PPT ADI0
26 ஷட்³விம்ʼஶத³ஶக꞉ - ஸுரத²கதா²
ராஜா புரா(ஆ)ஸித் ஸுரதா²பி⁴தா⁴ன꞉ ஸ்வாரோசிஷே சைத்ரகுலாவதம்ʼஸ꞉ .
மன்வந்தரே ஸத்யரதோ வதா³ன்ய꞉ ஸம்யக்ப்ரஜாபாலனமாத்ரநிஷ்ட²꞉ .. 26-1..
வீரோ(அ)பி தை³வாத்ஸமரே ஸ கோலாவித்⁴வம்ʼஸிபி⁴꞉ ஶத்ருப³லைர்ஜித꞉ ஸன் .
த்யக்த்வா ஸ்வராஜ்யம்ʼ வனமேத்ய ஶாந்தம்ʼ ஸுமேத⁴ஸம்ʼ ப்ராப முனிம்ʼ ஶரண்யம் .. 26-2..
தபோவனம்ʼ நிர்ப⁴யமாவஸந்த்³ருமச்சா²யாஶ்ரித꞉ ஶீதலவாதப்ருʼக்த꞉ .
ஸ ஏகதா³ ராஜ்யக்³ருʼஹாதி³சிந்தாபர்யாகுல꞉ கஞ்சித³பஶ்யதா³ர்தம் .. 26-3..
ராஜா தமூசே ஸுரதோ²(அ)ஸ்மி நாம்னா ஜிதோ(அ)ரிபி⁴ர்ப்⁴ரஷ்டவிபூ⁴திஜால꞉ .
க்³ருʼஹாதி³சிந்தாமதி²தாந்தரங்க³꞉ குதோ(அ)ஸி கஸ்த்வம்ʼ வத³ மாம்ʼ ஸமஸ்தம் .. 26-4..
ஶ்ருத்வேதி ஸ ப்ரத்யவத³த்ஸமாதி⁴நாமா(அ)ஸ்மி வைஶ்யோ ஹ்ருʼதஸர்வவித்த꞉ .
பத்னீஸுதாத்³யை꞉ ஸ்வக்³ருʼஹாந்நிரஸ்தஸ்ததா²(அ)பி ஸோத்கண்ட²மிமான் ஸ்மராமி .. 26-5..
அனேன ஸாகம்ʼ ஸுரதோ² வினீதோ முனிம்ʼ ப்ரணம்யாஹ ஸமதி⁴நாமா .
க்³ருʼஹாந்நிரஸ்தோ(அ)பி க்³ருʼஹாதி³சிந்தாம்ʼ கரோதி ஸோத்கண்ட²மயம்ʼ மஹர்ஷே .. 26-6..
ப்³ரஹ்மைவ ஸத்யம்ʼ பரமத்³விதீயம்ʼ மித்²யா ஜக³த்ஸர்வமித³ம்ʼ ச ஜானே .
ததா²(அ)பி மாம்ʼ பா³த⁴த ஏவ ராஜ்யக்³ருʼஹாதி³சிந்தா வத³ தஸ்ய ஹேதும் .. 26-7..
ஊசே தபஸ்வீ ஶ்ருʼணு பூ⁴ப மாயா ஸர்வஸ்ய ஹேது꞉ ஸகு³ணா(அ)கு³ணா ஸா .
ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச கரோதி ஸைவ ஸர்வே(அ)பி மாயாவஶகா³ ப⁴வந்தி .. 26-8..
ஜ்ஞானம்ʼ ஹரேரஸ்தி விதே⁴ஶ்ச கிந்து க்வசித்கதா³சின்மிலிதௌ மித²ஸ்தௌ .
விமோஹிதௌ கஸ்த்வமரே நு கஸ்த்வமேவம்ʼ விவாத³ம்ʼ கில சக்ரது꞉ ஸ்ம .. 26-9..
ஜ்ஞானம்ʼ த்³விதை⁴கம்ʼ த்வபரோக்ஷமன்யத்பரோக்ஷமப்யேதத³வேஹி ராஜன் .
ஆத்³யம்ʼ மஹேஶ்யா꞉ க்ருʼபயா விரக்த்யா ப⁴க்த்யா மஹத்ஸங்க³மதஶ்ச லப்⁴யம் .. 26-10..
ய ஏததா³ப்னோதி ஸ ஸர்வமுக்தோ த்³வேஷஶ்ச ராக³ஶ்ச ந தஸ்ய பூ⁴ப .
ஜ்ஞானம்ʼ த்³விதீயம்ʼ க²லு ஶாஸ்த்ரவாக்யவிசாரதோ பு³த்³தி⁴மதைவ லப்⁴யம் .. 26-11..
ஶமாதி³ஹீனோ ந ச ஶாஸ்த்ரவாக்யவிசாரமாத்ரேண விமுக்திமேதி .
தே³வ்யா꞉ கடாக்ஷைர்லப⁴தே ச பு⁴க்திம்ʼ முக்திம்ʼ ச ஸா கேவலப⁴க்திக³ம்யா .. 26-12..
ஸம்பூஜ்ய தாம்ʼ ஸாகமனேன து³ர்கா³ம்ʼ க்ருʼத்வா ப்ரஸன்னாம்ʼ ஸ்வஹிதம்ʼ லப⁴ஸ்வ .
ஶ்ருத்வா முனேர்வாக்யமுபௌ⁴ மஹேஶி த்வாம்ʼ பூஜயாமாஸதுரித்³த⁴ப⁴க்த்யா .. 26-13..
வர்ஷத்³வயாந்தே ப⁴வதீம்ʼ ஸமீக்ஷ்ய ஸ்வப்னே ஸதோஷாவபி தாவத்ருʼப்தௌ .
தி³த்³ருʼக்ஷயா ஜாக்³ரதி சாபி ப⁴க்தாவாசேரதுர்த்³வௌ கடி²னவ்ரதானி .. 26-14..
வர்ஷத்ரயாந்தே ஸுமுகீ²ம்ʼ ப்ரஸன்னாம்ʼ த்வாம்ʼ வீக்ஷ்ய தௌ துஷ்டுவது꞉ ப்ரஹ்ருʼஷ்டௌ .
தை³வாத்ஸமாதி⁴ஸ்த்வத³னுக்³ரஹேண லப்³த்⁴வா பரம்ʼ ஜ்ஞானமவாப முக்திம் .. 26-15..
போ⁴கா³விரக்த꞉ ஸுரத²ஸ்து ஶீக்⁴ரம்ʼ நிஷ்கண்டகம்ʼ ராஜ்யமவாப பூ⁴ய꞉ .
மன்வந்தரே பூ⁴பதிரஷ்டமே ஸ ஸாவர்ணிநாமா ச மனுர்ப³பூ⁴வ .. 26-16..
த்வம்ʼ பு⁴க்திகாமாய த³தா³ஸி போ⁴க³ம்ʼ முமுக்ஷவே ஸம்ʼஸ்ருʼதிமோசனம்ʼ ச .
கிஞ்சின்ன ப்ருʼச்சா²மி பரம்ʼ விமூடோ⁴ நமாமி தே பாத³ஸரோஜயுக்³மம் .. 26-17..
தசகம் 26
ஸுரதகதை
1. ராஜா புராஸீத், ஸுரதாபிதானஹ
ஸ்வாரோசிஷே சைத்ர,குலாவதம்ஸஹ
மன்வந்தரே ஸத்ய,ரதோ வதான்யஹ
ஸம்யக்ப்ரஜாபாலன மாத்ரநிஷ்டஹ
ஒரு குறிப்பிட்ட காலத்தின் அளவு, மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. அதுபோல 14 மன்வந்திரங்கள் உண்டு. ப்ரம்மாவின் ஒரு பகல் கல்பம் எனப்படும். 1000 சதுர் யுகமும் 14 மன்வந்திரமும் சமமான கால அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு மனு உண்டு. அந்த மனுவின் பெயரால் அந்த மன்வந்திரம் அழைக்கப்படும். முதல் மனு ஸ்வாயம்புவன். அந்த மன்வந்திரம் ஸ்வாயம்புவ மன்வந்திரம் எனப்படும். இரண்டாவது மனு ஸ்வாரோசிஷன். அந்த மன்வந்திரம் ஸ்வாரோசிஷ மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது மன்வந்திரத்தில் நடந்த ஒருகதை இந்த தசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. சைத்ர வம்சத்தில் ஜனங்களை நன்கு காப்பவனும், விரோதிகள் இல்லாதவனும், தனுர்வேதத்தை அறிந்தவனும், பிராமணர்களை பூஜிப்பவனும், தான தர்மங்கள் செய்பவனும், ஸத்கர்மங்களில் ப்ரீதி உடையவனும் ஆகிய ஸுரதன் என்னும் ஒரு நல்ல ராஜா இருந்தான்.
2. வீரோSபி தைவாத், ஸமரே ஸ கோலா
வித்வம்ஸிபி: சத்ருபலைர் ஜித: ஸன்
த்யக்த்வா ஸ்வராஜ்யம், வனமேத்ய சாந்தம்
ஸுமேதஸம் ப்ராப முனிம் சரண்யம்
கோலங்கள் என்றால் பன்றிகள். இதை அடித்துச் சாப்பிடுபவர்கள் கோலாவித்வம்ஸிகள் எனப்படுவர். இவர்கள் தங்களிடம் பலம் இருக்கிறது என்று நினைத்து, மதத்தினால், ஸுரதன் ஆளும் ராஜ்யத்தைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டனர். அதனால் ஸுரதனின் நகரை அடைந்து, அவனுடன் யுத்தம் செய்தனர். யுத்தத்தில் ஸுரதன் தோல்வி அடைந்தான். ராஜா ஸுரதன் மிலேஸ்ஸியர்களை விட பலத்தில் குறைந்தவன் அல்ல. ஆனாலும் தோல்வி அடைந்தது தெய்வத்தின் செயலே ஆகும். ஸுரதன் மிகுந்த வருத்தத்துடன் காட்டிற்குச் சென்று அங்கு சுமேதஸ் என்னும் ஒரு ரிஷியைச் சரண் அடைந்தான்.
3. தபோவனம் நிர்பயமாவஸன் த்ரு-
-ச்சாயாச்ரித: சீதளவாதப்ருத்தஹ
ஸ ஏகதா ராஜ்ய,க்ருஹாதிசிந்தா
பர்யாகுல: கம்,சிதபச்யதார்த்தம்
அந்த ஆஸ்ரமத்தில் முனிவரின் சீடர்கள் வேதாத்யயனம் செய்யும் சப்தம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான். பயமும் கவலையும் இல்லாமல் இருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவன் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு இருந்தான். குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் அவன் மனமோ தன்னுடைய ராஜ்யம், மனைவி, மக்கள், உறவினர்கள், தன்னுடைய செல்வம் இவைகளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவைகளிடம் அவனுக்கு அத்துணை பற்று. அவன் மனம் இவைகளின் நிலையை நினைத்துப் பதறியது. அப்பொழுது அங்கு ஒருவன் வந்தான். அவனும் துக்கத்தில் இருந்தான்.
4. ராஜா தமூசே ஸுரதோஸ்மி நாம்நா
ஜிதோSரிபிர் ப்ரஷ்ட,விபூதிஜாலஹ
க்ருஹாதி சிந்தா,மதிதாந்த ரங்கஹ
குதோSஸி, கஸ்த்வம், வத மாம் ஸமஸ்தம்
வந்தவன் துக்கத்தில் இருக்கிறான் என்பதைச் ஸுரதன் புரிந்து கொண்டான். அவனிடம் சென்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எல்லா விபரமும் கேட்டான்.
5. ச்ருத்வேதி ஸ ப்ரத்யவதத் – “ஸமாதி
நாமாஸ்மி வைச்யோ, ஹ்ருதஸர்வ வித்தஹ
பத்னீஸுதாத்யை:, ஸ்வ க்ருஹான்னிரஸ்த
ஸ்ததாSபி ஸோத்கண்ட மிமான் ஸ்மராமி”
வந்தவன் ஒரு வைசியன். அவன் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவன். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்தான். மனைவியும், மகன்களும் செல்வத்தை அபஹரித்துக் கொண்டு அவனை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். அவர்கள் தன்னை விரட்டினாலும் அவர் மனம் அவர்களையே நினைத்துக் கவலைப் பட்டது. ஸுரதனும் சமாதியும் ஒரே நினைவுடன் கூடிய மன அவஸ்தையில் தான் இருந்தார்கள்.
6. அநேந ஸாகம், ஸுரதோ விநீதோ
முனிம் ப்ரணம் யாSS ஹ, ஸமாதிநாமா
க்ருஹாந்நிரஸ்தோSபி, க்ருஹாதி சிந்தாம்
கரோதி ஸோத் கண்ட,மயம் மஹர்ஷே!
ஸுரதன் சமாதியை சுமேதஸ் முனிவரிடம் அழைத்துச் சென்றான். அவருக்கு அவனை அறிமுகப் படுத்தினான். “இவர் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவர். வியாபாரத்தில் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவன் மனைவியும் மக்களும் இவரை விரட்டி விட்டனர். ஆனாலும் இவர் அவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டு அவர்களை நினைத்துக் கவலைப்படுகிறார் என்று சொன்னான். முனிவரை மஹர்ஷே! என்று அழைக்கிறான். மஹரிஷி என்றால் முன்னும் பின்னும் அதாவது நடந்தது நடக்கப்போவது எல்லாம் அறிந்தவர்கள் என்று பொருள் .
7. ப்ரம்மைவ ஸத்யம், பரமத்விதீயம்
மித்யா ஜகத் ஸர்வ,மிதம் ச ஜானே
ததாSபி மாம் பாத,த ஏவ ராஜ்ய
க்ருஹாதிசிந்தா, வத தஸ்ய ஹேதும்
மஹரிஷியே! சாமதியின் நிலையினை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் என் நிலையும் அதுதான். இந்த உலகம் கனவைப் போல் பொய் என்று தெரியும். இந்த ராஜ்யம், வீடு அனைத்தும் மித்தை என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த ஞானம் சமாதிக்கு இல்லை. அவருக்கு மோஹம் இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த நானும் மோஹம் அடைகின்றேனே? இதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் குழந்தைகள் எல்லாம் மரணம் அடைய, மனம் மிகவும் வருந்தித் தானும் தற்கொலைச் செய்து கொள்ள தண்ணீரில் குதிக்க முயற்சிக்கிறான். அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? ஆத்மீகத்தில் உயர்ந்தவனா? அல்லது தாழ்ந்தவனா? உயர்ந்தவன் என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தற்கொலை என்ற சிந்தனையே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒருவர் இருந்தார்i. ஆனால் அவர் யார் தெரியுமா? அவர் தான் மஹானான வஸிஷ்ட முனிவர். அவருக்கு ஞானம் இருந்தாலும் பற்று போகவில்லை. அவருடைய அடுத்த ஜன்மத்தில் ஸுரதனாகப் பிறந்தார். அதனால் தான் எல்லாம் தெரிந்த நானும் ஏன் இப்படி என்று கேட்க்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்து ஆனந்தம் அனுபவித்த பின் தான் முக்தி என்று தேவி அவருக்கு பின்னால் அனுக்ரஹம் செய்யப் போகிறாள். ஏன் என்றால் ஆசை மிச்சம் இருந்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே நியதி.
8. ஊசே தபஸ்வீ – ச்ருணு; பூப! மாயா
ஸர்வஸ்ய ஹேது; ஸகுணா குணா ஸா;
பந்தம் ச மோக்ஷம், ச கரோதி ஸைவ
ஸர்வேSபி மாயா,வசகா: பவந்தி
எல்லா உயிர்களின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணம் மாயைதான். அந்த மாயா அகுணை. அம்பாள் நிர்குணை. அம்பாளின் காளி, லக்ஷ்மி அவதாரங்கள் ஸகுணை. ஒருவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் ஏற்படும் ஆசைதான் பந்தம். இந்த மமதையையும் (மோஹம்), பந்தத்தையும் ஏற்படுத்துவது யார்? தேவிதான். இதிலிருந்து விடுதலை தருவதான அந்த மோக்ஷத்தைத் தருவது யார்? அதுவும் அந்த தேவிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று உலகத்திலும் இந்த மாயையின் வசப்படாதவர்கள் யாரும் இல்லை.
9. ஞானம் ஹரேரஸ்தி, விதேச்ச, கிந்து
க்வசித் கதாசின், மிளிதௌ மிதஸ்தௌ
விமோஹிதௌ கஸ்த்வமரே! நு கஸ்த்வம்
ஏவம் விவாதம், கில சக்ரது: ஸ்ம
ப்ரம்மம் மட்டுமே ஸத்யம். இந்த உலகம் மாயை. இது ஸுரதனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் எனக்கு ஏன் மமதை வந்தது என்று கேட்கிறான். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஞானத்தால் மட்டும் மாயா மோஹத்திலிருந்து விடுபட முடியாது. ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ப்ரம்மமே ஸத்யம், மற்றதெல்லாம் மாயை என்கிற ஞானம் உண்டு. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்த பொழுது, தங்களில் யார் பெரியவர்? என்ற சர்ச்சை ஏற்பட்டது. ப்ரம்மா சொன்னார் “நானே இந்த உலகைப் படைக்கும் கர்த்தா. அதனால் நானே பெரியவன்” என்றார். உனக்கு ஆபத்து வரும் காலங்களில் உன்னைக் காப்பாற்றியது யார்? நான் தானே! அதனால் நானே பெரியவன் என்றார் விஷ்ணு. அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியது. உடனே ஒரு அசரீரியும் கேட்டது. “இந்த சிவலிங்கத்தின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கின்றாரோ அவரே பெரியவர்” என்றது. உடனே விஷ்ணு அடியைக்காண பாதளம் நோக்கியும், ப்ரம்மா முடியைக் காண ஆகாயம் நோக்கியும் சென்றனர். விஷ்ணு தன்னால் முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.
பிரம்மா சிவனின் தலையிலிருந்து விழுகின்ற ஒரு தாழம் பூவைப் பார்த்து, அதனுடன் பேசி, அதைத் தான் சிவனின் முடியைக் கண்டதற்கானச் சாட்சியாகக் கொண்டு வந்தார். விஷ்ணு அந்த தாழம்பூவிடம் கேட்க, அதுவும் ப்ரம்மா தன்னைச் சிவனின் முடியிலிருந்தே கொண்டு வந்தார் என்று பொய் சாட்சி சொல்லியது. இதில் நம்பிக்கை இன்றி விஷ்ணு சிவனைத் த்யானித்தார். சிவனும் அங்கு வந்தார். ஏ தாழம்பூவே! நீ பொய் சொன்னதால் இனி என் பூஜைக்கு அருகதை ஆகமாட்டாய் என்று சிவன் சொன்னார். ப்ரம்மா வெட்கித் தலை குனிந்தார். சிவன் தாழம்பூவை நிராகரிப்பதற்கும், நம்மில் யார் பெரியவர் என்று ஞானம் மிகுந்த ப்ரம்மாவும் விஷ்ணுவும் விவாதம் செய்வற்கும் காரணம் என்ன? மாயைதான். எந்த நேரத்தில் இந்த மாயையில் அகப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது. இதில் அகப்படாமல் இருக்க ஒரேவழி தான் உண்டு. அந்த ஞானஸ்வரூபிணியான பராசக்தியை வணங்க வேண்டும். இந்த மோஹத்திலிருந்து காப்பாற்ற அவளால் மட்டுமே முடியும்.
10. ஞானம் த்விதைகம், த்வப்ரோக்ஷ, மன்யது
பரோக்ஷமப்யேத தவேஹி ராஜன்!
ஆத்யம் மஹேச்யா: க்ருபயா விரக்த்யா
பக்த்யா மஹத் ஸங்கமதச்ச லப்யம்
தனக்கு ஏன் இப்படி வீடு, மனைவி, ராஜ்யம் என்ற மோஹம் வந்தது என்ற ஸுரதனின் கேள்விக்குப் பதில் சொல்கிறார். இந்த புத்தி மோஹம் என்பது எந்த ஞானிக்கும் வரலாம். இதற்காகத்தான் ப்ரம்மா விஷ்ணுவின் கதையைச் சொன்னார். அதன் பின் ஞானத்தின் ரூபத்தையும் விளக்குகிறார். ஞானம் என்பது இரண்டு விதம். அபரோக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானம் ஒருவனை பந்த விமுக்தன் ஆக்கும். அது தேவி பக்தியாலும் மஹாத்மாக்களின் அனுக்ரஹாத்தாலும் மட்டுமே கிடைக்கும். போக விரக்தி வரவேண்டும். இது தேவியின் க்ருபை இருந்தால் தான் இது முடியும்.
11. ய ஏததாப்னோதி, ஸ ஸர்வமுக்தோ;
த்வேஷச்ச ராகச்ச, ந தஸ்ய பூப!;
ஞானம் த்விதீயம் கலு சாஸ்த்ரவாக்ய-
விசாரதோ புத்திமதைவ லப்யம்
அபரோக்ஷ ஞானம் உள்ளவனுக்கு ராகம், த்வேஷம் இல்லை. ப்ரம்மமே ஸத்யமானது. இந்த உலகம் மாயை. காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே ப்ரம்மம் தான் என்பதை உணர்வான். எல்லாம் ஒன்றுதான் என்றால் ராகம் ஏது? த்வேஷம் ஏது? ப்ரம்மத்தைத் தவிர வேறு பலதும் உண்டு என்றால் தான் ராக த்வேஷத்திற்கு இடம் உண்டு. ஒன்றிடமும் அவனுக்குப் பற்று இல்லை. அவன் பந்த விமுக்தன். ப்ரம்மம் மட்டும் ஸத்யம். இந்த உலகம் மாயை என்று அறிய, வேதாந்த சாஸ்திரங்கள் படித்தால் போதும். புத்தி உள்ளவனால் மட்டுமே இதைப் படிக்க முடியும். ஆனாலும் படித்தது எல்லாம் அனுபவத்தில் வரவேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இது பரோக்ஷ ஞானம். சாஸ்திரங்கள் படித்தவன் பந்த விமுக்தன் என்று சொல்ல முடியாது. அவன் மனதில் ராகமும், த்வேஷமும் விலக வேண்டும். ஸுரதன் சாஸ்திரம் தெரிந்தவன் ஆனாலும் தான் ராஜா என்ற அபிமானம் அவனிடம் இன்னும் இருக்கிறது. பந்தம் விலகாததற்கு இதுதான் காரணம் என்று பதில் சொன்னார்.
12. சமாதிஹீணோ ந ச சாஸ்த்ரவாக்ய
விசாரமாத்ரேண, விமுக்திமேதி
தேவ்யா: கடாக்ஷைர், லபதே ச புத்திம்
முக்திம் ச ஸா கே,வல பக்திகம்யா
மஹாவாக்யங்களைப் படிப்பதால் சாஸ்திரங்களையும் சித்தாந்தங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது பரோட்க்ஷ ஞானம். சாதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அபரோக்ஷ ஞானம் வரும். அப்பொழுது தான் பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கும். ஸமம், தமம், திதிச்ச, உபரதி, ச்ரத்தா, சமாதானம் இவைகள் ஞான சாதனைகளின் வழிகள். விஷய போக சக்திகள் தோஷம் தான் தரும். மனதை போக விஷயங்களிலிருந்து விலக்கி கட்டுப் படுத்த வேண்டும். அதுதான் ஸமம். இந்திரியங்களை அதனதன் போக்கில் அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அது தமம். எந்த துக்கத்தையும் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். இது திதிக்க்ஷா. மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்த்தாலும் நினைத்தாலும் பகவான் சிந்தனையுடன் இருக்கப் பழக வேண்டும். இது உபரதி. சாஸ்த்திரத்திலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும். இது சிரத்தை. புத்தி ப்ரம்மத்திலேயே லயிப்பது. இது ஸமாதானம். இவைகளை நிரந்தரமாக அனுஷ்டித்தால் உள்மனதிற்குச் சக்தி கிடைக்கும். இப்படியாக பரோக்க்ஷ ஞானத்தை அபரோக்க்ஷ ஞானமாக மாற்றிக் கொள்ளலாம். ஸுரதன் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொன்னாலும் அவன் அபரோக்க்ஷ ஞானம் உடையவனாக மாட்டான்.
13. ஸம்பூஜ்ய தாம் ஸாக,மனேன துர்க்காம்
க்ருத்வா ப்ரஸன்னாம், ஸ்வஹிதம் லபஸ்வ
ச்ருத்வா முனேர் வாக்ய, முபௌ மஹேசி!
த்வாம் பூஜயாமா, ஸதுரித்தபக்த்யா
மஹரிஷி சொன்ன விபரங்களை ஸுரதனும், சமாதியும் கேட்டார்கள். மாயா பகவதியைப் பூஜித்து, அன்னையின் அனுக்ரஹம் பெற்றுவிட்டால், மாயை அருகில் வரமுடியாது. புத்தியும், முக்தியும் கிடைக்கும் என்று மஹரிஷி சொன்னதைக் கேட்டு, இருவரும் தேவி பூஜையைத் தொடங்கினார்கள்.
14. வர்ஷத்வயாந்தே, பவதீம் ஸ மீஷ்ய
ஸ்வப்னே ஸதோஷா,வபி தாவத்ருப்தௌ
தித்ருக்ஷ ய ஜாக்ரதி சாபி பக்தா-
வாசேரதுர் த்வௌ, கடின வ்ரதானி
பக்தியுடன் தேவியை இரண்டு வருட காலம் பூஜை செய்தார்கள். ஒருநாள் கனவில் தேவியைக் கண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் பூரண திருப்தி வராமல் தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் தேவியைக் காண வேண்டும் என்று நினைத்துக், கடுமையான விரதம் இருந்தார்கள். ஒரு வருடம் ஓடியது. ஆனாலும் தேவி காட்சி தரவில்லை. தேவியைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் மரணம் அடைய வேண்டும் என்று தீர்மானித்துத், தங்கள் உடலிலிருந்துச் சதையை வெட்டி மாமிசம், இரத்தம் இவைகளால் ஹோமம் செய்யத் தொடங்கினார்கள்.
15. வர்ஷத்ரயாந்தே, ஸுமுகீம் ப்ரஸன்னாம்
த்வாம் வீக்ஷ்ய தௌ துஷ்டுவது: ப்ரஹ் ருஷ்டௌ
தைவாத் ஸமாதிஸ் த்வதனு க்ரஹே ண
லப்த்வா பரம் ஞான, மவாப முக்தீம்
16. போகா விரக்த: ஸு ரதஸ்து சீக்ரம்
நிஷ் கண் டகம் ராஜ்யமவாப பூயஹ
மந்வந்தரே பூபதிரஷ்டமே ஸ
ஸாவர்ணி நாமா, ச மனுர் பபூவ
அவர்கள் மாமிசம் இரத்தம் இவைகளால் ஹோமம் செய்ய ஆரம்பித்ததும், தேவி அவர்கள் முன் காட்சி தந்தாள். இருவரும் தேவியை நமஸ்கரித்தனர். “வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றாள்” ஸுரதன் “சத்ரு பலத்தை அழித்து, என் அரசு மீண்டும் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டான். தேவி ” உன் சத்ருவை நீ வெற்றி கொள்வாய். அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து, உடல் வீழ்ந்த பின், சூர்யனிடம் பிறவி அடைந்து மனுவாக விளங்குவாய்” என்று வரம் தந்தாள். ஆனால் சமாதி ” தளைகளைப் போக்கக் கூடியதும் மோக்க்ஷத்தைத் தரக் கூடியதுமான ஞானம் வேண்டும்” என்று கேட்டான். அன்னை அவரவர் விருப்பப்படி வரம் தந்தாள். இருவருக்கும் தேவி ஒன்றாகத்தான் காட்சி தந்தாள். சமாதி விமுக்தன். ஸுரதன் போகா ஸக்தன். மந்திரிகளுடன் சென்று ஸுரதன் ராஜ்ய சுகம் அனுபவித்தான். இரண்டாவது மன்வந்திரத்தில் பிறந்த ஸுரதன் தேவி த்யானத்தால், அடுத்த பிறவியில் 8 ஆவது மன்வந்திரத்தில் ஸாவர்ணி என்னும் பெயருடன் பிறந்தான்.
17. த்வம் புக்திகாமாய, ததாஸி போகம்
மு முக்ஷவே ஸம்,ஸ்ருதிமோசனம் ச
கிஞ்சின்ன ப்ருச்சாமி, பரம் விமூடஹ
நமாமி தே பாத,ஸரோஜயுக்மம்
தேவி சக்திமயமானவள் கேட்டதைத் தரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவள். ஸுரதனுக்கும், சமாதிக்கும் அவரவர் விருப்பம் என்னவோ அதைத் தந்தாள். தேவியிடம் நான் என்ன கேட்பது? பக்தியா?புக்தியா? முக்தியா? நான் போக விமுக்தன் அல்ல. அதனால் முக்தி கேட்க முடியாது. மூடனான நான் அன்னையை வணங்க மட்டுமே முடியும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார்.
இருபத்தி ஆறாம் தசகம் முடிந்தது