேர்க்கிறாள். இந்திரன் அம்சம் அர்ஜுனன். தர்ம தேவதை அம்சம் யுதிஷ்டிரன். வாயுவின் அம்சம் பீமன். நகுல சகாதேவர்கள் அஸ்வினீ குமாரர்கள் அம்சம். வசுவின் அம்சம் கங்கா புத்திரர் பீஷ்மர். இறுதியில் யாதவர்களும் ஒருவரோடொருவர் சண்டை செய்து இறந்து விடுகிறார்கள். பிராமண சாபத்தால் வம்சம் அழியும்அதே சாபத்தால் விஷ்ணுவும் தன் உடலை விடுவார். இப்படியாக அவரின் அவதாரம் முடிகிறது. யயாதிகளின் குமாரர்களாக யாதவர்கள் பிறக்கிறார்கள்.

 

4. த்வம் தேவகீ ஸப்த,மகர்பதோ வை

  க்ருஹ்ர்ணந்த்ய - நந்தாம்,சசிசும் ஸ்வசக்த்யா

  நிவேச்ய ரோஹிண்,யுதரே தரண்யாம்

  மர்த்யோ பவே த்யச்,சுத மாதிசச்ச

       ஆறு குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டன. 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்திற்கு மாற்றி விடுகிறாள் தேவீ. அவர் ஆதிசேஷன் அம்சம்.

 

5. ப்ராக் கர்ம தோஷாத், ஸுஹ்ருன் மகோநஹ

  க்ருத்தேன சப்தோ, ப்ருகுணா முராரிஹி

  தயார்ஹஸம்ஸாரி,தசாம,வாப்ஸ்யன்

  ஹா! தேவகீ கர்ப்பமதாSSவிவேச

       விஷ்ணு இந்திரனின் நண்பன். தேவாசுரர்கள் யுத்தத்தில், விஷ்ணு தேவர்கள் பக்கம் இருக்கிறார். அஸுர குருவான சுக்ராச்சாரியார், தன் சிஷ்யர்கள் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் சிவனை வேண்டி தபஸ் இருக்கிறார். அந்த நேரத்தில் சுக்ராச்சாரியாரின் அன்னை (ப்ருகு மஹரிஷியின் மனைவி) அவர்களுக்கு குருவாக இருக்கிறாள். தேவர்கள் அசுரர்களிடம் சண்டையிட்ட போது அசுரர்கள் ஜெயிக்கிறார்கள். அப்பொழுது தேவர்கள், பதிவ்ரதையான ப்ருகு முனிவரின் பத்தினி இருக்கும் வரைத் தங்களால் ஜெயிக்கமுடியாது என்று நினைக்கிறார்கள்இந்திரன் விஷ்ணுவிடம் இதைச் சொல்ல, விஷ்ணு அவளைக் கொன்று விடுகிறார். உடனே ப்ருகு மஹரிஷி அங்கு வந்துத் தன் சக்தியால் மீண்டும் அவளுக்கு உயிர் கொடுக்கிறார். அவர் "நீ உயர்ந்த, தாழ்ந்த பல யோனிகளில் ஜனித்து (மச்ச.கூர்ம, வராக) ஸம்சார துக்கத்தை அனுபவிப்பாய். ராமாவதாரத்தில் மிகவும் துக்கப் படுவாய். பின் தேவகியின் கர்பத்தில் பிறப்பாய்" என்று சாபம் தந்தார். கர்ம பலனை யாராக இருந்தாலும் அனுபவிக்க வேண்டும். பகவானே ஆனாலும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

6. பூர்ணே து கர்பே, ஹரிரர்த்தராத்ரே

  காராக்ருஹே தேவக நந்தனாயாஹா

  யக்ஜே ஸுதேஷ்வஷ்ட,மதாமவாப்தஹ

  சௌரிர் விமுக்தோ நிகடைச்ச பந்தாது

       கர்பம் பூரணமானதும், விஷ்ணு காராக்ரஹத்தில், ஆவணி மாதம், அஷ்டமி திதியில், ரோஹிணி நக்ஷத்திரத்தில், நடு இரவில் அவதரித்தார். அக் குழந்தையைப் பார்த்து மனக் கலக்கத்துடன் கண்ணீர் விட்டு அழும் போது, கதவுகளின் சங்கிலிப் பூட்டுகள் தானாகவே திறக்கின்றனஇது எதை உணர்த்துகிறது? ஒருவன் பந்தப் படுவதும், அதிலிருந்து விடுதலை பெறுவதும் பகவான் சித்தம் என்பதைத் தான். பந்தம் என்றால் என்ன? ஸம்சார பந்தம். ஸம்சார பந்தத்தில் சிக்கினால் அதிலிருந்து விடுதலை பெற பகவான் அருள் இருந்தால் தான் முடியும்.

 

7. வ்யோமோத்த,வாக்யேன, தவைவ பாலம்

  க்ருஹ்ணன்ன த்ருஷ்ட:, கலு கேஹபாலைஹி

  நித்ராம் கதைஸ்த்வத், விவ்ருதேன சௌரிர்

  த்வாரேண யாதோ, பஹிராத்ததோஷம்

       அந்த நடுநிசியில், குழந்தை பிறந்ததும், ஒரு அசரீரி கேட்கிறது. "இந்தக் குழந்தையைக் கோகுலத்தில் நந்தகோபர் வீட்டில் விட்டு விடு. அங்கு பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து விடு". அசரீரியைக் கேட்ட வஸுதேவர், தன்னையும் அறியாமல், குழந்தையைக் கையில் எடுக்கிறார். கம்ஸன் பலத்த காவல் வைத்திருந்தும், கதவுப் பூட்டுகள் தானாகத் திறக்கிறது. தேவீ காவலாளிகளையும் நன்கு உறங்க வைக்கிறாள். வஸுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குச் செல்கிறார்.

 

8. த்வம் ஸ்வேச்சயா, கோபகுலே யசோதா

  நந்தாத்மஜா ஸ்வாபிதஜீவஜாலே

  அஜாயதா பக்தஜனார்த்திஹந்த்ரீ

  ஸர்வம் நியந்த்ரீ, ஸகலார்த்ததாத்ரீ

       தேவகிக்குக் குழந்தை பிறந்தவுடன், கோகுலத்தில் யசோதைக்கும் அன்னையின் அவதாரமாகப் பெண் குழந்தை பிறக்கிறது. விஷ்ணுத் தான் பெற்ற சாபத்தாலும்,  கர்ம பலனாலும் கிருஷ்ணனாக அவதரிக்கிறார். ஆனால் அன்னை அப்படியா? அவள் கர்ம பலன்களுக்கு அப்பாற்பட்டவள். அவள் நினைத்த காரியத்தை முடிப்பதற்காகத் தானே யசோதை வயிற்றில்  அவதரிக்கிறாள்.

 

9. தவ ப்ரபாவத், வஸுதேவ ஏகோ

  கச்சன்னபீதோ, யமுனாம் அயத்னம்

  தீர்வா நதீம் கோகுலமாப, தத்ர

  தாஸ்யா: கரே ஸ்வம், தனயம் ததௌ

       வஸுதேவர் குழந்தையுடன் யமுனா நதி வழியே போக, பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த வெள்ளம்  இடுப்பளவு குறந்தது. நதியை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கடந்து, நந்தகோபர் வீடு செல்கிறார், அங்கு வாயிலில் நீட்டிய கையுடன் ஒரு பெண் நிற்கிறாள். வஸுதேவர் எதுவும் கேட்காமல், அவள் கையில் குழந்தையைக் கொடுக்கிறார். இது தேவியின் மகிமை. வஸுதேவருக்கு கால் சங்கிலி உடைந்தது, கதவு பூட்டு திறந்தது, யமுனையில் வெள்ளம் குறைந்தது, பெண்ணின் கையில் குழந்தையைத் தந்தது எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. எல்லாமே அவரின் சுய நினைவு இன்றியே நடந்தன.

 

10. தயைவ தத்தா,மத பாலிகாம் த்வாம்

  ஆதாய சீக்ரம், ததோ நிவ்ருத்தஹ

  காராக்ருஹம் ப்ராப்ய, ததௌ ப்ரியாயை

  சாபவத் பூர்வ,வதேவ பத்தஹ

       வஸுதேவர் தந்த ஆண் குழந்தையை, அந்தப் பெண் யசோதை அருகில் விட்டாள். அவள் தந்த குழந்தையை வாங்கிக் கொண்டுசென்றது போலவே மீண்டும் யமுனையைக் கடந்து, மதுரா வருகிறார்சிறைச் சாலைக்கு வந்து, தேவகி அருகில் குழந்தையை விடுகிறார்.  மீண்டும் கால் சங்கிலியும், கதவுகளின் பூட்டுக்களும் முன் போலவே பூட்டிக் கொண்டனஅவருக்கு நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.

 

11. த்வத்ரோத,நோத்தா,பிதகேஹ பாலைர்

   நிவேதிதோ போ,ஜபதி: ஸமேத்ய

   த்வாம் பாதயுக்மக்ரஹணேன குர்வன்

   அத: சிரஸ்காம், நிரகாத் க்ருஹாந்தாது

       குழந்தை சத்தம் போட்டு ஓங்கி அழத் தொடங்கியது. அது அன்னையின் குரல் அல்லவா? அனைவரும் விழித்துக் கொண்டனர். காவலாளிகள் ஓடிச் சென்று கம்ஸனிடம் தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியைச் சொல்கின்றனர். கம்ஸன் உடனே சிறைச் சாலைக்குச் சென்று எங்கே அந்த 8 ஆவது குழந்தை? கொண்டுவா? என்றான்குழந்தையைப் பார்த்து இது பெண்ணாயிருக்கிறதே? அசரீரி வாக்கும் நாரதர் வாக்கும் பொய்யாகுமா? என்று ஆச்சர்யப்படுகிறான். அந்தக் குழந்தையை எந்த தயையும் இல்லாமல் கற்பாரையில் அடித்து மோத குழந்தையின் காலைப் பிடித்துத் தூக்கினான். யோகிகளாலும் பார்க்க முடியாத, அடைய முடியாத, அந்த தேவியின் பாத கமலத்தை, கம்ஸன் பிடித்தான் என்றால் அவன் செய்த புண்ணியம் தான் என்னே!

 

12. போதயாமாஸ, சிலாதலே த்வாம்

   ஸத்ய: ஸமுத்பத்ய, கராதமுஷ்ய

   திவி ஸ்திதா சங்க,கதாதிஹஸ்தா

   ஸுரை: ஸ்துதா ஸ்மேர,முகீ த்வமாத்த

       அந்தக் குழந்தையைப் பாறையில் அடித்து மோத, கையை ஓங்கினான் கம்ஸன். ஆனால் நடந்தது என்ன? குழந்தையின் தலைக் கல்லில் படவே இல்லை, அது அவன் கையிலிருந்து நழுவி ஆகாயத்திற்குச் செல்கிறது. கம்ஸன் உயரே பார்க்கிறான். அவன் கண்டது என்ன? அஷ்ட புஜங்களுடன் சிம்ஹ வாகனத்தில் தேவியைப் பார்க்கிறான். தேவியை நேரில் பார்க்கும் அவன் எத்தகைய பேறு பெற்றவன்?

 

13. "வதேன கிம் மே தவ கம்ஸ! ஜாதஹ

   ஸ்தவாந்தக: க்வாப்ய விதூரதேசே

   மா த்ருஹ்யதாம் ஸாதுஜனோ, ஹிதம் ஸ்வம்

   விசிந்தயே" த்யுக்தவதீ திரோSபூஹு

       ஆகாயத்தில் நின்ற அந்த தேவீ சொல்கிறாள் " கம்ஸா! என்னைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றாயே! உன்னால் என்னைக் கொல்ல முடியுமா? நானும் உன்னைக் கொல்லப் பிறந்தவள் அல்ல. உன்னைக் கொல்ல வேறு ஒருவன் இங்கு மிக அருகிலேயே பிறந்திருக்கிறான். தேவகீ வஸுதேவரைத் துன்புறுத்துவதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் உன்னைக் கொல்லப் போவதும் இல்லை. நீ விவேகியாக இருந்தால் இதுவரை நீ செய்த தீய செயல்கள் போதும். அதை நிறுத்திக் கொள். இனிவரும் வாழ்க்கையில் நல்லதையே நினை, நல்லதையே கேள், நல்லதையே செய். என்று சொல்லி மறைந்தாள். அன்னை கருணாமயி அல்லவா? அதனால் கம்ஸனுக்கும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தந்தாள்.

 

14. போஜராட் ஸ்வாநதகநாசனாய

   ஸர்வான் சிசூன் ஹந்து மரம் பலிஷ்டான்

   வத்ஸாக முக்யான் அஸுரான் நியுஜ்ய

   க்ருதார்த்தம் ஆத்மானம் அமன்ய தோச்சைஹி

       கம்ஸன் உடனே தன் மந்திரிகளான தேனுகன், கேசி, பிரலம்பன், வத்சகன் ஆகிய அஸுரர்களை அழைத்தான். "யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால் உடனே அதை என் பொருட்டு கொன்று விடுங்கள்" என்றான். எத்துணை கல் மனம் கொண்டவன் கம்ஸன். பிறருக்குத் துரோகம் செய்தால் அது நமக்கே தீமையாக முடியும். மரணம் என்பதை யாராலும் தவிற்க முடியாது. நாம் வாழும் வாழ்க்கையில், இயன்ற வரை நல்லதையே செய்ய வேண்டும். அதுவே தனக்கும் பிறருக்கும் நன்மை தரும். இதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல ஸத்சங்கம் வேண்டும். அப்பொழுதான் நல்லவைகளை அறிந்து செயல்பட முடியும். கம்ஸனுக்குக் கிடைத்தது என்ன? துஷ்டர்களின் சகவாசம். அதனால் தான் அவன் துஷ்டன் ஆனான்.

 

15. கம்ஸோ Sஸ்தி மே, சேதஸி காமலோப-

   - க்ரோதாதிமந்தரி,ப்ரவரை: ஸமேதஹ

   ஸத்பாவஹந்தா, கலு நந்தபுத்ரி!

   தம் நாசய; த்வச், சரணம் நமாமி

       கம்ஸன் துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் பொழுது பிறந்தான் என்று நாம் நினைக்கிறோம். அவன் அப்பொழுது பிறக்கவில்லை.  எப்பொழுதும் இருக்கிறான்இப்பொழுதும் இருக்கிறான். எங்கு இருக்கிறான்?  எல்லோர் மனதிலும் இருக்கிறான். அவன் என்ன செய்வான்? மனதில் இருக்கும் நல்ல எண்ணங்களை நசிக்கச் செய்வான். இந்தக் கவி நினைக்கிறார் என் மனதில் ஸத் சுபாவங்கள் வரவில்லை. அதனால் என் மனதில் கம்ஸன் இருக்கிறானோ என்று சந்தேகப் படுகிறேன் என்கிறார். கம்ஸனின் மந்திரிகள் போல் மனதில் தீய எண்ணங்களை வளர்க்கும் மந்திரிகள் யார்? காமம், க்ரோதம், லோபம் போன்றவைகள். இவைகள் நம்மிடம் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேவியை மனதில் நிறுத்த வேண்டும். அந்த லோகமாதா  மனதில் இருந்து அனைவரையும் காப்பாற்றட்டும். 

இருபத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது

 

தசகம் 22

கிருஷ்ண கதை

 

1. ஸ்ரீ : பதிர், கோமலமூத்ரகந்திஹி

  அஸ்தப்ரபோ கோப,குலே விஷண்ணஹ

  க்ருஷ்ணாபிதோ வத்ஸ,பகாதிபீதஹ

  ருதன் ஸதா தேவி! நினாய பால்யம்

       ப்ருகு முனிவரின் சாபத்தாலும், கர்மவினைகளலும் அவதரித்த கிருஷ்ணன், கோகுலத்தில், பசுக்கள், கன்றுகள், அவைகளின் சாணம், மூத்திரம் இவைகளின் இடையில் வளர்கிறார். அவர் மனதில், வத்ஸாஸுரன் வருவானோ, பகன் வருவானோ அல்லது பூதகி வருவாளோ, யார் எந்த வேடத்தில் வருவார்களோ என்று பயத்தில் இருக்கிறார். அதனால் அவர் முகம் வெளுத்து தைரியம் குறைந்து காணப்படுகிறார். யார் தன்னைத் தூக்கினாலும் இது வத்ஸனோ, பூதனையோ என்று பயந்து காணப்படுகிறார். மனதில் பயம் வந்தால் தைரியம் போய் விடுகிறது.

 

2. ஹையம்கவீனம், மதிதம் பயச்ச

  கோபீர் விலஜ்ஜஹ, ஸததம் யயாசே

  சாம்பயா கோர,ஸசௌர்ய சுஞ்சுஹு

  ருலூகலே பா,சவரேண பத்தஹ

       கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் மிகவும் விஷமம் செய்கிறான். ஆனால் யாதவர் குலத்திலே எல்லோருக்கும், மாடு கறப்பதும், தயிர் கடைவதும், வெண்ணை எடுப்பதும், வியாபாரம் செய்யப் போவதும், என இதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. கிருஷ்ணனைக் கவனிக்க முடியவில்லை. அதனால் கிருஷ்ணன் கோபிகைகளின் வீட்டிற்குச் சென்று பால், வெண்ணை, தயிர் சாப்பிடக் கேட்கிறான். சில சமயம் திருடியும் சாப்பிடுகிறான். இதை அறிந்த யசோதைக்குக் கோபம் வருகிறது. அதனால் கிருஷ்ணனை இப்படிச் செய்யாதே என்று உரலில் கட்டிவிடுகிறாள். உலகத்தையே ரட்க்ஷிக்கும் விஷ்ணு இப்படி உரலில் கட்டப்பட வேண்டுமா? கர்ம பலனால் ஏற்படும் கஷ்டத்தை நாம் எப்படி உணர்ந்துகொள்வதுஅதற்காகத்தான்.

 

3.  வனேஷு பீமாத,பசுஷ்க காத்ரஹ

  காச்சாரயன் கண்ட, வித்தபாதஹ

  வன்யாம்புபாயீபலமூல பக்ஷீ

  தினே தினே க்ளானி,மவாப க்ருஷ்ணஹ

       தன்னுடைய 5 ஆவது வயதிலே மாடு கன்றுகளை மேய்க்கும் வேலைகளைச் செய்கிறார். நல்ல வெய்யிலிலே, காலில் செருப்பு கூட இல்லாமல், கல்லும், முள்ளும் இருக்கும் பாதையிலே போவாராம். போகும் வழியிலே ஏதோ மரத்தில் கிடைக்கும் பழங்களைப் பசிக்குச் சாப்பிடுவாராம். அதனால் கிருஷ்ணன் மிகவும் சோர்ந்து போய் விட்டாராம்.

 

4. தைவேன முக்தஹ, கோபதாஸ்யாது

  அக்ரூரநீதோ, மதுராம் ப்ரவிஷ்டஹ

  கம்ஸம் நிஹத்யாபி ஹதாபிலாஷஹ

  ஸ்தத்ரோக்ர ஸேனஸ்ய, பபூவ தாஸஹ

       வஸுதேவரின் சகோதரரான அக்ரூரைக் கிருஷ்ணனை மதுராவிற்கு அழைத்து வரும்படி கம்ஸன் அனுப்பி வைக்கிறான். கம்ஸன் கிருஷ்ணனைக் கொல்ல பலவிதமாக முயற்சிகள் செய்தும் பலனில்லை.

 

5. த்ருஷ்ட்வா ஜராஸந்தசமூம் பயேன

  ஸபந்துமித்ரோமதுராம் விஹாய

  தாவன் கதஞ்சித்பஹுதுர்க்கமார்த்தஹ

   த்வாரகா த்வீ,பபூரம் விவேச

       மகத நாட்டு அரசனான ஜராசந்தன், தன் இரு பெண்களையும் கம்ஸனுக்குக் கல்யாணம் செய்து தருகிறார். உக்ரசேனனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். கம்ஸனைக் கிருஷ்ணன் கொன்றதால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் பகை ஆகிறான். அதனால் மதுராவை ஆக்ரமித்து 17 நாள் போர் செய்கிறான். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஜராசந்தன் மிலேச்சியர்களின் அதிபதியான பலிஷ்டனான காலபவனை சண்டைக்கு அனுப்புகிறான். இவனுக்கு பயந்து கிருஷ்ணன், யாதவர்கள், பலராமன், உறவினர்கள் எல்லோருடனும் துவாரகைக்குச் சென்று விடுகிறார். பலத்த கோட்டைக் காவலில் அங்கு வசித்து வருகிறார்.

 

6.  ருக்மிணீம் ஜாம்பவதீம் சபாமாம்

  கன்யாஸ்ததா த்வ்யஷ்டஸஹஸ்ரம் அமன்யாஹா

  ஸமுத்வஹன்ஸஸ்மிதநர்மலாபஹ

  க்ரீடாம்ருகோSபூத்ஸததம் வதூனாம்

       கிருஷ்ணன் ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமை, மித்திரவிந்தை, காளிந்தீ, லக்ஷ்மணை, நாக்னஜிதி, பத்திரை ஆகிய 8 பேரையும் கல்யாணம் செய்து கொள்கிறார். ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருந்த 16,000 கன்னிகைகளையும் மீட்டு, மணம் செய்து கொண்டு 16,008 பத்தினிகளுடன் சுகமாக ஆனந்தமாக இருந்தார். அந்தப் பெண்கள் கூடக் கிருஷ்ணனை மிகவும் ஆட்டி வைத்தார்களாம். பாவம் கிருஷ்ணன்.

 

7.  தஸ்யுவ்ருத்தி,ஸ்த்ரி திவாஜ்ஜஹார

  பாமாநியுக்தஹஸீரபாரிஜாதம்;

  ஸத்யா  தம் கோவ்ருஷவத் ஸரோஷம்

  பத்வா தரௌ துர்,வசஸாSப்யஷிஞ்சது

       ஒரு நாள் சத்யபாமை, தனக்கு இப்பொழுதே பாரிஜாத மலர் வேண்டும் என்று அடம் பிடித்தாள். பத்தினிகளின் ஆசையைப் பூர்த்தி செய்வது கணவனின் கடமை அல்லவா? பாரிஜாத மரம் சொர்கத்தில் இருக்கிறது. கிருஷ்ணன் அங்கு சென்று, அந்த மரத்தைத் திருடிக் கொண்டு வரும் பொழுது, தேவர்களுடன் யுத்தம் செய்து, அந்த மரத்தை பாமாவின் இல்லத்தில் நட்டு வைத்தார். அதனால் சொர்கத்திலே கிருஷ்ணனுக்குக் கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தது. மற்றொரு நாள் தான் சொல்வதைக் கேட்க வில்லை என்று திட்டுகிறாளாம். இப்படி ஒவ்வொரு வகையாக கிருஷ்ணன் அனுபவிக்கிறார்.

 

8. ஸ்ரீ நாரதாயாதி,தயே தயா

  தத்தோத முக்தோ, முனினா நீதஹ

  ததஸ்தயாஸ்மை கனகம் ப்ரதாய

  புனர் க்ருஹீத,ஸ்த்ரபயாSS மௌனம்

       ஒரு நாள் சத்யபாமா கோபித்துக் கொண்டு கிருஷ்ணனை மரத்தில் கட்டிவிட்டாள். அப்பொழுது நாரதர் அங்கு வந்தார். உடனே சத்யபாமா கோபத்தில் "நீங்கள் இந்தக் கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னாள். நாரதருக்குக் கசக்குமா? உடனே அவர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அவருடைய வஸ்த்ரங்களையும் தான் அணிந்து கொள்கிறார். கிருஷ்ணனுடன் போகிறார். சத்யபாமாவிற்குக் கோபம் தணிந்து, நாரதர் பின்னால் ஓடுகிறாள். கிருஷ்ணனைத் திருப்பிக் கேட்கிறாள். பவுன் தந்தால் தான் திருப்பித் தருவேன் என்று நாரதர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு மாட்டை மரத்தில் கட்டவோ அல்லது யாருக்கேனும் தானம் தரவோ மாட்டின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணன் நிலையும் அதுபோலவே ஆனது.

 

9. ஸுதீக்ருஹாத் பீஷ்ம,கஜாஸுதே

  ப்ரத்யுனநாம்னீச்வரி: சம்பரேண

  ஹ்ருதே சிசௌ நிர்,மதிதாபிமான

  உச்சைருதம்ஸ்த்வாம், சரணம் ப்ரபன்னஹ

       சில காலம் சென்று ருக்மிணி தேவி ஒரு அழகான குழந்தையைப் பெற்றாள். அவன் தான் பிரத்யும்னன். கிருஷ்ணன் குழந்தையைப் பார்ப்பதற்கு முன், சம்பராசுரன் பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். பிறந்த குழந்தையைக் காணவில்லையே என்று அனைவரும் கவலை கொண்டனர். கிருஷ்ணன் புத்திர துக்கத்தால் அழுகிறாராம். எப்படி நம் புத்திரனைக் கண்டுபிடிப்பது என நினைக்கும் போது தேவிதான் ஒரே வழியென்று அன்னையைத் துதிக்கிறார். அன்னையும் அவர் முன் தோன்றி " கிருஷ்ணனே! இது உன் முன் ஜன்ம சாபத்தால் வந்தது. என் அனுக்ரஹத்தால் உன் மகன் சம்பராசுரனை வதம் செய்து, 16 ஆவது வயதில் உன்னிடம் வந்து சேர்வான்" என்று சொன்னாள். கிருஷ்ணனும்  கவலை நீங்கியவராக இருந்தார்.

 

10. புத்ரார்த்தினீம் ஜாம்பவதீம் அபுத்ராம்

   தோஷயிஷ்யன் உபமன்யுசிஷ்யஹ

   முண்டீ தண்டீ சிவஸ்ய சைலே

   மந்த்ரம் ஜபன் கோர,தபச்சகார

       ஜாம்பவதிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் கிருஷ்ணர் அவளை சிவனை நினைத்துத் தவம் செய் என்று சொல்கிறார். அதனால் கிருஷ்ணன், ஜாம்பவதியுடன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, யோக தண்டத்துடன், ஒரு காலில் நின்று கொண்டு 6 மாதம் தவம் செய்கிறார். சிவனும் அவர்கள் முன் காட்சி தந்தார்.

 

11. வரேண பர்க்கஸ்ய தசாSத்மஜான் ஸா

   ப்ராஸூத; ஸர்வா, தயிதாச்ச சௌரேஹே

   ததைவ; லப்த்வா, ஸுதாயுதானி

   ஸுகம் லேபே, நிஜகர்மதோஷாது

       சிவன் காட்சி தந்ததும் ஸம்சாரத்தில் பெண் ரூபமான பாசத்தால் நான் கட்டப் பட்டிருக்கிறேன். மானிட ஜன்மம் எடுத்து நான் மிகவும் துக்கப்படுகிறேன். ஜாம்பவதிக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று சொல்லி கிருஷ்ணன் அழுகிறார். சிவன் ஜாம்பவதிகுப் பத்து  குழந்தைகள் பிறக்கும் என்று அருள் செய்கிறார். அவளுக்கு மட்டுமல்ல கிருஷணனின் எல்லா பத்னிகளுக்கும் ஆளுக்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் கிருஷ்ணனுக்கு மனதில் சந்தோஷம் இல்லை. அதற்குக் காரணம் கர்மபலனே.

 

12. சாபாத்ருஷீணாம், த்ருதராஷ்ட்ர பத்ன்யாச்ச

   அன்யோன்ய வைரேண, க்ருதாஹ வேஷு

   ஸர்வே தா; ஹந்த! குலம் யதூனாம்

   மஹத் ப்ரதக்தம், வனமக்னி நேவ

       கிருஷ்ணனுக்கு நிறைய குமாரர்கள் இருந்தும் சுகம் இல்லை. ஒரு நாள் கிருஷ்ணனின் குமாரன் ஒருவன் நிறைமாத கர்பிணிப் போல வேடம் தரித்து, ஒரு மஹரிஷியிடம் சென்று வயிற்றில் இருப்பது என்ன குழந்தை? என்று கேட்கிறான். கோபம் அடைந்த மஹரிஷி உன்னால் உங்கள் வம்சமே அழியும் என்று சாபம் தருகிறார். மேலும் மஹாபாரத யுத்தம் முடிந்ததும், தன்னுடைய புதல்வர்கள் அனவரும் அழிந்ததால், காந்தாரி வருத்தப் படுகிறாள். அவள் கிருஷ்ணனிடம் நீ நினைத்திருந்தால் இதைத்  தவிர்த்திருக்கலாமே! ஆனால் நீ பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தாயே! அதனால் இன்று முதல் 36 வருடம் கழிந்து உன் புத்திரமார்களும் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மாண்டு போவார்கள் என்று அவளும் சாபம் தந்தாள்.

 

13. வ்யாதேஷு வித்தோ, ம்ருதிமாப க்ருஷ்ணஹ

   குசஸ்தலீ சாப்திஜலாளு தாSபூது

   ஹா! ஜஹ்ரிரே தஸ்,யுபிரேன ஸாஷ்டா

   வக்ரஸ்ய சாபேன, யதுஸ்த்ரியச்ச

       ஒரு நாள் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் பொழுது அவர் காலடியைக் கண்டு ஒரு மிருகம் அங்கு வருகிறது. மிருகத்தைக் கண்ட வேடன் அம்பை விடுகிறான். அது கிருஷ்ணனின் காலில் படுகிறது.

 

14. ஏவம் ஹரி: கர்ம,பலான்யபும்க்தஹ

   கோபி முச்யேத, கர்ம பந்தாது

   துக்கம் த்வ பக்தஸ்ய, ஸுதுஸ்ஸஹம் ஸ்யாது

   பக்தஸ்ய தே தத்,ஸுஸஹம் பவேச்ச

       விஷ்ணு மும் மூர்த்திகளில் ஒருவர். அதுவும் காக்கும் கடவுள். அவர் சாபத்தினால் மேலும் மேலும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவர் தேவீ பக்தர். அதனால் எத்தனை கஷ்டம் வந்தாலும் அவரால் அதைத் தாங்கிச் சமாளிக்க முடிந்தது. தெய்வ பக்தியில்லாவிட்டால் கஷ்டங்களைத் தாங்க மனதில் திடம் இருக்காது. மலை போலக் கஷ்டம் வந்தாலும் அதைத் துரும்பு போல் சமாளிப்பதற்குத் தேவியின் அருள் வேண்டும்.

 

15. ஜானாஸ்யஹம் தே, பதயோர் அபக்தஹ

   பக்தோ நு கிம் வேதி, சைவ ஜானே

   த்வம் ஸர்வசக்தா, குரு மாம் ஸுசக்தம்

   ஸர்வத்ர; பூயோபி, சிவே! நமஸ்தே

       இந்த தேவீ நாராயணீயத்தை எழுதும் கவிக்கு திடீரென ஒரு சந்தேகம் வருகிறது. நான் பக்தனா? அபக்தனா? இது யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரியாது. தேவிக்குத் தான் தெரியும். நான் அபக்தனாக இருந்தால் எனக்கு பக்தியைத் தந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

இருபத்தி இரண்டாம் தசகம் முடிந்தது

 

தசகம் 23

மஹாலக்ஷ்மி அவதாரம்

 

மஹிஷாஸுரன் என்பவன் யார்? அவனுக்கு மஹிஷ ரூபம் எப்படி வந்தது?

       பூமண்டலத்தில் தனு என்பவனுக்கு, ரம்பன் கரம்பன் என்று இரு பிள்ளைகள். அதில் கரம்பன் பஞ்சநதம் என்னும் தீர்த்தத்தில் மூழ்கியும், ரம்பன் அந்த மரத்தின் அடியில் பஞ்சாக்னியின் மத்தியில் நன் மக்கள் பேறு வேண்டி தவம் செய்து வந்தனர். இதை அறிந்த இந்திரன் முதலை ரூபம் எடுத்து கரம்பன் நதியில் குளிக்கும் போது, அவன் காலைப் பிடித்து நீரில் இழுத்தான். அதனால் அவன் மரணம் அடைந்தான்.  இதைப் பொறுக்க முடியாத ரம்பன், தன் சிரஸை வெட்டி அக்னியில் ஹோமம் செய்யத் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, வாளால் வெட்டத் தொடங்கிய பொழுது, அக்னி பகவான் தோன்றினார். சாவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார். தேவ, தைத்ய, மானிடர்களால் ஜெயிக்க முடியாத மிகவும் பராக்ரமசாலியான புத்திரன் வேண்டும்" என்றான். அப்படியேஆகட்டும் என்று சொல்லி அக்னி தேவர் மறைந்தார்ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு எருமையைக் கண்டு, காமவெறி கொண்டு, அதன் அருகில் சென்று புணர்ந்தான். அதுவும் கர்பமானது. அதை ரம்பன் பாதாளத்தில் மற்ற கடா எருமைகள் அதை நெருங்காமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் ஒரு கடா எருமை அதன் மேல் வெறி கொண்டு துரத்த, ரம்பன் அதனுடன் மோதி, அந்த எருமை ரம்பனைக் கொன்றது. அந்தக் கடா மேலும் எருமையைத் துரத்த, அந்த எருமைத் தன் அருகில் அதை நெருங்கவிடாமல், மீண்டும் தான் முன்பு இருந்த ஆலமரத்தடிக்குச் சென்று யக்ஷர்களைச் சரணடைந்தது. தன்னை விடாமல் துரத்தி வரும் கடாவை, நெருங்கவிடாமல் வரும் எருமையைக் கண்ட அவர்கள் அதைக் காப்பதற்குக் கடாவைக் கொன்றனர்தன் கணவனான ரம்பனோடு தானும் அக்னியில் விழ அந்த எருமை முயற்சித்த போது, யக்ஷர்கள் தடுத்தும் பயனின்றி அது அக்னியில் விழுந்தது. அப்போது அதன் கர்பத்திலிருந்து ரக்தபீஜனாகிய மஹிஷன் வெளிப்பட்டான்.

 

1. ரம்பஸ்ய புத்ரோ, மஹிஷாஸுர: ப்ராகு

  தீவ்ரைஸ்தபோபிர், த்ருஹிணாத் ப்ரஸன்னாது

  அவத்யதாம் பும்பிரவாப்ய த்ருஷ்டோ

  மே ம்ருதி: ஸ்யா, திதி வ்யசிந்தீது

       மஹிஷன் அரசாண்டு வரும் காலத்தில் அஸுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் வந்தது. அதனால் மஹிஷன் மேரு மலைக்குச் சென்று, ப்ரம்மனை இருதய கமலத்தில் தியானித்து பதினாறாயிரம் வருடங்கள் தவம் செய்தான். பிரம்மனும் மகிழ்ச்சி கொண்டு ஹம்ஸ வாகனத்தில் காட்சி தந்து "என்ன வரம் வேண்டும் கேள்" என்றார். மஹிஷனும் "நான் மரணம் அடையாதிருக்கும் படி அனுக்ரஹம் செய்ய வேண்டும்" என்றான். ப்ரம்மன் சொன்னார் "ஜனனம் மரணம் இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. நானும் அவ்விதிக்குக் காட்டுப்பட்டவனே. அதனால் இதை விட்டு வேறு வரம் கேள்" என்றார். மஹிஷன் சொன்னான் "எனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, தைத்யர்களாலோ மற்றும் எந்த ஆணாலும் மரணம் வரக்கூடாது. அப்படியே மரணம் வந்தாலும், ஒரு பெண்ணால் வரட்டும்" என்றான். அவன் நினைத்தான் தானோ மிகவும் பலசாலி. அதனால் ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படி வரம் கேட்டான். அவன் பெண்ணான அந்த பராசக்தியை மறந்து விட்டான்.

 

2. சிக்ஷுராத்யைர் அஸுரை: ஸமேதஹ

  சக்ராதிதேவான், யுதி பத்மஜம்

  ருத்ரம் விஷ்ணும் விஜித்ய நாகே

  வஸன் பலாத், யக்ஞஹவிர் ஜஹார

       மஹிஷன் சக்ஷுசுரன், மஹாவீரியன், மதோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதர்க்கன், பிடலாக்கியன், பாஷ்கலன், த்ரிநேத்திரன், காலன், பந்தகன் ஆகியோரை சேனாதிபதிகளாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆக்ரமித்து, அதுமட்டும் இல்லாமல் தேவர்களையும் சொர்க்கலோகத்தில் இருந்து விரட்டி விடுகிறான். அவர்களுக்கான ஹவிர் பாகங்களையும் தானே எடுத்துக் கொள்கிறான். தேவர்களுக்கு இருக்க இடமும் இல்லை. சாப்பிட உணவும் இல்லை.

 

3. சிரம் ப்ருசம் தைத்ய, நிபீடிதாஸ்தே

  தேவா: ஸமம் பத்மஜசங்கராப்யாம்

  ஹரீம் ஸமேத்யாSSஸுரதௌஷ்ட்யம் ஊசூஹு

  ஸத்வாம் ஸம்ஸ்மரன் தேவி! முராரிராஹ:

       மஹிஷனின் சேனைகளால் எங்கு சென்றாலும் துன்பம் வர, தேவர்கள் ப்ரம்மாவிடம் சென்று உதவி கேட்கிறார்கள். சங்கரரையும், விஷ்ணுவையும் சந்தித்து, அதன் பின், நாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அதனால் கைலாஸம் போவோம் என்று அங்கு போனார்கள். பின் சிவனுடன் விஷ்ணுலோகம் போனார்கள். அதன் பின் அவர்கள் எல்லோரும் சேர்ந்துத் தேவியைச் சரண் அடைவோம் என்று அங்கு போனார்கள்.

 

4. ஸுரா வயம் தேந, ரணேSதிகோரே

  பராஜிதா; தைத்ய,வரோ பலிஷ்டஹ

  மத்தோ ப்ருசம் பும்பிர் அபத்யபாவாந்

  : ஸ்த்ரியோ யுத்த விசக்ஷணாச்ச

       இதற்கு முன்பே மும்முர்த்திகளும்  தேவர்களுடன் சென்று, மஹிஷனுடன் சண்டை செய்து தோல்வியையேத் தழுவினர். காரணம் என்ன? அவன் பெற்ற வரமே. தேவர்கள், மனிதர்கள், தைத்யர்கள் யாரும், எந்த ஆணும் அவனை வெற்றி கொல்ல முடியாதுமும்மூர்த்திகளின் பத்னிகளுக்கோ தேவர்களின் பத்னிகளுக்கோ யுத்தம் செய்யத் தெரியாது. என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.

 

5. தேஜோபிரேகா, பவதீஹ நச்சேது

  ஸைவாஸுரான் பீமபலான் நிஹந்தா

  யதா பவத்யேததரம் ததைவ

  ஸம்ப்ரார்த்தயாமோS,வது நோ மஹேசீ

       விஷ்ணு ஒரு முடிவு செய்கிறார். எல்லா தேவர்களுடைய சக்தியையும் நம் மூவரின் சக்தியையும் ஒன்று சேர்த்து ஒரு பெண் உருவானால் அவளால் தான் அந்த துஷ்டனை வதம் செய்ய முடியும். நம்மிடம் இருக்கும் சக்திகள் அந்த தேவிசக்திகள் தந்தது தானே. அதனால் நாம் எல்லோரும் அந்த பராசக்தியை வழிபடுவோம் என்று துதிக்க ஆரம்பித்தனர்.

 

 

6. ஏவம் ஹரௌ வக்தரி பத்மஜாதாது

  தேஜோSபவத் ராஜஸ ரக்தவர்ணம்

  சிவாதபூத் தாம,ஸரௌப்யவர்ணம்

  நீலப்ரபம் ஸாத்விக,மச்யுதாச்ச

       அவர்கள் தேவியின் ஸ்துதி பாட ஆரம்பித்தவுடன், ப்ரம்மாவிடமிருந்து தீப் பொறி போல் ஒரு தேஜஸ் வெளிப்பட்டது. அது காணக் கண் கூசும்படி பிரகாசித்தது. சிவப்பு வர்ணமாக உஷ்ணமும், குளிர்ச்சியும் கலந்து இருந்தது. அது ரஜோகுணப் பிரதானமான தேஜஸ். சிவனிடமிருந்து தமோகுணத் தேஜஸ் வெண்மை நிறமுடன் வெளிப்பட்டது. விஷ்ணுவிடமிருந்து நீல நிறத்தில் ஸத்வ குண தேஜஸ் வந்தது. ஆக ஸத்வ, ரஜோ, தமோ குண தேஜஸுகள் மும் மூர்த்திகளிடமிருந்து வந்தன.

 

7. தேஜாம்ஸ்ய பூவன், விவிதானி சக்ர-

  -முகாமரேப்யோ, மிஷதோ கிலஸ்ய

  ஸம்யோகதஸ்தான்,யசிரேண மாதஹ!

  ஸ்த்ரீரூபமஷ்டாத,சஹஸ்தமாபுஹு

       இந்திரன் முதலான மற்ற எல்லா தேவர்களிடமிருந்தும் தேஜஸ் வந்தபடி இருந்தது. அது மஹா அற்புதமாக இருந்தது. எல்லாம் ஒன்று சேர்ந்து 18 கைகள் உடைய ஒரு பெண் உருவம் தோன்றியது. முகம் சங்கரரின் தேஜஸ், சுருண்டமுடி யமனின் தேஜஸ், 3 கண்களும் அக்னியின் தேஜஸ், மூக்கு குபேரனின் தேஜஸ், 18 கைகளும் விஷ்ணுவின் தேஜஸ் இதுபோன்று எல்லோருடைய தேஜஸும் சேர்ந்து ஒரு பெண் உருவம் தோன்றியது.  யார் இப்படி எல்லோருடைய தேஜஸையும் ஒன்று சேர்த்து பெண் உருவாக ஆக்கியது? அந்த பராசக்தி தான். இதைத்தானே விஷ்ணுவும் சொன்னார். அந்த பெண்ணின் உருவத்தைக் கண்டதும், அனைத்து தேவர்களும் இனி பயமில்லை என்று சிறிது கவலையை விட்டனர்.

 

8. தத் து த்வமாஸீ: சுபதே! மஹால-

  க்ஷ்ம்யாக்யா, ஜகன்மோஹன மோஹனாங்கீ

  த்வம் ஹ்யேவ பக்தா,பயதானதக்ஷா

  பக்த த்ருஹாம் பீதிகரீதேவி!

 

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ தனயாம் சீரங்க தாமேஸ்வரீம்

தாஸீ பூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்க்ருபாம்

ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்

த்வாம் தைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்

      

18 கைகளோடு தோன்றிய அந்த தேவி யார்? நினைத்த போது நினைக்கும் உருவம் எடுக்கக் கூடியவளல்லவா அன்னை? அந்த பகவதி தேவி தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம். பக்தர்களுக்கு அபயம் தர எடுத்த அவதாரம். பார்ப்பதற்கு மிக மிக சுந்தர ரூபம். பவழம் போன்ற உதடுகள், 18 கைகளிலும் ஆயுதங்கள், மூவர்ணக் கலர், சகலவிதமான ஆபரணங்கள், எல்லா தேவர்களும் அவரவர் ஆயுதங்களையும், ஆபரணங்களும், சிங்கவாஹனமும் கொடுத்தனர். இவைகளோடு பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அதி சுந்தர உருவம். ஆனால் அஸுரர்களான துஷ்டர்களுக்குப் பயம் தரும் உருவம்.

 

9. ஸ்த்யஸ்த்வ முச்சைச், க்ருஹே&ட்டஹாஸம்;

  ஸுரா: ப்ரஹ்ருஷ்டா; வஸுதா சகம்பே;

  சுக்ஷோப ஸிந்துர்; கிரயோ விசேலூர்;

  தைத்யஸ்ய மத்தோ மஹிஷச்சு கோப

       தேவியின் ரூபத்தைக் கண்ட தேவர்கள் நம்மைக் காப்பாற்ற தேவி வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். தாயே! நீயே சகல தேவர்களுக்கும் புகலிடம் என்று சொல்லி நமஸ்கரித்தனர். தேவியும் இனி நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி தான் அவதரித்த நோக்கத்தை நிறை வேற்ற அட்டகாஸமாகச் சிரித்தாள். சப்தம் கேட்டு எண்திசைகளும் நடுங்கின. இந்த அலறல் சப்தம் கேட்ட மஹிஷன் யார் இப்படி சிரிப்பது? என்று கோபம் கொண்டான்.

 

10.  த்வாம் ஸுந்தரீம்சார முகாத்  தைத்யோ

   விஞ்ஞாய காமிவிஸஸர்ஜ தூதம்

    சேச்வரீம் தைத்ய,குனான் ப்ரவக்தா

   த்வாம் நேது காமோவிபலோத்ய மோSபூது

       அந்த சப்தம் கேட்ட மஹிஷன் உடனே தூதர்களை அழைத்து "யார் இப்படி சப்தம் செய்ததது? அவன் எங்கிருக்கிறான்? என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறான். சென்ற தூதர்கள் அங்கு தேவியைப் பார்த்து திக்பிரமையோடு ஓடி வந்து "ஐயா! கர்ஜனை செய்தது ஒரு பெண். அவள் வீரமும், சிருங்காரமும் ஒருங்கே இணைந்த அழகினை உடையவளாக இருக்கிறாள் என்று சொன்னதும் மஹிஷனுக்கு காம உணர்வு எழுகிறது. அதனால் தூதுவனை மீண்டும் அனுப்பி என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல் என்று அனுப்புகிறான். அவனும் தேவியிடம் சென்று மஹிஷன் மிகுந்த பலசாலி, தேவர்களை வெற்றி கண்டவன், மிகுந்த அழகுடையவன், மன்மத லீலைகளில் வல்லவன் என்று மஹிஷாசுரனைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து, அவன் உங்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான். அதனால் நீங்கள் என்னுடன் வந்து, அவனை மணக்க வேண்டும் என்று சொன்னான்ஆனால் தேவியிடம் ஒன்றும் எடுபடவில்லை. அவன் அதை மஹிஷனிடம் சொல்கிறான். இருந்தாலும் மஹிஷன் ஆசையை விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான்.

 

11. ப்ரலோபநைஸீத்வாம், அமத தேவசக்தீம்

   ஞ்யாதவாSபி வாக்யைர் அனு நேது காமஹ

   ஏகைகச: ப்ரஷயதிஸ்ம தூதானு

   த்வாம் காமினீம் கர்தும் இமே சேகுஹு

       மஹிஷன் முயற்சியைக் கைவிடாமல் தாம்பிரன் என்னும் மந்திரியை அனுப்புகிறான். அன்னை சொல்கிறாள். " மஹிஷனே! நீ எனக்குச் சமமாக ஆகமுடியுமா? என் லட்க்ஷணம் எங்கே? உன் அவலக்ஷணம் எங்கே? இந்த ஆசையை விட்டுவிடு. இந்திரனுக்குரிய யக்ஞபாகத்தையும் சுவர்கத்தையும் அவனிடம் திருப்பிக் கொடு. நீ உன் அஸுரர் கூட்டத்துடன் பாதாளம் போய்விடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வது நிச்சயம் தாம்பிரனே போய் உன் அரசனிடம் சொல் என்று கர்ஜனைக் குரலில் சொன்னாள்தாம்பிரன் மஹிஷனிடம் இதைச் சொல்கிறான். ஆனாலும் மஹிஷனுக்கு ஆசை விடவில்லை. இவ்வளவு அழகாக இருக்கிறாளே எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல தூதர்களை அனுப்பிய படி இருக்கிறான். ஆனால் எந்த பலனும் இல்லை. தேவிக்கு அவனிடம் அன்போ பரிதாபமோ இல்லை. அதனால் பாஷ்கலன், துர்முகன், தாம்பிரன், சிக்ஷுரன் போன்றப் பல தூதர்களைத்,  துஷ்டர்களை வதம் செய்கிறாள்.  தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

 

12. அவேஹி மாம் புச்சவிஷாணஹீனம்

   பாரம் வஹந்தம்மஹிஷம் த்விபாதம்

   ஹிம்ஸந்தி மாம் ஸ்வார்த்தி ஜனாஸ்தவமேவ

   ரக்ஷாகரீ மேசுபதேநமஸ்தே

       இந்தக் கவி சொல்கிறார் மஹிஷன் என்பது ஒரு மிருகம் புத்தி இல்லாதது. பாரம் சுமக்கும். பாரம் சுமக்க முடியாவிட்டால் கசாப்புக் கடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு இது நல்ல பாரம், இது கெட்ட பாரம் என்பதும் தெரியாது. அதற்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அதற்கு வாலும் கொம்பும்  இருக்கிறது. எனக்கு இல்லை. அதுவும் அடி வாங்கும். என்னையும் பலர் பல விததில் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ரக்ஷிப்பதற்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். நீதான் என்னை க் காக்க வேண்டும் என்கிறார்.

இருபத்தி மூன்றாம் தசகம் முடிந்தது

 

தசகம் 24

மஹிஷாஸுரவதம், தேவீஸ்துதி

 

1. தேவி! த்வயா பாஷ்,களதுர்முகாதி

  தைத்யேஷு, வீரேஷு, ரணே ஹதேஷு

  ஸத்வாக்யதஸ்த்வாம், அனுநேது காமஹ

  மோகப்ரயத்னோ, மஹிஷச்சுகோப

 

       மீண்டும் மஹிஷன் அசிலோமன் பிடாலன் ஆகியோரை அனுப்புகிறான். அவர்களால் தேவியின் மனதை மாற்ற முடியுமா? முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் இன்றி தேவியுடன் யுத்தம் செய்து அவர்களும் மரணத்தையே தழுவினர். மஹிஷன், அனைவரும் மாண்டு போயினர் என்ற செய்தி கேட்டு கலக்கமடைந்து, ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் இருந்தான்ஒரு முடிவுக்கு வருகிறான். தேவியைத் தன் வயப்படுத்துவதற்காக, ஒரு ஆணழகனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, மன்மதன் போல தனுர் பாணங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் ஏறி தேவீ இருக்கும் இடம் சென்றான். அவன் சொன்னான் "தேவீ! விசாலாக்ஷி! உன் அழகில் நான் மயங்கி விட்டேன். உன் கட்டளைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன். நீ எனக்கு மஹிஷி ஆக வேண்டும்" என்று இது போல் காமவெறி வேகத்தில் பிதற்றினான்தேவீ சொன்னாள் "மஹிஷா! உன்னை நான் நன்கு அறிவேன். நான் ஸம்சார பந்தத்தில் சிக்கும் ஸம்சார சக்தி இல்லை. அந்த துக்கத்தை போக்குபவள். நீ என்னிடம் இனிமையான வார்த்தைகள் சொன்னதால் உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தேவர்களிடம் த்வேஷத்தை விட்டு விட்டு பாதாளம் போய் சுகமாக இரு" என்றாள்மஹிஷன் சொன்னான்

"மான்வியாழிளே! எந்த பெண்ணும் பர்த்தா இல்லாமல் சுகம் காண முடியாது. அதனால் என்னை விவாஹம் செய்து கொள் என்று பிதற்றிய வண்ணம் இருந்தான். அன்னை சொன்னாள் " நீ உயிருடன் இருக்க நினைத்தால் நான் சொன்னதைச் செய். இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்" என்றாள்தன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் தேவீ இருப்பதைக் கண்டு, கோபத்துடன் யுத்தம் செய்யத் தொடங்கினான்.

 

2. த்வாம் காமரூப: குரபுச்ச,ச்ருங்கைர்ஹி

  நாநாஸ்த்ர சஸ்த்ரைச்ச ப்ருசம் ப்ரஹர்த்தா

  கர்ஜன், விநிந்தன், ப்ரஹஸன் தரித்ரீம்

  ப்ரகம்பயம்ச்சா,ஸுரராட் யுயோத

                மஹிஷன் மானிட ரூபம் விட்டு எருமையின் ரூபம் எடுக்கிறான். தேவியை வாலால் அடிக்கிறான். கொம்பால் குத்துகிறான். மனுஷ ரூபம் எடுக்கிறான். பாணங்களைப் பொழிகிறான். இப்படி இருவருக்கும் பயங்கர யுத்தம் நடக்கிறது. பூமியே இதனால் குலுங்குகிறதாம்.

 

3.  ஜபாருணாக்ஷீமதுபானதுஷ்டா

  த்வம் சாரிணாSரேர் மஹிஷஸ்ய கண்டம்

  சித்வா சிரோ பூமிதலே நிபாத்ய

  ரணாங்கணஸ்தாவிபுதைஸ்துதாபூஹூ

       யுத்தம் உச்சகட்டத்திற்கு வருகிறது. அப்பொழுது தேவீ மது அருந்தினாளாம். கண்கள் செம்பருத்திப் பூ போலச் சிவந்து இருக்கின்றதாம். தன்னுடைய சக்ராயுதத்தால் மஹிஷனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறாள். தலையில்லாத உடல் பூமியில் விழுந்தது. அனைவரும் பரமானந்தம் அடைந்தனர். தேவர்கள் தேவியை நமஸ்கரித்து ஸ்துதி பாடினார்கள்.

 

4.  மாதஸ்த்வயா நோவிபதோ நிரஸ்தா

  அசக்ய மன்யைர்இத மத்புதாங்கி!

  ப்ரம்மாண்டஸர்க் ,ஸ்திதி நாசகர்த்ரீம்

  கஸ்த்வாம் ஜயேத் கேன கதம் குதோ வா?

       மஹிஷனின் வதத்தால் தேவர்கள் தங்கள் ஆபத்துக்கள் எல்லாம் நீங்கி ஸ்வர்கம் செல்கின்றனர். அவர்களின் யக்ஞ பாகத்தை மீண்டும் அடைகின்றனர். மஹிஷாஸுரனை யாராலும் ஜெயித்திருக்க முடியாது. அவன் இந்திராதி தேவர்களை வெற்றி கண்டவன். திரு மூர்த்திகளையும் ஜெயித்தவன். ஆனால் அம்பாளை அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து வரத்தை வாங்கினான். ஆனால் பெண்ணான தேவியால் மரணம் அடைந்தான்அனேக கோடி பிரம்மாண்டங்களின் நாயகியை வெல்ல யாராலும் முடியாது. எந்த உபாயமும் தேவியிடம் செல்லுபடி ஆகாது. இங்கு ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. எந்த தெய்வத்தைத் துதித்தாலும் முக்தி கிடைக்காது. ஏதேனும் ஒரு  கெட்ட நினவு வந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணம் வந்தால் முக்தி நிச்சயம் இல்லைமனத் தூய்மை இருக்கும் இடத்தில் தேவீ கட்டாயம் வருவாள். அதற்காக சந்யாசீ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த காரியம் செய்தாலும் அன்னையை நினைக்க வேண்டும். கை வேலை செய்தாலும் மனம் தேவியிடம் இருக்க வேண்டும்நமது அவசர வேலைகள் முடிந்த பின்னாவது அன்னைக்கு பாலோ, பழமோ அல்லது உணவோ கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும்எதைச் செய்யும் போதும் அது அன்னைக்கே என்ற நினைவு, துர்முகன், பாஷ்கலன் போன்ற துர் எண்ணங்களை விரட்டிவிடும். அன்னையை பூஜிப்பதற்கும் நாம் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அது நமக்காக அல்ல. தேவியை பூஜை செய்வதற்காக. அவரவர் சக்திக்கு ஏற்ப பூஜை செய்ய வேண்டும்பிறர் செய்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்ற நினைவுத் தேவை இல்லை. பகவானுக்குச் செய்கிறோம் என்ற நினைவுடன் நம்மால் முடிந்ததைச் செய்தால் அதுவே போதும்.

 

5.  வித்யா ஸ்வரூபாSஸி மஹேசியஸ்மின்

   வை பரேஷாம்ஸுகதகவிச்ச;

  த்வம் வர்த்தஸே யத்ர ஸதாப்யவித்யா-

    -ஸ்வரூபிணீ  த்வதமபசுஸ்யாது

 

       வித்யா ஸ்வரூபிணீயான தேவியை உபாஸிப்பவனுக்கு வித்தையில் எந்த குறைவும் வராது. அவனுக்கு ஞானம் கிடைக்கும். விபரீத புத்தி உள்ளவனிடம் தேவி அவித்யா ஸ்வரூபிணீ யாகத்தான் இருப்பாள். மஹிஷாசுரனிடத்தில் அப்படித்தான் இருந்தாள். எத்தனையோ நல்ல வழிகள் சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லவா?

 

6. க்ருபாகடாக்ஷா,ஸ்தவ தேவி! யஸ்மின்

  பதந்தி தஸ்யாSSத்,மஜ வித்ததாராஹா

  யச்சந்தி சௌக்யம், , பதந்தி யஸ்மின்

  ஏவ து: கம்,தததேஸ்ய நூனம்

       குடும்பத்தில் ஒருவன் பக்தியுடன் தேவியை உபாஸித்தால் அவன் மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். தனம், தான்யம், சம்பத்துக்கள் இவைகளுக்குக் குறைவே வராது. தரித்ரம் என்பதே இருக்காது. தேவீயை பூஜிப்பது ஒருநாளும் வீணாகாது. அனைவருக்கும் நன்மையே ஏற்படும்.

 

7.  பச்யாம நித்யம்தவ ரூபமேதது

  கதாச்ச நாமானி கீர்த்தயாம

  நமாம மூர்த்னா பதங்கஜே தே

  ஸ்மராம காருண்யமஹா ப்ரவாஹம்

       தேவியை பக்தியுடன் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். தேவர்கள் மஹிஷாஸுரமர்த்னியாகிய அம்பாளை பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உன்னை எங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் தினமும் மஹிஷாஸுரமர்த்தினியின் ஸ்தோத்ரம் பாடுவோம். உன்னுடைய கருணை எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்கள் .

 

8. த்வமேவ மாதாSஸி,  திவௌகஸாம் நோ

  நான்யா த்விதீயா, ஹிததானதக்ஷா

  அந்யே ஸுதா வா, தவ ஸந்தி நோவா;

  ரக்ஷிதா நஸ்,த்வத்ருதே, மஹேசி!

       தேவர்களுக்கு முன்னால் மஹிஷாஸுரமர்த்தினி நின்று கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குப் பல வேலைகள் இருக்கிறதல்லவா? அவளை உபாஸிப்பவர்கள் எத்தனையோ பேர்கள். அவளுடைய குழந்தைகளுக்குக் கணக்கே இல்லையே? பல கோடிக் குழந்தைகள். அதனால் தேவர்கள் சொல்கிறார்கள் அவர்களுக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஆனால் நீ எங்களைவிட்டுப் போகாதே என்கிறார்கள்.

 

9.  க்வ த்வம்வயம் க்வே திவிசிந்த்ய ஸர்வம்

  க்ஷமஸ்வ நோ தேவ்ய,பராதஜாலம்

  யதா யதா நோவிபதோ பவந்தி

  ததா ததா பாலய பாலயாஸ்மான்

       அஸுரர்களை ஜெயிப்பதற்காகத் தேவர்களும் ஆள்மாறாட்டம், திருட்டுத்தனம், கள்ளத்தனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். பிரகஸ்பதி சுக்ராச்சாரியார் போல் வேடம் பூண்டு, அஸுரர்களுக்கு தவறான வழிகளைச் சொல்லித் தருகிறார். இந்திரன், விருத்தாஸுரனிடம் அக்னியை சாட்சியாக வைத்து, நாம் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி, பின் அவனைக் கொல்கிறார். தேவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இதுபோல் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் உன் குழந்தைகள் அல்லவா? இதை நீ மன்னிக்க வேண்டும் என்று சரணடைகிறார்கள்.

 

10.  இதி ஸ்துவத்ஸு த்ரிதசேஷு ஸத்யஹ

   க்ருபாச்ருநேத்ரைவதிரோததாத

   ததோ ஜகத் தேவிவிபூதிபூர்ணம்

   பபூவ தர்மிஷ்ட,ஸமஸ்தஜீவம்

 

       இப்படித் தேவர்கள் துதிக்கும் பொழுது அன்னை மறைந்துவிடுகிறாள். பூமியில் எல்லா இடங்களிலும் ராஜாக்கள் அன்னையின் கோவில்களைக் கட்டினார்கள். மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கு ஏற்ப மக்களும் தேவியை வழிபட்டனர். எங்கும் மழை, தனம், தான்யம் பெருகியது. சுகமே நிலவியது. செல்வம் கொழித்தது. மக்கள் நிம்மதியாக ஆனந்தமாக இருந்தனர். மதுகைடபர் வதத்தில் தமோகுண ப்ரதானியாக அவதாரம் செய்தாள். மஹிஷ வதத்தில் ரஜோகுண ப்ரதானியாக மஹாலக்ஷ்மியாக அவதாரம் செய்தாள்.

 

11.  த்வாம் ஸம்ஸ்மரேயம்  வா ஸ்மரேயம்

   விப்தஸுமா விஸ்,மர மாம் விமூடம்

   ருதன் பிடாலார், கவன்ன கிஞ்சிது

   சக்னோமி கர்தும்;, சுபதேநமஸ்தே

       அன்னையின் அனுக்ரஹம் இருந்தால் தான் ஆபத்துக் காலங்களில் கூட, நாம் அன்னையை பூஜை செய்ய முடியும். அதற்கு பாக்யம் வேண்டும். புண்ணியம் வேண்டும். அதனால் இந்தக் கவி சொல்கிறார் நான் உன்னை பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும். பூனைக்கு அழத்தான் தெரியும். அதைப் போல கஷ்டம் வந்தால் எனக்கு அழத்தான் தெரியும். நான் மஹானில்லை. சில சமயம் சந்தர்ப்ப வசத்தால் நான் உன்னை மறந்திருக்கிறேன். மகன் தாயை மறந்தாலும், தாய் மகனை மறக்கக் கூடாது என்கிறார்ஏன் இப்படிச் சொல்கிறார் என்றால் சிலகாலம் அவர் தன் குல  தேவியை மறந்திருந்தார். அதனால் பல கஷ்டங்களைச் சந்தித்தார்சௌகர்யமாக இருந்த போது பேரும் புகழும் வந்த போது அன்னையை மறந்தார். கடைசீ காலத்தில் தேவியிடம் முறையிட்டார்கஷ்டம் வந்த போது அழுதார். அவர் பரம பக்தர். அன்னை நல்ல மரணம் தந்து அவரைக் காப்பாற்றினாள்.  அவர் ஒரு  நைஷ்டிக பிரம்மசாரி.

2008 ல் தான் இந்த ஸ்தோத்திரம் எழுதினார்.1976 ல் புட்டபர்த்தியில் நடந்த சண்டி ஹோமத்தில் அவர்தான் தேவீ பாகவத பாராயணம் செய்தார். வீட்டில் தினமும் தேவீ பூஜை செய்தார். அப்பொழுதான் அவருக்கு இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நாமும் இந்த பெருமைவாய்ந்த தேவியை பூஜை  செய்து சகல நன்மையையும் பெறுவோமாக!

இருபத்தி நான்காம் தசகம் முடிந்தது

 

தசகம் 25

மஹாஸரஸ்வதி அவதாரம் ( ஸும்பாதிவதம் )

 

1. அதாமரா; சத்ரு,விநாச த்ருப்தாஹா

  ச்சிராய பக்த்யா, பவதீம் பஜந்தஹ

  மந்தீபவத் பக்திஹ்ருத: க்ரமேண                       

  புனச்ச தைத்யாபிபவம் ஸ்மீயுஹு

       மகிஷன் மறைந்தவுடன் தேவர்கள் சூர்ய குல மன்னனான சத்ருக்னனை   மகிஷனின் சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு, தேவர்கள் தத்தம் இருப்பிடம் சென்றனர். அந்த ராஜ்யத்தில் உரிய காலத்தில் மழை பெய்தது. எல்லோரும் சுகமாக சந்தோஷமாக இருந்தனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேவியை மறக்கத் தொடங்கினார்கள். அதனால் அசுரர்கள் மீண்டும் வளரத் தொடங்கினார்கள்.

 

2. ஸும்போ நிஸும்பச்ச, ஸஹோதரௌ ஸ்வைஹி

  ப்ராஸாதிதாத் பத்ம,பவாத் தபோபிஹி

  ஸ்த்ரீமாத்ர வத்யத்த்வம், அவாப்ய தேவானு

  ஜித்வா ரணேS த்யூ,ஷது ரைந்த்ரலோகம்

       சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்கள் பாதாளத்திலிருந்து பூமண்டலத்திற்கு வந்தார்கள். பிரம்மாவைக் குறித்துக் கடும் தவம் செய்தார்கள். பிரம்மா அவர்கள் முன் தோன்றினார். பிரம்மனிடம் அவர்கள் சாகாவரம் கேட்டனர். பிறந்தவன் இறக்க வேண்டும் என்பது உலக நியதி என்று பிரம்மா சொல்ல, சும்ப நிசும்பர்கள் தேவர்கள், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள்  ஆகிய எந்த ஆணினத்தாலும் தங்களுக்கு மரணம் வரக்கூடாது என்று கேட்க அவரும் அப்படியே ஆகட்டும் என்று  வரத்தைத் தந்து விட்டுத் தன்னிடம் சென்றார். மூ உலகிலும் தங்களை வெல்லக்கூடிய பலம் கொண்ட பெண் இல்லை என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களுடன் சண்டன் முண்டன் தாம்ரன் ரக்தபீஜன் அனைவரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஸ்வர்கம் சென்று இந்த்ராதி தேவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு சுகமாக இருந்தனர். தேவர்கள் இருக்க இடம் இன்றி மலைகளிலும் குகைகளிலும் யக்ஜம், பூஜை, அமிர்தபானம் இன்றி கஷ்டப்பட்டு வந்தார்கள்.

 

3. ப்ரஷ்டச்ரியஸ்தே து, குரூபதேசாது

  ஹிமாத்ரிமாப்தா, நுநுவு: ஸுராஸ்த்வாம்

  தேஷாம் புரச்சாத்ரி,ஸுதாSSவிராஸீது

  ஸ்நாதும் கதா ஸா, கில தேவநத்யாம்

       100 அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் கூட கஷ்டப்பட வேண்டிய காலத்தில் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. இதை யாரால் மாற்ற முடியும்? இப்படி 1000 வருடம் துன்பப்பட்ட தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியிடம் போகின்றனர். எங்களின் துக்கம் தீரவும் சுவர்க்கலோகம் மீண்டும் கிடைக்கவும் வழி சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். பிரகஸ்பதி சொன்னார் "நாம் இப்பொழுது இந்த நேரத்திற்கும், காலத்திற்கும்,  எந்த உபாயம் பலன் தருமோ, அதைச் . காலம் என்னும் தெய்வத்துக்கு மேல் காலதீதமாகிய தெய்வம் ஒன்று இருக்கிறது. உங்களுடைய வேண்டுகையின் படி, முன்பு மகிஷனை எந்த தெய்வம் வதம் செய்ததோ, அதுவே அந்த தெய்வம். அந்த தேவி இப்போது இமயமலையில் இருக்கிறாள். அங்கு சென்று அந்த தேவியை பீஜ மந்திரங்களுடன் ஸ்தோத்திரம் செய்யுங்கள். உங்கள் காரியும் சித்தியாகும்" என்றார். இந்திராதி தேவர்கள் இமயமலைச் சென்று தேவியைத் துதித்தனர். தேவியும் அவர்களுக்குக் காட்சி தந்தாள். எந்த ரூபத்தில் காட்சி தந்தாள்? கங்கைக்குக் குளிக்கச் செல்லும் ஒரு பெண் போல பார்வதி தேவி வந்தாள்.

 

4. தத்தேஹகோசாத், த்வமஜா ப்ரஜாதா

  யத: ப்ரஸித்தா கலு கௌசிகீதி

  மஹாஸரஸ்வத்ய,பிதாம் ததாநா

  த்வம் ராஜ்யஸீ சக்திரிதிர்யஸே

 

யா குந் தேந்து துஷாரஹார தவளா

யா சுப்ர வஸ்த்ராவ்ருதா

யா வீணா வர தண்ட மண்டிதகரா

யா ச்வேத பத்மாஸனா

யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிஹி

தேவஸ் ஸதா பூஜிதா

ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ

நிச்சேஷ ஜாட்யாபஹா

       தேவி கேட்டாள் "தேவர்களே! நீங்கள் யாரைத் துதிக்கிறிர்கள்? ஏன் கவலையோடு இருக்கிறிர்கள்? உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? என்று கேட்டாள். தேவர்கள் கொழுப்பேறிய சும்ப நிசும்பர்களின் அட்டகாசத்தையும், அதனால் தேவர்களும் இந்த உலகமும் படும் கஷ்டத்தைச் சொல்கிறார்கள். தேவியின்  உடலிலிருந்து  கௌசிகீ என்னும் அம்பிகை தோன்றினாள் . அவளின் மற்றொரு பெயர் சரஸ்வதி. கருமை நிறத்துடன் பயங்கர ரூபம் கொண்டபடியால் காளி என்றும் பெயர் கொண்டாள். பயங்கர உருவம் இருத்தாலும் ஸர்வாலங்கார பூஷணையாக, பக்தர்களுக்கு வேண்டியதைத் தரும் க்ருபாவதியாக இருந்தாள்.

 

5. ஹிமாத்ரிச்ருங்கேஷு, மனோஹராங்கி

  ஸிம்ஹாதிரூடா, ம்ருதுகானலோலா

  ச்ரோத்ராணி நேத்ராண்யபி தேஹபாஜாம்

  சகர்ஷிதாஷ்டா,தச பாஹு யுக்தா

       “தேவர்களே! நீங்கள் பயப்பட வேண்டாம் நான் சும்ப நிசும்பர்களை அழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, 18 கைகளை உடைய அந்த தேவி சிம்ம வாகனத்தில் ஏறிக் கொண்டு, இமயமலையின் உச்சியில் அமர்ந்து, மிக ரம்யமான கானத்தை இசைத்துக் கொண்டிருந்தாள். அந்த தேவியின் அழகு பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் சௌந்தர்யமாம். தேவியின் கானத்தைக் கேட்ட பறவைகளும், மிருகங்களும் மோஹம் கொண்டனவாம். தேவர்கள் பரமானந்தம் அடைந்தார்கள்.

 

6. விஞ்ஞாய ஸும்ப:, கில தூதவாக்யாது

  த்வாம் மோஹனாங்கீம் தயிதாம் சிகீர்ஷஹ

  த்வ தந்திகே ப்ரேஷயதிஸ்ம தூதான்

  ஏகைகச: ஸ்நிக்த,வசோவிலாஸானு

       அந்த சமயத்தில் சும்பனின்  சேவகர்களான சண்டனும், முண்டனும் அங்கு வருகிறார்கள். பாடிக்கொண்டிருக்கும் தேவியைப் பார்த்தனர்.  ஆச்சர்யத்துடன் சும்பனிடம் சென்று சொல்கின்றனர். " ராஜாவே! ஒரு அழகிய சுந்தரி சிம்ம வாகனத்தில் இமாசலத்திலிருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு பேரழகியாக இருக்கிறாள். அவளின் கானம் கேட்டு பறவைகளும் மயங்கிக் கிடக்கின்றன. அவளை நீ உன் மனைவியாக ஆக்கிக்கொள். உன்னிடம் இல்லாத பொருள் ஏதும் உண்டா? இந்திரனின் ஐராவதம், பாரிஜாதகம், ஏழுமுகமுடைய  குதிரை, குபேரனின் பத்மா நிதி, வருணனின் வெண்குடை, சமுத்ரராஜனின் வாடாத தாமரை மலர், யமனின் பாசம் இது போன்று சகலமும் உன்னிடம்    இருக்கின்றன. இவைகள் எல்லாம் தேவர்களிடமிருந்து உன்னால் கவரப்பட்டவைகள்.   ஆனால் மூ உலகிலும் கிடைக்காத ஸ்த்ரீ ரத்தினம் அந்தப் பெண். கிடைப்பதற்கரிய பொருள்கள் அனைத்தையும் உடைய நீ அந்த ஸ்த்ரீ ரத்தினத்தையும்  உன் பத்னி ஆக்கிக்கொள்" என்று சொன்னார்கள். இதைக் கேட்ட சும்பன் உடனே சுக்ரீவனிடம் "நீ போய் நல்லவார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வா" என்று சொன்னான்.

 

7. த்வாம் ப்ராப்ய தே காளி,கயா ஸமேதா

  மேகைகச: ஸும்ப,குணான் ப்ரபாஷ்ய

  பத்னீபவாஸ்யே தி, க்ருதோ பதேசாஹா

  ஸதத் ப்ராதிகூல்யாத், குபிதா பபூவுஹு

       சுக்ரீவன் சொன்னான் "அழகிய பெண்ணே! சும்பன் மூஉலக நாயகன். அவன் உன்னிடம் ஆசை வைத்திருக்கிறான். அவன் சாகும் வரை உன் கட்டளைப் படி நடப்பான். நீ அவனை மணந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம் என்றான். தேவி சொன்னாள் ''அவன் வீரத்தையும், பலத்தையும், அழகையும் நான் அறிவேன். ஆனால் எனக்கு ஒரு விரதம் உள்ளது என்னோடு யுத்தம் செய்து என்னை வெற்றி கொள்பவனையே நான் மணப்பேன். அப்படியில்லாமல் என் சூலத்திற்கு பயந்தால், தேவர்களுடைய சுவர்க்கத்தை அவர்களிடம் தந்து விட்டு, பாதாளம் சென்று சுகமாக வாழுங்கள்" என்றாள்.  சுக்ரீவன் இதைச் சும்பனிடம் போய்ச் சொல்கிறான்

 

8. ஸும்பா ஞயா தூம்ரவிலோசனாக்யோ

  ரணோத்யத: காளிகயா ஹதோSபூது

  சண்டம் முண்டம் , நிஹத்ய காளீ

  த்வத் பாலஜா தத், உதிரம் பபைள

       சும்பன் தூம்ரலோசனனை அனுப்புகிறான். அவனும் முதலில் நல்லவிதமாகவேப் பேசுகிறான். தேவியை சும்பனிடம் கொண்டு போக வேண்டுமல்லவா? ஆனால் தேவி ஒரு பெண் யானை கழுதையை மணக்குமா? ஒரு பெண் சிங்கம் குள்ள நரியைத் திருமணம் செய்து கொள்ளுமா? என்றாள். தூம்ரலோசனனுக்குக் கோபம் வருகிறது. முடிவில் தேவியுடன் யுத்தம் செய்கிறான். தேவியுடன் யுத்தம் செய்தால் என்ன நடக்கும்? தூம்ரலோசனன் வதம் செய்யப்பட்டான். தூம்ரலோசனன் என்பது நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் தான். இது சரியல்ல என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதை தலை தூக்க விடாமல் ஆரம்பத்திலேயே களைந்து விட வேண்டும். அந்த கெட்ட எண்ணத்தைப் போல் தலை தூக்கிய தூம்ரலோசனனை காளிகா தேவி அழித்தாள். அதன் பின் சண்ட முண்டர்கள் போகிறார்கள். யுத்தம் நடக்கிறது. சண்டிகை கோபம் கொண்டு தன நெற்றிக்கண்ணிலிருந்து புலித்தோல் அணிந்தவளும், யானைத்தோலை உத்தரீயகமாக போர்த்தியவளும், பிரம்ம விஷ்ணுவின் தலைகளை மாலையாக தரித்தவளும், வாள் பாசம் போன்ற ஆயுதங்களுடன், பரந்த முகமும் விசாலமான நிதம்பத்துடன், கோபம் கொண்ட முகத்துடனும், காலராத்ரி போல் நிறத்துடனும் காளி என்னும் சக்தியாகத் தோன்றினாள்.  சண்டனையும் முண்டனையும்  பாசக் கயிற்றினால்  கட்டினாள். பின் அவர்களின் தலையைக் கொய்து, ரத்த பானம் செய்தாள். அது முதல் கௌசிகீ சாமுண்டீ என்று அழைக்கப்பட்டாள்.

 

9. சாமுண்டிகேதி, ப்ரதிதா தத: ஸா:

  த்வாம் ரக்தபீஜோ,S யுயுத்ஸுராப,

  யத்ரக்த பிந்தூத்,பவரக்த பீஜ-

  ஸம்கைர் ஜகத்வ்யாப்தம் அபூதசேஷம்

       அதன் பின் ரக்தபீஜன் வருகிறான். தேவிக்கும் அவனுக்கும் யுத்தம் உக்ரகமாக நடக்கிறது . அவன் உடலிலிருந்து பெருகும் ரத்த வெள்ளத்திலிருந்து பல அசுரர்கள் தோன்றியவண்ணம் இருந்தார்கள்.

 

10. ப்ரம்மேந்த்ர பாச்யா,திக தேவ சக்தி-

   கோட்யோ ரணம்  சக்ரு,ரராதிஸம்கைஹி

   தத் ஸங்கரம் வர்ண,யிதும் சக்தஹ

   ஸஹஸ்ரஜிஹ்வோபி; புன: கிமன்யே!

       இதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் தங்களின் சக்திகளை ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தனர். பிரம்ம சக்தி ப்ராம்ணி, வைஷ்ணவி, சிவக்தியான சாங்கரீ, காத்திகேய ரூபிணீ கௌமாரீ, இந்த்ராணி, வாராஹீ, யமசக்தி, வாருணி ஆகிய அனைவரும் வந்து சேர்ந்தனர் . அசுரர்கள் ரத்தம் பெருகப் பெருக  மேலும் மேலும் அசுரர்கள் தோன்றினர் . மனதில் தீய எண்ணம் இருந்தால் அதுவும் இப்படித்தான் வளர்ந்து கொண்டே வரும் என்பதை இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்இதை அழிப்பதற்கு தேவியின் அருள் வேண்டும். அதனால் தேவியை மனதில் நினைக்க வேண்டும்                              

 

11. ரணேSதிகோரே, விவ்ருதானனா ஸா

   காளீ ஸ்வஜிஹ்வாம், கலு சாலயந்தீ

   த்வச்சஸ்த்ர க்ருத்தா,கில ரக்தபீஜ-

   ரக்தம் பபௌ, கர்ஜனபீததைத்யா

       அப்பொழுது தேவி சொன்னாள் சாமுண்டே! நீ வாயை நன்கு திறந்து வைத்துக் கொள் .அவர்கள் உடலிலிருந்து வரும் உதிரத்தை ஒரு துளி கூட கீழே விழாமல் பானம் செய் என்றாள் ,அதன்படி அவனை அடித்து கத்தியால் குத்தி அவனது ரத்தத்தைப் பருகினார்கள். மேலும் மேலும் ரக்தபீஜர்கள் உண்டாவது தடுக்கப்பட்டதால் தேவியுடன் யுத்தம் செய்ய சக்தி இல்லாமல்  அவனும் மாண்டுபோனான். தெய்வ சிந்தனை மனதைவிட்டு அகலும் போது கெட்ட திய சிந்தனைகள் தலை தூக்கும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

 

12. த்வயா நிஸும்பஸ்ய, சிரோ நிக்ருத்தம்

   ஸும்பஸ்ய தத் காளி, கயாSபி சாந்தே

   அந்யேSஸுராஸ்த்வாம், சிரஸா ப்ரணம்ய

   பாதாளமா புஹு,ஸ்த்வதனுக்ரஹேண

       அதன் பின் நிசும்பன் வருகிறான் கௌசிகீ அவனை வதம் செய்கிறாள்  அதன் பிறகு சும்பன் வருகிறான். காளிகாதேவி அவனை வதம் செய்கிறாள். சும்பனும் அழிந்த பின் மற்ற அசுரர்கள் தேவியிடம் சரணாகதி அடைகிறார்கள். அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பிவைக்கிறாள் . அங்கு அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். தேவர்களுக்குச் சுவர்க்கலோகம், மனிதர்களுக்கு பூலோகம், அசுரர்களுக்கு பாதாளலோகம் இப்படி அவரவர்களுக்குத் தனி லோகமே தேவியால் தரப்பட்டிருக்கிறது. அதனால் தனது தகுதிக்கு மீறி எதையும் ஆசைபடுவது தவறு என்பதை நாம் இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.   

 

13. ஹதேஷு தேவா, ரிபுஷு ப்ரணம்ய

   த்வாம் துஷ்டுவு: ஸ்வர்க்க,மகு: புனச்ச

   தே பூர்வவத் யஜ்ஞ்னஹவிர் ஹரந்தோ

   பூமாவவர்ஷன்;, ஜஹ்ருஷுச்ச மர்த்யாஹா

       அசுரர்கள் அழிந்த பிறகு தேவர்கள் சந்தோஷத்தால் தேவியை துதிக்கின்றனர். அவர்கள் சுவர்க்கத்தை மீண்டும் அடைந்தார்கள் .யக்ஜம் ஹவிர் பாகங்களை மீண்டும் பெற்றனர் .பூமியிலும் சகல ஸுபிக்ஷமும் ஏற்படுகிறது அதனால் சகல ஜீவராசிகளும் மனிதர் உள்பட சந்தோஷமாக இருக்கின்றனர்.

                                              

14. மாதர் மதீயே ஹ்ருதி ஸந்தி தம்ப-

   தர்பாவிமானாத்,யஸுரா பலிஷ்டாஹா

   நிஹத்ய தான் தேஹ்ய,பயம் ஸுகம்

   த்வமேவ மாதா மம; தே நமோஸ்து

       தம்பம் (தற்பெருமை), தர்பம், (கர்வம்), அபிமானம் (எல்லாவற்றிற்கும் தானே  காரணம் என நினைப்பது),  க்ரோதம் (பழிவாங்கும் எண்ணம்), பாருஷ்யம் (கடுமையான பேச்சு) இவைகள் எல்லாம் அஹங்காரத்தின் அங்கங்கள்.  இவைகள் அசுர சம்பத்துக்கள். இது பகவத் கீதையில் (16/5) சொலப்பட்டிருக்கிறது. இவைகள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த தேவியின் கருணை  வேண்டும். இந்த தேவீ நாராயணீயத்தின் ஆசிரியர் சொல்கிறார் "தாயே! இந்த அசுர சம்பத்துக்களைக் களைந்து, பகவானை அடைவதற்கான சாதனைகளான நல்ல பண்புகளும் நல்ல நடத்தையும் ஆகிய தெய்வ சம்பத்துக்கள் என்னிடம் வளர நீயே எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.

இருபத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது

 

தசகம் 26

ஸுரதகதை

 

1. ராஜா புராஸீத், ஸுரதாபிதானஹ

  ஸ்வாரோசிஷே சைத்ர,குலாவதம்ஸஹ

  மன்வந்தரே ஸத்ய,ரதோ வதான்யஹ

  ஸம்யக்ப்ரஜாபாலன மாத்ரநிஷ்டஹ

      ஒரு குறிப்பிட்ட காலத்தின் அளவு, மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. அதுபோல 14 மன்வந்திரங்கள் உண்டு. ப்ரம்மாவின் ஒரு பகல் கல்பம் எனப்படும். 1000 சதுர் யுகமும் 14 மன்வந்திரமும் சமமான கால அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு மனு உண்டு. அந்த மனுவின் பெயரால் அந்த மன்வந்திரம் அழைக்கப்படும். முதல் மனு ஸ்வாயம்புவன். அந்த மன்வந்திரம் ஸ்வாயம்புவ மன்வந்திரம் எனப்படும். இரண்டாவது மனு ஸ்வாரோசிஷன். அந்த மன்வந்திரம் ஸ்வாரோசிஷ மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது மன்வந்திரத்தில் நடந்த ஒருகதை இந்த தசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. சைத்ர வம்சத்தில் ஜனங்களை நன்கு காப்பவனும், விரோதிகள் இல்லாதவனும், தனுர்வேதத்தை அறிந்தவனும், பிராமணர்களை பூஜிப்பவனும், தான தர்மங்கள் செய்பவனும், ஸத்கர்மங்களில் ப்ரீதி உடையவனும் ஆகிய ஸுரதன் என்னும் ஒரு நல்ல ராஜா இருந்தான்.

 

2. வீரோSபி தைவாத், ஸமரே கோலா

  வித்வம்ஸிபி: சத்ருபலைர் ஜித: ஸன்

  த்யக்த்வா ஸ்வராஜ்யம், வனமேத்ய சாந்தம்

  ஸுமேதஸம் ப்ராப முனிம் சரண்யம்

      கோலங்கள் என்றால் பன்றிகள். இதை அடித்துச் சாப்பிடுபவர்கள் கோலாவித்வம்ஸிகள் எனப்படுவர். இவர்கள் தங்களிடம் பலம் இருக்கிறது என்று நினைத்து, மதத்தினால், ஸுரதன் ஆளும் ராஜ்யத்தைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டனர். அதனால் ஸுரதனின் நகரை அடைந்து, அவனுடன் யுத்தம் செய்தனர். யுத்தத்தில் ஸுரதன் தோல்வி அடைந்தான். ராஜா ஸுரதன் மிலேஸ்ஸியர்களை விட பலத்தில் குறைந்தவன் அல்ல. ஆனாலும் தோல்வி அடைந்தது தெய்வத்தின் செயலே ஆகும். ஸுரதன் மிகுந்த வருத்தத்துடன் காட்டிற்குச் சென்று அங்கு சுமேதஸ் என்னும் ஒரு ரிஷியைச் சரண் அடைந்தான்.

 

3. தபோவனம் நிர்பயமாவஸன் த்ரு-

  -ச்சாயாச்ரித: சீதளவாதப்ருத்தஹ

  ஏகதா ராஜ்ய,க்ருஹாதிசிந்தா

  பர்யாகுல: கம்,சிதபச்யதார்த்தம்

      அந்த ஆஸ்ரமத்தில் முனிவரின் சீடர்கள் வேதாத்யயனம் செய்யும் சப்தம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான். பயமும் கவலையும் இல்லாமல் இருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவன் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு இருந்தான். குளிர்ந்த காற்று வீசியது.  ஆனால் அவன் மனமோ தன்னுடைய ராஜ்யம், மனைவி, மக்கள், உறவினர்கள், தன்னுடைய செல்வம் இவைகளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவைகளிடம் அவனுக்கு அத்துணை பற்று. அவன் மனம் இவைகளின் நிலையை நினைத்துப் பதறியது. அப்பொழுது அங்கு ஒருவன் வந்தான். அவனும் துக்கத்தில் இருந்தான்.

 

4. ராஜா தமூசே ஸுரதோஸ்மி நாம்நா

  ஜிதோSரிபிர் ப்ரஷ்ட,விபூதிஜாலஹ

  க்ருஹாதி சிந்தா,மதிதாந்த ரங்கஹ

  குதோSஸி, கஸ்த்வம், வத மாம் ஸமஸ்தம்

      வந்தவன் துக்கத்தில் இருக்கிறான் என்பதைச் ஸுரதன் புரிந்து கொண்டான். அவனிடம் சென்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எல்லா விபரமும் கேட்டான்.

 

5. ச்ருத்வேதி ப்ரத்யவதத் - "ஸமாதி

  நாமாஸ்மி வைச்யோ, ஹ்ருதஸர்வ வித்தஹ

  பத்னீஸுதாத்யை:, ஸ்வ க்ருஹான்னிரஸ்த

  ஸ்ததாSபி ஸோத்கண்ட மிமான் ஸ்மராமி"

      வந்தவன் ஒரு வைசியன். அவன் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவன். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்தான். மனைவியும், மகன்களும் செல்வத்தை அபஹரித்துக் கொண்டு அவனை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். அவர்கள் தன்னை விரட்டினாலும் அவர் மனம் அவர்களையே நினைத்துக் கவலைப் பட்டது. ஸுரதனும் சமாதியும் ஒரே நினைவுடன் கூடிய மன அவஸ்தையில் தான் இருந்தார்கள்.

 

6. அநேந ஸாகம், ஸுரதோ விநீதோ

  முனிம் ப்ரணம் யாSS , ஸமாதிநாமா

  க்ருஹாந்நிரஸ்தோSபி, க்ருஹாதி சிந்தாம்

  கரோதி ஸோத் கண்ட,மயம் மஹர்ஷே!

 

      ஸுரதன் சமாதியை சுமேதஸ் முனிவரிடம் அழைத்துச் சென்றான். அவருக்கு அவனை அறிமுகப் படுத்தினான். "இவர் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவர். வியாபாரத்தில் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவன் மனைவியும் மக்களும் இவரை விரட்டி விட்டனர். ஆனாலும் இவர் அவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டு அவர்களை நினைத்துக் கவலைப்படுகிறார் என்று சொன்னான். முனிவரை மஹர்ஷே! என்று அழைக்கிறான். மஹரிஷி என்றால் முன்னும் பின்னும் அதாவது நடந்தது நடக்கப்போவது எல்லாம் அறிந்தவர்கள் என்று பொருள் .

 

7. ப்ரம்மைவ ஸத்யம், பரமத்விதீயம்

  மித்யா ஜகத் ஸர்வ,மிதம் ஜானே

  ததாSபி மாம் பாத, ஏவ ராஜ்ய

  க்ருஹாதிசிந்தா, வத தஸ்ய ஹேதும்

      மஹரிஷியே! சாமதியின் நிலையினை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் என் நிலையும் அதுதான். இந்த உலகம் கனவைப் போல் பொய் என்று தெரியும். இந்த ராஜ்யம், வீடு அனைத்தும் மித்தை என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த ஞானம் சமாதிக்கு இல்லை. அவருக்கு மோஹம் இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த நானும் மோஹம் அடைகின்றேனே? இதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் குழந்தைகள் எல்லாம் மரணம் அடைய, மனம் மிகவும் வருந்தித் தானும் தற்கொலைச் செய்து கொள்ள தண்ணீரில் குதிக்க முயற்சிக்கிறான். அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? ஆத்மீகத்தில் உயர்ந்தவனா? அல்லது தாழ்ந்தவனா? உயர்ந்தவன் என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தற்கொலை என்ற சிந்தனையே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒருவர் இருந்தார்i. ஆனால் அவர் யார் தெரியுமா? அவர் தான் மஹானான வஸிஷ்ட முனிவர். அவருக்கு ஞானம் இருந்தாலும் பற்று போகவில்லை. அவருடைய அடுத்த ஜன்மத்தில் ஸுரதனாகப் பிறந்தார். அதனால் தான் எல்லாம் தெரிந்த நானும் ஏன் இப்படி என்று கேட்க்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்து ஆனந்தம் அனுபவித்த பின் தான் முக்தி என்று தேவி அவருக்கு பின்னால் அனுக்ரஹம் செய்யப் போகிறாள். ஏன் என்றால் ஆசை மிச்சம் இருந்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே நியதி.

 

8. ஊசே தபஸ்வீ - ச்ருணு; பூப! மாயா

  ஸர்வஸ்ய ஹேது; ஸகுணா குணா ஸா;

  பந்தம் மோக்ஷம், கரோதி ஸைவ

  ஸர்வேSபி மாயா,வசகா: பவந்தி

      எல்லா உயிர்களின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணம் மாயைதான். அந்த மாயா அகுணை. அம்பாள் நிர்குணை. அம்பாளின் காளி, லக்ஷ்மி அவதாரங்கள் ஸகுணை. ஒருவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் ஏற்படும் ஆசைதான் பந்தம். இந்த மமதையையும் (மோஹம்), பந்தத்தையும் ஏற்படுத்துவது யார்? தேவிதான். இதிலிருந்து விடுதலை தருவதான அந்த மோக்ஷத்தைத் தருவது யார்?  அதுவும் அந்த தேவிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று உலகத்திலும் இந்த மாயையின் வசப்படாதவர்கள் யாரும் இல்லை.

 

9. ஞானம் ஹரேரஸ்தி, விதேச்ச, கிந்து

  க்வசித் கதாசின், மிளிதௌ மிதஸ்தௌ

  விமோஹிதௌ கஸ்த்வமரே! நு கஸ்த்வம்

  ஏவம் விவாதம், கில சக்ரது: ஸ்ம

      ப்ரம்மம் மட்டுமே ஸத்யம். இந்த உலகம் மாயை. இது ஸுரதனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் எனக்கு ஏன் மமதை வந்தது என்று கேட்கிறான். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஞானத்தால் மட்டும் மாயா மோஹத்திலிருந்து விடுபட முடியாது. ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ப்ரம்மமே ஸத்யம், மற்றதெல்லாம் மாயை என்கிற ஞானம் உண்டுஆனாலும் அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்த பொழுது, தங்களில் யார் பெரியவர்? என்ற சர்ச்சை ஏற்பட்டது. ப்ரம்மா சொன்னார் நானே இந்த உலகைப் படைக்கும் கர்த்தா. அதனால் நானே பெரியவன் என்றார். உனக்கு ஆபத்து வரும் காலங்களில் உன்னைக் காப்பாற்றியது யார்? நான் தானே! அதனால் நானே பெரியவன் என்றார் விஷ்ணு. அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியதுஉடனே ஒரு அசரீரியும் கேட்டது. "இந்த சிவலிங்கத்தின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கின்றாரோ அவரே பெரியவர்" என்றது. உடனே விஷ்ணு அடியைக்காண பாதளம் நோக்கியும், ப்ரம்மா முடியைக் காண ஆகாயம் நோக்கியும் சென்றனர். விஷ்ணு தன்னால் முடியாமல் திரும்பி வந்துவிட்டார். பிரம்மா சிவனின் தலையிலிருந்து விழுகின்ற ஒரு தாழம் பூவைப் பார்த்து, அதனுடன் பேசி, அதைத் தான் சிவனின் முடியைக் கண்டதற்கானச் சாட்சியாகக் கொண்டு வந்தார். விஷ்ணு அந்த தாழம்பூவிடம் கேட்க, அதுவும் ப்ரம்மா தன்னைச் சிவனின் முடியிலிருந்தே கொண்டு வந்தார் என்று பொய் சாட்சி சொல்லியது.  இதில் நம்பிக்கை இன்றி விஷ்ணு சிவனைத் த்யானித்தார். சிவனும் அங்கு வந்தார். தாழம்பூவே! நீ பொய் சொன்னதால் இனி என் பூஜைக்கு அருகதை ஆகமாட்டாய் என்று சிவன் சொன்னார். ப்ரம்மா வெட்கித் தலை குனிந்தார். சிவன் தாழம்பூவை நிராகரிப்பதற்கும், நம்மில் யார் பெரியவர் என்று ஞானம் மிகுந்த ப்ரம்மாவும் விஷ்ணுவும் விவாதம் செய்வற்கும் காரணம் என்ன? மாயைதான். எந்த நேரத்தில் இந்த மாயையில் அகப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது. இதில் அகப்படாமல் இருக்க ஒரேவழி தான் உண்டு. அந்த ஞானஸ்வரூபிணியான பராசக்தியை வணங்க வேண்டும். இந்த மோஹத்திலிருந்து காப்பாற்ற அவளால் மட்டுமே முடியும்.  

 

10. ஞானம் த்விதைகம், த்வப்ரோக்ஷ, மன்யது

   பரோக்ஷமப்யேத தவேஹி ராஜன்!

   ஆத்யம் மஹேச்யா: க்ருபயா விரக்த்யா

   பக்த்யா மஹத் ஸங்கமதச்ச லப்யம்

      தனக்கு ஏன் இப்படி வீடு, மனைவி, ராஜ்யம் என்ற மோஹம் வந்தது என்ற ஸுரதனின் கேள்விக்குப் பதில் சொல்கிறார். இந்த புத்தி மோஹம் என்பது எந்த ஞானிக்கும் வரலாம். இதற்காகத்தான் ப்ரம்மா விஷ்ணுவின் கதையைச் சொன்னார். அதன் பின் ஞானத்தின் ரூபத்தையும் விளக்குகிறார். ஞானம் என்பது இரண்டு விதம். அபரோக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானம் ஒருவனை பந்த விமுக்தன் ஆக்கும். அது தேவி பக்தியாலும் மஹாத்மாக்களின் அனுக்ரஹாத்தாலும் மட்டுமே கிடைக்கும்போக விரக்தி வரவேண்டும். இது தேவியின் க்ருபை இருந்தால் தான் இது முடியும்.

 

11. ஏததாப்னோதி, ஸர்வமுக்தோ;

   த்வேஷச்ச ராகச்ச, தஸ்ய பூப!;

   ஞானம் த்விதீயம் கலு சாஸ்த்ரவாக்ய-

   விசாரதோ புத்திமதைவ லப்யம்

      அபரோக்ஷ ஞானம் உள்ளவனுக்கு ராகம், த்வேஷம் இல்லை. ப்ரம்மமே ஸத்யமானது. இந்த உலகம் மாயை. காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே ப்ரம்மம் தான் என்பதை உணர்வான். எல்லாம் ஒன்றுதான் என்றால் ராகம் ஏது? த்வேஷம் ஏது? ப்ரம்மத்தைத் தவிர வேறு பலதும் உண்டு என்றால் தான் ராக த்வேஷத்திற்கு இடம் உண்டுஒன்றிடமும் அவனுக்குப் பற்று இல்லை. அவன் பந்த விமுக்தன்ப்ரம்மம் மட்டும் ஸத்யம். இந்த உலகம் மாயை என்று அறிய, வேதாந்த சாஸ்திரங்கள் படித்தால் போதும். புத்தி உள்ளவனால் மட்டுமே இதைப் படிக்க முடியும். ஆனாலும் படித்தது  எல்லாம் அனுபவத்தில் வரவேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இது பரோக்ஷ ஞானம். சாஸ்திரங்கள் படித்தவன் பந்த விமுக்தன் என்று சொல்ல முடியாது. அவன் மனதில் ராகமும், த்வேஷமும் விலக வேண்டும். ஸுரதன் சாஸ்திரம் தெரிந்தவன் ஆனாலும் தான் ராஜா என்ற அபிமானம் அவனிடம் இன்னும் இருக்கிறது. பந்தம் விலகாததற்கு இதுதான் காரணம் என்று பதில் சொன்னார்.

 

12. சமாதிஹீணோ சாஸ்த்ரவாக்ய

   விசாரமாத்ரேண, விமுக்திமேதி

   தேவ்யா: கடாக்ஷைர், லபதே புத்திம்

   முக்திம் ஸா  கே,வல பக்திகம்யா

      மஹாவாக்யங்களைப் படிப்பதால் சாஸ்திரங்களையும் சித்தாந்தங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது பரோட்க்ஷ ஞானம். சாதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அபரோக்ஷ ஞானம் வரும். அப்பொழுது தான் பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கும். ஸமம், தமம், திதிச்ச, உபரதி, ச்ரத்தா, சமாதானம் இவைகள் ஞான சாதனைகளின் வழிகள். விஷய போக சக்திகள் தோஷம் தான் தரும். மனதை போக விஷயங்களிலிருந்து விலக்கி கட்டுப் படுத்த வேண்டும். அதுதான் ஸமம்.  இந்திரியங்களை அதனதன் போக்கில் அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அது தமம். எந்த துக்கத்தையும் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். இது திதிக்க்ஷா. மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்த்தாலும் நினைத்தாலும் பகவான் சிந்தனையுடன் இருக்கப் பழக வேண்டும். இது உபரதி. சாஸ்த்திரத்திலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும். இது சிரத்தை. புத்தி ப்ரம்மத்திலேயே லயிப்பது. இது ஸமாதானம். இவைகளை நிரந்தரமாக அனுஷ்டித்தால் உள்மனதிற்குச் சக்தி கிடைக்கும். இப்படியாக பரோக்க்ஷ ஞானத்தை அபரோக்க்ஷ ஞானமாக மாற்றிக் கொள்ளலாம். ஸுரதன் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொன்னாலும் அவன் அபரோக்க்ஷ ஞானம் உடையவனாக மாட்டான்.

 

13. ஸம்பூஜ்ய தாம் ஸாக,மனேன துர்க்காம்

   க்ருத்வா ப்ரஸன்னாம், ஸ்வஹிதம் லபஸ்வ

   ச்ருத்வா முனேர் வாக்ய,முபௌ மஹேசி!

   த்வாம் பூஜயாமா,ஸதுரித்தபக்த்யா

      மஹரிஷி சொன்ன விபரங்களை ஸுரதனும், சமாதியும் கேட்டார்கள். மாயா பகவதியைப் பூஜித்து, அன்னையின் அனுக்ரஹம் பெற்றுவிட்டால், மாயை அருகில் வரமுடியாது. புத்தியும், முக்தியும் கிடைக்கும் என்று மஹரிஷி சொன்னதைக் கேட்டு, இருவரும் தேவி பூஜையைத் தொடங்கினார்கள்.

 

14. வர்ஷத்வயாந்தே, பவதீம் மீஷ்ய

   ஸ்வப்னே ஸதோஷா,வபி தாவத்ருப்தௌ

   தித்ருக்ஷ ஜாக்ரதி சாபி பக்தா-

   வாசேரதுர் த்வௌ, கடின வ்ரதானி

      பக்தியுடன் தேவியை இரண்டு வருட காலம் பூஜை செய்தார்கள். ஒருநாள் கனவில் தேவியைக் கண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் பூரண திருப்தி வராமல் தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் தேவியைக் காண வேண்டும் என்று நினைத்துக், கடுமையான விரதம் இருந்தார்கள். ஒரு வருடம் ஓடியது. ஆனாலும் தேவி காட்சி தரவில்லை. தேவியைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் மரணம் அடைய வேண்டும் என்று தீர்மானித்துத், தங்கள் உடலிலிருந்துச் சதையை வெட்டி மாமிசம், இரத்தம் இவைகளால் ஹோமம் செய்யத் தொடங்கினார்கள்.

 

15. வர்ஷத்ரயாந்தே, ஸுமுகீம் ப்ரஸன்னாம்

   த்வாம் வீக்ஷ்ய தௌ துஷ்டுவது: ப்ரஹ் ருஷ்டௌ

   தைவாத் ஸமாதிஸ் த்வதனு க்ரஹே

   லப்த்வா பரம் ஞான, மவாப முக்தீம்

 

16. போகா விரக்த: ஸு ரதஸ்து சீக்ரம்

   நிஷ் கண் டகம் ராஜ்யமவாப பூயஹ

   மந்வந்தரே பூபதிரஷ்டமே

   ஸாவர்ணி நாமா, மனுர் பபூவ

      அவர்கள் மாமிசம் இரத்தம் இவைகளால் ஹோமம் செய்ய ஆரம்பித்ததும், தேவி அவர்கள் முன் காட்சி தந்தாள். இருவரும் தேவியை நமஸ்கரித்தனர். "வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றாள்" ஸுரதன் "சத்ரு பலத்தை அழித்து, என் அரசு மீண்டும் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும்" என்று கேட்டான். தேவி " உன் சத்ருவை நீ வெற்றி கொள்வாய். அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து, உடல் வீழ்ந்த பின், சூர்யனிடம் பிறவி அடைந்து மனுவாக விளங்குவாய்" என்று வரம் தந்தாள். ஆனால் சமாதி " தளைகளைப் போக்கக் கூடியதும் மோக்க்ஷத்தைத் தரக் கூடியதுமான ஞானம் வேண்டும்" என்று கேட்டான். அன்னை அவரவர் விருப்பப்படி வரம் தந்தாள்.  இருவருக்கும் தேவி ஒன்றாகத்தான் காட்சி தந்தாள். சமாதி விமுக்தன். ஸுரதன் போகா ஸக்தன். மந்திரிகளுடன் சென்று ஸுரதன் ராஜ்ய சுகம் அனுபவித்தான். இரண்டாவது மன்வந்திரத்தில் பிறந்த ஸுரதன் தேவி த்யானத்தால், அடுத்த பிறவியில் 8 ஆவது மன்வந்திரத்தில் ஸாவர்ணி என்னும் பெயருடன் பிறந்தான்.

 

17. த்வம் புக்திகாமாய, ததாஸி போகம்

   மு முக்ஷவே ஸம்,ஸ்ருதிமோசனம்

   கிஞ்சின்ன ப்ருச்சாமி, பரம் விமூடஹ

   நமாமி தே பாத,ஸரோஜயுக்மம்

      தேவி சக்திமயமானவள் கேட்டதைத் தரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவள். ஸுரதனுக்கும், சமாதிக்கும் அவரவர் விருப்பம் என்னவோ அதைத் தந்தாள். தேவியிடம் நான் என்ன கேட்பது? பக்தியா?புக்தியா? முக்தியா? நான் போக விமுக்தன் அல்ல. அதனால் முக்தி கேட்க முடியாது. மூடனான நான் அன்னையை வணங்க மட்டுமே முடியும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார்.

இருபத்தி ஆறாம் தசகம் முடிந்தது

 

தசகம் 27

சதாக்ஷி அவதாரம்

 

      அம்பாள் சாகம்பரியாகவும், சதாக்ஷியாகவும் அவதாரம் செய்த கதையை இந்த தசகத்தில் அறிந்து கொள்ளப் போகிறோம். துவஷ்டாவின் புத்திரனான மஹா பலசாலியான வ்ருத்தாஸுரன் இந்திரனால் கொல்லப்பட்டான். ஆனால் சூதர் வ்ருத்தாஸுர வதம் தேவியால் தான் நடந்தது என்று சொல்லியிருக்கிறார். வியாஸரும் இதைச் சொல்லியிருக்கிறார்.

      மஹா தபஸ்வியும் பிரஜாபதியும் ஆன துவஷ்டா என்று ஒருவர் இருந்தார். துவஷ்டா பிராம்ணர்களை விரும்புபவர். தேவ காரியங்களைச் செய்வதில் கெட்டிக்காரர்அவருக்கு இந்திரனிடம் பகை. அதனால் மூன்று தலைகளை உடைய ஒரு மகனைத் தோற்றுவித்தார். ஒரு முகத்தால் வேத அத்தியயனம் செய்தும், ஒரு முகத்தால் மது அருந்தியும், ஒரு முகத்தால் எல்லா உலகத்தையும் ஒரே சமயத்தில் காணக்கூடியவனாகவும் இருந்தான். அவன் பெயர் திரிசிரஸ். அவன் போகங்களைத் துறந்து, செய்வதற்கரிய தவம் செய்தான். தவத்தால் அவன் தர்மத்தைக் கைக்கொண்டவனாகவும், இந்திரியங்களை அடக்கியவனாகவும் மென்மையான இயல்பை உடையவனாகவும் இருந்தான்அவன் கடுமையான தவம் செய்வதைக் கண்ட இந்திரன்பயந்து இதை இப்படியே விடக்கூடாது என்று, அவனைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து, வஜ்ராயுதத்தை அவன் மேல் பிரயோகித்தான். அந்த தபஸ்வி உயிரிழந்து மலைச் சிகரம் போல் சாய்ந்தான்தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு துவஷ்டா மிக்வும் கோபம் கொண்டு "ஒரு பாபமும் செய்யாத முனிவனான என் மகனைக் கொன்றவனை அழிக்க இன்னொரு புத்திரனைத் தோற்றுவிப்பேன். என் வீரியத்தையும், தவத்தின் வலிமையையும் தேவர்கள் பார்க்கட்டும்" என்று சொல்லி, அதர்வண மந்திரங்களால் அக்னியில் 6 நாட்கள் ஹோமம் செய்த பின், அதிலிருந்து அக்னி போல் ஒரு  புருஷன் தோன்றினான்அந்தப் புத்திரனைக் கண்ட துவஷ்டா "நீ இந்திரனுக்குப் பகைவனாக ஆவாய்" என்று சொன்னார். துன்பத்திலிருந்து காப்பதற்கு நீசக்தி உள்ள்வனாக இருப்பதால் இனி நீ 'வ்ருத்ரன்' என்று பிரசித்தமாவாய். உன் சகோதரன் திரிசிரன் பெருமை உடையவனாகவும், தவவலிமை உடையவனாகவும் இருந்தான். அவனுக்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தவறும் செய்யாத, அவனது தலைகளை, இந்திரன் வஜ்ராயுதத்தால் வெட்டினான்பாவச் செயல் செய்தவனும், மானங்கெட்டவனும், கெடுபுத்தி உடையவனும், கொடியவனும், பாவியும், பிரும்மஹத்தியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த இந்திரனை நீ கொல்ல வேண்டும்" என்று சொன்னார். இந்திரனை வதைப்பதற்குச் சக்தியுடைய தெய்வீக ஆயுதங்களைச் சிருஷ்டி செய்து கொடுத்தார். மஹா பல சாலியான விருத்ரன் தேரில் ஏறிக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். மானஸோத்ரம் என்னும் பர்வதத்திற்கு வந்து அஸுரர்களுடன் கூடி, வருணன், யமன், அக்னி, அனைவரையும் பின் வாங்கச் செய்தான். தந்தையிடம் சந்தோஷமாக இதைச் சொன்ன போது, துவஷ்டா "நீ பிரும்மாவை ஆராதித்து சிறந்த வரம் பெற்று அந்த இந்திரனையும் கொன்றுவிடு" என்று சொன்னார்.

100 வருடம் தவம் செய்தபின் பிரும்மன் ஹம்ஸ வாகத்தில் காட்சி தந்தார். அவரிடமிருந்து, இரும்பு போன்ற உலோகங்களினாலும், மரக்கட்டை, மூங்கில், போன்ற ஈரமாகவோ அல்லது உலர்ந்தோ இருக்கக் கூடிய எந்த ஆயுதத்தாலும் மரணம் வரக்கூடாது. தேவர்களாலும் அவர்களது சேனைகளாலும் வெல்ல முடியாத வீரியம் என்னிடம் விருத்தி அடைய வேண்டும்" என்று வரம் கேட்டான். அவரும் கேட்ட வரத்தைத் தந்தார். ஒரு பக்கம் தேவர்களும், மறுபக்கம் துவஷ்டாவின் புத்திரனும் போருக்குக் கூடினர். விருத்ரனின் வரத்தால் தேவர்கள் தோல்வியைத் தழுவி, யாக பாகங்களை இழந்து, மலைகளிலும், குகைகளிலும் வசித்தனர். தேவர்கள் விஷ்ணுலோகம் சென்று ஹரியை புருஷஸுக்தத்தால் துதித்தனர். லக்ஷ்மீபதியான அந்த ஜகந்நாதர் அவர்கள் முன் தோன்றினார். நீங்கள் பயப்பட வேண்டாம். அந்த பகவதியை ஸ்தோத்தரித்துச் சரணடையுங்கள். அவள் உங்களுக்கு உதவி செய்வாள். அந்த தேவியையே நான் எப்பொழுதும் பூஜிக்கிறேன் என்றார். தேவர்களும் தனிமையான இடத்தில் தியானமும், ஜபமும், தவமும் செய்தனர். அந்த தேவி ஸர்வாபரண அலங்காரங்களுடன், கையில் பாசம், அங்குசம், வரம், அபயம் என்ற முத்திரைகளுடன், சலங்கை ஒலிக்கும் ஒட்யாணத்துடன், கழுத்தில் அட்டிகை, கையில் கங்கணம், காலில் கொலுசு, தலையில் கிரீடம் ஆகியவைகளுடன், முகத்தில் சிரிப்புத் தவழ, மூன்று கண்களுடன், கருணைக் கடலாய், ஸச்சிதானந்த ரூபிணியாய் காட்சி தந்தாள். தேவர்கள் நமஸ்கரித்தனர்விருத்தாஸுரனைக் கொல்லும் உபாயத்தை தேவர்கள் வேண்டினர். அன்னை தன் சக்தியை அவர்களுக்குக் கொடுத்தாள். சந்தர்ப்பத்திற்காக இந்திரன் காத்திருந்தான். ஒருநாள் கடற்கரையில் அந்திப் பொழுதில், ஹரியை நினைத்தான். ஹரி வஜ்ராயுதத்தின் நடுவில் புகுந்தார். அப்பொழுது ஸமுத்திரத்தில் நீரின் நுரை, மலை போல் எழுந்தது. அது ஈரமும் இல்லை. காய்ந்ததும் இல்லை. ஆயுதமும் இல்லை. அந்த நுரையைக் கையில் எடுத்தான். பராசக்தியை வேண்டினான். சக்தி தன் அம்சத்தை அதில் புகுத்தினாள். ஹரி புகுந்திருக்கும் வஜ்ராயுதத்தை நுரையால் மறைத்தான்அதை விருத்ரன் மேல் எறிந்தான். அவன் மலை போல் வீழ்ந்தான். தேவியை அனைவரும் பூஜித்தனர். தேவி விருத்ரனைக் கொன்றதால் "வ்ருத்ர நிஹந்த்ரீ' என்று மூ உலகத்தாலும் போற்றப் படுகிறாள்.. இந்திரனால் கொல்லப்பட்டதால் இந்திரனும் விருத்ரனைக் கொன்றான் என்று சொல்லப் படுகிறான்.

இனி சதாக்ஷி அவதாரத்தைப் பார்ப்போம்.

 

1. தைத்ய: புரா கச்,சன துர்க்கமாக்யஹ

  ப்ராஸாதிதாத் பத்ம,பவாத் தபோபிஹி

  அவைதிகம் வைதிகமப்ய க்ருஷ்ணான்-

  மந்த்ரம் ஸமஸ்தம், திவிஷஜ்ஜயைஷீ

      ஹிரண்யாட்க்ஷனின் வம்சத்தில் ருரு என்பவனுக்கு துர்கமன் என்னும் அஸுரன் பிறந்தான். துர்கமன், தேவர்களுக்குப் பலம் தருவது வேதம் தான். அதை எப்படியாவது அபஹரித்து, தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்று, ப்ரம்மவை நினைத்து, அன்ன ஆகாரம் இன்றி ஆயிரம் வருடம் தவம் செய்தான். ப்ரம்மா காட்சி தந்தார். மூன்று உலகத்திலும் அந்தணர்கள், தேவர்கள் இவர்களிடம் இருக்கும் வேத மந்திரங்கள் எனக்குச் சொந்தமாக வேண்டும். தேவர்களை எல்லாம் வெற்றி கொள்ளும் ஆற்றல் வேண்டும் என்று அஸுரன் வேண்டினான். ப்ரம்மாவும் தந்தார்.

 

2. வேதே க்ருஹீதே, திதிஜேன விப்ராஹா

  ச்ருதிஸ்திரா விஸ்ம்ருத வேதமந்த்ராஹா

  ஸாந்த்யானி கர்மாண்,யபி நைவ சக்ருஹு

  க்ஷிதி ஸ்த்வ வேதா, த்யயனா பபூவ

      பிராமணர்கள் வேதங்களைச் சொல்வது வழக்கம். அஸுரன் சாமர்த்தியமாக வேத மந்திரங்களை ப்ரம்மாவிடமிருந்து வாங்கி விட்டான். அதனால் பிராமணர்கள் வேத மந்திரங்களை மறந்து போனார்கள். அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஔபாசனம், சிரார்த்தம், ஹோமம், ஜபம், யக்ஜம் போன்றவைகளை அனுஷ்டிக்க முடியவில்லை. சந்யாவந்தன ஜபம் கூட இல்லாமல் போனது. உலகில் வேத மந்திர சப்தமே இல்லை. வேதம் சொல்லித் தருவதும் கற்றுக் கொள்வதும் இல்லாமல் போனது.

 

3. ஹ்ருதேஷீ மந்த்ரேஷ்,வகிலேஷு பூஜா

  யஜ்ஞாதி பூமௌ, க்ருதம் மனுஷ்யைஹி

  ஸுரா அசக்தா,ஸ்ததலாபகின்னா

  தைத்யேன யுத்தே, பலினா ஜிதாச்ச

      எல்லா மந்திரங்களும் அஸுரன் கையில் அகப்பட்டு விட்டது. மனிதன் மந்திரங்களை மறந்து போனான். பூஜை யக்ஞம் போன்ற கர்மங்கள் மனிதனால் செய்ய முடியாமல் போனது. மனிதர்கள் செய்யும் யக்ஞமும் பூஜையும் தேவர்களைப் புஷ்டியாக்கும். பூஜையும் யக்ஞமும் இல்லாததால் தேவர்கள் பலம் இழந்து போனார்கள். மூப்பற்றவர்களான தேவர்கள் வயோதிகர்கள் ஆனார்கள். அந்த நேரத்தில் துர்கமன் ஸ்வர்க்கலோகத்தை ஆக்ரமித்தான். பல நாட்கள் யுத்தம் நடந்தது. தேவர்கள் தோல்வியைத் தழுவினர்

 

4. த்யக்த்வா திவம் தே, கிரிகஹ்வரேஷு

  நிலீய வர்ஷாணி பஹூ னி நின்யுஹு

  வ்ருஷ்டேரபாவாத், தரணீ சுஷ்க

  ஜலாசயா தர்ஷநிபீடிதாபூது

      அஸுரன் தன் சகாக்களுடன் ஸ்வர்க்கலோகம் வந்தான். தேவர்களை அங்கிருந்து விரட்டினான். அதனால் அவர்கள் பர்வத குகைகளில் மறைந்திருந்தார்கள். பூமிக்கு மழை தருபவன் யார். இந்திரன். இந்திராதி தேவர்கள் ஸ்வர்க்கத்தில் இல்லாததால் மழை இல்லாமல் போனது. ஆறு, குளம் எல்லாம் வற்றிப் போனது. ஜீவராசிகள் தாகத்தால் தவித்தன.  பஞ்சத்தால் இறக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை அதிகமானது.

 

5. ஸர்வே த்ருஷார்த்தாச்ச, ஹிமாத்ரிமேத்ய

  த்வாம் த்யானபூஜா,நுதிபிர் பஜந்தஹ

  ப்ரஸாதயாமா,ஸுரநேககோடி

  ப்ரம்மாண்ட க்ர்த்ரீம், அகிலார்த்தஹந்த்ரீம்

      இப்படி அனர்த்தங்கள் அதிகமானதால் எல்லோரும் இமாலய மலைக்குச் சென்று தேவியைத் துதித்தார்கள். சிலர் த்யானம் செய்தார்கள். ப்ரம்மாண்ட கோடி சிருஷ்டிக்கும் காரணமான தேவிக்கு இவர்களின் துன்பம் தீர்ப்பது ஒரு சிரமமா? அது அவளால் மட்டும் தானே முடியும்? அவர்களின் த்யானமும், பூஜையும், ஸ்துதியும் தேவியைச் சந்தோஷப்படுத்தியது.

 

6. த்ருஷ்டா தயார்த்ராக்ஷி, சதா த்வமேபிஹி

  க்ருபாச்ரு வர்ஷைர், நவராத்ரமுர்வ்யாம்

  ஜலாசயான் பூர்ண,ஜலாம்ச்ச கர்த்த

  ஜனா: சதாக்ஷீத்,யபிதாம் ததுஸ்தே

 

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே

சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே ( இரண்டு முறைச் சொல்ல வேண்டும்)

      நூறு கண்களுடன் தேவி அவர்களுக்குக் காட்சி தந்தாள். அதனால் தான் அவளுக்கு சதாக்ஷி என்று பெயர். ஒன்பது நாட்கள் அன்னையின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த க்ருபா வர்ஷத்தால் பூமியில் ஆறு குளங்கள் நிரம்பி வழிந்தன.

 

7. க்ஷுத்பீடிதானாம் , சராசராணாம்

  ஸர்வத்ர நாநாவித மன்னமிஷ்டம்

  ஸ்வாதூநி மூலானி, பலானி சாதாஹா

  சாகம்பரீதி ப்ரதிதா ததோSபூஹு

      எல்லோரும் தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டார்கள் அல்லவா? சதாக்ஷி தேவியின் அருளால் துக்கம் தீர்ந்தது. தண்ணீர் கிடைத்தாலும் பசி தீர வேண்டுமே? உணவு வேண்டுமல்லவா? அதனால் அனைவருக்கும் அன்னமும் தந்தாள். அனைவருக்கும் வேண்டிய பழங்களையும் தந்தாள். அதனால் சாகம்பரி என்றும் அழைக்கப்பட்டாள். சாகம் என்றால் ஸத்யம் அல்லது செடி, பழங்கள், காய்கரிகள் என்று பொருள். அதைத் தந்தவள் சாகம்பரி.

 

8. தைத்யஸ்து விஜ்ஞாய, ஸமஸ்தமஸ்த்ர

  சஸ்த்ரை: ஸஸைந்ய:, ப்ரஹரன் வபுஸ்தே

  ரணாங்கணே ஸாய,கவித்த காத்ரஹ

  ஸசப்த முர்வ்யாம், த்ருவத் பபாத

      வேதத்தைக் கையில் வைத்திருந்த அஸுரர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. மூவுலகத்திலும் அனைத்து ஜீவன்களும் படும் கஷ்டத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராமல் திடீரென மழை பொழிந்தது. அதன் காரணமாக எல்லோருடைய பசியும் தாகமும் தீர்ந்தது. துர்கமாஸுரன் இதைப் பார்த்தான். ஆச்சர்யமடைந்தான். இதற்குக் காரணம் தேவிதான் என்று புரிந்து கொண்டான். உடனே தேவியுடன் யுத்தத்திற்குத் தயாரானான். தனது அஸுர சைன்யத்துடன் தேவியுடன் மோதினான். கோரமான யுத்தம் நடந்தது. தேவியுடன் மோதினால் ஜெயிக்கவா முடியும்? அன்னையின் பாணங்களுக்கு இறையானான். பூமியில் சாய்ந்தான்அவன் உடலிலிருந்து ஒரு ஒளி தோன்றி தேவியின் திரு மேனியில் மறைந்தது.

 

9. சாஸுராத்மா, கலு வேதமந்த்ரான்

  சிரம் படம்ஸ்த்வாம் அபி வீக்ஷமாணஹ

  கதாயுராவிச்ய, பராத்மனி த்வயி

  அவாப முக்திம், மிஷதாம் ஸுராணாம்

      தேவர்களை வெற்றி கொள்வதற்காகத் தானே துர்கமாஸுரன் வேதத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டான். அப்பொழுதாவது அவன் அந்த வேதத்தைப் படித்திருக்கலாமல்லவா? அப்படி அவன் படித்திருந்தால் விசுத்தி கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அதைப் படிக்காமல் தானே வைத்திருந்தான். வேத மந்திரத்தின் சக்தியை அவன் ப்ரம்மாவிடமிருந்து பெற்றதால் அதன் பயனாக தேவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஸாயுஜ்ய முக்தியும் அடைந்தான்.

 

10. வேதான் ஹ்ருதான ப்ஜ, பவாந நே த்வம்

   புனச்ச நிக்ஷிப்ய, ஜகத்ஸு ரக்ஷாம்

   க்ருத்வா நுதா தேவ,கணைர் நரைச்ச

   துஷ்டா திரோSபூ: கருணார்த்ர நேத்ரா

      அஸுரனிடமிருந்து காப்பாற்றிய வேதத்தை மீண்டும் ப்ரம்மாவிடம் தந்தாள். இந்த உலகத்தைப் பசி, தாகம், பஞ்சம் போன்ற பெரிய கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றினாள். தேவர்களும் மனிதர்களும் அனைவரும் தேவியை பக்தியுடன் வணங்கினார்கள். தேவி சந்தோஷத்துடன் எல்லோரையும் துர்க்கை, சதாக்ஷி என்ற என் நாமங்களை எவன் ஜபிக்கிறானோ, அவன் மாயையைக் கடப்பான் என்று சொல்லி அனுக்ரஹம் செய்து மறைந்து போனாள்.

 

11. பக்தஸ்ய வை துர்க்கதி நாசினீ த்வம்

   ஸுகப்ரதா துர்க்க,மஹந்த்ரி! மாதஹ

   துர்க்கேதி நாம்நா, விதிதா லோகே;

   விசித்ரரூபா,ஸ்தவ தேவி! லீலாஹா

      அம்பாள் பக்தர்களின் கஷ்டத்தைத் தீர்ப்பவள் என்பதுப் பல கதைகளில் சொல்லப்பட்டது. துர்கமன் என்னும் அஸுரனையும் வதம் செய்தாள். யதார்த்தமாகப் பார்த்தால் தேவர்களை விட அஸுரர்களுக்குத்தான் அனுக்ரஹம் செய்திருக்கிறாள். துர்கமனுக்கு ஸாயுஜ்ய முக்தியும் தந்தாள். தேவர்கள் மீண்டும் மீண்டும் சுக துக்கங்களில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அஸுரனால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்தன. துர்கமனை வதைத்ததும் ஒரு அனுக்ரஹமே. துர்கமனை வதைத்ததால் தேவி துர்கை என்று அழைக்கப் படுகிறாள். பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் யாரோ அவளே துர்கா எனப்படுபவள்.

 

12. கோப்யஸ்தி சித்தே, மம துர்க்கமோSயம்

   ஞாதஸ்த்வயா, நைவ, மயா து தேவி!

   : ஸந்ததம் த்ருஹ்யதி மே தமாசு

   ஸம்ஹ்ருத்ய மாம் ரக்ஷ, நமோ நமஸ்தே

      துர்கமாஸுரனை அழிக்க தேவி சதாக்ஷி ஆனாள். என் மனதிலும் ஒரு துர்கமாஸுரன் இருக்கிறான். அவன் வேதத்தை அபஹரிக்கிறான். அதாவது தனக்கும் தேவையான அளவு வேத ஞானம் இல்லை என்று சொல்கிறார். அந்த அஸுரனை வதம் செய்து வேத ஞானத்தைத் தர வேண்டும் என்று ஆசிரியர் தேவியிடம் யாசிக்கிறார்.

இருபத்தி ஏழாம் தசகம் முடிந்தது

 

தசகம் 28

சக்த்யவமானதோஷம்

 

சக்தியை அசட்டை செய்த ஹரிஹரரின் கதையை இங்கு பார்க்கப் போகிறோம்.

 

1. ஹாலாஹலாக்யான,சுரான் புரா து

  நிஜக்னதுர் விஷ்ணு,ஹரௌ ரணாநதே

  ஸ்வேனைவ வீர்யேணஜயோSயமேவம்

  தௌ மோஹிதௌதர்ப்பம் அவாப துச்ச

ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அஸுரக் கூட்டம்ப்ரம்ம தேவரிடம் வரத்தைப் பெற்று மூஉலகத்தையும்  தங்கள் பராக்ரமத்தால் கைப்பற்றினர்ருத்திரரும்விஷ்ணுவும் அவர்களுடன் 60,000 வருடங்கள் பெரும் போர் புரிந்து அஸுரர்களைக் கொன்றனர்வெற்றிக்குக் காரணம் தங்களின் பராக்ரமமே என்றுதங்களின் மனைவிகளான கௌரி மஹாலக்ஷ்மி ஆகிய சக்திகளை மறந்தார்கள்அவர்கள் கர்வம் கொண்டனர்அவர்களின் கர்வத்தைக் கண்டு தேவிகள் சிரித்தனர்தங்களின் சொந்த சக்திகளை மதிக்காமல்மாயா மோகத்தால் தகாத வார்த்தைகளையும் சொல்ல சக்திகள் அவர்களிடமிருந்து பிரியஅவர்கள் சலனமற்றவர்கள் ஆனார்கள்.

 

2. ததோ விதிஸ்தௌதருவத்விசேஷ்டௌ

  தேஜோ விஹீனாவ,பிவீக்ஷ்ய பீதஹ

  நிமீலிதாக்ஷஸகலம் விசிந்த்ய

  ஜானன் ஸுதான் தக்ஷ,முகானுவாச

பிரம்மா, விஷ்ணுவும் ருத்ரரும் சக்தியின்றி சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்தார்மிகவும் கவலையில் ஆழ்ந்தார்ஏன் இப்படி நடந்தது?  என்று யோசித்தார்இது பராசக்தியின் கோபத்தின் விளைவு என்பதை அறிந்தார்சில காலம் வரை,  தன் சக்தியின் பிரபாவத்தால் அவர்களுடையத் தொழிலைச் செய்தார்எவ்வளவு காலம் இப்படிச் செய்ய முடியும்?  அதனால் தன் புத்திரர்களான தக்ஷன், மனு முதலியவர்களையும்ஸனகாதிகளையும் அழைத்தார்.

 

3. புத்ரா ஹரிம் பச்,யத துர்ஜடிம் 

  யௌ நஷ்டசக்தீகலு சக்திகோபாது

  ததோ ஜகத் பார,யுதோSஸ்மியூயம்

  சக்திம்  தபோபி:, குருத ப்ரஸன்னாம்

ப்ரம்மா சொன்னார் " புத்திரர்களேபராசக்தியின் கோபத்தால் ஹரிஹரர்கள் சக்தியின்றி மரம் போல் அசையாமல் நிற்கிறார்கள் . நான் எவ்வளவு நாட்கள் அவர்களின் ஸ்திதிஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்ய முடியும்அதனால்  என்னால் தவம் செய்து பராசக்தியை சந்தோஷப் படுத்த முடியவில்லைதவமே ஒருவரின் சக்தியை பலப்படுத்தும்முன் போல் அவர்கள் சக்தி உடையவர்களாக ஆக வேண்டும். அதனால் நாம் எல்லோரும் தவம் செய்து அந்த பராசக்தியைச் சந்தோஷப் படுத்த வேண்டும்என்றார்.

 

4. சக்தேப்ரஸாதேன ஹி பூர்வவத் தௌ

 ஸ்யாதாம்யசோவ்ருத்திரனேன வவஸ்யாது

 சக்திச்ச யத்ரா,வதரத்ய மோகம்

 ஏதத் குலம்யாதிக்ருதார்த்ததாம் 

பரம பக்தியுடன் கூடிய தவத்தை நீங்கள் செய்ய வேண்டும்அப்பொழுதான் தேவீ அனுக்ரஹம் செய்துஅவர்கள் மீண்டும் சக்தியைப் பெறுவார்கள் . சக்தி ப்ரஸாதித்தால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று ப்ரம்மா சொன்னார்.  எந்தக் குலத்தில் அன்னை அவதரிக்கிறாளோஅந்தக் குலம் கீர்த்தியும்புகழும் அடையும்.

 

5. சக்தேகடாக்ஷைர்ஜகதோஸ்து பத்ரம்

  ஏவம் நிசம்யாSSசுஹிமாத்ரிமேத்ய

  தக்ஷாதயோ த்யான,ஜபாதிபிஸ்த்வாம்

  ஆராத்ய பக்த்யாSப்த,சதானி நின்யுஹு

சக்தி ப்ரஸாதித்தால் உலகத்திற்கே நன்மை வரும்இதைகேட்டவுடன் தக்ஷன் முதலானோர் உடனே கிளம்பி,  இமயமலைச்சாரலை அடைந்துத்யானம்,  தவம் செய்தார்கள். 100 வருடங்கள் கடந்தன.

 

6. த்ருஷ்டா புரஸ்தைஸ்துநுதா த்வமாத்த

  பீத்யாSலமார்த்யா ஹிதம் ததாமி;

  கௌரீ  லக்ஷ்மீச்ச மமைவ சக்தீ;

  தே சம்பவே ப்ராக்ஹரயே  தத்தே

ஸச்சிதானந்த ஸ்வரூபிணீயாகிய அம்பாள்பாசம்அங்குசம்அபயம்வரத முத்திரைகளுடன்மூன்று கண்களுடன்கருணையுடன்  பிரஸன்னமானாள்தக்ஷப்ரஜாபதிகள் வேதாந்த வாக்யத்தால் துதித்தார்கள்அம்பாள் வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்று சொன்னாள்அவர்கள் ஹரிஹரர்களின் சரீரத்திற்குச் சாந்தியும்அவர்கள் விட்டுப் பிரிந்தச் சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என்று வேண்டினார்கள்என் குலத்தில் தாங்கள் அவதரிக்க வேண்டும் என்றும் தக்ஷன் பிரார்த்தித்தான்அம்பாள் சொன்னாள் "ஏன் விஷ்ணுவும்சிவனும் சலனமற்றவர்கள் ஆனார்கள்சிருஷ்டிக்கு முன் சிவனுக்குசக்தி என்ற சக்தியையும்விஷ்ணுவிற்கு லக்ஷ்மி என்ற சக்தியையும் தந்திருந்தேன் ( 10 ஆவ்து தசகத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது).

 

7. தௌ சக்தி சாஹாய்,யத ஏவ தைத்யான்

  நிஜக்னதுஸத்ய,மிதம் து தாப்யாம்

  ஹாவிஸ்ம்ருதம்சத்த்ய,யவமான தோஷாது

  வினஷ்ட சக்தீகலு தாவ பூதாம்

ஹாலாஹலர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்ததுஅவர்களுடைய சக்தியால் அல்லஅவர்களிடமிருந்த சக்திகளின் சக்தியால் தான்ஆனால் அவர்கள் தாங்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று அஹங்காரம் கொண்டார்கள்புவனேஸ்வரிசக்திகளை அவர்களிடம் தரும் பொழுதே சக்திகளை ஆதரவுடன் நடத்த வேண்டும் , அலக்ஷ்சியம் செய்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தாள்அன்று சொன்னது இன்று நடந்ததுசிவனும் விஷ்ணுவும் சக்திகளைத் துச்சமாக நினைத்ததால் சலனமற்றவர்கள் ஆனார்கள்.

 

8. தௌ பூர்வ,வத் ஸ்தா,மிஹசக்திரேகா

  ஜாயேத தக்ஷஸ்யகுலே மதீயா

  க்ஷீராப்திதோன்யா ;, புராரிராத்யாம்

  க்ருஷ்ணாதுபச்சாதி,தராம்  விஷ்ணுஹு

அம்பாள் சொன்னாள் " இனி ஒரு பொழதும் இப்படிப்பட்ட அபராதம் எனக்கு நிகழாமல் இருக்க வேண்டும்இப்பொழுது என்னைப் பிரார்தித்த படியால்ஒரு சக்தி தக்ஷனது க்ரஹத்திலும் ஒரு சக்தி பாற்கடலிலும் தோன்றுவார்கள்என்னுடைய கருணையால் அவர்களைச் சிவனும் விஷ்ணுவும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கால தாமதம் ஆகும். அதுவரை அவர்கள் சலனமில்லாமல் இருக்க வேண்டாம். இப்பொழுது அவர்களின் தொழிலைச் செய்ய என் கருணையால் அவர்களிடம் சக்தி உண்டாகும். இது தற்காலிகமே. இனிமேல் சக்தியை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னாள். தக்ஷனது ஆசையையும் பூர்த்தி செய்தாள்.

 

9. ஸர்வே ஸ்வசக்திம்பரிபூஜ்ய மாயா-

   -பீஜாதிமந்த்ரான்விதிவஜ்ஜ பந்தஹ

  விராட் ஸ்வரூபம் மமரூபமேதத்,

  ஸச்சித்ஸ்வரூபம் ஸதா ஸ்மரேத

அம்பாள் மேலும் சொன்னாள் எல்லோரும் தன் சக்தியை ஆதரிக்க வேண்டும்என்னுடைய மூன்று ரூபத்தையும் சதா த்யானம் செய்ய வேண்டும். 1. விராட் ரூபம்அண்ட சராசரங்களிலும் சக்தியாக இருப்பது விராட் ரூபம்சக்தி இல்லாவிட்டால் எதுவும் ஜடம் தான். (மின்சாரம்ஃபன்பல்புப்ரக்ருதிக்குச் சக்தி தருபவள் அம்பாள்தான். (ஸர்வ வ்யாபி). 2. இப்பொழுது காணும் ரூபம். சுந்தரியான பெண் ரூபம்அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.  3. சச்சிதானந்த ஸ்வரூபம்பரமானந்த ஸ்வரூபம்தண்ணீரில் அலை வந்தாலும் நுரை வந்தாலும் ஆதாரம் தண்ணீர் தான்அதுபோல இந்த உலகில் இருப்பது எல்லாமே சச்சிதானந்தம் தான்எல்லாம் ஒரே தேவி மயம் தான்.  பலவாக நினைப்பது பிரமைதான்.

 

10. ப்ரயாத துஷ்டா;, ஜகதாம் சுபம் ஸ்யா

  தேவம் த்வமாபாஷ்யதிரோததாத;

  காருண்ய தஸ்தேகிரிசோ ஹரிச் 

  சக்தாவபூதாம்நிஜகர்ம கர்த்தும்

இப்படிச் சொல்லி விட்டு மணித்வீப வாஸியான அம்பள் மறைந்தாள்சிவனும் விஷ்ணுவும் தத்தம் செயல்களைச் செய்யத் தொடங்கினார்கள்இப்படியாக உலகத்தில் சக்திகள் தக்ஷனுக்கும்ஸமுத்ரராஜனுக்கும் மகளாக அவதாரம் செய்யும் வரை தற்காலிகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தாள் தேவி.

 

11. மாதஹகடாக்ஷாமயி தே பதந்து;

  மா மாSஸ்து மே சக்த்ய,வமானபாபம்                

  ஸர்வான் ஸ்வதர்மான்கரவாண்யபீதஹ

  பத்ரம் மம ஸ்யாத்ஸததம் நமஸ்தே.

சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் சக்தியை அலக்ஷியம் செய்த தோஷம் வந்ததுதனக்கு அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது, தான் எப்பொழுதும் தனக்குரிய தர்மங்களைச் செய்து கொண்டு  வாழவேண்டும் என்று  இதன் ஆசிரியர் தேவியிடம் பிரார்த்தனைச் செய்கிறார்.

தசகம் இருபத்தி எட்டு முடிந்தது

 

தசகம் 29

தேவீ பீடோத்பதி

 

1. அதைகதாSத்ருச்யத தக்ஷகேஹே

  சாக்தம் மஹஸ்தச்சபபூவ பாலா

  விஜ்ஞாய தே சக்திம் இமாம் ஜகத்ஸு

  ஸர்வேSபி ஹ்ருஷ்டாஅபவத் க்ஷணச்ச

28 ஆவது தசகத்தில்தக்ஷன் சிவா விஷ்ணுவிற்குச் சக்தியை வேண்டினான்சலனமில்லாமல் இருந்த அவர்களுக்குத் தேவி அவர்ககளின் தொழிலைச் செய்வதற்குச் சக்தியைத் தந்தாள்தனது கிரஹத்தில் அன்னையின் அவதாரம் வேண்டும் என்று பிரார்த்தனைச் செய்தான் அல்லவாஅதனால் சில காலம் சென்ற பின் தக்ஷன் வீட்டில் ஒரு நாள் சக்தி சம்பந்தமான தேஜஸ் அவதாரம் செய்ததுதக்ஷன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது ஒரு அழகானப் பெண் குழந்தையாக மாறியதுஅதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினார்கள்அது சக்தியின் அம்சம் என்பதை அறிந்த தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்சூரியன் பிரகாஸமாக ஒளிர்ந்தான்ஆறுகள் சந்தோஷத்தில் பெருக்கெடுத்து ஓடின.

 

2. தக்ஷஸ்வகேஹா,பதிதாம் சகார

  நாம்நா ஸதீம்போஷ,யதி ஸ்ம தாம் ஸஹ

  ஸ்மரன் வசஸ்தேகிரிசாய காலே

  ப்ரதாய தாம் த்வௌஸமதோஷயச்ச

அம்பாளின் சக்தி தனது கிருஹத்தில் அவதரிக்கும் என்று முன்பு அம்பாள் சொன்னது தக்ஷனுக்கு நினைவிற்கு வந்ததுஇந்தக்குழந்தை அம்பாளின் சக்திதான் என்பதைத் தக்ஷன் புரிந்து கொண்டான்அந்தக் குழந்தைக்கு "ஸதீஎன்று பெயர் வைத்தான்.  ஸதீ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யுவதி ஆனாள்இந்த சத்தியைச் சிவன் ஏற்றுக்கொள்ளட்டும் என்று அம்பாள் சொன்னாள் அல்லவா? (28.8) அதனால் ஸதியைச் சிவனுக்கே மணம் முடித்தான் தக்ஷன்சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.

 

3. ஏவம் சிவசக்தியுதபுனச்ச

  பபூவகச்சத்ஸு தினேஷு தக்ஷஹ

  தைவாத் சிவத்வேஷம் அவாபதேஹம்

  தத்போஷிதம் ஸ்வம்விஜஹொ ஸதீ 

அவர்களுடைய வாழ்க்கைக் குறுகியக் காலமாகத்தான் இருந்ததுஒருசமயம் துர்வாஸ முனிவர் ஜாம்பூநதேஸ்வரீ என்னும் தேவியை மாயா பீஜத்தால் ஜபித்தார்மகிழ்ச்சியுடன் அவள் ஒரு பூமாலையைத் தந்து அனுக்ரஹம் செய்தாள்தக்ஷன் அந்த மாலையை விரும்பிக் கேட்கதுர்வாஸர் அதை அவனுக்குத் தந்தார்அதை அவன் தூய்மையான இடத்தில் வைக்காமல் தனது படுக்கை அறையில் அலங்காரமாக வைத்தான்மாலையின் நறுமணத்தால் காமவேட்கைக் கொண்டு மனைவியுடன் இணைந்தான்பூஜிக்கப்பட வேண்டிய அந்த பூமாலையைப் படுக்கை அறையில் வைக்கலாமாஅதனால் அதன் பரிசுத்தத்திற்குக் களங்கம் வந்ததால்அவனுக்குத் தோஷம் வந்ததுசிவனிடம் துவேஷம் வர ஆரம்பித்ததுஸதி இதைக் கண்டு மனம் வருந்தினாள்சிவ த்வேஷியான தக்ஷனால் வளர்க்கப் பட்ட இந்த ஸரீரம் தனக்கு வேண்டாம் என்று யோகாக்னியில் ப்ரவேசித்தாள்.  இது தக்ஷனின் தலை எழுத்து.

 

4. துக்கேன கோபேன  ஹா ஸதீ தி              

  முஹுர் வதன்னுத்,ருததாரதேஹஹ

  பப்ராம ஸர்வத்ரஹரஸுரேஷு

  பச்யத்ஸு சார்ங்கீசிவமன்வசாரீத்

சிவன் மிகவும் துக்கமடைந்தார்ஸதியின் ஸரீரத்தைத் தன் தோளில் சுமந்து கொண்டுசித்தப் பிரமை அடைந்தவர் போல் தாண்டவம் ஆடினார்அவரின் கோபாக்னியைக் கண்டு யாரும் அவரிடம் நெருங்கவே பயந்தனர்அப்பொழுது விஷ்ணு வில்லும் அம்புமாக சிவனிடம் சென்றார்.

 

5. ருத்ராம்ஸவின்யஸ்த,ஸதீசரீரம்

  விஷ்ணுசரௌகைர்பஹுசச்ச கர்த்த;

  ஏகைகசபேதுர,முஷ்ய கண்டா

  பூமௌ சிவேஸாஷ்டசதம் ஸ்தலேஷு

சிவன் ஒரு பயித்தியக்காரன் போல் ஸதியின் ஸரீரத்தைத் தோளின் மீது வைத்துக் கொண்டு உலகம் சுற்றினார்அருகில் செல்ல எல்லோரும் பயந்தனர்அப்போது விஷ்ணு சிவனின் அருகில் சென்று எம்பெருமானேதாங்கள் சுமந்திருக்கும் ஸதியின் ஸரீரம் சித்கலா ரூபம்அக்கலைகளைத் தனித் தனியாக உலகமெங்கும்  பீடமாக இருக்கச் செய்துதாங்களும் அதில் வீற்றிருக்க வேண்டும்என்று வேண்டசிவனும் "அப்படியே ஆகட்டும்என்று அருள் செய்தார்விஷ்ணு  ஸார்த்தம் என்னும் தன்னுடைய வில்லால் ஸதியின் ஸரீரத்தைத் துண்டாக்கினார்அது பூஉலகத்தில் 108 இடங்களில் விழுந்ததுஇந்த விஷ்ணுவிற்கு இதைச் செய்ய அனுக்ரஹித்தவளே அம்பாள் தான்ஸ்லோகத்தில் இதன் ஆசிரயர் "சிவேஎன்று சொல்கிறார்உலகத்தில் மங்களம் பொங்கவே தேவீ இப்படிச் செய்தாள்.

 

6. யதோ யதபேதுரிமே ஸ்தலானி

  ஸர்வாணி தானிப்ரதிதானி லோகே

  இமானி பூதானி பவானிதேவீ-

  பீடானி ஸர்வாகஹராணி பாந்தி

தேவியின் சரீரம் விழுந்த இடங்கள் எல்லாம் தேவியின் க்ஷேத்ரமாக விளங்கியதுஅந்த 108 துர்கா க்ஷேத்ரங்களும் மிகவும் பிரசித்தமானவைஇந்த பீடங்களில் தேவியை பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் கிடைத்தற்கரிய பொருள் ஏதும் இல்லைஇந்த க்ஷேத்ரங்களில் மாயாபீஜ மந்திரத்தை ஜபிப்பவனுக்குஅம்மந்திரத்தின் சக்தி சித்தியாகும் என்று சொல்லப் படுகிறதுதேவியின் முகம் விழுந்த இடத்திற்கு 1. வாரணாசியில் விசாலாக்ஷி என்று பெயர். 2. நைமிசாரணியத்தில் லிங்கதாரிணி. 3. பிரயாகையில் லலிதா 4. துவாரகையில் ருக்மிணி 5. பிருந்தாவனத்தில் ராதா. 6. மதுராவில் தேவகீ 7. சித்ரகூடத்தில் சீதா 8. குஜரத்தில் அம்பாதேவீ. 9. பெங்களூரில் நிமிஷாதேவி.10. உத்ரகிரியில் ஔஷதை. இதுபோல் 108 இடங்களில் பாபங்களைத் தீர்ப்பதற்காக ஏற்பட்டது

 

7. த்வமேகமேவா,த்வயமத்ர பின்ன -

  - நாமானி த்ருத்வாகலு மந்த்ரதந்த்ரைஹி

  ஸம்பூஜ்யமானாசரணாகதானாம்

  புக்திம்  முக்திம் ததாஸி மாதஹ!

அம்பாள் ஒன்றுதான்இரண்டு இல்லைஆனாலும் 108 பீடங்களிலும் 108 ரூபங்களுடனும்நாமத்துடனும் இருக்கிறாள்தக்ஷன் சிவனை அவமதித்ததால் அம்பாள்  தனக்கு நிகரான சாயா ஸதியைச் சிருஷ்டித்துஅவள்தான் யாகத்தீயில் குதித்தாள் என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுபித்ரு ஹத்தி என்ற பாபம் வரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தாள்உண்மையான ஸதீ அக்னியில் குதித்திருந்தால்தக்ஷனையும் கொன்று விடுவார்களல்லவாஅப்பொழுதுத் தந்தையைக் கொன்ற பாபம் வருமல்லவாஅதனால் அப்படிச் செய்தாள்இந்த 108 க்ஷேத்ரங்களும் சக்தி பீடங்கள்அந்த இடங்களில் சிவனும் பல மூர்த்தி வடிவத்தில் நிலை பெற்றிருக்கிறார்.

 

8. நிர்விண்ண சித்தஸதீவியோகாது

  சிவஸ்மரம்ஸ்த்வாம்குஹ சின்னிஷண்ணஹ

  ஸமாதிமக்னோபவதேஷ லோகஹ

  சக்திம் வினா ஹாவிரஸோலஸச்ச

ஸதியின் பிரிவு சிவனுக்குத் துக்கத்தைத் தந்தது.  அம்பாளை நினைத்து ஓரிடத்தில் ஸ்திரமாய் அமர்ந்தார்அப்படியே ஸமாதி நிலையில் ஆழ்ந்து போனார்பிரபஞ்சத்தின் நினைவு இல்லாமல்தேவியின் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டுகாலத்தைக் கழித்தார்சக்தி இல்லாத உலகம் சக்தியை இழந்து சராசரப் பிரபஞ்சம் முழவதும் சௌபாக்யம் இன்றி இருந்ததுயாருக்கும் எந்த சுறு சுறுப்பும் இல்லை.

 

9. சிந்தாகுலா மோஹ,தியோ விசீர்ண்ண

  தோஷா மஹாரோத,நிபீடிதாச்ச

  சௌபாக்யஹீனாவிஹதாபிலாஷாஹா

  ஸர்வே ஸதோத்விக்னஹ்ருதோ பபூவுஹு

எல்லோருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லைபுத்தியும் மங்கிப் போயிற்றுஅனைவருக்கும் இருதயம் உலர்ந்துஆனந்தம் வற்றிப் போனதுகவலை கொண்ட சித்தத்துடன் இருந்தனர்ரோகமும் வந்ததுதேவீ பாகவதத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

10. சிவோSபி சக்த்யா ஸஹிதகரோதி

  ஸர்வம்வியுக்தச்ச தயா ஜடஸ்யாது

  மா மாஸ்து மே சக்திவியோக ஏஷ

  தாஸோSஸ்மிபூயோவரதேநமஸ்தே

ஸதி பிரிந்ததும் சிவனும் சுறு சுறுபில்லாதவர் ஆனார்அப்படி ஒரு பிரிவுத் தனக்கு வந்து விடக்கூடாது என்று இதன் ஆசிரியர் நினக்கிறார்அதனால் அம்பாள் முன் இதைக் கூறிமீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்அம்பாள் ஸர்வ வரதாயினி அல்லவா?

தசகம் இருபத்தி ஒன்பது முடிந்தது

 

தசகம் 30

ஸ்ரீ பார்வதி அவதாரம்

 

1. ஸமாதிமக்னேகிரிசே விரிஞ்சாது

  தபப்ரஸ்ஸன்னாத்கில தாரகாக்யஹ

  தைத்யோவரம் ப்ராப்யவிஜித்ய தேவானு

  ஸபாந்தவஸ்வர்க்க,ஸுகான்ய பும்க்த

ஸதியைப் பிரிந்த சிவன் ஆழ்ந்த த்யானத்தில் ஆழ்ந்தார்அவருக்கு உலகத்தின் சிந்தனையே இல்லைஇந்த நேரத்தில் தாரகன் என்னும் ஒரு கொடிய அஸுரன் ப்ரம்மாவைக் குறித்துத் தவம் செய்துவரத்தைப் பெற்றுஸ்வர்கலோகத்தையும் ஆக்ரமித்து தேவர்களை அங்கிருந்து ஓடச் செய்தான்அஸுர பந்துக்களுடன் ஸ்வர்கலோகம் வந்து அங்கேயே சுகமாக வாழத் தொடங்கினான்.

 

2. வரை பர்கௌரஸபுத்ரமாத்ர

  வத்யத்வம் ஆப்தோSஸ்ய பத்ன்யபாவாது

  ஸர்வாதிபத்யம்ஸ்வபலம்  மோஹானு -

  மத்தோ ப்ருசம் சாச்,வதமேவ மேனே

"சிவனது புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும்என்று தாரகாஸுரன் ப்ரம்மனிடம் வரம் பெற்றான்ஸதியைப் பிரிந்து துக்கத்தில் இருக்கும் சிவன் வேறு கல்யாணம் செய் கொள்ள மாட்டார்அதனால் சிவனுக்குப் புத்திரன் பிறக்க மாட்டான்தன்னைக் கொல்ல யாராலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்,  தன் சுகபோகமும் ஸ்வர்க்கலோகவாசமும் சாஸ்வதம் என்று நினைத்தான்.

 

3. நஷ்ட்டாகிலாஸ்ரீஹரயே ஸீராஸ்தே

  நிவேதயாமா,ஸுரசேஷ துக்கம்

   சாSS தேவாஅனயேன நூனம்

  உபேக்ஷதே நோஜனனீ க்ருபார்த்ரா

தாரகாஸுரனின் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்க்கத்தை விட்டுச் சென்ற தேவர்கள்தாரகாஸுரன் ப்ரம்மனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டார்கள்தேவி இல்லாத பொழுதுசிவனுக்கு எப்படிப் புத்திரன் பிறப்பான்பாக்ய ஹீனர்களான நம்முடைய காரியம் என்ன ஆகப் போகிறதோஎன்று மிகவும் கவலையில் ஆழ்ந்துவிஷ்ணுவைப் பார்க்க வைகுண்டம் சென்றார்கள். “நாரயண மூர்த்தியேஎங்கள் கவலைத் தீர உபாயம் சொல்லுங்கள் என வேண்டினர்விஷ்ணு சொன்னார் "தேவர்களேகவலையை விடுங்கள்கேட்டதைத் தரும்  கற்பக விருட்ஷம் போல்இந்த உலகத்தை ஆளும்மணித்வீப வாசியான தேவி இருக்கக் கவலை ஏன்ஆனால் தேவியின் கருணைக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லைஅதனால் அந்த தேவி இப்பொழுது நம்மைப் பாராதவள் போல் இருக்கிறாள்தேவிக்குக் கருணை உண்டுஆனால் நாம்தான் அதற்கு உகந்தவர்களாக இல்லை.

 

4. தத்விஸ்ம்ருதேர்ஜாத,மிதம்கரேண

  யஷ்ட்யா  யா தாட,யதி ஸ்வபுத்ரம்

  தாமேவ பாலநிஜேஷ்டதாத்ரீம்

  ஸாஸ்ரம் ருதன் மாதரமப்யுன்பைதி

விஷ்ணு மேலும் சொன்னார் "நாம் கருணை மயமான அந்த அன்னையை மறந்து விட்டோம்அதனால் தான் நமக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்கிறதுதாய் தன் குழந்தையை நேர்வழியில் நடத்த அடிப்பாள்அடித்தாலும் குழந்தை அம்மாஎன்று தானே அழும்தனக்கு வேண்டியதைத் தருபவள் அம்மாதான் என்று குழந்தைக்குத் தெரியும்தான்  குறும்பு செய்ததால்  தான் தாய் அடித்தாள் என்பதும் தெரியும்குழந்தைக்குத் தாயின்றி வேறு யாரும் இல்லைஅதுபோல் நாம் எல்லோரும் குழந்தைகள்அந்த தேவியே நமக்குத் தாய்”.

 

5. மாதா ஹி சக்தி,ரிமாம் ப்ரஸ்ஸன்னாம்

  குர்யாம பக்த்யாதபஸா  சீக்ரம்;

  ஸர்வாபதஸைவஹரிஷ்யதீ தீ

  ச்ருத்வாSமராஸ்த்வாம்நுனுவுர் மஹேசி!  

விஷ்ணு தொடர்ந்து சொன்னார் " நாம் பக்தியுடன் தவம் செய்து அன்னையைச் சந்தோஷப்படுத்த வேண்டும்அம்பாள் நமது கஷ்டத்தை எல்லாம் நீக்குவாள்என்றார்அம்பாளின் கருணையை அனுபவத்தில் அவர்கள் உணர்ந்தவர்கள்அதனால் விஷ்ணு சொன்னதே சரி என்று நினைத்தார்கள்வேதாந்த வாக்யங்களால் தேவியைத் துதித்தார்கள்.

 

6. நிசம்ய தேஷாம்ச்ருதிவாக்யகர்ப-

  - ஸ்துதிம் ப்ரஸன்னாவிபுதாம்ஸ்த்வமாத்த

  அலம் விஷாதேனஸுரா:! ஸமஸ்தம்

  ஜானேஹரிஷ்யாமிபயம் த்ருதம் வஹ

விஷ்ணு தன் பத்னியுடனும்இந்திராதி தேவர்களுடனும்இமயமலைக்குச் சென்றுபல வருடங்கள் தேவியைத் துதித்தனர்அன்னை அவர்கள் முன் தோன்றி, "உங்களின் பயத்தைப் போக்குகிறேன்என்று வாக்குக் கொடுத்தாள்.

 

7. ஹிமாத்ரிபுத்ரீவிபுதாஸ்த  தர்த்தம்

  ஜாயேத கௌரீமம சக்திரேகா;

  ஸா  ப்ரதேயாவ்ருஷபத் வஜாய;

  தயோஸுதஸ்தம்திதிஜம்  ஹன்யாது

அம்பாள் எப்படி பயத்தைப் போக்குவாள்அதையும் தேவியே சொன்னாள். "பர்வதராஜன் என்னை இருதய கமலத்தில் வைத்துப் பக்தியுடன் உபாஸிக்கிறான்என்னுடைய சக்தியான கௌரி இமயமலையில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறப்பாள்அவளைச் சிவன் திருமணம் செய்ய வேண்டும்அவர்களுக்குப் பிறக்கும் மகன் தாரகாஸுரனை வதம் செய்வான்என்றாள்சிவனும் விஷ்ணுவும் தங்களதுச் சக்திகளை மதிக்காததால் தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டதை  முன்பு பார்த்தோம்அதற்குப் பரிகாரமாகத் தேவர்கள் தேவியைத் துதித்தார்கள்தேவீ அவர்கள் முன் தோன்றி “தக்ஷனது இல்லத்தில் தான் பிறப்பேன் என்றாள்அப்படியே செய்தாள்இப்பொழுது ஹிமவானுக்கு மகளாகப் பிறப்பேன் என்று சொன்னாள்ஹிமவானுக்குக் கேட்காமலே கிடைத்த வரம் இது.

 

8. இத்தம் நிசம்யாஸ்தபயேஷு தேவேஷு

  அப்யர்த்திதா தேவிஹிமாசலேன

  த்வம் வர்ணயந்தீநிஜதத்வமேப்யஹ

  ப்ரதர்சயாமா,ஸித விச்வரூபம்

  அம்மே நாராயணாதேவீ நாராயணா

  லக்ஷ்மி நாராயணாபத்ரே நாராயணா

தேவீ தனக்கு மகளாகப் பிறக்கப் போகிறாள் என்பதை அறிந்த ஹிமவான் ஆவலுடன் காத்திருந்தான்தந்தையாகிய நான் எனது புத்ரியிடம் எனது மகள் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமாஅப்படிச் செய்தால் அது தவறாகுமாஅம்பாளின் பரம ரகஸ்யம் என்ன என்று அறிந்து கொண்டால் ஜாக்கிரதையாக இருக்கலாமேஎன்று நினைத்தான்தேவர்கள் எல்லோரும் கேட்க தேவீ தத்வ உபதேஸம் செய்தாள்இது தேவீ பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறதுஇதற்கு தேவி கீதை என்று பெயர்அம்பாளின் ஆதார தத்வம்ஸர்வவ்யாபித்வம் இவைகளை எல்லாம் கேட்ட தேவர்கள்அம்பாளின் விஸ்வரூபத்தைக் காண ஆவல் கொண்டார்கள்.

 

9. ஸஹஸ்ரசீர்ஷம் ஸஹஸ்ரவகத்ரம்

  ஸகஸ்ரகர்ணம் ஸஹஸ்ரநேத்ரம்

  ஸஹஸ்ரஹஸ்தம் ஸஹஸ்ரபாதம்

  அநேகவித்யுத் ப்ரபமுஜ்வலம் 

சூரியன் என்பது ஒன்றுதான்ஆனால் அது ஆறுகுளம் குட்டைகிணறு போன்ற பல நீர்நிலைகளில் பிரதிபலிக்கும் பொழுது பலவாகத்  தோன்றுகிறது.  பல சூரியன் இருப்பது போல் தோன்றுகிறதுஅதுபோல அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான்அனைத்துச் சரீரங்களும் அம்பாள் சரீரம் தான்அனைத்துக் கைகால்களும் அம்பாள் கை கால்கள்அதுபோல் தலைகள்கண்கள் எல்லாமே அம்பாள் தான்அதனால் தான் விஸ்வரூபத்தில் கணக்கிடமுடியாத தலைகள் கைகள்கால்கள்கண்கள் என்றுகோடி சூர்யப் பிரகாஸமாயும்கோடி மின்னல் மின்னுவதைப் போன்ற ஒளியும் பார்க்கவே கண்ணைக் கூசும்படி இருந்தது.

 

10. த்ருஷ்ட்வேதம் ஈச்வர்ய,கிலைர் பியோக்தா

  த்வம் சோபஸம்ஹ்ருத்யவிராட்ஸ்வரூபம்

  க்ருபாவதீ ஸ்மேரமுகீ புனச்ச

  நிவ்ருத்திமார்க்கம்கிரயே ந்யகாதீஹீ

கண்ணால் பார்க்கக் கூட முடியாத அந்த பயங்கர விஸ்வரூபத்தைக் கண்டு அனைவரும் பயந்தார்கள்தாயேஇந்த ரூபம் வேண்டாம்அழகிய  சுந்தர மேனியாய்க் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார்கள்பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனும் இப்படித்தான் சொன்னான்தேவி அழகிய சுந்தரியாகக் காட்சி தந்தாள்ஞானம்கர்மம்யோகம்பக்திப்ரம்மத்யானம்பிரதிமா பூஜை  ஆகியவைகளை விபரமாகச் சொன்னாள்.

 

11. உக்த்வாSகிலம் ஸம்,ஸ்ருதிமுக்திமார்க்கம்

  ஸுரேஷு பச்யத்ஸுதிரோததாதஹ

  ச்ருத்வாத்ரிமுக்யா,ஸ்தவ கீதமுச்சைர்ஹீ

  தேவா ஜபத்யான அபரா பபூவுஹு

ஸம்சாரத்திலிருந்து முக்தி அடையக் கூடிய வழிகளை விரிவாகச் சொன்னாள்அதன் பின் தேவீ மறைந்தாள்.

12. அதைகதா ப்ரா,துரபூத் ஹி மாத்ரௌ

  சாக்தம் மஹோ தக்ஷ கிருஹே யதா ப்ராகு

  க்ரமேண தத் தேவிபபூவ கன்யா;

  ஸா பார்வதீதி ப்ரதிதா ஜகத்ஸு

 

  ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே

  சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே.

தக்ஷனது இல்லத்தில் தோன்றிய தேஜஸ் எப்படிக் குழந்தையாக மாறியதோஅப்படியே இமாலயத்தில் இமவான் இல்லத்தில் தோன்றிய தேஜஸும் ஒரு கன்னிகையாகி " பார்வதீஎன்னும் பெயருடன் பிரசித்தி பெற்றது.

 

13. ஹி மாத்ரிணைஷா ஹராய தத்தா:

  தயோர்ஸு ஸ் கந்தஇதி ப்ரஸித்தஹ

   தாரகாக்யம்திதிஜம் நிஹத்ய

  ரரக்ஷ லோகாந் அகிலான் மஹே சி!

சிவன் பார்வதியை மணந்து கொண்டார்அவர்களுக்குக் ஸ்கந்தன் பிறந்தான்ஸ்கந்தரால் தாரகாஸுரன் வதம் செய்யப்பட்டான்ஸதியின் பிரிவால்வருந்திய சிவன் மீண்டும் பார்வதியை மணந்ததும் தேவியின் அருள் தான்.

14. துர்வாஸ சாப,பலேன சக்ரோ

  நஷ்ட்டாகிலஸ்ரீர்வசனேன விஷ்ணோஹோ

  க்ஷீராததிம் ஸா,ஸு ரதேவஸங்கஹ

  மமந்ததஸ் மா,து தபுச்ச லக்ஷ்மீஹீ

ஒரு சமயம் விஷ்ணுவின் பாதத்தில் சிவன் புஷ்பத்தால் அர்ச்சனைச் செய்தார்அதில் ஒரு பூ துர்வாஸருக்குக் கிடைத்ததுஅவர் அதை இந்திரனுக்குத் தந்தார்இந்திரன் அதை ஐராவதத்தின் தலையில் வைத்தான்அதனால் ஐராவதம் இந்திரனை விட்டுப் பிரிந்ததுதுர்வாஸர் கோபத்தால் சாபம் தரஸ்வர்க்கலோக செல்வங்கள் நசித்தனதேவர்களின் ஐஸ்வர்யம் நசித்துஇந்திரன் ப்ரம்மாவிஷ்ணுவிடம் செல்லவிஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் லக்ஷ்மி உயர்ந்து வருவாள் என்றார்தேவர்கள் அஸுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைய லக்ஷ்மி தோன்றினாள்.

15. யா பூஜிதேந்த்ரேணரமா தவைகா

  சக்திஸ் வரைச்வர்யபுனப்ரதாநாது

  சாபான் முனேர்தேவகணான் விமோச்ய

  கடாக்ஷ தஸ்தே ஹரிமாப பூயஹ

லக்ஷ்மியை இந்திரன் முறைப்படி பூஜை செய்தான். சந்தோஷமடைந்த லக்ஷ்மி சகல ஐஸ்வர்யங்களையும் தேவர்களுக்குத் தந்தாள். துர்வாஸர் சாபத்திலிருந்து தேவர்கள் விடுபட்டார்கள். தேவர்கள் சந்தோஷமடைந்தனர். விஷ்ணுவை பிரிந்த சக்தி மீண்டும் கிடைத்தது. (தசகம் 28 ல் சொல்லப்பட்டிருக்கிறது)

 

16. த்வம் ஸர்வசக்திர் ஜிதாஸி கேனாபி

  அந்யான் ஜயஸ்யே, ஸதா சரண்யா

  மாதேவ பத்னீ, ஸுதேவ வா த்வம்

  விபாஸி பக்தஸ்ய;, நமோ நமஸ்தே

சகல சக்தியும் உடையவள் அம்பாள்அவள் யாரிடமும் தோல்வி அடையமாட்டாள்அவள் வெற்றித் திருமகள்அந்த அம்பாளைத்தான் பக்தன் சரண் அடைய வேண்டும்அவள் எந்த ரூபத்திலும் வருவாள்இமவானுக்குப் புத்ரிசிவனுக்குப் பத்னீவிஷ்ணுவிற்குப் பத்னீஆனால் அம்மாபுத்ரீ பத்னீ என்ற பந்தத்தில் சிக்க மாட்டாள்அவள் எப்போதும் சுதந்திரமானவள்அந்த தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்

முப்பதாம் தசகம் முடிந்தது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தசகம் 31

ப்ராமர்யவதாரம்

1. கச்சில் புரா மந்த்ர,முதீர்ய காய -
  - 
த்ரீதிப்ரஸித்தம் திதி,ஜோருணாக்யஹ
  சிராய க்ருத்வாதப ஆத்மயோனேஹே
  ப்ரஸாதிதாதா, வரான் அபூர்வானு.

      அருணன் என்னும் ஒரு அஸுரன் இமயமலை நோக்கிச் சென்றுகங்கைக் கரையில் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொண்டுமிகக் கடுமையாக அன்ன ஆகாரம் ஏதும் இன்றிதண்ணீர் கூட அருந்தாமல் காயத்ரி மந்திரத்தை பல வருடங்கள் ஜபித்து வந்தான்அவன் தவத்தின் உக்ரம் சகல லோகத்தையும் தகிக்கதேவர்கள் பயந்து நடுங்கி ப்ரம்மனிடம் முறையிட்டார்கள்ப்ரம்மன் ஹம்ஸவாகனத்தில் அருணனுக்குக் காட்சி தந்தார்இதுவரை யாரும் கேட்காத வரத்தை ப்ரம்மனிடம் கேட்டான்பல ஆயிரம் வருஷங்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்ததால் அவனுக்குப் புண்ணியமும் கிடைத்தது.

 

2. ஸ்திரீபும்,பிரஸ்த்ரைச்சரணே த்விபாதைஹி
  சதுஷ்பதை சாப்,யு பயாத்மகைச்ச
  அவத்யதாம் தேவ,பராஜயம் 
  லப்த்வா  த்ருப்தோதிவமாஸஸாத

அருணன் அப்படி என்ன வரம் கேட்டான்சும்ப நிசும்பர்கள்ஹிரண்யகசிபு போன்றவர்களுக்கு வந்த அபத்தம் தனக்கும் வரக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக வரம் கேட்டான்.  " எனக்கு யுத்தத்தினாலோ,அஸ்திர சஸ்திரங்களினாலோஇரண்டு கால்கள் உடைய  ஆணாலோ பெண்ணாலோநான்கு கால்கள் உடைய மிருகங்களினாலோஅல்லது நரஸிம்ஹ அவதாரம் போன்று இரண்டும் இணைந்த உருவத்தாலோ இது போன்ற எந்த ஜந்துக்களாலும் மரணம் வரக்கூடாதுமேலும் இப்பொழுது எனக்குத் தேவர்களை வெல்லும் சக்தியும் வேண்டும்எனக் கேட்டான்ப்ரம்மாவும் தந்தார்இந்த வரம் கிடைத்த அஹங்காரத்தால் ஸ்வர்க்கலோகம் சென்றான்.

 

3. ரணே ஜிதா தைத்ய,பயேன லோக
  பாலைஸஹ ஸ்வஸ்வ பதானி ஹித்வா
  தேவா த்ருதாப்ராப்யசிவம் ரிபுணாம்
  ஸம்யக் வதோபாய,மசிந்தயம்ச்ச

இந்திரனை யுத்தத்திற்கு அழைத்தான்சூரியனும் இந்திரனும் பயந்துப்ரம்மனிடம் போகஅவரும் அனைவருடன் விஷ்ணுவிடம் செல்லமுடிவில் அனைவரும் சிவனிடம் சென்றனர்சிவனுக்கு அருணனின் வரம் பற்றி நன்கு தெரியும்அதனால் அவனை எப்படி வெற்றி கொள்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சூரியன், யமன்அக்னி ஆகியோரையும் அவரவர்களின் இடத்தைவிட்டு விரட்டிஅவர்களைப் போல் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான்.

 

4. ததாSபவத் காப்ய,சரீரிணீ வாக்-
  பஜேத தேவீம்,சுபமேவஸ்யாது
  தைத்யோSருணோ வர்த்த,யதீஹ காயத்ரீ
  உபாஸ நேநாSSத்,மபலம் த்வத்ருஷ்யம்

இப்படி எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அசரீரி வாக்கு கேட்டது." காயத்ரீ மந்திரத்தை பல ஆயிரம் வருடங்கள் ஜபித்ததால் அவன் பலம் மிகுந்து வருகின்றதுஅஸுரன் இப்பொழுது மிகுந்த ஆத்ம பலத்துடன் இருக்கிறான்".

 

5. யத்யேஷ தம் மந்த்ர,ஜபம் ஜஹாதி
   துர்பலஸாத்,யவதோSபி  ஸ்யாது
  ஏவம் நிசம்ய த்ரிதசைப்ரஹ்ருஷ்டைஹி
  அப்யர்த்திதோ தேவ,குருப்ரதஸ்தே

                "அவன் காயத்ரீ மந்திரம் சொல்வதை நிறுத்த வேண்டும்அதனால் அவன் பலம் குறையும்அப்பொழுது அவனை வெல்வது எளிதாகும்". அசரீரி வாக்கைக் கேட்ட தேவர்கள் சந்தோஷம் கொண்டார்கள்தங்கள் குருவான ப்ரகஸ்பதியைச் சரண் அடைந்தார்கள்.  விபரம் அறிந்து கொண்ட ப்ரகஸ்பதி அஸுரனிடம் சென்றார்.

 

6.  ப்ராப தைத்யம்யதிரூபதாரீ;
  ப்ரத்யுத்கதோ மந்த்ர,ஜபாதிஸக்தம்
  ஸ்மிதார்த்ரமூசேகுசலீ  பந்து
  மித்ரோ பவான் கிம்ஜகதேகவீர!

                தேவர்களின் குருவான ப்ரகஸ்பதி ஒரு சந்யாஸி போல் வேடம் பூண்டு அருணனிடம் சென்றார்அருணனும் சந்யாஸியை உபசரித்து வரவேற்றான்அவன் விடாமல் காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதை சந்யாஸியான ப்ரகஸ்பதிப் பார்த்தார்புன்சிரிப்புடன் அஸுரனின் குசலம் விஜாரித்தார்அவனை ஜகதேகவீராஎன்றும் அழைத்தார்.

 

7. தைத்யஸ்ய தே மந்த்ர,ஜபேன கிம்யோ
  நூனம் பலிஷ்டம்த்வபலம் கரோதி
  யேனைவ தேவாஅபலா ரணேஷு
  த்வயா ஜிதாஸ்த்வம்ஸ்வஹிதம் குருஷ்வ

                'ஏன் இப்படி விடாமல் மந்திரத்தை ஜபம் செய்கிறாய்இதனால் உனக்கு என்ன லாபம்இப்பொழுது உன்னிடம் இல்லாத எந்த ஒரு புதிய சுகமும் நீ இப்படி விடாமல் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்காதுஇந்த ஜபத்தால் எந்த லாபமும் இல்லைநஷ்டம் தான் ஏற்படும்பேரும் புகழும் உடையவன் துர்பலனாவான்தேவர்கள் மந்திரத்தை விடாமல் ஜபித்து ஜபித்து துர்பலர்கள் ஆகவில்லையாயுத்தத்திலும் தோல்வியையே தழுவினர்அதனால் உனக்கு வருங்காலத்திற்கு எது உகந்ததோ அதைச் செய்அதுதான் உனக்கு நன்மை தரும்என்றார் சந்யாஸி வேடம் கொண்ட ப்ரகஸ்பதி.

 

8. ஸந்யாஸினோ மந்த்ர,ஜபேன ராக
  த்வேஷாதி ஜேதும்ஸததம் யதந்தே;
   த்வம் யதிர்நாபிமுமுக்ஷுரர்த்த-
   - 
காமாதிஸக்தஸ்யஜபேன கிம் தே?

அஸுரன் கேட்டான் "மந்திரம் ஜபித்தால் பலம் போய்விடுமாஅப்படியானால் சந்யாஸிகள் ஏன் ஜபிக்கிறார்கள்?" போலி சந்யாஸி பதில் சொன்னார். "மந்திரம் ஜபித்தால் ராக த்வேஷாதிகள் நசித்துப் போகும்சந்யாஸிகளுக்கு அதுதானே வேண்டும்அவர்களுக்கு அர்த்த காம்யங்களில் தாத்பர்யமில்லைஆனால் அஸுரனான நீ இந்த மந்திரத்தை ஜபித்தால் விபரீதமான பலனைக் கொடுக்கும்ராகத்வேஷங்களை நசிக்கும்அர்த்த காமங்களில் ஆஸக்தி குறையும்உன்னை சந்யாஸியாக மாற்றும்அதனால் மந்திரம் ஜபிக்காதேஎன்றார்.

 

9. ஏகம் ஹி மந்த்ரம்ஸமுபாஸ்வஹே த்வௌ;
  தேனாஸி மித்ரம்மமதத் வதாமி-
  மந்த்ரச்ச மே முக்தித ஏவதுப்யம்
  வ்ருத்திம்  தத்யாத,யமித்யவேஹி

                அருணாஸுரன் எதையும் கேட்காமல் சந்யாஸி எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்இந்த வினாவிற்கான விடை இந்த ஸ்லோகத்தில் உள்ளதுசந்யாஸியும்அஸுரனும் ஜபிப்பது ஒரே மந்திரம் தான்அதனால் இருவரும் நண்பர்கள்நண்பனின் நன்மைக்காகவே இதைச் சொன்னார்இது ஒரு நண்பனின் கடமை அல்லவாசந்யாஸிக்கு அது நண்மை தரும்ஆனால் அஸுரனுக்கு இது நல்லதல்லஅதனால் ஒரு நண்பனாக இதைச் சொன்னேன்உனக்குத் தோன்றும் படிச்செய் என்று சொன்னார் சந்யாஸி.


10. 
ப்ருஹஸ்பதாவேவ,முதீர்ய யாதே
  ஸத்யம் ததுக்தம்திதிஜோ விசிந்த்ய
  க்ரமாஜ் ஜஹொ மந்த்ர,ஜபம்ஸதா ஹி
  மூடபரப்ரோக்தவினேய புத்திஹி

                 ப்ரகஸ்பதி ஒரு நண்பன் போலப்  பேசிதான் சொல்வதை அஸுரன் நம்பும்படிச் சாமர்த்யமாகப் பேசினார்அஸுரனும் நம்பினான்நாம் அறியாதவர்கள் நமக்கு உபதேசம் செய்ய வந்தால் நாம் யோசிக்க வேண்டும்நம்முடைய புத்தியை உபயோகிக்க வேண்டும்ஆனால் அஸுரன் சந்யாஸியை நம்பினான்அவர் சொல்வதெல்லாம் சத்தியமானதே என்று நம்பினான்மந்திர ஜபம் செய்வதை நிறுத்தினான்முன்னும் பின்னும் யோசிக்காத மூடன் அவன்புத்தியில்லாததால் வஞ்சிக்கப் பட்டான்.




11. ஏவம் குரௌ குர்,வதி தைத்யபீதைஹி
  க்ருத்வா தபோயோகஜபாத்வராதி
  ஜாம்பூனதேச்வர்ய,மரைஸ்துதா த்வம்
  ப்ரஸாதிதா ப்ரா,துரபூக்ருபார்த்ரா

       இந்த சமயத்தில் இந்திராதி தேவர்கள் ஜாம்பூனதேஸ்வரியான தேவியை மாயா பீஜத்தால் (ஹ்ரிம்ஜபம் செய்து தவம்யோகம்,  இவைகளால் துதித்தார்கள்மஹா வித்யே ! சகலத்திற்கும் ஆதாரமானவளேபயங்கரமானவளேகாளிகையேபீதாம்பரதாரீதிருபுரசுந்தரீபைரவீமாதவீசாகம்பரீகங்கேசாரதேசாவித்ரீசுவாஹேசுவதேபிரமரங்களை மாலையாக அணிந்தவளேபிரமரங்கள் மொய்க்கும் மாலை அணிந்தவளேபுவனேஸ்வரியேஉனக்கு எல்லாதிசைகளிலும் நமஸ்காரம் நமஸ்காரம்  என்று ஸ்தோத்ரம் செய்தார்கள்தேவி கருணையுடன் அவர்கள் முன் தோன்றினாள்.




12. த்வத் தேஹஜாதைர்ப்ரமரைர் அனந்தைர்
  தைத்யஸஸைன்யோவிபலாஸ்த்ர சஸ்த்ரஹ
  தருஷ்டோ ஹதஸ்த்வம் நுதி,ப்ரஸன்னா
  பச்யத்ஸு தேவேஷுதிரோஹிதாபூஹூ

       தேவர்கள் முன்தோன்றிய அன்னையின் சரீரத்திலிருந்து லக்ஷக்கணக்கான அளவில்  பிரமரங்கள் அதாவது வண்டுகள் தோன்றி, தேனை எடுக்க வரும் மனிதனைக் கொட்ட வரும் தேனீக்கள் போல, அஸுரனை நோக்கிச் சென்றனஅஸுரன் காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தியதால்,  தான் பலமிழந்து இருப்பதாக உணர்ந்தான்பிரமரக் கூட்டத்தைக் கண்ட ஜனங்கள் ஆச்சர்யத்திருக்கவண்டுகள்அஸுரனையும் அவனது சகாக்களையும் சூழ்ந்து அவர்களின் மார்பைத் துளைக்கவண்டுகளுடன் யுத்தமும் செய்ய முடியவில்லை, அவனுடைய அஸ்த்ர சஸ்த்ரங்களாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. அவர்கள் மரணம் அடைந்தார்கள்பிரமரங்களுக்கு 6 கால்கள்இரண்டும் இல்லைநான்கும் இல்லைஅது மனித , மிருக இனமும் இல்லைஇரண்டும் சேர்ந்ததும் இல்லைப்ரம்மா எப்படி வரம் தந்திருந்தாலும் அம்பாள் அதற்கான வழியைக் கண்டு, துஷ்டர்களை அழித்து பக்தர்களைக் காப்பாற்றுவாள்ஆச்சர்யம்ஆச்சர்யம்என்று அமரர்கள் அதிசயித்து பிரமராம்பிகையை பூஜித்துஜயமாதாஜய ஈசானீஎன்று கூறி நமஸ்கரித்தார்கள்தேவியும் இதனால் மகிழ்ச்சி அடைந்துஅவரவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்து அமரர்கள் பார்த்திருக்க தேவீ மறைந்தாள்.


13. 
ஸ்வதேஹதோ வைப்ரமரான் விதாத்ரீ
   த்வம் ப்ராமரீதிப்ரதிதா ஜகத்ஸு;
  அஹோவிசித்ராஸ்,தவ தேவீ லீலா;
  நமோநமஸ்தே புவனேசி மாதஹ!


  நமஸ்தே நமஸ்தே ஜகதம்பிகே
  நமஸ்தே நமஸ்தே ஜகத்வ்யாபிகே
  நமஸ்தே நமஸ்தே ஸ்ரீசைலவாஸி
  நமஸ்தே நமஸ்தே ப்ரமராம்பிகே!

பிரமரங்களை உற்பத்தி செய்ததால் தேவிக்கு ப்ராமரீஎன்ற பெயர் பிரசித்தி பெற்றதுஅனைத்தும் தேவியின் சித்தப்படியே நடக்கும்அந்த அன்னையின் கருணைக்கு நாமும் பாத்திரமாக வேண்டாமாஇதை நமது வாழ்க்கையின் லக்ஷியமாகக் கொள்ள வேண்டும்அந்த கருணயை வேண்டி இதன் ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.

முப்பத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது.




 

தசகம் 32

யக்ஷகதை

                                                                                                                                      
1. 
புரா ஸுரா வர்ஷசதம் ரணேஷு
  நிரந்தரேஷுத்வதனுக்ரஹேண
  விஜித்ய தைத்யான்ஜனனீமபி த்வாம்
  விஸ்ம்ருத்ய த்ருப்தாநிதராம் பபூவுஹு

              தேவீ ! தேவ தேவர்களுடைய அஹங்காரத்தை அழித்துஅனுக்ரஹம் செய்த  கதை இந்த தசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 100 வருடங்கள் தேவாஸுர யுத்தம் நடந்ததுபராசக்தியின் அனுக்ரஹத்தால் தேவர்கள் ஜயம் அடைந்துஅஸுரர்கள் பாதாள லோகம் சென்றார்கள்.  தேவர்கள் தங்களின் பராக்ரமமே வெற்றிக்குக் காரணம் என்று கர்வம் கொண்டுஅதன் மூலகாரணமான அன்னையை மறந்தார்கள்.


2. 
மயைவ தைத்யாபலவத்தரேண
  ஹதா  சான்யைரிதி சக்ரமுக்யாஹா
  தேவா அபூவன் அதிதர்ப்பவந்தஹ
  ஸ்த்வம் தேவிசாந்த:, குருஷே ஸ்ம ஹாஸம்

      தேவாஸுர யுத்தத்தின் வெற்றிக்குக் காரணம் தங்களின் சாமர்த்யமே என்று ஒவ்வொரு தேவரும் நினைத்தார்கள்அதனால் கர்வம் கொண்டார்கள்ஒவ்வொரு முறையும் ஆபத்துக் காலங்களில் தேவர்களை ரக்ஷித்தது சர்வ சக்தி ஸ்வரூபிணியான அம்பாள் தான்அதைக் கூட தேவர்கள் மறந்தார்கள்இதைக் கண்ட தேவி மனதிற்குள் சிரித்தாள்.

3.  தச்சித்த தர்பாஸுரநாசனாய
  தேஜோமயம் யக்ஷ்அவபுர் ததானா
  த்வம் நாதிதூரேஸ்வயமா விராஸீ-
  ஸ்த்வாம் வாஸவாத்யாதத்ருசுஸுரௌகாஹா


      தேவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு செய்பவர்கள் அஸுரர்கள் மட்டுமேஅஸுரர்களின் சக்தி குறைந்த போதுதேவர்கள் மனதில் அஹங்காரம் வந்ததுஅம்பாள் தான் எப்பொழுதும் அஸுரர்களை அழித்து தேவர்களுக்குச் சகாயம் செய்பவள்.  அதனால் அவர்களின் அஹங்காரத்தை அழித்து அனுக்ரஹம் செய்ய க்ருபா கடாக்ஷியான அம்பாள் ஒரு யக்ஷ ரூபத்தில் ஆவிர்பவித்தாள்அந்த யக்ஷ ரூபம் கோடி சூர்ய ப்ரகாச முடையதாகவும்கோடி சந்த்ர சீதள ப்ரகாஸமாயும்கோடி மின்னல் ஒளி போன்றதாயும்கைகால்கள் போன்ற உறுப்புக்கள் தோன்றாததாயும்மிகுந்த அழகுடன் கூடிய தேஜஸுடனும் இருந்தது. தேவர்கள் இந்த யக்ஷ ரூபத்தைப் பார்த்தார்கள்.




4. ஸத்யகிலாSSசங்க்யத தை ரிதம் கிம்?
  மாயாSSஸுரீவேதிததோ மகோனா
  அக்னிர்நியுக்தோபவதீம் அவாப்தஹ
  ப்ருஷ்டஸ்த்வயா கோ,Sஸி குதோSஸி சேதி
                                                                                                                                      

            அழகான ஒளிவடிவமான அந்த ரூபத்தைக் கண்ட தேவர்கள் சந்தேகம் கொண்டனர்இது அஸுரர்களின் மாயயையோ என நினைத்தனர்யார்எதற்காக வந்தது என்று அறிந்து கொள்ள, இந்திரன் அக்னி தேவரை அனுப்பினான்தன்னால் தான் அது முடியும் என்று தன்னை அனுப்பினதாக அக்னி கர்வம் கொண்டார்அக்னி யக்ஷனிடம் சென்று நீ யார்எனக் கேட்டார்அந்த யக்ஷன் அக்னியைப் பார்த்து நீ யார்உன் பலம் என்ன சொல் என்று கேட்டது.

 

5.  சாSS ஸர்வைர்விததோSக்னி ரஸ்மி;
  மைய்யேவ திஷ்டத்,யகிலம் ஜகச்ச;
  சக்னோமி தக்தும்ஸகலம் ஹவிர்புங்
  மத்வீர்யதோ தைத்ய,கணா ஜிதாச்ச


       ஹவிஸை உண்ணும் அக்னி நான்நான் உலகப் பிரசித்தி பெற்றவன்ஸர்வத்தையும் தகனம் செய்யும் சக்தி உடையவன் என்று அஹங்காரமாகக் கூறுகிறான்.


6. 
இதீரிதா சுஷ்க,த்ருணம் த்வமேகம்
  புரோ நிதாயாSSத்ததஹைததாசு
  ஏவம் ஜ்வலன் அக்னி,ரிதம்  தக்தும்
  குர்வன் ப்ரயத்நம் சசாக மத்தஹ


            எதையும் எரிப்பேன் என்று சொன்னாயே ,எங்கே இதை கொளுத்து பார்ப்போம் என்று யக்ஷன் ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன் வைத்ததுஅக்னி ஜ்வலித்ததுகொழுந்து விட்டும் எரிந்ததுஆனால் புல்லின் ஒரு ஓரத்தைக் கூட அக்னியால் எரிக்க முடியவில்லை.


7. 
 நஷ்டகர்வஸஹஸா நிவ்ருத்தஹ
  ஸ்ததோSநிலோ வஜ்,ரப்ருதா நியுக்தஹ
  த்வாம் ப்ராப்தவான் அக்னி,வதேவ ப்ருஷ்டோ
  தேவிஸ்வமாஹாத்ம்ய,வசோ பபாஷே

     அக்னியின் அஹங்காரம் குறைந்தது.  அக்னியால் பூதம் யார் என்று அறியவோபுல்லை எரிக்கவோ முடியவில்லைஅக்னி இந்திரனிடம் திரும்பி வந்தான்இந்திரன் வாயுவை அனுப்பினான்வாயுவும் கர்வத்துடன் பூதத்திடம் சென்றான்பூதம் நீயார் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டதுவாயு கர்வத்துடன் தன் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தான்.

 

8. "மாம் மாதரிச்வான,மவேஹிஸர்வே
  வ்யாபார வந்தோ ஹிமயைவ ஜீவாஹா
   ப்ராணிநஸந்திமயா விநாச;
  க்ருஷ்ணாமி ஸர்வம்சலயாமி விச்வம்!"

          வாயு சொன்னான்நான் இருப்பதால் தான் ஜீவராசிகள் சுவாசிக்கிறார்கள்நானே அந்த ப்ராண சக்திநான் எதையும் எடுத்துச் செல்வேன்எதையும் ஆடச் செய்வேன்என்று தன்னுடைய பெருமையைக் கூறினான்.

 

9. இத்யுக்தமாகர்ண்யத்ருணம் ததேவே
  ப்ரதர்ச்ய சை தச்,சலயே த்யபாணீஹீ
  ப்ரபஞ்சன ஸ்தத்  கர்ம கர்த்தும்
  அசக்த ஏவாஸ்தமதோ நிவ்ருத்தஹ

        வாயுவின் பேச்சக் கேட்ட பூதம் சிரித்ததுஎங்கே இதை ஆட்டிக் காட்டு என்று அக்னியின் முன் வைத்த அதே உலர்ந்த புல்லை வைத்ததுபுயல் வீசியதுஆனால் புல் துளியும் அசங்கவில்லைவாயுவின் முயற்சி வீணானதுஅகங்காரமும் அழிந்ததுவாயு மீண்டும் இந்திரனிடம் திரும்பி வந்ததுஇப்படியாக அக்னி ,வாயு இருவரின் கர்வமும் அழிந்தது.


10. அதாதிமானீசதமன்யுரந்தஹ
  அக்னீம்  வாயும் ஹஸன்னவாப
  த்வாம் யக்ஷரூபாம்;ஸஹஸா திரோபூஹூ
  ஸோSதஹ்யதாந்த:, ஸ்வலகுத்வபீத்யா

          அகங்காரர்களான தேவர்களின் தலைவன் இந்திரன்அக்னி வாயுவால் முடியாததைத் தான் சாதிக்கலாம் என்று இந்திரன் பூதத்திடம் சென்றான்பராத்பரமாகிய அந்த பூதம், இந்திரன் எதிரில் ஓடி வந்துமறைந்து போனதுஅக்னியும் வாயும் பூதத்திடம் பேசினார்கள்ஆனால் இந்திரனுக்கு அதுவும் முடியவில்லைதன்னை ஒரு பொருளாக மதிக்காமல்எதையும் கேட்காமல் ஓடிவிட்டதே என்று வெட்கமடைந்தான்இந்த அவமானத்தை என்னவென்று சொல்வதுயாரிடம் சொல்வதுஇதைத் தேவர்களிடம்  சொல்வதைவிட உயிரை விடுவதே மேலானதுமானம் இழந்தால் அது இறந்ததற்குச் சமம் தானேஇப்படி எண்ணி இந்திரன் ஆதங்கம் அடைந்தான்.

 

11. அத ச்ருதாகா,சைவசோனு ஸாரீ
  ஹ்ரீம்காரமந்த்ரம் சிராய ஜப்த்வா
  பச்யன்னுமாம் த்வாம்கருணாச்ருநேத்ராம்
  நநாம பக்த்யாசிதிலாபிமாநஹ

       இந்திரன் கர்வம் அழிந்து அந்த யக்ஷனிடம் சரண் அடைந்தான்அப்பொழுதுஇந்திராநீ மாயாபீஜ மந்திரத்தை ஜபம் செய் . அதனால் நீ சுகம் அடைவாய் " என்று ஒரு ஆகாய வாக்குக் கேட்டதுஅதனால் கண்ணை மூடிக் கொண்டு லட்ச வருஷம்  "ஹ்ரீம்என்னும் மாயாபீஜ மந்திரத்தை ஜபித்து த்யானம் செய்தான்முடிவில் ஹிமவான் மகளாக வந்து தேவி தரிசனம் தந்தாள்இந்திரன் தன் அகந்தையை விட்டு தேவியை நமஸ்கரித்தான்.

 

12. ஞானம் பரம் த்வன்முகத லப்த்வா
  க்ருதாஞ் சலிர் நம்,ரசிரா நிவ்ருத்தஹ
  ஸர்வாமரேப் :, ப்ரதௌததஸ்தே
  ஸர்வம் த்வதிச்சா,வசகம் வ்யஜானனு

    தொடர்ந்து இந்திரன் தேவியை வணங்கி வந்தான்தேவி இந்திரனுக்குப் பரமஞான உபதேசம் செய்தாள்மும்மூர்த்திகள் கூட குணமயமானவர்கள் என்றும் தேவி மட்டுமே குணாதீதை என்றும் புரிந்து கொண்டான்அக்னி கொழுந்து விட்டு எரிவதும் வாயு வீசுவதும் தேவியின் சங்கல்பமேஅவர்களின் சக்திகளால் அல்லதாங்கள் அஸுரர்களை வெற்றி கொண்டதும் தங்களின் சக்தியால் அல்லதேவியின் அனுக்ரஹமே என்பதைப் புரிந்து கொண்டான்மீண்டும் தேவலோகம் வந்தான்தேவர்கள் தங்களின் கர்வம் விலகி தேவியை ஆராதனைச் செய்யத் தொடங்கினார்கள்.


13. ததஸுரா தம்,பவி முக்திமாபுர்
  பவந்து மர்த்யாச்சவிநம்ர சீர்ஷாஹா
  அந்யோன்ய ஸாஹாய்யகராச்ச ஸர்வே;
  மா யுத்தவார்த்தாபுவனத்ரயேSஸ்து

            தேவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் தேவியை ஆராதனை செய்தார்கள்பூமியிலும் இப்படி எல்லோரும் தேவி ஆராதனை செய்தால் எப்படி இருக்கும் என்று இந்நூலின் ஆசிரியர்  நினைத்துப் பார்க்கிறார்எல்லோரும் நல்ல மனம் உடையவர்கள் ஆவார்கள்ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள்உலகில் கலகம் என்பதே இருக்காது.

 

14. த்வதிச்சயா ஸூர்ய,சசாங்க வஹ்நி
  வாய்வாதயோ தேவி!, ஸுராஸ்வகாநி
  கர்மாணி குர்வந்தி;,  தே ஸ்வதந்த்ராஹா
  ஸ்தஸ்யை நமஸ்தேSஸ்துமஹானுபாவே!

            தேவியைத் தவிர யாரும் சுதந்திரமானவர்கள் அல்லர்யார் ,எதைஎப்படிஎங்கு செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்பவள் தேவிதான்அதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்யாருக்கு எந்த சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த சமயத்தில் தேவி  அதைச் செய்து  நிச்சயம் கருணை காட்டுவாள்.

முப்பத்தி இரண்டாம் தசகம் முடிந்தது

 

 

 

 

 

தசகம் 33

கௌதமகதை

 

1. சக்ர: புரா ஜீவ,கணஸ்ய கர்ம
  தோஷாத் ஸமா: பஞ்சதச க்ஷமாயாம்
  வ்ருஷ்டிம் சக்ரே;, தரணீ சுஷ்க
 
வாபீத டாகாதி, ஜலாசயாSSஸீது
      முன்னொரு சமயம் உலகத்தில் பிராணிகளுடைய துஷ்கர்ம வினையால் இந்திரன் 15 வருஷங்கள் மழை பெய்யச் செய்யவில்லை.. ஆறு, ஏரி, குளம், குட்டை ,கிணறு எல்லாம் வற்றிப் போனது.


2.
ஸஸ்யானி சுஷ்காணி, ககான் ம்ருகாம்ச்ச
  புக்த்வாSப்ய த்ருப்தா:, க்ஷுதயா த்ருஷா
  நிபீடிதா மர்த்ய, சவானி சாஹோ!
  மர்த்யா அநிஷ்டான்,யபி புஞ்சதே ஸ்ம

        செடி, கொடி, மரம் எல்லாம் வாடிப்போயின.  மனிதர்கள்  பசியால் வாடினார்கள். உலர்ந்த பழங்களைச் சாப்பிட்டனர். பறவைகளையும், மிருகங்களையும் கொன்று தின்றார்கள். இறந்தவனை உயிரோடு இருப்பவன் சாப்பிட்டான். பசிக் கொடுமையால் சாப்பிடக் கூடாததையெல்லாம் சாப்பிட்டான். என்ன கொடுமை இது? அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப் படுகிறது.


3.
க்ஷுதாSர்திதா: ஸர்வ,ஜனா மஹாபத்
  விமுக்திகாமா, மிளிதா: கதாசிது
  தபோதனம் கௌ,தமமேத்ய பக்த்யா
  ப்ருஷ்டா முனிம் ஸ்வா,கமஹேதுமூசுஹு

        பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் யோசித்து, தபஸையே தனமாகக் கொண்ட கௌதம முனிவரிடம் போவோம். அவர் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர். அவர் ஆஸ்ரமம் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றால் நம் வறுமையை நீக்குவார் என்று முடிவு செய்து, எல்லோரும் தத்தம் குடும்பத்துடனும், பசுக்கள், வேலைக்காரர்கள் அனைவருடனும்  கௌதம முனிவரின் ஆஸ்ரமம் அடைந்தனர். கௌதமர் அவர்களை முறைப்படி உபசரித்துப் பின், ஏன் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வந்தீர்கள்? காரணம் யாது? என்று கேட்டார். பிராமணர்கள் தங்கள் குறைகளையும், வறுமை நிலையையும் துக்கத்தோடு சொன்னார்கள். கௌதமர் அதைச் சிரத்தையுடன் கேட்டார்.


4. விஞ்ஞாய ஸர்வம், முனிராட் க்ருபாலுஹு
  ஸம்பூஜ்ய காயத்ர்,யபிதாம் சிவே! த்வாம்
  ப்ராஸாத்ய த்ருஷ்ட்வா , தவைவ ஹஸ்தாலு
  லேபே நவம் கா,மதபாத்ரமேகம்

        கௌதமர் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பிராமணர்களே உங்கள் வரவால் என் இல்லம் சுத்தம் பெற்றது. நீங்கள் கவலையை விட்டுவிட்டு சந்தி ஜபம் செய்து ஓய்வெடுங்கள் என்று கூறினார். அதன் பின் அவர் காயத்ரி தேவியை துதித்தார். அவர் காயத்ரி உபாஸகர். ஜகன்மாதாவும், பரமகலாரூபியுமான காயத்ரி தேவி தரிசனம் தந்து, சர்வபோஷண ( அக்ஷய பாத்திரம்) பாத்திரம் ஒன்றைத் தந்து,  “கௌதமா! நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையெல்லாம் இப்பாத்திரம் தரும்" என்று சொல்லி தேவி மறைந்தாள்.


5. துகூலஸௌவர்ண, விபூஷணான்ன
  வஸ்த்ராதி காவோ, மஹிஷாதயச்ச
  யத் யத் ஜனைரீப்,ஸிதமாசு தத் தத்
  தத்பாத்ரதோ தேவி! ஸமுத்பபூவ

         கௌதமருக்கு தேவி கொடுத்தது சர்வ போஷணப் பாத்திரம். சூரியன் பாண்டவர்களுக்கு  ஒரு அக்ஷய பாத்திரம் தந்தார். ஆனால் அது பாஞ்சாலி உண்டபின் அன்றைய தினம் மறுபடியும் ஏதும் தராது. ஆனால் கௌதமருக்கு அம்பாள் தந்த அக்ஷய பாத்திரம், அறுசுவைப் பதார்த்தங்கள், பூஷணங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆடு, மாடு, பசு, யக்ஞத்திற்கு வேண்டிய திரவியங்கள், பாத்திரங்கள் இப்படி எதை எல்லாம் கௌதமர் விரும்பினாரோ அதை எல்லாம் எப்பொழுதும் தந்தது. காத்திருக்காமல் நினைத்த உடனே எதுவும் கிடைத்தது.


6.
ரோகோ , தைந்யம், , பயம் சைவ,
  ஜனா மிதோ மோத,கரா பபூவுஹு
  தே கௌதமஸ்யோக்ர, : ப்ரபாவம்
  உச்சைர் ஜகுஸ்தாம், கருணார்த்ரதாம்

        அனைத்து ஜனங்களும் கௌதமரின் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் கிடைத்தன. அசூயை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் மகிழ்வித்தார்கள். இதற்குக் காரணம் கௌதமரின் தவ சக்தியே. இதை அனைவரும் அறிந்ததால் கௌதமரின் புகழையும், பெருமையையும் பேசினார்கள். அவரின் தவ வலிமையையும் காருண்யத்தையும் பெருமையாகச் சொன்னார்கள்.

 

7. ஏவம் ஸமா த்வா,தச தத்ர ஸர்வே
  நிந்யு:; கதாசின், மிளிதேஷு தேஷு
  ஸ்ரீநாரதோ தேவி! சசீவ காயத்ரீ
  ஆச்சர்ய சக்திம் ப்ரக்ருணன்னவாப

        ஒரு நாள் நாரத மஹரிஷி "மகதி" என்னும் வீணையை மீட்டிக் கொண்டு, காயத்ரி தேவியின் புகழைப் பாடிக்கொண்டு, கௌதமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். சந்திரனைப் பார்த்தால் மனம் எப்படி குளிர்ச்சி அடையுமோ அப்படி நாரதரைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.

8. பூஜிதஸ்தத்ர, நிஷண்ண உச்சைர்ஹி
  நிவேத்ய தாம் கௌ,தமகீர்திலக்ஷ்மீம்
  ஸபாஸு சக் ராதி,ஸுரை: ப்ரகீதாம்
  ஜகாம; ஸந்தோ, ஜஹ்ருஷு: க்ருதஜ்ஞாஹா

       நாரத மஹரிஷியை அனைவரும் பூஜித்தார்கள். "தேவ சபையில் தேவேந்திரன் கௌதம முனிவர் எல்லோரையும் போஷிக்கும் பெருமையைச் சொல்ல, அதைக் கேட்டு நான் கௌதமரைப் பார்க்க வந்தேன்" என்று கௌதமரின் கீர்த்தியை நாரதர் பெருமையுடன் சொன்னார். இந்திராதி தேவர்களும் கௌதமரை மிகவும் புகழ்ந்தார்கள். கௌதமரின் பெருமை பூ உலகம் மட்டும் இன்றி வானுலகிலும் பரவியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

 

9. காலே தராம் வ்ருஷ்டி,ஸம்ருத்தஸஸ்யாம்
  த்ருஷ்ட்வா ஜனா கௌ,தமமானமந்த:
  ஆப்ருச்ச்ய தே ஸஜ்,ஜனஸங்கபூதா
  முதா ஜவாத் ஸ்வ,ஸ்வ க்ருஹாணி ஜக்முஹு

       காலம் கனிந்தது. பூமியில் மழை பொழிந்தது. செடி கொடிகள் எல்லாம் தழைக்க ஆரபித்தன. கௌதமரால் போஷிக்கப் பட்ட ஜனங்கள்  அவரை வணங்கி, நன்றி கூறி, அவரவர் இல்லம் மீண்டும் திரும்பினார்கள்.

 

10. துக்கானி மே ஸந்து, யதோ மனோ மே
   ப்ரதப்தஸங்கட்,டித ஹேமசோபி
   விசுத்தமஸ்துத்; த்வயி பத்தராகோ
   பவானி; தே தேவி! நமோஸ்து பூய:

       மழை இல்லாமல் பசிக் கொடுமையிலும், வறுமையிலும் வாடிய ஜனங்கள் ,கௌதமர் ஆஸ்ரமம் வந்தார்கள். ஆஸ்ரம வாசம் அவர்களின் மனதைத் தூய்மை படுத்தியது. மழையின்றி அவர்கள் பட்ட கஷ்டம் ,இப்படி அனுக்ரஹமாக மாறியது. நாமும் நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுக்ரஹமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விவேகம். தங்கம் எப்படிப் பதமாகிறது? நெருப்பில் காய்ச்சி, நீரில் குளிரவைத்து, இரும்பால் அடிக்கிறார்கள். அதுபோல் என் மனமும் சுத்தமாக வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகிறார். அதற்காகத் தான் எந்த துக்கத்தைத் தாங்கவும் தயார் என்று சொல்கிறார். மனம் தெளிந்து பக்தி வளர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தேவியை வணங்குகிறார்.

முப்பத்தி மூன்றாம் தசகம் முடிந்தது

 

தசகம் 34

கௌதமசாபம்

1. ஸ்வர்வாஸிபிர் கௌ,தம கீர்த்திருச்சைர்ஹி
  கீதா ஸபாஸு, த்ரிதசை: ஸதே தி
  ஆகர்ண்ய தேவர்ஷி,முகாத் க்ருதக்னா
  த்விஜா பபூவு: கில ஸேர்ஷ்ய சித்தாஹா

        கௌதமரால் தங்களின் வறுமை தீர்ந்து வாழ்ந்தவர்கள் அனைவரும் மன சுத்தி அடைந்தார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அது வரவில்லை.  கௌதமரின் புகழ் வானுலகம் வரைப் பரவியிருக்கிறது என்று அறிந்தவுடன் பொறாமை கொண்டார்கள். இது நாள் வரை அவர் தயவில் வாழ்ந்ததை மறந்தார்கள். பிறர் வளர்வதைப் பார்க்க  சகிக்காமல் இருப்பது தான் பொறாமை. நானும் பிராமணன், கௌதமரும் பிராமணன். அவருக்கு மட்டும் ஏன் இந்தப் புகழும், பெருமையும். இப்படிப் பலவாறு யோசித்து அவருடைய கீர்த்தியை அழிப்பதற்கான ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.


2.
தைர் மாயயாSSஸன்ன,ம்ருதி: க்ருதா கௌ:
  ஸா ப்ரேஷிதா கௌ,தமஹோமசாலாம்
  அகான்; முனேர் ஜுஹ்,வத ஏவ வஹ்னௌ
  ஹீங்காரமாத்ரேண, பபாத சோர்வ்யாம்

        அந்தணர்கள் மிகக் கிழமாயும், உயிர் போகும் நிலையிலும் உள்ள ஒரு மாயா பசுவைத் தோற்றுவித்து, அதை கௌதமர் ஹோமம் செய்யும் ஹோமசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பசு தளர்ந்த நடையுடன் மெதுவாக ஹோமசாலை வந்தடைந்தது. ஹோம குண்டம் அருகே சென்றது. கௌதமர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்ட "ஹும்" "ஹும்" என்று சத்தம் போட, அந்த சப்தத்திற்குப் பயந்து, அந்த பசு அங்கேயே பிராணனை விட்டது.


3. ஹதா ஹதா கௌரி, கௌதமேனேஹி
 
உச்சைர் த்விஜா: ப்ரோ,ச்ய முனிம் நினிந்துஹு
  சேத்த கோப:, ப்ரளயானலாபஹ
  ஸ்தான் ரக்த நேத்ர:, ப்ரசபன்னுவாச

        அங்கிருந்த ரிஷிகள் எல்லாம் துஷ்டரான கௌதமரால் பசு கொல்லப்பட்டது  என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை நிந்தித்தனர். பசு இறந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த கௌதமர், தியானம் செய்து பசு இறந்ததன் காரணத்தை அறிந்து கொண்டார். பிரளய கால ருத்திரரைப் போல் கோபம் கொண்டு சாபம் தந்தார்.


4. "வ்ரதேஷு யஞ்நேஷு, நிவ்ருத்தி சாஸ்த்ரேஹு
   வபி த்விஜா வோ, விமுகத்வமஸ்து;
   நிஷித்த கர்மா,சரணே ரதா: ஸ்தவ
   ஸ்த்ரிய: ப்ரஜாஹா வோ,பி ததா பவந்து"

          "வேதமாதாவாகிய காயத்ரி தேவியையும், மந்திரங்களையும் சாஸ்திரங்களையும், தியானத்தையும், ஜபத்தையும் மறக்கக் கடவீர்கள்.  பிராமணர்களில் கடை நிலைக்கு வரக்கடவீர்கள். செய்யகூடாததைச் செய்தும், செய்யவேண்டியதைச் செய்யாமலும் வாழ்வீர்கள். லௌகீகத்திலிருந்து விடுபடும் நிவ்ருத்தி சாஸ்த்திரம் உங்களுக்கு மறந்து போகட்டும். உங்கள் வம்சத்தினருக்கும் இது தொடரும்" என்று சாபம் கொடுத்தார்.


5.
ஸத்ஸங்கமோ மாஸ்து;, ஜகஜ்ஜனன்யாஹா
  கதாம்ருதே வோ, ரதி: கலு ஸ்யாது
  பாஷாண்டகாபா,லிக வ்ருத்தி பாபைஹீ
  பீடா பவேத் வோ, நரகேஷு நித்யம்

          நிவ்ருத்தி சாஸ்த்திரம் தெரியாவிட்டாலும் ஸத்சங்கம் இருந்தால் சம்சாரத்திலிருந்து கரையேறலாம். கௌதமரின் சாபத்தால் அந்தணர்களுக்கு அதுவும் இல்லை. தேவியை துதிக்க மறந்தார்கள். காபாலிகளைப் போல் அலைந்தார்கள். பாபங்களைச் சுமந்து கொண்டு நரகவேதனைகளை அனுபவித்தார்கள்.


6.
உக்த்வைவ மார்யோ, முனிரேத்ய காய-
  த்ர்யாக்யாம் க்ருபாத்ராம், பவதீம் நநாம;
  தவமாப்த்தக்தம், புஜகாய தத்தம்
  தாது: ஸதாநர்த்,ததமேவ வித்தி

         அதன் பின் கௌதமர் "தாயே! கோபத்தில் மதியிழந்தேன். சொல்லக்கூடாததை எல்லாம் சொல்லிவிட்டேன்" என்று அன்னையின் முன் வணங்கினார். தேவி புன்சிரிப்புடன் சொன்னாள் "பாம்பிற்குப் பால்வார்த்தாலும் அது கொடுத்தவனைக் கொத்தும். பாம்பிற்குக் கொடுத்த பால் எப்படி விஷமாகிறதோ அதைப் போல் இவர்களுக்கு நீ செய்த உதவியும் ஆயிற்று. மஹா பாக்யசாலியான கௌதமா! மன வெப்பத்தை விட்டு மனச்சாந்தி அடைவாய்" என்று சொல்லி தேவி மறைந்தாள்.

 

7. ஸதே த்ருசீ கர்ம,கதிர் மஹர்ஷே!

  சாந்திம் பஜ ஸ்வம், தப ஏவ ரக்ஷ;

  மா குப்யதா மேவ, ம்ருஷிர் நிசம்ய

  மஹானுதா,பார்த்ரமனா பபூவ

          இது நாள் வரை அந்தணர்களுக்கு வேண்டியவைகள் அனைத்தும் செய்தும், கிடைத்த பலன் என்ன? நிந்தனைகள் தான். ஏன் இப்படி ஆனது? கர்மபலன் தான் காரணம். எந்தக் கர்மத்தால் இப்படி ஆனது? இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இதைக் கண்டுபிடிக்க யாராலும் முடியாது. இதை அறிந்தவள் தேவி மட்டும் தான். இப்பொழுது நல்ல கர்மங்களைச் செய்தால் அனுகூல காலத்தில் பலன் கிடைக்கும். இனிமேலாவது கஷ்டங்கள் வராமல் இருக்க தீய கர்மங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். க்ரோதம் வந்த பொழுது எல்லாம் அறிந்த கௌதமருக்கும் ஞானம் மங்கிப் போனது. பச்சாதாபத்தால் தேவியை துதிக்கத் தொடங்கினார்.

 

8. சப்தா த்விஜா, விஸ்ம்ருதவேதமந்த்ரா

  லப்த்வா விவேகம், மிளிதா முனிம் தம்

  ப்ராப்தா: ப்ரஸீதே. தி முஹுர் வதந்தோ

  நத்வா த்ரபானம்,ரமுகா அதிஷ்டனு

         சாபம் பெற்ற அந்தணர்களுக்கு வேத மந்திரங்களும், காயத்ரி மந்திரமும் மறந்து போயிற்று.  இது கௌதம முனிவரின் சாபம் என்று அறிந்த அவர்கள், மீண்டும் கௌதமரிடம் சென்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். எங்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள். அவர்களின் அசூயையும் மறைந்தது.

 

9. க்ருபாத்ர நேத்ரோ, முனிராஹ: - ஸ்யான்

  ம்ருஷா வசோ மே;, நரகே வஸேத;

  ஜாயேத விஷ்ணுர், புவி க்ருஷ்ண நாமா;

  வந்தேத தம் சாப,விமோசனார்த்தம்

         பிராமணர்களைச் சபித்ததில் கௌதமரும் வருத்த மடைந்தார். "கோபத்தில் சாபம் தந்துவிட்டேன். இருந்தாலும் என் சொல் பொய்யாகாது. நீங்கள் சில காலம் நரகத்தில் தான் இருக்க வேண்டும். த்வாபர யுகத்தின் முடிவில் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் செய்வார். அப்பொழுது நீங்கள் அவரை சரணடையுங்கள் சாப விமோசனம் கிடைக்கும்" என்றார்.

 

10. ஸ்வபாப முக்த்யர்த்தம் அனந்தசக்தீம்

   தேவீம் ஸதா த்யா,யத பக்திபூதாஹா

   ஸர்வத்ர பூயாத், சுப மித்யுதீர்ய

   காயத்ரி! தத்யௌ, பவதீம் மஹர்ஷிஹி

           கிருஷ்ணனை மட்டும் வணங்கினால் போதாது. நீங்கள் அனைவரும் மஹாசக்தி ஸ்வரூபிணியாகிய அம்பாளை துதிக்க வேண்டும். அவள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும். எல்லோருக்கும் மங்களம் உண்டாகும். அதனால் அந்த காயத்ரியின் பாத கமலத்தைச் சரண் அடையுங்கள்  என்று சொல்லிவிட்டு அவர் காயத்ரி தேவியை ஸ்மரிக்கத் தொடங்கினார்.  

 

11. முஞ்சானி  மாவாக்,சரமன்ய சித்தே;

   க்ருதக்னதா மாSஸ்து, மமாந்தர,ரங்கே

   நிந்தானி மா ஸஜ்ஜன; மேஷ பீதோ

   பவானி பாபாத்;, வரதே! நமஸ்தே

         பிராமணர்கள் அசூயையால் கௌதமரை தூஷித்தார்கள். கௌதமரும் கோபத்தால் சாபம் தந்து தன் தவ வலிமையை இழந்தார். தவ வலிமை பெறுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் கோபம் வந்ததால் ஒரு நிமிடத்தில் அவர் வலிமை எல்லாம் இழந்தார். தனக்கு இதுபோல் தன் புத்தியில் தோன்றக்கூடாது என்று இதன் ஆசிரியர் வேண்டிக்கொள்கிறார்.

முப்பத்தி நான்காம் தசகம் முடிந்தது



 

 

 

 

 

தசகம் 35

அனுக்ரஹவைசித்ர்யம்

 

1. பாக்யோதயே த்ரீணி, பவந்தி நூநம்

  மனுஷ்யதா, ஸஜ்,ஜன ஸங்கமச்ச,

  த்வதீயமாஹாத்ம்ய, கதாஸ்ருதிச்ச;

  யத: புமாம்ஸ்வத்,பதபக்திமேதி

ஈயாகவும், பூனையாகவும், நாயாகவும், நரியாகவும் ஜனனம் எடுத்துப் பின் பாக்யம் கிடைக்கும் பொழுது மனிதனாகப் பிறக்கிறான். வெற்றிகளுடன் இணையும் பொழுதுதான் இந்த மனித ஜன்மம் சிறப்படைகிறது. பக்தர்களுடன் சேரும் பொழுது நிறைய தேவியின் கதைகளும், சிறப்பும், பெருமையும் கேட்பதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்களுடன் நிரந்தர தொடர்பு இருந்தால் அது தேவியிடம் பக்தியை வளர்க்கும். தேவி பக்தி ஆபத்திலும், சம்பத்திலும், துக்கத்திலும், சுகத்திலும் ஒரே மனநிலையில் இருக்கச் செய்யும்.

 

2. தத: ப்ரஸீதஸ்ய, அகிலார்த்த காமானு

  பக்தஸ்ய யச்சஸ்ய, பயம் மாதஹ!

  க்ஷமாம் க்ருதாங்கஸ்ஸு, கரோஷி சார்யோஹோ

  அன்யோன்ய வைரம், சமயஸ்ய நீஹா

         தன் பக்தர்களுக்குத் தேவையானதையும், விரும்புவனவற்றையும் தரக் கூடியவள் அந்த தயா மூர்த்தி. பக்தனின் பயத்தைப் போக்குபவளும் அவளே. இரு தேவி பக்தர்கள் ஒன்று கூடினால் அவர்களிடையே கருத்து வேற்றுமை வராமல் அவர்களை ஒன்று படுத்துவாள். இதனால் அன்னைக்கு என்ன லாபம்? அவள் அன்னை அல்லாவா? அதனால் எற்பட்ட கருணைதான் காரணம்.

 

3. துஷ்கீர்த்தி பீத்யா, ப்ருதயா குமார்யா

  த்யக்தம் தடின்யாம், ஸுத மர்க்கலப்தம்

  ஸம்ப்ரார்த்திதா த்வம், பரிபாலயந்தீ

  ப்ராதர்சய: ஸ்வம், கருணா, ப்ரவாஹம்

சூரசேனனின் மகளான குந்திதேவி, பூஜைக்கு உரிய பணிவிடைகளைச் செய்வதற்காக, குந்திபோஜன் என்னுன் அரசனிடம் சிலகாலம் வளர்ந்து வந்தாள். சாதுர்மாஸ்ய விரத பூஜை பூர்த்தி செய்வதற்காக அங்கு வந்த துர்வாஸருக்கு பணிவிடைச் செய்ய குந்தியை அனுப்பினார். சிறிதும் தவறாமல் குறிப்புணர்ந்து பணிவிடை செய்யும் குந்திக்கு மனம் மகிழ்ந்து ஒரு மந்திரத்தை துர்வாஸர் உபதேசம் செய்தார். "இந்த மந்திரத்தை நீ எப்பொழுது உச்சரிக்கின்றாயோ அப்பொழுது அதற்குரிய தேவதைகள் உன் கண் முன் தோன்றுவார்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன் பின் குந்தி மந்திரத்தின் மகிமையைத் தெரிந்து கொள்ள ஒரு மந்திரத்தை உச்சரித்தாள். அவள் கண் முன் சூர்ய மூர்த்தி தோன்ற அவள் கர்பவதி ஆனாள். கவச குண்டலத்தோடு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அதை ஒரு பெட்டியில் வைத்து "மகனே! ஸர்வாபரண சம்பன்னையாயும், பகவதியாயும், விஸ்வேஸ்வரியாயும் இருக்கும் அம்பிகை உனக்குப் பசிவராமல் பாலூட்டி வளர்க்கட்டும். அந்த ஜகன்மாதாவே உனக்குத் துணை" என்று குழந்தையை ஆற்றில் விட்டாள். அந்த தேவி குழந்தையைக் காப்பாற்றினாள். பக்தி உள்ளோருக்கு அன்னை அபயம் தருவாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

4. ஸுதான் குருக்ஷேத்ர,ரணே ஹதான் ஸ்வான்

  தித்ருக்ஷவே மாத்ருகணாய க்ருஷ்ணஹ

  ஸம்ப்ரார்த்திதஸ்வத், கருணாபிஷிக்தஹ

  ப்ரதர்ச்ய ஸர்வான், ஸமதோ ஷயச்ச

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்ததும் தருமபுத்திரர் 36 வருஷங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். துக்கத்தால் வருந்தும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் தருமர் தானே எல்லா பணிவிடைகளையும் செய்து கவனித்துக் கொண்டார்.  ஒரு நாள் திருதராஷ்ட்ரர் தான் வனவாசம் போக விரும்புவதாகச் சொல்ல, தருமர் திருதராஷ்ட்ரர், காந்தாரி, குந்தி, விதுரர் இவர்களை ஆரண்யம் கொண்டுச் சேர்த்தார். அங்கு அவர்கள் சதயூபர் ஆஸ்ரமத்தில் 6 வருடம் காலம் கழித்தார்கள். தருமர் ஒரு நாள் தன் சகோதரர்களுடனும், திரௌபதி, சுபத்திரை, உத்தரை மற்றும் நகரத்தாருடன், சதயூபர் ஆஸ்ரமம் சென்று அங்கு அனைவரையும் கண்டு மகிழ்ந்தார். விதுரர் மட்டும் தனியே ஓர் இடத்தில் தியானம் செய்வதை அறிந்து அங்கு சென்றார். ஆனால் விதுரருக்கு எந்த ஸ்மரணையும் இல்லை. இவர்களை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் விதுரர் முகத்திலிருந்து ஒரு ஒளி தருமரின் முகத்தில் ப்ரவேசித்தது. விதுரர் வாழ்வு முடிந்ததால் அனைவரும் வருத்தப் பட்டார்கள். அந்த சமயத்தில் வேத வ்யாஸர் அங்கு வந்தார். குருக்ஷேத்திரப் போரில் இறந்த தங்களின் புத்திரர்களைப் பார்க்க வேண்டும் என்று தாய்மார்கள் ஆசைப் பட்டனர். குந்தி கர்ணனையும், காந்தாரி துரியோதனையும், ஸுபத்திரை அபிமன்யுவையும் காண விழைந்தனர். வ்யாஸர் இவர்களைக் கண்டு மனமிரங்கி தேவியை தியானித்து, கங்கை கரையில் ஸ்நானம் செய்து மணித்வீப வாஸியான தேவியை தியானம் செய்தார்.  அன்னை கருணை புரிந்து கர்ணன், துரியோதனன், அபிமன்யு ஆகியோரைக் காட்டினாள். தாய்மார்கள் பார்த்து மகிழ்ந்தவுடன் அவர்கள் மறைந்து போனார்கள். அம்பாளின் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு உலகில் எதுவுமே அசாத்யமில்லை.

 

5. வணிக் ஸுசீலஹ, கலு நஷ்டவித்தோ

  வ்ரத்தம் சரன் ப்ராங், நவராத்ரமார்யஹ

  த்வாம் தேவி! ஸம்பூஜ்ய, தரித்ரபாவான்

  முக்த: க்ரமாத் வித்த, ஸம்ருத்திமாப

         முன் ஒரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்னும் ஒரு வைசியன், மிகவும் தரித்திரனாகவும், ஆனால் அனேக குழந்தைகள் உடையவனாகவும் இருந்தான். குழந்தைகள் பசியால் வாடினார்கள். மாலையில் யாரேனும் கொடுக்கும் அன்னத்தைச் சாப்பிட்டுக் காலத்தைக் கழித்தார்கள். இவன் தரித்திரன் தான். ஆனாலும் ஸத்யம் பேசுபவனாகவும், தர்மிஷ்டனாகவும், கோபம், பொறாமை, குரோதம் இல்லாதவனாகவும், தினமும் தேவ பித்ரு கடன்களை முடித்துப், பின் அதிதி பூஜை செய்து, அதன் பின் போஜனம் செய்யும் நியமம் தவறாதவனாக இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு பிராமணரைச் சந்தித்தான். அவரிடம் என் வறுமை நீங்கி குழந்தைகள் பசியாரவும், பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவும் ஏதேனும் வழி சொல்ல வேண்டும் எனக் கேட்டான். பிராமணர் சொன்னார் "நீங்கள் கவலையை விடுங்கள். நவராத்ரி விரதம் அனுஷ்டித்து, தேவி பூஜையும், ஹோமமும், பிராமண போஜனமும், ஜபமும், உங்கள் சக்திக்கு ஏற்றவாறுச் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். இதை விட சிறந்த விரதம் எதுவுமே இல்லை என்றார். அந்த வைசியன் அவரையேத் தன் குருவாக ஏற்று, நவராத்திரி விரதம் பூண்டு 9 வருஷம் "ஹ்ரீம்" என்னும் தேவியின் பீஜ மந்திரத்தை ஜபித்தான். தேவி பிரசன்னமானாள். அவனுக்கு வேண்டிய வரன்கள் தந்து, வறுமை அவனை நெருங்காத வண்ணம் அனுக்ரஹம் செய்தாள். தேவியின் கருணைக்கு இது ஒரு உதாரணம்.

 

6. தேவத்ருஹோ தேவி!, ரணே த்வயைவ

  தைத்யா ஹதா கர்,ஹிததர்மசாஸ்த்ராஹா

  ப்ரஹ்ளாதமுக்யான்,அஸுரான் ஸ்வ பக்தான்

  தேவாம்ச்ச ஸ்ந்த்யக்த, ரணானகார்ஷீஹீ

       அஸுரர்கள் தேவர்களின் விரோதிகள். தர்ம சாஸ்திரங்களை ஆதரிக்க மாட்டார்கள். உதாரணம் சும்ப நிசும்பரகள். மஹிஷாஸுரன் போன்றவர்கள். இவர்களை அம்பாள் வதம் செய்தாள். ப்ரஹ்லாதனுக்கும் தேவர்களுக்கும்  யுத்தம் நடந்தது. தேவர்கள் l தோற்றார்கள். தேவர்கள் அம்பாளை துதித்தார்கள். அம்பாள் ப்ரஹ்லாதன் முன் தோன்றினாள். தேவியைக் கண்டதும் அஸுரர்கள் பயந்தார்கள். சண்டமுண்டர்களையும், மதுகைடபர்களையும் கொன்றவள் அல்லவா? அதனால் ஓடிப்போனாலும் தேவி விடமாட்டாள். அவளை சரண் அடைவதே உகந்தது என்று அஸுரர்கள் தேவியைத் துதித்தனர். ப்ரஹ்லாதன் சொன்னான் "தாயே! நீ அனைவருக்கும் தாய். தேவர்களிடம் பிரியமிருந்தாலும், எங்களிடமும் பிரியம் வேண்டுமல்லவா? தேவர்கள் ஜயம் கிடைத்தால் தரும வார்த்தைகளைச் சுகமாகவும் சாமர்த்தியமாகவும் சொல்கிறார்கள். ஆனால் அபஜெயமானால் அதர்மத்தைச் செய்கிறார்கள். இது உண்மையோ பொய்யோ நீயே யோசித்துக்கொள், அஸுரர்களாகிய நாங்கள் இப்பொழுது உன்னைச் சரண் அடைந்தோம். எங்களைக் காப்பதும், கைவிடுவதும் உன் இஷ்டம் என்றான். தேவி சொன்னாள் "அஸுரர்களே! லோப குணமுள்ளவர்களுக்கு மூன்று உலகிலும் சுகம் இல்லை. அதனால் நீங்கள் கோபத்தை விடுங்கள். சாந்த சித்தர்களுக்கு எவ்விடமும் சுகமே. அதனால் நீங்கள் பாதள லோகம் சென்று அங்கு சுகமாக இருங்கள் என்று அனுக்ரஹித்தாள். இரண்டு பக்தர்கள் பகைமையுடன் இருந்தாலும் அவர்களை அம்பாள் இணைப்பாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

7. புரந்தரே பாப, திரோஹிதே தத்

  ஸ்தாநாதிரூடான், ஹுஷாத் ஸ்மரார்த்தாது

  பீதா சசீ த்வாம், பரிபூஜ்ய த்ருஷ்ட்வா

  பதிம் க்ரமாத் பீதி,விமுக்திமாப

ஏகாந்தமாகத் தவம் செய்த த்ரிசிரஸை இந்திரன் வெட்டிக் கொன்றான். சத்ய சந்தனும் ஸாத்விகனுமான வ்ருத்தாஸுரனின் நண்பனாக நடித்து, அவனைச் சமயம் பார்த்துக் கொன்றான். இந்த மஹா பாபங்களின் பலனாக இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஓடி பதுங்கி வாழ்ந்தான். இந்திரனின் இடத்தை நகுஷன் பிடித்துக் கொண்டான். அவன் இந்திராணியிடம் காம வேட்கையுடன் அணுக, அவள் பயந்துத் தன்னைக் காத்துக் கொள்ள குருவைச் சரண் அடைந்தாள். குரு கூறியபடி தேவியை பூஜை செய்தாள். நேரில் அம்பாளைக் கண்டாள். தேவி அனுக்ரஹத்தால் இந்திரனையும் கண்டுபிடித்தாள், நகுஷனிடம் இருந்த பயமும் போனது.

 

8. சப்தோ வஸிஷ்டேன, நிமிர் விதேஹோ

  பூத்வாபி தேவி! த்வதனுக்ரஹேண

  ஞானம் பரம் ப்ராப;, நிமே; ப்ரயோகாது

  நிமேஷிணோ ஜீவ,கணா பவந்தி

இஷ்வாகு குலத்தில் நிமி என்னும் ஒரு அரசன் பிரஜைகளை நல்ல முறையில் ரக்ஷித்தும், பிராமணர்களை போஷித்தும் வந்தான். யாகத்தால் தேவியை பூஜிக்க ஆசை கொண்டு வஸிஷ்டர், ப்ருகு, வாமதேவர், புலகர் போன்ற பல முனிவர்களையும் வரவழைத்துத் தன் குருவான வஸிஷ்டரிடம் யாகத்தை நடத்தித் தரும் படி வேண்டினான். ஆனால் வஸிஷ்டரோ தேவேந்திரன் செய்யும் யாகத்திற்குத் தான் போக ஒத்துக் கொண்டதால் அதை முடித்த பின் வருவதாகக் கூறினார்.  என் குல குருவான நீர் இப்படிச் சொல்வது சரியல்ல என்று சொல்லியும், திரவிய ஆசையால் வஸிஷ்டர் இந்திரனிடம் சென்று விட்டார். அரசனும் மன வருத்ததுடன் கௌதம முனிவரை அணுகி, அவர்மூலம் யாகம் செய்தான். வஸிஷ்டர் திரும்பி வந்தார். தூங்கிக் கொண்டிருந்த அரசன் சேவர்கள் சொல்லியும், உடனே வராததால் கோபம் கொண்ட வஸிஷ்டர் "அவன் தேகமில்லாமல் போகட்டும். அவன் சரீரமும் இப்பொழுதே விழட்டும்" என்று சாபம் தந்தார். சேவகர்கள் முனிவரின் சாபத்தைத் தெரிவிக்க, அரசனும் விரைந்து வந்து, குற்றமற்ற என்னைச் சபித்த உம்தேகமும் விழட்டும் என சாபம் தந்தான். வஸிஷ்டர் ப்ரம்மனிடம் பிரார்த்தித்து மித்ராவருணரின் தேஜஸில் கலந்தார். மித்ராவருணர் ஊர்வசியிடம் காமம் கொண்டு அவர் வீரியம் ஒரு கும்பத்தில் விழ, அதனின்றும் அகஸ்த்தியர் முன்னும், வஸிஷ்டர் பின்னுமாக வெளிவந்தனர். அதனால் வஸிஷ்டருக்கு மித்ராவருணி என்ற பெயர் வந்தது

        யாகத்தை முடிக்க எண்ணி நிமியின் உடலை முனிவர்கள் மந்திரத்தால் காத்து, யாகத்தை முடித்தனர். தேவர்கள் தோன்றி தேவ தேகம் வேண்டுமா? மனித தேகம் வேண்டுமா? என்று கேட்க, நிமி எனக்கு அழியும் உடலில் ஆசை இல்லை. அதனால் சர்வ ஜீவன்களின் கண்களிலும் காற்று ரூபமாக நான் வசிக்க வேண்டும் என்றான். தேவர்கள் தேவியை பிரார்த்திக்கும்படிச் சொன்னார்கள். அரசன் தேவியைத் துதித்தான். தேவி பிரசன்னமானாள். தேவர்களைத் தவிர மற்ற அனைத்து ஜீவர்களிடமும்  இமை கொட்டும் ரூபத்தில் வசிக்க அருள் செய்தாள். அரசனுக்குப் புத்திரன் வேண்டும் என்று  முனிவர்கள் அரசனின் உடலை சமஸ்காரம் செய்தும் முன், அவரின் உடலை அரணிக் கட்டையால் கடைய, நிமிச்சக்ரவர்த்தி போன்று ஒரு மகன் தோன்றினான். அரணிக் கட்டையால் பிறந்ததால் அவன் மிதி என்றும், ஜனகன் என்றும் பெயர் கொண்டான். நிமிச் சக்ரவர்த்திக்குத் தேகம் இல்லாமல் போனதால் அவர் வம்சத்தினர் விதேகர்கள் என்று அழைக்கப் பட்டனர். மிதி கங்கைகரையில் அழகிய மிதிலை நகரை நிர்மாணித்து ஆண்டுவந்தான். அவர் வம்ஸத்தில் பிறப்பவர் ஜனகனென்றும் விதேகர் என்றும் அழைக்கப் பட்டார்கள்.

 

9. ஹா!  பார்க்கவா லோப, விகோப சித்தைஹீ

  ப்ரபீடிதா ஹை,ஹய வம்ச ஜாதைஹீ

  ஹிமாத்ரி மாப்தா, பவதீம் ப்ரபூஜ்ய

  ப்ரஸாத்ய பீதே:, கலு முக்திமாபுஹு

ஹைஹய வம்சத்து ராஜாவான கார்த்தவீரியன் பல யக்ஜம் நடத்தினான். பிராமணர்களுக்கு நிறைய தட்சிணைகள் கொடுத்தான். அவருக்குப் பின் வந்த ஹைஹயர்கள் தரித்திரர்கள் ஆனார்கள். அவர்கள் பிராமணர்களிடம் யாசித்தார்கள். அவர்கள் தரவில்லை அதனால் அவர்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் துன்புறுத்தினார்கள். பயந்து ஒடிய அந்தணர்கள் இமாலயம் சென்று தேவியை ஸ்தோத்திரம் செய்தார்கள். அம்பாள் காட்சி தந்து "தொடையில் கர்பம் தரித்த பெண் ஒருவள் உங்களுடன் இருக்கிறாள். அவளால் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்" என்று சொல்லி மறைந்தாள். தேவியின் அனுக்ரஹத்தால் தொடையில் கர்பம் தரித்த பெண்ணை ஹைஹயர்கள் அடித்துத் துன்புறுத்த வரும் பொழுது தாயின் அழுகுரல் கேட்டு தொடையிலிருந்து வேகமாய் வெளியே வந்தது ஒரு குழந்தை. ஔருவர் என்னும் முனிவரே இந்தக் குழந்தை. அந்தக் குழந்தையின் தேஜஸால் ஹைஹயர்களின் கண் குருடானது. அவர்கள் அழுது புலம்பி அந்தத் தாயிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அன்னையின் அருளால் கண்பார்வை மீண்டும் கிடைத்தது ஹைஹயமார்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

 

10. தஸ்ரௌ யுவானாம், ச்யவனம் பதிம்

   ஸமானரூபான் அபித்ருச்ய முக்தா

   ஸதீ ஸுகன்யா, தவ ஸம் ஸ்ம்ருதாயா

   பக்த்யா ப்ரஸாதாத், ஸ்வபதிம் வ்யஜானாது

சர்யாதி என்னும் ஒரு அரசனுக்குச் சுகன்யை என்னும் ஒரு அழகான மகள் இருந்தாள். அவளை சவனன் என்னும் ஒரு குருடனான முனிவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தான். ஏன் அழகான பெண்ணைக் குருடனுக்குக் கொடுத்தார்? ஒரு நாள் சர்யாதி தன் மனைவி மகளுடன் ஒரு தாமரைத் தடாகத்திற்கு வந்தார். அவர் தன் மனைவியுடன் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மகளான சுகன்யை புற்றுருவமாக இருந்த பார்கவ முனிவரை அறியாமல் அதன் அருகில் சென்றாள். புற்றிலிருந்து மின்மினிப் பூச்சி போன்ற ஒளி வருவதைக் கண்டு அது என்ன என்று பார்க்க ஆவல் கொண்டு ஒரு முள் குச்சியால் அதைக் குத்தவந்தாள். வராதே! வராதே! என்று மஹரிஷி சொன்னார். ஆனால் அவள் அதைக் காதில் வாங்கவில்லை. அதைக் குச்சியால் குத்தினாள். அது முனிவரின் கண்ணைக் குத்த, பின் அது ஒரு முனிவர் என அறிந்து வருந்தினாள். முனிவர் மிகவும் துன்பமடைந்து, கண்நோயினால் அவதிப்பட்டு, மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். அந்த நேரம் முதல் எல்லா ஜனங்களுக்கும் அரசன் உள்பட, மலஜலங்கள் போவது நின்று போனது. ஏதோ பெரியவருக்குத் தவறு நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டார். தடாகத்தின் அருகில் புற்று ரூபமாக இருந்த வயோதிக முனிவருக்கு யாரோ தீங்கு செய்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஆனது என்று தெரிந்தது. அப்பொழுது சுகன்யை தான் தெரியாமல் செய்த தவற்றைச் சொன்னாள். உடனே அரசன் முனிவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். முனிவர் சொன்னார் "நான் உன் மகளை சபிக்கவில்லை. ஆனால் நான் தேவி பக்தன். அதனால் தான் உங்களுக்குத் துன்பம் வந்தது. கண் இல்லாமல் நான் எப்படித் தவம் செய்வேன்? எனக்கு அனுகூலம் செய்ய நினைத்தால் உன் பெண்ணை எனக்குத் தருவாயா? எனக் கேட்டார்.  அரசன் மனக் கலக்கம் கொண்டு வருந்தும் போது, சுகன்யை அவரை மணக்க சம்மதம் தந்தாள். வயோதிகனான குருட்டுக் கிழவனுக்கு எப்படித் தரமுடியும் ? உனக்கு என்ன சுகம் கிடைக்கும் என்றார்? என் மனம் அற்ப சுக விஷயங்களில் அலையாது. நான் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்வேன் என்றாள். அரசனும் சுகன்யயை முனிவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். சுகன்யை முனிவருக்குச் சகல பணிவிடையும் செய்து வந்தாள். ஒரு நாள் அஸ்வினீ குமாரர்கள் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து, நீராடி வரும் சுகன்யயைக் கண்டு மோகித்தனர்.  மோகினியே! கிழவனை மணந்து என்ன சுகம் காண்பாய்? எங்களில் ஒருவரை பர்த்தா ஆக்கிக்கொள் என்றனர். நான் என் கணவரிடத்தில் பக்தி கொண்டவள். இங்கிருந்து ஓடி விடுங்கள். இல்லை யென்றால் சாபம் தருவேன் என்றாள் சுகன்யை. அஸ்வினீ குமாரர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வைத்யர்கள். உன் கணவருக்குக் கண் கொடுத்து, அழகான யௌவனனாக மாற்றி நாங்கள் மூவரும் சேர்ந்து உன் முன் வருகிறோம். எங்களில் ஒருவரை நீ வரித்துக் கொள்வாய் என்று சொன்னார்கள். சுகன்யை அனைத்தையும் தன் கணவரிடம் சொல்லி அவர் சொன்னபடி சம்மதமும் தந்தாள். மூவரும் ஒரு தீர்த்தத்தில் நீராடி எழுந்தனர். என்ன ஆச்சர்யம்? மூவரும் ஒன்று போல் சுந்தர ரூப யௌவனர்களாக  இருந்தனர். சுகன்யை ஏமாற்றி விட்டார்களே! எப்படித் தன் கணவரை அடையாளம் காண்பது எனக் கலங்கினாள். உடனே அந்த பரதேவதையான அன்னையை த்யானித்து, அவளின் அனுக்ரஹத்தால் தன் கணவனை அடையாளம் கண்டு, அவருக்கே மாலையிட்டாள். அஸ்வினீ தேவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்.

 

11. ஸத்யவ்ரதோ விப்,ரவதும் ப்ரஸஹ்ய

   ஹர்த்தா நிரஸ்தோ, ஜனகேன ராஜ்யாது

   வஸிஷ்ட சப்தோபி, தவ ப்ரஸாதாது

   ராஜ்யேபிஷிக்தோத, திவம் கதச்ச

அருணன் என்னும் சூர்ய வம்சத்து ராஜாவிற்கு ஸத்யவிரதன் என்னும் ஒரு மகன். அவன் காமுகன். மந்த புத்தியும் சஞ்சல மனதும் கொண்டவன். காமத்தால் அவன் ஒரு அந்தணனின் மனைவியை அபஹரித்துச் சென்றான். தந்தை அவனை ராஜ்யத்திலிருந்து விரட்ட, அவன் காட்டில் வாழ்ந்து வந்தான். தன் குல குருவான வஸிஷ்டர் தன் பிதாவின் கோபத்தைத் தடுக்காமல் இருந்து விட்டாரே என்று காரணமின்றி அவரிடம் கோபம் கொண்டான். ஒரு சமயம் காட்டில் விஸ்வாமித்ரரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடி, வேறு வழியில்லாமல் ஒரு குழந்தயை விற்று மற்ற குழந்தைகளின் பசியைப் போக்க நினைத்தபொழுது, ஸத்யவிரதன் அவர்களைச் சந்தித்தான். அவர்களின் நிலைகண்டு மனம் இரங்கி, அவர்களைத் தான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்தான். அதன்படி செய்தும் வந்தான். காய்களையும், பழங்களையும் மற்றும் மிருகங்களை அடித்துக் கொன்றும், ஆகாரமாக கொடுத்து வந்தான். ஒருநாள் ஏதும் கிடைக்காமல் அலைந்து கொண்டு வரும் பொழுது, வஸிஷ்டர் ஆஸ்ரமத்தையும் அங்குக் கட்டியிருக்கும் பசுவையும் பார்த்தான். அவனுடைய பழைய கோபம் தலை தூக்கியது. அந்தப் பசுவைக் கொண்டு போய் அடித்து, அதன் மாமிசத்தை விஸ்வாமித்திரர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தந்து, தானும் உண்டான். ரிஷி பத்னி அதை கோ மாமிசம் என்பதை அறியவில்லை. இதை அறிந்த விஸ்வாமித்திரர் "மூடனே! பிராமணப் பெண்ணை அபகரித்தது, தந்தையின் கோபத்திற்கு ஆளானது, பசுவைத் திருடிக் கொன்றது ஆகிய இந்த பாபங்களால் நீ திரிசங்கு என்ற பெயரில் மூன்று கொம்புகளுடன் பிசாசு ரூபமாய் அலையக் கடவாய்" என்று சாபம் தந்தார். பிசாசு ரூபம் கொண்ட அவன் அந்த ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு, பூர்வஜன்ம புண்யத்தால் முனிகுமாரனிடமிருந்து நவாக்ஷரி மந்திரத்தை அறிந்து கொண்டான். அந்த பகவதியை தியானித்துத் தவமும் செய்தான். ஸத்யவிரதன் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட ஒரு ஹோமம் செய்ய நினைத்தான். பிராமணர்கள் பிசாசு ரூபத்தில் ஹோமம் செய்ய முடியாது என மறுத்தனர். அதனால் மனம் வருந்தி சண்டிதேவியை மனதில் நிருத்தி, அக்னியில் புக முயன்ற போது, தேவீ காட்சி தந்தாள். உனக்கு ராஜ்யம் மீண்டும் கிடைக்கும் என்று அருள் செய்தாள். அதன் படி அவன் தந்தையும் அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, வனத்திற்குத் தவம் செய்யச் சென்றார். தேவியின் அருளால் சுந்தரரூபனாக ஆனான். ஹரிச்சந்திரன் என்னும் மகனும் அவனுக்குப் பிறந்தான். ஒரு நாள் வஸிஷ்டரிடம் தான், உடலுடன் தேவலோகம் போக யாகம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அவர் மனித உடலுடன் அங்கு போகமுடியாது. புண்ய கர்மாவினால் இறந்த பிறகே ஸ்வர்க்கம் போக முடியும் என்றார். கோபம் கொண்டு வேறு ஒருவரால் யாகம் செய்து கொள்கிறேன் என்றான் ஸத்யவிரதன். கோபத்துடன் வஸிஷ்டர் "நீ சண்டாளனாவாய்" என்று சபித்தார். ஸத்யவிரதன் சண்டாளனின் சரீரம் அடைந்தான். ஒரு நாள் விஸ்வாமித்திரர் வருவதைப் பார்த்தான். நடந்ததை சொன்னான். என் துக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்றும் சொல்லி அவர் பாதத்தில் விழுந்தான். தான் தவம் செய்யச் சென்ற பொழுதுத் தன் குடும்பத்தை ஸத்யவிரதன் காப்பாற்றியதால், விஸ்வாமித்திரர் இதற்காக ஒரு யாகம் செய்ய நினைத்தும், புரோகிதர்களை வஸிஷ்டர் தடுத்ததால் யாகம் செய்ய முடியவில்லை. அதனால் கையில் ஜலம் எடுத்து, காயத்ரியை ஜபித்து அவனுக்குத் தன் புண்ணியமெல்லாம் தானம் செய்தார். திரிசங்கு ஒரு பக்ஷி போல் பறந்து போனான். சொர்க்கம் போன அவனை உனக்கு இங்கு வர அருகதையில்லை திரும்பிப் போ என்று இந்திரன் விரட்டினான். திரிசங்கு விஸ்வாமித்திரரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே கீழே விழுந்தான். குரல் கேட்ட முனிவர் தன் தவ வலிமையால் அவனை அங்கேயே அந்தரத்தில் நிறுத்தினார். அவனுக்காக ஒரு அங்கு ஒரு சொர்க்கலோகம் அமைக்க யாகம் செய்ய ஆரம்பித்தார். இந்திரன் உடனே பயந்து ஓடிவந்தான். முனிவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டான். திரிசங்கு மஹாராஜனைச் சொர்க்கம் அழைத்துச் செல்லும் படிச் சொன்னார். முனிவரின் பலம், பிடிவாதம் அறிந்து, திரிசங்குவிற்கு திவ்ய தேகம் தந்து, விமானத்தில் இந்திரன் ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான்.

 

12. ஹா! ஹா! ஹரிச்சந்த்ர,ந்ருபோ விபத்ஸு

   மக்ன: சதாக்ஷீம், பரதேவதாம் த்வாம்

   ஸம்ஸ்ம்ருத்ய ஸதய: ஸ்வவி பந்நிவ்ருத்தஹ

   காருண் யதஸ்தே, ஸுரலோக மாப

ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். அயோத்தியில் ராஜசூய யாகம் செய்து பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி ஆனான். அஹங்காரம் வந்தது. தேவியை மறந்தான். கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. ஒரு நதிக்கரையில் விஸ்வாமித்திரர் ஒரு கிழ பிராமணர் வேடத்தில் வந்து, ஹரிச்சந்திரனை ஏமாற்றி அவன் ராஜ்யம் முழுவதையும் தானமாகப் பெற்று, தக்ஷணையாக இரண்டரை பாரம் பொன்னும் கேட்டார். தக்ஷணையைக் கொடுக்க முடியாமல் மனைவியையும் மகனையும் விற்றான். சுடு காட்டில் காவல் காரனாக இருந்தான். தன் மனைவியையும் வெட்டிக் கொல்லும் நிலைக்கு வந்தான். அந்த பரதேவதையான சதாக்ஷரியை மனதில் நினைத்தான். தேவி அவர்களின் கஷ்டத்தை எல்லாம் நீக்கினாள். பாம்பு கடித்து இறந்த மகன் லோகிதாசன், அன்னையின் அருளால் மீண்டும் உயிர் பெற்றான். அவனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்தான். இந்திரன் பூமிக்கு வந்து விமானத்தில் அவர்களை ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான். அம்பாளை நினைத்தால் நன்மைவரும். மறந்தால் துன்பம்தான் வரும். பக்தி என்னும் பிரகாஸம் மனதில் இல்லை என்றால் வாழ்வே இருள் மயம் தான்.

 

13. அகஸ்த்ய பூஜாம், பரிக்ருஹ்ய தேவி!

   விபாஸி விந்த்யாத்ரி, நிவாஸி நீ த்வம்

   த்ரக்ஷ் யே கதா த்வாம், மம தேஹி பக்திம்,

   காருண்ய மூர்த்தே, ஸததம் நமஸ்தே

பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்ரஹம் செய்தாள் என்பதற்குச் சில உதாரணங்கள் சொல்லப் பட்டது. கஷ்டங்களும், துன்பங்களும் நீங்க ஒரே வழி அன்னையின் அனுக்ரகமே! தேவியை யாரும், எங்கும் எப்படியும் அழைக்கலாம். பக்தன் அழைத்தால் அம்பாள் ஓடி வருவாள். இந்த கருணையால் தான் பிரம்மாவின் மானஸ புத்திரன் ஸ்வாயம்புவன் பாற்கடல் தீரம் சென்று "ஐம்" என்னும் வாக்பீஜ மந்திரம் ஜபித்து தேவியை உபாஸித்த பொழுது, அன்னை சத்ரு, இல்லாத ராஜ்யமும், புத்திர பாக்யமும், அம்பாளிடம் திட பக்தியும், இறுதிக் காலத்தில் மோக்ஷமும் அடைவாய் என்று அருள் செய்து, விந்தியா பர்வதம் சென்றாள். ஒரு சமயம் நாரத மஹரிஷி விந்திய மலைக்குச் சென்றார்விந்தியன் அர்க்கிய,  பாத்தியஆஸனாதிகள் கொடுத்து,  முனிவரேதங்கள் வருகைக்கு காரணம் என்னஏதும் சங்கதி இருந்தால் சொல்லுங்கள் என்றான்.  நாரதர் சொன்னார் " நான் மேரு மலையிலிருந்து வருகிறேன்பார்வதிக்குத் தந்தையும்சிவனுக்கு மாமனாருமான  மேருவை அனைவரும் பூஜிப்பதால் அவன் கர்வமடைந்திருக்கிறான். மேருவின் இறுமாப்பை நான் என்னவென்று சொல்வதுகைலாயத்தில் சிவன் இருப்பதால் அதுவும் அனைவராலும் வணங்கப் படுகிறதுஅதனால் தன்னைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கும் அவர்களை எண்ணி பெருமூச்சு விட்டேன்,  என்று சொல்லி நீ ஏதும் செய்தி உண்டா என்று கேட்டதால் இதைச் சொன்னேன் என்று சொல்லிவிட்டு பிரம்மலோகம் சென்றார்விந்தியன் யோசித்து , மற்ற மலைகளின் கர்வத்தை அடக்கித் தன் உயர்வைக் காட்ட, கணக்கில்லாமல் உயர்ந்து,  சூரியன் மேருவை வலம் வருவதைத் தடுத்தான்தேவர்கள் ருத்ர மூர்த்தியிடம் செல்லஅவருடன் விஷ்ணுவிடம் சென்றார்கள்விஷ்ணுவின் அறிவுரைப்படி தேவர்கள் காசியிலிருக்கும் அகஸ்த்தியரை வேண்ட, அகஸ்த்யமுனிவர் காசியிலிருந்து விந்தியமலை சமீபம் வந்தார். அகஸ்தியரைக் கண்ட விந்தியன் தலை தாழ்த்தி வணங்கினான். அகஸ்தியர் சொன்னார்" நான் தென் திசைப் போகவேண்டும்.  நீ இப்படி உயர்ந்து நின்றால் நான் எப்படிப் போக முடியும்? அதனால் நான் திரும்பி வரும் வரை நீ இப்பொழுது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி அதன் மீது ஏறிச் சென்று அங்கேயே வசித்தார். இன்றும் அகஸ்த்யனின் நித்ய பூஜையை ஏற்றுக் கொண்டு விந்தியாசல வாஸினியாக அம்பாள் இருக்கிறாள் என்று சொல்லப் படுகிறது. நிரந்தரமாக பக்தர்களை அனுக்ரஹிக்கும் அம்பாளைத் தானும் காண வேண்டும் என்று விரும்பி, தனக்கு பக்தி வளரவேண்டும் என வேண்டி இந்த தசகத்தை முடிக்கிறார்.

 

 

முப்பத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது

 

 

 

 

 

 

 

 

 

 

தசகம் 36

மூலப்ரக்ருதி மஹிமா

1. த்வமேவ மூல,ப்ரக்ருதிஸ்த்வமாத்மா
  த்வமஸ்ய ரூபா, பஹுருபிணீச
  துர்க்கா ராதா, கமலா ஸாவி-
 -த்ர்யாக்யா ஸரஸ்வத்,யபி த்வமேவ

        ப்ரம்மம் ஆத்மா என்று தொடங்கிய பதங்களால் வேதாந்தம் எதைக் காண்கிறதோ அதுதான் மூலப்ரக்ருதி.  அதை ஆதி மஹத் என்றும் சொல்கிறார்கள். மூலப்ரக்ருதி ரூபமில்லாதது. ஆனால் பல உருவங்கள் எடுக்கமுடியும். இந்த மூலப்ரக்ருதியின் அவதாரங்களில் முக்யமானது 5. துர்க்கா, ராதா, லக்ஷ்மி, சாவித்ரி, சரஸ்வதி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.

 

2. துர்கா ஜகத் துர்க்,கதிநாசினீ த்வம்;
  ஸ்ரீ கிருஷ்ண லீலா, ரஸிகாஸி ராதா;
  சோபா ஸ்வரூபாSஸி, க்ருஹாதிஷு ஸ்ரீர்;
  வித்யா ஸ்வரூபாSஸி, ஸரஸ்வதீ .

       தன் உண்மை பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் துர்க்கா. தன்னை நம்பிச் சரண் அடைபவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள். துர்கமன் என்னும் அஸுரனை வதம் செய்தவள். அதன் காரணத்தாலும் துர்க்கா என அழைக்கப்படுகிறாள். ராதை கிருஷ்ணனின் லீலைகளை ரசிப்பவள்.கிருஷ்ணனுக்குப் பிரியமானவள்.ராஸ லீலை ஆடினவள். தன்னை ஆராதிப்பவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவள். அவர்களின் ஸமாகமத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தி ஆனது. மூவுலகத்தின் அழகும் ஒருங்கே இணைந்தவள். லக்ஷ்மி மங்கள ரூபிணி. இவள் அனுக்ரஹம் பெற்றவர்கள் ஸோபையும், காந்தியும் உடையவர்களாக இருப்பார்கள். விவசாயியின் கர்த்தகலக்ஷ்மி, வாணிபனின் வாணித்யலக்ஷ்மி. கண்களால் காணும் ஸௌபாக்யம் எல்லாம் இவள் தான். கிரஹத்தில் கிரஹலக்ஷ்மி, கிராமத்தில் கிராமலக்ஷ்மி, நகரத்தில் நகரலக்ஷ்மி. ஸரஸ்வதி வித்யா ஸ்வரூபிணி. சாஸ்த்திரம், விஞ்ஞானம், பாட்டு, படிப்பு, பேச்சு, நாட்டியம், எழுத்து எல்லாம் தருபவள். பாணினி, காத்யாயனன், பதஞ்சலி, பாதராயணன் ஆகியோர் இவளின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.


3. ஸரஸ்வதீ ஹா! ,குருசாபநஷ்டாம்
  த்வம் யாஜ்ஞ வல்க்யாய ததாத வித்யாம்
  த்வாமேவ வாணீ, கவசம் ஜபந்தஹ
  ப்ரஸாத்ய வித்யாம், பஹவோதி ஜக்முஹு

         வேத வ்யாஸரின் 4 வேத சிஷ்யர்களில் யஜுர்வேத சிஷ்யன் வைசம்பாயனன். சிஷ்யர்களில் முக்யமானவர் யாக்ஞவல்கியர். குரு சாபத்தால் சகல வித்தையையும் மறந்து சூரியனைத் துதித்தார். சூரியன் குதிரை ரூபத்தில் யஜுர் வேத வித்தையைக் கொடுத்தான். இதை பலப்படுத்த தேவியின் அருள் வேண்டும் என்றார். யாக்ஞவல்கியர் ஸரஸ்வதியைத் நினத்துத் தவம் செய்தார். ஒளிமயமாக தேவி காட்சி தந்தாள். வித்தைகளை மீண்டும் பெற்றார். அம்பாள் அனுக்ரஹம் இருந்தால் குருசாபமும் ஒன்றும் செய்யாது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸரஸ்வதி கவசத்திற்கு விஸ்வஜெயம் என்றும் பெயர் உண்டு. இது வித்தைக்கு மிகவும் உகந்தது.


4.
த்வம் தேவி! ஸாவித்ர்யபிதாம் ததாஸி;
  ப்ரஸாததஸ்தே, கலு வேதமாதுஹு
  லேபே ந்ருபாலோ,ச்வபதிஸ்தனூஜாம்
  நாம்நா ஸாவித்ர்,யபவத் கிலைஷா

         மத்ர தேசத்தின் ராஜா அசுவபதி. அவன் மனைவி மாலதி. புத்திரப் பேறு வேண்டி, வசிஷ்டரின் உபதேசத்தால் மாலதி ஸாவித்ரியை ஆராதித்தாள். அன்னை அருள் கிடைக்கவில்லை. பின் அசுவதி மஹாராஜாவும் புஷ்கரக்ஷேத்ரத்தில் 100 வருடம் தவம் செய்தார். அப்பொழுதும் அன்னை காட்சி தரவில்லை. மனவருத்தம் கொண்டார்கள். அப்பொழுது லக்ஷம் காயத்ரி ஜபம் செய்" என்று அசரீரி கேட்டது. அந்த சமயத்தில் பராசரமுனிவர் அங்கு வந்தார். காயத்ரியை ஒரு தரம் ஜபித்தால் ஒரு இரவும் பகலும் செய்த பாபமும், 100 தரம் ஜபித்தால் ஒரு மாதம் செய்த பாபமும், ஒரு லக்ஷம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபமும், 10 லக்ஷம் ஜபித்தால் முன் ஜன்ம பாபமும் போகும். இதுபோல் 10 தரம் ஜபித்தால் முக்தி கிடைக்கும். அந்த தேவியை ஸ்தோத்ரம் செய் என்று சொன்னார். அசுவபதி அப்படியே ஜபித்து பூஜிக்க தேவீ அருள் செய்தாள். அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சாவித்திரி.

 

5. ஸா, ஸத்யவந்தம், ம்ருதமாத் மகாந்தம்
  ஜீவயந்தீ ச்வசுரம் விதாய
  தூரீக்ருதாந்த்யம், தனயானஸூத;
  யமாத் குரோராப தர்மசாஸ்த்ரம்
   

          சாவித்திரி அழகும் யௌவனமும் நிறைந்து விளங்கினாள். த்யுமத்ஸேனருடைய மகன் ஸத்யவானை மணந்தாள். ஒரு வருடம் கழித்துத் தந்தையின் கட்டளைப்படி ஸத்யவான் பழமும், விறகும் கொண்டுவர சந்தோஷத்துடன் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். விதியினால் ஸத்யவான் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தான். யமன் அவனைக் கொண்டு போக, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து போனாள்.

           யமன் சொன்னான் "சாவித்திரி நீ மனித உடலுடன் என் உலகம் வரமுடியாது. உன் கணவன் ஆயுள் முடிந்துவிட்டது. கர்மபலனை அனுபவிக்க அவன் என்னுடன் வருகிறான். கர்ம பலனால் தான் ஜீவன் பிறக்கிறான். அதனாலேயே மரணமும் அடைகிறான். சுகம், துக்கம், பயம், சோகம், தேவத்தன்மைகள், ஸாலோக்யம், ஸகல சித்திகள் இவைகளையும் அடைகிறான். அஸுர, தைத்ய பிறப்புகளும் அதன் காரணமே " என்றான். சாவித்திரி கேட்டாள்" கர்மம்என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? தேகம் என்பது எது? இந்த கர்மத்தைச் செய்பவன் யார்? அதை அனுபவிப்பவன் யார்? ஜீவன் யார்? பரமாத்மா யார்?" .
யமன் சொன்னான், வேதம் விதித்தது எதுவோ அது கர்மம். சங்கல்பமில்லாமல் செய்யும் கர்மம் உத்தமமானது. பிரம்ம பக்தன் எவனோ அவனே முக்தன். பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், சோகம், பயம் இல்லாதவன். கர்ம வடிவினரும், கர்மத்தின் வித்து போலும் இருக்கும் பகவான் கர்ம பலனைத் தருகிறார். அவர் பரமாத்மா. பரா அல்லது பராசக்தி என்பது பிரகிருதி. இந்த பிரகிருதிக்குக் காரணமானவர் பகவான்தான். தேகம் என்பது அழியக் கூடியது. கர்மத்தைச் செய்பவன் தேகீ. போகம் என்பது ஐஸ்வர்யம். பரமாத்மா போகத்தை அனுபவிக்கச் செய்பவர். உடலையும், பிராணனையும் தாங்குபவன் ஜீவன். பிரம்மம் என்பது நிர்குணமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டதாய், எங்கும் வ்யாபித்திருக்கும் பரம் பொருள். அதுதான் பரமாத்மா. மேலும் சாவித்ரி எந்த கர்மாவினால் ஜீவன் பிறக்கிறான்? என்னவாகப் பிறக்கிறான்? ஸ்வர்கம், நரகத்திற்கு எந்த கர்மம் காரணம்? எதனால் யோகி ஆகிறான்?  எதனால் ரோகி ஆகிறான்? என்று பல விஷயங்களைக் கேட்டாள். தருமராஜன் இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து சிரித்தபடியே சொல்கிறார் "குழந்தாய் நீ சாவித்திரி தேவியின் ஒர் அம்சமாகப் பிறந்தவள். உன் ஞானம் ஞானிகளின் ஞானத்தைவிடச் சிறந்தது. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மியும், சிவனின் உடலில் பவானியையைப் போலும் நீ சத்யவானிடத்தில் சௌபாக்யவதியாக இருப்பாய் என்று வாழ்த்தி, நீ விரும்பும் வரத்தைக் கேள் என்றார். " ஸத்யவானிடம் எனக்கு 100 புத்திரர்களும், என் தந்தைக்கு 100 குழந்தைகளும், என் மாமனாருக்கு ராஜ்யலாபத்துடன் கண் பார்வையும், வேண்டும். லக்ஷம் வருஷங்கள் ஆனதும் என் கணவருடன் நானும் பரமபதம் அடைய வேண்டும்" என்று  சாவித்திரி கேட்டாள். அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார் தர்மராஜன். அதன் பின் ஜீவனின் கர்ம பயனையும், அதைக் கடக்க வழியும், எந்த சக்தி அனைவரையும் காக்கிறதோ, முக்தியும் சாகா நிலையும் தருகிறதோ அந்த சக்தி பூஜை செய்யும் முறைதனையும் கூறும் படிக் கேட்டாள். அந்த யமதர்மராஜனை பலவித ஸ்தோத்ரங்களால் நமஸ்கரித்தாள். யமன் சொன்னான் "அவனவன் செய்த கர்மப்படி, ஸ்வர்கமும் நரகமும் அடைகிறான். அந்தந்த வினைகளுக்கு ஏற்ப காலஸமுத்திரம், ஜ்வாலாமுகம், தூம்ராந்தம் போன்ற 86 நரக குண்டங்களை அடைகிறான். நரகத்தில் விழாமல் பிறவித் துன்பம் ஒழிக்கும் கர்மம் என்ன? என்று கேட்டாள். பஞ்ச தேவதா பூஜையைச் செய்யும் மனிதன் நரகத்தைப் பார்க்க மாட்டான் என்றார். பரமாத்ம சேவையே மேலான சுபகர்மம் என்று பலவித தர்ம சாஸ்த்திர விளக்கங்கள் கூறினார் தர்மராஜன். ஸத்யவானுக்கு உயிர் கொடுத்து  அவளுக்கு மங்கள ஆசீர்வாதம் அளித்தார். அவள் தன் கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்து முக்தி அடைந்தாள்.

 

6. ஸ்கந்தஸ்ய பத்னீ, கலு பாலகாதி-
  -ஷ்டாத்ரி ஷஷ்டீதி ஜகத்ப்ரஸித்தா
  த்வம் தேவஸேனா, தனதா தனானாம்
  அபுத்ரிணாம் புத்ர,ஸுகம் ததாஸி

       மூலப்ரக்ருதியின் 5 அவதாரங்களை இதுவரை பார்த்தோம். அடுத்தது தேவஸேனா. பிரக்ருதியின் ஆறாவது அம்சத்தில் பிறந்தவள். ஆறாவதாக வருவதால் ஷஷ்டி என்றும் பெயர். குழைந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள். ஸ்கந்தனின் மனைவி. செல்வம் இல்லாதவர்க்குச் செல்வம் தருவாள். குழந்தை வேண்டுபவருக்குக் குழந்தைகளைத் தருவாள். குழந்தை இல்லாதவர்கள் இந்த தேவியை பூஜித்து ஷஷ்டி விரதம் இருந்தால் புத்திரர்கள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தையும் குணவானாக இருப்பான்.


7.
ஸத்கர்மலப்தே, தனயே ம்ருதே து
  ப்ரியவ்ரதோSதூ,யத பக்த வர்யஹ
  தம் ஜீவயித்வா, ம்ருதமஸ்ய தத்வா
  ஸ்வ பக்தவாத்ஸல்,யமதர்சயஸ்த்வம்

        ஸ்வாயம்புவமனுவின் புத்திரன் பிரியவிரதன். இவன் தேவி பக்தன். புத்ரகாமேஷ்டி யாகம்  செய்து ஒரு குழந்தயைப் பெற்றான். ஆனால் அந்தக் குழந்தை உயிரில்லாமல் பிறந்தது. அனைவரும் அழுதனர். தாய் மயக்கமடைந்தாள். தந்தையோ பிராணனைவிட முயற்சி செய்தார். இப்படி அனைவரும் கலங்கி நிற்கும் பொழுது அனேககோடி ரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கருணைக் கடலாக, பக்தருக்கு அனுக்ரஹம் செய்ய ஆவல் கொண்டு அவர்கள் முன் தோன்றிய அந்த தேவியை அரசன்  துதித்து, நீ யார் என்று கேட்டான்.  நான் பிரம்மாவின் மானஸ புத்ரி. தேவஸேனா என்று பெயர். ஸ்கந்தனின் பத்னி. சுகம், துக்கம், பயம், சோகம், மங்களம், மகிழ்ச்சி, ஸம்பத்து, விபத்து ஆகிய எல்லாம் கர்மத்தால்  விளைகிறது.  அந்த கர்மத்தாலேயே உயிரிழந்த புத்திரனும், சிரஞ்சீவியானவனும் தோன்றுகிறார்கள் என்று சொல்லி ஞான பலத்தால் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்து, ப்ரியவிரதனுக்கு அனுக்ரஹமும் செய்தாள்.

 

8. த்வமேவ கங்கா, துளசீ, தரா
  ஸ்வா: ஸ்வதா த்வம், ஸுரபிச்ச தேவி!
  த்வம் தக்ஷிணா, கிருஷ்ண,மயீ ராதா,
  ததாஸி ராதா,மயக்ருஷ்ணதாம்

    விஷ்ணுவின் பத்னிகளான கங்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். சாபமும் கொடுத்துக் கொண்டார்கள். அதனால் மூவரும் நதிகளாக ஆனார்கள். கங்கா கங்கை நதி ஆனாள். சரஸ்வதி அந்தர்வாணி ஆனாள். லக்ஷ்மி பத்மாநதி ஆனாள். சாபத்தால் லக்ஷ்மி மரமாக ஜனிக்க  வேண்டி இருந்தது. விஷ்ணுவின் அனுக்ரஹத்தால் தர்மத்வஜரிடத்தில் பெண்ணாக துளசி என்னும் பெயரில் ஜனித்தாள். பூமியில் துளசிச் செடியாக இருந்தாள். கங்கா கோலோகத்தில் ஒரு கோபிகையாக இருந்தாள். ஒருநாள் ஏகாந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சங்கமித்தாள். ராதை அதைப் பார்த்துவிட்டாள். கிருஷ்ணன் கங்கையை காலின் அடியில் மறைத்து வைத்தான். கங்கை ஒளிந்தததால் எங்குமே ஜலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலும் தண்ணீர் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டார்கள்.  இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரம்மா கோலோகம் சென்றார். பீடத்தில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் ராதை ஆனார். உடனே கிருஷ்ணன் ஆனார். ராதையும் கிருஷ்ணனும் வெவ்வேறல்ல. ஒன்றுதான் என்று பிரம்மா உணர்ந்தார். பிரம்மாவின் கோரிக்கைப் படி கிருஷ்ணன் கங்கையை விட்டார். எங்கும் ஜலம் வந்து கஷ்டம் தீர்ந்தது. மனிதன் செய்யும் யக்ஜம், யாகம் இவைகளின் ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் அம்பாள் "ஸ்வாஹா' ஆனாள். பித்ருக்களுக்குச் செய்யும் கர்ம பாகங்கள் கொண்டு செல்பவள் "ஸ்வதா" ஆனாள். கர்மத்தைச் செய்தவுடன் தக்ஷிணையைக் கொடுக்கும் பொழுது அவள் தக்ஷிணா தேவி ஆகிறாள். தக்ஷிணையுடன் கூடிய கர்மம் பயன் தரும். தக்ஷணை இல்லாத கர்மத்தை பலிச்சக்ரவர்த்தி புசிக்கிறார். இது அவர் பகவானின் வாமனாவதாரத்தில் பெற்ற வரம். பூ லோக பாரத்தைத் தாங்குபவள் பூமி தேவி. வஸுதையும் பூமிதான். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கவர்ந்து ஸமுத்திரத்தின் அடியில் ஒளித்தபோது பகவான் வராக ரூபம் எடுத்து அதைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் சுந்தரியாக நின்ற பூமியைக் கண்டு வராகமூர்த்தி மோஹித்து ஒரு வருட காலம் கிரீடித்தனர். கடேசன் என்னும் பிள்ளையையும் பெற்றனர். அதன் பின் தெளிவுபெற்று ஸ்ரீ தேவிக்குச் சமமான மனைவியாக நீயும் ஆனாய், அனைவராலும் பூஜிக்கப்படுவாய் என்றும் சொன்னார். தேவியும் உங்கள் ஆணைப்படி அனைத்துலகையும் வராகரூபிணியாகத் தாங்குகிறேன் என்று சொன்னாள். மேலும் முத்து, சிப்பி, சிவலிங்கம், புஸ்தகம், புஷ்பம், பூமாலை, துளசீ, ஜபமாலை, தேவி விஷ்ணு பிம்பங்கள், சந்தனம், சாலிக்ராமம், சங்கு, தீபம், யந்திரம், மாணிக்கம், பொன், வஜ்ரம், தீர்த்தம் ஆகியவைகளை ஆசனமில்லாமல் வைத்தால் அவைகளைத் தாங்கும் வல்லமையில்லாமல் நான் வருந்துவேன் என்றாள். இவைகளை உன் மீது வைப்பவர் காலசூத்திரம் என்னும் நரகத்தை அடையட்டும் என்று பகவான் சொல்லிச் சென்றார்

9. த்வம் க்ராமதேவி, நகராதிதேவி
  வனாதிதேவி க்ருஹதேவதா
  ஸம்பூஜ்யதே பக்த,ஜனைச்ச யா யா
  ஸா ஸா த்வமே வாஸி, மஹானுபாவே!

         பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளும் எல்லா மூர்த்திகளும் மூலபிரக்ருதியின் பல ரூபங்கள் தான். நகரத்தில் நகரதேவதை. கிரமத்தைக் காக்கும் கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தேவதை. வீட்டில் உள்ள பூஜை அறை, துளசி மாடம் அனைத்து பூஜையும் ஏற்பவள் அவளே. இப்படி எல்லா இடத்திலும் இருப்பது மூலப்ரக்ருதிதான்.


10.
யத் யத் ச்ருதம் த்ருஷ்டம், அபி ஸ்ம்ருதம்
   தத் தத் த்வதீயம், ஹி கலாம்சஜாலம்
   கிஞ்சனாஸ்த்யேவ, சிவே! த்வதன்யது
   பூயோபி மூல,ப்ரக்ருதே! நமஸ்தே

         அறிவுக்கு உள்பட்ட அனைத்தும் மூலப்ரக்ருதி. எல்லா உயிர்களிலும் இருப்பது மூலப்ரக்ருதி. யாரும் யாரையும் பழிப்பதோ, நிந்திப்பதோ, இழிவாகப் பேசுவதோ, தூஷிப்பதோ கூடாது. எல்லோருக்கும் மரியாதை தரவேண்டும். அப்பொழுது மூலப்ரக்ருதியை பூஜை செய்த பலன் கிடைக்கும். மூலப்ரக்ருதியை வணங்கி ஆசிரியர் இந்த தசகம் முடிக்கிறார்.

முப்பத்தி ஆறாம் தசகம் முடிந்தது


 

 

 

 

 

 

 

தசகம் 37

விஷ்ணுமஹத்வம்


1.
புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
  ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
  ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் கர்த்த
 
தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ

        அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று  இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம்  செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. "விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்" என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.

 

2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
  தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
  தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
  மார்ஷ்டும் தேவ்யே, நியுஜ்யதே ஹி
      

விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.


3. ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
 
பத்ன்யா பூதைச்ச, ஸமம் கிரீசஹ
  இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
  ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்


         
தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே. பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.




4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
  பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
  ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
  விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் நௌதி

      இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.




5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
  தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
  ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
  ஸ்துவந்தி நாரா,யண மர்யமா

      மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.


6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
  பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
  தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
  நரம் நாரா,யண மாச்ரயந்தே

       ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே  ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர  நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.

 

7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
  ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
  தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
  ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்

       இளாவ்ருதத்தின்  இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
  ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
  வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
  மஹாபலிர் வா, வனமேவ நௌதி.

        பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம். சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.


9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
  ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
  ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
  பாதள மூலே, ஸலீலமாஸ்தே

        பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.

 

10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
   ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
   ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
   மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே

        எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து,   எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.

முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.

 

 

 

 

 

 

தசகம் 38

சித்த சுத்திப்ராதான்யம்


1.
அந்தர்முகோ : ஸ்வ,சுபேச்சயைவ
  ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
  த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
 
பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச


       
அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன்  முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை   படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.


2.
வேதசாஸ்த்ராத்,யயனேன தீர்த்த
  ஸம்ஸேவயா தான,தபோ வ்ரதைர் வா
  சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
  வைசத்யமாதர்,சவதேதி மாத !

       தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.

 

3. சுத்திர் யக்ஞேன - யஜன் சசாங்கஹ
  பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
  சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
  அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ
    

ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை  மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.


4. விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
  கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
  ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
  கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே

           100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.

 

5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
  தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
  உபௌ மித: சேப,து; ராடி பாவம்
  ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச

        புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.

 

1.             தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
  ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
  க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
  ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?
         

காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.

 

7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
  யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
  பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
  ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது

        லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.


8.
க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
  சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
  பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
  விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்
   

பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே  அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.


9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
  தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
  த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
  நிமார்ஷ்டி த்வன்,மயதாமுபைதி


         
தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.


10. ஞானம் பக்திர் , தபோ , யோக
   புத்திர் மே சித்த,ஜயோSபி மாத !
   அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
   ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே
           இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.

முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது

 

தசகம் 39

மணித்வீபநிவாஸினி

1. ஸுதாஸமுத்ரோஜகதாம் த்ரயாணாம்

  சத்ரீபவன் மஞ்சு தரங்கபேனஹ

  ஸவாலுகாசக,விசித்ரரத்னஹ

  ஸதாரகவ்யோ,மஸமோ விபாதி

                பூமிக்கு மேலே ஸ்வர்க்க லோகம்பிரம்மலோகம்கைலாயம்வைகுண்டம் அதற்கும் மேல் அமுத ஸமுத்திரம்பிரம்மாண்டங்கள் கோடிக்கணக்கில் உண்டுஒவ்வொன்றிலும் சிவனும் விஷ்ணுவும் அவரவர் உலகங்களும் உண்டுஎல்லாவற்றிற்கும் மேலே அமுத ஸமுத்திரம். அதனால் அதை பிரம்மாண்டங்களின் குடை என்று சொல்லப்படுகிறதுஇந்த அமுத ஸமுத்திரத்தைப் பார்த்தால் நக்ஷத்திரங்களோடு கூடிய ஆகாயம் போல் தோன்றும்அமுத ஸமுத்திரத்தில் உள்ள ரத்தினங்களும் முத்துக்களும் சங்குகளும் ஆகாய நக்ஷத்திரங்கள் போல் ஜொலிக்கின்றனஇரண்டும் பிரகாசமான இடம் தான்.

 

2. தன்மத்யதேசேவிமலம் மணித்வீ-

  -பாக்யம் பதம் தேவி!, விராஜதே தே;

 யதுச்யதே ஸம்,ஸ்ருதி நாசகாரி 

 ஸர்வோக்தரம் பா,வனபாவனம் 

               அமுதக் கடலின் நடுவில் மணித்வீபம் இருக்கிறதுஅதுதான் புவனேஸ்வரியின் இருப்பிடம்மும்மூர்த்திகளும் இங்குதான் விமானத்தில் வந்து புவனேஸ்வரியை தரிசித்தார்கள்இங்கு வந்தால் ஜீவனின் ஸம்சார துக்கம் தீரும்கிருஷ்ணனும் ராதையும் கோலோகத்தில் ராஸமாடினார்கள்அதைவிட மகத்தான இடம் மணித்வீபம்.

 

3. தத்ராஸ்த்யயோதா,துமயோ மனோஜ்ஞஹ

  ஸாலோமஹாஸார,மயஸ்த தச்ச

  ஏவம்  தாம்ராது,மயாகிலாஷ்டா-

  தசாதி சித்ராவரணா லஸந்தி

        மணித்வீபத்தைச் சுற்றி அமுத ஸமுத்திரம். அதைச் சுற்றி 18 கோட்டைகள்இரும்புவெண்கலம்தாமிரம்ஈயம்பித்தளைபஞ்சலோகம்வெள்ளிதங்கம்புஷ்பராகம்பத்மராகம்கோமேதகம்வஜ்ரம்வைடூர்யம்இந்திரநீலம்முத்துமரகதம், பவழம்நவரத்னம்அடுத்து இருப்பது சிந்தாமணி கிருஹம்இந்த ஒவ்வொரு கோட்டையிலும் ஒவ்வொருவிதமான காட்சிகளைக் காணலாம்காவல் வீரர்கள்நடமாடும் மயில் கூட்டங்கள், கிணறுகள்தடாகங்கள்அழகான வீடுகள்ஒட்யாணங்கள்சித்தர்கள்திக்பாலர்கள்ஆயுதங்கள்சக்திகள்தேவியின் சேடிகள்மஹேஸ்வரியின் வாகனங்கள்தாமரை மலர்இதுபோன்று பல காட்சிகள் காணலாம்இதுதான் சோடசீ பூஜை என்பதாகும்சாதகன் அம்பாளை மனதில் நிலை நிறுத்திபிந்துவைக் குறிவைத்துஒவ்வொரு கோட்டையாகத் தாண்டி தேவியிடம் செல்கிறான்ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம்இறுதியில் வரும் போது தடைகள் அதிகமாகவே வரக்கூடும். அதுதான் யுத்தம் செய்யத் தயாராக இருக்கும் சக்திகள்.

 

4. தைராவ்ருதம் தேபதமத்விதீயம்

  விபாதி சிந்தா,மணி ஸத்ம தேவி!

  ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்பஸஹஸ்ரரம்ய

  ச்ருங்கார முக்த்யா,தித மண்டபாச்ச

 

                18 மதில்களையும் தாண்டினால் சிந்தாமணி கிருஹம்அதன் மத்தியில்  தேவியின் இருப்பிடமானஆயிரங்கால் மண்டபம்அம்மண்டபத்தின் நான்கு பக்கத்திலும் 4 மண்டபங்கள்சிருங்கார மண்டபம்முக்திமண்டபம்ஞான மண்டபம்ஏகாந்த மண்டபம்அவைகள் பலவிதமான நறுமணங்களோடும்சூரியனுக்குச் சமமான காந்தியுடனும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

 

5. ப்ரஹ்மாண்டகோடீ;, ஸுகமாவஸந்த

  உபாஸகாஸ்தேமனுஜாஸுராச்ச

  தைத்யாச்ச ஸித்தாச்சததே தரே 

  யதந்ததோ யாந்திபதம்ததேதது

                மனிதர்கள் பூமியிலும்தேவர்கள் தேவலோகத்திலும் அவரவர்கள் இடத்திலிருந்து தேவியை த்யானம் செய்கிறார்கள்எல்லோரும் விரும்புவது பரமபதம்அதுதான் மணித்வீபம்இதைவிட மஹத்தான இடம் எதுவும் இல்லை.

 

6. த்வம் மண்டபஸ்தாபஹுசக்தியுக்தா

  ச்ருணோஷி தேவீகளகீதகானி,

  ஞானம்விமுக்திம் ததாஸிலோக

  ரக்ஷாமஜஸ்ரம்குருஷே  தேவி!

 

                மண்டபங்களின் 4 பக்கத்திலும் நறுமணம் கொண்ட மல்லிகைகுந்தம் போன்றவனங்களும்தாமரைத் தடாகங்களும்அமிர்த ரசத்தோடு ரீங்காரம் செய்யும் வண்டுகளும்அன்னங்களும் நிறைந்து இருக்கும்.சிருங்கார மண்டபத்தில் தேவியின் கணங்களின் கானங்கள்மத்தியில் அமர்ந்திருக்கும் தேவியும் மற்றவர்களும் அதைக் கேட்டு மகிழ்வார்கள்முக்தி மண்டபத்தில் ஆத்மாக்களின் பாசத்தை மோசனம் செய்யும் விதத்தை எண்ணியிருப்பாள்ஞான மண்டபத்தில் பாச மோசனத்திற்கான ஞான உபதேசம் செய்கிறாள்அங்கு  வருபவர்களுக்கு அருகதை இருந்தால் முக்தியும்ஞானமும் தருகிறாள்ஏகாந்த மண்டபத்தில்இந்த உலகை ரக்ஷிப்பதற்காக மந்திரிணிகளோடு கூடி சிந்திப்பாள்இவைகள் எல்லாம் அம்பாளுக்கு ஒரு லீலைதான்.



7. மஞ்சோஸ்தி சிந்தா,மணிகேஹதஸ்தே;

  ப்ரம்மா ஹரீ ருத்ரஇஹே ச்வரச்ச

  குரா பவந்த்யஸ்ய;, ஸதாசிவஸ்து

  விராஜதே ஸத்,பல கத்வமாப்தஹ

                சிந்தாமணிக்ரஹத்தில்  சக்தி தத்வாத்மகமாக இருக்கின்ற 10 படிகளோடு கூடிய ஒரு கட்டில்பிரம்மாவிஷ்ணுருத்திரர்ஈஸ்வரன் ஆகிய நால்வரும் அதன் கால்கள்சதாசிவன் அந்த நால்வரையும் இணைக்கும் பலகைஸ்ருஷ்டிஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம்  இவைகளைச் செய்கிறார்கள்சைவர்கள் இந்த ஈஸ்வர ஸ்வரூபங்களைத் தான்  சங்கல்பமாக வணங்கிறார்கள்

8. தஸ்யோபரி ஸ்ரீபுவனேஸ்வரித்வம்

  ஸர்வேசவாமா,கதலே நிஷண்ணா

  சதுர்புஜா பூ,ஷண பூஷிதாங்கீ

  நிர்வ்யாஜ காருண்யவதீ விபாஸி

                 புவனேஸ்வரி இந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்சர்வ சௌந்தர்யத்தின்  ஒருமித்த ரூபம் தான் அம்பாள்எல்லா பிரம்மாண்டங்களுக்கும் மணித்வீபம் ஒன்றுதான்புவனேஸ்வரியும் ஒன்றுதான்மணித்வீபம் பிரம்மாண்ட கோடிகளின் ஸமஷ்டிஸமஷ்டியின் பிரதிபலிப்பே வெஷ்டிஇதுதான் பிரம்மாண்டத்தில் நடக்கிறது.

 

9. ப்ரதிக்ஷணம் கார,யஸி த்வமிச்சா -

   - ஞானக்ரியாசக்தி,ஸமன்விதாSத்ர

  த்ரிமூர்த்திபிசக்தி,ஸஹஸ்ரயுக்தா

  ப்ரமாண்ட ஸர்க்,ஸ்திதிஸம்ஹ்ருதீச்ச

                பிரதானமான இச்சாசக்திஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளும் தேவியின் கூடவே இருப்பார்கள்நிறைய சக்திகள் உண்டுஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் அவரவருக்குத் தேவையான சக்திகளை அம்பாள் தருகிறாள்இந்த சக்திகள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாதுமணித்வீப வாஸியே அனைத்திற்கும் ஆதாரம்இவள் கண் திறந்தால் ஸ்ருஷ்டியும்கண்மூடினால் பிரளயமும் உண்டாகிறது.

 

10. ஸா த்வம் ஹி வாசாம்மனஸோSப்யகம்யா

   விசித்ரரூபாSஸிஸதாSப்ய ரூபா

   புரஸதாம் ஸன்னி,ஹிதா க்ருபார்த்ரா

   ஸதா மனுத்வீபநிவாஸினீச

 

   ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபி வாடீ பரிவ்ருதே

   மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே/

   சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்

   பஜந்தி த்வாம் தந்யாகதிசந சிதாநந்த லஹரீம்//

                அந்த தேவியை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லைமனதாலும் எட்டமுடியாதுஅவள் ஸகுணை அல்லநிர்குணைஉண்மை பக்தர்கள் அழைத்தால் உடன்,  எப்பொழுதும் அவர்கள் முன் வருவாள்அவளே  எப்பொழுதும்  மணித்வீபத்திலும் இருக்கிறாள்இப்படிப் பெருமைகளைக் கொண்ட அம்பாளை வார்த்தைகளால் வருணிக்க முடியுமா? 18 கோட்டைகளைத் தாண்டி சிந்தாமணி க்ரஹம்அதில் தேவியைக் காண்கிறோம்அது நம்முடைய சிந்தனைச் சக்தியை தட்டி எழுப்புகிறதுபஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம்அதற்குள் ஒரு ஸூஷ்ம சரீரம்அதில் 5 பிராணன்கள் இருக்கிறதுபிராணன்அபாணன்வியாணன்உதாணன் , ஸமாணன். 10 இந்திரியங்கள்மனம்புத்தி இவைகளுடன் 17 ஆகிறதுஅதற்குப் பிறகு அவித்தையால் சூழப்பட்ட காரண சரீரம்மொத்தம் 18. இதற்கும் மேல் தேவிபிராணன்களையும் இந்திரியங்களையும் அடக்கி, கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அந்த யோகிக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கும்நமது உடலே மணித்வீபம்அதில் இருக்கும் ஆத்மாதான் அம்பாள்உபாஸனையினால் ஆத்ம தரிசனம் கிடைக்கும்அதனால் கிடைக்கும் ஆனந்தமே அமுத ஸமுத்திரம்.


11. மாதர் மதந்தஹகரணே நிஷண்ணா

   வித்யாமயம் மாம்குரு பந்தமுக்தம்

   பந்தம்  மோக்ஷம் ததாஸ்ய ஸக்தா

   தாஸோSஸ்மி தே தேவி!, நமோ நமஸ்தே

                சிந்தாமணிக் ரஹத்தில் தேவீ எப்படி இருக்கிறாளோ அப்படியே தன் மனதிலும் இருக்க வேண்டும் என்று இதன் ஆசிரியரான பாலேலி நம்பூதிரி ஆசைப்படுகிறார்தேவிக்கு யாரிடமும் ராகமோ த்வேஷமோ இல்லைதனக்கு அவித்யையை நீக்கி வித்யையைத் தருமாறு வேண்டிக் கொள்கிறார்அதற்காக மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.

முப்பத்தி ஒன்பதாம் தசகம் முடிந்தது.

 

தசகம் 40

இந்த 40 ஆவது தசகமும் 41 ஆவது தசகமும் நித்ய ஜபத்திற்கு உகந்தது. 40 ஆவது தசகத்தில் தேவி பாகவதத்திலுள்ள தேவீ காயத்ரீ மந்திரத்தை முதல் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறதுதொடர்ந்து உபநிஷத் மந்திரங்களைக் குறிக்கும் பிரார்த்தனைகள்"வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்இது 2 ஆவது ஸ்லோகத்தில் வருணிக்கப் படுகிறது. "ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” இது 3 ஆவ்து ஸ்லோகத்திலும் "அணிதாகரணமஸ்து" இது  4 ஆவது ஸ்லோகத்திலும், “ஸ்திரைர் அங்கை சுற்றுவாம் ஸஷ்டுதிர்  வஸே    தேவஹிதம் யதாது இது 5 ஆவது ஸ்லோகத்திலும்,  "ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத், ம்ருத்யோர் முக்ஷீய மாம் ருதாத்"  என்னும் மிருத்யுஞ்ய மந்திரத்தை நினைவு கூ றும் 7 ஆவது ஸ்லோகம், இவைகள் எல்லாம் தினமும் சொல்வதற்கு உகந்தது

''ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் சதீமஹீ புத்திம் யோன:  ப்ரோசோதயாதுஇதுதான் தேவி காயத்ரீ.

1. ஆத்யேதி வித்யேதி, கத்யதே யா

  யா சோதயேத் புத்தி,முபாஸகஸ்ய

  த்யாயாமி தாமேவ, ஸதாSபி ஸர்வ

  சைதன்ய ரூபாம், பவமோசனீ த்வாம்

                அம்பாள் ஆத்யைஅவள் இல்லை என்ற காலமே இல்லைஅதனால் தான் அவள் ஆத்யைவித்யையும் அவித்யையும் அவளேயாரிடம் வித்யா ஸ்வ்ரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு முக்தியையும்யாரிடம் அவித்யா ஸ்வரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு பந்தத்தையும் தருகிறாள்எல்லா ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான்இதுதான் தேவி காயத்ரியின் அர்த்தம்.

 

2. ப்ரதிஷ்டிதாSந்த:, கரணேஸ்து வாங் மே;

  வதாமி ஸத்யம், வதாம்ய ஸத்யம்;

  ஸத்யோக்திரேனம், பரிபாது மாம், மே

  ச்ருதம் மா விஸ்,ம்ருதிமேது மாதஹ

                ஒருவன் எப்படி நினைக்கிறானோ அதற்கு ஏற்ப அவன் வார்த்தைகளும் இருக்கும்வார்த்தைகள் எப்படியோ செயலும் அப்படியேசொல்செயல்சிந்தனை எல்லாம் ஒன்று போல் இருந்தால் அவன் அதிர்ஷ்டசாலிநல்ல சிந்தனை இருந்தால் தான், சொல்லும் செயலும் நல்லதாக இருக்கும்இதை இயக்கும் சக்தி நம்முடைய உள்மனம்தன்னுடைய உள்மனமும் நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார்இந்த நல்ல எண்ணம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ அத்தனை அறிவும் வளரும்கேட்டதை மறந்தால் எந்த பயனும் இல்லைஅம்பாளின் அனுக்ரஹம் இருந்தால் கேட்டவைகள் மனதில் நிலைக்கும்நிறைய ஸ்ருதி வாக்யங்களின் அர்த்தம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. " வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்"  இதற்கு இதுதான் அர்த்தம்.

 

3. தேஜஸ்வி மேSதீத,மஜஸ்ரமஸ்து;

  மா மா பரத்வேஷ, திஸ்ச தேவி!

  கரோமி வீர்யாணி, ஸமம் ஸுஹ்ருத்பிர்;

  வித்யா பரா ஸாSவது மாம் ப்ரமாதாது

      எதைக் படிக்கிறோமோ, அதாவது கற்றுக் கொள்கிறோமோ அதை இயன்றவரையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாராயணீயம், தேவீ நாராயணீயம், பகவத் கீதை எல்லாம் படித்துவிட்டு, நல்ல தத்துவங்களை அறிந்து கொண்டு, பிறரிடம் அன்பில்லாமல் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் அதனால் பயன் இல்லை. பிறரிடம் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் மன அமைதி இருக்காது. இதை அனுபவத்தில் உணரலாம். அன்பிருந்தால் மன அமைதி கிடைக்கும். தனக்கு மன அமைதி இல்லாமல் போய்விடக் கூடாது என்று ஆசிரியர் பிரார்த்திக்கிறார். எல்லோரும் ஒன்று போல் ஸத் கர்மங்களைச் செய்து ஒன்று போல் பயனைப் பெற வேண்டும். அப்பொழுதான்  ஜீவசமூகத்தில்  சாந்தி இருக்கும். நம்முடைய செயல் தவறாக ஆகாமல் இருக்க பரமவித்யையை அப்யாசம் செய்ய வேண்டும். பரம ஞானம் வந்தால் தவறு செய்ய மாட்டான். ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி”  என்பதன் பொருள் இதுதான்.

 

4. த்வம் ரக்ஷ மே, ப்ராணசரீர கர்ம

  ஞானேந்த்ரியாந்த:, கரணானி தேவி!

  பவந்து தர்மா, மயி வைதிகாஸ்தே;

  நிராக்ருதிர்மாSஸ்து, மித: க்ருபார்த்ரே!

      பிராண சக்தி ஒருவனை சக்தனாக்கும். பிராணன் துர்பலன் ஆனால் சரீரமும் மனசும் துர்பலன் ஆகும். வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, புட்டம் இவைகள் செயற்புலன்கள். காது, சருமம், கண், நாக்கு, மூக்கு இவைகள் அறிவுப்புலன்கள். சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் இவைகள் அந்தகரணத்தின் விருத்தி பேதங்கள். இவை எல்லாம் சேர்ந்தது இந்த சரீரம். இந்த ச்ரீரத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யார் செய்வது? நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம்மால் அது முடியாது. அம்பாள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்த ஸ்தோத்திரதின் ஆசிரியர் அதை அம்பாள் பொறுப்பில் விட்டு விடுகிறார். வேதம் செய்யக் கூடிய, செய்யக் கூடாத கர்மங்களைப் பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்லும் செய்யக்கூடிய கர்மங்களை நான் செய்ய வேண்டும். செய்யக்கூடாத கர்மங்களை நான் செய்யக்கூடாது. அப்படியான புத்தியை எனக்குத் தா என வேண்டுகிறார். எனக்கு அம்பாளிடம் பக்தியும், அம்பாளுக்கு என்னிடம் கருணையும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.

 

5. யத் ச்ரூயதே யத், கலு த்ருச்யதே ;

  ததஸ்து பத்ரம், ஸகலம் யஜத்ரே!

  த்வாம் ஸம்ஸ்துவன் அஸ்த ஸமஸ்தரோக

  ஆயு: சிவே! தேவ,ஹிதம் நயானி

      யாரைத் திருப்தி படுத்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது அம்பாள் தான். அவள் கேட்பதும் காண்பதும் நல்லதாக இருக்க வேண்டும். அந்த தேவியிடம் தனக்கு தேவஹிதமான ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். அதாவது தான் செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் வரை ( பூஜை, பாராயணம்   போன்ற கடமைகளும் ஆசைகளும்) எந்த காரணத்தாலும் அதாவது நோய் போன்றவைகளால் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுள் முடிந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறார்.

 

6. அவிக்னமாயாத்,விஹ விச்வதோ மே

  ஞானம், ப்ரஸன்னா, மம புத்திரஸ்து;

  நாவேவ ஸிந்தும், துரிதம் ஸமஸ்தம்

  த்வஸேவயைவாதி,தராமி தேவி

      காண்பவைகளும், கேட்பவைகளும் புதுப் புது அறிவைத் தரவேண்டும். எல்லாவிதத்திலிருந்தும் அறிவு வளர வேண்டும். அறிவு வளர வளர புத்திப் பிரகாஸமாகும். புத்தி தெளிந்தால் பாப வாஸனைகள் நசிக்கும். ஒரு கடலைக் கடக்க ஒரு கப்பல் வேண்டும். அதுபோல தேவி த்யானம் என்ற கப்பலின் உதவியால் துரித ஸாகரத்தைக் கடக்கலாம். அதாவது துன்பம் தரும் ஸம்சார ஸாகரத்தைக் கடக்கலாம்.

7. உர்வாருகம் பந்,தனதோ யதைவ

  ததைவ முச்யேய, கர்மபாசாத்

  த்வாம் த்ர்யம்பகாம் கீர்த்தி,மதிம் யஜேய;

  ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ

      பழைய நாட்களில் பூஷணிக்காய், பறங்கிக்காய் போன்றவைகளை ஒரு உறி போன்ற கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். குளிர் சாதனப் பெட்டி இல்லாத காலம் அது. நாட்கள் பல ஆனாலும் பூசனிக்காய் ஒன்றும் ஆகாது. ஆனால் அதைக் கட்டி இருக்கும் கயிறு நைந்து போனால் பூசணிக்காய் கீழே விழுந்து உடைந்துவிடும். அதைப் போல நம்முடைய கர்மம் தீரும் வரை நாமும் பூசணிக்காய் போலத்தான். கர்மம் முடிந்ததும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று விடுவோம். கர்மம் என்ற கயிற்றிலிருந்துத் தனக்கு விமோசனம் வேண்டும் என்று ஆசிரியர் வேண்டிக் கொள்கிறார். அதாவது தன்னுடைய கர்மம் தீரும் வரை, என்னை இந்த உலகில் விட்டு வை என்று வேண்டிக் கொள்கிறார். ( கர்மம் முடியாவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டும்) தேவிக்கு மூன்று கண். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுசுக்தி. பூதம், வர்த்தமானம், பாவி (past, present, future). இப்படி எல்லாவற்றிலும் தேவியின் பார்வை இருக்கிறது. அவள் திருஷ்டி படாத இடமே இல்லை. என்னை நீ நேர்வழியில் நடத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.

 

8. க்ஷீணாயுஷோ ம்ருத்யுகதான் ஸ்வசக்த்யா

  தீர்க்காயுஷோ வீத,பயான் கரோஷி;

  ஸங்கச்சத: ஸம்,வதஸ் ஸர்வான்

  பரோபகாரை, கரதான் குருஷ்வ

      இறந்தவனுக்கும் உயிர் கொடுக்க தேவியால் முடியும். 36 ஆவது தசகத்தில் பிரியவிரதனின் இறந்த மகனுக்கு தேவஸேனா உயிர் கொடுத்தாள் என்பதைப் பார்த்தோம். எல்லோரையும் பரோபகாரர்களாக்க அன்னையால் முடியும். மனித வாழ்க்கையின் யாத்திரையிலும், அனைவருக்கும் ஒற்றுமை வேண்டும்.அந்த ஒற்றுமை உணர்வை அனைவருக்கும் உண்டாக்க அம்பாளால் முடியும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க தேவியை ஆசிரியர் வேண்டுகிறார்.

9. மர்த்யோ ஹ்யஹம் பாலிச,புத்திரேவ

  தர்மானபிஞ்ஞோ, ப்யபராத க்ருச்ச;

  ஹா! துர்லபம் மே, கபிஹஸ்த புஷ்ப

  ஸுமால்யவத் சீர்ண,மிதம் ந்ருஜன்ம

      ஒரு ஜீவன் மனிதனாகப் பிறப்பது அவனுடைய பாக்யம். அப்படிக் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை விவேகியானவன் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுள்ள மனிதர்களைத் தேடி, ஸ்வதர்மத்தைத் தெரிந்து கொண்டு, அதைத் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் ராக த்வேஷம் என்ற அழுக்கு அழியும், மனம் தூய்மை யாகும். தூய்மையான மனதில் தூய்மையான தேவி பக்தி வளரும். அவன் பரமபதம் அடைவான். இதையெல்லாம் அடையாத மனித ஜன்மம் வீண். அவன் பிறப்பு குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகும். தன் ஜன்மம் அப்படி ஆகிவிடக் கூடாது என ஆசிரியர் வேண்டுகிறார்.

 

10. யதா பதா வாரி, யதா கௌ: ஸ்வம்

   வத்ஸம் ததாSSதாவது மாம் மனஸ்தே;

   விச்வானி பாபானி, வினாச்ய மே யது

   பத்ரம் சிவே! தேஹி ததார்த்திஹந்த்ரி!

      ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீரை ஒரு குழாயின் மூலம் திறந்து விட்டால் தண்ணீர் சீராக வீணாகாமல் வரும்.அதைப் போல ஒரு பசுவை அவிழ்த்துவிட்டால் அது கன்றைத் தேடி வரும். இதைப் போல அம்பாளின் கருணையும் என்னை நோக்கி வரவேண்டும். நான் ஏதும் பாபம் செய்திருந்தால் அதையும் நீ போக்கி விடு .அது உன் கருணைக்குத் தடையாக இருக்கக் கூடாதுஎன்று பிரார்த்திக்கிறார்.

11. பஹூக்திபி: கிம்? விதிதஸ்த்வயாSஹம்

   புத்ர: சிசுஸ்தே, வேத்மி கிஞ்சிது;

   கச்ச பச்யானி, முகாரவிந்தம்;

   பதாம்புஜாப்யாம், ஸததம் நமஸ்தே

      அம்பாள் லோகமாதா. ஸகல ஜீவன்களுக்கும் அன்னை. இந்த ஸ்தோத்திரக்காரர் ஒரு குழந்தை. அவரால் அதிகமாகப் பேச முடியாது. அதனால் தேவியைக் கண்முன் வருமாறு அழைக்கிறார். எனக்கு ஒரு தரிசனம் தரகூடாதா? உன் முகத்தை ஒருமுறை காட்டக் கூடாதா? என்று கேட்கிறார். அதற்காக மனமுருகி தேவியின் பாதத்தில் நமஸ்கரிக்கிறார்.

நாற்பதாம் தசகம் முடிந்தது

 

 

 

 

 

தசகம் 41.

 

 இந்த தசகத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் நமஸ்காரம் செய்யலாம்.

1. தேவி! த்வதாவாஸ்ய,மிதம்; கிஞ்சிது

  வஸ்து த்வதன்யத்;, பஹுதேவ பாஸி

  தேவாஸுரா ஸ்ருக், பனராதிரூபா

  விச்வாத்மிகே! தே ஸததம் நமோஸ்து

      அம்பாள் இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். அவள் இல்லாமல் உலகில் ஒன்றுமே இல்லை. தங்கமானது, வளையல், செயின், மோதிரம் இப்படிப் பலவாக ஆகும். அதைப் போல் மண்ணும் குடம் ஆகும், சட்டி ஆகும், பொம்மை ஆகும். இதைப் போல் அம்பாளும் பல ரூபம் தரிக்கிறாள். "பஹுதேவ பாஸி". பலவாக இருக்கிறாள். இந்த உலகம் முழுவதிலும் அம்பாள் ஸ்வரூபம் உண்டு. அதனால் தான் "ஸர்வ விஸ்வாத்மிகே" என்று சொல்லப்படுகிறாள்.

 

2. ஜன்ம தே கர்ம, தேவி! லோக -

  - க்ஷேமாய ஜன்மானி, ததாஸி மாதஹ!

  கரோஷி கர்மாணி, நிஸ்ப்ருஹா த்வம்

  ஜகத்விதாத்ர்யை, ஸததம் நமஸ்தே

      இந்த ஜீவன் கர்ம வினைக்குக் கட்டுப் பட்டவன். கர்ம வினையை அனுபவிக்கும் வரை ஜீவனும் இருக்கும். பிறப்பும் இறப்பும் கர்மவினைப்படி தான் நடக்கும். ஜனன மரணம் நம் ஆசைப்படி நடக்காது. அடுத்த ஜன்மம் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை ஜீவனால் நிச்சயிக்க முடியாது. கர்ம வினைதான் தேவனாகவோ, மனிதனாகவோ, புழு, பூச்சியாகவோ ஜன்மம் எடுக்க வைக்கிறது. அனைவரும் கர்மத்திற்குக் கட்டுப் பட்டவர்கள். ஆனால் தேவி கர்மாதீதை. கர்மங்களுக்கு அப்பாற்பட்டவள். நம்முடைய சரீரம் பிராரப்த சரீரம். தேவின் சரீரம் ஸுவேட்ஷா சரீரம். அவள் இச்சைப்படியானாது. ஒருவன் நாடகத்தில் பல வேஷம் போட்டு அதன்படி நடித்தாலும், உண்மையில் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை. அம்பாளின் லீலையும் அப்படியே, கேட்கலாம், படிக்கலாம், பாடலாம். ராகத்வேஷத்திலிருந்து மனதை தூய்மை படுத்தலாம். அம்பாளின் லீலைகளால் மற்றவர்களுக்கு நன்மை. அதுதான் அன்னையின் கருணாப் பிரவாகம். அப்படிப்பட்ட அம்பாளை வணங்குகிறார்.

3. தத் த்வத்பதம், யத், த்ருவமாருருக்ஷுஹு

  புமான் வ்ரதீ நிச்,சல தேஹ சித்தஹ

  கரோதி தீவ்ராணி, தபாம்ஸி யோகீ:

  தஸ்யை நமஸ்தே ஜகதம்பிகாயை

      இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும், நேற்று தோன்றியவை, இன்று தோன்றிக் கொண்டிருப்பவை, நாளையும் தோன்றப் போகின்றவை இவை எல்லாமே அழியக்கூடியவை. ஏன் இந்த உலகம் கூட ஒரு நாள் அழியப் போகிறது. ஆனால் அழியாத ஒன்று இருக்கிறது. அதுதான் அம்பாள். அந்த தேவியின் பாதகமலத்தை அடையத் தியானம், தவம், யக்ஞம், விரதம் எல்லாம் செய்கின்றனர். பரீக்ஷித்து மஹாராஜா தக்ஷகன் என்னும் பாம்பு கடித்து துர்மரணம் அடைந்தான். துர் மரணம் அடைந்தால் அவர்களுக்கு நல்லகதி இல்லை என்பது இந்து தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவன் மகனான ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்கிறான்.அந்த யக்ஞம் முடிந்ததும் பரீக்ஷித்து தேவின் பாதாரவிந்தத்தை அடைந்தான் என்று தேவீ பாகவதம் 12 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தந்தைக்கு முக்தி கிடைக்க வேண்டுமானால் அதற்கான வழியை ஒரு புத்திரனால் மட்டும் தான் தர முடியும். அவனால் தான் பரீஷித்து முக்தி அடைந்தான்.

 

4. த்வதாஜ்ஞயா வாத்ய,நிலோSநலச்ச

  ஜ்வலத்யுதேதி, த்யுமணி: சசீ

  நிஜைர் நிஜை: கர்ம,பிரேவ ஸர்வே

  த்வாம் பூஜயந்தே: வரதே! நமஸ்தே

      காற்று சுகமாக வீசுவதற்கும், அக்னி சுடர்விட்டு எரிவதற்கும், வானம் மழை பொழிவதற்கும், சூரியனும், சந்திரனும் உதிப்பதற்கும் அம்பாள் நினைத்தால் தான் முடியும். இந்த தேவர்களே அன்னையை வணங்கி அவள் அருளால் தான் பிரகாசிக்க முடிகிறது என்றால் நம் போன்ற மனிதர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அந்த தேவியை ஆசிரியர் வணங்குகிறார்.

 

5. பக்திர் வந்த்யா:, யத ஏவ தேவி!

  ராகாதி ரோகாபி,பவாத் விமுக்தாஹா

  மர்த்யா தயஸ்த்வத் பதம் ஆப்னுவந்தி;

  தஸ்யை நமஸ்தே, புவனேஸி! மாதஹ!

      கடின விரதமும், தவமும் பக்தியும் இல்லாவிட்டால் பிரயோசனமில்லை. எவரும் தன்னை வருத்திக் கொண்டு கஷ்டப்பட வேண்டிய அவஸ்யமில்லை. தபஸ்விகளும், யோகிகளும் என்ன பயனை அடைவார்களோ அதை நாம் சுலபமாக தேவியின் கதைகளைக் கேட்பது, நாம சங்கீர்த்தனங்களில் பங்கு கொள்வது, போன்றவைகளால் அடைந்து விடலாம்.

 

6. ஸர்வாத்மனா யோ, பஜதே த்வதம்க்ரிம்

  மாயா தவாமுஷ்ய, ஸுகம் ததாதி;

  துக்கம் ஸா த்வத், விமுகஸ்ய தேவி!;

  மாயாதி நாதே! , ஸததம் நமஸ்தே

      ராகமும், த்வேஷமும் மாயையால் ஏற்படுகிறது. தேவியின் பக்தர்களுக்கு ராகமும், த்வேஷமும் இல்லை. அந்த மாயை தேவியின் தாசி. அதனால் தேவி பக்தர்களின் அருகில் கூட வரமாட்டாள். அந்த மாயாதீதையாகிய தேவியை நமஸ்கரிக்கிறார்.

 

7. துக்கம் துக்கம், ஸுகம் ஸுகம் ;

  த்வத் விஸ்ம்ருதிர் துக்க,மஸஹ்ய பாரம்

  ஸுகம் - ஸதா த்வத்,ஸ்மரணம் மஹேசி!

  லோகாய சம் தேஹி, நமோ நமஸ்தே

      மனிதர்கள் பணமும், உறவினர்களும், நண்பர்களும் தனக்கு அனுகூலமாக இருந்தால், அதைச் சுகம் என்று நினைக்கிறார்கள். இவைகள் இல்லாமல் போனால் துக்கப் படுகிறார்கள். உண்மையில் சுகமும் துக்கமும் இவைகளில் இல்லை. தேவியின் ஸ்மரணையே உண்மையான  நிலையான சுகத்தைத் தரும். அந்த தேவியை நாம் எப்பொழுது மறக்கின்றோமோ அப்பொழுது துக்கம் தானே வருகிறது. கண்ணைத் திறக்காவிட்டால் வெளிச்சத்தைக் காண முடியுமா? அனைவருக்கும் சுகமே தரும் அந்த தேவியை நமஸ்கரிக்கிறார்.

8. பதந்து தே தேவி! க்ருபாகடாக்ஷாஹா;

  ஸர்வத்ர பத்ராணி, பவந்து நித்யம்;

  ஸர்வோபி ம்ருத்யோர் அம்ருதத்வமேது:

  நச்யந்த்வ - பத்ராணி; சிவே! நமஸ்தே

      மிருத்யு என்றால் ராக, த்வேஷ ரூபமான ஸம்சாரம். ராகத்வேஷமில்லாத சாந்தியான நிலை அமிர்தத்வம். யாரிடமும் கோபமோ, விரோதமோ, மனதில் பயமோ, எதுவுமே இல்லாவிட்டால் மனம் அமைதியாக இருக்குமல்லவா? அந்த நிலைதான் அமிர்தத்வம். அபயம், சுகம், நல்லதையே நினைக்கும் மனம் இவைகள் அமிர்தத்வத்தில் லக்ஷணங்கள். கோபம் ,விரோதம், கெடுதலாக ஏதும் நடந்துமோ என்ற பயம் இவைகள் மிருத்யு லக்ஷணங்கள். அப்படி அமிர்தத்வ லக்ஷணம் கொண்ட மனப் பக்குவத்தை எனக்குத் தா என்று நமஸ்கரிக்கிறார்.

 

9. நமோ நமஸ்Sதே, கில சக்தியுக்தே!

  நமோ நமஸ்Sதே, ஜகதாம் விதாத்ரி!

  நமோ நமஸ்Sதே, கருணார்த்ர சித்தே!

  நமோ நமஸ்Sதே, ஸகலார்த்திஹந்த்ரி!

      கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல அனைத்து ஜீவன்களும் தேவியிடமிருந்து வந்தவைகளே. அனைத்து சக்தியும் அவளுள் அடக்கம். அம்பாள் ஸர்வ சக்திமயீ, கருணாமயீ. அந்த தேவிக்கு நமஸ்காரம்.

 

10. துர்கே மஹாலக்ஷ்மி, நமோ நமஸ்தே;

   பத்ரே, மஹாவாணி, நமோ நமஸ்தே!

   கல்யாணி! மாதங்கி! ரமே! பவானி!

   ஸர்வஸ்வரூபே! ஸததம் நமஸ்தே

      அம்பாள், பிரம்மம், பரமாத்மா, பலரூபம், பலநாமம், துர்க்கா, பத்ரா, கல்யாணீ, மாதங்கீ எல்லாமே ஒன்றுதான். எப்படி அழைத்தாலும் அன்னை அருள் செய்வாள். நதிகள் பலவாக ஆனாலும் அவைகள் போய்ச் சேருமிடம் ஒன்றுதான். அந்த தேவிக்கு நமஸ்காரம்.

11. யத் கிஞ்சித ஞா,தவ தேஹ! தேவீ -

   -நாராயணீயம், ரசிதம் மயேதம்

   அபத்ரநாசாய, ஸதாம் ஹிதாய

   தவ ப்ரஸாதாய, நித்யமஸ்து

      தேவியினுடைய அதாவது நாராயணீயின் மகத்துவத்தை வருணிக்கும் இந்த ஸ்தோத்திரத்திற்கு தேவீ நாராயணியம் என்று பெயர். ஒன்றுமே தெரியாமல் நான் இந்த ஸ்தோத்திரத்தை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நான் எழுதிய இந்த ஸ்லோகம் உலக க்ஷேமத்திற்கும் இதைப் படிப்பவர்களுக்கும் தேவியின் அருள் கிடைக்க உதவட்டும் என்று சொல்லி தேவியை நமஸ்காரம் செய்து இந்த தேவீ நாராயணீயத்தைப் பூர்த்தி செய்கிறார்.

   காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா

   மா ஜாது பாபம், கரவாணீ தேவி!

   மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே

   பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.

 

 

முற்றும்