https://youtu.be/JLhgYVLiwx8
30 த்ரிம்ʼஶத³ஶக꞉ - ஶ்ரீபார்வத்யவதார꞉
ஸமாதி⁴மக்³னே கி³ரிஶே விரிஞ்சாத்தப꞉ப்ரஸன்னாத்கில தாரகாக்²ய꞉ .
தை³த்யோ வரம்ʼ ப்ராப்ய விஜித்ய தே³வான் ஸபா³ந்த⁴வ꞉ ஸ்வர்க³ஸுகா²ன்யபு⁴ங்க்த 1 ..
வரை꞉ ஸ ப⁴ர்கௌ³ரஸபுத்ரமாத்ரவத்⁴யத்வமாப்தோ(அ)ஸ்ய ச பத்ன்யபா⁴வாத் .
ஸர்வாதி⁴பத்யம்ʼ ஸ்வப³லம்ʼ ச மோஹான்மத்தோ ப்⁴ருʼஶம்ʼ ஶாஶ்வதமேவ மேனே .. 30-2..
நஷ்டாகி²லா꞉ ஶ்ரீஹரயே ஸுராஸ்தே நிவேத³யாமாஸுரஶேஷது³꞉க²ம் .
ஸ சாஹ தே³வா அனயேன நூனமுபேக்ஷதே நோ ஜனனீ க்ருʼபார்த்³ரா .. 30-3..
தத்³விஸ்ம்ருʼதேர்ஜாதமித³ம்ʼ கரேண யஷ்ட்யா ச யா தாட³யதி ஸ்வபுத்ரம் .
தாமேவ பா³ல꞉ ஸ நிஜேஷ்டதா³த்ரீம்ʼ ஸாஸ்ரம்ʼ ருத³ன்மாதரமப்⁴யுபைதி .. 30-4..
மாதா ஹி ந꞉ ஶக்திரிமாம்ʼ ப்ரஸன்னாம்ʼ குர்யாம ப⁴க்த்யா தபஸா ச ஶீக்⁴ரம் .
ஸர்வாபத³꞉ ஸைவ ஹரிஷ்யதீதி ஶ்ருத்வாமராஸ்த்வாம்ʼ நுனுவுர்மஹேஶி .. 30-5..
நிஶம்ய தேஷாம்ʼ ஶ்ருதிவாக்யக³ர்ப⁴ஸ்துதிம்ʼ ப்ரஸன்னா விபு³தா⁴ம்ʼஸ்த்வமாத்த² .
அலம்ʼ விஷாதே³ன ஸுரா꞉ ஸமஸ்தம்ʼ ஜானே ஹரிஷ்யாமி ப⁴யம்ʼ த்³ருதம்ʼ வ꞉ .. 30-6..
ஹிமாத்³ரிபுத்ரீ விபு³தா⁴ஸ்தத³ர்த²ம்ʼ ஜாயேத கௌ³ரீ மம ஶக்திரேகா .
ஸா ச ப்ரதே³யா வ்ருʼஷப⁴த்⁴வஜாய தயோ꞉ ஸுதஸ்தம்ʼ தி³திஜம்ʼ ச ஹன்யாத் .. 30-7..
இத்த²ம்ʼ நிஶம்யாஸ்தப⁴யேஷு தே³வேஷ்வப்⁴யர்தி²தா தே³வி ஹிமாசலேன .
த்வம்ʼ வர்ணயந்தீ நிஜதத்த்வமேப்⁴ய꞉ ப்ரத³ர்ஶயாமாஸித² விஶ்வரூபம் .. 30-8..
ஸஹஸ்ரஶீர்ஷம்ʼ ச ஸஹஸ்ரவக்த்ரம்ʼ ஸஹஸ்ரகர்ணம்ʼ ச ஸஹஸ்ரநேத்ரம் .
ஸஹஸ்ரஹஸ்தம்ʼ ச ஸஹஸ்ரபாத³மனேகவித்³யுத்ப்ரப⁴முஜ்ஜ்வலம்ʼ ச .. 30-9..
த்³ருʼஷ்ட்வேத³மீஶ்வர்யகி²லைர்பி⁴யோக்தா த்வம்ʼ சோபஸம்ʼஹ்ருʼத்ய விராட்ஸ்வரூபம் .
க்ருʼபாவதீ ஸ்மேரமுகீ² புனஶ்ச நிவ்ருʼத்திமார்க³ம்ʼ கி³ரயே ந்யகா³தீ³꞉ .. 30-10..
உக்த்வா(அ)கி²லம்ʼ ஸம்ʼஸ்ருʼதிமுக்திமார்க³ம்ʼ ஸுரேஷு பஶ்யத்ஸு திரோத³தா⁴த² .
ஶ்ருத்வா(அ)த்³ரிமுக்²யாஸ்தவ கீ³தமுச்சைர்தே³வா ஜபத்⁴யானபரா ப³பூ⁴வு꞉ .. 30-11..
அதை²கதா³ ப்ராது³ரபூ⁴த்³தி⁴மாத்³ரௌ ஶாக்தம்ʼ மஹோ த³க்ஷக்³ருʼஹே யதா² ப்ராக் .
க்ரமேண தத்³தே³வி ப³பூ⁴வ கன்யா ஸா பார்வதீதி ப்ரதி²தா ஜக³த்ஸு .. 30-12..
ஹிமாத்³ரிணைஷா ச ஹராய த³த்தா தயோ꞉ ஸுத꞉ ஸ்கந்த³ இதி ப்ரஸித்³த⁴꞉ .
ஸ தாரகாக்²யம்ʼ தி³திஜம்ʼ நிஹத்ய ரரக்ஷ லோகாநகி²லான் மஹேஶி .. 30-13..
து³ர்வாஸஸ꞉ ஶாபப³லேன ஶக்ரோ நஷ்டாகி²லஶ்ரீர்வசனேன விஷ்ணோ꞉ .
க்ஷீரோத³தி⁴ம்ʼ ஸாஸுரதே³வஸங்கோ⁴ மமந்த² தஸ்மாது³த³பூ⁴ச்ச லக்ஷ்மீ꞉ .. 30-14..
யா பூஜிதேந்த்³ரேண ரமா தவைகா ஶக்தி꞉ ஸ்வரைஶ்வர்யபுன꞉ப்ரதா³னாத் .
ஶாபான்முனேர்தே³வக³ணான்விமோச்ய கடாக்ஷதஸ்தே ஹரிமாப பூ⁴ய꞉ .. 30-15..
த்வம்ʼ ஸர்வஶக்திர்ன ஜிதா(அ)ஸி கேனாப்யன்யான் ஜயஸ்யேவ ஸதா³ ஶரண்யா .
மாதேவ பத்னீவ ஸுதேவ வா த்வம்ʼ விபா⁴ஸி ப⁴க்தஸ்ய நமோ நமஸ்தே .. 30-16..
தசகம் 30
ஸ்ரீ பார்வதி அவதாரம்
1. ஸமாதிமக்னே, கிரிசே விரிஞ்சாது
தப: ப்ரஸ்ஸன்னாத், கில தாரகாக்யஹ
தைத்யோவரம் ப்ராப்ய, விஜித்ய தேவானு
ஸபாந்தவ: ஸ்வர்க்க,ஸுகான்ய பும்க்த
ஸதியைப் பிரிந்த சிவன் ஆழ்ந்த த்யானத்தில் ஆழ்ந்தார். அவருக்கு உலகத்தின் சிந்தனையே இல்லை. இந்த நேரத்தில் தாரகன் என்னும் ஒரு கொடிய அஸுரன் ப்ரம்மாவைக் குறித்துத் தவம் செய்து, வரத்தைப் பெற்று, ஸ்வர்கலோகத்தையும் ஆக்ரமித்து தேவர்களை அங்கிருந்து ஓடச் செய்தான். அஸுர பந்துக்களுடன் ஸ்வர்கலோகம் வந்து அங்கேயே சுகமாக வாழத் தொடங்கினான்.
2. வரை: ஸ பர்கௌரஸபுத்ரமாத்ர
வத்யத்வம் ஆப்தோSஸ்ய, ச பத்ன்யபாவாது
ஸர்வாதிபத்யம், ஸ்வபலம் ச மோஹானு –
மத்தோ ப்ருசம் சாச்,வதமேவ மேனே
“சிவனது புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும்” என்று தாரகாஸுரன் ப்ரம்மனிடம் வரம் பெற்றான். ஸதியைப் பிரிந்து துக்கத்தில் இருக்கும் சிவன் வேறு கல்யாணம் செய் கொள்ள மாட்டார், அதனால் சிவனுக்குப் புத்திரன் பிறக்க மாட்டான். தன்னைக் கொல்ல யாராலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், தன் சுகபோகமும் ஸ்வர்க்கலோகவாசமும் சாஸ்வதம் என்று நினைத்தான்.
3. நஷ்ட்டாகிலா: ஸ்ரீ, ஹரயே ஸீராஸ்தே
நிவேதயாமா,ஸுரசேஷ துக்கம்
ஸ சாSSஹ தேவா, அனயேன நூனம்
உபேக்ஷதே நோ, ஜனனீ க்ருபார்த்ரா
தாரகாஸுரனின் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்க்கத்தை விட்டுச் சென்ற தேவர்கள், தாரகாஸுரன் ப்ரம்மனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டார்கள். தேவி இல்லாத பொழுது, சிவனுக்கு எப்படிப் புத்திரன் பிறப்பான்? பாக்ய ஹீனர்களான நம்முடைய காரியம் என்ன ஆகப் போகிறதோ? என்று மிகவும் கவலையில் ஆழ்ந்து, விஷ்ணுவைப் பார்க்க வைகுண்டம் சென்றார்கள். “நாரயண மூர்த்தியே! எங்கள் கவலைத் தீர உபாயம் சொல்லுங்கள்” என வேண்டினர். விஷ்ணு சொன்னார் “தேவர்களே! கவலையை விடுங்கள். கேட்டதைத் தரும் கற்பக விருட்ஷம் போல், இந்த உலகத்தை ஆளும், மணித்வீப வாசியான தேவி இருக்கக் கவலை ஏன்? ஆனால் தேவியின் கருணைக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. அதனால் அந்த தேவி இப்பொழுது நம்மைப் பாராதவள் போல் இருக்கிறாள். தேவிக்குக் கருணை உண்டு. ஆனால் நாம்தான் அதற்கு உகந்தவர்களாக இல்லை”.
4. தத்விஸ்ம்ருதேர், ஜாத,மிதம்! கரேண
யஷ்ட்யா ச யா தாட,யதி ஸ்வபுத்ரம்
தாமேவ பால: ஸ, நிஜேஷ்டதாத்ரீம்
ஸாஸ்ரம் ருதன் மாதரமப்யுன்பைதி
விஷ்ணு மேலும் சொன்னார் “நாம் கருணை மயமான அந்த அன்னையை மறந்து விட்டோம். அதனால் தான் நமக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது. தாய் தன் குழந்தையை நேர்வழியில் நடத்த அடிப்பாள். அடித்தாலும் குழந்தை அம்மா! என்று தானே அழும்? தனக்கு வேண்டியதைத் தருபவள் அம்மாதான் என்று குழந்தைக்குத் தெரியும். தான் குறும்பு செய்ததால் தான் தாய் அடித்தாள் என்பதும் தெரியும். குழந்தைக்குத் தாயின்றி வேறு யாரும் இல்லை. அதுபோல் நாம் எல்லோரும் குழந்தைகள். அந்த தேவியே நமக்குத் தாய்”.
5. மாதா ஹி ந: சக்தி,ரிமாம் ப்ரஸ்ஸன்னாம்
குர்யாம பக்த்யா, தபஸா ச சீக்ரம்;
ஸர்வாபத: ஸைவ, ஹரிஷ்யதீ தீ
ச்ருத்வாSமராஸ்த்வாம், நுனுவுர் மஹேசி!
விஷ்ணு தொடர்ந்து சொன்னார் ” நாம் பக்தியுடன் தவம் செய்து அன்னையைச் சந்தோஷப்படுத்த வேண்டும். அம்பாள் நமது கஷ்டத்தை எல்லாம் நீக்குவாள்” என்றார். அம்பாளின் கருணையை அனுபவத்தில் அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் விஷ்ணு சொன்னதே சரி என்று நினைத்தார்கள். வேதாந்த வாக்யங்களால் தேவியைத் துதித்தார்கள்.
6. நிசம்ய தேஷாம், ச்ருதிவாக்யகர்ப-
– ஸ்துதிம் ப்ரஸன்னா, விபுதாம்ஸ்த்வமாத்த
அலம் விஷாதேன, ஸுரா:! ஸமஸ்தம்
ஜானே; ஹரிஷ்யாமி, பயம் த்ருதம் வஹ
விஷ்ணு தன் பத்னியுடனும், இந்திராதி தேவர்களுடனும், இமயமலைக்குச் சென்று, பல வருடங்கள் தேவியைத் துதித்தனர். அன்னை அவர்கள் முன் தோன்றி, “உங்களின் பயத்தைப் போக்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்தாள்.
7. ஹிமாத்ரிபுத்ரீ, விபுதாஸ்த தர்த்தம்
ஜாயேத கௌரீ, மம சக்திரேகா;
ஸா ச ப்ரதேயா, வ்ருஷபத் வஜாய;
தயோ: ஸுதஸ்தம், திதிஜம் ச ஹன்யாது
அம்பாள் எப்படி பயத்தைப் போக்குவாள்? அதையும் தேவியே சொன்னாள். “பர்வதராஜன் என்னை இருதய கமலத்தில் வைத்துப் பக்தியுடன் உபாஸிக்கிறான். என்னுடைய சக்தியான கௌரி இமயமலையில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறப்பாள். அவளைச் சிவன் திருமணம் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் மகன் தாரகாஸுரனை வதம் செய்வான்” என்றாள். சிவனும் விஷ்ணுவும் தங்களதுச் சக்திகளை மதிக்காததால் தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டதை முன்பு பார்த்தோம். அதற்குப் பரிகாரமாகத் தேவர்கள் தேவியைத் துதித்தார்கள். தேவீ அவர்கள் முன் தோன்றி “தக்ஷனது இல்லத்தில் தான் பிறப்பேன்” என்றாள். அப்படியே செய்தாள். இப்பொழுது ஹிமவானுக்கு மகளாகப் பிறப்பேன் என்று சொன்னாள். ஹிமவானுக்குக் கேட்காமலே கிடைத்த வரம் இது.
8. இத்தம் நிசம்யாஸ்த, பயேஷு தேவேஷு
அப்யர்த்திதா தேவி! ஹிமாசலேன
த்வம் வர்ணயந்தீ, நிஜதத்வமேப்யஹ
ப்ரதர்சயாமா,ஸித விச்வரூபம்
அம்மே நாராயணா, தேவீ நாராயணா
லக்ஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா
தேவீ தனக்கு மகளாகப் பிறக்கப் போகிறாள் என்பதை அறிந்த ஹிமவான் ஆவலுடன் காத்திருந்தான். தந்தையாகிய நான் எனது புத்ரியிடம் எனது மகள் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகுமா? அம்பாளின் பரம ரகஸ்யம் என்ன என்று அறிந்து கொண்டால் ஜாக்கிரதையாக இருக்கலாமே? என்று நினைத்தான். தேவர்கள் எல்லோரும் கேட்க தேவீ தத்வ உபதேஸம் செய்தாள். இது தேவீ பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு தேவி கீதை என்று பெயர். அம்பாளின் ஆதார தத்வம், ஸர்வவ்யாபித்வம் இவைகளை எல்லாம் கேட்ட தேவர்கள், அம்பாளின் விஸ்வரூபத்தைக் காண ஆவல் கொண்டார்கள்.
9. ஸஹஸ்ரசீர்ஷம் ச, ஸஹஸ்ரவகத்ரம்
ஸகஸ்ரகர்ணம் ச, ஸஹஸ்ரநேத்ரம்
ஸஹஸ்ரஹஸ்தம் ச, ஸஹஸ்ரபாதம்
அநேகவித்யுத் ப்ரபமுஜ்வலம் ச
சூரியன் என்பது ஒன்றுதான். ஆனால் அது ஆறு, குளம் குட்டை, கிணறு போன்ற பல நீர்நிலைகளில் பிரதிபலிக்கும் பொழுது பலவாகத் தோன்றுகிறது. பல சூரியன் இருப்பது போல் தோன்றுகிறது. அதுபோல அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். அனைத்துச் சரீரங்களும் அம்பாள் சரீரம் தான். அனைத்துக் கை, கால்களும் அம்பாள் கை கால்கள். அதுபோல் தலைகள், கண்கள் எல்லாமே அம்பாள் தான். அதனால் தான் விஸ்வரூபத்தில் கணக்கிடமுடியாத தலைகள் கைகள், கால்கள், கண்கள் என்று, கோடி சூர்யப் பிரகாஸமாயும், கோடி மின்னல் மின்னுவதைப் போன்ற ஒளியும் பார்க்கவே கண்ணைக் கூசும்படி இருந்தது.
10. த்ருஷ்ட்வேதம் ஈச்வர்ய,கிலைர் பியோக்தா
த்வம் சோபஸம்ஹ்ருத்ய, விராட்ஸ்வரூபம்
க்ருபாவதீ ஸ்மேர, முகீ புனச்ச
நிவ்ருத்திமார்க்கம், கிரயே ந்யகாதீஹீ
கண்ணால் பார்க்கக் கூட முடியாத அந்த பயங்கர விஸ்வரூபத்தைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தாயே! இந்த ரூபம் வேண்டாம், அழகிய சுந்தர மேனியாய்க் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனும் இப்படித்தான் சொன்னான். தேவி அழகிய சுந்தரியாகக் காட்சி தந்தாள். ஞானம், கர்மம், யோகம், பக்தி, ப்ரம்மத்யானம், பிரதிமா பூஜை ஆகியவைகளை விபரமாகச் சொன்னாள்.
11. உக்த்வாSகிலம் ஸம்,ஸ்ருதிமுக்திமார்க்கம்
ஸுரேஷு பச்யத்ஸு, திரோததாதஹ
ச்ருத்வாத்ரிமுக்யா,ஸ்தவ கீதமுச்சைர்ஹீ
தேவா ஜபத்யான அபரா பபூவுஹு
ஸம்சாரத்திலிருந்து முக்தி அடையக் கூடிய வழிகளை விரிவாகச் சொன்னாள். அதன் பின் தேவீ மறைந்தாள்.
12. அதைகதா ப்ரா,துரபூத் ஹி மாத்ரௌ
சாக்தம் மஹோ தக்ஷ கிருஹே யதா ப்ராகு
க்ரமேண தத் தேவி! பபூவ கன்யா;
ஸா பார்வதீதி ப்ரதிதா ஜகத்ஸு
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே.
தக்ஷனது இல்லத்தில் தோன்றிய தேஜஸ் எப்படிக் குழந்தையாக மாறியதோ, அப்படியே இமாலயத்தில் இமவான் இல்லத்தில் தோன்றிய தேஜஸும் ஒரு கன்னிகையாகி ” பார்வதீ” என்னும் பெயருடன் பிரசித்தி பெற்றது.
13. ஹி மாத்ரிணைஷா, ச ஹராய தத்தா:
தயோர்: ஸு த: ஸ் கந்த, இதி ப்ரஸித்தஹ
ஸ தாரகாக்யம், திதிஜம் நிஹத்ய
ரரக்ஷ லோகாந் அகிலான் மஹே சி!
சிவன் பார்வதியை மணந்து கொண்டார். அவர்களுக்குக் ஸ்கந்தன் பிறந்தான். ஸ்கந்தரால் தாரகாஸுரன் வதம் செய்யப்பட்டான். ஸதியின் பிரிவால்வருந்திய சிவன் மீண்டும் பார்வதியை மணந்ததும் தேவியின் அருள் தான்.
14. துர்வாஸ ஸ: சாப,பலேன சக்ரோ
நஷ்ட்டாகிலஸ்ரீர், வசனேன விஷ்ணோஹோ
க்ஷீராததிம் ஸா,ஸு ரதேவஸங்கஹ
மமந்த; தஸ் மா,து தபுச்ச லக்ஷ்மீஹீ
ஒரு சமயம் விஷ்ணுவின் பாதத்தில் சிவன் புஷ்பத்தால் அர்ச்சனைச் செய்தார். அதில் ஒரு பூ துர்வாஸருக்குக் கிடைத்தது. அவர் அதை இந்திரனுக்குத் தந்தார். இந்திரன் அதை ஐராவதத்தின் தலையில் வைத்தான். அதனால் ஐராவதம் இந்திரனை விட்டுப் பிரிந்தது. துர்வாஸர் கோபத்தால் சாபம் தர, ஸ்வர்க்கலோக செல்வங்கள் நசித்தன. தேவர்களின் ஐஸ்வர்யம் நசித்து, இந்திரன் ப்ரம்மா, விஷ்ணுவிடம் செல்ல, விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் லக்ஷ்மி உயர்ந்து வருவாள் என்றார். தேவர்கள் அஸுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைய லக்ஷ்மி தோன்றினாள்.
15. யா பூஜிதேந்த்ரேண, ரமா தவைகா
சக்தி: ஸ் வரைச்வர்ய, புன: ப்ரதாநாது
சாபான் முனேர், தேவகணான் விமோச்ய
கடாக்ஷ தஸ்தே ஹரிமாப பூயஹ
லக்ஷ்மியை இந்திரன் முறைப்படி பூஜை செய்தான். சந்தோஷமடைந்த லக்ஷ்மி சகல ஐஸ்வர்யங்களையும் தேவர்களுக்குத் தந்தாள். துர்வாஸர் சாபத்திலிருந்து தேவர்கள் விடுபட்டார்கள். தேவர்கள் சந்தோஷமடைந்தனர். விஷ்ணுவை பிரிந்த சக்தி மீண்டும் கிடைத்தது. (தசகம் 28 ல் சொல்லப்பட்டிருக்கிறது)
16. த்வம் ஸர்வசக்திர், ந ஜிதாஸி கேனாபி
அந்யான் ஜயஸ்யே,வ ஸதா சரண்யா
மாதேவ பத்னீ,வ ஸுதேவ வா த்வம்
விபாஸி பக்தஸ்ய;, நமோ நமஸ்தே
சகல சக்தியும் உடையவள் அம்பாள். அவள் யாரிடமும் தோல்வி அடையமாட்டாள். அவள் வெற்றித் திருமகள். அந்த அம்பாளைத்தான் பக்தன் சரண் அடைய வேண்டும். அவள் எந்த ரூபத்திலும் வருவாள். இமவானுக்குப் புத்ரி, சிவனுக்குப் பத்னீ, விஷ்ணுவிற்குப் பத்னீ. ஆனால் அம்மா, புத்ரீ பத்னீ என்ற பந்தத்தில் சிக்க மாட்டாள். அவள் எப்போதும் சுதந்திரமானவள். அந்த தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்
முப்பதாம் தசகம் முடிந்தது.
Also, read
- Devi Narayaneeyam Lyrics in Tamil Dasakam 1 to 10 – தேவீ நாராயணீயம் தசகம் 1 to 10
- Devi Narayaneeyam Lyrics in Tamil Dasakam 11 to 20 – தேவீ நாராயணீயம் தசகம் 11 to 20
- Devi Narayaneeyam Lyrics in Tamil Dasakam 31 to 41 – தேவீ நாராயணீயம் தசகம் 31 to 4
No comments:
Post a Comment