ENQUIRY geetanjaliglobalgurukulam

Friday, 22 December 2023

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

 

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைவஸ்வ தாக்ய மநு புத்ர நபாக ஜாத
நாபா கநாமக நரேந்திர ஸூதோ அம்பரீஷ
சப்தார்ண வாவ்ருத மஹீ தயிதோ அபி ரேமே
த்வத் சங்கிஷு த்வயி ச மக்ந மநாஸ் சதைவ –1-

நரேந்திர-நரர்களுக்கு தலைவன்
தாசாரதி
வாசுயதேவன்
போல் நாபாகன் நபாகனின் மகன்
சப்தார்ண வாவ்ருத-ஏழு கடலால் சூழப்பட்ட

த்வத் சங்கிஷு த்வயி ச–பாகவத கைங்கர்யம் ஏற்றம் -அது போகத் தான் பகவத் பக்தி

விவஸ் வான் ஸூர்ய புத்ரன் -வைவஸ்வத மனுவின் பிள்ளை நமுகன் -அவனுடைய பிள்ளை நாபாகன் –
அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான் -அவன் ஏழு கடல் சூழ்ந்த பூமிக்குத் தலைவனாய் இருந்தான் –
இருப்பினும் தங்கள் இடத்திலும் தங்கள் பக்தர்கள் இடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான் –

சதைவ-எப்பொழுதும்

——-

த்வத் ப்ரீதயே சகலமேவ விதாந்வதோ அஸ்ய
பக்த் யைவ தேவா நசிராத்  (விரைவாக -சிரம் நீண்ட காலம் சிரஞ்சீவி ) ப்ருதா ப்ரஸாதம்(அநுக்ரஹம் )
யே நாஸ்ய யாசந ம்ருதே அப் யபி ரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் பிரவித தார ஸஹஸ்ர தாரம் –2-

பிரவித தார–பிரவித தார

தேவனே உம்மிடம் கொண்ட பக்தியால் –சகலமேவ-அனைத்து கர்மங்களையும் ஓன்று விடாமல் செய்தான் –
அவன் கேட்காமலேயே அவனை ரக்ஷித்து அருள
ஆயிரக் கணக்கான முனைகளை உடைய தங்கள் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்து அருளினீர்கள்

————

சத்வாதஸீ வ்ரதமதோ பவத் அர்சநார்தம்
வர்ஷம் ததவ் மது வநே யமுநோப கண்டே
பத்ந்யா சமம் ஸூ மனஸா மஹதீம் விதன்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜன் பஸூ ஷஷ்டி கோடிம்–3-

பிறகு அம்பரீஷன் யமுனைக் கரையில் உள்ள மது வனத்தில் நற் குணங்கள் கொண்ட தன்
மனைவி உடன் தங்களைப் பூஜித்து வந்தான்
பஸூ ஷஷ்டி கோடிம்-அறுபது கோடிப் பசுக்களை –த்விஜேஷு விஸ்ருஜன்-வேதம் அறிந்தவர்களுக்குத் தானம் செய்தான்
ஒரு வருஷ காலம் துவாதசி விரதத்தை அனுஷ்ட்டித்து தங்களைப் பூஜித்து வந்தான்

மது வனத்தில்-துருவன் தவம் இருந்த இடம்
ராமாயணம் -லவணாசுரனை அழித்து நகரமாக மதுரா ஆகி மன்னு வடமதுரை ஆனது

சத்வாதஸீ வ்ரத-ஏகாதசி விரதம் -பாரணை பண்ணி துவாதசியில் பூர்த்தி
16-2 கீதா பாஷ்யம் -துவாதசி விரதம் என்றே கூறுகிறார்
துவாதச சமாராதனம் பண்ணுவதற்காகவே ஏகாதசி விரதம்-பகவானின் உவப்புக்காகவே விரதம் இருக்க வேண்டும்-
இதுவே முக்கிய காரணம் -தேசிகன் தாத்பர்ய சந்திரிகையில் காட்டி அருளுகிறார்

————-

தத்ராத பாரண திநே பவத் அர்சநாந்தே
துர்வாஸ ஸ அஸ்ய முனிநா பவனம் ப்ரபேதே
போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண பரார்தி சீலோ
மந்தம் ஜகாம யமுனாம் நியமாந் விதாஸ்யந் –4-

போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண-உண்பதற்கு வரித்தான் அரசன்

விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மது வனத்துக்கு வந்தார் –
அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினார்
விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து –மந்தம் ஜகாம-மெதுவே யமுனைக் கரைக்குச் சென்றார் –

————

ராஞ்ஞா அத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத்
வாரைவ பாரணம் அகாரி பவத் பரேண
ப்ராப்தோ முநிஸ் தத் அத திவ்ய த்ருஸா விஜாநந்
ஷிப்யந் க்ருத உத்த்ருத ஜடோ விததாந க்ருத்யாம் –5-

அரசனான அம்பரீஷன் பாரணை செய்ய வேண்டிய திதி முடியப் போகிறதே என்ற கேதாத்-கவலையில்
தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான்
ஞான த்ருஷ்டியால் அதை அறிந்த முனிவர் கோபத்துடன் கடும் சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து
தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து அதில் இருந்து க்ருத்யை என்ற துர் தேவதையை உண்டாக்கினார் –

————

க்ருத்யாம் ச தாம் அஸி தராம் புவனம் தஹந்தீம்
அக்ரே அபி விஷ்யந் ரூபதிர்ந பதாச்ச கம்பே
த்வத் பக்த பாதம் அபி வீஷ்ய ஸூ தர்சனம் தே
க்ருத்யா நலம் சலபயன் முநிவந் வதா வீத் —6-

கையில் கத்தி யுடன் உலகங்களை எரிக்கும் அந்த துர் தேவதையை நேரில் கண்ட
அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான்
ஸூ தர்சன சக்ரமானது அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யை(சலபயன்-சலபம் போல் அழித்து )அழித்து
துர்வாசரைப் பின் தொடர்ந்து சென்றது –

———

தாவந் நசேஷ புவநேஷு பியா ஸ பஸ்யன்
விஸ் வத்ர சக்ரம் அபி தே கதவான் விரிஞ்சம்
க கால சக்ரம்  அதி லங்க யதீத் யபாஸ்த
சர்வம் யசவ் ச ச பவந்த மவந்த தைவ –-7–

கால சக்கரத்தோடு வெண் சங்கம் கை ஏந்தினாய் ஆழ்வார்

–யார் என்றும் ப்ரம்மாவாலும் முடியாதே

பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார் – எல்லா இடத்துக்கும் சக்ராயுதம் பின்
தொடர்ந்த்தத்தைக் கண்டு பிரமனைச் சரண் அடைந்தார்
கால சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரமதேவர் முனிவரை அனுப்பி விட்டார்
பிறகு பரம சிவன் இடம் சென்றார் -அவரும் தங்களையே சரணம் அடைய உபதேசம் செய்தார் –

பூயோ பவந் நிலய மேத்ய முனிம் நமந்தம்
ப்ரோஸே பவாந் அஹம் ருஷே தநு பக்த தாஸ
ஞானம் தபஸ் ச விநயாந் விதமேவ மாந்யம்
யாஹ் யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் –8-

எங்கும் நிறைந்தவனே -கடைசியாக முனிவர் ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து உம்மைச் சரண் அடைந்தார் –
தாங்கள் -முனிவரே நான் பக்தர்களுக்கு அடியவன்
அறிவும் தவமும் இருந்தாலும் அஹங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும்
நீங்கள் அம்பரீஷனையே சரணம் அடையுங்கோள் என்று உபதேசித்து அருளினீர்கள் –

பார்த்த சாரதியாக இருந்தானே –
கிரீடம் தலை மேல் இருக்க அஹங்காரம் -14 வருஷம் ஒதுக்கி வைத்து
பாதுகா -கைங்கர்ய ஸ்ரீ சிம்ஹாசனத்தில் இருத்தினான்
நனு -உறுதியாக பக்த தாஸன்

பூமந்–சாந்தோக்யம் -யத்ர நான்யத் பஸ்யதி –இத்யாதி பூமா ஸப்தம் –
பஹு மா சேர்ந்து பூமா –
வார்த்தை தொடங்கி –பலவற்றையும் சொல்லி -ஆர்வம் -ஜீவன் -சரீராத்மா மிக பெரியவன்
இவ்வளவு பெரியவன் பக்த தாஸன் சொல்லிக் கொள்வதே ஸ்ரேஷ்டம்
அதற்காகவே இந்தப் பத பிரயோகம்
நான் பெரியவன் —
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -ஆழ்வார்

——

தாவத் ச மேத்ய முனிநா ச க்ருஹீத பாதோ
ராஜா அபஸ்ருத்ய பவதஸ்த்ம சாவ் அநவ்ஷீத்
சக்ரே கதே முனிரதாத் அகிலாஸி ஷோ அஸ்மை
த்வத் பக்திமா கசி க்ருதே அபி க்ருபாம் ச ஸம் சந் –9-

முனிவரும் அம்பரீஷன் க்ருஹீத பாதோ-கால்களை பற்றினார் -அவன் விலகி சக்ராயுதத்தை ஸ்துதிக்க அது திரும்பிச் சென்றது
துர்வாசர் அம்பரீஷனின் பக்தியையும் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும்
மெச்சி அவனை ஆசீர்வதித்தார் –

குற்றம் செய்தவர் பக்கலில் பொறையும்–கிருபையும் உகப்பும் வேண்டும்

————

ராஜா ப்ரதீஷ்ய மும் ஏகச மாம் அ நாஸ்வாந்
ஸம் போஜ்ய ஸாது தம் ருஷிம் விஸ் ருஜன் ப்ரசன்னம்
புக்த்வா ஸ்வயம் த்வயி ததோ அபி த்ருடம் ரதோ அபூத்
ஸாயுஜ்யம் ஆப ச ச மாம் பவ நே ச பாயா –10-

அம்பரீஷன் ஒரு வருஷம் துர்வாசரை எதிர்பார்த்து உண்ணாமல் விரதம் இருந்து அவர் வந்ததும்
அவருக்கு உணவு அளித்து வழி அனுப்பி பிறகு பாரணை செய்தான்
முன்பு இருந்ததை விட அதிகமாக தங்கள் இடம் பக்தி கொண்டு முடிவில் தங்களை அடைந்தான்
அத்தகைய மகிமை வாய்ந்த குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேணும் –

நானே தான் ஆயிடுக -என்பதற்கு சிறந்த த்ருஷ்டாந்தம் அம்பரீஷன்

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

No comments: