ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, 9 September 2023

31 ஏகத்ரிம்ʼஶத³ஶக꞉ - ப்⁴ராமர்யவதார꞉

 

https://youtu.be/cJClnrWJW0Y

31 ஏகத்ரிம்ʼஶத³ஶக꞉ - ப்⁴ராமர்யவதார꞉

கஶ்சித்புரா மந்த்ரமுதீ³ர்ய கா³யத்ரீதி ப்ரஸித்³த⁴ம்ʼ தி³திஜோ(அ)ருணாக்²ய꞉ . சிராய க்ருʼத்வா தப ஆத்மயோனே꞉ ப்ரஸாதி³தாதா³ப வரானபூர்வான் .. 31-1.. ஸ்த்ரீபும்பி⁴ரஸ்த்ரைஶ்ச ரணே த்³விபாதை³ஶ்சதுஷ்பதை³ஶ்சாப்யுப⁴யாத்மகைஶ்ச . அவத்⁴யதாம்ʼ தே³வபராஜயம்ʼ ச லப்³த்⁴வா ஸ த்³ருʼப்தோ தி³வமாஸஸாத³ .. 31-2.. ரணே ஜிதா தை³த்யப⁴யேன லோகபாலை꞉ ஸஹ ஸ்வஸ்வபதா³னி ஹித்வா . தே³வா த்³ருதா꞉ ப்ராப்ய ஶிவம்ʼ ரிபூணாம்ʼ ஸம்ʼயக்³வதோ⁴பாயமசிந்தயம்ʼஶ்ச .. 31-3.. ததா³(அ)ப⁴வத்காப்யஶரீரிணீ வாக்³ப⁴ஜேத தே³வீம்ʼ ஶுப⁴மேவ வ꞉ ஸ்யாத் . தை³த்யோ(அ)ருணோ வர்த⁴யதீஹ கா³யத்ர்யுபாஸனேனாத்மப³லம்ʼ த்வத்⁴ருʼஷ்யம் .. 31-4.. யத்³யேஷ தம்ʼ மந்த்ரஜபம்ʼ ஜஹாதி ஸ து³ர்ப³ல꞉ ஸாத்⁴யவதோ⁴(அ)பி ச ஸ்யாத் . ஏவம்ʼ நிஶம்ய த்ரித³ஶை꞉ ப்ரஹ்ருʼஷ்டைரப்⁴யர்தி²தோ தே³வகு³ரு꞉ ப்ரதஸ்தே² .. 31-5.. ஸ ப்ராப தை³த்யம்ʼ யதிரூபதா⁴ரீ ப்ரத்யுத்³க³தோ மந்த்ரஜபாதிஸக்தம் . ஸ்மிதார்த்³ரமூசே குஶலீ ஸப³ந்து⁴மித்ரோ ப⁴வான் கிம்ʼ ஜக³தே³கவீர .. 31-6.. தை³த்யஸ்ய தே மந்த்ரஜபேன கிம்ʼ யோ நூனம்ʼ ப³லிஷ்ட²ம்ʼ த்வப³லம்ʼ கரோதி . யேனைவ தே³வா அப³லா ரணேஷு த்வயா ஜிதாஸ்த்வம்ʼ ஸ்வஹிதம்ʼ குருஷ்வ .. 31-7.. ஸம்ʼந்யாஸினோ மந்த்ரஜபேன ராக³த்³வேஷாதி³ ஜேதும்ʼ ஸததம்ʼ யதந்தே . ந த்வம்ʼ யதிர்னாபி முமுக்ஷுரர்த²காமாதிஸக்தஸ்ய ஜபேன கிம்ʼ தே .. 31-8.. ஏகம்ʼ ஹி மந்த்ரம்ʼ ஸமுபாஸ்வஹே த்³வௌ தேனாஸி மித்ரம்ʼ மம தத்³வதா³மி . மந்த்ரஶ்ச மே முக்தித³ ஏவ துப்⁴யம்ʼ வ்ருʼத்³தி⁴ம்ʼ ந த³த்³யாத³யமித்யவேஹி .. 31-9.. ப்³ருʼஹஸ்பதாவேவமுதீ³ர்ய யாதே ஸத்யம்ʼ தது³க்தம்ʼ தி³திஜோ விசிந்த்ய . க்ரமாஜ்ஜஹௌ மந்த்ரஜபம்ʼ ஸதா³ ஹி மூட⁴꞉ பரப்ரோக்தவினேயபு³த்³தி⁴꞉ .. 31-10.. ஏவம்ʼ கு³ரௌ குர்வதி தை³த்யபீ⁴தை꞉ க்ருʼத்வா தபோயோக³ஜபாத்⁴வராதி³ . ஜாம்பூ³னதே³ஶ்வர்யமரை꞉ ஸ்துதா த்வம்ʼ ப்ரஸாதி³தா ப்ராது³ரபூ⁴꞉ க்ருʼபார்த்³ரா .. 31-11.. த்வத்³தே³ஹஜாதைர்ப்⁴ரமரைரனந்தைர்தை³த்ய꞉ ஸஸைன்யோ விப²லாஸ்த்ரஶஸ்த்ர꞉ . த³ஷ்டோ ஹதஸ்த்வம்ʼ ச நுதிப்ரஸன்னா பஶ்யத்ஸு தே³வேஷு திரோஹிதா(அ)பூ⁴꞉ .. 31-12.. ஸ்வதே³ஹதோ வை ப்⁴ரமரான் விதா⁴த்ரீ த்வம்ʼ ப்⁴ராமரீதி ப்ரதி²தா ஜக³த்ஸு . அஹோ விசித்ராஸ்தவ தே³வி லீலா꞉ நமோ நமஸ்தே பு⁴வனேஶி மாத꞉ .. 31-13..https://youtu.be/cJClnrWJW0Y

 நன்றி: VASANTHA


Amma http://krishvasa.blogspot.com/

தேவீ நாராயணீயம் – தசகம் 31 to 41

தசகம் 31

ப்ராமர்யவதாரம்

1. கச்சில் புரா மந்த்ர,முதீர்ய காய –
– த்ரீதி, ப்ரஸித்தம் திதி,ஜோருணாக்யஹ
சிராய க்ருத்வா, தப ஆத்மயோனேஹே
ப்ரஸாதிதாதா,ப வரான் அபூர்வானு.

அருணன் என்னும் ஒரு அஸுரன் இமயமலை நோக்கிச் சென்று, கங்கைக் கரையில் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொண்டு, மிகக் கடுமையாக அன்ன ஆகாரம் ஏதும் இன்றி, தண்ணீர் கூட அருந்தாமல் காயத்ரி மந்திரத்தை பல வருடங்கள் ஜபித்து வந்தான். அவன் தவத்தின் உக்ரம் சகல லோகத்தையும் தகிக்க, தேவர்கள் பயந்து நடுங்கி ப்ரம்மனிடம் முறையிட்டார்கள். ப்ரம்மன் ஹம்ஸவாகனத்தில் அருணனுக்குக் காட்சி தந்தார். இதுவரை யாரும் கேட்காத வரத்தை ப்ரம்மனிடம் கேட்டான். பல ஆயிரம் வருஷங்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்ததால் அவனுக்குப் புண்ணியமும் கிடைத்தது.

2. ஸ்திரீபும்,பிரஸ்த்ரைச்ச, ரணே த்விபாதைஹி
சதுஷ்பதை சாப்,யு பயாத்மகைச்ச
அவத்யதாம் தேவ,பராஜயம் ச
லப்த்வா ஸ த்ருப்தோ, திவமாஸஸாத

அருணன் அப்படி என்ன வரம் கேட்டான்? சும்ப நிசும்பர்கள், ஹிரண்யகசிபு போன்றவர்களுக்கு வந்த அபத்தம் தனக்கும் வரக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக வரம் கேட்டான். ” எனக்கு யுத்தத்தினாலோ,அஸ்திர சஸ்திரங்களினாலோ, இரண்டு கால்கள் உடைய ஆணாலோ பெண்ணாலோ, நான்கு கால்கள் உடைய மிருகங்களினாலோ, அல்லது நரஸிம்ஹ அவதாரம் போன்று இரண்டும் இணைந்த உருவத்தாலோ இது போன்ற எந்த ஜந்துக்களாலும் மரணம் வரக்கூடாது. மேலும் இப்பொழுது எனக்குத் தேவர்களை வெல்லும் சக்தியும் வேண்டும்” எனக் கேட்டான். ப்ரம்மாவும் தந்தார். இந்த வரம் கிடைத்த அஹங்காரத்தால் ஸ்வர்க்கலோகம் சென்றான்.

3. ரணே ஜிதா தைத்ய,பயேன லோக
பாலை: ஸஹ ஸ்வ, ஸ்வ பதானி ஹித்வா
தேவா த்ருதா: ப்ராப்ய, சிவம் ரிபுணாம்
ஸம்யக் வதோபாய,மசிந்தயம்ச்ச

இந்திரனை யுத்தத்திற்கு அழைத்தான். சூரியனும் இந்திரனும் பயந்து, ப்ரம்மனிடம் போக, அவரும் அனைவருடன் விஷ்ணுவிடம் செல்ல, முடிவில் அனைவரும் சிவனிடம் சென்றனர். சிவனுக்கு அருணனின் வரம் பற்றி நன்கு தெரியும். அதனால் அவனை எப்படி வெற்றி கொள்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சூரியன், யமன், அக்னி ஆகியோரையும் அவரவர்களின் இடத்தைவிட்டு விரட்டி, அவர்களைப் போல் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான்.

4. ததாSபவத் காப்ய,சரீரிணீ வாக்-
பஜேத தேவீம்,சுபமேவ, வ: ஸ்யாது
தைத்யோSருணோ வர்த்த,யதீஹ காயத்ரீ
உபாஸ நேநாSSத்,மபலம் த்வத்ருஷ்யம்

இப்படி எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அசரீரி வாக்கு கேட்டது.” காயத்ரீ மந்திரத்தை பல ஆயிரம் வருடங்கள் ஜபித்ததால் அவன் பலம் மிகுந்து வருகின்றது. அஸுரன் இப்பொழுது மிகுந்த ஆத்ம பலத்துடன் இருக்கிறான்”.

5. யத்யேஷ தம் மந்த்ர,ஜபம் ஜஹாதி
ஸ துர்பல: ஸாத்,யவதோSபி ச ஸ்யாது
ஏவம் நிசம்ய த்ரிதசை: ப்ரஹ்ருஷ்டைஹி
அப்யர்த்திதோ தேவ,குரு: ப்ரதஸ்தே

“அவன் காயத்ரீ மந்திரம் சொல்வதை நிறுத்த வேண்டும். அதனால் அவன் பலம் குறையும். அப்பொழுது அவனை வெல்வது எளிதாகும்”. அசரீரி வாக்கைக் கேட்ட தேவர்கள் சந்தோஷம் கொண்டார்கள். தங்கள் குருவான ப்ரகஸ்பதியைச் சரண் அடைந்தார்கள். விபரம் அறிந்து கொண்ட ப்ரகஸ்பதி அஸுரனிடம் சென்றார்.

6. ஸ ப்ராப தைத்யம், யதிரூபதாரீ;
ப்ரத்யுத்கதோ மந்த்ர,ஜபாதிஸக்தம்
ஸ்மிதார்த்ரமூசே, குசலீ ஸ பந்து
மித்ரோ பவான் கிம்? ஜகதேகவீர!

தேவர்களின் குருவான ப்ரகஸ்பதி ஒரு சந்யாஸி போல் வேடம் பூண்டு அருணனிடம் சென்றார். அருணனும் சந்யாஸியை உபசரித்து வரவேற்றான். அவன் விடாமல் காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதை சந்யாஸியான ப்ரகஸ்பதிப் பார்த்தார். புன்சிரிப்புடன் அஸுரனின் குசலம் விஜாரித்தார். அவனை ஜகதேகவீரா! என்றும் அழைத்தார்.

7. தைத்யஸ்ய தே மந்த்ர,ஜபேன கிம்? யோ
நூனம் பலிஷ்டம், த்வபலம் கரோதி
யேனைவ தேவா, அபலா ரணேஷு
த்வயா ஜிதா, ஸ்த்வம், ஸ்வஹிதம் குருஷ்வ

‘ஏன் இப்படி விடாமல் மந்திரத்தை ஜபம் செய்கிறாய்? இதனால் உனக்கு என்ன லாபம்? இப்பொழுது உன்னிடம் இல்லாத எந்த ஒரு புதிய சுகமும் நீ இப்படி விடாமல் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்காது. இந்த ஜபத்தால் எந்த லாபமும் இல்லை. நஷ்டம் தான் ஏற்படும். பேரும் புகழும் உடையவன் துர்பலனாவான். தேவர்கள் மந்திரத்தை விடாமல் ஜபித்து ஜபித்து துர்பலர்கள் ஆகவில்லையா? யுத்தத்திலும் தோல்வியையே தழுவினர். அதனால் உனக்கு வருங்காலத்திற்கு எது உகந்ததோ அதைச் செய். அதுதான் உனக்கு நன்மை தரும்” என்றார் சந்யாஸி வேடம் கொண்ட ப்ரகஸ்பதி.

8. ஸந்யாஸினோ மந்த்ர,ஜபேன ராக
த்வேஷாதி ஜேதும், ஸததம் யதந்தே;
ந த்வம் யதிர், நாபி, முமுக்ஷு, ரர்த்த-
– காமாதிஸக்தஸ்ய, ஜபேன கிம் தே?

அஸுரன் கேட்டான் “மந்திரம் ஜபித்தால் பலம் போய்விடுமா? அப்படியானால் சந்யாஸிகள் ஏன் ஜபிக்கிறார்கள்?” போலி சந்யாஸி பதில் சொன்னார். “மந்திரம் ஜபித்தால் ராக த்வேஷாதிகள் நசித்துப் போகும். சந்யாஸிகளுக்கு அதுதானே வேண்டும். அவர்களுக்கு அர்த்த காம்யங்களில் தாத்பர்யமில்லை. ஆனால் அஸுரனான நீ இந்த மந்திரத்தை ஜபித்தால் விபரீதமான பலனைக் கொடுக்கும். ராகத்வேஷங்களை நசிக்கும், அர்த்த காமங்களில் ஆஸக்தி குறையும். உன்னை சந்யாஸியாக மாற்றும். அதனால் மந்திரம் ஜபிக்காதே” என்றார்.

9. ஏகம் ஹி மந்த்ரம், ஸமுபாஸ்வஹே த்வௌ;
தேனாஸி மித்ரம், மம, தத் வதாமி-
மந்த்ரச்ச மே முக்தித ஏவ, துப்யம்
வ்ருத்திம் ந தத்யாத,யமித்யவேஹி

அருணாஸுரன் எதையும் கேட்காமல் சந்யாஸி எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்? இந்த வினாவிற்கான விடை இந்த ஸ்லோகத்தில் உள்ளது. சந்யாஸியும், அஸுரனும் ஜபிப்பது ஒரே மந்திரம் தான். அதனால் இருவரும் நண்பர்கள். நண்பனின் நன்மைக்காகவே இதைச் சொன்னார். இது ஒரு நண்பனின் கடமை அல்லவா? சந்யாஸிக்கு அது நண்மை தரும். ஆனால் அஸுரனுக்கு இது நல்லதல்ல. அதனால் ஒரு நண்பனாக இதைச் சொன்னேன். உனக்குத் தோன்றும் படிச்செய் என்று சொன்னார் சந்யாஸி.

10. ப்ருஹஸ்பதாவேவ,முதீர்ய யாதே
ஸத்யம் ததுக்தம், திதிஜோ விசிந்த்ய
க்ரமாஜ் ஜஹொ மந்த்ர,ஜபம்; ஸதா ஹி
மூட: பரப்ரோக்த, வினேய புத்திஹி

ப்ரகஸ்பதி ஒரு நண்பன் போலப் பேசி, தான் சொல்வதை அஸுரன் நம்பும்படிச் சாமர்த்யமாகப் பேசினார். அஸுரனும் நம்பினான். நாம் அறியாதவர்கள் நமக்கு உபதேசம் செய்ய வந்தால் நாம் யோசிக்க வேண்டும். நம்முடைய புத்தியை உபயோகிக்க வேண்டும். ஆனால் அஸுரன் சந்யாஸியை நம்பினான். அவர் சொல்வதெல்லாம் சத்தியமானதே என்று நம்பினான். மந்திர ஜபம் செய்வதை நிறுத்தினான். முன்னும் பின்னும் யோசிக்காத மூடன் அவன். புத்தியில்லாததால் வஞ்சிக்கப் பட்டான்.

11. ஏவம் குரௌ குர்,வதி தைத்யபீதைஹி
க்ருத்வா தபோயோக, ஜபாத்வராதி
ஜாம்பூனதேச்வர்ய,மரை: ஸ்துதா த்வம்
ப்ரஸாதிதா ப்ரா,துரபூ: க்ருபார்த்ரா

இந்த சமயத்தில் இந்திராதி தேவர்கள் ஜாம்பூனதேஸ்வரியான தேவியை மாயா பீஜத்தால் (ஹ்ரிம்) ஜபம் செய்து தவம், யோகம், இவைகளால் துதித்தார்கள். மஹா வித்யே ! சகலத்திற்கும் ஆதாரமானவளே! பயங்கரமானவளே! காளிகையே! பீதாம்பரதாரீ! திருபுரசுந்தரீ! பைரவீ! மாதவீ! சாகம்பரீ! கங்கே! சாரதே! சாவித்ரீ! சுவாஹே! சுவதே! பிரமரங்களை மாலையாக அணிந்தவளே! பிரமரங்கள் மொய்க்கும் மாலை அணிந்தவளே! புவனேஸ்வரியே! உனக்கு எல்லாதிசைகளிலும் நமஸ்காரம் நமஸ்காரம் என்று ஸ்தோத்ரம் செய்தார்கள். தேவி கருணையுடன் அவர்கள் முன் தோன்றினாள்.

12. த்வத் தேஹஜாதைர், ப்ரமரைர் அனந்தைர்
தைத்ய: ஸஸைன்யோ, விபலாஸ்த்ர சஸ்த்ரஹ
தருஷ்டோ ஹத: ஸ்த்வம், ச நுதி,ப்ரஸன்னா
பச்யத்ஸு தேவேஷு, திரோஹிதாபூஹூ

தேவர்கள் முன்தோன்றிய அன்னையின் சரீரத்திலிருந்து லக்ஷக்கணக்கான அளவில் பிரமரங்கள் அதாவது வண்டுகள் தோன்றி, தேனை எடுக்க வரும் மனிதனைக் கொட்ட வரும் தேனீக்கள் போல, அஸுரனை நோக்கிச் சென்றன. அஸுரன் காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தியதால், தான் பலமிழந்து இருப்பதாக உணர்ந்தான். பிரமரக் கூட்டத்தைக் கண்ட ஜனங்கள் ஆச்சர்யத்திருக்க, வண்டுகள், அஸுரனையும் அவனது சகாக்களையும் சூழ்ந்து அவர்களின் மார்பைத் துளைக்க, வண்டுகளுடன் யுத்தமும் செய்ய முடியவில்லை, அவனுடைய அஸ்த்ர சஸ்த்ரங்களாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. அவர்கள் மரணம் அடைந்தார்கள். பிரமரங்களுக்கு 6 கால்கள். இரண்டும் இல்லை. நான்கும் இல்லை. அது மனித , மிருக இனமும் இல்லை. இரண்டும் சேர்ந்ததும் இல்லை. ப்ரம்மா எப்படி வரம் தந்திருந்தாலும் அம்பாள் அதற்கான வழியைக் கண்டு, துஷ்டர்களை அழித்து பக்தர்களைக் காப்பாற்றுவாள். ஆச்சர்யம்! ஆச்சர்யம்! என்று அமரர்கள் அதிசயித்து பிரமராம்பிகையை பூஜித்து, ஜயமாதா! ஜய ஈசானீ! என்று கூறி நமஸ்கரித்தார்கள். தேவியும் இதனால் மகிழ்ச்சி அடைந்து, அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்து அமரர்கள் பார்த்திருக்க தேவீ மறைந்தாள்.

13. ஸ்வதேஹதோ வை, ப்ரமரான் விதாத்ரீ
த்வம் ப்ராமரீதி, ப்ரதிதா ஜகத்ஸு;
அஹோ! விசித்ராஸ்,தவ தேவீ லீலா;
நமோநமஸ்தே புவனேசி மாதஹ!

நமஸ்தே நமஸ்தே ஜகதம்பிகே
நமஸ்தே நமஸ்தே ஜகத்வ்யாபிகே
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீசைலவாஸி
நமஸ்தே நமஸ்தே ப்ரமராம்பிகே!

பிரமரங்களை உற்பத்தி செய்ததால் தேவிக்கு ப்ராமரீ! என்ற பெயர் பிரசித்தி பெற்றது. அனைத்தும் தேவியின் சித்தப்படியே நடக்கும். அந்த அன்னையின் கருணைக்கு நாமும் பாத்திரமாக வேண்டாமா? இதை நமது வாழ்க்கையின் லக்ஷியமாகக் கொள்ள வேண்டும். அந்த கருணயை வேண்டி இதன் ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.

முப்பத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது 



No comments: