tamizh story
१२ द्वादशदशकः - उतथ्यजननम्
12 dvaadashadashakah' - utathyajananam
-The birth of Utathya.
English story-Dasakam-12-Utathya-Jananam-The-Birth-of-Udathya
https://www.scribd.com/document/650933860/Devi-Narayaneeyam-Dasakam-12-Utathya-Jananam-The-Birth-of-Udathya
"Devi Narayaneeyam_Dasakam 12 Utathya Jananam -The Birth of Udathya" src="https://www.scribd.com/embeds/650933860/content?start_page=1&view_mode=scroll&access_key=key-defAB88hXNcxYIeQIPmx" tabindex="0" data-auto-height="true" data-aspect-ratio="0.7055599060297573" scrolling="no" width="100%" height="600" frameborder="0"></iframe><p style=" margin: 12px auto 6px auto; font-family: Helvetica,Arial,Sans-s
https://youtu.be/ua57K7v5uDYதசகம் 12
உதத்யஜனனம்
1. புரா த்விஜ: கச்,சன தேவதத்தஹ
நாம ப்ரஜார்தம், தமஸாஸமீபே
குர்வன் மகம் கோபி,லசாபவாசா
லேபே ஸுதம் மூட,மனந்த து:கஹ
கோசல தேசத்தில் தேவதத்தன் என்னும் ஒரு பிராம்மணன், தனக்குப் புத்திர பாக்யம் வேண்டும் என்று தமஸா நதிக் கரையில் யாகசாலை அமைத்து, வேதாத்யாயனத்தில் சிறந்த அந்தணர்களை அழைத்து யாகம் செய்யத் தொடங்கினான். அப்பொழுது சாமவேத அந்தணரான கோபிலர் சாமகானம் செய்யும் பொழுது, மூச்சை அடக்கிச் சொல்ல வேண்டிய இடத்தில் அப்படிச் செய்ய முடியாமல் சுவாசத்தை விட்டு விட்டு ஸ்வரபங்கமாகச் சொன்னார். அதைக் கண்ட தேவதத்தன்
"ஏ பிராம்ணரே! நான் புத்திர பாக்யம் வேண்டி இந்த யாகத்தைச் செய்கிறேன். ஆனால் நீரோ ஸாமகானத்தைச் ஸ்வர பங்கமாகச் சொல்கிறீரே! இது அமங்கலம் அல்லவா? இது என்ன மூடத்தனம்?" என்று அவரைக் கோபித்தான். உடனே கோபிலர் எனக்கு வயதான காரணத்தால் ஸாமகானம் இசைக்கும் பொழுது சிறிது ஸ்வரபங்கம் வந்தது. இதற்காக என்னை நீர் கோபித்தல் ஆகாது. என்னை மூடனென்று சொன்ன உனக்கு மூடனாகவே புத்திரன் பிறக்கட்டும்' என்று சபித்தார். தேவதத்தன் உடனே' அய்யா! நான் ஏற்கனவே புத்திரன் இல்லையே என்று துக்கத்தில் இருக்கிறேன். மூடனாகப் புத்திரனைப் பெறுவது அதைவிட துக்கம் அல்லவா? என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று சரணாகதி அடைந்தான். கோபிலரும் அவன் துக்கம் தணிக்க வேண்டி மூடனாக ஜனித்தாலும் காலம் செல்லச் செல்ல அவன் வித்வானக மாறுவான் என்று அனுக்கிரஹம் செய்தார்.
2. உதத்ய நாமா வவ்ருதே ஸ பாலோ
மூடஸ்து த்ருஷ்டம், ந ததர்ச கிஞ்சித்
ச்ருதம் ந சுச்ராவ, ஜகாத நைவ
ப்ருஷ்டோ, ந ச ஸ்நா,ந ஜபாதி சக்ரே
சிறிது காலம் சென்ற பின் தேவதத்தன் மனைவி கர்பமானாள், ரோஹிணி நட்க்ஷத்திரத்தில் குமாரனைப் பெற்றாள்
"உதத்தியன்" என்று பெயரும் வைத்தார்கள். அவன் வளந்து வந்தான். உரிய வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இப்படியாக 12 வருடம் கழிந்தது. ஆனால் உதத்தியனுக்கு சந்தியாவந்தன மந்திரம் கூடச் சொல்லத் தெரியவில்லை. அவனுடைய சக வயதுக் குழந்தைகளும் அவனைக் கேலி செய்யத் துவங்கினர். பெற்றவர்களும் குருடனாகவோ, முடவனாகவோ இருந்தாலும் கல்வி அறிவு இருந்தால் அவன் உயந்தவனே. இப்படி மூடனாக இருப்பதால் பயன் யாது? என்று மனம் வருந்தினர். உதத்யனும் அவமானத்தால் மனம் வருந்தி ஒரு நாள் காட்டிற்குச் சென்றுவிட்டான்.
3. இதஸ்ததோடன், ஸமவாப்த கங்கஹ
ஜலே நிமஜ்ஜன், ப்ரபி பம்ஸ்த தேவ,
வஸன் முநீநா,மூடஜே ஷு வேத
மந்த்ராம்ச்ச ச்ருண்வன், ஸதினானி நிந்யே
பின் அந்த வனத்திலிருந்துச் சென்று கங்கைக் கரையின் ஓரத்தில் ஒரு குடிலை அமைத்துக் கொண்டு, கங்கையில் குளிப்பதும், அந்த நீரை உட்கொள்வதும், அங்கிருந்த முனிவர்கள் செய்யும் பூஜையைப் பார்ப்பதும், அவர்கள் தரும் பழங்கள் போன்ற பிரசாதங்களைச் சாப்பிடுவதும் ஆக இப்படியே காலம் கழித்தான். அவன் தீயவர்கள் யாருடனும் சேராமல் இப்படி முனிவர்களின் ஸத்சங்கம் கிடைத்தது அன்னையின் அருள் அல்லவா!
4. க்ரமேண ஸத்ஸங்க, விவ்ருத்த ஸத்வஹ
ஸத்யவ்ரத: ஸத்ய,தபாச்ச பூத்வா
நாஸத்ய வாக், த்வத், க்ருபயா ஸ மூடோபி
யுன்மீலிதாந்தர், நயனோ பபூவ
அவனுக்கு ஸத் சங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமோ குணம் நீங்கி ஸத்வ குணம் வந்தது. அன்னையின் அருளால் அவன் அகக்கண் திறந்தது. மெதுவாகப் பேச ஆரம்பித்தான். அவன் பொய்யே பேசாமல் எப்பொழுதும் உண்மையையே பேச ஆரம்பித்தான். அதனால் அவனை
"ஸத்யவ்ரதன்" என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பிறருக்கு இது நன்மை தரும், இது தீமை தரும் என்று எதையும் உணராது வனத்தில் பயமில்லாமல் இருந்து வந்தான்.
5. குலம் பவித்ரம், ஜனனீ விசுத்தா
பிதா ச ஸத்கர்ம,ரத: ஸதா மே,
மயா க்ருதம் நைவ நிஷித்தகர்ம
ததாபி மூடோ,ஸ்மி ஜனைச்ச நிந்த்யஹ
இந்த கட்டில் மிருகத்தைப் போல் உலாவிக் கொண்டு வாழ்ந்து வருவதும்
ஒரு வாழ்க்கையா? என் தாயும் தந்தையும் உயர்ந்தவர்களே! ஆனாலும் நான் எப்படி இப்படி மூடனாகப் பிறந்தேன்? இது தெய்வத்தின் செயலோ? பின் வேறு ஏது காரணம் இருக்க முடியும்? என்று யோசிக்கிறான்.
6. ஜந்மாந்தரே கிம், நு க்ருதம் மயாகம்?
கிம் வா ந வித்யார்,திஜனஸ்ய தத்தா?
க்ரந்தோப்ய தத்த: கிமு? பூஜ்ய பூஜா
க்ருதா ந கிம் வா, விதிவன்ன ஜானே
தெய்வத்தை நிந்திப்பதால் என்ன பயன்? என் கர்ம பயன் அப்படி யிருந்தால் என்ன செய்ய முடியும்? என் பூர்வ ஜன்மத்தில், கற்ற வித்தையைப் பிறருக்குச் சொல்லித் தராமல் இருந்திருக்கலாம்? அல்லது ஒரு புத்தகமாவது தந்து உதவாமல் இருந்திருக்கலாம்?
பிராம்மணர்களைப் பூஜிக்காமல் இருந்திருக்கலாம்? அதனால் தான் நான் பிராமிணர் குலத்தில் பிறந்தும் மூடனாக இருக்கிறேன் என்று யோசித்தார்.
7. நாகாரணம் கார்ய,மிதீர்யதே ஹி
தைவம் பலிஷ்டம், துரதிக்ரமம் ச
ததோத்ர மூடோ, விபலீக்ருதோஸ்மி
வந்திய த்ருவத்னிர், ஜலமேகவச்ச
இது போன்ற பாபங்கள் நான் ஏதோ செய்து இருக்கிறேன். ரூபவதியானவள் மலடியானது போலும், தழைத்த மரம் பழம் தராதது போலும், செழிப்பான பசு, பால் தராதது போலவும் என் ஜன்மம் வீணானது. செய்த பாபங்களுக்கான பரிகாரமும் செய்யவில்லை. இப்பொழுது யோசிப்பது வீண். நமக்கு தெய்வம் தான் துணை என்று நினைத்தான். கங்கையில் ஸ்நானமும், மஹரிஷிகளின் நெருக்கமும் அவனை இப்படி நினைக்க வைத்தது. கோபிலர் கூறியது நடக்கப் போகிறது. இப்படியே 14 வருடங்கள் கழித்தான். இருந்தும் அவன் பூஜையோ, ஜபமோ, காயத்ரி மந்திரமோ எதையுமே அறியவில்லை. ஆயினும் பொய் பேசாதவனாக இருந்தபடியால் அவனை ஸத்யவ்ரதன் என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.
8. இத்யாதி ஸஞ்சின் த்ய, வநே ஸ்தித: ஸ
கதாசித் ஏகம், ருதி ராப்ளு தாங்கம்
பீபத்ஸரூபம், கிடிமேஷ பச்யன்
"அநய்யய்ய
" இத்யுத், ஸ்வன முச்சசார
ஒரு சமயம் ஒரு கொடிய வேடன் விட்ட அம்பினால் அடிபட்ட பன்றி ஒன்று, உடல் முழுவதும் இரத்தம் பெருகி நனைந்தபடி ஸத்யவ்ரதன் முன் வந்தது. அதைக் கண்டதும் இரக்கத்துடன் தன் உடலும் நடுங்க ஐயய்யோ! என்று சொல்லத் துவங்கினான்.
9. சரேண வித்த: ஸ, கிரிர் பயார்ரத்தஹ
ப்ரவேபமானஹ. முனிவாஸ தேசே
அந்தர் நிகுஞ்சஸ்ய, கதச்ச தைவாது
அத்ருச்ய தாமாப, பயார்திஹந்த்ரி
ஜீவர்களைக் காக்கும் க்ருபாவதியான தேவிதான் அந்த பன்றியை அங்கு அனுப்பி இருக்கிறாள். அந்த பன்றியும் துன்பத்துடன் அருகில் இருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டது.
10. வினா மகாரம், ச வினா ச பக்திம்
உச்சார்ய வாக் பீஜ,மனும் பவித்ரம்
ப்ரஸன்ன புத்தி: க்ருபயா தவைஷ
பபூவ தூரீக்ருத,ஸர்வபாபஹ
"அய்யய்யோ" என்று சொல்ல ஆரம்பித்து, அதைச் சொல்ல முடியாமல் "ஐம்",
"ஐம்" "ஐம்" என்று சொன்னான். இது ஸாரஸ்வத பீஜாக்ஷர மந்திரம். இதுவரை அறியாததும் கேட்காததுமான இந்த மந்திரம் அவன் வாயிலிருந்து மூன்று முறை வந்தது. இது தேவியின் அனுக்ரஹம்தான். அன்னையும் அவன் வாக்பீஜ மந்திரத்தை ஜபித்தான் என்று அவன் மூடத்தனத்தை நீக்கி நல்ல புத்தியை அளித்தாள்.
11. நாஹம் கவிர், கான, விசக்ஷணோ ந
நடோன சில்பாதிஷு ந ப்ரவீணஹ
பச்யாத்ர மாம், மூடம் அனன்ய பந்தும்
ப்ரஸன்ன புத்திம், குரு மாம் நமஸ்தே
உதத்யனன் மூடனாகப் பிறந்தாலும் அன்னையின் அருளால் கங்கைக் கரையை அடைந்து ஸத் ஸங்கம் கிடைக்கப் பெற்று, வாக்பீஜ மந்திரமும் தன்னை அறியாமல் சொன்னான். ப்ரகாஸமான புத்தியை அடைந்தான். இந்த ஸ்தோத்திரத்தை எழுதும் நானும் மந்த புத்தி உடையவன் தான். எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் உறவினர் இல்லை. உதத்யனைப் போல் என்னையும் ப்ரஸன்ன புத்தி உடையவனாக ஆக்கு என்று இதன் ஆசிரியர் வேண்டினார்.
No comments:
Post a Comment