தேவீ நாராயணீயம் dn dasakam 1 tamIZH meaning
1. யஸ்மின்நிதம், யத இதம், யதிதம், யதஸ்மாது
உத்தீர்ணரூபம், அபிபச்யதி யத் சமஸ்தம்
நோ த்ருச்யதே ச, வசஸாம் மனஸச்ச தூரே
யத் பாதி சா தி மஹஸே ப்ரணமாமி தஸ்மை
ஆதி தேவியிடமிருந்து தான் அனைத்தும் உண்டாகிறது. அன்னையின் சக்தியை இவ்வளவு தான் என்று அளவிட்டுச் சொல்ல முடியாது. அனைத்திற்கும் அவளே காரண கர்த்தா. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்திற்கும் அவளே மூலகாரணம்.
யாருடைய உதவியும் தேவிக்குத் தேவையில்லை. நாம் நாராயணீயமோ அல்லது பாகவதமோ எதைப் படித்தாலும் அன்னைக்கு அது பற்றிக் கவலையில்லை. நமக்கு எதைச் செய்வதற்கும் இந்த்ரியங்களின் உதவி தேவை. அன்னைக்கு இந்த்ரியங்கள் கிடையாது. உபநிஷத்துக்களில் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் அன்னை புரிந்து கொள்ள முடியாத ப்ரம்மதத்வம். அப்படிப்பட்ட தேவியை நான் வணங்குகிறேன்.
2. ந ஸ்த்ரீ புமான் ந சுரதைத்ய நராதயோ ந
க்ளீபம் ந பூதமபி கர்மகுணா தயச்ச
பூமம்ஸ்த்வமேவ ஸதநாத்ய விகார்ய நந்தம்
ஸர்வம் த்வயா ஜகதிதம் விததம் விபாதி
பூதா, பிரம்மம், பரமாத்மா, ஆதி தேவி அனைத்தும் ஒன்றுதான். இந்த ஆதி தேவியின் ரூபம் எப்படி இருக்கும்? யாரும் சொல்ல முடியாது. ஆனாலும் நமக்கு அன்னையின் கருணையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. எதைப் பார்த்தாலும் இது பிரம்மமோ, அதற்கு இந்த குணம் இருக்குமோ, இந்த ரூபம் இருக்குமோ என்று கற்பனை செய்து கொள்கிறோம். அது ஆணா, பெண்ணா, தேவனா, அசுரனா, அல்லது அலியா யாருக்கும் தெரியாது. எதுவானாலும் அது ப்ரம்மமே. அதற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஜனனம், மரணம் இல்லை. ஆனால் அது இல்லை யென்றால் எந்த வேலையும் நடக்காது. அந்த ப்ரம்மமான தேவியை நமஸ்கரிக்கிறேன்.
3. ரூபம்ந தேSபி பஹுரூப ப்ருதாத்த சக்திஹி
நாட்யம் தனோஷி நடவத் கலு விச்வரங்கே
வர்ஷாணி தே ஸரஸநாட்ய- கலாவிலீநா
பக்தா அஹோ! ஸஹ்ருதயா க்ஷணவன்னயந்தி
ப்ரம்மம் ஒரு நடிகன் போலத்தான். ஒரு நடிகன் நாடக மேடையில் திருடனாகவும், போலீஸ்காரனாகவும் நடிக்கிறான். நாடகம் முடிந்ததும் அவன் வேஷம் கலைகிறது. அவன் மீண்டும் முன்போலவே ஆகிறான். அந்த நாடகத்தில் போடும் வேஷத்திற்கேற்ப அவன் செய்யும் பாவமோ அல்லது புண்யமோ அவனை பாதிப்பதில்லை. அதுபோல் நாம் செய்யும் செயல்கள் எதிலும் அது
பாவமோ, புண்யமோ பிரம்மத்திற்குச் சம்பந்தமில்லை. நாம் செய்யும் கர்மங்களின் புண்ணியம் பாபம் இரண்டும் நம்மையே சாரும்.
4. ரூபானுஸாரி கலு நாம ததோ புதைஸ்த்வம்
தேவீதி தேவ, இதி சாஸி நிகத்யமானா
தேவ்யாம் த்வயீர்யஸ உமா கமலாSத வாக்வா
தேவே து ஷண்முக உமா,பதி ரச்யுதோ வா
ப்ரம்மத்திற்கு ரூபம், நாமம் இல்லை. ஆண் என்றால் ராமன், கிருஷ்ணன். பெண் என்றால் உமா, சரஸ்வதி, லக்ஷ்மி என்று சொல்கிறோம். ஞானம், முக்தி தேவை என்றால் பார்வதியை பூஜிக்கிறோம். செல்வம் வேண்டும் என்றால் லக்ஷ்மியை பூஜிக்கிறோம். படிப்பு, பாட்டு, அறிவுக்கு சரஸ்வதியை பூஜிக்கிறோம். ஆனால் விஷ்ணு, ராமன், லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாமே ஒன்று தான். அதுவே அந்த ப்ரம்மம்.
5. த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்
ப்ரம்மாண்டஸர்க பரிபாலன சம்ஹ்ருதீச்ச
ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு! நிஜாஞயைவ
பக்த்தேஷ்வனன்ய சரணே,ஷீ க்ருபாவதீ ச
ப்ரம்மம் அரூபமாக இருந்தாலும் எல்லா மதத்தினரும் அதை இஷ்ட தெய்வமாக ராமன், சிவன், விஷ்ணு, அல்லா, ஜீஸஸ் என்று அவரவர் விருப்பம் போல, ப்ரம்மத்தைத் தான் பூஜிக்கின்றனர். ப்ரம்மத்தை சக்தி ரூபமாக பூஜிப்பது தேவீ நாராயணீயம். சக்தியும் ப்ரம்மமே. ஒரு ராணி எல்லோருக்கும் இதைச் செய், அதைச் செய் என்று கட்டளை இடுவது போல, சக்தியும் ப்ரம்மாவை நீ படைப்பினைச் செய், விஷ்ணுவை நீ காக்கும் தொழிலைச் செய், ருத்ரனை நீ அழிக்கும் தொழிலைச் செய் என்று புருவ அசைப்பில் கட்டளை தருகிறள். அவர்கள் அனைவரும், அன்னையை வணங்கிப் பின் அவரவர் தொழிலைச் செய்கின்றனர்.
6. மாதா கரோதி தனயஸ்ய க்ருதே சுபானி
கர்மாணி, தஸ்ய பதனே ப்ருசமேதி துக்கம்
வ்ருத்தௌ சுகம் ச: தவ கர்ம ந, நாபி துக்கம்
த்வம் ஹ்யேவ கர்மபலதா ஜகதாம் விதாத்ரீ
ஒரு செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் நாமே
காரணம். அந்த அந்த கர்ம பலனை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. இதன் காரணத்தால் துக்கம், மகிழ்ச்சி, கஷ்டம், நஷ்டம், பிரிவு, சேர்க்கை போன்ற இரட்டைகளை அனுபவிக்க நேரிடுகிறது. தேவிக்குக் கர்மபந்தக் கட்டு இல்லை. அதனால் சுகம், துக்கம் எதுவும் இல்லை. நமக்கு சுகம் தருபவள் அவள். அதனால் அவளைப் பணிவதே
நமக்கு நல்வழி தரும்.
7. ஸர்வத்ர வர்ஷஸி தயா, மத யேவ வ்ருஷ்ட்யா
ஸிக்த: ஸுபீஜ இவ வ்ருத்திமுபைதி பக்தஹ
துர்பீஜவத் வ்ரஜதி நாசம் அபக்த ஏவ;
த்வம் நிர்க்ருணா ந விஷமா ந ச லோகமாதஹ
உழுது பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. மழை எல்லா விதைக்கும் ஒரே மாதிரி தான் பெய்கிறது. அதற்கு எந்த பாரபக்ஷமும் இல்லை. அதைப் போல் நாம் அனவரும் அன்னையின் குழந்தைகள். அன்னை காட்டும் கருணை மழையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், சந்தோஷத்திற்கும், கஷ்டத்திற்கும் கர்ம பலனே காரணம். அன்னையின் கருணையில் பாரபக்ஷமில்லை.
8. ஸர்வோபரீச்வரி! விபாதி ஸுதாஸ முத்ரஹ
ஸ்தன்மத்யத: பரிவ்ருதே விவிதை; ஸுதுர்க்கைஹி
சத்ராயிதே த்ரிஜகதாம் பவதீ மணி த்வீ
பாக்யே சிவே! நிஜபதே ஹஸிதான,னா ஸ்தே
அமிர்தகடலின் மத்தியில், கடம்பவன காடுகளால் சூழப்பட்டு, சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட மணித்வீபம் என்னும் அரண்மனையில் அந்தப்புரத்தில் பரமசிவனுடைய மடியில், ஆனந்த சல்லாபத்துடன் சயனித்திருக்கும் அன்னையே! உன்னை நான் வணங்குகிறேன்.
9. யஸ்தே புமானபிததாதி மஹத்வ முச்சைஹி
யோ நாம காயதி ச்ருணோதி ச தே விலஜ்ஜஹ
யச்சாதனோதி ப்ருசமாத்ம நிவேதனம் தே
ஸ ஸ்வான்யகானி விதுனோதி யதா தமோSர்க்கஹ
தேவியை நாம் ஸ்தோத்ரம், பாராயணம், பூஜை, பஜனை போன்றவைகளால் சந்தோஷப்படுத்த வேண்டும். நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்பொழுதான் நாம் செய்த பாபம் போகும். அஞ்ஞான இருட்டு விலகி ஒளி கிடைக்கும்.
10. த்வாம் நிர்குணாம் ச ஸகுணாம் ச புமான்விரக்தோ
ஜானாதி, கிஞ்சிதபி நோ விஷயேஷு ஸக்தஹ
ஞேயா பவ த்வமிஹ மே பவதாபஹந்த்ரீம்
பக்திம் ததஸ்வ, வரதே! பரிபாஹி மாம் த்வம்
இந்த்ரியங்களை அதனதன் போக்கில் அலையவிடாமல் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். உலக போக சுக ஆசையை விட்டுவிட வேண்டும். அப்போது அன்னை நமக்குத் தெரிவாள். அப்பொழுது பேரானந்த சுகம் கிடைக்கும்.
தாயே! அப்பேர்பட்ட அந்த பக்தியை எனக்குத் தா என்று இந்நூலின் ஆசிரியர் வேண்டுகிறார்.
முதல் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment