16 ஷோட³ஶத³ஶக꞉ - ஸுத³ர்ஶனவிவாஹம்
ஶ்ருத்வா வதூ⁴வாக்யமரம்ʼ குமாரோ ஹ்ருʼஷ்டோ ப⁴ரத்³வாஜமுனிம்ʼ ப்ரணம்ய .
ஆப்ருʼச்²ய மாத்ரா ஸஹ தே³வி ஸ த்வாம்ʼ ஸ்மரன் ரதே²னாப புரம்ʼ ஸுபா³ஹோ꞉ .. 16-1..
ஸ்வயம்ʼவராஹூதமஹீபு⁴ஜாம்ʼ ஸ ஸபா⁴ம்ʼ ப்ரவிஷ்டோ ஹதபீ⁴ர்நிஷண்ண꞉ .
கன்யா கலா பூர்ணஶஶீ த்வஸாவித்யாஹுர்ஜனாஸ்தாமபி⁴வீக்ஷமாணா꞉ .. 16-2..
வதூ⁴ஶ்ச தத்³த³ர்ஶனவர்தி⁴தானுராகா³ ஸ்மரந்தீ தவ வாக்யஸாரம் .
ஸபா⁴ம்ʼ ந்ருʼபாணாமஜிதேந்த்³ரியாணாம்ʼ ந ப்ராவிஶத்ஸா பித்ருʼசோதி³தா(அ)பி .. 16-3..
ஶங்காகுலாஸ்தே ந்ருʼவரா ப³பூ⁴வுருச்சைர்யுதா⁴ஜித்குபிதோ ஜகா³த³- .
மா தீ³யதாம்ʼ லோகஹிதானபி⁴ஜ்ஞா வதூ⁴ரஶக்தாய ஸுத³ர்ஶனாய .. 16-4..
பா³லோ(அ)யமித்யேஷ மயா(ஆ)ஶ்ரமே ப்ராகு³பேக்ஷித꞉ ஸோ(அ)த்ர ரிபுத்வமேதி .
மா(அ)யம்ʼ ச வத்⁴வா வ்ரியதாம்ʼ வ்ருʼதஶ்சேத்³த⁴ன்யாமிமம்ʼ தாம்ʼ ச ஹரேயமாஶு .. 16-5..
ஶ்ருத்வா யுதா⁴ஜித்³வசனம்ʼ ந்ருʼபாலா ஹிதைஷிண꞉ கேசிது³பேத்ய ஸர்வம் .
ஸுத³ர்ஶனம்ʼ ப்ரோசுரதா²பி தீ⁴ர꞉ ஸ நிர்ப⁴யோ நைவ சசால தே³வி .. 16-6..
ஏகத்ர புத்ரீ ச ஸுத³ர்ஶனஶ்ச யுதா⁴ஜித³ன்யத்ர ப³லீ ஸகோப꞉ .
தன்மத்⁴யகோ³ மங்க்ஷு ந்ருʼப꞉ ஸுபா³ஹுர்ப³த்³தா⁴ஞ்ஜலி꞉ ப்ராஹ ந்ருʼபான் வினம்ர꞉ .. 16-7..
ந்ருʼபா வசோ மே ஶ்ருʼணுதேஹ பா³லா நாயாதி புத்ரீ மம மண்ட³பே(அ)த்ர .
தத்க்ஷம்யதாம்ʼ ஶ்வோ(அ)த்ர நயாம்யஹம்ʼ தாம்ʼ யாதாத்³ய வோ விஶ்ரமமந்தி³ராணி .. 16-8..
க³தேஷு ஸர்வேஷு ஸுத³ர்ஶனஸ்து த்வாம்ʼ ஸம்ʼஸ்மரன் மாத்ருʼஹிதானுஸாரீ .
ஸுபா³ஹுனா தந்நிஶி தேன த³த்தாம்ʼ வதூ⁴ம்ʼ யதா²வித்⁴யுது³வாஹ தே³வி .. 16-9..
ப்ராதர்யுதா⁴ஜித்ப்ரப³லோ விவாஹவார்தாம்ʼ நிஶம்யாத்தருஷா ஸஸைன்ய꞉ .
ஸுத³ர்ஶனம்ʼ மாத்ருʼவதூ⁴ஸமேதம்ʼ யாத்ரோன்முக²ம்ʼ பீ⁴மரவோ ருரோத⁴ .. 16-10..
ததோ ரணே கோ⁴ரதரே ஸுபா³ஹு꞉ க்லீம்ʼ க்லீமிதீஶானி ஸமுச்சசார .
தத்ராவிராஸீ꞉ ஸமராங்க³ணே த்வம்ʼ ஸிம்ʼஹாதி⁴ரூடா⁴ ஸ்வஜனார்திஹந்த்ரீ .. 16-11..
த்வந்நாம கா³யன் கத²யன் கு³ணாம்ʼஸ்தே த்வாம்ʼ பூஜயம்ʼஶ்சாத்ர நயாமி காலம் .
ஸ்வப்னே(அ)பி த்³ருʼஷ்டா ந மயா த்வமம்பே³ க்ருʼபாம்ʼ குரு த்வம்ʼ மயி தே நமோ(அ)ஸ்து .. 16-12..
ஸுதர்சனனுக்கு அன்னை நேரில் காட்சி தந்தாள். சசிகலாவிற்குக் கனவில் காட்சி தந்தாள். அவர்களுடன் அன்னை பேசினாள்.
தசகம் 16ஸுதர்சனவிவாஹம்o
16 ஷோட³ஶத³ஶக꞉ - ஸுத³ர்ஶனவிவாஹம்
ஶ்ருத்வா வதூ⁴வாக்யமரம்ʼ குமாரோ ஹ்ருʼஷ்டோ ப⁴ரத்³வாஜமுனிம்ʼ ப்ரணம்ய .
ஆப்ருʼச்²ய மாத்ரா ஸஹ தே³வி ஸ த்வாம்ʼ ஸ்மரன் ரதே²னாப புரம்ʼ ஸுபா³ஹோ꞉ .. 16-1..
இந்த சூழ்நிலையில், தேவி தன்னிடம் கூறிய சசிகலையைக் காண வேண்டும் என்று ஸுதர்சனன் ஆவல் கொண்டான். அந்த நேரத்தில் சசிகலையிடமிருந்து, அந்த அந்தணன் வந்து, அங்கு நடந்தவைகளையும் "ஸுதர்சனன் சுயம்வரத்திற்கு வரவேண்டும், தன்னை மணந்து கொள்ள வேண்டும்" என்று சசிகலை தெரிவித்ததாகவும் கூறுகிறான். அதனால் ஸுதர்சனன் பரத்வாஜரைப் பார்த்து, தேவி தன்னிடம் கூறியவற்றையும், சசிகலையிடமிருந்து அந்தணர் கொண்டு வந்த செய்தியையும் கூறி, அவர் அனுமதியும் ஆசியும் பெற்றுத், தன் தாயையும் வணங்கி, காசி நகரம் நோக்கி ரதத்தில் புறப்படுகிறான். அங்கு உள்ள முனிவர்கள் "சுதர்சனா! உனக்குக் கோஸல நாடு மீண்டும் கிடைக்கும், நீ மீண்டும் அரசனாவாய்" என்று அவனுக்கு ஆசி கூறி அனுப்புகிறார்கள்.
ஸ்வயம்ʼவராஹூதமஹீபு⁴ஜாம்ʼ ஸ ஸபா⁴ம்ʼ ப்ரவிஷ்டோ ஹதபீ⁴ர்நிஷண்ண꞉ .
கன்யா கலா பூர்ணஶஶீ த்வஸாவித்யாஹுர்ஜனாஸ்தாமபி⁴வீக்ஷமாணா꞉ .. 16-2..
ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருகிறான். அங்கு பல பெரிய பெரிய ராஜாக்கள் வந்திருக்கின்றனர். ஸுதர்சனனுக்கு ராஜ்யம் இல்லை, அவன் ராஜாவும் இல்லை. ஆனால் அவனிடம் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று இருக்கிறது. அது என்ன? பக்தி. தேவி பக்தி. அந்த பக்தியினால் உண்டான தைரியத்தால் அவன் அங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டதும் சில ராஜாக்கள் ஆகா! இவனன்றோ சசிகலைக்கு ஏற்றவன். இவன் சந்திரன் போலவும், அவள் கலையாகவும் இருக்கின்றனரே. இவர்களல்லவோ ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் என நினைக்கின்றனர்.
வதூ⁴ஶ்ச தத்³த³ர்ஶனவர்தி⁴தானுராகா³ ஸ்மரந்தீ தவ வாக்யஸாரம் .
ஸபா⁴ம்ʼ ந்ருʼபாணாமஜிதேந்த்³ரியாணாம்ʼ ந ப்ராவிஶத்ஸா பித்ருʼசோதி³தா(அ)பி .. 16-3..
சபையில் அமர்ந்திருக்கும் ஸுதர்சனனை சசிகலா பார்க்கிறாள். ஆகா! இவன் தேவி சொன்னது போல் மிக அழகாக இருக்கிறான். எனக்கு ஏற்றவனாகவும் இருக்கிறான். நான் நினைத்ததை விட அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறாள். அவளின் தந்தை அவளை சுயம்வர மண்டபத்திற்கு அழைக்கிறார். ஆனால் சசிகலை " அப்பா! நான் ஏற்கனவே ஸுதர்சனனை மணாளனாக வரித்து விட்டேன். அதனால் நான் சுயம்வர மண்டபம் வர விரும்பவில்லை. என்னை ஸுதர்சனனுக்கே விவாஹம் செய்துவையுங்கள்" என்று சொன்னாள்.
ஶங்காகுலாஸ்தே ந்ருʼவரா ப³பூ⁴வுருச்சைர்யுதா⁴ஜித்குபிதோ ஜகா³த³- .
மா தீ³யதாம்ʼ லோகஹிதானபி⁴ஜ்ஞா வதூ⁴ரஶக்தாய ஸுத³ர்ஶனாய .. 16-4..
எல்லா தேசத்து ராஜாக்களும் சபையில் கூடியிருந்தும், சசிகலை இன்னும் சுயம்வரம் மண்டபத்திற்கு வரவில்லை. சசிகலைக்கு ஸுதர்சனனிடம் பிரேமை. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அப்போது மிகவும் பிரபலமான ராஜாவான யுதாஜித் "சசிகலையை சுயம்வரத்திற்கு அழைத்த ராஜாக்களில், ஏதோ ஒரு ராஜாவிற்கு மட்டுமே கல்யாணம் செய்து தர வேண்டும். ஸுதர்சனன் ராஜாவல்ல. ராஜ கன்னிகையை மணக்க அவனுக்குத் தகுதியில்லை. ஸுதர்சனன் எதற்கும் தகுதியில்லாதவன். அவனுக்கு சசிகலையை கல்யாணம் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்".
பா³லோ(அ)யமித்யேஷ மயா(ஆ)ஶ்ரமே ப்ராகு³பேக்ஷித꞉ ஸோ(அ)த்ர ரிபுத்வமேதி .
மா(அ)யம்ʼ ச வத்⁴வா வ்ரியதாம்ʼ வ்ருʼதஶ்சேத்³த⁴ன்யாமிமம்ʼ தாம்ʼ ச ஹரேயமாஶு .. 16-5..
பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் ஸுதர்சனனும் அவன் தாயான மனோரமாவும் இருந்த போது, அவர்களை பலவந்தமாகக் கொண்டு போக முயற்சி செய்தான் யுதாஜித். ஆனால் முனிவரின் சாபத்திற்கு பயந்து அவர்களை அப்படியே விட்டு வைத்தான். அன்று செய்த செயல் இன்று தவறாக ஆனது. அதனால் தான் ஒன்றும் அறியாத பாலகனாக இருந்த ஸுதர்சனன் வளர்ந்து, இப்படி எதிரியாக வந்து நிற்கிறான் என்று நினைத்தான். சுபாகுவிடம் சசிகலையை ஸுதர்சனனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால் ஸுதர்சனனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். (தேவீ பாகவதத்தில் இந்த சுயம்வரப் பகுதி மிக முக்யமாகச் சொல்லப் படுகிறது).
ஶ்ருத்வா யுதா⁴ஜித்³வசனம்ʼ ந்ருʼபாலா ஹிதைஷிண꞉ கேசிது³பேத்ய ஸர்வம் .
ஸுத³ர்ஶனம்ʼ ப்ரோசுரதா²பி தீ⁴ர꞉ ஸ நிர்ப⁴யோ நைவ சசால தே³வி .. 16-6..
யுதாஜித்தின் மனதை அறிந்த சில நல்ல குணமுடைய ராஜாக்கள், ஸுதர்ஸனனிடம் சென்று "ராஜ புத்திரனே! இந்த சுயம்வரத்திற்கு நீயாக வந்தாயா? அல்லது யாரும் உன்னை அழைத்தார்களா? நீயோ தனியாக வந்திருக்கிறாய். உன் சகோதரனுக்கு அந்த கன்னிகையை மணமுடிக்க யுதாஜித் நிச்சயித்திருக்கிறான். உனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் எதற்கும் துணிந்தவன். அவன் இதற்காக யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். உனக்கோ சகாயம் செய்ய யாரும் துணை இல்லை. அதனால் நீ யோசித்து முடிவு செய். இல்லாவிட்டால் இப்பொழுதே நீ கிளம்பிப் போய்விடு. இதை உன் நலனுக்காகவே கூறினோம்" என்று சொன்னார்கள். ஸுதர்சனன் சொல்கிறான் "நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. என்னிடம் எந்த படை பலமும் இல்லை. என் இஷ்ட தேவதை பகவதியின் விருப்பப்படி நான் இங்கு சுயம்வரத்திற்கு வந்தேன். அவள் விருப்பம் என்னவோ அதன் படிதான் எல்லாம் நடக்கும். இந்த உலகம் முழுவதும் அவள் விருப்படிதான் இயங்குகிறது. அதனால் எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும். அதை மாற்ற யாராலும் முடியாது. என்னிடம் பகைமை காட்டும் யுதாஜித்திடமோ அல்லது அவருக்குத் துணை புரியும் மற்ற ராஜாக்களிடமோ எனக்குப் பகைமை இல்லை (இது ஸத் புத்தி உள்ளவர்களின் குணம்). அந்த பகவதி எல்லாம் பார்த்துக் கொள்வாள். எனக்கு எந்த பயமும் இல்லை" என்று சொல்கிறான்.
ஏகத்ர புத்ரீ ச ஸுத³ர்ஶனஶ்ச யுதா⁴ஜித³ன்யத்ர ப³லீ ஸகோப꞉ .
தன்மத்⁴யகோ³ மங்க்ஷு ந்ருʼப꞉ ஸுபா³ஹுர்ப³த்³தா⁴ஞ்ஜலி꞉ ப்ராஹ ந்ருʼபான் வினம்ர꞉ .. 16-7..
இந்த நேரத்தில் சுபாஹு நினைக்கிறார் ஸுதர்சனனைத்தான் மணப்பேன் என்று சசிகலை சொல்கிறாள். ஸுதர்சனன் சசிகலையை பலாத்காரமாக கொண்டு போக மாட்டான். அந்த தவறான செயலை அவன் செய்யவும் மாட்டான். சுயம்வரத்திற்கு வந்த அவனை நான் திரும்பிப் போ என்று சொல்ல மாட்டேன். அது நியாயம் இல்லை. ஆனாலும் சசிகலை அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வாள். அப்படி நடந்தால் யுதாஜித்தும் அவனைப் போன்ற மற்ற ராஜாக்களும் கோபம் கொண்டு சண்டைக்கு வருவார்கள். இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? என்ன செய்வது என்று மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வருகிறான். என்ன முடிவு அது?
ந்ருʼபா வசோ மே ஶ்ருʼணுதேஹ பா³லா நாயாதி புத்ரீ மம மண்ட³பே(அ)த்ர .
தத்க்ஷம்யதாம்ʼ ஶ்வோ(அ)த்ர நயாம்யஹம்ʼ தாம்ʼ யாதாத்³ய வோ விஶ்ரமமந்தி³ராணி .. 16-8..
சுபாஹு சுயம்வரம் மண்டபத்தில் கூடியிருக்கும் ராஜாக்களிடம் நானும் என் மனைவியும் எவ்வளவு அழைத்தும் என் மகள் இன்று மண்டபத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. எல்லோரும் தயை கூர்ந்து எங்களை மன்னிக்க வேண்டும். அவரவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் மாளிகையில் ஓய்வெடுக்க வேண்டும். நாளை மண்டபத்திற்கு சசிகலையை அழைத்து வருகிறேன் என்று ஒரு பொய்யைச் சொல்லி நிலைமையை சமாளித்தார். ஏன் என்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் மண்டபத்திற்கு வர சம்மதிக்க மாட்டாள் என்று. அந்த சூழ்நிலையில் வேறு என்ன செய்ய முடியும்?
க³தேஷு ஸர்வேஷு ஸுத³ர்ஶனஸ்து த்வாம்ʼ ஸம்ʼஸ்மரன் மாத்ருʼஹிதானுஸாரீ .
ஸுபா³ஹுனா தந்நிஶி தேன த³த்தாம்ʼ வதூ⁴ம்ʼ யதா²வித்⁴யுது³வாஹ தே³வி .. 16-9..
இதைக் கேட்டதும் சுயம்வரம் மண்டபத்தில் இருந்த யுதாஜிதிற்குக் கோபம் வருகிறது. அவர் சொல்கிறார் "உன் நடவடிக்கையில் எங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஸுதர்சனனுக்கு உன் மகளை மணம் செய்விக்க நினைக்காதே. என் பேரனுக்கோ அல்லது வேறு ராஜகுமாரனுக்கோ கல்யாணம் செய்து வை. அதில் எனக்கு சம்மதம் தான். ஆனால் என் எதிரியான ஸுதர்சனுக்கு விவாஹம் செய்விக்க நினைத்தால் உனக்கும் எனக்கும் பகை உண்டாகும். இதை உன் மகளிடம் சொல்லி முடிவு செய்" என்று சொல்கிறார். சுபாகுவிற்கு மிகவும் கவலை வருகிறது. மனைவியுடன் சென்று மகளிடம் பேசுகிறார். ஆனால் சசிகலையோ பிடிவாதமாக ஸுதர்சனைத்தான் விவாஹம் செய்து கொள்வேன் என்று முடிவாகச் சொல்கிறாள். மகளின் நல்வாழ்வை மனதில் எண்ணி நள்ளிரவில் ஸுதர்சனனை அழைத்துக் கொண்டு ஒரு ரகஸ்ய இடத்திற்குச் சென்று, தேவியின் முன்னிலையில், மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கிறார். ஸுதர்சனனும் தன் அன்னை மனோரமாவின் ஆசியைப் பெற்று சசிகலையை மணந்து கொள்கிறான்.
ப்ராதர்யுதா⁴ஜித்ப்ரப³லோ விவாஹவார்தாம்ʼ நிஶம்யாத்தருஷா ஸஸைன்ய꞉ .
ஸுத³ர்ஶனம்ʼ மாத்ருʼவதூ⁴ஸமேதம்ʼ யாத்ரோன்முக²ம்ʼ பீ⁴மரவோ ருரோத⁴ .. 16-10..
வாத்ய கோஷங்களைக் கேட்ட மற்ற ராஜாக்கள் சுபாகு மகளுக்குச் ஸுதர்சனனை விவாஹம் செய்து வைத்து விட்டான் என்று புரிந்து கொள்கின்றனர். அதனால் ஸுதர்சனன் போகும் வாயில் வழியில் யுதாஜித்தும் மற்ற ராஜாக்களும் தங்களை அவமானப்படுத்திய அனைவரையும் எதிர் கொள்ளத் தயாராகப் படைகளுடன் நிற்கின்றனர். அதே நேரத்தில் சசிகலையையும் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு சுபாகு ஏற்பாடு செய்திருந்த ரதத்தில் ஏறி, ஸுதர்சனனும் அங்கு வருகிறான்.
ததோ ரணே கோ⁴ரதரே ஸுபா³ஹு꞉ க்லீம்ʼ க்லீமிதீஶானி ஸமுச்சசார .
தத்ராவிராஸீ꞉ ஸமராங்க³ணே த்வம்ʼ ஸிம்ʼஹாதி⁴ரூடா⁴ ஸ்வஜனார்திஹந்த்ரீ .. 16-11..
காமராஜ பீஜ மந்திரமான "க்ளிம் க்ளிம்" என்ற மந்திரத்தை ஜபித்தபடி ஸுதர்சனன் ரதத்தில் வருகிறான். ஆனால் சசிகலையை கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் மற்ற ராஜாக்கள் சத்ராஜித் யுதாஜித்துடன் படைகளுடன் நிற்கிறார்கள். சுபாகு தன் மகளையும் மருமகனையும் காப்பாற்ற அவர்களுடன் யுத்தம் செய்கிறார். எதிரிகள் பாண மழை பொழிகிறார்கள். அதனால் அவர் தேவி உபாஸனை செய்யும் ஸுதர்சனனை உதவிக்கு அழைக்கிறார். அப்பொழுது ஸுதர்சனனுக்கு உதவி செய்ய தேவி யுத்த களத்தில் தோன்றுகிறாள். அந்த மஹா தேவி எப்படியிருந்தாள்? திவ்ய வஸ்த்ரங்கள் தரித்தவளாக மந்தார புஷ்பமாலை சூடி, திவ்ய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, நானாவிதமான ஆயுதங்களுடன் சிம்மவாஹனத்தில் தோன்றினாள். ஆண்கள் யுத்தம் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணா என்று யுதாஜித் அன்னையைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறான். அன்னைக்கும் யுதாஜித்திற்கும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது.
த்வந்நாம கா³யன் கத²யன் கு³ணாம்ʼஸ்தே த்வாம்ʼ பூஜயம்ʼஶ்சாத்ர நயாமி காலம் .
ஸ்வப்னே(அ)பி த்³ருʼஷ்டா ந மயா த்வமம்பே³ க்ருʼபாம்ʼ குரு த்வம்ʼ மயி தே நமோ(அ)ஸ்து .. 16-12..
இந்த நாராயணீயம் எழுதிய ஆசிரியர் நினைக்கிறார் சுபாகு, சசிகலை, ஸுதர்சனன் இவர்களுக்கு அன்னை நேரிலோ அல்லது கனவிலோ காட்சி கொடுத்தாள். நானும் இந்த தேவியைத்தான் த்யானம் செய்கிறேன். ஆனால் கனவிலோ நினைவிலோ அன்னையைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் வருந்துகிறார். அன்னையின் கருணைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
16 ஆம் பதினாறாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment