36 ஷட்த்ரிம்ʼஶத³ஶக꞉ மூலப்ரக்ருʼதிமஹிமா
த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச .
து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1..
து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ .
ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2..
ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் .
த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3..
த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ .
லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4..
ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய .
தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5..
ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ .
த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6..
ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ .
தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7..
த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி .
த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8..
த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச .
ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9..
யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் .
ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..
தசகம் 36
மூலப்ரக்ருதி மஹிமா
1. த்வமேவ மூல,ப்ரக்ருதிஸ்த்வமாத்மா
த்வமஸ்ய ரூபா, பஹுருபிணீச
துர்க்கா ச ராதா, கமலா ச ஸாவி-
-த்ர்யாக்யா ஸரஸ்வத்,யபி ச த்வமேவ
த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச .
து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1..
ப்ரம்மம் ஆத்மா என்று தொடங்கிய பதங்களால் வேதாந்தம் எதைக் காண்கிறதோ அதுதான் மூலப்ரக்ருதி. அதை ஆதி மஹத் என்றும் சொல்கிறார்கள். மூலப்ரக்ருதி ரூபமில்லாதது. ஆனால் பல உருவங்கள் எடுக்கமுடியும். இந்த மூலப்ரக்ருதியின் அவதாரங்களில் முக்யமானது 5. துர்க்கா, ராதா, லக்ஷ்மி, சாவித்ரி, சரஸ்வதி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.
2. துர்கா ஜகத் துர்க்,கதிநாசினீ த்வம்;
ஸ்ரீ கிருஷ்ண லீலா, ரஸிகாஸி ராதா;
சோபா ஸ்வரூபாSஸி, க்ருஹாதிஷு ஸ்ரீர்;
வித்யா ஸ்வரூபாSஸி, ஸரஸ்வதீ ச.
து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ .
ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2..
தன் உண்மை பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் துர்க்கா. தன்னை நம்பிச் சரண் அடைபவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள். துர்கமன் என்னும் அஸுரனை வதம் செய்தவள். அதன் காரணத்தாலும் துர்க்கா என அழைக்கப்படுகிறாள். ராதை கிருஷ்ணனின் லீலைகளை ரசிப்பவள்.கிருஷ்ணனுக்குப் பிரியமானவள்.ராஸ லீலை ஆடினவள். தன்னை ஆராதிப்பவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவள். அவர்களின் ஸமாகமத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தி ஆனது. மூவுலகத்தின் அழகும் ஒருங்கே இணைந்தவள். லக்ஷ்மி மங்கள ரூபிணி. இவள் அனுக்ரஹம் பெற்றவர்கள் ஸோபையும், காந்தியும் உடையவர்களாக இருப்பார்கள். விவசாயியின் கர்த்தகலக்ஷ்மி, வாணிபனின் வாணித்யலக்ஷ்மி. கண்களால் காணும் ஸௌபாக்யம் எல்லாம் இவள் தான். கிரஹத்தில் கிரஹலக்ஷ்மி, கிராமத்தில் கிராமலக்ஷ்மி, நகரத்தில் நகரலக்ஷ்மி. ஸரஸ்வதி வித்யா ஸ்வரூபிணி. சாஸ்த்திரம், விஞ்ஞானம், பாட்டு, படிப்பு, பேச்சு, நாட்டியம், எழுத்து எல்லாம் தருபவள். பாணினி, காத்யாயனன், பதஞ்சலி, பாதராயணன் ஆகியோர் இவளின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.
3. ஸரஸ்வதீ ஹா! ,குருசாபநஷ்டாம்
த்வம் யாஜ்ஞ வல்க்யாய ததாத வித்யாம்
த்வாமேவ வாணீ, கவசம் ஜபந்தஹ
ப்ரஸாத்ய வித்யாம், பஹவோதி ஜக்முஹு
ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் .
த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3..
வேத வ்யாஸரின் 4 வேத சிஷ்யர்களில் யஜுர்வேத சிஷ்யன் வைசம்பாயனன். சிஷ்யர்களில் முக்யமானவர் யாக்ஞவல்கியர். குரு சாபத்தால் சகல வித்தையையும் மறந்து சூரியனைத் துதித்தார். சூரியன் குதிரை ரூபத்தில் யஜுர் வேத வித்தையைக் கொடுத்தான். இதை பலப்படுத்த தேவியின் அருள் வேண்டும் என்றார். யாக்ஞவல்கியர் ஸரஸ்வதியைத் நினத்துத் தவம் செய்தார். ஒளிமயமாக தேவி காட்சி தந்தாள். வித்தைகளை மீண்டும் பெற்றார். அம்பாள் அனுக்ரஹம் இருந்தால் குருசாபமும் ஒன்றும் செய்யாது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸரஸ்வதி கவசத்திற்கு விஸ்வஜெயம் என்றும் பெயர் உண்டு. இது வித்தைக்கு மிகவும் உகந்தது.
4. த்வம் தேவி! ஸாவித்ர்யபிதாம் ததாஸி;
ப்ரஸாததஸ்தே, கலு வேதமாதுஹு
லேபே ந்ருபாலோ,ச்வபதிஸ்தனூஜாம்
நாம்நா ச ஸாவித்ர்,யபவத் கிலைஷா
த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ .
லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4..
மத்ர தேசத்தின் ராஜா அசுவபதி. அவன் மனைவி மாலதி. புத்திரப் பேறு வேண்டி, வசிஷ்டரின் உபதேசத்தால் மாலதி ஸாவித்ரியை ஆராதித்தாள். அன்னை அருள் கிடைக்கவில்லை. பின் அசுவதி மஹாராஜாவும் புஷ்கரக்ஷேத்ரத்தில் 100 வருடம் தவம் செய்தார். அப்பொழுதும் அன்னை காட்சி தரவில்லை. மனவருத்தம் கொண்டார்கள். அப்பொழுது “லக்ஷம் காயத்ரி ஜபம் செய்” என்று அசரீரி கேட்டது. அந்த சமயத்தில் பராசரமுனிவர் அங்கு வந்தார். காயத்ரியை ஒரு தரம் ஜபித்தால் ஒரு இரவும் பகலும் செய்த பாபமும், 100 தரம் ஜபித்தால் ஒரு மாதம் செய்த பாபமும், ஒரு லக்ஷம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபமும், 10 லக்ஷம் ஜபித்தால் முன் ஜன்ம பாபமும் போகும். இதுபோல் 10 தரம் ஜபித்தால் முக்தி கிடைக்கும். அந்த தேவியை ஸ்தோத்ரம் செய் என்று சொன்னார். அசுவபதி அப்படியே ஜபித்து பூஜிக்க தேவீ அருள் செய்தாள். அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சாவித்திரி.
5. ஸா, ஸத்யவந்தம், ம்ருதமாத் மகாந்தம்
ஆ ஜீவயந்தீ ச்வசுரம் விதாய
தூரீக்ருதாந்த்யம், தனயானஸூத;
யமாத் குரோராப ச தர்மசாஸ்த்ரம்
ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய .
தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5..
சாவித்திரி அழகும் யௌவனமும் நிறைந்து விளங்கினாள். த்யுமத்ஸேனருடைய மகன் ஸத்யவானை மணந்தாள். ஒரு வருடம் கழித்துத் தந்தையின் கட்டளைப்படி ஸத்யவான் பழமும், விறகும் கொண்டுவர சந்தோஷத்துடன் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். விதியினால் ஸத்யவான் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தான். யமன் அவனைக் கொண்டு போக, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து போனாள்.
யமன் சொன்னான் “சாவித்திரி நீ மனித உடலுடன் என் உலகம் வரமுடியாது. உன் கணவன் ஆயுள் முடிந்துவிட்டது. கர்மபலனை அனுபவிக்க அவன் என்னுடன் வருகிறான். கர்ம பலனால் தான் ஜீவன் பிறக்கிறான். அதனாலேயே மரணமும் அடைகிறான். சுகம், துக்கம், பயம், சோகம், தேவத்தன்மைகள், ஸாலோக்யம், ஸகல சித்திகள் இவைகளையும் அடைகிறான். அஸுர, தைத்ய பிறப்புகளும் அதன் காரணமே ” என்றான். சாவித்திரி கேட்டாள்” கர்மம்என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? தேகம் என்பது எது? இந்த கர்மத்தைச் செய்பவன் யார்? அதை அனுபவிப்பவன் யார்? ஜீவன் யார்? பரமாத்மா யார்?” .
யமன் சொன்னான், வேதம் விதித்தது எதுவோ அது கர்மம். சங்கல்பமில்லாமல் செய்யும் கர்மம் உத்தமமானது. பிரம்ம பக்தன் எவனோ அவனே முக்தன். பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், சோகம், பயம் இல்லாதவன். கர்ம வடிவினரும், கர்மத்தின் வித்து போலும் இருக்கும் பகவான் கர்ம பலனைத் தருகிறார். அவர் பரமாத்மா. பரா அல்லது பராசக்தி என்பது பிரகிருதி. இந்த பிரகிருதிக்குக் காரணமானவர் பகவான்தான். தேகம் என்பது அழியக் கூடியது. கர்மத்தைச் செய்பவன் தேகீ. போகம் என்பது ஐஸ்வர்யம். பரமாத்மா போகத்தை அனுபவிக்கச் செய்பவர். உடலையும், பிராணனையும் தாங்குபவன் ஜீவன். பிரம்மம் என்பது நிர்குணமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டதாய், எங்கும் வ்யாபித்திருக்கும் பரம் பொருள். அதுதான் பரமாத்மா. மேலும் சாவித்ரி எந்த கர்மாவினால் ஜீவன் பிறக்கிறான்? என்னவாகப் பிறக்கிறான்? ஸ்வர்கம், நரகத்திற்கு எந்த கர்மம் காரணம்? எதனால் யோகி ஆகிறான்? எதனால் ரோகி ஆகிறான்? என்று பல விஷயங்களைக் கேட்டாள். தருமராஜன் இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து சிரித்தபடியே சொல்கிறார் “குழந்தாய் நீ சாவித்திரி தேவியின் ஒர் அம்சமாகப் பிறந்தவள். உன் ஞானம் ஞானிகளின் ஞானத்தைவிடச் சிறந்தது. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மியும், சிவனின் உடலில் பவானியையைப் போலும் நீ சத்யவானிடத்தில் சௌபாக்யவதியாக இருப்பாய் என்று வாழ்த்தி, நீ விரும்பும் வரத்தைக் கேள் என்றார்.
“ஸத்யவானிடம் எனக்கு 100 புத்திரர்களும், என் தந்தைக்கு 100 குழந்தைகளும், என் மாமனாருக்கு ராஜ்யலாபத்துடன் கண் பார்வையும், வேண்டும். லக்ஷம் வருஷங்கள் ஆனதும் என் கணவருடன் நானும் பரமபதம் அடைய வேண்டும்” என்று சாவித்திரி கேட்டாள். அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார் தர்மராஜன். அதன் பின் ஜீவனின் கர்ம பயனையும், அதைக் கடக்க வழியும், எந்த சக்தி அனைவரையும் காக்கிறதோ, முக்தியும் சாகா நிலையும் தருகிறதோ அந்த சக்தி பூஜை செய்யும் முறைதனையும் கூறும் படிக் கேட்டாள். அந்த யமதர்மராஜனை பலவித ஸ்தோத்ரங்களால் நமஸ்கரித்தாள். யமன் சொன்னான் “அவனவன் செய்த கர்மப்படி, ஸ்வர்கமும் நரகமும் அடைகிறான். அந்தந்த வினைகளுக்கு ஏற்ப காலஸமுத்திரம், ஜ்வாலாமுகம், தூம்ராந்தம் போன்ற 86 நரக குண்டங்களை அடைகிறான். நரகத்தில் விழாமல் பிறவித் துன்பம் ஒழிக்கும் கர்மம் என்ன? என்று கேட்டாள். பஞ்ச தேவதா பூஜையைச் செய்யும் மனிதன் நரகத்தைப் பார்க்க மாட்டான் என்றார். பரமாத்ம சேவையே மேலான சுபகர்மம் என்று பலவித தர்ம சாஸ்த்திர விளக்கங்கள் கூறினார் தர்மராஜன். ஸத்யவானுக்கு உயிர் கொடுத்து அவளுக்கு மங்கள ஆசீர்வாதம் அளித்தார். அவள் தன் கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்து முக்தி அடைந்தாள்.
6. ஸ்கந்தஸ்ய பத்னீ, கலு பாலகாதி-
-ஷ்டாத்ரி ச ஷஷ்டீதி ஜகத்ப்ரஸித்தா
த்வம் தேவஸேனா, தனதா தனானாம்
அபுத்ரிணாம் புத்ர,ஸுகம் ததாஸி
ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ .
த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6..
மூலப்ரக்ருதியின் 5 அவதாரங்களை இதுவரை பார்த்தோம். அடுத்தது தேவஸேனா. பிரக்ருதியின் ஆறாவது அம்சத்தில் பிறந்தவள். ஆறாவதாக வருவதால் ஷஷ்டி என்றும் பெயர். குழைந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள். ஸ்கந்தனின் மனைவி. செல்வம் இல்லாதவர்க்குச் செல்வம் தருவாள். குழந்தை வேண்டுபவருக்குக் குழந்தைகளைத் தருவாள். குழந்தை இல்லாதவர்கள் இந்த தேவியை பூஜித்து ஷஷ்டி விரதம் இருந்தால் புத்திரர்கள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தையும் குணவானாக இருப்பான்.
7. ஸத்கர்மலப்தே, தனயே ம்ருதே து
ப்ரியவ்ரதோSதூ,யத பக்த வர்யஹ
தம் ஜீவயித்வா, ம்ருதமஸ்ய தத்வா
ஸ்வ பக்தவாத்ஸல்,யமதர்சயஸ்த்வம்
ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ .
தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7..
ஸ்வாயம்புவமனுவின் புத்திரன் பிரியவிரதன். இவன் தேவி பக்தன். புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ஒரு குழந்தயைப் பெற்றான். ஆனால் அந்தக் குழந்தை உயிரில்லாமல் பிறந்தது. அனைவரும் அழுதனர். தாய் மயக்கமடைந்தாள். தந்தையோ பிராணனைவிட முயற்சி செய்தார். இப்படி அனைவரும் கலங்கி நிற்கும் பொழுது அனேககோடி ரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கருணைக் கடலாக, பக்தருக்கு அனுக்ரஹம் செய்ய ஆவல் கொண்டு அவர்கள் முன் தோன்றிய அந்த தேவியை அரசன் துதித்து, நீ யார் என்று கேட்டான். நான் பிரம்மாவின் மானஸ புத்ரி. தேவஸேனா என்று பெயர். ஸ்கந்தனின் பத்னி. சுகம், துக்கம், பயம், சோகம், மங்களம், மகிழ்ச்சி, ஸம்பத்து, விபத்து ஆகிய எல்லாம் கர்மத்தால் விளைகிறது. அந்த கர்மத்தாலேயே உயிரிழந்த புத்திரனும், சிரஞ்சீவியானவனும் தோன்றுகிறார்கள் என்று சொல்லி ஞான பலத்தால் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்து, ப்ரியவிரதனுக்கு அனுக்ரஹமும் செய்தாள்.
8. த்வமேவ கங்கா, துளசீ, தரா ச
ஸ்வா: ஸ்வதா த்வம், ஸுரபிச்ச தேவி!
த்வம் தக்ஷிணா, கிருஷ்ண,மயீ ச ராதா,
ததாஸி ராதா,மயக்ருஷ்ணதாம் ச
த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி .
த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8..
விஷ்ணுவின் பத்னிகளான கங்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். சாபமும் கொடுத்துக் கொண்டார்கள். அதனால் மூவரும் நதிகளாக ஆனார்கள். கங்கா கங்கை நதி ஆனாள். சரஸ்வதி அந்தர்வாணி ஆனாள். லக்ஷ்மி பத்மாநதி ஆனாள். சாபத்தால் லக்ஷ்மி மரமாக ஜனிக்க வேண்டி இருந்தது. விஷ்ணுவின் அனுக்ரஹத்தால் தர்மத்வஜரிடத்தில் பெண்ணாக துளசி என்னும் பெயரில் ஜனித்தாள். பூமியில் துளசிச் செடியாக இருந்தாள். கங்கா கோலோகத்தில் ஒரு கோபிகையாக இருந்தாள். ஒருநாள் ஏகாந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சங்கமித்தாள். ராதை அதைப் பார்த்துவிட்டாள். கிருஷ்ணன் கங்கையை காலின் அடியில் மறைத்து வைத்தான். கங்கை ஒளிந்தததால் எங்குமே ஜலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலும் தண்ணீர் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரம்மா கோலோகம் சென்றார். பீடத்தில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் ராதை ஆனார். உடனே கிருஷ்ணன் ஆனார். ராதையும் கிருஷ்ணனும் வெவ்வேறல்ல. ஒன்றுதான் என்று பிரம்மா உணர்ந்தார்.
பிரம்மாவின் கோரிக்கைப் படி கிருஷ்ணன் கங்கையை விட்டார். எங்கும் ஜலம் வந்து கஷ்டம் தீர்ந்தது. மனிதன் செய்யும் யக்ஜம், யாகம் இவைகளின் ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் அம்பாள் “ஸ்வாஹா’ ஆனாள். பித்ருக்களுக்குச் செய்யும் கர்ம பாகங்கள் கொண்டு செல்பவள் “ஸ்வதா” ஆனாள். கர்மத்தைச் செய்தவுடன் தக்ஷிணையைக் கொடுக்கும் பொழுது அவள் தக்ஷிணா தேவி ஆகிறாள். தக்ஷிணையுடன் கூடிய கர்மம் பயன் தரும். தக்ஷணை இல்லாத கர்மத்தை பலிச்சக்ரவர்த்தி புசிக்கிறார். இது அவர் பகவானின் வாமனாவதாரத்தில் பெற்ற வரம். பூ லோக பாரத்தைத் தாங்குபவள் பூமி தேவி. வஸுதையும் பூமிதான். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கவர்ந்து ஸமுத்திரத்தின் அடியில் ஒளித்தபோது பகவான் வராக ரூபம் எடுத்து அதைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் சுந்தரியாக நின்ற பூமியைக் கண்டு வராகமூர்த்தி மோஹித்து ஒரு வருட காலம் கிரீடித்தனர். கடேசன் என்னும் பிள்ளையையும் பெற்றனர். அதன் பின் தெளிவுபெற்று ஸ்ரீ தேவிக்குச் சமமான மனைவியாக நீயும் ஆனாய், அனைவராலும் பூஜிக்கப்படுவாய் என்றும் சொன்னார். தேவியும் உங்கள் ஆணைப்படி அனைத்துலகையும் வராகரூபிணியாகத் தாங்குகிறேன் என்று சொன்னாள். மேலும் முத்து, சிப்பி, சிவலிங்கம், புஸ்தகம், புஷ்பம், பூமாலை, துளசீ, ஜபமாலை, தேவி விஷ்ணு பிம்பங்கள், சந்தனம், சாலிக்ராமம், சங்கு, தீபம், யந்திரம், மாணிக்கம், பொன், வஜ்ரம், தீர்த்தம் ஆகியவைகளை ஆசனமில்லாமல் வைத்தால் அவைகளைத் தாங்கும் வல்லமையில்லாமல் நான் வருந்துவேன் என்றாள். இவைகளை உன் மீது வைப்பவர் காலசூத்திரம் என்னும் நரகத்தை அடையட்டும் என்று பகவான் சொல்லிச் சென்றார்
9. த்வம் க்ராமதேவி, நகராதிதேவி
வனாதிதேவி க்ருஹதேவதா ச
ஸம்பூஜ்யதே பக்த,ஜனைச்ச யா யா
ஸா ஸா த்வமே வாஸி, மஹானுபாவே!
த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச .
ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9..பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளும் எல்லா மூர்த்திகளும் மூலபிரக்ருதியின் பல ரூபங்கள் தான். நகரத்தில் நகரதேவதை. கிரமத்தைக் காக்கும் கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தேவதை. வீட்டில் உள்ள பூஜை அறை, துளசி மாடம் அனைத்து பூஜையும் ஏற்பவள் அவளே. இப்படி எல்லா இடத்திலும் இருப்பது மூலப்ரக்ருதிதான்.
10. யத் யத் ச்ருதம் த்ருஷ்டம், அபி ஸ்ம்ருதம் ச
தத் தத் த்வதீயம், ஹி கலாம்சஜாலம்
ந கிஞ்சனாஸ்த்யேவ, சிவே! த்வதன்யது
பூயோபி மூல,ப்ரக்ருதே! நமஸ்தே
யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் .
ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..
அறிவுக்கு உள்பட்ட அனைத்தும் மூலப்ரக்ருதி. எல்லா உயிர்களிலும் இருப்பது மூலப்ரக்ருதி. யாரும் யாரையும் பழிப்பதோ, நிந்திப்பதோ, இழிவாகப் பேசுவதோ, தூஷிப்பதோ கூடாது. எல்லோருக்கும் மரியாதை தரவேண்டும். அப்பொழுது மூலப்ரக்ருதியை பூஜை செய்த பலன் கிடைக்கும். மூலப்ரக்ருதியை வணங்கி ஆசிரியர் இந்த தசகம் முடிக்கிறார்.
முப்பத்தி ஆறாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment