29 ஏகோனத்ரிம்ʼஶத³ஶக꞉ - தே³வீபீடோ²த்பத்தி꞉
அதை²கதா³(அ)த்³ருʼஶ்யத த³க்ஷகே³ஹே ஶாக்தம்ʼ மஹஸ்தச்ச ப³பூ⁴வ பா³லா .
விஜ்ஞாய தே ஶக்திமிமாம்ʼ ஜக³த்ஸு ஸர்வே(அ)பி ஹ்ருʼஷ்டா அப⁴வன் க்ஷணஶ்ச .. 29-1..
த³க்ஷ꞉ ஸ்வகே³ஹாபதிதாம்ʼ சகார நாம்னா ஸதீம்ʼ போஷயதி ஸ்ம தாம்ʼ ஸ꞉ .
ஸ்மரன் வசஸ்தே கி³ரிஶாய காலே ப்ரதா³ய தாம்ʼ த்³வௌ ஸமதோஷயச்ச .. 29-2..
ஏவம்ʼ ஶிவ꞉ஶக்தியுத꞉ புனஶ்ச ப³பூ⁴வ க³ச்ச²த்ஸு தி³னேஷு த³க்ஷ꞉ .
தை³வாச்சி²வத்³வேஷமவாப தே³ஹம்ʼ தத்போஷிதம்ʼ ஸ்வம்ʼ விஜஹௌ ஸதீ ச .. 29-3..
து³꞉கே²ன கோபேன ச ஹா ஸதீதி முஹுர்வத³ன்னுத்³த்⁴ருʼததா³ரதே³ஹ꞉ .
ப³ப்⁴ராம ஸர்வத்ர ஹர꞉ ஸுரேஷு பஶ்யத்ஸு ஶார்ங்கீ³ ஶிவமன்வசாரீத் .. 29-4..
ருத்³ராம்ʼஸவின்யஸ்தஸதீஶரீரம்ʼ விஷ்ணு꞉ ஶரௌகை⁴ர்ப³ஹுஶஶ்சகர்த .
ஏகைகஶ꞉ பேதுரமுஷ்ய க²ண்டா³ பூ⁴மௌ ஶிவே ஸாஷ்டஶதம்ʼ ஸ்த²லேஷு .. 29-5..
யதோ யத꞉ பேதுரிமே ஸ்த²லானி ஸர்வாணி தானி ப்ரதி²தானி லோகே .
இமானி பூதானி ப⁴வானி தே³வீபீடா²னி ஸர்வாக⁴ஹராணி பா⁴ந்தி .. 29-6..
த்வமேகமேவாத்³வயமத்ர பி⁴ன்னநாமானி த்⁴ருʼத்வா க²லு மந்த்ரதந்த்ரை꞉ .
ஸம்பூஜ்யமானா ஶரணாக³தானாம்ʼ பு⁴க்திம்ʼ ச முக்திம்ʼ ச த³தா³ஸி மாத꞉ .. 29-7..
நிர்விண்ணசித்த꞉ ஸ ஸதீவியோகா³ச்சி²வ꞉ ஸ்மரம்ʼஸ்த்வாம்ʼ குஹசிந்நிஷண்ண꞉ .
ஸமாதி⁴மக்³னோ(அ)ப⁴வதே³ஷ லோக꞉ ஶக்திம்ʼ வினா ஹா விரஸோ(அ)லஸஶ்ச .. 29-8..
சிந்தாகுலா மோஹதி⁴யோ விஶீர்ணதோஷா மஹாரோக³னிபீடி³தாஶ்ச .
ஸௌபா⁴க்³யஹீனா விஹதாபி⁴லாஷா꞉ ஸர்வே ஸதோ³த்³விக்³னஹ்ருʼதோ³ ப³பூ⁴வு꞉ .. 29-9..
ஶிவோ(அ)பி ஶக்த்யா ஸஹித꞉ கரோதி ஸர்வம்ʼ வியுக்தஶ்ச தயா ஜட³꞉ ஸ்யாத் .
மா மா(அ)ஸ்து மே ஶக்திவியோக³ ஏஷ தா³ஸோ(அ)ஸ்மி பூ⁴யோ வரதே³ நமஸ்தே .. 29-10..
தசகம் 29
தேவீ பீடோத்பதி
1. அதைகதாSத்ருச்யத தக்ஷகேஹே
சாக்தம் மஹஸ்தச்ச, பபூவ பாலா
விஜ்ஞாய தே சக்திம் இமாம் ஜகத்ஸு
ஸர்வேSபி ஹ்ருஷ்டா, அபவத் க்ஷணச்ச
28 ஆவது தசகத்தில், தக்ஷன் சிவா விஷ்ணுவிற்குச் சக்தியை வேண்டினான். சலனமில்லாமல் இருந்த அவர்களுக்குத் தேவி அவர்ககளின் தொழிலைச் செய்வதற்குச் சக்தியைத் தந்தாள். தனது கிரஹத்தில் அன்னையின் அவதாரம் வேண்டும் என்று பிரார்த்தனைச் செய்தான் அல்லவா? அதனால் சில காலம் சென்ற பின் தக்ஷன் வீட்டில் ஒரு நாள் சக்தி சம்பந்தமான தேஜஸ் அவதாரம் செய்தது. தக்ஷன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது ஒரு அழகானப் பெண் குழந்தையாக மாறியது. அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினார்கள். அது சக்தியின் அம்சம் என்பதை அறிந்த தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். சூரியன் பிரகாஸமாக ஒளிர்ந்தான். ஆறுகள் சந்தோஷத்தில் பெருக்கெடுத்து ஓடின.
2. தக்ஷ: ஸ்வகேஹா,பதிதாம் சகார
நாம்நா ஸதீம், போஷ,யதி ஸ்ம தாம் ஸஹ
ஸ்மரன் வசஸ்தே, கிரிசாய காலே
ப்ரதாய தாம் த்வௌ, ஸமதோஷயச்ச
அம்பாளின் சக்தி தனது கிருஹத்தில் அவதரிக்கும் என்று முன்பு அம்பாள் சொன்னது தக்ஷனுக்கு நினைவிற்கு வந்தது. இந்தக்குழந்தை அம்பாளின் சக்திதான் என்பதைத் தக்ஷன் புரிந்து கொண்டான். அந்தக் குழந்தைக்கு “ஸதீ” என்று பெயர் வைத்தான். ஸதீ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யுவதி ஆனாள். இந்த சத்தியைச் சிவன் ஏற்றுக்கொள்ளட்டும் என்று அம்பாள் சொன்னாள் அல்லவா? (28.8) அதனால் ஸதியைச் சிவனுக்கே மணம் முடித்தான் தக்ஷன். சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.
3. ஏவம் சிவ: சக்தியுத: புனச்ச
பபூவ; கச்சத்ஸு தினேஷு தக்ஷஹ
தைவாத் சிவத்வேஷம் அவாப, தேஹம்
தத்போஷிதம் ஸ்வம், விஜஹொ ஸதீ ச
அவர்களுடைய வாழ்க்கைக் குறுகியக் காலமாகத்தான் இருந்தது. ஒருசமயம் துர்வாஸ முனிவர் ஜாம்பூநதேஸ்வரீ என்னும் தேவியை மாயா பீஜத்தால் ஜபித்தார். மகிழ்ச்சியுடன் அவள் ஒரு பூமாலையைத் தந்து அனுக்ரஹம் செய்தாள். தக்ஷன் அந்த மாலையை விரும்பிக் கேட்க, துர்வாஸர் அதை அவனுக்குத் தந்தார். அதை அவன் தூய்மையான இடத்தில் வைக்காமல் தனது படுக்கை அறையில் அலங்காரமாக வைத்தான். மாலையின் நறுமணத்தால் காமவேட்கைக் கொண்டு மனைவியுடன் இணைந்தான். பூஜிக்கப்பட வேண்டிய அந்த பூமாலையைப் படுக்கை அறையில் வைக்கலாமா? அதனால் அதன் பரிசுத்தத்திற்குக் களங்கம் வந்ததால், அவனுக்குத் தோஷம் வந்தது. சிவனிடம் துவேஷம் வர ஆரம்பித்தது. ஸதி இதைக் கண்டு மனம் வருந்தினாள். சிவ த்வேஷியான தக்ஷனால் வளர்க்கப் பட்ட இந்த ஸரீரம் தனக்கு வேண்டாம் என்று யோகாக்னியில் ப்ரவேசித்தாள். இது தக்ஷனின் தலை எழுத்து.
4. துக்கேன கோபேன ச ஹா ஸதீ தி
முஹுர் வதன்னுத்,ருததாரதேஹஹ
பப்ராம ஸர்வத்ர, ஹர: ஸுரேஷு
பச்யத்ஸு சார்ங்கீ, சிவமன்வசாரீத்
சிவன் மிகவும் துக்கமடைந்தார். ஸதியின் ஸரீரத்தைத் தன் தோளில் சுமந்து கொண்டு, சித்தப் பிரமை அடைந்தவர் போல் தாண்டவம் ஆடினார். அவரின் கோபாக்னியைக் கண்டு யாரும் அவரிடம் நெருங்கவே பயந்தனர். அப்பொழுது விஷ்ணு வில்லும் அம்புமாக சிவனிடம் சென்றார்.
5. ருத்ராம்ஸவின்யஸ்த,ஸதீசரீரம்
விஷ்ணு: சரௌகைர், பஹுசச்ச கர்த்த;
ஏகைகச: பேதுர,முஷ்ய கண்டா
பூமௌ சிவே! ஸாஷ்டசதம் ஸ்தலேஷு
சிவன் ஒரு பயித்தியக்காரன் போல் ஸதியின் ஸரீரத்தைத் தோளின் மீது வைத்துக் கொண்டு உலகம் சுற்றினார். அருகில் செல்ல எல்லோரும் பயந்தனர். அப்போது விஷ்ணு சிவனின் அருகில் சென்று ” எம்பெருமானே! தாங்கள் சுமந்திருக்கும் ஸதியின் ஸரீரம் சித்கலா ரூபம். அக்கலைகளைத் தனித் தனியாக உலகமெங்கும் பீடமாக இருக்கச் செய்து, தாங்களும் அதில் வீற்றிருக்க வேண்டும்” என்று வேண்ட, சிவனும் “அப்படியே ஆகட்டும்” என்று அருள் செய்தார். விஷ்ணு ஸார்த்தம் என்னும் தன்னுடைய வில்லால் ஸதியின் ஸரீரத்தைத் துண்டாக்கினார். அது பூஉலகத்தில் 108 இடங்களில் விழுந்தது. இந்த விஷ்ணுவிற்கு இதைச் செய்ய அனுக்ரஹித்தவளே அம்பாள் தான். ஸ்லோகத்தில் இதன் ஆசிரயர் “சிவே” என்று சொல்கிறார். உலகத்தில் மங்களம் பொங்கவே தேவீ இப்படிச் செய்தாள்.
6. யதோ யத: பேதுரிமே ஸ்தலானி
ஸர்வாணி தானி, ப்ரதிதானி லோகே
இமானி பூதானி பவானி! தேவீ-
பீடானி ஸர்வாக, ஹராணி பாந்தி
தேவியின் சரீரம் விழுந்த இடங்கள் எல்லாம் தேவியின் க்ஷேத்ரமாக விளங்கியது. அந்த 108 துர்கா க்ஷேத்ரங்களும் மிகவும் பிரசித்தமானவை. இந்த பீடங்களில் தேவியை பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் கிடைத்தற்கரிய பொருள் ஏதும் இல்லை. இந்த க்ஷேத்ரங்களில் மாயாபீஜ மந்திரத்தை ஜபிப்பவனுக்கு, அம்மந்திரத்தின் சக்தி சித்தியாகும் என்று சொல்லப் படுகிறது. தேவியின் முகம் விழுந்த இடத்திற்கு 1. வாரணாசியில் விசாலாக்ஷி என்று பெயர். 2. நைமிசாரணியத்தில் லிங்கதாரிணி. 3. பிரயாகையில் லலிதா 4. துவாரகையில் ருக்மிணி 5. பிருந்தாவனத்தில் ராதா. 6. மதுராவில் தேவகீ 7. சித்ரகூடத்தில் சீதா 8. குஜரத்தில் அம்பாதேவீ. 9. பெங்களூரில் நிமிஷாதேவி.10. உத்ரகிரியில் ஔஷதை. இதுபோல் 108 இடங்களில் பாபங்களைத் தீர்ப்பதற்காக ஏற்பட்டது
7. த்வமேகமேவா,த்வயமத்ர பின்ன –
– நாமானி த்ருத்வா, கலு மந்த்ரதந்த்ரைஹி
ஸம்பூஜ்யமானா, சரணாகதானாம்
புக்திம் ச முக்திம், ச ததாஸி மாதஹ!
அம்பாள் ஒன்றுதான். இரண்டு இல்லை. ஆனாலும் 108 பீடங்களிலும் 108 ரூபங்களுடனும், நாமத்துடனும் இருக்கிறாள். தக்ஷன் சிவனை அவமதித்ததால் அம்பாள் தனக்கு நிகரான சாயா ஸதியைச் சிருஷ்டித்து, அவள்தான் யாகத்தீயில் குதித்தாள் என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பித்ரு ஹத்தி என்ற பாபம் வரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தாள். உண்மையான ஸதீ அக்னியில் குதித்திருந்தால், தக்ஷனையும் கொன்று விடுவார்களல்லவா? அப்பொழுதுத் தந்தையைக் கொன்ற பாபம் வருமல்லவா? அதனால் அப்படிச் செய்தாள். இந்த 108 க்ஷேத்ரங்களும் சக்தி பீடங்கள். அந்த இடங்களில் சிவனும் பல மூர்த்தி வடிவத்தில் நிலை பெற்றிருக்கிறார்.
8. நிர்விண்ண சித்த: ஸ, ஸதீவியோகாது
சிவ: ஸ்மரம்ஸ்த்வாம், குஹ சின்னிஷண்ணஹ
ஸமாதிமக்னோS பவதேஷ லோகஹ
சக்திம் வினா ஹா! விரஸோலஸச்ச
ஸதியின் பிரிவு சிவனுக்குத் துக்கத்தைத் தந்தது. அம்பாளை நினைத்து ஓரிடத்தில் ஸ்திரமாய் அமர்ந்தார். அப்படியே ஸமாதி நிலையில் ஆழ்ந்து போனார். பிரபஞ்சத்தின் நினைவு இல்லாமல், தேவியின் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டு, காலத்தைக் கழித்தார். சக்தி இல்லாத உலகம் சக்தியை இழந்து சராசரப் பிரபஞ்சம் முழவதும் சௌபாக்யம் இன்றி இருந்தது. யாருக்கும் எந்த சுறு சுறுப்பும் இல்லை.
9. சிந்தாகுலா மோஹ,தியோ விசீர்ண்ண
தோஷா மஹாரோத,நிபீடிதாச்ச
சௌபாக்யஹீனா, விஹதாபிலாஷாஹா
ஸர்வே ஸதோத்விக்ன, ஹ்ருதோ பபூவுஹு
எல்லோருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. புத்தியும் மங்கிப் போயிற்று. அனைவருக்கும் இருதயம் உலர்ந்து, ஆனந்தம் வற்றிப் போனது. கவலை கொண்ட சித்தத்துடன் இருந்தனர். ரோகமும் வந்தது. தேவீ பாகவதத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
10. சிவோSபி சக்த்யா ஸஹித: கரோதி
ஸர்வம், வியுக்தச்ச தயா ஜட: ஸ்யாது
மா மாஸ்து மே சக்தி, வியோக ஏஷ
தாஸோSஸ்மி; பூயோ, வரதே: நமஸ்தே
ஸதி பிரிந்ததும் சிவனும் சுறு சுறுபில்லாதவர் ஆனார். அப்படி ஒரு பிரிவுத் தனக்கு வந்து விடக்கூடாது என்று இதன் ஆசிரியர் நினக்கிறார். அதனால் அம்பாள் முன் இதைக் கூறி, மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார். அம்பாள் ஸர்வ வரதாயினி அல்லவா?
தசகம் இருபத்தி ஒன்பது முடிந்தது
ENQUIRY geetanjaliglobalgurukulam
Wednesday, 23 August 2023
29 ஏகோனத்ரிம்ʼஶத³ஶக꞉ - தே³வீபீடோ²த்பத்தி꞉sr71-81
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment