ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, 19 October 2023

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ விஷ்ணுமஹத்த்வம்  



37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1.. அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா . த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2.. ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ . இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3.. தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி . ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4.. ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச . ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5.. மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் . தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6.. ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ . தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7.. ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8.. ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9.. விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

தசகம் 37

விஷ்ணுமஹத்வம்

1. புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் ச கர்த்த
ஸ தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . 

ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1..

அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம் செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. “விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்” என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.

2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
மார்ஷ்டும் ச தேவ்யே,ஷ நியுஜ்யதே ஹி

அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா .
த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2..

விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.

3. ஸ ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
பத்ன்யா ச பூதைச்ச, ஸமம் கிரீசஹ
இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்

ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ .
இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3..

தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே.

பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.

4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் ச நௌதி

தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி .
ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4..

இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.

5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
ஸ்துவந்தி நாரா,யண மர்யமா ச

ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச .
ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5..

மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.

6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
நரம் ச நாரா,யண மாச்ரயந்தே

மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் .
தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6..

ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.

7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்

ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ .
தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7..

இளாவ்ருதத்தின் இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
மஹாபலிர் வா, வனமேவ நௌதி.

ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . 

வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8..

பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம்.. சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.

9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
பாதள மூலே, ச ஸலீலமாஸ்தே

ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . 

ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9..

பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.

10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே

விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . 

ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து, எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.

முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.

No comments: