ENQUIRY geetanjaliglobalgurukulam

Sunday, 31 December 2023

Nammalvar.[

 


ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பொது தனியன்கள்

«லஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.


எம்பெருமானார் தனியன்


யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம

வ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே

அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ:

ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.


நம்மாழ்வார் தனியன்


மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்

ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.


ஆழ்வார்கள் உடையவர் தனியன்


பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-

ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்

பக்தாங்க்ரிரேணு பரகால- யதீந்த்ர மிஸ்ராந்

ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.



 

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை(current)

 

»

அவிதிதவிஷயாந்தரச்சடாரே 

ருபநிஷதாமுபகாநமாத்ரபோக: 

அபிசகுணவஸாத் ததேகஸேஷீ 

மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

 

இருகவிற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, 

மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் 

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை 

ஆள்வார் அவரே யரண்.இருகவிற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, 

மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் 

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை 

ஆள்வார் அவரே யரண்.

The Kanninun Cirutampu (Tamil: கண்ணிநுண் சிறுத்தாம்பு, romanized: Kaṇṇinuṇ Ciṟutāmpu, lit. 'a rope of small knots'), also rendered the Kanninun Siruttambu,[1] is a work of Tamil Hindu literature composed by Madhurakavi Alvar, one of the twelve Alvars, the poet-saints of the Sri Vaishnava tradition.[2] Comprising eleven pasurams (hymns), the Kanninun Cirutampu is a tribute to Madhurakavi's acharya, Nammalvar.[3] These hymns are part of the Sri Vaishnava canon, the Nalayira Divya Prabandham.[4]


Legend

Part of a series on

Vaishnavism

Closeup of Vishnu, seated in the lotus position on a lotus. From depiction of the poet Jayadeva bowing to Vishnu, Gouache on paper Pahari, The very picture of devotion, bare-bodied, head bowed, legs crossed and hands folded, Jayadeva stands at left, with the implements of worship placed before the lotus-seat of Vishnu who sits there, blessing the poet.


The Kanninun Cirutampu is associated with the origin of the Nalayira Divya Prabandham. According to legend, the theologian Nathamuni once heard some people reciting the cantos of Āravāmude of Nammalvar at Kumbakonam. Captivated by these pasurams (hymns), he wanted to know more about them. One of the verses also mentioned Āyirattul Ippattu (lit. '10 out of the 1000'). When Nathamuni enquired about the remaining 990, the people who sang the 10 did not know anything about the other verses. But as the song mentioned the name and place of the Alvar (Kurukur Satakopan), Nathamuni proceeded to Kurukur and asked the people there about Nammalvar's 1,000 verses.[8]


The people did not know the 1,000 verses that Nathamuni wanted, but they told him about 11 pasurams (hymns) of Madhurakavi Alvar, a disciple of Nammalvar, and the Kanninun Cirutampu. They asked him to go to Tiruppulialvar, the place where Nammalvar lived, and recite these 11 pasurams 12,000 times. Nathamuni did as advised, and pleased with his penance, Nammalvar granted him not only his 1,000 pasurams, but the entire 4,000-pasuram compendium of all the Alvars.[9]


Hymns

The work is named after the opening two words of the first hymn. This is likely a metaphor that compares the knots that were tied by Yashoda to bound the baby Krishna to prevent him from stealing butter,[5] and the poet's own strong ties with his preceptor, Nammalvar. He lauds his preceptor as the lord of Kurukur, the town where the latter resides.[6]


The first hymn of the work is translated as follows:[7]


In place of my father, the great marvellous one

who had himself tied with the knotted, slender cord,

I now draw near and speak of the lord of southern Kurkukur,

and it flows as amrtam, my tongue's delight


— Kanninun Cirutampu, Hymn 1

   பாசுரங்கள்

937## 

  1  1

கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்

பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*


நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்

அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 


938##          

 1  2

நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*

மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*


தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*

பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*


939##           

 1  3


திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*

கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*


பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-

உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*


940##           

 1  4

நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*

புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*


அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்

தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

 

941##            

 1  5

நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*

நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*


செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு

அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


942#            

 1  6

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*

நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *


குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *

என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


943#           

 1  7

கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *

பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*


எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 

ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


944#           

 1  8

அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*

அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*


அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 

அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


945#           

 1  9

மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*

நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*


தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 

புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


946##           

 1  10

பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 

செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*


குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 

முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


947##           

1  11

அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 

அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*


அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 

நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)

நம்மாழ்வார் சேனை முதலியார்  திருக்குருகூர்

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.

நம்மாழ்வார்-வைகாசி - விசாகம்  -திருக்குருகூர்   


திருவிருத்தம்  (100),       


திருவாசிரியம் (7),            


பெரிய திருவந்தாதி (87) &


திருவாய்மொழி (1102)


முகப்பு / ஆழ்வார்கள் / நம்மாழ்வார் / 

திருவிருத்தம்

bowli

பொய் நின்ற ஞானமும்*  பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,* 

இந் நின்ற நீர்மை*  இனி யாம் உறாமை,*  உயிர் அளிப்பான்- 

எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!* 

மெய்ந் நின்று கேட்டருளாய்,*  அடியேன் செய்யும் விண்ணப்பமே.(2) 

காணொளி


பதவுரை

உயிர் அளிப்பவன் - எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக

நின்ற யோனியும் ஆய் - பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்

பிறந்தாய் - திருவவதரித்தவனே!

இமையோர் தலைவா - தேவர்களுக்குத் தலைவனே!

பொய் நின்ற ஞானமும் - பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்

பொல்லா ஒழுக்கமும் - தீய நடத்தையும்

 

2508(current)

 

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்

இசைமின்கள் தூது என்று*  இசைத்தால் இசையிலம்,*  என் தலைமேல்-

அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்,*  அம் பொன் மா மணிகள்-

திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள்*  சிமயம் 

மிசை*  மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே!

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

அம்பொன் - அழகிய பொன்னும்

மா மணிகள் - சிறந்த ரத்னங்களும்

திசை - திக்குகள் தோறும்

மின் மிளிரும் - மின்னல்போல ஒளி வீசப்பெற்று

திருவேங்கடத்து - திருவேங்கட மலையினது

«2576 

sahana

பாசுரம்

ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*

ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*

ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 

காணொளி


பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.;

எறி திரை வையம் முற்றம் - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்

எனத்து உரு ஆய் கிடந்த - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த

பிரான் - தலைவனும்

இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்


 

2577(current)

 

பாசுரம்

நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-

வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-

சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*

பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)


பதவுரை

திருமால் - லக்ஷ்மீபதியான எம்பெருமானது

திருபேர் - திருநாமங்களை

நல்லார் - பயின்றவரான அடியார்களுடைய

அடி - திருவடிகளாகிற

கண்ணி - பூமாலையை

«

 

2584(current)

 

முகப்பு / ஆழ்வார்கள் / நம்மாழ்வார் /

 திருவாசிரியம்

பாசுரம்

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்* 

தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,* 

யாவகை உலகமும் யாவரும் அகப்பட,* 

நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்*

மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க,*

ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்- 

அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்-

பெரு மா மாயனை அல்லது,* 

ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே?  (2)  


பதவுரை

நளிர்மதி சடையனும் - குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்

நான்முகன் கடவுளும் - பிரமதேவனும்

தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா - தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக

யாவரும் - எல்லாப்பிராணிகளும்

யாவகை உலகமும - எல்லா வுலகமும்

அகப்பட - உட்படநிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் - பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்


முகப்பு / ஆழ்வார்கள் / நம்மாழ்வார் / 

பெரியதிருவந்தாதி

cencurutti

பாசுரம்

முயற்றி சுமந்துஎழுந்து*  முந்துற்ற நெஞ்சே,* 

இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,* -நயப்புஉடைய-

நாஈன் தொடைக்கிளவி*  உள்பொதிவோம்,*  நல்பூவைப்- 

பூஈன்ற வண்ணன் புகழ்  (2)

பதவுரை

புகழ் - திருக்கல்யாணகுணங்களை

நயப்பு உடைய - அன்பு பொதுந்திய

நா ஈன் - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற

தொடை கிளவியுள் - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே

பொதிவோம் - அடக்குவோமாக.


2586(current)

cencurutti

பாசுரம்

புகழ்வோம் பழிப்போம்*  புகழோம் பழியோம்* 

இகழ்வோம் மதிப்போம்*  மதியோம் இகழோம்*  மற்று-

எங்கள் மால்! செங்கண் மால்!*  சீறல்நீ, தீவினையோம்* 

எங்கள் மால் கண்டாய் இவை.  

பதவுரை

எம் கண் - எங்களிடத்தில்

மால் - வ்யாமோஹகத்தையுடைய

செம் கண் மால் - புண்டரீகாக்ஷனான பெருமானே,

புகழ்வோம் - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்

பழிப்போம் - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;


 

2670(current)

 


பாசுரம்

கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 

பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 

என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 

பதவுரை

பார் கலந்த வல் வயிற்றான் - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்

பாம்பு அணையான் - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய

சீர் கலந்து - திருக்குணங்கள் நிரம்பிய

சொல் - ஸ்ரீஸூக்திகளை

நினைந்து - அநுணுந்தித்து

«

 

2671(current)

 

பாசுரம்

இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 

எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 

மொய்கழலே ஏத்த முயல் (2)

பதவுரை

ஏந்த - அதிக்க

இப்போதும் - இக்காலத்திலும்

இன்னம் இனி சிறிது நின்றாலும் - மேலுள்ள காலத்திலும்

எப்போதும் - ஆக எந்தக் காலத்திலும்

ஈதே சொல் - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.


 ஆழ்வார்கள் நம்மாழ்வார் திருமொழி-4 2934-பாசுரம் விளக்க உரை

tiruvaay mozhi


2934(current)

 

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்

yamunakalyani

ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 

பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்

நாடி நாடி*  நரசிங்கா என்று,* 

வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   


பதவுரை

அடியீர் - பக்தர்களே!

குழாம் கொள் - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட

பேர் - மிக்க பெருமை பொருந்திய

அரக்கன் - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய

குலம் - குடும்பம்

«

 

2935(current)

 


பாசுரம்

வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 

காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்

வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 

காண*  நீர் இரக்கம் இலீரே. 


பதவுரை

வாள் நுதல் - ஒளிமிக்க நெற்றியையுடைய

இ மடவரல் - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை

உம்மை - (அழகிற்சிறந்த) உம்மை

காணும் ஆசையுள் - காணவேணுமென்ற ஆசையிலரகப்பட்டு

நைகின்றாள் - சிதிலையாகின்றாள்;

 


 


 moksham vendi

«

 

3308(current)

 

»

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்

ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 

மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*

சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 

நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

சேறு கொள் - சேற்று நிலங்களிலே வளர்கின்ற

கரும்பும் - கரும்புகளும்

பெரு செந்நெலும் - பெரிய செந்நெற் பயிர்களும்

மலி - மலிந்திருக்கப்பெற்ற

தண் - குளிர்ந்த

«

 

3309(current)

 

»

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்

தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 

கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*

செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 

வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் - எம்பெருமானுடைய

அடி இணை மிசை - உபய பாதங்களிலே,

கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன் - ஆழ்வார்

செய்த - அருளிச் செய்த

ஆயிரத்துள் - ஆயிரத்தினுள்ளே

«

 

3310(current)

 

»

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம் anthaadi  dhanyaasi

ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 

நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 

சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 

ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

ஆரா அமுதே- எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய

எம்மானே - எம்பெருமானே!

அடியேன் உடலம் - என்னுடைய சரீரமானது

நின்பால் - உன் திறத்தில்

அன்பு ஆய் ஏ - அன்புதானே வடிவெடுத்ததாகி 

«

 

3316(current)

 

»

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்dhanyaasi

அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 

எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*

பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 

தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

ஏன் - நான் அனுபவித்தற்குரிய

அம் பொன் சுடரே - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!

செம் கண் கரு முகிலே - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!

எரி ஏய் பவளம் குன்றே - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!

நால் தோள் எந்தாய் - சதுர்ப்புஜ ஸ்வாமியே!


«5  9   6  nm3

 

3326(current)

 

»

விளக்கப்படம்


மேலும் பார்க்க

பாசுரம்   mukhari

காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 

பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 

சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 

மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

கனி காய் மடவீர் - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே!

எங்கும் - எங்குப்பார்த்தாலும்

பாண் குரல் வண்டினோடு - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும்

பசுதென்றலும் ஆகி - புதுத்தென்றதுமாய்

சேண் சினை ஓங்கு மரம் - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய

பாசுரம்

நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 

சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 

நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 

சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    


பதவுரை

நாமங்கள் ஆயிரம் உடைய - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான

நம் பெருமான் - எம்பெருமானுடைய

அடிமேல் -  திருவடிகளின்மேலே

சேமம் கொள் - திண்ணிய அத்யவஸாய முடையவரான

தென் குருகூர் சடகோபன் - ஆழ்வார்

«

 5  10  11

3342(current)

 nm4

mohanam

பாசுரம்

நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 

ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 

ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 

மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.


பதவுரை

நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று

நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண் - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு

குருகூர் சடகோபன் மாறன் - ஆழ்வார்

ஆக - தாம்ஸத்தைபெறுவதற்கு

நூற்ற - அருளிச் செய்த


3446 6-10- 5


புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ,


புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ,


திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே,


திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே? 6.10.5

«

 

3446(current)

 

பாசுரம் nattakurinji

புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 

புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 

திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

அன்று - ராமாவதாரத்திலே

புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை

எய்த - துளைபடுத்தின

ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே!

 3451 nadanamakriya 6-10-10


அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,


நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,


நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,


புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10

பாசுரம்nadanamakriya 

அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 

நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 

புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        

பதவுரை

அவர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார்

இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு

இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு

உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே!

நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே!


10-10-11

பாசுரம்kalyani

அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 

அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*

அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 

அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)

காணொளி


மேலும் பார்க்க

பதவுரை

அவாவில் - பக்தியினா லுண்டானதான

அந்தா திகளால் - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த

இவை ஆயிரமும் - இவ்வாயிரத்தினுள்ளே

முடிந்த அவாவில் - பரம பக்தியாலே பிறந்ததான

அந்தாதி - அந்தாதியான

Ragam: Lathangi

munnuraittha thiruviruttham nooru paattum

muraiyinvaru maasiriyam Ezu paattum

manniyannar porul periya thiruvanthaathi

maRavaatha padi yeNpathEzu paattum

pinnuraittha thOr thiruvaaymozi yeppOthum

pizaiyarava ayiratthoruNootriirandu paattum

inNilatthil vaikaasi visaakam thannil

ezil kurugai varumaaRaa irangu neeyE.


aadi kondar veena lesson@5G revsn audde grade certificate 7 mayamalavagaula

raga alapana lesson@5G mayamalavagaula https://youtu.be/nP_8UK2kmHE


Friday, 22 December 2023

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

 

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைவஸ்வ தாக்ய மநு புத்ர நபாக ஜாத
நாபா கநாமக நரேந்திர ஸூதோ அம்பரீஷ
சப்தார்ண வாவ்ருத மஹீ தயிதோ அபி ரேமே
த்வத் சங்கிஷு த்வயி ச மக்ந மநாஸ் சதைவ –1-

நரேந்திர-நரர்களுக்கு தலைவன்
தாசாரதி
வாசுயதேவன்
போல் நாபாகன் நபாகனின் மகன்
சப்தார்ண வாவ்ருத-ஏழு கடலால் சூழப்பட்ட

த்வத் சங்கிஷு த்வயி ச–பாகவத கைங்கர்யம் ஏற்றம் -அது போகத் தான் பகவத் பக்தி

விவஸ் வான் ஸூர்ய புத்ரன் -வைவஸ்வத மனுவின் பிள்ளை நமுகன் -அவனுடைய பிள்ளை நாபாகன் –
அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான் -அவன் ஏழு கடல் சூழ்ந்த பூமிக்குத் தலைவனாய் இருந்தான் –
இருப்பினும் தங்கள் இடத்திலும் தங்கள் பக்தர்கள் இடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான் –

சதைவ-எப்பொழுதும்

——-

த்வத் ப்ரீதயே சகலமேவ விதாந்வதோ அஸ்ய
பக்த் யைவ தேவா நசிராத்  (விரைவாக -சிரம் நீண்ட காலம் சிரஞ்சீவி ) ப்ருதா ப்ரஸாதம்(அநுக்ரஹம் )
யே நாஸ்ய யாசந ம்ருதே அப் யபி ரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் பிரவித தார ஸஹஸ்ர தாரம் –2-

பிரவித தார–பிரவித தார

தேவனே உம்மிடம் கொண்ட பக்தியால் –சகலமேவ-அனைத்து கர்மங்களையும் ஓன்று விடாமல் செய்தான் –
அவன் கேட்காமலேயே அவனை ரக்ஷித்து அருள
ஆயிரக் கணக்கான முனைகளை உடைய தங்கள் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்து அருளினீர்கள்

————

சத்வாதஸீ வ்ரதமதோ பவத் அர்சநார்தம்
வர்ஷம் ததவ் மது வநே யமுநோப கண்டே
பத்ந்யா சமம் ஸூ மனஸா மஹதீம் விதன்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜன் பஸூ ஷஷ்டி கோடிம்–3-

பிறகு அம்பரீஷன் யமுனைக் கரையில் உள்ள மது வனத்தில் நற் குணங்கள் கொண்ட தன்
மனைவி உடன் தங்களைப் பூஜித்து வந்தான்
பஸூ ஷஷ்டி கோடிம்-அறுபது கோடிப் பசுக்களை –த்விஜேஷு விஸ்ருஜன்-வேதம் அறிந்தவர்களுக்குத் தானம் செய்தான்
ஒரு வருஷ காலம் துவாதசி விரதத்தை அனுஷ்ட்டித்து தங்களைப் பூஜித்து வந்தான்

மது வனத்தில்-துருவன் தவம் இருந்த இடம்
ராமாயணம் -லவணாசுரனை அழித்து நகரமாக மதுரா ஆகி மன்னு வடமதுரை ஆனது

சத்வாதஸீ வ்ரத-ஏகாதசி விரதம் -பாரணை பண்ணி துவாதசியில் பூர்த்தி
16-2 கீதா பாஷ்யம் -துவாதசி விரதம் என்றே கூறுகிறார்
துவாதச சமாராதனம் பண்ணுவதற்காகவே ஏகாதசி விரதம்-பகவானின் உவப்புக்காகவே விரதம் இருக்க வேண்டும்-
இதுவே முக்கிய காரணம் -தேசிகன் தாத்பர்ய சந்திரிகையில் காட்டி அருளுகிறார்

————-

தத்ராத பாரண திநே பவத் அர்சநாந்தே
துர்வாஸ ஸ அஸ்ய முனிநா பவனம் ப்ரபேதே
போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண பரார்தி சீலோ
மந்தம் ஜகாம யமுனாம் நியமாந் விதாஸ்யந் –4-

போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண-உண்பதற்கு வரித்தான் அரசன்

விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மது வனத்துக்கு வந்தார் –
அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினார்
விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து –மந்தம் ஜகாம-மெதுவே யமுனைக் கரைக்குச் சென்றார் –

————

ராஞ்ஞா அத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத்
வாரைவ பாரணம் அகாரி பவத் பரேண
ப்ராப்தோ முநிஸ் தத் அத திவ்ய த்ருஸா விஜாநந்
ஷிப்யந் க்ருத உத்த்ருத ஜடோ விததாந க்ருத்யாம் –5-

அரசனான அம்பரீஷன் பாரணை செய்ய வேண்டிய திதி முடியப் போகிறதே என்ற கேதாத்-கவலையில்
தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான்
ஞான த்ருஷ்டியால் அதை அறிந்த முனிவர் கோபத்துடன் கடும் சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து
தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து அதில் இருந்து க்ருத்யை என்ற துர் தேவதையை உண்டாக்கினார் –

————

க்ருத்யாம் ச தாம் அஸி தராம் புவனம் தஹந்தீம்
அக்ரே அபி விஷ்யந் ரூபதிர்ந பதாச்ச கம்பே
த்வத் பக்த பாதம் அபி வீஷ்ய ஸூ தர்சனம் தே
க்ருத்யா நலம் சலபயன் முநிவந் வதா வீத் —6-

கையில் கத்தி யுடன் உலகங்களை எரிக்கும் அந்த துர் தேவதையை நேரில் கண்ட
அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான்
ஸூ தர்சன சக்ரமானது அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யை(சலபயன்-சலபம் போல் அழித்து )அழித்து
துர்வாசரைப் பின் தொடர்ந்து சென்றது –

———

தாவந் நசேஷ புவநேஷு பியா ஸ பஸ்யன்
விஸ் வத்ர சக்ரம் அபி தே கதவான் விரிஞ்சம்
க கால சக்ரம்  அதி லங்க யதீத் யபாஸ்த
சர்வம் யசவ் ச ச பவந்த மவந்த தைவ –-7–

கால சக்கரத்தோடு வெண் சங்கம் கை ஏந்தினாய் ஆழ்வார்

–யார் என்றும் ப்ரம்மாவாலும் முடியாதே

பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார் – எல்லா இடத்துக்கும் சக்ராயுதம் பின்
தொடர்ந்த்தத்தைக் கண்டு பிரமனைச் சரண் அடைந்தார்
கால சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரமதேவர் முனிவரை அனுப்பி விட்டார்
பிறகு பரம சிவன் இடம் சென்றார் -அவரும் தங்களையே சரணம் அடைய உபதேசம் செய்தார் –

பூயோ பவந் நிலய மேத்ய முனிம் நமந்தம்
ப்ரோஸே பவாந் அஹம் ருஷே தநு பக்த தாஸ
ஞானம் தபஸ் ச விநயாந் விதமேவ மாந்யம்
யாஹ் யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் –8-

எங்கும் நிறைந்தவனே -கடைசியாக முனிவர் ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து உம்மைச் சரண் அடைந்தார் –
தாங்கள் -முனிவரே நான் பக்தர்களுக்கு அடியவன்
அறிவும் தவமும் இருந்தாலும் அஹங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும்
நீங்கள் அம்பரீஷனையே சரணம் அடையுங்கோள் என்று உபதேசித்து அருளினீர்கள் –

பார்த்த சாரதியாக இருந்தானே –
கிரீடம் தலை மேல் இருக்க அஹங்காரம் -14 வருஷம் ஒதுக்கி வைத்து
பாதுகா -கைங்கர்ய ஸ்ரீ சிம்ஹாசனத்தில் இருத்தினான்
நனு -உறுதியாக பக்த தாஸன்

பூமந்–சாந்தோக்யம் -யத்ர நான்யத் பஸ்யதி –இத்யாதி பூமா ஸப்தம் –
பஹு மா சேர்ந்து பூமா –
வார்த்தை தொடங்கி –பலவற்றையும் சொல்லி -ஆர்வம் -ஜீவன் -சரீராத்மா மிக பெரியவன்
இவ்வளவு பெரியவன் பக்த தாஸன் சொல்லிக் கொள்வதே ஸ்ரேஷ்டம்
அதற்காகவே இந்தப் பத பிரயோகம்
நான் பெரியவன் —
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -ஆழ்வார்

——

தாவத் ச மேத்ய முனிநா ச க்ருஹீத பாதோ
ராஜா அபஸ்ருத்ய பவதஸ்த்ம சாவ் அநவ்ஷீத்
சக்ரே கதே முனிரதாத் அகிலாஸி ஷோ அஸ்மை
த்வத் பக்திமா கசி க்ருதே அபி க்ருபாம் ச ஸம் சந் –9-

முனிவரும் அம்பரீஷன் க்ருஹீத பாதோ-கால்களை பற்றினார் -அவன் விலகி சக்ராயுதத்தை ஸ்துதிக்க அது திரும்பிச் சென்றது
துர்வாசர் அம்பரீஷனின் பக்தியையும் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும்
மெச்சி அவனை ஆசீர்வதித்தார் –

குற்றம் செய்தவர் பக்கலில் பொறையும்–கிருபையும் உகப்பும் வேண்டும்

————

ராஜா ப்ரதீஷ்ய மும் ஏகச மாம் அ நாஸ்வாந்
ஸம் போஜ்ய ஸாது தம் ருஷிம் விஸ் ருஜன் ப்ரசன்னம்
புக்த்வா ஸ்வயம் த்வயி ததோ அபி த்ருடம் ரதோ அபூத்
ஸாயுஜ்யம் ஆப ச ச மாம் பவ நே ச பாயா –10-

அம்பரீஷன் ஒரு வருஷம் துர்வாசரை எதிர்பார்த்து உண்ணாமல் விரதம் இருந்து அவர் வந்ததும்
அவருக்கு உணவு அளித்து வழி அனுப்பி பிறகு பாரணை செய்தான்
முன்பு இருந்ததை விட அதிகமாக தங்கள் இடம் பக்தி கொண்டு முடிவில் தங்களை அடைந்தான்
அத்தகைய மகிமை வாய்ந்த குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேணும் –

நானே தான் ஆயிடுக -என்பதற்கு சிறந்த த்ருஷ்டாந்தம் அம்பரீஷன்

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-