ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, 19 August 2023

21ஏகவிம்ʼஶத³ஶக꞉ - நந்த³ஸுதாவதார꞉

 


21 ஏகவிம்ʼஶத³ஶக꞉ - நந்த³ஸுதாவதார꞉

ஸர்வே(அ)பி ஜீவா நிஜகர்மப³த்³தா⁴ ஏதே ஷடா³ஸந்த்³ருஹிணஸ்ய பௌத்ரா꞉ . தன்னிந்த³யா தை³த்யகுலே ப்ரஜாதா꞉ புனஶ்ச ஶப்தா ஜனகேன தை³வாத் .. 21-1.. தேனைவ தே ஶௌரிஸுதத்வமாப்தா ஹதாஶ்ச கம்ʼஸேன து ஜாதமாத்ரா꞉ . ஶ்ரீநாரதே³னர்ஷிவரேண தே³வி ஜ்ஞாதம்ʼ புராவ்ருʼத்தமித³ம்ʼ ஸமஸ்தம் .. 21-2.. ப்ராக்³த³ம்பதீ சாதி³திகஶ்யபௌ ஹா ஸ்வகர்மதோ³ஷேண புனஶ்ச ஜாதௌ . தௌ தே³வகீஶூரஸுதௌ ஸ்வபுத்ரநாஶாதி³பி⁴ர்து³꞉க²மவாபதுஶ்ச .. 21-3.. த்வம்ʼ தே³வகீஸப்தமக³ர்ப⁴தோ வை க்³ருʼஹ்ணந்த்யனந்தாம்ʼஶஶிஶும்ʼ ஸ்வஶக்த்யா . நிவேஶ்ய ரோஹிண்யுத³ரே த⁴ரண்யாம்ʼ மர்த்யோ ப⁴வேத்யச்யுதமாதி³ஶஶ்ச .. 21-4.. ப்ராக்கர்மதோ³ஷாத்ஸ ஸுஹ்ருʼன்மகோ⁴ன꞉ க்ருத்³தே⁴ன ஶப்தோ ப்⁴ருʼகு³ணா முராரி꞉ . த³யார்ஹஸம்ʼஸாரித³ஶாமவாப்ஸ்யன் ஹா தே³வகீக³ர்ப⁴மதா²விவேஶ .. 21-5.. . பூர்ணே து க³ர்பே⁴ ஹரிரர்த்³த⁴ராத்ரே காராக்³ருʼஹே தே³வகநந்த³னாயா꞉ .
ஜஜ்ஞே ஸுதேஷ்வஷ்டமதாமவாப்த꞉ ஶௌரிர்விமுக்தோ நிக³டை³ஶ்ச ப³ந்தா⁴த் .. 21-6.
வ்யோமோத்த²வாக்யேன தவைவ பா³லம்ʼ க்³ருʼஹ்ணன்னத்³ருʼஷ்ட꞉ க²லு கே³ஹபாலை꞉ .
நித்³ராம்ʼ க³தைஸ்த்வத்³விவ்ருʼதேன ஶௌரிர்த்³வாரேண யாதோ ப³ஹிராத்ததோஷம் .. 21-7..

த்வம்ʼ ஸ்வேச்ச²யா கோ³பகுலே யஶோதா³னந்தா³த்மஜா ஸ்வாபிதஜீவஜாலே .
அஜாயதா² ப⁴க்தஜனார்திஹந்த்ரீ ஸர்வம்ʼ நியந்த்ரீ ஸகலார்த²தா³த்ரீ .. 21-8..

தவ ப்ரபா⁴வாத்³வஸுதே³வ ஏகோ க³ச்ச²ன்னபீ⁴தோ யமுநாமயத்னம் .
தீர்த்வா நதீ³ம்ʼ கோ³குலமாப தத்ர தா³ஸ்யா꞉ கரே ஸ்வம்ʼ தனயம்ʼ த³தௌ³ ச .. 21-9..

தயைவ த³த்தாமத² பா³லிகாம்ʼ த்வாமாதா³ய ஶீக்⁴ரம்ʼ ஸ ததோ நிவ்ருʼத்த꞉ .
காராக்³ருʼஹம்ʼ ப்ராப்ய த³தௌ³ ப்ரியாயை ஸ சாப⁴வத்பூர்வவதே³வ ப³த்³த⁴꞉ .. 21-10..

த்வத்³ரோத³னோத்தா²பிதகே³ஹபாலைர்நிவேதி³தோ போ⁴ஜபதி꞉ ஸமேத்ய .
த்வாம்ʼ பாத³யுக்³மக்³ரஹணேன குர்வன்னத⁴꞉ஶிரஸ்காம்ʼ நிரகா³த்³க்³ருʼஹாந்தாத் .. 21-11..

ஸ போத²யாமாஸ ஶிலாதலே த்வாம்ʼ ஸத்³ய꞉ ஸமுத்பத்ய கராத³முஷ்ய .
தி³வி ஸ்தி²தா ஶங்க²க³தா³தி³ஹஸ்தா ஸுரை꞉ ஸ்துதா ஸ்மேரமுகீ² த்வமாத்த² .. 21-12..

வதே⁴ன கிம்ʼ மே தவ கம்ʼஸ ஜாதஸ்தவாந்தக꞉ க்வாப்யவிதூ³ரதே³ஶே .
மா த்³ருஹ்யதாம்ʼ ஸாது⁴ஜனோ ஹிதம்ʼ ஸ்வம்ʼ விசிந்தயேத்யுக்தவதீ திரோ(அ)பூ⁴꞉ .. 21-13..

ஸ போ⁴ஜராட் ஸ்வாந்தகநாஶனாய ஸர்வான் ஶிஶூன் ஹந்துமரம்ʼ ப³லிஷ்டா²ன் .
வத்ஸாக⁴முக்²யானஸுராந்நியுஜ்ய க்ருʼதார்த²மாத்மானமமன்யதோச்சை꞉ .. 21-14..

கம்ʼஸோ(அ)ஸ்தி மே சேதஸி காமலோப⁴க்ரோதா⁴தி³மந்த்ரிப்ரவரை꞉ ஸமேத꞉ .
ஸத்³பா⁴வஹந்தா க²லு நந்த³புத்ரி தம்ʼ நாஶய த்வச்சரணம்ʼ நமாமி .. 21-15..

தசகம் 21

நந்தஸுதாவதாரம்

முனிவர்களில் சிறந்தவர் என்று போற்றப் படுபவரும், ப்ரம்மஞானியுமான நாரதர் கம்ஸனிடம் ஏன் எல்லா குழந்தைகளையும் கொல்லும்படிச் சொன்னார்? பாபம் செய்பவர்களும், அதைச் செய்யத் தூண்டுபவர்களும் பாபம் செய்பவர்கள் தானே? எந்த கர்ம பலத்தால் இந்தக் குழந்தைகள் இறந்தன? ஜனமேஜயன் இந்தச் சந்தேகத்தை வ்யாஸரிடம் கேட்கிறான். வ்யாஸர் அதற்குப் பதில் சொல்கிறார்.

1. ஸர்வேSபி ஜீவா, நிஜகர்மபத்தா:
ஏதே ஷடாஸன் த்ருஹிணஸ்ய பௌத்ராஹா
தந்நிந்தயா தைத்யகுலே ப்ரஜாதாஹா
புனச்ச சப்தா, ஜனகேன தைவாலு

தேவியைத் தவிர இந்த உலகில் எல்லோரும் கர்மவினைகளை அனுபவிக்கத் தான் வேண்டும். குழந்தைகள் இறந்ததன் காரணம் அவர்களின் கர்ம பலன். ஸ்ருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், மரீசி ரிஷிக்கும், ஊர்ணைக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ப்ரம்மா தான் சிருஷ்டித்த, சரஸ்வதியிடம் ஆசை கொள்வதைக் கண்ட, இவர்கள் கேலியாகச் சிரித்தனர். ப்ரம்மா அவர்களை, அஸுரர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறக்கச் சாபம் தந்தார். அவர்கள் கால நேமிக்குப் புத்திரர்களாகப் பிறந்தனர். அடுத்த பிறவியில் ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தனர். இனிமேலும் நாம் இப்படி ஜன்மம் எடுக்க வேண்டாம் என்று நினைத்தனர். மனதை அடக்கி தவமும் செய்தனர். ப்ரம்மாவைத் துதித்ததால், ஹிரண்யகசிபு கோபம் கொண்டு, அவர்களைப் பாதாளம் செல்லும்படிச் சபித்தான். மேலும் நீங்கள் தேவகியின் கர்பத்தில் தோன்றி, முற்பிறவித் தந்தையான காலநேமியான கம்ஸனால், கருணையின்றி கொல்லப் படுவீர்கள் என்று சபித்தான்.

2. தேநைவ தே சௌரி,சுதத்வமாப்த்தா
ஹதாச்ச கம்ஸேன,து ஜாதமாத்ராஹா
ஸ்ரீ நாரதே,நர்ஷிவரேணே தேவி!
ஞாதம் புராவ்ருத், தமிதம் ஸமஸ்தம்

இந்த காலநேமிதான் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இந்தக் கதை எல்லாம் நாரதருக்குத் தெரியும். நாரதர் பொய் பேசாதவர். கலகத்தில் ப்ரியம் உடையவர் போல் காணப் படுபவர். தேவ காரியத்தைச் சாதிப்பதற்காக இப்படிச் செய்கிறார். 6 குழந்தைகளுக்கும் மோட்க்ஷம் கிடைப்பதற்காக இப்படி ஒரு யோஜனையை கம்ஸனுக்குச் சொன்னார். ஸ்ருஷ்டி முதல் ப்ரளயம் வரை தேவி நடத்தும் நாடகத்திற்கு, நாரதர் இப்படி நன்மையில் முடியும் கலகத்தைச் செய்கிறார். தேவ காரியங்கள் நினைத்தபடி முடிய வேண்டுமல்லவா? அதனால் தான் இப்படி கலகத்தைச் செய்கிறார். கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது வழக்கம். மஹாவிஷ்ணுவையேக் குழந்தையாகப் பெற்ற தேவகீ, வஸுதேவருக்கு, ஏன் இப்படிக் கஷ்டம் வந்தது? இது எல்லோருக்கும் வரும் சந்தேகந்தான். இதற்கும் காரணம் இருக்கிறது. ராமாவதாரத்தில் வானரங்களாகப் பிறந்து ஸ்ரீராமனுக்கு உதவி செய்த தேவர்கள், கிருஷ்ணாவதாரத்தில் யாதவர்களாகப் பிறந்தனர். வஸுதேவர் யார்? அவர் கஸ்யப முனிவரின் அம்சம். கஸ்யபரின் மனைவிகள் அதிதீ ஸிரஸா. அவர்கள் தான் தேவகீ ரோஹிணீயாகப் பிறக்கிறார்கள். வருணனின் சாபத்தால், கஸ்யபர் வஸுதேவராகப் பிறக்கிறார். கஸ்யபர் யாகம் செய்வதற்காக வருணனிடம் பசுவை இரவலாக வாங்கிச் சென்றார். யாகம் முடிந்த பின் திருப்பித் தர வேண்டுமல்லவா? வருணன் பலமுறைக் கேட்டும் கஸ்யபர் தரவில்லை. அதனால் கஸ்யபருக்கு “பசுபாலகனாய் பிறக்கக் கடவாய்” என்று வருணன் சாபம் தந்தார்.

3. ப்ராக் தம்பதீ சாதி,திகச்யபௌ ஹா!
ஸ்வகர்மதோஷேண, புனச்ச ஜாதௌ
தௌ தேவகீசுர,ஸுதௌ ஸ்வபுத்ர
நாசாதிபிர் துக்க,ம வாபதுச்ச

“தாயைப் பிரிந்த பசுக்களின் கண்ணீர் போல் அதிதியும் பூமியிலே தன் குழந்தைகள் சாவதைக் காண்பாள். சிறைவாசமும் துக்கமும் அடையட்டும்” என்றும் சாபம் கொடுத்தார். ப்ரம்மாவிடம் இதை வருணன் சொன்னபோது, ப்ரம்மாவும் “அம்சத்தால் நீ மனைவியுடன் பூமியில் யதுகுலத்தில் பிறந்து பசு பாலனம் செய்வாய்” என்று சாபம் தந்தார். இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் குமாரனான இந்திரன் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாகச் சிதைத்தார் அல்லவா? அதனால் அவளும் “உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்” என்று சாபம் தந்தாள். இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் புத்திரர்கள் தேவர்கள். திதியின் புத்திரர்கள் அஸுரர்கள். அதிதியின் புத்திரனான இந்திரன் போல் தனக்கும் குழந்தை வேண்டும் என்று திதி ஆசைப்படுகிறாள். கர்பவதி ஆகிறாள். ஆனால் அதிதி, தன் மகனான இந்திரனிடம் சொல்ல அதனால் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாக இந்திரன் சிதைத்தார். அதனால் திதியும் “உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்” என்று சாபம் தந்தாள். அந்த அதிதி தான் தேவகி. இவர்கள் எல்லோரும் நல்லவர்களே. இருப்பினும் பிறவிச் சுழலில் துரோக புத்தியுடன் காணப்படுகிறார்கள். பூபாரத்தைக் குறைக்க தேவர்களின் பிராஜாபதியான கஸ்யபர் வஸுதேவராகப் பிறக்கிறார் அவருக்கு ஆனகதுந்துபி என்றும் பெயர் உண்டு. விஷ்ணு அம்சாவதாரமாக, இவருக்கு பிள்ளையாகப் பிறக்கிறார். அன்னை, யசோதைக்கு மகளாகப் பிறக்கிறாள். தேவ காரியங்களை முடித்து வைக்கிறாள். தேவகியின் 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்தில் மாற்றி விடுகிறாள். விஷ்ணுவை கோகுலம் சேர்க்கிறாள். இந்திரன் அம்சம் அர்ஜுனன். தர்ம தேவதை அம்சம் யுதிஷ்டிரன். வாயுவின் அம்சம் பீமன். நகுல சகாதேவர்கள் அஸ்வினீ குமாரர்கள் அம்சம். வசுவின் அம்சம் கங்கா புத்திரர் பீஷ்மர். இறுதியில் யாதவர்களும் ஒருவரோடொருவர் சண்டை செய்து இறந்து விடுகிறார்கள். பிராமண சாபத்தால் வம்சம் அழியும். அதே சாபத்தால் விஷ்ணுவும் தன் உடலை விடுவார். இப்படியாக அவரின் அவதாரம் முடிகிறது. யயாதிகளின் குமாரர்களாக யாதவர்கள் பிறக்கிறார்கள்.

4. த்வம் தேவகீ ஸப்த,மகர்பதோ வை
க்ருஹ்ர்ணந்த்ய – நந்தாம்,சசிசும் ஸ்வசக்த்யா
நிவேச்ய ரோஹிண்,யுதரே தரண்யாம்
மர்த்யோ பவே த்யச்,சுத மாதிசச்ச

ஆறு குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டன. 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்திற்கு மாற்றி விடுகிறாள் தேவீ. அவர் ஆதிசேஷன் அம்சம்.

5. ப்ராக் கர்ம தோஷாத், ஸ ஸுஹ்ருன் மகோநஹ
க்ருத்தேன சப்தோ, ப்ருகுணா முராரிஹி
தயார்ஹஸம்ஸாரி,தசாம,வாப்ஸ்யன்
ஹா! தேவகீ கர்ப்பமதாSSவிவேச

விஷ்ணு இந்திரனின் நண்பன். தேவாசுரர்கள் யுத்தத்தில், விஷ்ணு தேவர்கள் பக்கம் இருக்கிறார். அஸுர குருவான சுக்ராச்சாரியார், தன் சிஷ்யர்கள் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் சிவனை வேண்டி தபஸ் இருக்கிறார். அந்த நேரத்தில் சுக்ராச்சாரியாரின் அன்னை (ப்ருகு மஹரிஷியின் மனைவி) அவர்களுக்கு குருவாக இருக்கிறாள். தேவர்கள் அசுரர்களிடம் சண்டையிட்ட போது அசுரர்கள் ஜெயிக்கிறார்கள். அப்பொழுது தேவர்கள், பதிவ்ரதையான ப்ருகு முனிவரின் பத்தினி இருக்கும் வரைத் தங்களால் ஜெயிக்கமுடியாது என்று நினைக்கிறார்கள். இந்திரன் விஷ்ணுவிடம் இதைச் சொல்ல, விஷ்ணு அவளைக் கொன்று விடுகிறார். உடனே ப்ருகு மஹரிஷி அங்கு வந்துத் தன் சக்தியால் மீண்டும் அவளுக்கு உயிர் கொடுக்கிறார். அவர் “நீ உயர்ந்த, தாழ்ந்த பல யோனிகளில் ஜனித்து (மச்ச.கூர்ம, வராக) ஸம்சார துக்கத்தை அனுபவிப்பாய். ராமாவதாரத்தில் மிகவும் துக்கப் படுவாய். பின் தேவகியின் கர்பத்தில் பிறப்பாய்” என்று சாபம் தந்தார். கர்ம பலனை யாராக இருந்தாலும் அனுபவிக்க வேண்டும். பகவானே ஆனாலும் இதற்கு விதிவிலக்கல்ல.

6. பூர்ணே து கர்பே, ஹரிரர்த்தராத்ரே
காராக்ருஹே தேவக நந்தனாயாஹா
யக்ஜே ஸுதேஷ்வஷ்ட,மதாமவாப்தஹ
சௌரிர் விமுக்தோ நிகடைச்ச பந்தாது

கர்பம் பூரணமானதும், விஷ்ணு காராக்ரஹத்தில், ஆவணி மாதம், அஷ்டமி திதியில், ரோஹிணி நக்ஷத்திரத்தில், நடு இரவில் அவதரித்தார். அக் குழந்தையைப் பார்த்து மனக் கலக்கத்துடன் கண்ணீர் விட்டு அழும் போது, கதவுகளின் சங்கிலிப் பூட்டுகள் தானாகவே திறக்கின்றன. இது எதை உணர்த்துகிறது? ஒருவன் பந்தப் படுவதும், அதிலிருந்து விடுதலை பெறுவதும் பகவான் சித்தம் என்பதைத் தான். பந்தம் என்றால் என்ன? ஸம்சார பந்தம். ஸம்சார பந்தத்தில் சிக்கினால் அதிலிருந்து விடுதலை பெற பகவான் அருள் இருந்தால் தான் முடியும்.

7. வ்யோமோத்த,வாக்யேன, தவைவ பாலம்
க்ருஹ்ணன்ன த்ருஷ்ட:, கலு கேஹபாலைஹி
நித்ராம் கதைஸ்த்வத், விவ்ருதேன சௌரிர்
த்வாரேண யாதோ, பஹிராத்ததோஷம்

அந்த நடுநிசியில், குழந்தை பிறந்ததும், ஒரு அசரீரி கேட்கிறது. “இந்தக் குழந்தையைக் கோகுலத்தில் நந்தகோபர் வீட்டில் விட்டு விடு. அங்கு பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து விடு”. அசரீரியைக் கேட்ட வஸுதேவர், தன்னையும் அறியாமல், குழந்தையைக் கையில் எடுக்கிறார். கம்ஸன் பலத்த காவல் வைத்திருந்தும், கதவுப் பூட்டுகள் தானாகத் திறக்கிறது. தேவீ காவலாளிகளையும் நன்கு உறங்க வைக்கிறாள். வஸுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குச் செல்கிறார்.

8. த்வம் ஸ்வேச்சயா, கோபகுலே யசோதா
நந்தாத்மஜா ஸ்வாபிதஜீவஜாலே
அஜாயதா பக்தஜனார்த்திஹந்த்ரீ
ஸர்வம் நியந்த்ரீ, ஸகலார்த்ததாத்ரீ

தேவகிக்குக் குழந்தை பிறந்தவுடன், கோகுலத்தில் யசோதைக்கும் அன்னையின் அவதாரமாகப் பெண் குழந்தை பிறக்கிறது. விஷ்ணுத் தான் பெற்ற சாபத்தாலும், கர்ம பலனாலும் கிருஷ்ணனாக அவதரிக்கிறார். ஆனால் அன்னை அப்படியா? அவள் கர்ம பலன்களுக்கு அப்பாற்பட்டவள். அவள் நினைத்த காரியத்தை முடிப்பதற்காகத் தானே யசோதை வயிற்றில் அவதரிக்கிறாள்.

9. தவ ப்ரபாவத், வஸுதேவ ஏகோ
கச்சன்னபீதோ, யமுனாம் அயத்னம்
தீர்வா நதீம் கோகுலமாப, தத்ர
தாஸ்யா: கரே ஸ்வம், தனயம் ததௌ ச

வஸுதேவர் குழந்தையுடன் யமுனா நதி வழியே போக, பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த வெள்ளம் இடுப்பளவு குறந்தது. நதியை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கடந்து, நந்தகோபர் வீடு செல்கிறார், அங்கு வாயிலில் நீட்டிய கையுடன் ஒரு பெண் நிற்கிறாள். வஸுதேவர் எதுவும் கேட்காமல், அவள் கையில் குழந்தையைக் கொடுக்கிறார். இது தேவியின் மகிமை. வஸுதேவருக்கு கால் சங்கிலி உடைந்தது, கதவு பூட்டு திறந்தது, யமுனையில் வெள்ளம் குறைந்தது, பெண்ணின் கையில் குழந்தையைத் தந்தது எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. எல்லாமே அவரின் சுய நினைவு இன்றியே நடந்தன.

10. தயைவ தத்தா,மத பாலிகாம் த்வாம்
ஆதாய சீக்ரம், ஸ ததோ நிவ்ருத்தஹ
காராக்ருஹம் ப்ராப்ய, ததௌ ப்ரியாயை
ஸ சாபவத் பூர்வ,வதேவ பத்தஹ

வஸுதேவர் தந்த ஆண் குழந்தையை, அந்தப் பெண் யசோதை அருகில் விட்டாள். அவள் தந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, சென்றது போலவே மீண்டும் யமுனையைக் கடந்து, மதுரா வருகிறார். சிறைச் சாலைக்கு வந்து, தேவகி அருகில் குழந்தையை விடுகிறார். மீண்டும் கால் சங்கிலியும், கதவுகளின் பூட்டுக்களும் முன் போலவே பூட்டிக் கொண்டன. அவருக்கு நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.

11. த்வத்ரோத,நோத்தா,பிதகேஹ பாலைர்
நிவேதிதோ போ,ஜபதி: ஸமேத்ய
த்வாம் பாதயுக்மக்ரஹணேன குர்வன்
அத: சிரஸ்காம், நிரகாத் க்ருஹாந்தாது

குழந்தை சத்தம் போட்டு ஓங்கி அழத் தொடங்கியது. அது அன்னையின் குரல் அல்லவா? அனைவரும் விழித்துக் கொண்டனர். காவலாளிகள் ஓடிச் சென்று கம்ஸனிடம் தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியைச் சொல்கின்றனர். கம்ஸன் உடனே சிறைச் சாலைக்குச் சென்று எங்கே அந்த 8 ஆவது குழந்தை? கொண்டுவா? என்றான். குழந்தையைப் பார்த்து இது பெண்ணாயிருக்கிறதே? அசரீரி வாக்கும் நாரதர் வாக்கும் பொய்யாகுமா? என்று ஆச்சர்யப்படுகிறான். அந்தக் குழந்தையை எந்த தயையும் இல்லாமல் கற்பாரையில் அடித்து மோத குழந்தையின் காலைப் பிடித்துத் தூக்கினான். யோகிகளாலும் பார்க்க முடியாத, அடைய முடியாத, அந்த தேவியின் பாத கமலத்தை, கம்ஸன் பிடித்தான் என்றால் அவன் செய்த புண்ணியம் தான் என்னே!

12. ஸ போதயாமாஸ, சிலாதலே த்வாம்
ஸத்ய: ஸமுத்பத்ய, கராதமுஷ்ய
திவி ஸ்திதா சங்க,கதாதிஹஸ்தா
ஸுரை: ஸ்துதா ஸ்மேர,முகீ த்வமாத்த

அந்தக் குழந்தையைப் பாறையில் அடித்து மோத, கையை ஓங்கினான் கம்ஸன். ஆனால் நடந்தது என்ன? குழந்தையின் தலைக் கல்லில் படவே இல்லை, அது அவன் கையிலிருந்து நழுவி ஆகாயத்திற்குச் செல்கிறது. கம்ஸன் உயரே பார்க்கிறான். அவன் கண்டது என்ன? அஷ்ட புஜங்களுடன் சிம்ஹ வாகனத்தில் தேவியைப் பார்க்கிறான். தேவியை நேரில் பார்க்கும் அவன் எத்தகைய பேறு பெற்றவன்?

13. “வதேன கிம் மே தவ கம்ஸ! ஜாதஹ
ஸ்தவாந்தக: க்வாப்ய விதூரதேசே
மா த்ருஹ்யதாம் ஸாதுஜனோ, ஹிதம் ஸ்வம்
விசிந்தயே” த்யுக்தவதீ திரோSபூஹு

ஆகாயத்தில் நின்ற அந்த தேவீ சொல்கிறாள் “ஏ கம்ஸா! என்னைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றாயே! உன்னால் என்னைக் கொல்ல முடியுமா? நானும் உன்னைக் கொல்லப் பிறந்தவள் அல்ல. உன்னைக் கொல்ல வேறு ஒருவன் இங்கு மிக அருகிலேயே பிறந்திருக்கிறான். தேவகீ வஸுதேவரைத் துன்புறுத்துவதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் உன்னைக் கொல்லப் போவதும் இல்லை. நீ விவேகியாக இருந்தால் இதுவரை நீ செய்த தீய செயல்கள் போதும். அதை நிறுத்திக் கொள். இனிவரும் வாழ்க்கையில் நல்லதையே நினை, நல்லதையே கேள், நல்லதையே செய்”. என்று சொல்லி மறைந்தாள். அன்னை கருணாமயி அல்லவா? அதனால் கம்ஸனுக்கும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தந்தாள்.

14. ஸ போஜராட் ஸ்வாநதகநாசனாய
ஸர்வான் சிசூன் ஹந்து மரம் பலிஷ்டான்
வத்ஸாக முக்யான் அஸுரான் நியுஜ்ய
க்ருதார்த்தம் ஆத்மானம் அமன்ய தோச்சைஹி

கம்ஸன் உடனே தன் மந்திரிகளான தேனுகன், கேசி, பிரலம்பன், வத்சகன் ஆகிய அஸுரர்களை அழைத்தான். “யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால் உடனே அதை என் பொருட்டு கொன்று விடுங்கள்” என்றான். எத்துணை கல் மனம் கொண்டவன் கம்ஸன். பிறருக்குத் துரோகம் செய்தால் அது நமக்கே தீமையாக முடியும். மரணம் என்பதை யாராலும் தவிற்க முடியாது. நாம் வாழும் வாழ்க்கையில், இயன்ற வரை நல்லதையே செய்ய வேண்டும். அதுவே தனக்கும் பிறருக்கும் நன்மை தரும். இதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல ஸத்சங்கம் வேண்டும். அப்பொழுதான் நல்லவைகளை அறிந்து செயல்பட முடியும். கம்ஸனுக்குக் கிடைத்தது என்ன? துஷ்டர்களின் சகவாசம். அதனால் தான் அவன் துஷ்டன் ஆனான்.

15. கம்ஸோ Sஸ்தி மே, சேதஸி காமலோப-
– க்ரோதாதிமந்தரி,ப்ரவரை: ஸமேதஹ
ஸத்பாவஹந்தா, கலு நந்தபுத்ரி!
தம் நாசய; த்வச், சரணம் நமாமி

கம்ஸன் துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் பொழுது பிறந்தான் என்று நாம் நினைக்கிறோம். அவன் அப்பொழுது பிறக்கவில்லை. எப்பொழுதும் இருக்கிறான். இப்பொழுதும் இருக்கிறான். எங்கு இருக்கிறான்? எல்லோர் மனதிலும் இருக்கிறான். அவன் என்ன செய்வான்? மனதில் இருக்கும் நல்ல எண்ணங்களை நசிக்கச் செய்வான். இந்தக் கவி நினைக்கிறார் என் மனதில் ஸத் சுபாவங்கள் வரவில்லை. அதனால் என் மனதில் கம்ஸன் இருக்கிறானோ என்று சந்தேகப் படுகிறேன் என்கிறார். கம்ஸனின் மந்திரிகள் போல் மனதில் தீய எண்ணங்களை வளர்க்கும் மந்திரிகள் யார்? காமம், க்ரோதம், லோபம் போன்றவைகள். இவைகள் நம்மிடம் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேவியை மனதில் நிறுத்த வேண்டும். அந்த லோகமாதா மனதில் இருந்து அனைவரையும் காப்பாற்றட்டும்.

இருபத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது


 

No comments: