vide0
https://youtu.be/JCAyhMwzc3E?si=_eiI21E-hay5cFFv
23 த்ரயோவிம்ʼஶத³ஶக꞉ - மஹாலக்ஷ்ம்யவதார꞉
ரம்ப⁴ஸ்ய புத்ரோ மஹிஷாஸுர꞉ ப்ராக் தீவ்ரைஸ்தபோபி⁴ர்த்³ருஹிணாத்ப்ரஸன்னாத் .
அவத்⁴யதாம்ʼ பும்பி⁴ரவாப்ய த்⁴ருʼஷ்டோ ந மே ம்ருʼதி꞉ ஸ்யாதி³தி ச வ்யசிந்தீத் .. 23-1..
ஸ சிக்ஷுராத்³யைரஸுரை꞉ ஸமேத꞉ ஶக்ராதி³தே³வான்யுதி⁴ பத்³மஜம்ʼ ச .
ருத்³ரம்ʼ ச விஷ்ணும்ʼ ச விஜித்ய நாகே வஸன் ப³லாத்³யஜ்ஞஹவிர்ஜஹார .. 23-2..
சிரம்ʼ ப்⁴ருʼஶம்ʼ தை³த்யனிபீடி³தாஸ்தே தே³வா꞉ ஸமம்ʼ பத்³மஜஶங்கராப்⁴யாம் .
ஹரிம்ʼ ஸமேத்யாஸுரதௌ³ஷ்ட்யமூசூஸ்த்வாம்ʼ ஸம்ʼஸ்மரன் தே³வி முராரிராஹ .. 23-3..
ஸுரா வயம்ʼ தேன ரணே(அ)திகோ⁴ரே பராஜிதா தை³த்யவரோ ப³லிஷ்ட²꞉ .
மத்தோ ப்⁴ருʼஶம்ʼ பும்பி⁴ரவத்⁴யபா⁴வான்ன ந꞉ ஸ்த்ரியோ யுத்³த⁴விசக்ஷணாஶ்ச .. 23-4..
தேஜோபி⁴ரேகா ப⁴வதீஹ நஶ்சேத்ஸைவாஸுரான் பீ⁴மப³லான்னிஹந்தா .
யதா² ப⁴வத்யேதத³ரம்ʼ ததை²வ ஸம்ப்ரார்த²யாமோ(அ)வது நோ மஹேஶீ .. 23-5..
ஏவம்ʼ ஹரௌ வக்தரி பத்³மஜாதாத்தேஜோ(அ)ப⁴வத்³ராஜஸரக்தவர்ணம் .
ஶிவாத³பூ⁴த்தாமஸரௌப்யவர்ணம்ʼ நீலப்ரப⁴ம்ʼ ஸாத்த்விகமச்யுதாச்ச .. 23-6..
தேஜாம்ʼஸ்யபூ⁴வன் விவிதா⁴னி ஶக்ரமுகா²மரேப்⁴யோ மிஷதோ(அ)கி²லஸ்ய .
ஸம்யோக³தஸ்தான்யசிரேண மாத꞉ ஸ்த்ரீரூபமஷ்டாத³ஶஹஸ்தமாபு꞉ .. 23-7..
தத்து த்வமாஸீ꞉ ஶுப⁴தே³ மஹாலக்ஷ்ம்யாக்²யா ஜக³ன்மோஹநமோஹனாங்கீ³ .
த்வம்ʼ ஹ்யேவ ப⁴க்தாப⁴யதா³னத³க்ஷா ப⁴க்தத்³ருஹாம்ʼ பீ⁴திகரீ ச தே³வி .. 23-8..
ஸத்³யஸ்த்வமுச்சைஶ்சக்ருʼஷே(அ)ட்டஹாஸம்ʼ ஸுரா꞉ ப்ரஹ்ருʼஷ்டா வஸுதா⁴ சகம்பே .
சுக்ஷோப⁴ ஸிந்து⁴ர்கி³ரயோ விசேலுர்தை³த்யஶ்ச மத்தோ மஹிஷஶ்சுகோப .. 23-9..
த்வாம்ʼ ஸுந்த³ரீம்ʼ சாரமுகா²த் ஸ தை³த்யோ விஜ்ஞாய காமீ விஸஸர்ஜ தூ³தம் .
ஸ சேஶ்வரீம்ʼ தை³த்யகு³ணான் ப்ரவக்தா த்வாம்ʼ நேதுகாமோ விப²லோத்³யமோ(அ)பூ⁴த் .. 23-10..
ப்ரலோப⁴னைஸ்த்வாமத² தே³வஶக்திம்ʼ ஜ்ஞாத்வா(அ)பி வாக்யைரனுனேதுகாம꞉ .
ஏகைகஶ꞉ ப்ரேஷயதிஸ்ம தூ³தான் த்வாம்ʼ காமினீம்ʼ கர்துமிமே ந ஶேகு꞉ .. 23-11..
அவேஹி மாம்ʼ புச்ச²விஷாணஹீனம்ʼ பா⁴ரம்ʼ வஹந்தம்ʼ மஹிஷம்ʼ த்³விபாத³ம் .
ஹிம்ʼஸந்தி மாம்ʼ ஸ்வர்தி²ஜனாஸ்த்வமேவ ரக்ஷாகரீ மே ஶுப⁴தே³ நமஸ்தே .. 23-12..
தசகம் 23
மஹாலக்ஷ்மி அவதாரம்
மஹிஷாஸுரன் என்பவன் யார்? அவனுக்கு மஹிஷ ரூபம் எப்படி வந்தது?
பூமண்டலத்தில் தனு என்பவனுக்கு, ரம்பன் கரம்பன் என்று இரு பிள்ளைகள். அதில் கரம்பன் பஞ்சநதம் என்னும் தீர்த்தத்தில் மூழ்கியும், ரம்பன் அந்த மரத்தின் அடியில் பஞ்சாக்னியின் மத்தியில் நன் மக்கள் பேறு வேண்டி தவம் செய்து வந்தனர். இதை அறிந்த இந்திரன் முதலை ரூபம் எடுத்து கரம்பன் நதியில் குளிக்கும் போது, அவன் காலைப் பிடித்து நீரில் இழுத்தான். அதனால் அவன் மரணம் அடைந்தான். இதைப் பொறுக்க முடியாத ரம்பன், தன் சிரஸை வெட்டி அக்னியில் ஹோமம் செய்யத் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, வாளால் வெட்டத் தொடங்கிய பொழுது, அக்னி பகவான் தோன்றினார். “சாவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார்.” தேவ, தைத்ய, மானிடர்களால் ஜெயிக்க முடியாத மிகவும் பராக்ரமசாலியான புத்திரன் வேண்டும்” என்றான். “அப்படியேஆகட்டும்’ என்று சொல்லி அக்னி தேவர் மறைந்தார். ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு எருமையைக் கண்டு, காமவெறி கொண்டு, அதன் அருகில் சென்று புணர்ந்தான். அதுவும் கர்பமானது. அதை ரம்பன் பாதாளத்தில் மற்ற கடா எருமைகள் அதை நெருங்காமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் ஒரு கடா எருமை அதன் மேல் வெறி கொண்டு துரத்த, ரம்பன் அதனுடன் மோதி, அந்த எருமை ரம்பனைக் கொன்றது. அந்தக் கடா மேலும் எருமையைத் துரத்த, அந்த எருமைத் தன் அருகில் அதை நெருங்கவிடாமல், மீண்டும் தான் முன்பு இருந்த ஆலமரத்தடிக்குச் சென்று யக்ஷர்களைச் சரணடைந்தது. தன்னை விடாமல் துரத்தி வரும் கடாவை, நெருங்கவிடாமல் வரும் எருமையைக் கண்ட அவர்கள் அதைக் காப்பதற்குக் கடாவைக் கொன்றனர். தன் கணவனான ரம்பனோடு தானும் அக்னியில் விழ அந்த எருமை முயற்சித்த போது, யக்ஷர்கள் தடுத்தும் பயனின்றி அது அக்னியில் விழுந்தது. அப்போது அதன் கர்பத்திலிருந்து ரக்தபீஜனாகிய மஹிஷன் வெளிப்பட்டான்.
1. ரம்பஸ்ய புத்ரோ, மஹிஷாஸுர: ப்ராகு
தீவ்ரைஸ்தபோபிர், த்ருஹிணாத் ப்ரஸன்னாது
அவத்யதாம் பும்பிரவாப்ய த்ருஷ்டோ
ந மே ம்ருதி: ஸ்யா, திதி ச வ்யசிந்தீது
மஹிஷன் அரசாண்டு வரும் காலத்தில் அஸுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் வந்தது. அதனால் மஹிஷன் மேரு மலைக்குச் சென்று, ப்ரம்மனை இருதய கமலத்தில் தியானித்து பதினாறாயிரம் வருடங்கள் தவம் செய்தான். பிரம்மனும் மகிழ்ச்சி கொண்டு ஹம்ஸ வாகனத்தில் காட்சி தந்து “என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். மஹிஷனும் “நான் மரணம் அடையாதிருக்கும் படி அனுக்ரஹம் செய்ய வேண்டும்” என்றான். ப்ரம்மன் சொன்னார் “ஜனனம் மரணம் இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. நானும் அவ்விதிக்குக் காட்டுப்பட்டவனே. அதனால் இதை விட்டு வேறு வரம் கேள்” என்றார். மஹிஷன் சொன்னான் “எனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, தைத்யர்களாலோ மற்றும் எந்த ஆணாலும் மரணம் வரக்கூடாது. அப்படியே மரணம் வந்தாலும், ஒரு பெண்ணால் வரட்டும்” என்றான். அவன் நினைத்தான் தானோ மிகவும் பலசாலி. அதனால் ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படி வரம் கேட்டான். அவன் பெண்ணான அந்த பராசக்தியை மறந்து விட்டான்.
2. ஸ சிக்ஷுராத்யைர் அஸுரை: ஸமேதஹ
சக்ராதிதேவான், யுதி பத்மஜம் ச
ருத்ரம் ச விஷ்ணும் ச விஜித்ய நாகே
வஸன் பலாத், யக்ஞஹவிர் ஜஹார
மஹிஷன் சக்ஷுசுரன், மஹாவீரியன், மதோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதர்க்கன், பிடலாக்கியன், பாஷ்கலன், த்ரிநேத்திரன், காலன், பந்தகன் ஆகியோரை சேனாதிபதிகளாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆக்ரமித்து, அதுமட்டும் இல்லாமல் தேவர்களையும் சொர்க்கலோகத்தில் இருந்து விரட்டி விடுகிறான். அவர்களுக்கான ஹவிர் பாகங்களையும் தானே எடுத்துக் கொள்கிறான். தேவர்களுக்கு இருக்க இடமும் இல்லை. சாப்பிட உணவும் இல்லை.
3. சிரம் ப்ருசம் தைத்ய, நிபீடிதாஸ்தே
தேவா: ஸமம் பத்மஜசங்கராப்யாம்
ஹரீம் ஸமேத்யாSSஸுரதௌஷ்ட்யம் ஊசூஹு
ஸத்வாம் ஸம்ஸ்மரன் தேவி! முராரிராஹ:
மஹிஷனின் சேனைகளால் எங்கு சென்றாலும் துன்பம் வர, தேவர்கள் ப்ரம்மாவிடம் சென்று உதவி கேட்கிறார்கள். சங்கரரையும், விஷ்ணுவையும் சந்தித்து, அதன் பின், நாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அதனால் கைலாஸம் போவோம் என்று அங்கு போனார்கள். பின் சிவனுடன் விஷ்ணுலோகம் போனார்கள். அதன் பின் அவர்கள் எல்லோரும் சேர்ந்துத் தேவியைச் சரண் அடைவோம் என்று அங்கு போனார்கள்.
4. ஸுரா வயம் தேந, ரணேSதிகோரே
பராஜிதா; தைத்ய,வரோ பலிஷ்டஹ
மத்தோ ப்ருசம் பும்பிர் அபத்யபாவாந்
ந ந: ஸ்த்ரியோ யுத்த விசக்ஷணாச்ச
இதற்கு முன்பே மும்முர்த்திகளும் தேவர்களுடன் சென்று, மஹிஷனுடன் சண்டை செய்து தோல்வியையேத் தழுவினர். காரணம் என்ன? அவன் பெற்ற வரமே. தேவர்கள், மனிதர்கள், தைத்யர்கள் யாரும், எந்த ஆணும் அவனை வெற்றி கொல்ல கொள்ள முடியாது. மும்மூர்த்திகளின் பத்னிகளுக்கோ தேவர்களின் பத்னிகளுக்கோ யுத்தம் செய்யத் தெரியாது. என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.
5. தேஜோபிரேகா, பவதீஹ நச்சேது
ஸைவாஸுரான் பீமபலான் நிஹந்தா
யதா பவத்யேததரம் ததைவ
ஸம்ப்ரார்த்தயாமோS,வது நோ மஹேசீ
விஷ்ணு ஒரு முடிவு செய்கிறார். எல்லா தேவர்களுடைய சக்தியையும் நம் மூவரின் சக்தியையும் ஒன்று சேர்த்து ஒரு பெண் உருவானால் அவளால் தான் அந்த துஷ்டனை வதம் செய்ய முடியும். நம்மிடம் இருக்கும் சக்திகள் அந்த தேவிசக்திகள் தந்தது தானே. அதனால் நாம் எல்லோரும் அந்த பராசக்தியை வழிபடுவோம் என்று துதிக்க ஆரம்பித்தனர்.
6. ஏவம் ஹரௌ வக்தரி பத்மஜாதாது
தேஜோSபவத் ராஜஸ ரக்தவர்ணம்
சிவாதபூத் தாம,ஸரௌப்யவர்ணம்
நீலப்ரபம் ஸாத்விக,மச்யுதாச்ச
அவர்கள் தேவியின் ஸ்துதி பாட ஆரம்பித்தவுடன், ப்ரம்மாவிடமிருந்து தீப் பொறி போல் ஒரு தேஜஸ் வெளிப்பட்டது. அது காணக் கண் கூசும்படி பிரகாசித்தது. சிவப்பு வர்ணமாக உஷ்ணமும், குளிர்ச்சியும் கலந்து இருந்தது. அது ரஜோகுணப் பிரதானமான தேஜஸ். சிவனிடமிருந்து தமோகுணத் தேஜஸ் வெண்மை நிறமுடன் வெளிப்பட்டது. விஷ்ணுவிடமிருந்து நீல நிறத்தில் ஸத்வ குண தேஜஸ் வந்தது. ஆக ஸத்வ, ரஜோ, தமோ குண தேஜஸுகள் மும் மூர்த்திகளிடமிருந்து வந்தன.
7. தேஜாம்ஸ்ய பூவன், விவிதானி சக்ர-
-முகாமரேப்யோ, மிஷதோ கிலஸ்ய
ஸம்யோகதஸ்தான்,யசிரேண மாதஹ!
ஸ்த்ரீரூபமஷ்டாத,சஹஸ்தமாபுஹு
இந்திரன் முதலான மற்ற எல்லா தேவர்களிடமிருந்தும் தேஜஸ் வந்தபடி இருந்தது. அது மஹா அற்புதமாக இருந்தது. எல்லாம் ஒன்று சேர்ந்து 18 கைகள் உடைய ஒரு பெண் உருவம் தோன்றியது. முகம் சங்கரரின் தேஜஸ், சுருண்டமுடி யமனின் தேஜஸ், 3 கண்களும் அக்னியின் தேஜஸ், மூக்கு குபேரனின் தேஜஸ், 18 கைகளும் விஷ்ணுவின் தேஜஸ் இதுபோன்று எல்லோருடைய தேஜஸும் சேர்ந்து ஒரு பெண் உருவம் தோன்றியது. யார் இப்படி எல்லோருடைய தேஜஸையும் ஒன்று சேர்த்து பெண் உருவாக ஆக்கியது? அந்த பராசக்தி தான். இதைத்தானே விஷ்ணுவும் சொன்னார். அந்த பெண்ணின் உருவத்தைக் கண்டதும், அனைத்து தேவர்களும் இனி பயமில்லை என்று சிறிது கவலையை விட்டனர்.
8. தத் து த்வமாஸீ: சுபதே! மஹால-
க்ஷ்ம்யாக்யா, ஜகன்மோஹன மோஹனாங்கீ
த்வம் ஹ்யேவ பக்தா,பயதானதக்ஷா
பக்த த்ருஹாம் பீதிகரீதேவி!
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ தனயாம் சீரங்க ஶ்ரீ ரங்க தாமேஸ்வரீம்
தாஸீ பூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்க்ருபாம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் தைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
18 கைகளோடு தோன்றிய அந்த தேவி யார்? நினைத்த போது நினைக்கும் உருவம் எடுக்கக் கூடியவளல்லவா அன்னை?
அந்த பகவதி தேவி தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம். பக்தர்களுக்கு அபயம் தர எடுத்த அவதாரம். பார்ப்பதற்கு மிக மிக சுந்தர ரூபம். பவழம் போன்ற உதடுகள், 18 கைகளிலும் ஆயுதங்கள், மூவர்ணக் கலர், சகலவிதமான ஆபரணங்கள், எல்லா தேவர்களும் அவரவர் ஆயுதங்களையும், ஆபரணங்களும், சிங்கவாஹனமும் கொடுத்தனர். இவைகளோடு பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அதி சுந்தர உருவம். ஆனால் அஸுரர்களான துஷ்டர்களுக்குப் பயம் தரும் உருவம்.
9. ஸ்த்யஸ்த்வ முச்சைச்,ச க்ருஹே&ட்டஹாஸம்;
ஸுரா: ப்ரஹ்ருஷ்டா; வஸுதா சகம்பே;
சுக்ஷோப ஸிந்துர்; கிரயோ விசேலூர்;
தைத்யஸ்ய மத்தோ மஹிஷச்சு கோப
தேவியின் ரூபத்தைக் கண்ட தேவர்கள் நம்மைக் காப்பாற்ற தேவி வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். தாயே! நீயே சகல தேவர்களுக்கும் புகலிடம் என்று சொல்லி நமஸ்கரித்தனர். தேவியும் இனி நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி தான் அவதரித்த நோக்கத்தை நிறை வேற்ற அட்டகாஸமாகச் சிரித்தாள். சப்தம் கேட்டு எண்திசைகளும் நடுங்கின. இந்த அலறல் சப்தம் கேட்ட மஹிஷன் யார் இப்படி சிரிப்பது? என்று கோபம் கொண்டான்.
10. த்வாம் ஸுந்தரீம், சார முகாத் ஸ தைத்யோ
விஞ்ஞாய காமி, விஸஸர்ஜ தூதம்
ஸ சேச்வரீம் தைத்ய,குனான் ப்ரவக்தா
த்வாம் நேது காமோ, விபலோத்ய மோSபூது
அந்த சப்தம் கேட்ட மஹிஷன் உடனே தூதர்களை அழைத்து “யார் இப்படி சப்தம் செய்ததது? அவன் எங்கிருக்கிறான்? என்று பார்த்து வாருங்கள்” என்று அனுப்பி வைக்கிறான். சென்ற தூதர்கள் அங்கு தேவியைப் பார்த்து திக்பிரமையோடு ஓடி வந்து “ஐயா! கர்ஜனை செய்தது ஒரு பெண். அவள் வீரமும், சிருங்காரமும் ஒருங்கே இணைந்த அழகினை உடையவளாக இருக்கிறாள்” என்று சொன்னதும் மஹிஷனுக்கு காம உணர்வு எழுகிறது. அதனால் தூதுவனை மீண்டும் அனுப்பி என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல் என்று அனுப்புகிறான். அவனும் தேவியிடம் சென்று மஹிஷன் மிகுந்த பலசாலி, தேவர்களை வெற்றி கண்டவன், மிகுந்த அழகுடையவன், மன்மத லீலைகளில் வல்லவன் என்று மஹிஷாசுரனைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து, அவன் உங்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான். அதனால் நீங்கள் என்னுடன் வந்து, அவனை மணக்க வேண்டும் என்று சொன்னான். ஆனால் தேவியிடம் ஒன்றும் எடுபடவில்லை. அவன் அதை மஹிஷனிடம் சொல்கிறான். இருந்தாலும் மஹிஷன் ஆசையை விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான்.
11. ப்ரலோபநைஸீத்வாம், அமத தேவசக்தீம்
ஞ்யாதவாSபி வாக்யைர் அனு நேது காமஹ
ஏகைகச: ப்ரஷயதிஸ்ம தூதானு
த்வாம் காமினீம் கர்தும் இமே ந சேகுஹு
மஹிஷன் முயற்சியைக் கைவிடாமல் தாம்பிரன் என்னும் மந்திரியை அனுப்புகிறான். அன்னை சொல்கிறாள். “ஏ மஹிஷனே! நீ எனக்குச் சமமாக ஆகமுடியுமா? என் லட்க்ஷணம் எங்கே? உன் அவலக்ஷணம் எங்கே? இந்த ஆசையை விட்டுவிடு. இந்திரனுக்குரிய யக்ஞபாகத்தையும் சுவர்கத்தையும் அவனிடம் திருப்பிக் கொடு. நீ உன் அஸுரர் கூட்டத்துடன் பாதாளம் போய்விடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வது நிச்சயம்’ தாம்பிரனே போய் உன் அரசனிடம் சொல் என்று கர்ஜனைக் குரலில் சொன்னாள். தாம்பிரன் மஹிஷனிடம் இதைச் சொல்கிறான். ஆனாலும் மஹிஷனுக்கு ஆசை விடவில்லை. இவ்வளவு அழகாக இருக்கிறாளே எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல தூதர்களை அனுப்பிய படி இருக்கிறான். ஆனால் எந்த பலனும் இல்லை. தேவிக்கு அவனிடம் அன்போ பரிதாபமோ இல்லை. அதனால் பாஷ்கலன், துர்முகன், தாம்பிரன், சிக்ஷுரன் போன்றப் பல தூதர்களைத், துஷ்டர்களை வதம் செய்கிறாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
12. அவேஹி மாம் புச்ச, விஷாணஹீனம்
பாரம் வஹந்தம், மஹிஷம் த்விபாதம்
ஹிம்ஸந்தி மாம் ஸ்வார்த்தி ஜனா; ஸ்தவமேவ
ரக்ஷாகரீ மே, சுபதே! நமஸ்தே
இந்தக் கவி சொல்கிறார் மஹிஷன் என்பது ஒரு மிருகம்:;
புத்தி இல்லாதது. பாரம் சுமக்கும். பாரம் சுமக்க முடியாவிட்டால் கசாப்புக் கடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு இது நல்ல பாரம், இது கெட்ட பாரம் என்பதும் தெரியாது. அதற்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அதற்கு வாலும் கொம்பும் இருக்கிறது. எனக்கு இல்லை. அதுவும் அடி வாங்கும். என்னையும் பலர் பல விததில் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ரக்ஷிப்பதற்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். நீதான் என்னை க் காக்க வேண்டும் என்கிறார்.
இருபத்தி மூன்றாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment