19 ஏகோனவிம்ʼஶத³ஶக꞉ - பூ⁴ம்யா꞉ து³꞉க²ம் 1
புரா த⁴ரா து³ர்ஜனபா⁴ரதீ³னா ஸமம்ʼ ஸுரப்⁴யா விபு³தை⁴ஶ்ச தே³வி .
விதி⁴ம்ʼ ஸமேத்ய ஸ்வத³ஶாமுவாச ஸ சானயத்க்ஷீரபயோநிதி⁴ம்ʼ தான் .. 19-1..
ஸ்துதோ ஹரி꞉ பத்³மப⁴வேன ஸர்வம்ʼ ஜ்ஞாத்வா(அ)கி²லான் ஸாஞ்ஜலிப³த்³த⁴மாஹ .
ப்³ரஹ்மன் ஸுரா நைவ வயம்ʼ ஸ்வதந்த்ரா தை³வம்ʼ ப³லீய꞉ கிமஹம்ʼ கரோமி .. 19-2..
தை³வேன நீத꞉ க²லு மத்ஸ்யகூர்மகோலாதி³ஜன்மான்யவஶோ(அ)ஹமாப்த꞉ .
ந்ருʼஸிம்ʼஹபா⁴வாத³திபீ⁴கரத்வம்ʼ ஹயானனத்வாத்பரிஹாஸ்யதாம்ʼ ச .. 19-3..
ஜாத꞉ புனர்தா³ஶரதி²ஶ்ச து³꞉கா²த்³து³꞉க²ம்ʼ க³தோ(அ)ஹம்ʼ விபினாந்தசாரீ .
ராஜ்யம்ʼ ச நஷ்டம்ʼ த³யிதா ஹ்ருʼதா மே பிதா ம்ருʼதோ ஹா ப்லவகா³꞉ ஸஹாயா꞉ .. 19-4..
க்ருʼத்வா ரணம்ʼ பீ⁴மமரிம்ʼ நிஹத்ய பத்னீம்ʼ ச ராஜ்யம்ʼ ச புனர்க்³ருʼஹீத்வா .
து³ஷ்டாபவாதே³ன பதிவ்ரதாம்ʼ தாம்ʼ விஹாய ஹா து³ர்யஶஸா(அ)பி⁴ஷிக்த꞉ .. 19-5..
யதி³ ஸ்வதந்த்ரோ(அ)ஸ்மி மமைவமார்திர்ன ஸ்யாத்³வயம்ʼ கர்மகலாபப³த்³தா⁴꞉ .
ஸதா³(அ)பி மாயவஶகா³ஸ்ததோ(அ)த்ர மாயாதி⁴நாதா²ம்ʼ ஶரணம்ʼ வ்ரஜாம꞉ .. 19-6..
இதீரிதைர்ப⁴க்திவினம்ரஶீர்ஷைர்னிமீலிதாக்ஷைர்விபு³தை⁴꞉ ஸ்ம்ருʼதா த்வம் .
ப்ரபா⁴தஸந்த்⁴யேவ ஜபாஸுமாங்கீ³ தமோனிஹந்த்ரீ ச புர꞉ ஸ்தி²தா(ஆ)த்த² .. 19-7..
ஜானே த³ஶாம்ʼ வோ வஸுதே³வபுத்ரோ பூ⁴த்வா ஹரிர்து³ஷ்டஜனான் நிஹந்தா .
தத³ர்த²ஶக்தீரஹமஸ்ய த³த்³யாமம்ʼஶேன ஜாயேய ச நந்த³புத்ரீ .. 19-8..
யூயம்ʼ ச ஸாஹாய்யமமுஷ்ய கர்துமம்ʼஶேன தே³வா த³யிதாஸமேதா꞉ .
ஜாயேத்⁴வமுர்வ்யாம்ʼ ஜக³தோ(அ)ஸ்து ப⁴த்³ரமேவம்ʼ விநிர்தி³ஶ்ய திரோத³தா⁴த² .. 19-9..
விசித்ரது³ஷ்டாஸுரபா⁴வபா⁴ரனிபீடி³தம்ʼ மே ஹ்ருʼத³யம்ʼ மஹேஶி .
அத்ராவதீர்யேத³மபாகுரு த்வம்ʼ மாதா ஹி மே தே வரதே³ நமோ(அ)ஸ்து .. 19-10..
தசகம் 19
பூமியின் துக்கம்
1. புரா தரா துர்,ஜனபாரதீனா
ஸமம் ஸுரப்யா, விபுதைச்ச, தேவி!
விதிம் ஸமேத்ய, ஸ்வதசாமுவாச;
ஸ சாநயத் க்ஷீ,ரபயோநிதிம் தான்
துர் ஜனங்கள் கணக்கில்லாமல் பூமியில் அதிகமாக ஜனிக்க ஆரம்பித்ததும், பூமியின் பாரம் மிகவும் அதிகமாக ஆரம்பித்தது. பூமிதேவி ஸ்வர்க்கம் சென்று, இந்த்ராதி தேவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. அதனால் காமதேனுவுடனும் தேவர்களுடனும் பிரம்மாவிடம் சென்றாள். பூதேவியே! உன் பாரத்தைக் குறைப்பதற்கு நான் சக்தி உடையவன் அல்லன் என்று சொல்லி, பிரம்மா எல்லோரையும் பாற்கடலுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.
2. ஸ்துதோ ஹரி: பத்ம,பவேன ஸர்வம்
ஞாத்வாSகிலான் ஸாஞ்,சலிபந்தமாஹ
ப்ரம்மன்! ஸீரா நைவ, வயம் ஸ்வதந்த்ரா;
தைவம் பலீய:! கிமஹம் கரோமி?
அனைவருடனும் பாற்கடலுக்குச் சென்ற பிரம்மா, புருஷஸூக்த ஜபம் செய்தார். மனம் குளிர்ந்த விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, அனைவரையும் கைகூப்பி வரவேற்றார். அவர்கள் வந்த காரணத்தை அவரே அறிந்து கொண்டார். விஷ்ணு சொன்னார் "பூமியின் துக்கத்தை நானோ பிரம்மாவோ தீர்க்க முடியாது. அவரவர் கர்மத்தையும் விதியையும் மாற்ற யாராலும் முடியாது. அதனால் பூமியின் பாரத்தைக் குறைக்க என்னால் என்ன செய்ய முடியும்"? என்றார் .
3. தைவேன நீத: கலு மத்ஸ்யகூர்ம
கோலாதி ஜன்மான்ய, வசோSஹமாப்தஹ
ந்ருஸிம்ஹ பாவா,ததி பீகரத்வம்
ஹயான னத்வாத், பரிஹாஸ்யதாம் ச
தெய்வமானாலும் விதியை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இது அவருடைய சொந்த அனுபவம். அவருக்கு வைகுண்டம் என்னும் ஒரு இடம் உண்டு. லக்ஷ்மி என்ற அழகிய பத்னியும் உண்டு. ஆனால் அவரால் அங்கு சுகமாக வாழ முடிந்ததா? அது தெய்வத்தால் தீர்மானம் செய்யப்படுகிறது. மீனாக, ஆமையாக, பன்றியாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கூடிய நரசிம்ம அவதாரம் எடுத்தார். குதிரைத்தலையுடன் ஹயக்ரீவ அவதாரம் செய்தார். இதையெல்லாம் யாராவது விரும்புவார்களா? இதன் காரணங்களை தேவர்களும் அறிவார்கள். இப்படியிருக்க அவரால் எப்படி பூமியின் பாரத்தைக் குறைக்க முடியும்?
4. ஜாத: புநர் தாச,ரதிச்ச துக்காது
துக்கம் கதோஹம், விபினாந்தசாரீ
ராஜ்யம் ச நஷ்டம்; தயிதா ஹ்ருதா மே;
பிதா ம்ருதோஹா!; ப்ளவகா; சஹாயா:
விஷ்ணு தன் விதியை நொந்து கொள்கிறார். மச்ச, கூர்ம அவதார காலம் மிகவும் குறைவுதான். ஆனால் தசரத குமாரனாக, ராமனாக, அவதரித்த துக்கம் இன்று நினைத்தாலும் துக்கத்தையேத் தருகிறது. சீதாவைப் பிரிந்த போது, லக்ஷ்மணன் மட்டுமே அருகில் உதவியாக இருந்தான். அதன் பிறகு உதவிக்கு வந்தது யார்? குரங்குகள் மட்டுமே!
5. க்ருத்வா ரணம் பீம,மரிம் நிஹத்ய
பத்னீம் ச ராஜ்யம், ச புநர் க்ருஹீத்வா
துஷ்டாபவாதேன பதிவ்ரதாம் தாம்
விஹாய ஹா! துர்ய,சஸாSபிஷிக்தஹ
குரங்குகளின் உதவியால்தான் ராவணனை வதம் செய்ய முடிந்தது. கற்ப்புக்கரசியான சீதையை மீட்டு அயோத்தி வந்து, இழந்த ராஜ்ஜியம் மீண்டும் பெற்று, பட்டாபிஷேகமும் நடந்தது. ஏதோ ஒரு துஷ்டன் சீதையைப் பழிக்க, அதன் காரணமாக இன்றும் எல்லோரிடமும் பழிச்சொல் கேட்கிறேன் என்றார் ராமன். ராமனுக்கு மூன்று விதமான பட்டாபிஷேகம். 1. நஷ்டமான பட்டாபிஷேகம் 2. உண்மையான பட்டாபிஷேகம் 3. துஷ்கீர்த்தியால் பட்டாபிஷேகம். இப்படி மூன்று விதமான பட்டாபிஷேகம்.
6. யதி ஸ்வதந்த்ரோ&ஸ்மி, மமைவ மார்த்திர்
ந ஸ்யாத்; வயம், கர்ம, கலாப பத்தாஹா
ஸதாSபி மாயா,வசகா, ஸ்ததோSத்ர
மாயாதி நாதாம், சரணம் வ்ரஜாமஹ
தான் கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவன் இல்லை என்றால் இப்படித் துக்கம் வருமா? இந்த விஷ்ணு, இதைக் கேட்கும் தேவர்கள், பூமி எல்லோருமே கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவர்களே! எல்லோரும் மாயைக்கு அடிமையானவர்களே! இந்த மாயை இல்லாதவர் யார்? அது தேவிமட்டுமே! இந்த கர்மபந்த விடுதலை பெற ஒரே வழி தேவியைத் துதிப்பது தான். அதனால் பூமியின் துக்கம் தீர்க்க தேவியினால் மட்டுமே முடியும்.
7. இதீரிதைர் பக்தி,விநம்ர சீர்ஷைர்
நிமீலி,தாக்ஷைர், விபுதை: ஸ்ம்ருதா த்வம்
ப்ரபாதஸந்த்யேவ, ஜபாஸுமாங்கீ
தமோனி ஹந்த்ரீ, ச புர: ஸ்திதாSSத்த
விஷ்ணுவின் பேச்சைக் கேட்ட அனைவரும் பக்தியுடன் தலை குனிந்து, ஒன்றாக தேவியைத் துதித்தார்கள். இருளை நீக்கும் காலை நேர செந்நிற ஒளி போல, தேவியும் உடனே அவர்கள் முன், தோன்றினாள். அந்த தேவி என்ன சொன்னாள்?
8. ஜானே தஸாம் வோ, வஸுதேவ புத்ரோ
பூத்வா ஹரிர் துஷ்ட,ஜனான் நிஹந்தா;
ததர்த்தசக்தீ,ரஹமஸ்ய தத்யா-
மம்சேன ஜாயே,ய ச நந்தபுத்ரீ
விஷ்ணு வசுதேவ புத்திரனாக யது குலத்தில் அம்சாவதாரம் செய்வார். அவரே துஷ்டர்களை சம்ஹாரம் செய்வார். அதற்கானச் சக்தியை நான் தகுந்த சமயத்தில் அவருக்குத் தருவேன். நானும் அம்சமாக கோகுலத்தில் யசோதையிடம் தோன்றுவேன். அனைத்து தேவ காரியத்தையும் முடித்து வைப்பேன் என்று சொன்னாள்.
9. யூயும் ச ஸாஹாய்,யமமுஷ்ய கர்தும்
அம்சேன தேவா, த்யிதா ஸமேதாஹா
ஜாயேத்வ முர்வ்யாம்;, ஜகதோSஸ்து பத்ரம்
ஏவம் வினிர்திச்ய, திரோததாதா
தேவி மேலும் சொன்னாள் பூபார நாசத்தை விஷ்ணு நடத்துவார், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்வார். இது உலகிற்கு நன்மை தரும். தேவர்களாகிய நீங்களும் உங்கள் பத்னிகளுடன் தோன்றி தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லி மறைந்தாள்.
10. விசித்ர துஷ்டா,ஸுர பாவபார
நிபீடிதம் மே, ஹ்ருதயம் மஹேசி!
அத்ராவதீர்யேதம், அபாகுரு; த்வம்
மாதா ஹி மே; தே வரதே; நமோஸ்து
அம்மா! என் மனதிலும் தீய சிந்தனைகள் பெருகி வருகின்றன. காம க்ரோதாதிகளும் நிறைந்திருக்கிறரர்கள். அதனால் தாங்கள் என் இதயத்தில் அவதரித்து இவைகளைச் சம்ஹாரம் செயுங்கள் என்று இதன் ஆசிரியர் வேண்டுகிறார்.
பத்தொன்பதாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment