ENQUIRY geetanjaliglobalgurukulam

Wednesday, 23 August 2023

35 பஞ்சத்ரிம்ʼஶத³ஶக꞉ - அனுக்³ரஹவைசித்ர்யம் rec

 

35 பஞ்சத்ரிம்ʼஶத³ஶக꞉ - அனுக்³ரஹவைசித்ர்யம்

பா⁴க்³யோத³யே த்ரீணி ப⁴வந்தி நூனம்ʼ மனுஷ்யதா
ஸஜ்ஜனஸங்க³மஶ்ச . த்வதீ³யமாஹாத்ம்யகதா²ஶ்ருதிஶ்ச யத꞉ புமாம்ʼஸ்த்வத்பத³ப⁴க்திமேதி .. 35-1.. தத꞉ ப்ரஸீத³ஸ்யகி²லார்த²காமான் ப⁴க்தஸ்ய யச்ச²ஸ்யப⁴யம்ʼ ச மாத꞉ . க்ஷமாம்ʼ க்ருʼதாக³ஸ்ஸு கரோஷி சார்யோரன்யோன்யவைரம்ʼ ஶமயஸ்யனீஹா .. 35-2.. து³ஷ்கீர்திபீ⁴த்யா ப்ருʼத²யா குமார்யா த்யக்தம்ʼ தடின்யாம்ʼ ஸுதமர்கலப்³த⁴ம் . ஸம்ப்ரார்தி²தா த்வம்ʼ பரிபாலயந்தீ ப்ராத³ர்ஶய꞉ ஸ்வம்ʼ கருணாப்ரவாஹம் .. 35-3.. ஸுதான் குருக்ஷேத்ரரணே ஹதான் ஸ்வான் தி³த்³ருʼக்ஷவே மாத்ருʼக³ணாய க்ருʼஷ்ண꞉ . ஸம்ப்ரார்தி²தஸ்த்வத்கருணாபி⁴ஷிக்த꞉ ப்ரத³ர்ஶ்ய ஸர்வான் ஸமதோஷயச்ச .. 35-4.. வணிக் ஸுஶீல꞉ க²லு நஷ்டவித்தோ வ்ரதம்ʼ சரன் ப்ராங்னவராத்ரமார்ய꞉ . த்வாம்ʼ தே³வி ஸம்பூஜ்ய த³ரித்³ரபா⁴வான்முக்த꞉ க்ரமாத்³வித்தஸம்ருʼத்³தி⁴மாப .. 35-5.. தே³வத்³ருஹோ தே³வி ரணே த்வயைவ தை³த்யா ஹதா க³ர்ஹிதத⁴ர்மஶாஸ்த்ரா꞉ . ப்ரஹ்லாத³முக்²யானஸுரான் ஸ்வப⁴க்தான் தே³வாம்ʼஶ்ச ஸந்த்யக்தரணானகார்ஷீ꞉ .. 35-6.. புரந்த³ரே பாபதிரோஹிதே தத்ஸ்தா²னாதி⁴ரூடா⁴ன்னஹுஷாத்ஸ்மரார்தாத் . பீ⁴தா ஶசீ த்வாம்ʼ பரிபூஜ்ய த்³ருʼஷ்ட்வா பதிம்ʼ க்ரமாத்³பீ⁴திவிமுக்திமாப .. 35-7.. ஶப்தோ வஸிஷ்டே²ன நிமிர்விதே³ஹோ பூ⁴த்வா(அ)பி தே³வி த்வத³னுக்³ரஹேண . ஜ்ஞானம்ʼ பரம்ʼ ப்ராப நிமே꞉ ப்ரயோகா³ன்னிமேஷிணோ ஜீவக³ணா ப⁴வந்தி .. 35-8.. ஹா பா⁴ர்க³வா லோப⁴விகோபசித்தை꞉ ப்ரபீடி³தா ஹைஹயவம்ʼஶஜாதை꞉ . ஹிமாத்³ரிமாப்தா ப⁴வதீம்ʼ ப்ரபூஜ்ய ப்ரஸாத்³ய பீ⁴தே꞉ க²லு முக்திமாபு꞉ .. 35-9.. த³ஸ்ரௌ யுவானாம்ʼ ச்யவனம்ʼ பதிம்ʼ ச ஸமானரூபானபி⁴த்³ருʼஶ்ய முக்³தா⁴ . ஸதீ ஸுகன்யா தவ ஸம்ʼஸ்ம்ருʼதாயா ப⁴க்த்யா ப்ரஸாதா³த்ஸ்வபதிம்ʼ வ்யாஜானாத் .. 35-10.. ஸத்யவ்ரதோ விப்ரவதூ⁴ம்ʼ ப்ரஸஹ்ய ஹர்தா நிரஸ்தோ ஜனகேன ராஜ்யாத் . வஸிஷ்ட²ஶப்தோ(அ)பி தவ ப்ரஸாதா³த்³ராஜ்யே(அ)பி⁴ஷிக்தோ(அ)த² தி³வம்ʼ க³தஶ்ச .. 35-11.. ஹா ஹா ஹரிஶ்சந்த்³ரந்ருʼபோ விபத்ஸு மக்³ன꞉ ஶதாக்ஷீம்ʼ பரதே³வதாம்ʼ த்வாம் . ஸம்ʼஸ்ம்ருʼத்ய ஸத்³ய꞉ ஸ்வவிபந்நிவ்ருʼத்த꞉ காருண்யதஸ்தே ஸுரலோகமாப .. 35-12.. அக³ஸ்த்யபூஜாம்ʼ பரிக்³ருʼஹ்ய தே³வி விபா⁴ஸி விந்த்⁴யாத்³ரிநிவாஸினீ த்வம் . த்³ரக்ஷ்யே கதா³ த்வாம்ʼ மம தே³ஹி ப⁴க்திம்ʼ காருண்யமூர்த்தே ஸததம்ʼ நமஸ்தே .. 35-13..

3

தசகம் 35

அனுக்ரஹவைசித்ர்யம்

1. பாக்யோதயே த்ரீணி, பவந்தி நூநம்
மனுஷ்யதா, ஸஜ்,ஜன ஸங்கமச்ச,
த்வதீயமாஹாத்ம்ய, கதாஸ்ருதிச்ச;
யத: புமாம்ஸ்வத்,பதபக்திமேதி

ஈயாகவும், பூனையாகவும், நாயாகவும், நரியாகவும் ஜனனம் எடுத்துப் பின் பாக்யம் கிடைக்கும் பொழுது மனிதனாகப் பிறக்கிறான். வெற்றிகளுடன் இணையும் பொழுதுதான் இந்த மனித ஜன்மம் சிறப்படைகிறது. பக்தர்களுடன் சேரும் பொழுது நிறைய தேவியின் கதைகளும், சிறப்பும், பெருமையும் கேட்பதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்களுடன் நிரந்தர தொடர்பு இருந்தால் அது தேவியிடம் பக்தியை வளர்க்கும். தேவி பக்தி ஆபத்திலும், சம்பத்திலும், துக்கத்திலும், சுகத்திலும் ஒரே மனநிலையில் இருக்கச் செய்யும்.

2. தத: ப்ரஸீதஸ்ய, அகிலார்த்த காமானு
பக்தஸ்ய யச்சஸ்ய, பயம் ச மாதஹ!
க்ஷமாம் க்ருதாங்கஸ்ஸு, கரோஷி சார்யோஹோ
அன்யோன்ய வைரம், சமயஸ்ய நீஹா

தன் பக்தர்களுக்குத் தேவையானதையும், விரும்புவனவற்றையும் தரக் கூடியவள் அந்த தயா மூர்த்தி. பக்தனின் பயத்தைப் போக்குபவளும் அவளே. இரு தேவி பக்தர்கள் ஒன்று கூடினால் அவர்களிடையே கருத்து வேற்றுமை வராமல் அவர்களை ஒன்று படுத்துவாள். இதனால் அன்னைக்கு என்ன லாபம்? அவள் அன்னை அல்லாவா? அதனால் எற்பட்ட கருணைதான் காரணம்.

3. துஷ்கீர்த்தி பீத்யா, ப்ருதயா குமார்யா
த்யக்தம் தடின்யாம், ஸுத மர்க்கலப்தம்
ஸம்ப்ரார்த்திதா த்வம், பரிபாலயந்தீ
ப்ராதர்சய: ஸ்வம், கருணா, ப்ரவாஹம்

து³ஷ்கீர்திபீ⁴த்யா ப்ருʼத²யா குமார்யா த்யக்தம்ʼ தடின்யாம்ʼ ஸுதமர்கலப்³த⁴ம் . 

ஸம்ப்ரார்தி²தா த்வம்ʼ பரிபாலயந்தீ ப்ராத³ர்ஶய꞉ ஸ்வம்ʼ கருணாப்ரவாஹம் .. 35-3.. 

சூரசேனனின் மகளான குந்திதேவி, பூஜைக்கு உரிய பணிவிடைகளைச் செய்வதற்காக, குந்திபோஜன் என்னுன் அரசனிடம் சிலகாலம் வளர்ந்து வந்தாள். சாதுர்மாஸ்ய விரத பூஜை பூர்த்தி செய்வதற்காக அங்கு வந்த துர்வாஸருக்கு பணிவிடைச் செய்ய குந்தியை அனுப்பினார். சிறிதும் தவறாமல் குறிப்புணர்ந்து பணிவிடை செய்யும் குந்திக்கு மனம் மகிழ்ந்து ஒரு மந்திரத்தை துர்வாஸர் உபதேசம் செய்தார். “இந்த மந்திரத்தை நீ எப்பொழுது உச்சரிக்கின்றாயோ அப்பொழுது அதற்குரிய தேவதைகள் உன் கண் முன் தோன்றுவார்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன் பின் குந்தி மந்திரத்தின் மகிமையைத் தெரிந்து கொள்ள ஒரு மந்திரத்தை உச்சரித்தாள். அவள் கண் முன் சூர்ய மூர்த்தி தோன்ற அவள் கர்பவதி ஆனாள். கவச குண்டலத்தோடு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அதை ஒரு பெட்டியில் வைத்து “மகனே! ஸர்வாபரண சம்பன்னையாயும், பகவதியாயும், விஸ்வேஸ்வரியாயும் இருக்கும் அம்பிகை உனக்குப் பசிவராமல் பாலூட்டி வளர்க்கட்டும். அந்த ஜகன்மாதாவே உனக்குத் துணை” என்று குழந்தையை ஆற்றில் விட்டாள். அந்த தேவி குழந்தையைக் காப்பாற்றினாள். பக்தி உள்ளோருக்கு அன்னை அபயம் தருவாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

4. ஸுதான் குருக்ஷேத்ர,ரணே ஹதான் ஸ்வான்
தித்ருக்ஷவே மாத்ருகணாய க்ருஷ்ணஹ
ஸம்ப்ரார்த்திதஸ்வத், கருணாபிஷிக்தஹ
ப்ரதர்ச்ய ஸர்வான், ஸமதோ ஷயச்ச

ஸுதான் குருக்ஷேத்ரரணே ஹதான் ஸ்வான் தி³த்³ருʼக்ஷவே மாத்ருʼக³ணாய க்ருʼஷ்ண꞉ . 

ஸம்ப்ரார்தி²தஸ்த்வத்கருணாபி⁴ஷிக்த꞉ ப்ரத³ர்ஶ்ய ஸர்வான் ஸமதோஷயச்ச .. 35-4.. 

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்ததும் தருமபுத்திரர் 36 வருஷங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். துக்கத்தால் வருந்தும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் தருமர் தானே எல்லா பணிவிடைகளையும் செய்து கவனித்துக் கொண்டார். ஒரு நாள் திருதராஷ்ட்ரர் தான் வனவாசம் போக விரும்புவதாகச் சொல்ல, தருமர் திருதராஷ்ட்ரர், காந்தாரி, குந்தி, விதுரர் இவர்களை ஆரண்யம் கொண்டுச் சேர்த்தார். அங்கு அவர்கள் சதயூபர் ஆஸ்ரமத்தில் 6 வருடம் காலம் கழித்தார்கள். தருமர் ஒரு நாள் தன் சகோதரர்களுடனும், திரௌபதி, சுபத்திரை, உத்தரை மற்றும் நகரத்தாருடன், சதயூபர் ஆஸ்ரமம் சென்று அங்கு அனைவரையும் கண்டு மகிழ்ந்தார். விதுரர் மட்டும் தனியே ஓர் இடத்தில் தியானம் செய்வதை அறிந்து அங்கு சென்றார். ஆனால் விதுரருக்கு எந்த ஸ்மரணையும் இல்லை. இவர்களை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் விதுரர் முகத்திலிருந்து ஒரு ஒளி தருமரின் முகத்தில் ப்ரவேசித்தது. விதுரர் வாழ்வு முடிந்ததால் அனைவரும் வருத்தப் பட்டார்கள். அந்த சமயத்தில் வேத வ்யாஸர் அங்கு வந்தார். குருக்ஷேத்திரப் போரில் இறந்த தங்களின் புத்திரர்களைப் பார்க்க வேண்டும் என்று தாய்மார்கள் ஆசைப் பட்டனர். குந்தி கர்ணனையும், காந்தாரி துரியோதனையும், ஸுபத்திரை அபிமன்யுவையும் காண விழைந்தனர். வ்யாஸர் இவர்களைக் கண்டு மனமிரங்கி தேவியை தியானித்து, கங்கை கரையில் ஸ்நானம் செய்து மணித்வீப வாஸியான தேவியை தியானம் செய்தார். அன்னை கருணை புரிந்து கர்ணன், துரியோதனன், அபிமன்யு ஆகியோரைக் காட்டினாள். தாய்மார்கள் பார்த்து மகிழ்ந்தவுடன் அவர்கள் மறைந்து போனார்கள். அம்பாளின் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு உலகில் எதுவுமே அசாத்யமில்லை.

5. வணிக் ஸுசீலஹ, கலு நஷ்டவித்தோ
வ்ரத்தம் சரன் ப்ராங், நவராத்ரமார்யஹ
த்வாம் தேவி! ஸம்பூஜ்ய, தரித்ரபாவான்
முக்த: க்ரமாத் வித்த, ஸம்ருத்திமாப

வணிக் ஸுஶீல꞉ க²லு நஷ்டவித்தோ வ்ரதம்ʼ சரன் ப்ராங்னவராத்ரமார்ய꞉ . 

த்வாம்ʼ தே³வி ஸம்பூஜ்ய த³ரித்³ரபா⁴வான்முக்த꞉ க்ரமாத்³வித்தஸம்ருʼத்³தி⁴மாப .. 35-5..

முன் ஒரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்னும் ஒரு வைசியன், மிகவும் தரித்திரனாகவும், ஆனால் அனேக குழந்தைகள் உடையவனாகவும் இருந்தான். குழந்தைகள் பசியால் வாடினார்கள். மாலையில் யாரேனும் கொடுக்கும் அன்னத்தைச் சாப்பிட்டுக் காலத்தைக் கழித்தார்கள். இவன் தரித்திரன் தான். ஆனாலும் ஸத்யம் பேசுபவனாகவும், தர்மிஷ்டனாகவும், கோபம், பொறாமை, குரோதம் இல்லாதவனாகவும், தினமும் தேவ பித்ரு கடன்களை முடித்துப், பின் அதிதி பூஜை செய்து, அதன் பின் போஜனம் செய்யும் நியமம் தவறாதவனாக இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு பிராமணரைச் சந்தித்தான். அவரிடம் என் வறுமை நீங்கி குழந்தைகள் பசியாரவும், பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவும் ஏதேனும் வழி சொல்ல வேண்டும் எனக் கேட்டான். பிராமணர் சொன்னார் “நீங்கள் கவலையை விடுங்கள். நவராத்ரி விரதம் அனுஷ்டித்து, தேவி பூஜையும், ஹோமமும், பிராமண போஜனமும், ஜபமும், உங்கள் சக்திக்கு ஏற்றவாறுச் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். இதை விட சிறந்த விரதம் எதுவுமே இல்லை என்றார். அந்த வைசியன் அவரையேத் தன் குருவாக ஏற்று, நவராத்திரி விரதம் பூண்டு 9 வருஷம் “ஹ்ரீம்” என்னும் தேவியின் பீஜ மந்திரத்தை ஜபித்தான். தேவி பிரசன்னமானாள். அவனுக்கு வேண்டிய வரன்கள் தந்து, வறுமை அவனை நெருங்காத வண்ணம் அனுக்ரஹம் செய்தாள். தேவியின் கருணைக்கு இது ஒரு உதாரணம்.

6. தேவத்ருஹோ தேவி!, ரணே த்வயைவ
தைத்யா ஹதா கர்,ஹிததர்மசாஸ்த்ராஹா
ப்ரஹ்ளாதமுக்யான்,அஸுரான் ஸ்வ பக்தான்
தேவாம்ச்ச ஸ்ந்த்யக்த, ரணானகார்ஷீஹீ

தே³வத்³ருஹோ தே³வி ரணே த்வயைவ தை³த்யா ஹதா க³ர்ஹிதத⁴ர்மஶாஸ்த்ரா꞉ .
ப்ரஹ்லாத³முக்²யானஸுரான் ஸ்வப⁴க்தான் தே³வாம்ʼஶ்ச ஸந்த்யக்தரணானகார்ஷீ꞉ .. 35-6..

அஸுரர்கள் தேவர்களின் விரோதிகள். தர்ம சாஸ்திரங்களை ஆதரிக்க மாட்டார்கள். உதாரணம் சும்ப நிசும்பரகள். மஹிஷாஸுரன் போன்றவர்கள். இவர்களை அம்பாள் வதம் செய்தாள். ப்ரஹ்லாதனுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தது. தேவர்கள் l தோற்றார்கள். தேவர்கள் அம்பாளை துதித்தார்கள். அம்பாள் ப்ரஹ்லாதன் முன் தோன்றினாள். தேவியைக் கண்டதும் அஸுரர்கள் பயந்தார்கள். சண்டமுண்டர்களையும், மதுகைடபர்களையும் கொன்றவள் அல்லவா? அதனால் ஓடிப்போனாலும் தேவி விடமாட்டாள். அவளை சரண் அடைவதே உகந்தது என்று அஸுரர்கள் தேவியைத் துதித்தனர். ப்ரஹ்லாதன் சொன்னான் “தாயே! நீ அனைவருக்கும் தாய். தேவர்களிடம் பிரியமிருந்தாலும், எங்களிடமும் பிரியம் வேண்டுமல்லவா? தேவர்கள் ஜயம் கிடைத்தால் தரும வார்த்தைகளைச் சுகமாகவும் சாமர்த்தியமாகவும் சொல்கிறார்கள். ஆனால் அபஜெயமானால் அதர்மத்தைச் செய்கிறார்கள். இது உண்மையோ பொய்யோ நீயே யோசித்துக்கொள், அஸுரர்களாகிய நாங்கள் இப்பொழுது உன்னைச் சரண் அடைந்தோம். எங்களைக் காப்பதும், கைவிடுவதும் உன் இஷ்டம்” என்றான். தேவி சொன்னாள் “அஸுரர்களே! லோப குணமுள்ளவர்களுக்கு மூன்று உலகிலும் சுகம் இல்லை. அதனால் நீங்கள் கோபத்தை விடுங்கள். சாந்த சித்தர்களுக்கு எவ்விடமும் சுகமே. அதனால் நீங்கள் பாதள லோகம் சென்று அங்கு சுகமாக இருங்கள் என்று அனுக்ரஹித்தாள். இரண்டு பக்தர்கள் பகைமையுடன் இருந்தாலும் அவர்களை அம்பாள் இணைப்பாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

7. புரந்தரே பாப, திரோஹிதே தத்
ஸ்தாநாதிரூடான்,ன ஹுஷாத் ஸ்மரார்த்தாது
பீதா சசீ த்வாம், பரிபூஜ்ய த்ருஷ்ட்வா
பதிம் க்ரமாத் பீதி,விமுக்திமாப

புரந்த³ரே பாபதிரோஹிதே தத்ஸ்தா²னாதி⁴ரூடா⁴ன்னஹுஷாத்ஸ்மரார்தாத் .
பீ⁴தா ஶசீ த்வாம்ʼ பரிபூஜ்ய த்³ருʼஷ்ட்வா பதிம்ʼ க்ரமாத்³பீ⁴திவிமுக்திமாப .. 35-7..

ஏகாந்தமாகத் தவம் செய்த த்ரிசிரஸை இந்திரன் வெட்டிக் கொன்றான். சத்ய சந்தனும் ஸாத்விகனுமான வ்ருத்தாஸுரனின் நண்பனாக நடித்து, அவனைச் சமயம் பார்த்துக் கொன்றான். இந்த மஹா பாபங்களின் பலனாக இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஓடி பதுங்கி வாழ்ந்தான். இந்திரனின் இடத்தை நகுஷன் பிடித்துக் கொண்டான். அவன் இந்திராணியிடம் காம வேட்கையுடன் அணுக, அவள் பயந்துத் தன்னைக் காத்துக் கொள்ள குருவைச் சரண் அடைந்தாள். குரு கூறியபடி தேவியை பூஜை செய்தாள். நேரில் அம்பாளைக் கண்டாள். தேவி அனுக்ரஹத்தால் இந்திரனையும் கண்டுபிடித்தாள், நகுஷனிடம் இருந்த பயமும் போனது.

8. சப்தோ வஸிஷ்டேன, நிமிர் விதேஹோ
பூத்வாபி தேவி! த்வதனுக்ரஹேண
ஞானம் பரம் ப்ராப;, நிமே; ப்ரயோகாது
நிமேஷிணோ ஜீவ,கணா பவந்தி

ஶப்தோ வஸிஷ்டே²ன நிமிர்விதே³ஹோ பூ⁴த்வா(அ)பி தே³வி த்வத³னுக்³ரஹேண . 

ஜ்ஞானம்ʼ பரம்ʼ ப்ராப நிமே꞉ ப்ரயோகா³ன்னிமேஷிணோ ஜீவக³ணா ப⁴வந்தி .. 35-8..இஷ்வாகு குலத்தில் நிமி என்னும் ஒரு அரசன் பிரஜைகளை நல்ல முறையில் ரக்ஷித்தும், பிராமணர்களை போஷித்தும் வந்தான். யாகத்தால் தேவியை பூஜிக்க ஆசை கொண்டு வஸிஷ்டர், ப்ருகு, வாமதேவர், புலகர் போன்ற பல முனிவர்களையும் வரவழைத்துத் தன் குருவான வஸிஷ்டரிடம் யாகத்தை நடத்தித் தரும் படி வேண்டினான். ஆனால் வஸிஷ்டரோ தேவேந்திரன் செய்யும் யாகத்திற்குத் தான் போக ஒத்துக் கொண்டதால் அதை முடித்த பின் வருவதாகக் கூறினார். என் குல குருவான நீர் இப்படிச் சொல்வது சரியல்ல என்று சொல்லியும், திரவிய ஆசையால் வஸிஷ்டர் இந்திரனிடம் சென்று விட்டார். அரசனும் மன வருத்ததுடன் கௌதம முனிவரை அணுகி, அவர்மூலம் யாகம் செய்தான். வஸிஷ்டர் திரும்பி வந்தார். தூங்கிக் கொண்டிருந்த அரசன் சேவர்கள் சொல்லியும், உடனே வராததால் கோபம் கொண்ட வஸிஷ்டர் “அவன் தேகமில்லாமல் போகட்டும். அவன் சரீரமும் இப்பொழுதே விழட்டும்” என்று சாபம் தந்தார். சேவகர்கள் முனிவரின் சாபத்தைத் தெரிவிக்க, அரசனும் விரைந்து வந்து, “குற்றமற்ற என்னைச் சபித்த உம்தேகமும் விழட்டும்” என சாபம் தந்தான். வஸிஷ்டர் ப்ரம்மனிடம் பிரார்த்தித்து மித்ராவருணரின் தேஜஸில் கலந்தார். மித்ராவருணர் ஊர்வசியிடம் காமம் கொண்டு அவர் வீரியம் ஒரு கும்பத்தில் விழ, அதனின்றும் அகஸ்த்தியர் முன்னும், வஸிஷ்டர் பின்னுமாக வெளிவந்தனர். அதனால் வஸிஷ்டருக்கு மித்ராவருணி என்ற பெயர் வந்தது

யாகத்தை முடிக்க எண்ணி நிமியின் உடலை முனிவர்கள் மந்திரத்தால் காத்து, யாகத்தை முடித்தனர். தேவர்கள் தோன்றி தேவ தேகம் வேண்டுமா? மனித தேகம் வேண்டுமா? என்று கேட்க, நிமி எனக்கு அழியும் உடலில் ஆசை இல்லை. அதனால் சர்வ ஜீவன்களின் கண்களிலும் காற்று ரூபமாக நான் வசிக்க வேண்டும் என்றான். தேவர்கள் தேவியை பிரார்த்திக்கும்படிச் சொன்னார்கள். அரசன் தேவியைத் துதித்தான். தேவி பிரசன்னமானாள். தேவர்களைத் தவிர மற்ற அனைத்து ஜீவர்களிடமும் இமை கொட்டும் ரூபத்தில் வசிக்க அருள் செய்தாள். அரசனுக்குப் புத்திரன் வேண்டும் என்று முனிவர்கள் அரசனின் உடலை சமஸ்காரம் செய்தும் முன், அவரின் உடலை அரணிக் கட்டையால் கடைய, நிமிச்சக்ரவர்த்தி போன்று ஒரு மகன் தோன்றினான். அரணிக் கட்டையால் பிறந்ததால் அவன் மிதி என்றும், ஜனகன் என்றும் பெயர் கொண்டான். நிமிச் சக்ரவர்த்திக்குத் தேகம் இல்லாமல் போனதால் அவர் வம்சத்தினர் விதேகர்கள் என்று அழைக்கப் பட்டனர். மிதி கங்கைகரையில் அழகிய மிதிலை நகரை நிர்மாணித்து ஆண்டுவந்தான். அவர் வம்ஸத்தில் பிறப்பவர் ஜனகனென்றும் விதேகர் என்றும் அழைக்கப் பட்டார்கள்.

9. ஹா! பார்க்கவா லோப, விகோப சித்தைஹீ
ப்ரபீடிதா ஹை,ஹய வம்ச ஜாதைஹீ
ஹிமாத்ரி மாப்தா, பவதீம் ப்ரபூஜ்ய
ப்ரஸாத்ய பீதே:, கலு முக்திமாபுஹு

ஹா பா⁴ர்க³வா லோப⁴விகோபசித்தை꞉ ப்ரபீடி³தா ஹைஹயவம்ʼஶஜாதை꞉ . 

ஹிமாத்³ரிமாப்தா ப⁴வதீம்ʼ ப்ரபூஜ்ய ப்ரஸாத்³ய பீ⁴தே꞉ க²லு முக்திமாபு꞉ .. 35-9..

ஹைஹய வம்சத்து ராஜாவான கார்த்தவீரியன் பல யக்ஜம் நடத்தினான். பிராமணர்களுக்கு நிறைய தட்சிணைகள் கொடுத்தான். அவருக்குப் பின் வந்த ஹைஹயர்கள் தரித்திரர்கள் ஆனார்கள். அவர்கள் பிராமணர்களிடம் யாசித்தார்கள். அவர்கள் தரவில்லை அதனால் அவர்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் துன்புறுத்தினார்கள். பயந்து ஒடிய அந்தணர்கள் இமாலயம் சென்று தேவியை ஸ்தோத்திரம் செய்தார்கள். அம்பாள் காட்சி தந்து “தொடையில் கர்பம் தரித்த பெண் ஒருவள் உங்களுடன் இருக்கிறாள். அவளால் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்” என்று சொல்லி மறைந்தாள். தேவியின் அனுக்ரஹத்தால் தொடையில் கர்பம் தரித்த பெண்ணை ஹைஹயர்கள் அடித்துத் துன்புறுத்த வரும் பொழுது தாயின் அழுகுரல் கேட்டு தொடையிலிருந்து வேகமாய் வெளியே வந்தது ஒரு குழந்தை. ஔருவர் என்னும் முனிவரே இந்தக் குழந்தை. அந்தக் குழந்தையின் தேஜஸால் ஹைஹயர்களின் கண் குருடானது. அவர்கள் அழுது புலம்பி அந்தத் தாயிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அன்னையின் அருளால் கண்பார்வை மீண்டும் கிடைத்தது ஹைஹயமார்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

10. தஸ்ரௌ யுவானாம், ச்யவனம் பதிம் ச
ஸமானரூபான் அபித்ருச்ய முக்தா
ஸதீ ஸுகன்யா, தவ ஸம் ஸ்ம்ருதாயா
பக்த்யா ப்ரஸாதாத், ஸ்வபதிம் வ்யஜானாது

த³ஸ்ரௌ யுவானாம்ʼ ச்யவனம்ʼ பதிம்ʼ ச ஸமானரூபானபி⁴த்³ருʼஶ்ய முக்³தா⁴ .
ஸதீ ஸுகன்யா தவ ஸம்ʼஸ்ம்ருʼதாயா ப⁴க்த்யா ப்ரஸாதா³த்ஸ்வபதிம்ʼ வ்யாஜானாத் .. 35-10..

சர்யாதி என்னும் ஒரு அரசனுக்குச் சுகன்யை என்னும் ஒரு அழகான மகள் இருந்தாள். அவளை சவனன் என்னும் ஒரு குருடனான முனிவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தான். ஏன் அழகான பெண்ணைக் குருடனுக்குக் கொடுத்தார்? ஒரு நாள் சர்யாதி தன் மனைவி மகளுடன் ஒரு தாமரைத் தடாகத்திற்கு வந்தார். அவர் தன் மனைவியுடன் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மகளான சுகன்யை புற்றுருவமாக இருந்த பார்கவ முனிவரை அறியாமல் அதன் அருகில் சென்றாள். புற்றிலிருந்து மின்மினிப் பூச்சி போன்ற ஒளி வருவதைக் கண்டு அது என்ன என்று பார்க்க ஆவல் கொண்டு ஒரு முள் குச்சியால் அதைக் குத்தவந்தாள். வராதே! வராதே! என்று மஹரிஷி சொன்னார். ஆனால் அவள் அதைக் காதில் வாங்கவில்லை. அதைக் குச்சியால் குத்தினாள். அது முனிவரின் கண்ணைக் குத்த, பின் அது ஒரு முனிவர் என அறிந்து வருந்தினாள். முனிவர் மிகவும் துன்பமடைந்து, கண்நோயினால் அவதிப்பட்டு, மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். அந்த நேரம் முதல் எல்லா ஜனங்களுக்கும் அரசன் உள்பட, மலஜலங்கள் போவது நின்று போனது. ஏதோ பெரியவருக்குத் தவறு நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டார். தடாகத்தின் அருகில் புற்று ரூபமாக இருந்த வயோதிக முனிவருக்கு யாரோ தீங்கு செய்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஆனது என்று தெரிந்தது. அப்பொழுது சுகன்யை தான் தெரியாமல் செய்த தவற்றைச் சொன்னாள். உடனே அரசன் முனிவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். முனிவர் சொன்னார் “நான் உன் மகளை சபிக்கவில்லை. ஆனால் நான் தேவி பக்தன். அதனால் தான் உங்களுக்குத் துன்பம் வந்தது. கண் இல்லாமல் நான் எப்படித் தவம் செய்வேன்? எனக்கு அனுகூலம் செய்ய நினைத்தால் உன் பெண்ணை எனக்குத் தருவாயா? எனக் கேட்டார்.

அரசன் மனக் கலக்கம் கொண்டு வருந்தும் போது, சுகன்யை அவரை மணக்க சம்மதம் தந்தாள். வயோதிகனான குருட்டுக் கிழவனுக்கு எப்படித் தரமுடியும் ? உனக்கு என்ன சுகம் கிடைக்கும் என்றார்? என் மனம் அற்ப சுக விஷயங்களில் அலையாது. நான் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்வேன் என்றாள். அரசனும் சுகன்யயை முனிவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். சுகன்யை முனிவருக்குச் சகல பணிவிடையும் செய்து வந்தாள். ஒரு நாள் அஸ்வினீ குமாரர்கள் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து, நீராடி வரும் சுகன்யயைக் கண்டு மோகித்தனர். மோகினியே! கிழவனை மணந்து என்ன சுகம் காண்பாய்? எங்களில் ஒருவரை பர்த்தா ஆக்கிக்கொள் என்றனர். நான் என் கணவரிடத்தில் பக்தி கொண்டவள். இங்கிருந்து ஓடி விடுங்கள். இல்லை யென்றால் சாபம் தருவேன் என்றாள் சுகன்யை. அஸ்வினீ குமாரர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வைத்யர்கள். உன் கணவருக்குக் கண் கொடுத்து, அழகான யௌவனனாக மாற்றி நாங்கள் மூவரும் சேர்ந்து உன் முன் வருகிறோம். எங்களில் ஒருவரை நீ வரித்துக் கொள்வாய் என்று சொன்னார்கள். சுகன்யை அனைத்தையும் தன் கணவரிடம் சொல்லி அவர் சொன்னபடி சம்மதமும் தந்தாள். மூவரும் ஒரு தீர்த்தத்தில் நீராடி எழுந்தனர். என்ன ஆச்சர்யம்? மூவரும் ஒன்று போல் சுந்தர ரூப யௌவனர்களாக இருந்தனர். சுகன்யை ஏமாற்றி விட்டார்களே! எப்படித் தன் கணவரை அடையாளம் காண்பது எனக் கலங்கினாள். உடனே அந்த பரதேவதையான அன்னையை த்யானித்து, அவளின் அனுக்ரஹத்தால் தன் கணவனை அடையாளம் கண்டு, அவருக்கே மாலையிட்டாள். அஸ்வினீ தேவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்.

11. ஸத்யவ்ரதோ விப்,ரவதும் ப்ரஸஹ்ய
ஹர்த்தா நிரஸ்தோ, ஜனகேன ராஜ்யாது
வஸிஷ்ட சப்தோபி, தவ ப்ரஸாதாது
ராஜ்யேபிஷிக்தோத, திவம் கதச்ச

ஸத்யவ்ரதோ விப்ரவதூ⁴ம்ʼ ப்ரஸஹ்ய ஹர்தா நிரஸ்தோ ஜனகேன ராஜ்யாத் .
வஸிஷ்ட²ஶப்தோ(அ)பி தவ ப்ரஸாதா³த்³ராஜ்யே(அ)பி⁴ஷிக்தோ(அ)த² தி³வம்ʼ க³தஶ்ச .. 35-11..

அருணன் என்னும் சூர்ய வம்சத்து ராஜாவிற்கு ஸத்யவிரதன் என்னும் ஒரு மகன். அவன் காமுகன். மந்த புத்தியும் சஞ்சல மனதும் கொண்டவன். காமத்தால் அவன் ஒரு அந்தணனின் மனைவியை அபஹரித்துச் சென்றான். தந்தை அவனை ராஜ்யத்திலிருந்து விரட்ட, அவன் காட்டில் வாழ்ந்து வந்தான். தன் குல குருவான வஸிஷ்டர் தன் பிதாவின் கோபத்தைத் தடுக்காமல் இருந்து விட்டாரே என்று காரணமின்றி அவரிடம் கோபம் கொண்டான். ஒரு சமயம் காட்டில் விஸ்வாமித்ரரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடி, வேறு வழியில்லாமல் ஒரு குழந்தயை விற்று மற்ற குழந்தைகளின் பசியைப் போக்க நினைத்தபொழுது, ஸத்யவிரதன் அவர்களைச் சந்தித்தான். அவர்களின் நிலைகண்டு மனம் இரங்கி, அவர்களைத் தான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்தான். அதன்படி செய்தும் வந்தான். காய்களையும், பழங்களையும் மற்றும் மிருகங்களை அடித்துக் கொன்றும், ஆகாரமாக கொடுத்து வந்தான். ஒருநாள் ஏதும் கிடைக்காமல் அலைந்து கொண்டு வரும் பொழுது, வஸிஷ்டர் ஆஸ்ரமத்தையும் அங்குக் கட்டியிருக்கும் பசுவையும் பார்த்தான். அவனுடைய பழைய கோபம் தலை தூக்கியது. அந்தப் பசுவைக் கொண்டு போய் அடித்து, அதன் மாமிசத்தை விஸ்வாமித்திரர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தந்து, தானும் உண்டான்.

ரிஷி பத்னி அதை கோ மாமிசம் என்பதை அறியவில்லை. இதை அறிந்த விஸ்வாமித்திரர் “மூடனே! பிராமணப் பெண்ணை அபகரித்தது, தந்தையின் கோபத்திற்கு ஆளானது, பசுவைத் திருடிக் கொன்றது ஆகிய இந்த பாபங்களால் நீ திரிசங்கு என்ற பெயரில் மூன்று கொம்புகளுடன் பிசாசு ரூபமாய் அலையக் கடவாய்” என்று சாபம் தந்தார். பிசாசு ரூபம் கொண்ட அவன் அந்த ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு, பூர்வஜன்ம புண்யத்தால் முனிகுமாரனிடமிருந்து நவாக்ஷரி மந்திரத்தை அறிந்து கொண்டான். அந்த பகவதியை தியானித்துத் தவமும் செய்தான். ஸத்யவிரதன் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட ஒரு ஹோமம் செய்ய நினைத்தான். பிராமணர்கள் பிசாசு ரூபத்தில் ஹோமம் செய்ய முடியாது என மறுத்தனர். அதனால் மனம் வருந்தி சண்டிதேவியை மனதில் நிருத்தி, அக்னியில் புக முயன்ற போது, தேவீ காட்சி தந்தாள். “உனக்கு ராஜ்யம் மீண்டும் கிடைக்கும்” என்று அருள் செய்தாள். அதன் படி அவன் தந்தையும் அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, வனத்திற்குத் தவம் செய்யச் சென்றார். தேவியின் அருளால் சுந்தரரூபனாக ஆனான். ஹரிச்சந்திரன் என்னும் மகனும் அவனுக்குப் பிறந்தான். ஒரு நாள் வஸிஷ்டரிடம் தான், உடலுடன் தேவலோகம் போக யாகம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அவர் மனித உடலுடன் அங்கு போகமுடியாது. புண்ய கர்மாவினால் இறந்த பிறகே ஸ்வர்க்கம் போக முடியும் என்றார். கோபம் கொண்டு வேறு ஒருவரால் யாகம் செய்து கொள்கிறேன் என்றான் ஸத்யவிரதன். கோபத்துடன் வஸிஷ்டர் “நீ சண்டாளனாவாய்” என்று சபித்தார். ஸத்யவிரதன் சண்டாளனின் சரீரம் அடைந்தான். ஒரு நாள் விஸ்வாமித்திரர் வருவதைப் பார்த்தான். நடந்ததை சொன்னான். என் துக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்றும் சொல்லி அவர் பாதத்தில் விழுந்தான். தான் தவம் செய்யச் சென்ற பொழுதுத் தன் குடும்பத்தை ஸத்யவிரதன் காப்பாற்றியதால், விஸ்வாமித்திரர் இதற்காக ஒரு யாகம் செய்ய நினைத்தும், புரோகிதர்களை வஸிஷ்டர் தடுத்ததால் யாகம் செய்ய முடியவில்லை. அதனால் கையில் ஜலம் எடுத்து, காயத்ரியை ஜபித்து அவனுக்குத் தன் புண்ணியமெல்லாம் தானம் செய்தார்.

திரிசங்கு ஒரு பக்ஷி போல் பறந்து போனான். சொர்க்கம் போன அவனை உனக்கு இங்கு வர அருகதையில்லை திரும்பிப் போ என்று இந்திரன் விரட்டினான். திரிசங்கு விஸ்வாமித்திரரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே கீழே விழுந்தான். குரல் கேட்ட முனிவர் தன் தவ வலிமையால் அவனை அங்கேயே அந்தரத்தில் நிறுத்தினார். அவனுக்காக ஒரு அங்கு ஒரு சொர்க்கலோகம் அமைக்க யாகம் செய்ய ஆரம்பித்தார். இந்திரன் உடனே பயந்து ஓடிவந்தான். முனிவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டான். திரிசங்கு மஹாராஜனைச் சொர்க்கம் அழைத்துச் செல்லும் படிச் சொன்னார். முனிவரின் பலம், பிடிவாதம் அறிந்து, திரிசங்குவிற்கு திவ்ய தேகம் தந்து, விமானத்தில் இந்திரன் ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான்.

12. ஹா! ஹா! ஹரிச்சந்த்ர,ந்ருபோ விபத்ஸு
மக்ன: சதாக்ஷீம், பரதேவதாம் த்வாம்
ஸம்ஸ்ம்ருத்ய ஸதய: ஸ்வவி பந்நிவ்ருத்தஹ
காருண் யதஸ்தே, ஸுரலோக மாப

ஹா ஹா ஹரிஶ்சந்த்³ரந்ருʼபோ விபத்ஸு மக்³ன꞉ ஶதாக்ஷீம்ʼ பரதே³வதாம்ʼ த்வாம் .
ஸம்ʼஸ்ம்ருʼத்ய ஸத்³ய꞉ ஸ்வவிபந்நிவ்ருʼத்த꞉ காருண்யதஸ்தே ஸுரலோகமாப .. 35-12..

ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். அயோத்தியில் ராஜசூய யாகம் செய்து பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி ஆனான். அஹங்காரம் வந்தது. தேவியை மறந்தான். கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. ஒரு நதிக்கரையில் விஸ்வாமித்திரர் ஒரு கிழ பிராமணர் வேடத்தில் வந்து, ஹரிச்சந்திரனை ஏமாற்றி அவன் ராஜ்யம் முழுவதையும் தானமாகப் பெற்று, தக்ஷணையாக இரண்டரை பாரம் பொன்னும் கேட்டார். தக்ஷணையைக் கொடுக்க முடியாமல் மனைவியையும் மகனையும் விற்றான். சுடு காட்டில் காவல் காரனாக இருந்தான். தன் மனைவியையும் வெட்டிக் கொல்லும் நிலைக்கு வந்தான். அந்த பரதேவதையான சதாக்ஷரியை மனதில் நினைத்தான். தேவி அவர்களின் கஷ்டத்தை எல்லாம் நீக்கினாள். பாம்பு கடித்து இறந்த மகன் லோகிதாசன், அன்னையின் அருளால் மீண்டும் உயிர் பெற்றான். அவனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்தான். இந்திரன் பூமிக்கு வந்து விமானத்தில் அவர்களை ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான். அம்பாளை நினைத்தால் நன்மைவரும். மறந்தால் துன்பம்தான் வரும். பக்தி என்னும் பிரகாஸம் மனதில் இல்லை என்றால் வாழ்வே இருள் மயம் தான்.

13. அகஸ்த்ய பூஜாம், பரிக்ருஹ்ய தேவி!
விபாஸி விந்த்யாத்ரி, நிவாஸி நீ த்வம்
த்ரக்ஷ் யே கதா த்வாம், மம தேஹி பக்திம்,
காருண்ய மூர்த்தே, ஸததம் நமஸ்தே

அக³ஸ்த்யபூஜாம்ʼ பரிக்³ருʼஹ்ய தே³வி விபா⁴ஸி விந்த்⁴யாத்³ரிநிவாஸினீ த்வம் . 

த்³ரக்ஷ்யே கதா³ த்வாம்ʼ மம தே³ஹி ப⁴க்திம்ʼ காருண்யமூர்த்தே ஸததம்ʼ நமஸ்தே .. 35-13..க்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்ரஹம் செய்தாள் என்பதற்குச் சில உதாரணங்கள் சொல்லப் பட்டது. கஷ்டங்களும், துன்பங்களும் நீங்க ஒரே வழி அன்னையின் அனுக்ரகமே! தேவியை யாரும், எங்கும் எப்படியும் அழைக்கலாம். பக்தன் அழைத்தால் அம்பாள் ஓடி வருவாள். இந்த கருணையால் தான் பிரம்மாவின் மானஸ புத்திரன் ஸ்வாயம்புவன் பாற்கடல் தீரம் சென்று “ஐம்” என்னும் வாக்பீஜ மந்திரம் ஜபித்து தேவியை உபாஸித்த பொழுது, அன்னை “சத்ரு, இல்லாத ராஜ்யமும், புத்திர பாக்யமும், அம்பாளிடம் திட பக்தியும், இறுதிக் காலத்தில் மோக்ஷமும் அடைவாய்” என்று அருள் செய்து, விந்தியா பர்வதம் சென்றாள். ஒரு சமயம் நாரத மஹரிஷி விந்திய மலைக்குச் சென்றார். விந்தியன் அர்க்கிய, பாத்திய, ஆஸனாதிகள் கொடுத்து, முனிவரே! தங்கள் வருகைக்கு காரணம் என்ன? ஏதும் சங்கதி இருந்தால் சொல்லுங்கள் என்றான். நாரதர் சொன்னார் ” நான் மேரு மலையிலிருந்து வருகிறேன். பார்வதிக்குத் தந்தையும், சிவனுக்கு மாமனாருமான மேருவை அனைவரும் பூஜிப்பதால் அவன் கர்வமடைந்திருக்கிறான். மேருவின் இறுமாப்பை நான் என்னவென்று சொல்வது? கைலாயத்தில் சிவன் இருப்பதால் அதுவும் அனைவராலும் வணங்கப் படுகிறது. அதனால் தன்னைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கும் அவர்களை எண்ணி பெருமூச்சு விட்டேன், என்று சொல்லி நீ ஏதும் செய்தி உண்டா என்று கேட்டதால் இதைச் சொன்னேன் என்று சொல்லிவிட்டு பிரம்மலோகம் சென்றார்.

விந்தியன் யோசித்து, மற்ற மலைகளின் கர்வத்தை அடக்கித் தன் உயர்வைக் காட்ட, கணக்கில்லாமல் உயர்ந்து, சூரியன் மேருவை வலம் வருவதைத் தடுத்தான். தேவர்கள் ருத்ர மூர்த்தியிடம் செல்ல, அவருடன் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணுவின் அறிவுரைப்படி தேவர்கள் காசியிலிருக்கும் அகஸ்த்தியரை வேண்ட, அகஸ்த்யமுனிவர் காசியிலிருந்து விந்தியமலை சமீபம் வந்தார். அகஸ்தியரைக் கண்ட விந்தியன் தலை தாழ்த்தி வணங்கினான். அகஸ்தியர் சொன்னார்” நான் தென் திசைப் போகவேண்டும். நீ இப்படி உயர்ந்து நின்றால் நான் எப்படிப் போக முடியும்? அதனால் நான் திரும்பி வரும் வரை நீ இப்பொழுது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி அதன் மீது ஏறிச் சென்று அங்கேயே வசித்தார். இன்றும் அகஸ்த்யனின் நித்ய பூஜையை ஏற்றுக் கொண்டு விந்தியாசல வாஸினியாக அம்பாள் இருக்கிறாள் என்று சொல்லப் படுகிறது. நிரந்தரமாக பக்தர்களை அனுக்ரஹிக்கும் அம்பாளைத் தானும் காண வேண்டும் என்று விரும்பி, தனக்கு பக்தி வளரவேண்டும் என வேண்டி இந்த தசகத்தை முடிக்கிறார்.

முப்பத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது

29 ஏகோனத்ரிம்ʼஶத³ஶக꞉ - தே³வீபீடோ²த்பத்தி꞉sr71-81

29 ஏகோனத்ரிம்ʼஶத³ஶக꞉ - தே³வீபீடோ²த்பத்தி꞉

அதை²கதா³(அ)த்³ருʼஶ்யத த³க்ஷகே³ஹே ஶாக்தம்ʼ மஹஸ்தச்ச ப³பூ⁴வ பா³லா . விஜ்ஞாய தே ஶக்திமிமாம்ʼ ஜக³த்ஸு ஸர்வே(அ)பி ஹ்ருʼஷ்டா அப⁴வன் க்ஷணஶ்ச .. 29-1.. த³க்ஷ꞉ ஸ்வகே³ஹாபதிதாம்ʼ சகார நாம்னா ஸதீம்ʼ போஷயதி ஸ்ம தாம்ʼ ஸ꞉ . ஸ்மரன் வசஸ்தே கி³ரிஶாய காலே ப்ரதா³ய தாம்ʼ த்³வௌ ஸமதோஷயச்ச .. 29-2.. ஏவம்ʼ ஶிவ꞉ஶக்தியுத꞉ புனஶ்ச ப³பூ⁴வ க³ச்ச²த்ஸு தி³னேஷு த³க்ஷ꞉ . தை³வாச்சி²வத்³வேஷமவாப தே³ஹம்ʼ தத்போஷிதம்ʼ ஸ்வம்ʼ விஜஹௌ ஸதீ ச .. 29-3.. து³꞉கே²ன கோபேன ச ஹா ஸதீதி முஹுர்வத³ன்னுத்³த்⁴ருʼததா³ரதே³ஹ꞉ . ப³ப்⁴ராம ஸர்வத்ர ஹர꞉ ஸுரேஷு பஶ்யத்ஸு ஶார்ங்கீ³ ஶிவமன்வசாரீத் .. 29-4.. ருத்³ராம்ʼஸவின்யஸ்தஸதீஶரீரம்ʼ விஷ்ணு꞉ ஶரௌகை⁴ர்ப³ஹுஶஶ்சகர்த . ஏகைகஶ꞉ பேதுரமுஷ்ய க²ண்டா³ பூ⁴மௌ ஶிவே ஸாஷ்டஶதம்ʼ ஸ்த²லேஷு .. 29-5.. யதோ யத꞉ பேதுரிமே ஸ்த²லானி ஸர்வாணி தானி ப்ரதி²தானி லோகே . இமானி பூதானி ப⁴வானி தே³வீபீடா²னி ஸர்வாக⁴ஹராணி பா⁴ந்தி .. 29-6.. த்வமேகமேவாத்³வயமத்ர பி⁴ன்னநாமானி த்⁴ருʼத்வா க²லு மந்த்ரதந்த்ரை꞉ . ஸம்பூஜ்யமானா ஶரணாக³தானாம்ʼ பு⁴க்திம்ʼ ச முக்திம்ʼ ச த³தா³ஸி மாத꞉ .. 29-7.. நிர்விண்ணசித்த꞉ ஸ ஸதீவியோகா³ச்சி²வ꞉ ஸ்மரம்ʼஸ்த்வாம்ʼ குஹசிந்நிஷண்ண꞉ . ஸமாதி⁴மக்³னோ(அ)ப⁴வதே³ஷ லோக꞉ ஶக்திம்ʼ வினா ஹா விரஸோ(அ)லஸஶ்ச .. 29-8.. சிந்தாகுலா மோஹதி⁴யோ விஶீர்ணதோஷா மஹாரோக³னிபீடி³தாஶ்ச . ஸௌபா⁴க்³யஹீனா விஹதாபி⁴லாஷா꞉ ஸர்வே ஸதோ³த்³விக்³னஹ்ருʼதோ³ ப³பூ⁴வு꞉ .. 29-9.. ஶிவோ(அ)பி ஶக்த்யா ஸஹித꞉ கரோதி ஸர்வம்ʼ வியுக்தஶ்ச தயா ஜட³꞉ ஸ்யாத் . மா மா(அ)ஸ்து மே ஶக்திவியோக³ ஏஷ தா³ஸோ(அ)ஸ்மி பூ⁴யோ வரதே³ நமஸ்தே .. 29-10..

தசகம் 29

தேவீ பீடோத்பதி

1. அதைகதாSத்ருச்யத தக்ஷகேஹே
சாக்தம் மஹஸ்தச்ச, பபூவ பாலா
விஜ்ஞாய தே சக்திம் இமாம் ஜகத்ஸு
ஸர்வேSபி ஹ்ருஷ்டா, அபவத் க்ஷணச்ச

28 ஆவது தசகத்தில், தக்ஷன் சிவா விஷ்ணுவிற்குச் சக்தியை வேண்டினான். சலனமில்லாமல் இருந்த அவர்களுக்குத் தேவி அவர்ககளின் தொழிலைச் செய்வதற்குச் சக்தியைத் தந்தாள். தனது கிரஹத்தில் அன்னையின் அவதாரம் வேண்டும் என்று பிரார்த்தனைச் செய்தான் அல்லவா? அதனால் சில காலம் சென்ற பின் தக்ஷன் வீட்டில் ஒரு நாள் சக்தி சம்பந்தமான தேஜஸ் அவதாரம் செய்தது. தக்ஷன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது ஒரு அழகானப் பெண் குழந்தையாக மாறியது. அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினார்கள். அது சக்தியின் அம்சம் என்பதை அறிந்த தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். சூரியன் பிரகாஸமாக ஒளிர்ந்தான். ஆறுகள் சந்தோஷத்தில் பெருக்கெடுத்து ஓடின.

2. தக்ஷ: ஸ்வகேஹா,பதிதாம் சகார
நாம்நா ஸதீம், போஷ,யதி ஸ்ம தாம் ஸஹ
ஸ்மரன் வசஸ்தே, கிரிசாய காலே
ப்ரதாய தாம் த்வௌ, ஸமதோஷயச்ச

அம்பாளின் சக்தி தனது கிருஹத்தில் அவதரிக்கும் என்று முன்பு அம்பாள் சொன்னது தக்ஷனுக்கு நினைவிற்கு வந்தது. இந்தக்குழந்தை அம்பாளின் சக்திதான் என்பதைத் தக்ஷன் புரிந்து கொண்டான். அந்தக் குழந்தைக்கு “ஸதீ” என்று பெயர் வைத்தான். ஸதீ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யுவதி ஆனாள். இந்த சத்தியைச் சிவன் ஏற்றுக்கொள்ளட்டும் என்று அம்பாள் சொன்னாள் அல்லவா? (28.8) அதனால் ஸதியைச் சிவனுக்கே மணம் முடித்தான் தக்ஷன். சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.

3. ஏவம் சிவ: சக்தியுத: புனச்ச
பபூவ; கச்சத்ஸு தினேஷு தக்ஷஹ
தைவாத் சிவத்வேஷம் அவாப, தேஹம்
தத்போஷிதம் ஸ்வம், விஜஹொ ஸதீ ச

அவர்களுடைய வாழ்க்கைக் குறுகியக் காலமாகத்தான் இருந்தது. ஒருசமயம் துர்வாஸ முனிவர் ஜாம்பூநதேஸ்வரீ என்னும் தேவியை மாயா பீஜத்தால் ஜபித்தார். மகிழ்ச்சியுடன் அவள் ஒரு பூமாலையைத் தந்து அனுக்ரஹம் செய்தாள். தக்ஷன் அந்த மாலையை விரும்பிக் கேட்க, துர்வாஸர் அதை அவனுக்குத் தந்தார். அதை அவன் தூய்மையான இடத்தில் வைக்காமல் தனது படுக்கை அறையில் அலங்காரமாக வைத்தான். மாலையின் நறுமணத்தால் காமவேட்கைக் கொண்டு மனைவியுடன் இணைந்தான். பூஜிக்கப்பட வேண்டிய அந்த பூமாலையைப் படுக்கை அறையில் வைக்கலாமா? அதனால் அதன் பரிசுத்தத்திற்குக் களங்கம் வந்ததால், அவனுக்குத் தோஷம் வந்தது. சிவனிடம் துவேஷம் வர ஆரம்பித்தது. ஸதி இதைக் கண்டு மனம் வருந்தினாள். சிவ த்வேஷியான தக்ஷனால் வளர்க்கப் பட்ட இந்த ஸரீரம் தனக்கு வேண்டாம் என்று யோகாக்னியில் ப்ரவேசித்தாள். இது தக்ஷனின் தலை எழுத்து.

4. துக்கேன கோபேன ச ஹா ஸதீ தி
முஹுர் வதன்னுத்,ருததாரதேஹஹ
பப்ராம ஸர்வத்ர, ஹர: ஸுரேஷு
பச்யத்ஸு சார்ங்கீ, சிவமன்வசாரீத்

சிவன் மிகவும் துக்கமடைந்தார். ஸதியின் ஸரீரத்தைத் தன் தோளில் சுமந்து கொண்டு, சித்தப் பிரமை அடைந்தவர் போல் தாண்டவம் ஆடினார். அவரின் கோபாக்னியைக் கண்டு யாரும் அவரிடம் நெருங்கவே பயந்தனர். அப்பொழுது விஷ்ணு வில்லும் அம்புமாக சிவனிடம் சென்றார்.

5. ருத்ராம்ஸவின்யஸ்த,ஸதீசரீரம்
விஷ்ணு: சரௌகைர், பஹுசச்ச கர்த்த;
ஏகைகச: பேதுர,முஷ்ய கண்டா
பூமௌ சிவே! ஸாஷ்டசதம் ஸ்தலேஷு

சிவன் ஒரு பயித்தியக்காரன் போல் ஸதியின் ஸரீரத்தைத் தோளின் மீது வைத்துக் கொண்டு உலகம் சுற்றினார். அருகில் செல்ல எல்லோரும் பயந்தனர். அப்போது விஷ்ணு சிவனின் அருகில் சென்று ” எம்பெருமானே! தாங்கள் சுமந்திருக்கும் ஸதியின் ஸரீரம் சித்கலா ரூபம். அக்கலைகளைத் தனித் தனியாக உலகமெங்கும் பீடமாக இருக்கச் செய்து, தாங்களும் அதில் வீற்றிருக்க வேண்டும்” என்று வேண்ட, சிவனும் “அப்படியே ஆகட்டும்” என்று அருள் செய்தார். விஷ்ணு ஸார்த்தம் என்னும் தன்னுடைய வில்லால் ஸதியின் ஸரீரத்தைத் துண்டாக்கினார். அது பூஉலகத்தில் 108 இடங்களில் விழுந்தது. இந்த விஷ்ணுவிற்கு இதைச் செய்ய அனுக்ரஹித்தவளே அம்பாள் தான். ஸ்லோகத்தில் இதன் ஆசிரயர் “சிவே” என்று சொல்கிறார். உலகத்தில் மங்களம் பொங்கவே தேவீ இப்படிச் செய்தாள்.

6. யதோ யத: பேதுரிமே ஸ்தலானி
ஸர்வாணி தானி, ப்ரதிதானி லோகே
இமானி பூதானி பவானி! தேவீ-
பீடானி ஸர்வாக, ஹராணி பாந்தி

தேவியின் சரீரம் விழுந்த இடங்கள் எல்லாம் தேவியின் க்ஷேத்ரமாக விளங்கியது. அந்த 108 துர்கா க்ஷேத்ரங்களும் மிகவும் பிரசித்தமானவை. இந்த பீடங்களில் தேவியை பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் கிடைத்தற்கரிய பொருள் ஏதும் இல்லை. இந்த க்ஷேத்ரங்களில் மாயாபீஜ மந்திரத்தை ஜபிப்பவனுக்கு, அம்மந்திரத்தின் சக்தி சித்தியாகும் என்று சொல்லப் படுகிறது. தேவியின் முகம் விழுந்த இடத்திற்கு 1. வாரணாசியில் விசாலாக்ஷி என்று பெயர். 2. நைமிசாரணியத்தில் லிங்கதாரிணி. 3. பிரயாகையில் லலிதா 4. துவாரகையில் ருக்மிணி 5. பிருந்தாவனத்தில் ராதா. 6. மதுராவில் தேவகீ 7. சித்ரகூடத்தில் சீதா 8. குஜரத்தில் அம்பாதேவீ. 9. பெங்களூரில் நிமிஷாதேவி.10. உத்ரகிரியில் ஔஷதை. இதுபோல் 108 இடங்களில் பாபங்களைத் தீர்ப்பதற்காக ஏற்பட்டது

7. த்வமேகமேவா,த்வயமத்ர பின்ன –
– நாமானி த்ருத்வா, கலு மந்த்ரதந்த்ரைஹி
ஸம்பூஜ்யமானா, சரணாகதானாம்
புக்திம் ச முக்திம், ச ததாஸி மாதஹ!

அம்பாள் ஒன்றுதான். இரண்டு இல்லை. ஆனாலும் 108 பீடங்களிலும் 108 ரூபங்களுடனும், நாமத்துடனும் இருக்கிறாள். தக்ஷன் சிவனை அவமதித்ததால் அம்பாள் தனக்கு நிகரான சாயா ஸதியைச் சிருஷ்டித்து, அவள்தான் யாகத்தீயில் குதித்தாள் என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பித்ரு ஹத்தி என்ற பாபம் வரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தாள். உண்மையான ஸதீ அக்னியில் குதித்திருந்தால், தக்ஷனையும் கொன்று விடுவார்களல்லவா? அப்பொழுதுத் தந்தையைக் கொன்ற பாபம் வருமல்லவா? அதனால் அப்படிச் செய்தாள். இந்த 108 க்ஷேத்ரங்களும் சக்தி பீடங்கள். அந்த இடங்களில் சிவனும் பல மூர்த்தி வடிவத்தில் நிலை பெற்றிருக்கிறார்.

8. நிர்விண்ண சித்த: ஸ, ஸதீவியோகாது
சிவ: ஸ்மரம்ஸ்த்வாம், குஹ சின்னிஷண்ணஹ
ஸமாதிமக்னோS பவதேஷ லோகஹ
சக்திம் வினா ஹா! விரஸோலஸச்ச

ஸதியின் பிரிவு சிவனுக்குத் துக்கத்தைத் தந்தது. அம்பாளை நினைத்து ஓரிடத்தில் ஸ்திரமாய் அமர்ந்தார். அப்படியே ஸமாதி நிலையில் ஆழ்ந்து போனார். பிரபஞ்சத்தின் நினைவு இல்லாமல், தேவியின் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டு, காலத்தைக் கழித்தார். சக்தி இல்லாத உலகம் சக்தியை இழந்து சராசரப் பிரபஞ்சம் முழவதும் சௌபாக்யம் இன்றி இருந்தது. யாருக்கும் எந்த சுறு சுறுப்பும் இல்லை.

9. சிந்தாகுலா மோஹ,தியோ விசீர்ண்ண
தோஷா மஹாரோத,நிபீடிதாச்ச
சௌபாக்யஹீனா, விஹதாபிலாஷாஹா
ஸர்வே ஸதோத்விக்ன, ஹ்ருதோ பபூவுஹு

எல்லோருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. புத்தியும் மங்கிப் போயிற்று. அனைவருக்கும் இருதயம் உலர்ந்து, ஆனந்தம் வற்றிப் போனது. கவலை கொண்ட சித்தத்துடன் இருந்தனர். ரோகமும் வந்தது. தேவீ பாகவதத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

10. சிவோSபி சக்த்யா ஸஹித: கரோதி
ஸர்வம், வியுக்தச்ச தயா ஜட: ஸ்யாது
மா மாஸ்து மே சக்தி, வியோக ஏஷ
தாஸோSஸ்மி; பூயோ, வரதே: நமஸ்தே

ஸதி பிரிந்ததும் சிவனும் சுறு சுறுபில்லாதவர் ஆனார். அப்படி ஒரு பிரிவுத் தனக்கு வந்து விடக்கூடாது என்று இதன் ஆசிரியர் நினக்கிறார். அதனால் அம்பாள் முன் இதைக் கூறி, மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார். அம்பாள் ஸர்வ வரதாயினி அல்லவா?

தசகம் இருபத்தி ஒன்பது முடிந்தது