ppt
24 சதுர்விம்ʼஶத³ஶக꞉ - மஹிஷாஸுரவத⁴ம் - தே³வீஸ்துதி꞉
தே³வி த்வயா பா³ஷ்கலது³ர்முகா²தி³தை³த்யேஷு வீரேஷு ரணே ஹதேஷு .
ஸத்³வாக்யதஸ்த்வாமனுனேதுகாமோ மோக⁴ப்ரயத்னோ மஹிஷஶ்சுகோப .. 24-1..
த்வாம்ʼ காமரூப꞉ கு²ரபுச்ச²ஶ்ருʼங்கை³ர்னானாஸ்த்ரஶஸ்த்ரைஶ்ச ப்⁴ருʼஶம்ʼ ப்ரஹர்தா .
க³ர்ஜன் வினிந்த³ன் ப்ரஹஸன் த⁴ரித்ரீம்ʼ ப்ரகம்பயம்ʼஶ்சாஸுரராட்³யுயோத⁴ .. 24-2..
ஜபாருணாக்ஷீ மது⁴பானதுஷ்டா த்வம்ʼ சாரிணா(அ)ரேர்மஹிஷஸ்ய கண்ட²ம் .
சி²த்வா ஶிரோ பூ⁴மிதலே நிபாத்ய ரணாங்க³ணஸ்தா² விபு³தை⁴꞉ ஸ்துதா(அ)பூ⁴꞉ .. 24-3..
மாதஸ்த்வயா நோ விபதோ³ நிரஸ்தா அஶக்யமன்யைரித³மத்³பு⁴தாங்கி³ .
ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திநாஶகர்த்ரீம்ʼ கஸ்த்வாம்ʼ ஜயேத் கேன கத²ம்ʼ குதோ வா .. 24-4..
வித்³யாஸ்வரூபா(அ)ஸி மஹேஶி யஸ்மின் ஸ வை பரேஷாம்ʼ ஸுக²த³꞉ கவிஶ்ச .
த்வம்ʼ வர்தஸே யத்ர ஸதா³(அ)ப்யவித்³யாஸ்வரூபிணீ ஸ த்வத⁴ம꞉ பஶு꞉ ஸ்யாத் .. 24-5..
க்ருʼபாகடாக்ஷாஸ்தவ தே³வி யஸ்மின் பதந்தி தஸ்யாத்மஜவித்ததா³ரா꞉ .
யச்ச²ந்தி ஸௌக்²யம்ʼ ந பதந்தி யஸ்மின் த ஏவ து³꞉க²ம்ʼ த³த³தே(அ)ஸ்ய நூனம் .. 24-6..
பஶ்யாம நித்யம்ʼ தவ ரூபமேதத்கதா²ஶ்ச நாமானி ச கீர்தயாம .
நமாம மூர்த்⁴னா பத³பங்கஜே தே ஸ்மராம காருண்யமஹாப்ரவாஹம் .. 24-7..
த்வமேவ மாதா(அ)ஸி தி³வௌகஸாம்ʼ நோ நான்யா த்³விதீயா ஹிததா³னத³க்ஷா .
அன்யே ஸுதா வா தவ ஸந்தி நோ வா ந ரக்ஷிதா நஸ்த்வத்³ருʼதே மஹேஶி .. 24-8..
க்வ த்வம்ʼ வயம்ʼ க்வேதி விசிந்த்ய ஸர்வம்ʼ க்ஷமஸ்வ நோ தே³வ்யபராத⁴ஜாலம் .
யதா³ யதா³ நோ விபதோ³ ப⁴வந்தி ததா³ ததா³ பாலய பாலயாஸ்மான் .. 24-9..
இதி ஸ்துவத்ஸு த்ரித³ஶேஷு ஸத்³ய꞉ க்ருʼபாஶ்ருநேத்ரைவ திரோத³தா⁴த² .
ததோ ஜக³த்³தே³வி விபூ⁴திபூர்ணம்ʼ ப³பூ⁴வ த⁴ர்மிஷ்ட²ஸமஸ்தஜீவம் .. 24-10..
த்வாம்ʼ ஸம்ʼஸ்மரேயம்ʼ ந ச வா ஸ்மரேயம்ʼ விபத்ஸு மா விஸ்மர மாம்ʼ விமூட⁴ம் .
ருத³ன் பி³டா³லார்ப⁴கவன்ன கிஞ்சிச்ச²க்னோமி கர்தும்ʼ ஶுப⁴தே³ நமஸ்தே .. 24-11.
தசகம் 24
மஹிஷாஸுரவதம், தேவீஸ்துதி
1. தேவி! த்வயா பாஷ்,களதுர்முகாதி
தைத்யேஷு, வீரேஷு, ரணே ஹதேஷு
ஸத்வாக்யதஸ்த்வாம், அனுநேது காமஹ
மோகப்ரயத்னோ, மஹிஷச்சுகோப
மீண்டும் மஹிஷன் அசிலோமன் பிடாலன் ஆகியோரை அனுப்புகிறான். அவர்களால் தேவியின் மனதை மாற்ற முடியுமா? முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் இன்றி தேவியுடன் யுத்தம் செய்து அவர்களும் மரணத்தையே தழுவினர். மஹிஷன், அனைவரும் மாண்டு போயினர் என்ற செய்தி கேட்டு கலக்கமடைந்து, ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். ஒரு முடிவுக்கு வருகிறான். தேவியைத் தன் வயப்படுத்துவதற்காக, ஒரு ஆணழகனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, மன்மதன் போல தனுர் பாணங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் ஏறி தேவீ இருக்கும் இடம் சென்றான். அவன் சொன்னான் “தேவீ! விசாலாக்ஷி! உன் அழகில் நான் மயங்கி விட்டேன். உன் கட்டளைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன். நீ எனக்கு மஹிஷி ஆக வேண்டும்” என்று இது போல் காமவெறி வேகத்தில் பிதற்றினான். தேவீ சொன்னாள் “மஹிஷா! உன்னை நான் நன்கு அறிவேன். நான் ஸம்சார பந்தத்தில் சிக்கும் ஸம்சார சக்தி இல்லை. அந்த துக்கத்தை போக்குபவள். நீ என்னிடம் இனிமையான வார்த்தைகள் சொன்னதால் உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தேவர்களிடம் த்வேஷத்தை விட்டு விட்டு பாதாளம் போய் சுகமாக இரு” என்றாள். மஹிஷன் சொன்னான்.
“மான்வியாழிளே! எந்த பெண்ணும் பர்த்தா இல்லாமல் சுகம் காண முடியாது. அதனால் என்னை விவாஹம் செய்து கொள்” என்று பிதற்றிய வண்ணம் இருந்தான். அன்னை சொன்னாள் ” நீ உயிருடன் இருக்க நினைத்தால் நான் சொன்னதைச் செய். இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்” என்றாள். தன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் தேவீ இருப்பதைக் கண்டு, கோபத்துடன் யுத்தம் செய்யத் தொடங்கினான்.
2. த்வாம் காமரூப: குரபுச்ச,ச்ருங்கைர்ஹி
நாநாஸ்த்ர சஸ்த்ரைச்ச ப்ருசம் ப்ரஹர்த்தா
கர்ஜன், விநிந்தன், ப்ரஹஸன் தரித்ரீம்
ப்ரகம்பயம்ச்சா,ஸுரராட் யுயோத
மஹிஷன் மானிட ரூபம் விட்டு எருமையின் ரூபம் எடுக்கிறான். தேவியை வாலால் அடிக்கிறான். கொம்பால் குத்துகிறான். மனுஷ ரூபம் எடுக்கிறான். பாணங்களைப் பொழிகிறான். இப்படி இருவருக்கும் பயங்கர யுத்தம் நடக்கிறது. பூமியே இதனால் குலுங்குகிறதாம்.
3. ஜபாருணாக்ஷீ, மதுபானதுஷ்டா
த்வம் சாரிணாSரேர் மஹிஷஸ்ய கண்டம்
சித்வா சிரோ பூமிதலே நிபாத்ய
ரணாங்கணஸ்தா, விபுதை: ஸ்துதாபூஹூ
யுத்தம் உச்சகட்டத்திற்கு வருகிறது. அப்பொழுது தேவீ மது அருந்தினாளாம். கண்கள் செம்பருத்திப் பூ போலச் சிவந்து இருக்கின்றதாம். தன்னுடைய சக்ராயுதத்தால் மஹிஷனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறாள். தலையில்லாத உடல் பூமியில் விழுந்தது. அனைவரும் பரமானந்தம் அடைந்தனர். தேவர்கள் தேவியை நமஸ்கரித்து ஸ்துதி பாடினார்கள்.
4. மாதஸ்த்வயா நோ, விபதோ நிரஸ்தா
அசக்ய மன்யைர், இத மத்புதாங்கி!
ப்ரம்மாண்டஸர்க் க,ஸ்திதி நாசகர்த்ரீம்
கஸ்த்வாம் ஜயேத் கேன கதம் குதோ வா?
மஹிஷனின் வதத்தால் தேவர்கள் தங்கள் ஆபத்துக்கள் எல்லாம் நீங்கி ஸ்வர்கம் செல்கின்றனர். அவர்களின் யக்ஞ பாகத்தை மீண்டும் அடைகின்றனர். மஹிஷாஸுரனை யாராலும் ஜெயித்திருக்க முடியாது. அவன் இந்திராதி தேவர்களை வெற்றி கண்டவன். திரு மூர்த்திகளையும் ஜெயித்தவன். ஆனால் அம்பாளை அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து வரத்தை வாங்கினான். ஆனால் பெண்ணான தேவியால் மரணம் அடைந்தான். அனேக கோடி பிரம்மாண்டங்களின் நாயகியை வெல்ல யாராலும் முடியாது. எந்த உபாயமும் தேவியிடம் செல்லுபடி ஆகாது. இங்கு ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. எந்த தெய்வத்தைத் துதித்தாலும் முக்தி கிடைக்காது. ஏதேனும் ஒரு கெட்ட நினவு வந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணம் வந்தால் முக்தி நிச்சயம் இல்லை. மனத் தூய்மை இருக்கும் இடத்தில் தேவீ கட்டாயம் வருவாள்.
அதற்காக சந்யாசீ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த காரியம் செய்தாலும் அன்னையை நினைக்க வேண்டும். கை வேலை செய்தாலும் மனம் தேவியிடம் இருக்க வேண்டும். நமது அவசர வேலைகள் முடிந்த பின்னாவது அன்னைக்கு பாலோ, பழமோ அல்லது உணவோ கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும். எதைச் செய்யும் போதும் அது அன்னைக்கே என்ற நினைவு, துர்முகன், பாஷ்கலன் போன்ற துர் எண்ணங்களை விரட்டிவிடும். அன்னையை பூஜிப்பதற்கும் நாம் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அது நமக்காக அல்ல. தேவியை பூஜை செய்வதற்காக. அவரவர் சக்திக்கு ஏற்ப பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்ற நினைவுத் தேவை இல்லை. பகவானுக்குச் செய்கிறோம் என்ற நினைவுடன் நம்மால் முடிந்ததைச் செய்தால் அதுவே போதும்.
5. வித்யா ஸ்வரூபாSஸி மஹேசி! யஸ்மின்
ஸ வை பரேஷாம், ஸுகத: கவிச்ச;
த்வம் வர்த்தஸே யத்ர ஸதாப்யவித்யா-
-ஸ்வரூபிணீ ஸ த்வதம: பசு: ஸ்யாது
வித்யா ஸ்வரூபிணீயான தேவியை உபாஸிப்பவனுக்கு வித்தையில் எந்த குறைவும் வராது. அவனுக்கு ஞானம் கிடைக்கும். விபரீத புத்தி உள்ளவனிடம் தேவி அவித்யா ஸ்வரூபிணீ யாகத்தான் இருப்பாள். மஹிஷாசுரனிடத்தில் அப்படித்தான் இருந்தாள். எத்தனையோ நல்ல வழிகள் சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லவா?
6. க்ருபாகடாக்ஷா,ஸ்தவ தேவி! யஸ்மின்
பதந்தி தஸ்யாSSத்,மஜ வித்ததாராஹா
யச்சந்தி சௌக்யம், ந, பதந்தி யஸ்மின்
த ஏவ து: கம்,தததேஸ்ய நூனம்
குடும்பத்தில் ஒருவன் பக்தியுடன் தேவியை உபாஸித்தால் அவன் மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். தனம், தான்யம், சம்பத்துக்கள் இவைகளுக்குக் குறைவே வராது. தரித்ரம் என்பதே இருக்காது. தேவீயை பூஜிப்பது ஒருநாளும் வீணாகாது. அனைவருக்கும் நன்மையே ஏற்படும்.
7. பச்யாம நித்யம், தவ ரூபமேதது
கதாச்ச நாமானி, ச கீர்த்தயாம
நமாம மூர்த்னா பதங்கஜே தே
ஸ்மராம காருண்ய, மஹா ப்ரவாஹம்
தேவியை பக்தியுடன் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். தேவர்கள் மஹிஷாஸுரமர்த்னியாகிய அம்பாளை பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உன்னை எங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் தினமும் மஹிஷாஸுரமர்த்தினியின் ஸ்தோத்ரம் பாடுவோம். உன்னுடைய கருணை எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்கள் .
8. த்வமேவ மாதாSஸி, திவௌகஸாம் நோ
நான்யா த்விதீயா, ஹிததானதக்ஷா
அந்யே ஸுதா வா, தவ ஸந்தி நோவா;
ந ரக்ஷிதா நஸ்,த்வத்ருதே, மஹேசி!
தேவர்களுக்கு முன்னால் மஹிஷாஸுரமர்த்தினி நின்று கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குப் பல வேலைகள் இருக்கிறதல்லவா? அவளை உபாஸிப்பவர்கள் எத்தனையோ பேர்கள். அவளுடைய குழந்தைகளுக்குக் கணக்கே இல்லையே? பல கோடிக் குழந்தைகள். அதனால் தேவர்கள் சொல்கிறார்கள் “அவர்களுக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஆனால் நீ எங்களைவிட்டுப் போகாதே” என்கிறார்கள்.
9. க்வ த்வம்? வயம் க்வே தி, விசிந்த்ய ஸர்வம்
க்ஷமஸ்வ நோ தேவ்ய,பராதஜாலம்
யதா யதா நோ, விபதோ பவந்தி
ததா ததா பாலய பாலயாஸ்மான்
அஸுரர்களை ஜெயிப்பதற்காகத் தேவர்களும் ஆள்மாறாட்டம், திருட்டுத்தனம், கள்ளத்தனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். பிரகஸ்பதி சுக்ராச்சாரியார் போல் வேடம் பூண்டு, அஸுரர்களுக்கு தவறான வழிகளைச் சொல்லித் தருகிறார். இந்திரன், விருத்தாஸுரனிடம் அக்னியை சாட்சியாக வைத்து, நாம் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி, பின் அவனைக் கொல்கிறார். தேவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இதுபோல் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் உன் குழந்தைகள் அல்லவா? இதை நீ மன்னிக்க வேண்டும் என்று சரணடைகிறார்கள்.
10. இதி ஸ்துவத்ஸு த்ரிதசேஷு ஸத்யஹ
க்ருபாச்ருநேத்ரைவ, திரோததாத
ததோ ஜகத் தேவி! விபூதிபூர்ணம்
பபூவ தர்மிஷ்ட,ஸமஸ்தஜீவம்
இப்படித் தேவர்கள் துதிக்கும் பொழுது அன்னை மறைந்துவிடுகிறாள். பூமியில் எல்லா இடங்களிலும் ராஜாக்கள் அன்னையின் கோவில்களைக் கட்டினார்கள். மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கு ஏற்ப மக்களும் தேவியை வழிபட்டனர். எங்கும் மழை, தனம், தான்யம் பெருகியது. சுகமே நிலவியது. செல்வம் கொழித்தது. மக்கள் நிம்மதியாக ஆனந்தமாக இருந்தனர். மதுகைடபர் வதத்தில் தமோகுண ப்ரதானியாக அவதாரம் செய்தாள். மஹிஷ வதத்தில் ரஜோகுண ப்ரதானியாக மஹாலக்ஷ்மியாக அவதாரம் செய்தாள்.
11. த்வாம் ஸம்ஸ்மரேயம், ந ச வா ஸ்மரேயம்
விப்தஸு; மா விஸ்,மர மாம் விமூடம்
ருதன் பிடாலார்,ப கவன்ன கிஞ்சிது
சக்னோமி கர்தும்;, சுபதே! நமஸ்தே
அன்னையின் அனுக்ரஹம் இருந்தால் தான் ஆபத்துக் காலங்களில் கூட, நாம் அன்னையை பூஜை செய்ய முடியும். அதற்கு பாக்யம் வேண்டும். புண்ணியம் வேண்டும். அதனால் இந்தக் கவி சொல்கிறார் நான் உன்னை பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும். பூனைக்கு அழத்தான் தெரியும். அதைப் போல கஷ்டம் வந்தால் எனக்கு அழத்தான் தெரியும். நான் மஹானில்லை. சில சமயம் சந்தர்ப்ப வசத்தால் நான் உன்னை மறந்திருக்கிறேன். மகன் தாயை மறந்தாலும், தாய் மகனை மறக்கக் கூடாது என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்றால் சிலகாலம் அவர் தன் குல தேவியை மறந்திருந்தார். அதனால் பல கஷ்டங்களைச் சந்தித்தார். சௌகர்யமாக இருந்த போது பேரும் புகழும் வந்த போது அன்னையை மறந்தார். கடைசீ காலத்தில் தேவியிடம் முறையிட்டார். கஷ்டம் வந்த போது அழுதார். அவர் பரம பக்தர். அன்னை நல்ல மரணம் தந்து அவரைக் காப்பாற்றினாள். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மசாரி.
2008 ல் தான் இந்த ஸ்தோத்திரம் எழுதினார். 1976 ல் புட்டபர்த்தியில் நடந்த சண்டி ஹோமத்தில் அவர்தான் தேவீ பாகவத பாராயணம் செய்தார். வீட்டில் தினமும் தேவீ பூஜை செய்தார். அப்பொழுதான் அவருக்கு இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நாமும் இந்த பெருமைவாய்ந்த தேவியை பூஜை செய்து சகல நன்மையையும் பெறுவோமாக!
இருபத்தி நான்காம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment