ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, 19 August 2023

22 த்³வாவிம்ʼஶத³ஶக꞉ - க்ருʼஷ்ணகதா²

 https://youtu.be/nVeHcZD_BbM

22 த்³வாவிம்ʼஶத³ஶக꞉ - க்ருʼஷ்ணகதா²

ஶ்ரிய꞉பதிர்கோ³மலமூத்ரக³ந்தி⁴ன்யஸ்தப்ரபோ⁴ கோ³பகுலே விஷண்ண꞉ . க்ருʼஷ்ணாபி⁴தோ⁴ வத்ஸப³காதி³பீ⁴தோ ருத³ன் ஸதா³ தே³வீ நினாய பா³ல்யம் .. 22-1.. ஹையங்க³வீனம்ʼ மதி²தம்ʼ பயஶ்ச கோ³பீர்விலஜ்ஜ꞉ ஸததம்ʼ யயாசே . ஸ சாம்ப³யா கோ³ரஸசௌர்யசுஞ்சுருலூக²லே பாஶவரேண ப³த்³த⁴꞉ .. 22-2.. வனேஷு பீ⁴மாதபஶுஷ்ககா³த்ரோ கா³ஶ்சாரயன் கண்டகவித்³த⁴பாத³꞉ . வன்யாம்பு³பாயீ ப²லமூலப⁴க்ஷீ தி³னே தி³னே க்³லானிமவாப க்ருʼஷ்ண꞉ .. 22-3.. தை³வேன முக்த꞉ ஸ ச கோ³பதா³ஸ்யாத³க்ரூரனீதோ மது²ராம்ʼ ப்ரவிஷ்ட꞉ . கம்ʼஸம்ʼ நிஹத்யாபி ஹதாபி⁴லாஷஸ்தத்ரோக்³ரஸேனஸ்ய ப³பூ⁴வ தா³ஸ꞉ .. 22-4.. த்³ருʼஷ்ட்வா ஜராஸந்த⁴சமூம்ʼ ப⁴யேன ஸ ப³ந்து⁴மித்ரோ மது²ராம்ʼ விஹாய . தா⁴வன் கத²ஞ்சித்³ப³ஹுது³ர்க³மார்த꞉ ஸ த்³வாரகாத்³வீபபுரம்ʼ விவேஶ .. 22-5.. ஸ ருக்மிணீம்ʼ ஜாம்ப³வதீம்ʼ ச பா⁴மாம்ʼ கந்யாஸ்ததா² த்³வ்யஷ்டஸஹஸ்ரமன்யா꞉ . ஸமுத்³வஹன் ஸஸ்மிதனர்மலாப꞉ க்ரீடா³ம்ருʼகோ³(அ)பூ⁴த்ஸததம்ʼ வதூ⁴னாம் .. 22-6.. ஸ த³ஸ்யுவ்ருʼத்திஸ்த்ரிதி³வாஜ்ஜஹார பா⁴மாநியுக்த꞉ ஸுரபாரிஜாதம் . ஸத்யா ச தம்ʼ கோ³வ்ருʼஷவத்ஸரோஷம்ʼ ப³த்³த்⁴வா தரௌ து³ர்வசஸா(அ)ப்⁴யஷிஞ்சத் .. 22-7.. ஶ்ரீநாரதா³யாதித²யே தயா ஸ த³த்தோத² முக்தோ முனினா ச நீத꞉ . ததஸ்தயா(அ)ஸ்மை கனகம்ʼ ப்ரதா³ய புனர்க்³ருʼஹீதஸ்த்ரபயா(ஆ)ப மௌனம் .. 22-8.. ஸூதீக்³ருʼஹாத்³பீ⁴ஷ்மகஜாஸுதே ஸ ப்ரத்³யும்னநாம்னீஶ்வரி ஶம்ப³ரேண . ஹ்ருʼதே ஶிஶௌ நிர்மதி²தாபி⁴மான உச்சை ருத³ம்ʼஸ்த்வாம்ʼ ஶரணம்ʼ ப்ரபன்ன꞉ .. 22-9.. புத்ரார்தி²னீம்ʼ ஜாம்ப³வதீமபுத்ராம்ʼ ஸ தோஷயிஷ்யன்னுபமன்யுஶிஷ்ய꞉ . முண்டீ³ ச த³ண்டீ³ ச ஶிவஸ்ய ஶைலே மந்த்ரம்ʼ ஜபன் கோ⁴ரதபஶ்சகார .. 22-10.. வரேண ப⁴ர்க³ஸ்ய த³ஶாத்மஜான் ஸா ப்ராஸூத ஸர்வா த³யிதாஶ்ச ஶௌரே꞉ . ததை²வ லப்³த்⁴வா ஸ ஸுதாயுதானி ஸுக²ம்ʼ ந லேபே⁴ நிஜகர்மதோ³ஷாத் .. 22-11.. ஶாபாத்³ருʼஷீணாம்ʼ த்⁴ருʼதராஷ்ட்ரபத்ன்யாஶ்சான்யோன்யவைரேண க்ருʼதாஹவேஷு . ஸர்வே ஹதா ஹந்த குலம்ʼ யதூ³னாம்ʼ மஹத்ப்ரத³க்³த⁴ம்ʼ வனமக்³னினேவ .. 22-12.. வ்யாதே⁴ஷுவித்³தோ⁴ ம்ருʼதிமாப க்ருʼஷ்ண꞉ குஶஸ்த²லீ சாப்³தி⁴ஜலாப்லுதா(அ)பூ⁴த் . ஹா ஜஹ்ரிரே த³ஸ்யுபி⁴ரேனஸா(அ)ஷ்டாவக்ரஸ்ய ஶாபேன யது³ஸ்த்ரியஶ்ச .. 22-13.. ஏவம்ʼ ஹரி꞉ கர்மப²லான்யபு⁴ங்க்த ந கோ(அ)பி முச்யேத ச கர்மப³ந்தா⁴த் . து³꞉க²ம்ʼ த்வப⁴க்தஸ்ய ஸுது³ஸ்ஸஹம்ʼ ஸ்யாத்³ப⁴க்தஸ்ய தே தத்ஸுஸஹம்ʼ ப⁴வேச்ச .. 22-14.. ஜானாஸ்யஹம்ʼ தே பத³யோரப⁴க்தோ ப⁴க்தோ நு கிம்ʼ வேதி ந சைவ ஜானே . த்வம்ʼ ஸர்வஶக்தா குரு மாம்ʼ ஸுஶக்தம்ʼ ஸர்வத்ர பூ⁴யோ(அ)பி ஶிவே நமஸ்தே .. 22-15..

தசகம் 22

கிருஷ்ண கதை

1. ஸ்ரீ ய: பதிர், கோமலமூத்ரகந்திஹி
அஸ்தப்ரபோ கோப,குலே விஷண்ணஹ
க்ருஷ்ணாபிதோ வத்ஸ,பகாதிபீதஹ
ருதன் ஸதா தேவி! நினாய பால்யம்

ப்ருகு முனிவரின் சாபத்தாலும், கர்மவினைகளலும் அவதரித்த கிருஷ்ணன், கோகுலத்தில், பசுக்கள், கன்றுகள், அவைகளின் சாணம், மூத்திரம் இவைகளின் இடையில் வளர்கிறார். அவர் மனதில், வத்ஸாஸுரன் வருவானோ, பகன் வருவானோ அல்லது பூதகி வருவாளோ, யார் எந்த வேடத்தில் வருவார்களோ என்று பயத்தில் இருக்கிறார். அதனால் அவர் முகம் வெளுத்து தைரியம் குறைந்து காணப்படுகிறார். யார் தன்னைத் தூக்கினாலும் இது வத்ஸனோ, பூதனையோ என்று பயந்து காணப்படுகிறார். மனதில் பயம் வந்தால் தைரியம் போய் விடுகிறது.

2. ஹையம்கவீனம், மதிதம் பயச்ச
கோபீர் விலஜ்ஜஹ, ஸததம் யயாசே
ஸ சாம்பயா கோர,ஸசௌர்ய சுஞ்சுஹு
ருலூகலே பா,சவரேண பத்தஹ

கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் மிகவும் விஷமம் செய்கிறான். ஆனால் யாதவர் குலத்திலே எல்லோருக்கும், மாடு கறப்பதும், தயிர் கடைவதும், வெண்ணை எடுப்பதும், வியாபாரம் செய்யப் போவதும், என இதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. கிருஷ்ணனைக் கவனிக்க முடியவில்லை. அதனால் கிருஷ்ணன் கோபிகைகளின் வீட்டிற்குச் சென்று பால், வெண்ணை, தயிர் சாப்பிடக் கேட்கிறான். சில சமயம் திருடியும் சாப்பிடுகிறான். இதை அறிந்த யசோதைக்குக் கோபம் வருகிறது. அதனால் கிருஷ்ணனை இப்படிச் செய்யாதே என்று உரலில் கட்டிவிடுகிறாள். உலகத்தையே ரட்க்ஷிக்கும் விஷ்ணு இப்படி உரலில் கட்டப்பட வேண்டுமா? கர்ம பலனால் ஏற்படும் கஷ்டத்தை நாம் எப்படி உணர்ந்துகொள்வது? அதற்காகத்தான்.

3. வனேஷு பீமாத,பசுஷ்க காத்ரஹ
காச்சாரயன் கண்ட,க வித்தபாதஹ
வன்யாம்புபாயீ, பலமூல பக்ஷீ
தினே தினே க்ளானி,மவாப க்ருஷ்ணஹ

தன்னுடைய 5 ஆவது வயதிலே மாடு கன்றுகளை மேய்க்கும் வேலைகளைச் செய்கிறார். நல்ல வெய்யிலிலே, காலில் செருப்பு கூட இல்லாமல், கல்லும், முள்ளும் இருக்கும் பாதையிலே போவாராம். போகும் வழியிலே ஏதோ மரத்தில் கிடைக்கும் பழங்களைப் பசிக்குச் சாப்பிடுவாராம். அதனால் கிருஷ்ணன் மிகவும் சோர்ந்து போய் விட்டாராம்.

4. தைவேன முக்தஹ, ஸ ச கோபதாஸ்யாது
அக்ரூரநீதோ, மதுராம் ப்ரவிஷ்டஹ
கம்ஸம் நிஹத்யாபி ஹதாபிலாஷஹ
ஸ்தத்ரோக்ர ஸேனஸ்ய, பபூவ தாஸஹ

வஸுதேவரின் சகோதரரான அக்ரூரைக் கிருஷ்ணனை மதுராவிற்கு அழைத்து வரும்படி கம்ஸன் அனுப்பி வைக்கிறான். கம்ஸன் கிருஷ்ணனைக் கொல்ல பலவிதமாக முயற்சிகள் செய்தும் பலனில்லை.

5. த்ருஷ்ட்வா ஜராஸந்தசமூம் பயேன
ஸபந்துமித்ரோ, மதுராம் விஹாய
தாவன் கதஞ்சித், பஹுதுர்க்கமார்த்தஹ
ஸ த்வாரகா த்வீ,பபூரம் விவேச

மகத நாட்டு அரசனான ஜராசந்தன், தன் இரு பெண்களையும் கம்ஸனுக்குக் கல்யாணம் செய்து தருகிறார். உக்ரசேனனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். கம்ஸனைக் கிருஷ்ணன் கொன்றதால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் பகை ஆகிறான். அதனால் மதுராவை ஆக்ரமித்து 17 நாள் போர் செய்கிறான். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஜராசந்தன் மிலேச்சியர்களின் அதிபதியான பலிஷ்டனான காலபவனை சண்டைக்கு அனுப்புகிறான். இவனுக்கு பயந்து கிருஷ்ணன், யாதவர்கள், பலராமன், உறவினர்கள் எல்லோருடனும் துவாரகைக்குச் சென்று விடுகிறார். பலத்த கோட்டைக் காவலில் அங்கு வசித்து வருகிறார்.

6. ஸ ருக்மிணீம் ஜாம்பவதீம் சபாமாம்
கன்யாஸ்ததா த்வ்யஷ்ட, ஸஹஸ்ரம் அமன்யாஹா
ஸமுத்வஹன், ஸஸ்மிதநர்மலாபஹ
க்ரீடாம்ருகோSபூத், ஸததம் வதூனாம்

கிருஷ்ணன் ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமை, மித்திரவிந்தை, காளிந்தீ, லக்ஷ்மணை, நாக்னஜிதி, பத்திரை ஆகிய 8 பேரையும் கல்யாணம் செய்து கொள்கிறார். ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருந்த 16,000 கன்னிகைகளையும் மீட்டு, மணம் செய்து கொண்டு 16,008 பத்தினிகளுடன் சுகமாக ஆனந்தமாக இருந்தார். அந்தப் பெண்கள் கூடக் கிருஷ்ணனை மிகவும் ஆட்டி வைத்தார்களாம். பாவம் கிருஷ்ணன்.

7. ஸ தஸ்யுவ்ருத்தி,ஸ்த்ரி திவாஜ்ஜஹார
பாமாநியுக்தஹ, ஸீரபாரிஜாதம்;
ஸத்யா ச தம் கோ, வ்ருஷவத் ஸரோஷம்
பத்வா தரௌ துர்,வசஸாSப்யஷிஞ்சது

ஒரு நாள் சத்யபாமை, தனக்கு இப்பொழுதே பாரிஜாத மலர் வேண்டும் என்று அடம் பிடித்தாள். பத்தினிகளின் ஆசையைப் பூர்த்தி செய்வது கணவனின் கடமை அல்லவா? பாரிஜாத மரம் சொர்கத்தில் இருக்கிறது. கிருஷ்ணன் அங்கு சென்று, அந்த மரத்தைத் திருடிக் கொண்டு வரும் பொழுது, தேவர்களுடன் யுத்தம் செய்து, அந்த மரத்தை பாமாவின் இல்லத்தில் நட்டு வைத்தார். அதனால் சொர்கத்திலே கிருஷ்ணனுக்குக் கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தது. மற்றொரு நாள் தான் சொல்வதைக் கேட்க வில்லை என்று திட்டுகிறாளாம். இப்படி ஒவ்வொரு வகையாக கிருஷ்ணன் அனுபவிக்கிறார்.

8. ஸ்ரீ நாரதாயாதி,தயே தயா ஸ
தத்தோத முக்தோ, முனினா ச நீதஹ
ததஸ்தயாஸ்மை கனகம் ப்ரதாய
புனர் க்ருஹீத,ஸ்த்ரபயாSS ப மௌனம்

ஒரு நாள் சத்யபாமா கோபித்துக் கொண்டு கிருஷ்ணனை மரத்தில் கட்டிவிட்டாள். அப்பொழுது நாரதர் அங்கு வந்தார். உடனே சத்யபாமா கோபத்தில் “நீங்கள் இந்தக் கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னாள். நாரதருக்குக் கசக்குமா? உடனே அவர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அவருடைய வஸ்த்ரங்களையும் தான் அணிந்து கொள்கிறார். கிருஷ்ணனுடன் போகிறார். சத்யபாமாவிற்குக் கோபம் தணிந்து, நாரதர் பின்னால் ஓடுகிறாள். கிருஷ்ணனைத் திருப்பிக் கேட்கிறாள். பவுன் தந்தால் தான் திருப்பித் தருவேன் என்று நாரதர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு மாட்டை மரத்தில் கட்டவோ அல்லது யாருக்கேனும் தானம் தரவோ மாட்டின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணன் நிலையும் அதுபோலவே ஆனது.

9. ஸுதீக்ருஹாத் பீஷ்ம,கஜாஸுதே ஸ
ப்ரத்யுனநாம்னீச்வரி: சம்பரேண
ஹ்ருதே சிசௌ நிர்,மதிதாபிமான
உச்சைருதம்ஸ்த்வாம், சரணம் ப்ரபன்னஹ

சில காலம் சென்று ருக்மிணி தேவி ஒரு அழகான குழந்தையைப் பெற்றாள். அவன் தான் பிரத்யும்னன். கிருஷ்ணன் குழந்தையைப் பார்ப்பதற்கு முன், சம்பராசுரன் பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். பிறந்த குழந்தையைக் காணவில்லையே என்று அனைவரும் கவலை கொண்டனர். கிருஷ்ணன் புத்திர துக்கத்தால் அழுகிறாராம். எப்படி நம் புத்திரனைக் கண்டுபிடிப்பது என நினைக்கும் போது தேவிதான் ஒரே வழியென்று அன்னையைத் துதிக்கிறார். அன்னையும் அவர் முன் தோன்றி ” கிருஷ்ணனே! இது உன் முன் ஜன்ம சாபத்தால் வந்தது. என் அனுக்ரஹத்தால் உன் மகன் சம்பராசுரனை வதம் செய்து, 16 ஆவது வயதில் உன்னிடம் வந்து சேர்வான்” என்று சொன்னாள். கிருஷ்ணனும் கவலை நீங்கியவராக இருந்தார்.

10. புத்ரார்த்தினீம் ஜாம்பவதீம் அபுத்ராம்
ஸ தோஷயிஷ்யன் உபமன்யுசிஷ்யஹ
முண்டீ ச தண்டீ ச சிவஸ்ய சைலே
மந்த்ரம் ஜபன் கோர, தபச்சகார

ஜாம்பவதிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் கிருஷ்ணர் அவளை சிவனை நினைத்துத் தவம் செய் என்று சொல்கிறார். அதனால் கிருஷ்ணன், ஜாம்பவதியுடன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, யோக தண்டத்துடன், ஒரு காலில் நின்று கொண்டு 6 மாதம் தவம் செய்கிறார். சிவனும் அவர்கள் முன் காட்சி தந்தார்.

11. வரேண பர்க்கஸ்ய தசாSத்மஜான் ஸா
ப்ராஸூத; ஸர்வா, தயிதாச்ச சௌரேஹே
ததைவ; லப்த்வா, ஸ ஸுதாயுதானி
ஸுகம் ந லேபே, நிஜகர்மதோஷாது

சிவன் காட்சி தந்ததும் ஸம்சாரத்தில் பெண் ரூபமான பாசத்தால் நான் கட்டப் பட்டிருக்கிறேன். மானிட ஜன்மம் எடுத்து நான் மிகவும் துக்கப்படுகிறேன். ஜாம்பவதிக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று சொல்லி கிருஷ்ணன் அழுகிறார். சிவன் ஜாம்பவதிகுப் பத்து குழந்தைகள் பிறக்கும் என்று அருள் செய்கிறார். அவளுக்கு மட்டுமல்ல கிருஷணனின் எல்லா பத்னிகளுக்கும் ஆளுக்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் கிருஷ்ணனுக்கு மனதில் சந்தோஷம் இல்லை. அதற்குக் காரணம் கர்மபலனே.

12. சாபாத்ருஷீணாம், த்ருதராஷ்ட்ர பத்ன்யாச்ச
அன்யோன்ய வைரேண, க்ருதாஹ வேஷு
ஸர்வே ஹ தா; ஹந்த! குலம் யதூனாம்
மஹத் ப்ரதக்தம், வனமக்னி நேவ

கிருஷ்ணனுக்கு நிறைய குமாரர்கள் இருந்தும் சுகம் இல்லை. ஒரு நாள் கிருஷ்ணனின் குமாரன் ஒருவன் நிறைமாத கர்பிணிப் போல வேடம் தரித்து, ஒரு மஹரிஷியிடம் சென்று வயிற்றில் இருப்பது என்ன குழந்தை? என்று கேட்கிறான். கோபம் அடைந்த மஹரிஷி உன்னால் உங்கள் வம்சமே அழியும் என்று சாபம் தருகிறார். மேலும் மஹாபாரத யுத்தம் முடிந்ததும், தன்னுடைய புதல்வர்கள் அனவரும் அழிந்ததால், காந்தாரி வருத்தப் படுகிறாள். அவள் கிருஷ்ணனிடம் “நீ நினைத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாமே! ஆனால் நீ பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தாயே! அதனால் இன்று முதல் 36 வருடம் கழிந்து உன் புத்திரமார்களும் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மாண்டு போவார்கள்” என்று அவளும் சாபம் தந்தாள்.

13. வ்யாதேஷு வித்தோ, ம்ருதிமாப க்ருஷ்ணஹ
குசஸ்தலீ சாப்திஜலாளு தாSபூது
ஹா! ஜஹ்ரிரே தஸ்,யுபிரேன ஸாஷ்டா
வக்ரஸ்ய சாபேன, யதுஸ்த்ரியச்ச

ஒரு நாள் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் பொழுது அவர் காலடியைக் கண்டு ஒரு மிருகம் அங்கு வருகிறது. மிருகத்தைக் கண்ட வேடன் அம்பை விடுகிறான். அது கிருஷ்ணனின் காலில் படுகிறது.

14. ஏவம் ஹரி: கர்ம,பலான்யபும்க்தஹ
ந கோபி முச்யேத, ச கர்ம பந்தாது
துக்கம் த்வ பக்தஸ்ய, ஸுதுஸ்ஸஹம் ஸ்யாது
பக்தஸ்ய தே தத்,ஸுஸஹம் பவேச்ச

விஷ்ணு மும் மூர்த்திகளில் ஒருவர். அதுவும் காக்கும் கடவுள். அவர் சாபத்தினால் மேலும் மேலும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவர் தேவீ பக்தர். அதனால் எத்தனை கஷ்டம் வந்தாலும் அவரால் அதைத் தாங்கிச் சமாளிக்க முடிந்தது. தெய்வ பக்தியில்லாவிட்டால் கஷ்டங்களைத் தாங்க மனதில் திடம் இருக்காது. மலை போலக் கஷ்டம் வந்தாலும் அதைத் துரும்பு போல் சமாளிப்பதற்குத் தேவியின் அருள் வேண்டும்.

15. ஜானாஸ்யஹம் தே, பதயோர் அபக்தஹ
பக்தோ நு கிம் வேதி, ந சைவ ஜானேhttps://youtu.be/nVeHcZD_BbM
த்வம் ஸர்வசக்தா, குரு மாம் ஸுசக்தம்
ஸர்வத்ர; பூயோபி, சிவே! நமஸ்தே

இந்த தேவீ நாராயணீயத்தை எழுதும் கவிக்கு திடீரென ஒரு சந்தேகம் வருகிறது. நான் பக்தனா? அபக்தனா? இது யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரியாது. தேவிக்குத் தான் தெரியும். நான் அபக்தனாக இருந்தால் எனக்கு பக்தியைத் தந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

இருபத்தி இரண்டாம் தசகம் முடிந்தது


 


No comments: