https://www.youtube.com/watch?v=PIilbmEhWWI
33 த்ரயஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமகதா²
ஶக்ர꞉ புரா ஜீவக³ணஸ்ய கர்மதோ³ஷாத்ஸமா꞉ பஞ்சத³ஶ க்ஷமாயாம் .
வ்ருʼஷ்டிம்ʼ ந சக்ரே த⁴ரணீ ச ஶுஷ்கவாபீதடா³கா³தி³ஜலாஶயா(ஆ)ஸீத் .. 33-1..
ஸஸ்யானி ஶுஷ்காணி க²கா³ன் ம்ருʼகா³ம்ʼஶ்ச பு⁴க்த்வா(அ)ப்யத்ருʼப்தா꞉ க்ஷுத⁴யா த்ருʼஷா ச .
நிபீடி³தா மர்த்யஶவானி சாஹோ மர்த்யா அநிஷ்டான்யபி பு⁴ஞ்ஜதே ஸ்ம .. 33-2..
க்ஷுதா⁴(அ)ர்தி³தா꞉ ஸர்வஜனா மஹா(ஆ)பத்³விமுக்திகாமா மிலிதா꞉ கதா³சித் .
தபோத⁴னம்ʼ கௌ³தமமேத்ய ப⁴க்த்யா ப்ருʼஷ்டா முனிம்ʼ ஸ்வாக³மஹேதுமூசு꞉ .. 33-3..
விஜ்ஞாய ஸர்வம்ʼ முநிராட் க்ருʼபாலு꞉ ஸம்பூஜ்ய கா³யத்ர்யபி⁴தா⁴ம்ʼ ஶிவே த்வாம் .
ப்ரஸாத்³ய த்³ருʼஷ்ட்வா ச தவைவ ஹஸ்தால்லேபே⁴ நவம்ʼ காமத³பாத்ரமேகம் .. 33-4..
து³கூலஸௌவர்ணவிபூ⁴ஷணான்னவஸ்த்ராதி³ கா³வோ மஹிஷாத³யஶ்ச .
யத்³யஜ்ஜனைரீப்ஸிதமாஶு தத்தத்தத்பாத்ரதோ தே³வி ஸமுத்³ப³பூ⁴வ .. 33-5..
ரோகோ³ ந தை³ன்யம்ʼ ந ப⁴யம்ʼ ந சைவ ஜனா மிதோ² மோத³கரா ப³பூ⁴வு꞉ .
தே கௌ³தமஸ்யோக்³ரதப꞉ப்ரபா⁴வமுச்சைர்ஜகு³ஸ்தாம்ʼ கருணார்த்³ரதாம்ʼ ச .. 33-6..
ஏவம்ʼ ஸமா த்³வாத³ஶ தத்ர ஸர்வே நின்யு꞉ கதா³சின்மிலிதேஷு தேஷு .
ஶ்ரீநாரதோ³ தே³வி ஶஶீவ கா³யத்ர்யாஶ்சர்யஶக்திம்ʼ ப்ரக்³ருʼணன்னவாப .. 33-7..
ஸ பூஜிதஸ்தத்ர நிஷண்ண உச்சைர்நிவேத்³ய தாம்ʼ கௌ³தமகீர்திலக்ஷ்மீம் .
ஸபா⁴ஸு ஶக்ராதி³ஸுரை꞉ ப்ரகீ³தாம்ʼ ஜகா³ம ஸந்தோ ஜஹ்ருʼஷு꞉ க்ருʼதஜ்ஞா꞉ .. 33-8..
காலே த⁴ராம்ʼ வ்ருʼஷ்டிஸம்ருʼத்³த⁴ஸஸ்யாம்ʼ த்³ருʼஷ்ட்வா ஜனா கௌ³தமமானமந்த꞉ .
ஆப்ருʼச்ச்²ய தே ஸஜ்ஜனஸங்க³பூதா முதா³ ஜவாத்ஸ்வஸ்வக்³ருʼஹாணி ஜக்³மு꞉ .. 33-9..
தசகம் 33
கௌதமகதை
1. சக்ர: புரா ஜீவ,கணஸ்ய கர்ம
தோஷாத் ஸமா: பஞ்சதச க்ஷமாயாம்
வ்ருஷ்டிம் ந சக்ரே;, தரணீ ச சுஷ்க
வாபீத டாகாதி, ஜலாசயாSSஸீது
து³꞉கா²னி மே ஸந்து யதோ மனோ மே ப்ரதப்தஸங்க⁴ட்டிதஹேமஶோபி⁴ .
விஶுத்³த⁴மஸ்து த்வயீ ப³த்³த⁴ராகோ³ ப⁴வானி தே தே³வி நமோ(அ)ஸ்து பூ⁴ய꞉ .. 33-10..
முன்னொரு சமயம் உலகத்தில் பிராணிகளுடைய துஷ்கர்ம வினையால் இந்திரன் 15 வருஷங்கள் மழை பெய்யச் செய்யவில்லை.. ஆறு, ஏரி, குளம், குட்டை ,கிணறு எல்லாம் வற்றிப் போனது.
2. ஸஸ்யானி சுஷ்காணி, ககான் ம்ருகாம்ச்ச
புக்த்வாSப்ய த்ருப்தா:, க்ஷுதயா த்ருஷா ச
நிபீடிதா மர்த்ய, சவானி சாஹோ!
மர்த்யா அநிஷ்டான்,யபி புஞ்சதே ஸ்ம
செடி, கொடி, மரம் எல்லாம் வாடிப்போயின. மனிதர்கள் பசியால் வாடினார்கள். உலர்ந்த பழங்களைச் சாப்பிட்டனர். பறவைகளையும், மிருகங்களையும் கொன்று தின்றார்கள். இறந்தவனை உயிரோடு இருப்பவன் சாப்பிட்டான். பசிக் கொடுமையால் சாப்பிடக் கூடாததையெல்லாம் சாப்பிட்டான். என்ன கொடுமை இது? அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப் படுகிறது.
3. க்ஷுதாSர்திதா: ஸர்வ,ஜனா மஹாபத்
விமுக்திகாமா, மிளிதா: கதாசிது
தபோதனம் கௌ,தமமேத்ய பக்த்யா
ப்ருஷ்டா முனிம் ஸ்வா,கமஹேதுமூசுஹு
பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் யோசித்து, தபஸையே தனமாகக் கொண்ட கௌதம முனிவரிடம் போவோம். அவர் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர். அவர் ஆஸ்ரமம் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றால் நம் வறுமையை நீக்குவார் என்று முடிவு செய்து, எல்லோரும் தத்தம் குடும்பத்துடனும், பசுக்கள், வேலைக்காரர்கள் அனைவருடனும் கௌதம முனிவரின் ஆஸ்ரமம் அடைந்தனர். கௌதமர் அவர்களை முறைப்படி உபசரித்துப் பின், ஏன் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வந்தீர்கள்? காரணம் யாது? என்று கேட்டார். பிராமணர்கள் தங்கள் குறைகளையும், வறுமை நிலையையும் துக்கத்தோடு சொன்னார்கள். கௌதமர் அதைச் சிரத்தையுடன் கேட்டார்.
4. விஞ்ஞாய ஸர்வம், முனிராட் க்ருபாலுஹு
ஸம்பூஜ்ய காயத்ர்,யபிதாம் சிவே! த்வாம்
ப்ராஸாத்ய த்ருஷ்ட்வா ச, தவைவ ஹஸ்தாலு
லேபே நவம் கா,மதபாத்ரமேகம்
கௌதமர் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பிராமணர்களே உங்கள் வரவால் என் இல்லம் சுத்தம் பெற்றது. நீங்கள் கவலையை விட்டுவிட்டு சந்தி ஜபம் செய்து ஓய்வெடுங்கள் என்று கூறினார். அதன் பின் அவர் காயத்ரி தேவியை துதித்தார். அவர் காயத்ரி உபாஸகர். ஜகன்மாதாவும், பரமகலாரூபியுமான காயத்ரி தேவி தரிசனம் தந்து, சர்வபோஷண ( அக்ஷய பாத்திரம்) பாத்திரம் ஒன்றைத் தந்து, “கௌதமா! நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையெல்லாம் இப்பாத்திரம் தரும்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.
5. துகூலஸௌவர்ண, விபூஷணான்ன
வஸ்த்ராதி காவோ, மஹிஷாதயச்ச
யத் யத் ஜனைரீப்,ஸிதமாசு தத் தத்
தத்பாத்ரதோ தேவி! ஸமுத்பபூவ
கௌதமருக்கு தேவி கொடுத்தது சர்வ போஷணப் பாத்திரம். சூரியன் பாண்டவர்களுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் தந்தார். ஆனால் அது பாஞ்சாலி உண்டபின் அன்றைய தினம் மறுபடியும் ஏதும் தராது. ஆனால் கௌதமருக்கு அம்பாள் தந்த அக்ஷய பாத்திரம், அறுசுவைப் பதார்த்தங்கள், பூஷணங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆடு, மாடு, பசு, யக்ஞத்திற்கு வேண்டிய திரவியங்கள், பாத்திரங்கள் இப்படி எதை எல்லாம் கௌதமர் விரும்பினாரோ அதை எல்லாம் எப்பொழுதும் தந்தது. காத்திருக்காமல் நினைத்த உடனே எதுவும் கிடைத்தது.
6. ரோகோ ந, தைந்யம், ந, பயம் ந சைவ,
ஜனா மிதோ மோத,கரா பபூவுஹு
தே கௌதமஸ்யோக்ர,த ப: ப்ரபாவம்
உச்சைர் ஜகுஸ்தாம், கருணார்த்ரதாம் ச
அனைத்து ஜனங்களும் கௌதமரின் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் கிடைத்தன. அசூயை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் மகிழ்வித்தார்கள். இதற்குக் காரணம் கௌதமரின் தவ சக்தியே. இதை அனைவரும் அறிந்ததால் கௌதமரின் புகழையும், பெருமையையும் பேசினார்கள். அவரின் தவ வலிமையையும் காருண்யத்தையும் பெருமையாகச் சொன்னார்கள்.
7. ஏவம் ஸமா த்வா,தச தத்ர ஸர்வே
நிந்யு:; கதாசின், மிளிதேஷு தேஷு
ஸ்ரீநாரதோ தேவி! சசீவ காயத்ரீ
ஆச்சர்ய சக்திம் ப்ரக்ருணன்னவாப
ஒரு நாள் நாரத மஹரிஷி “மகதி” என்னும் வீணையை மீட்டிக் கொண்டு, காயத்ரி தேவியின் புகழைப் பாடிக்கொண்டு, கௌதமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். சந்திரனைப் பார்த்தால் மனம் எப்படி குளிர்ச்சி அடையுமோ அப்படி நாரதரைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
8. ஸ பூஜிதஸ்தத்ர, நிஷண்ண உச்சைர்ஹி
நிவேத்ய தாம் கௌ,தமகீர்திலக்ஷ்மீம்
ஸபாஸு சக் ராதி,ஸுரை: ப்ரகீதாம்
ஜகாம; ஸந்தோ, ஜஹ்ருஷு: க்ருதஜ்ஞாஹா
நாரத மஹரிஷியை அனைவரும் பூஜித்தார்கள். “தேவ சபையில் தேவேந்திரன் கௌதம முனிவர் எல்லோரையும் போஷிக்கும் பெருமையைச் சொல்ல, அதைக் கேட்டு நான் கௌதமரைப் பார்க்க வந்தேன்” என்று கௌதமரின் கீர்த்தியை நாரதர் பெருமையுடன் சொன்னார். இந்திராதி தேவர்களும் கௌதமரை மிகவும் புகழ்ந்தார்கள். கௌதமரின் பெருமை பூ உலகம் மட்டும் இன்றி வானுலகிலும் பரவியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.
9. காலே தராம் வ்ருஷ்டி,ஸம்ருத்தஸஸ்யாம்
த்ருஷ்ட்வா ஜனா கௌ,தமமானமந்த:
ஆப்ருச்ச்ய தே ஸஜ்,ஜனஸங்கபூதா
முதா ஜவாத் ஸ்வ,ஸ்வ க்ருஹாணி ஜக்முஹு
காலம் கனிந்தது. பூமியில் மழை பொழிந்தது. செடி கொடிகள் எல்லாம் தழைக்க ஆரபித்தன. கௌதமரால் போஷிக்கப் பட்ட ஜனங்கள் அவரை வணங்கி, நன்றி கூறி, அவரவர் இல்லம் மீண்டும் திரும்பினார்கள்.
10. துக்கானி மே ஸந்து, யதோ மனோ மே
ப்ரதப்தஸங்கட்,டித ஹேமசோபி
விசுத்தமஸ்துத்; த்வயி பத்தராகோ
பவானி; தே தேவி! நமோஸ்து பூய:
மழை இல்லாமல் பசிக் கொடுமையிலும், வறுமையிலும் வாடிய ஜனங்கள் ,கௌதமர் ஆஸ்ரமம் வந்தார்கள். ஆஸ்ரம வாசம் அவர்களின் மனதைத் தூய்மை படுத்தியது. மழையின்றி அவர்கள் பட்ட கஷ்டம் ,இப்படி அனுக்ரஹமாக மாறியது. நாமும் நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுக்ரஹமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விவேகம். தங்கம் எப்படிப் பதமாகிறது? நெருப்பில் காய்ச்சி, நீரில் குளிரவைத்து, இரும்பால் அடிக்கிறார்கள். அதுபோல் என் மனமும் சுத்தமாக வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகிறார். அதற்காகத் தான் எந்த துக்கத்தைத் தாங்கவும் தயார் என்று சொல்கிறார். மனம் தெளிந்து பக்தி வளர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தேவியை வணங்குகிறார்.
முப்பத்தி மூன்றாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment