34 சதுஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமஶாப꞉
ஸ்வர்வாஸிபி⁴ர்கௌ³தமகீர்த்திருச்சைர்கீ³தா ஸபா⁴ஸு த்ரித³ஶை꞉ ஸதே³தி .
ஆகர்ண்ய தே³வர்ஷிமுகா²த்க்ருʼதக்⁴னா த்³விஜா ப³பூ⁴வு꞉ கில ஸேர்ஷ்யசித்தா꞉ .. 34-1..
தைர்மாயயா(ஆ)ஸன்னம்ருʼதி꞉ க்ருʼதா கௌ³꞉ ஸா ப்ரேஷிதா கௌ³தமஹோமஶாலாம் .
அகா³ன்முனேர்ஜுஹ்வத ஏவ வஹ்னௌ ஹுங்காரமாத்ரேண பபாத சோர்வ்யாம் .. 34-2..
ஹதா ஹதா கௌ³ரிஹ கௌ³தமேனேத்யுச்சைர்த்³விஜா꞉ ப்ரோச்ய முனிம்ʼ நினிந்து³꞉ .
ஸ சேத்³த⁴கோப꞉ ப்ரலயானலாப⁴ஸ்தான் ரக்தநேத்ர꞉ ப்ரஶபன்னுவாச .. 34-3..
வ்ரதேஷு யஜ்ஞேஷு நிவ்ருʼத்திஶாஸ்த்ரேஷ்வபி த்³விஜா வோ விமுக²த்வமஸ்து .
நிஷித்³த⁴கர்மாசரணே ரதா꞉ ஸ்த ஸ்த்ரிய꞉ ப்ரஜா வோ(அ)பி ததா² ப⁴வந்து .. 34-4..
ஸத்ஸங்க³மோ மா(அ)ஸ்து ஜக³ஜ்ஜனன்யா꞉ கதா²ம்ருʼதே வோ ந ரதி꞉ க²லு ஸ்யாத் .
பாஷண்ட³காபாலிகவ்ருʼத்திபாபை꞉ பீடா³ ப⁴வேத்³வோ நரகேஷு நித்யம் .. 34-5..
உக்த்வைவமார்யோ முநிரேத்ய கா³யத்ர்யாக்²யாம்ʼ க்ருʼபார்த்³ராம்ʼ ப⁴வதீம்ʼ நநாம .
த்வமாத்த² து³க்³த⁴ம்ʼ பு⁴ஜகா³ய த³த்தம்ʼ தா³து꞉ ஸதா³(அ)னர்த²த³மேவ வித்³தி⁴ .. 34-6..
ஸதே³த்³ருʼஶீ கர்மக³திர்மஹர்ஷே ஶாந்திம்ʼ ப⁴ஜ ஸ்வம்ʼ தப ஏவ ரக்ஷ .
மா குப்யதாமேவம்ருʼஷிர்நிஶம்ய மஹானுதாபார்த்³ரமனா ப³பூ⁴வ .. 34-7..
ஶப்தா த்³விஜா விஸ்ம்ருʼதவேத³மந்த்ரா லப்³த்⁴வா விவேகம்ʼ மிலிதா முனிம்ʼ தம் .
ப்ராப்தா꞉ ப்ரஸீதே³தி முஹுர்வத³ந்தோ நத்வா த்ரபானம்ரமுகா² அதிஷ்ட²ன் .. 34-8..
க்ருʼபார்த்³ரநேத்ரோ முநிராஹ ந ஸ்யான்ம்ருʼஷா வசோ மே நரகே வஸேத .
ஜாயேத விஷ்ணுர்பு⁴வீ க்ருʼஷ்ணநாமா வந்தே³த தம்ʼ ஶாபவிமோசனார்த²ம் .. 34-9..
ஸ்வபாபமுக்த்யர்த²மனந்தஶக்திம்ʼ தே³வீம்ʼ ஸதா³ த்⁴யாயத ப⁴க்திபூதா꞉ .
ஸர்வத்ர பூ⁴யாச்சு²ப⁴மித்யுதீ³ர்ய கா³யத்ரி த³த்⁴யௌ ப⁴வதீம்ʼ மஹர்ஷி꞉ .. 34-10..
முஞ்சானி மா வாக்ஶரமன்யசித்தே க்ருʼதக்⁴னதா மா(அ)ஸ்து மமாந்தரங்கே³ .
நிந்தா³னி மா ஸஜ்ஜனமேஷ பீ⁴தோ ப⁴வானி பாபாத்³வரதே³ நமஸ்தே .. 34-11..
தசகம் 34
கௌதமசாபம்
1. ஸ்வர்வாஸிபிர் கௌ,தம கீர்த்திருச்சைர்ஹி
கீதா ஸபாஸு, த்ரிதசை: ஸதே தி
ஆகர்ண்ய தேவர்ஷி,முகாத் க்ருதக்னா
த்விஜா பபூவு: கில ஸேர்ஷ்ய சித்தாஹா
கௌதமரால் தங்களின் வறுமை தீர்ந்து வாழ்ந்தவர்கள் அனைவரும் மன சுத்தி அடைந்தார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அது வரவில்லை. கௌதமரின் புகழ் வானுலகம் வரைப் பரவியிருக்கிறது என்று அறிந்தவுடன் பொறாமை கொண்டார்கள். இது நாள் வரை அவர் தயவில் வாழ்ந்ததை மறந்தார்கள். பிறர் வளர்வதைப் பார்க்க சகிக்காமல் இருப்பது தான் பொறாமை. நானும் பிராமணன், கௌதமரும் பிராமணன். அவருக்கு மட்டும் ஏன் இந்தப் புகழும், பெருமையும். இப்படிப் பலவாறு யோசித்து அவருடைய கீர்த்தியை அழிப்பதற்கான ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.
2. தைர் மாயயாSSஸன்ன,ம்ருதி: க்ருதா கௌ:
ஸா ப்ரேஷிதா கௌ,தமஹோமசாலாம்
அகான்; முனேர் ஜுஹ்,வத ஏவ வஹ்னௌ
ஹீங்காரமாத்ரேண, பபாத சோர்வ்யாம்
அந்தணர்கள் மிகக் கிழமாயும், உயிர் போகும் நிலையிலும் உள்ள ஒரு மாயா பசுவைத் தோற்றுவித்து, அதை கௌதமர் ஹோமம் செய்யும் ஹோமசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பசு தளர்ந்த நடையுடன் மெதுவாக ஹோமசாலை வந்தடைந்தது. ஹோம குண்டம் அருகே சென்றது. கௌதமர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்ட “ஹும்” “ஹும்” என்று சத்தம் போட, அந்த சப்தத்திற்குப் பயந்து, அந்த பசு அங்கேயே பிராணனை விட்டது.
3. ஹதா ஹதா கௌரி,ஹ கௌதமேனேஹி
உச்சைர் த்விஜா: ப்ரோ,ச்ய முனிம் நினிந்துஹு
ஸ சேத்த கோப:, ப்ரளயானலாபஹ
ஸ்தான் ரக்த நேத்ர:, ப்ரசபன்னுவாச
அங்கிருந்த ரிஷிகள் எல்லாம் துஷ்டரான கௌதமரால் பசு கொல்லப்பட்டது என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை நிந்தித்தனர். பசு இறந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த கௌதமர், தியானம் செய்து பசு இறந்ததன் காரணத்தை அறிந்து கொண்டார். பிரளய கால ருத்திரரைப் போல் கோபம் கொண்டு சாபம் தந்தார்.
4. “வ்ரதேஷு யஞ்நேஷு, நிவ்ருத்தி சாஸ்த்ரேஹு
வபி த்விஜா வோ, விமுகத்வமஸ்து;
நிஷித்த கர்மா,சரணே ரதா: ஸ்தவ
ஸ்த்ரிய: ப்ரஜாஹா வோ,பி ததா பவந்து”
“வேதமாதாவாகிய காயத்ரி தேவியையும், மந்திரங்களையும் சாஸ்திரங்களையும், தியானத்தையும், ஜபத்தையும் மறக்கக் கடவீர்கள். பிராமணர்களில் கடை நிலைக்கு வரக்கடவீர்கள். செய்யகூடாததைச் செய்தும், செய்யவேண்டியதைச் செய்யாமலும் வாழ்வீர்கள். லௌகீகத்திலிருந்து விடுபடும் நிவ்ருத்தி சாஸ்த்திரம் உங்களுக்கு மறந்து போகட்டும். உங்கள் வம்சத்தினருக்கும் இது தொடரும்” என்று சாபம் கொடுத்தார்.
5. ஸத்ஸங்கமோ மாஸ்து;, ஜகஜ்ஜனன்யாஹா
கதாம்ருதே வோ, ந ரதி: கலு ஸ்யாது
பாஷாண்டகாபா,லிக வ்ருத்தி பாபைஹீ
பீடா பவேத் வோ, நரகேஷு நித்யம்
நிவ்ருத்தி சாஸ்த்திரம் தெரியாவிட்டாலும் ஸத்சங்கம் இருந்தால் சம்சாரத்திலிருந்து கரையேறலாம். கௌதமரின் சாபத்தால் அந்தணர்களுக்கு அதுவும் இல்லை. தேவியை துதிக்க மறந்தார்கள். காபாலிகளைப் போல் அலைந்தார்கள். பாபங்களைச் சுமந்து கொண்டு நரகவேதனைகளை அனுபவித்தார்கள்.
6. உக்த்வைவ மார்யோ, முனிரேத்ய காய-
த்ர்யாக்யாம் க்ருபாத்ராம், பவதீம் நநாம;
தவமாப்த்தக்தம், புஜகாய தத்தம்
தாது: ஸதாநர்த்,ததமேவ வித்தி
அதன் பின் கௌதமர் “தாயே! கோபத்தில் மதியிழந்தேன். சொல்லக்கூடாததை எல்லாம் சொல்லிவிட்டேன்” என்று அன்னையின் முன் வணங்கினார். தேவி புன்சிரிப்புடன் சொன்னாள் “பாம்பிற்குப் பால்வார்த்தாலும் அது கொடுத்தவனைக் கொத்தும். பாம்பிற்குக் கொடுத்த பால் எப்படி விஷமாகிறதோ அதைப் போல் இவர்களுக்கு நீ செய்த உதவியும் ஆயிற்று. மஹா பாக்யசாலியான கௌதமா! மன வெப்பத்தை விட்டு மனச்சாந்தி அடைவாய்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.
7. ஸதே த்ருசீ கர்ம,கதிர் மஹர்ஷே!
சாந்திம் பஜ ஸ்வம், தப ஏவ ரக்ஷ;
மா குப்யதா மேவ, ம்ருஷிர் நிசம்ய
மஹானுதா,பார்த்ரமனா பபூவ
இது நாள் வரை அந்தணர்களுக்கு வேண்டியவைகள் அனைத்தும் செய்தும், கிடைத்த பலன் என்ன? நிந்தனைகள் தான். ஏன் இப்படி ஆனது? கர்மபலன் தான் காரணம். எந்தக் கர்மத்தால் இப்படி ஆனது? இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இதைக் கண்டுபிடிக்க யாராலும் முடியாது. இதை அறிந்தவள் தேவி மட்டும் தான். இப்பொழுது நல்ல கர்மங்களைச் செய்தால் அனுகூல காலத்தில் பலன் கிடைக்கும். இனிமேலாவது கஷ்டங்கள் வராமல் இருக்க தீய கர்மங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். க்ரோதம் வந்த பொழுது எல்லாம் அறிந்த கௌதமருக்கும் ஞானம் மங்கிப் போனது. பச்சாதாபத்தால் தேவியை துதிக்கத் தொடங்கினார்.
8. சப்தா த்விஜா, விஸ்ம்ருதவேதமந்த்ரா
லப்த்வா விவேகம், மிளிதா முனிம் தம்
ப்ராப்தா: ப்ரஸீதே. தி முஹுர் வதந்தோ
நத்வா த்ரபானம்,ரமுகா அதிஷ்டனு
சாபம் பெற்ற அந்தணர்களுக்கு வேத மந்திரங்களும், காயத்ரி மந்திரமும் மறந்து போயிற்று. இது கௌதம முனிவரின் சாபம் என்று அறிந்த அவர்கள், மீண்டும் கௌதமரிடம் சென்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். எங்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள். அவர்களின் அசூயையும் மறைந்தது.
9. க்ருபாத்ர நேத்ரோ, முனிராஹ: – ந ஸ்யான்
ம்ருஷா வசோ மே;, நரகே வஸேத;
ஜாயேத விஷ்ணுர், புவி க்ருஷ்ண நாமா;
வந்தேத தம் சாப, விமோசனார்த்தம்
பிராமணர்களைச் சபித்ததில் கௌதமரும் வருத்த மடைந்தார். “கோபத்தில் சாபம் தந்துவிட்டேன். இருந்தாலும் என் சொல் பொய்யாகாது. நீங்கள் சில காலம் நரகத்தில் தான் இருக்க வேண்டும். த்வாபர யுகத்தின் முடிவில் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் செய்வார். அப்பொழுது நீங்கள் அவரை சரணடையுங்கள் சாப விமோசனம் கிடைக்கும்” என்றார்.
10. ஸ்வபாப முக்த்யர்த்தம் அனந்தசக்தீம்
தேவீம் ஸதா த்யா,யத பக்திபூதாஹா
ஸர்வத்ர பூயாத், சுப மித்யுதீர்ய
காயத்ரி! தத்யௌ, பவதீம் மஹர்ஷிஹி
கிருஷ்ணனை மட்டும் வணங்கினால் போதாது. நீங்கள் அனைவரும் மஹாசக்தி ஸ்வரூபிணியாகிய அம்பாளை துதிக்க வேண்டும். அவள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும். எல்லோருக்கும் மங்களம் உண்டாகும். அதனால் அந்த காயத்ரியின் பாத கமலத்தைச் சரண் அடையுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் காயத்ரி தேவியை ஸ்மரிக்கத் தொடங்கினார்.
11. முஞ்சானி மாவாக்,சரமன்ய சித்தே;
க்ருதக்னதா மாSஸ்து, மமாந்தர,ரங்கே
நிந்தானி மா ஸஜ்ஜன; மேஷ பீதோ
பவானி பாபாத்;, வரதே! நமஸ்தே
பிராமணர்கள் அசூயையால் கௌதமரை தூஷித்தார்கள். கௌதமரும் கோபத்தால் சாபம் தந்து தன் தவ வலிமையை இழந்தார். தவ வலிமை பெறுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் கோபம் வந்ததால் ஒரு நிமிடத்தில் அவர் வலிமை எல்லாம் இழந்தார். தனக்கு இதுபோல் தன் புத்தியில் தோன்றக்கூடாது என்று இதன் ஆசிரியர் வேண்டிக்கொள்கிறார்.
முப்பத்தி நான்காம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment