ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, 19 October 2023

41 ஏகசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரணாமம்

 

41 ஏகசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரணாமம்

தே³வி த்வதா³வாஸ்யமித³ம்ʼ ந கிஞ்சித்³வஸ்து த்வத³ன்யத்³ப³ஹுதே⁴வ பா⁴ஸி . தே³வாஸுராஸ்ருʼக்பனராதி³ரூபா விஶ்வாத்மிகே தே ஸததம்ʼ நமோ(அ)ஸ்து .. 41-1.. ந ஜன்ம தே கர்ம ச தே³வி லோகக்ஷேமாய ஜன்மானி த³தா⁴ஸி மாத꞉ . கரோஷி கர்மாணி ச நிஸ்ப்ருʼஹா த்வம்ʼ ஜக³த்³விதா⁴த்ர்யை ஸததம்ʼ நமஸ்தே .. 41-2.. தத்த்வத்பத³ம்ʼ யத்³த்⁴ருவமாருருக்ஷு꞉ புமான் வ்ரதீ நிஶ்சலதே³ஹசித்த꞉ . கரோதி தீவ்ராணி தபாம்ʼஸி யோகீ³ தஸ்யை நமஸ்தே ஜக³த³ம்பி³காயை .. 41-3.. த்வதா³ஜ்ஞயா வாத்யனிலோ(அ)னலஶ்ச ஜ்வலத்யுதே³தி த்³யுமணி꞉ ஶஶீ ச . நிஜைர்நிஜை꞉ கர்மபி⁴ரேவ ஸர்வே த்வாம்ʼ பூஜயந்தே வரதே³ நமஸ்தே .. 41-4.. ப⁴க்திர்ன வந்த்⁴யா யத ஏவ தே³வி ராகா³தி³ரோகா³பி⁴ப⁴வாத்³விமுக்தா꞉ . மர்த்த்யாத³யஸ்த்வத்பத³மாப்னுவந்தி தஸ்யை நமஸ்தே பு⁴வனேஶி மாத꞉ .. 41-5.. ஸர்வாத்மனா யோ ப⁴ஜதே த்வத³ங்க்⁴ரிம்ʼ மாயா தவாமுஷ்ய ஸுக²ம்ʼ த³தா³தி . து³꞉க²ம்ʼ ச ஸா த்வத்³விமுக²ஸ்ய தே³வி மாயாதி⁴நாதே² ஸததம்ʼ நமஸ்தே .. 41-6.. து³꞉க²ம்ʼ ந து³꞉க²ம்ʼ ந ஸுக²ம்ʼ ஸுக²ம்ʼ ச த்வத்³விஸ்ம்ருʼதிர்து³꞉க²மஸஹ்யபா⁴ரம் . ஸுக²ம்ʼ ஸதா³ த்வத்ஸ்மரணம்ʼ மஹேஶி லோகாய ஶம்ʼ தே³ஹி நமோ நமஸ்தே .. 41-7.. பதந்து தே தே³வி க்ருʼபாகடாக்ஷா꞉ ஸர்வத்ர ப⁴த்³ராணி ப⁴வந்து நித்யம் . ஸர்வோ(அ)பி ம்ருʼத்யோரம்ருʼதத்வமேது நஶ்யந்த்வப⁴த்³ராணி ஶிவே நமஸ்தே .. 41-8.. நமோ நமஸ்தே(அ)கி²லஶக்தியுக்தே நமோ நமஸ்தே ஜக³தாம்ʼ விதா⁴த்ரி . நமோ நமஸ்தே கருணார்த்³ரசித்தே நமோ நமஸ்தே ஸகலார்திஹந்த்ரி .. 41-9.. து³ர்கே³ மஹாலக்ஷ்மி நமோ நமஸ்தே ப⁴த்³ரே மஹாவாணி நமோ நமஸ்தே . கல்யாணி மாதங்கி³ ரமே ப⁴வானி ஸர்வஸ்வரூபே ஸததம்ʼ நமஸ்தே .. 41-10.. யத் கிஞ்சித³ஜ்ஞாதவதேஹ தே³வீநாராயணீயம்ʼ ரசிதம்ʼ மயேத³ம் . அப⁴த்³ரநாஶாய ஸதாம்ʼ ஹிதாய தவ ப்ரஸாதா³ய ச நித்யமஸ்து .. 41-11..  

ஶுப⁴ம்ʼ

தசகம் 41

இந்த தசகத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் நமஸ்காரம் செய்யலாம்.

1. தேவி! த்வதாவாஸ்ய,மிதம்; ந கிஞ்சிது
வஸ்து த்வதன்யத்;, பஹுதேவ பாஸி
தேவாஸுரா ஸ்ருக், பனராதிரூபா
விச்வாத்மிகே! தே ஸததம் நமோஸ்து

அம்பாள் இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். அவள் இல்லாமல் உலகில் ஒன்றுமே இல்லை. தங்கமானது, வளையல், செயின், மோதிரம் இப்படிப் பலவாக ஆகும். அதைப் போல் மண்ணும் குடம் ஆகும், சட்டி ஆகும், பொம்மை ஆகும். இதைப் போல் அம்பாளும் பல ரூபம் தரிக்கிறாள். “பஹுதேவ பாஸி”. பலவாக இருக்கிறாள். இந்த உலகம் முழுவதிலும் அம்பாள் ஸ்வரூபம் உண்டு. அதனால் தான் “ஸர்வ விஸ்வாத்மிகே” என்று சொல்லப்படுகிறாள்.

2. ந ஜன்ம தே கர்ம, ச தேவி! லோக –
– க்ஷேமாய ஜன்மானி, ததாஸி மாதஹ!
கரோஷி கர்மாணி, ச நிஸ்ப்ருஹா த்வம்
ஜகத்விதாத்ர்யை, ஸததம் நமஸ்தே

இந்த ஜீவன் கர்ம வினைக்குக் கட்டுப் பட்டவன். கர்ம வினையை அனுபவிக்கும் வரை ஜீவனும் இருக்கும். பிறப்பும் இறப்பும் கர்மவினைப்படி தான் நடக்கும். ஜனன மரணம் நம் ஆசைப்படி நடக்காது. அடுத்த ஜன்மம் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை ஜீவனால் நிச்சயிக்க முடியாது. கர்ம வினைதான் தேவனாகவோ, மனிதனாகவோ, புழு, பூச்சியாகவோ ஜன்மம் எடுக்க வைக்கிறது. அனைவரும் கர்மத்திற்குக் கட்டுப் பட்டவர்கள். ஆனால் தேவி கர்மாதீதை. கர்மங்களுக்கு அப்பாற்பட்டவள். நம்முடைய சரீரம் பிராரப்த சரீரம். தேவின் சரீரம் ஸுவேட்ஷா சரீரம். அவள் இச்சைப்படியானாது. ஒருவன் நாடகத்தில் பல வேஷம் போட்டு அதன்படி நடித்தாலும், உண்மையில் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை. அம்பாளின் லீலையும் அப்படியே, கேட்கலாம், படிக்கலாம், பாடலாம். ராகத்வேஷத்திலிருந்து மனதை தூய்மை படுத்தலாம். அம்பாளின் லீலைகளால் மற்றவர்களுக்கு நன்மை. அதுதான் அன்னையின் கருணாப் பிரவாகம். அப்படிப்பட்ட அம்பாளை வணங்குகிறார்.

3. தத் த்வத்பதம், யத், த்ருவமாருருக்ஷுஹு
புமான் வ்ரதீ நிச்,சல தேஹ சித்தஹ
கரோதி தீவ்ராணி, தபாம்ஸி யோகீ:
தஸ்யை நமஸ்தே ஜகதம்பிகாயை

இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும், நேற்று தோன்றியவை, இன்று தோன்றிக் கொண்டிருப்பவை, நாளையும் தோன்றப் போகின்றவை இவை எல்லாமே அழியக்கூடியவை. ஏன் இந்த உலகம் கூட ஒரு நாள் அழியப் போகிறது. ஆனால் அழியாத ஒன்று இருக்கிறது. அதுதான் அம்பாள். அந்த தேவியின் பாதகமலத்தை அடையத் தியானம், தவம், யக்ஞம், விரதம் எல்லாம் செய்கின்றனர். பரீக்ஷித்து மஹாராஜா தக்ஷகன் என்னும் பாம்பு கடித்து துர்மரணம் அடைந்தான். துர் மரணம் அடைந்தால் அவர்களுக்கு நல்லகதி இல்லை என்பது இந்து தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவன் மகனான ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்கிறான்.அந்த யக்ஞம் முடிந்ததும் பரீக்ஷித்து தேவின் பாதாரவிந்தத்தை அடைந்தான் என்று தேவீ பாகவதம் 12 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தந்தைக்கு முக்தி கிடைக்க வேண்டுமானால் அதற்கான வழியை ஒரு புத்திரனால் மட்டும் தான் தர முடியும். அவனால் தான் பரீஷித்து முக்தி அடைந்தான்.

4. த்வதாஜ்ஞயா வாத்ய,நிலோSநலச்ச
ஜ்வலத்யுதேதி, த்யுமணி: சசீ ச
நிஜைர் நிஜை: கர்ம,பிரேவ ஸர்வே
த்வாம் பூஜயந்தே: வரதே! நமஸ்தே

காற்று சுகமாக வீசுவதற்கும், அக்னி சுடர்விட்டு எரிவதற்கும், வானம் மழை பொழிவதற்கும், சூரியனும், சந்திரனும் உதிப்பதற்கும் அம்பாள் நினைத்தால் தான் முடியும். இந்த தேவர்களே அன்னையை வணங்கி அவள் அருளால் தான் பிரகாசிக்க முடிகிறது என்றால் நம் போன்ற மனிதர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அந்த தேவியை ஆசிரியர் வணங்குகிறார்.

5. பக்திர் ந வந்த்யா:, யத ஏவ தேவி!
ராகாதி ரோகாபி,பவாத் விமுக்தாஹா
மர்த்யா தயஸ்த்வத் பதம் ஆப்னுவந்தி;
தஸ்யை நமஸ்தே, புவனேஸி! மாதஹ!

கடின விரதமும், தவமும் பக்தியும் இல்லாவிட்டால் பிரயோசனமில்லை. எவரும் தன்னை வருத்திக் கொண்டு கஷ்டப்பட வேண்டிய அவஸ்யமில்லை. தபஸ்விகளும், யோகிகளும் என்ன பயனை அடைவார்களோ அதை நாம் சுலபமாக தேவியின் கதைகளைக் கேட்பது, நாம சங்கீர்த்தனங்களில் பங்கு கொள்வது, போன்றவைகளால் அடைந்து விடலாம்.

6. ஸர்வாத்மனா யோ, பஜதே த்வதம்க்ரிம்
மாயா தவாமுஷ்ய, ஸுகம் ததாதி;
துக்கம் ச ஸா த்வத், விமுகஸ்ய தேவி!;
மாயாதி நாதே! , ஸததம் நமஸ்தே

ராகமும், த்வேஷமும் மாயையால் ஏற்படுகிறது. தேவியின் பக்தர்களுக்கு ராகமும், த்வேஷமும் இல்லை. அந்த மாயை தேவியின் தாசி. அதனால் தேவி பக்தர்களின் அருகில் கூட வரமாட்டாள். அந்த மாயாதீதையாகிய தேவியை நமஸ்கரிக்கிறார்.

7. துக்கம் ந துக்கம், ந ஸுகம் ஸுகம் ச;
த்வத் விஸ்ம்ருதிர் துக்க,மஸஹ்ய பாரம்
ஸுகம் – ஸதா த்வத்,ஸ்மரணம் மஹேசி!
லோகாய சம் தேஹி, நமோ நமஸ்தே

மனிதர்கள் பணமும், உறவினர்களும், நண்பர்களும் தனக்கு அனுகூலமாக இருந்தால், அதைச் சுகம் என்று நினைக்கிறார்கள். இவைகள் இல்லாமல் போனால் துக்கப் படுகிறார்கள். உண்மையில் சுகமும் துக்கமும் இவைகளில் இல்லை. தேவியின் ஸ்மரணையே உண்மையான நிலையான சுகத்தைத் தரும். அந்த தேவியை நாம் எப்பொழுது மறக்கின்றோமோ அப்பொழுது துக்கம் தானே வருகிறது. கண்ணைத் திறக்காவிட்டால் வெளிச்சத்தைக் காண முடியுமா? அனைவருக்கும் சுகமே தரும் அந்த தேவியை நமஸ்கரிக்கிறார்.

8. பதந்து தே தேவி! க்ருபாகடாக்ஷாஹா;
ஸர்வத்ர பத்ராணி, பவந்து நித்யம்;
ஸர்வோபி ம்ருத்யோர் அம்ருதத்வமேது:
நச்யந்த்வ – பத்ராணி; சிவே! நமஸ்தே

மிருத்யு என்றால் ராக, த்வேஷ ரூபமான ஸம்சாரம். ராகத்வேஷமில்லாத சாந்தியான நிலை அமிர்தத்வம். யாரிடமும் கோபமோ, விரோதமோ, மனதில் பயமோ, எதுவுமே இல்லாவிட்டால் மனம் அமைதியாக இருக்குமல்லவா? அந்த நிலைதான் அமிர்தத்வம். அபயம், சுகம், நல்லதையே நினைக்கும் மனம் இவைகள் அமிர்தத்வத்தில் லக்ஷணங்கள். கோபம் ,விரோதம், கெடுதலாக ஏதும் நடந்துமோ என்ற பயம் இவைகள் மிருத்யு லக்ஷணங்கள். அப்படி அமிர்தத்வ லக்ஷணம் கொண்ட மனப் பக்குவத்தை எனக்குத் தா என்று நமஸ்கரிக்கிறார்.

9. நமோ நமஸ்Sதே, கில சக்தியுக்தே!
நமோ நமஸ்Sதே, ஜகதாம் விதாத்ரி!
நமோ நமஸ்Sதே, கருணார்த்ர சித்தே!
நமோ நமஸ்Sதே, ஸகலார்த்திஹந்த்ரி!

கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல அனைத்து ஜீவன்களும் தேவியிடமிருந்து வந்தவைகளே. அனைத்து சக்தியும் அவளுள் அடக்கம். அம்பாள் ஸர்வ சக்திமயீ, கருணாமயீ. அந்த தேவிக்கு நமஸ்காரம்.

10. துர்கே மஹாலக்ஷ்மி, நமோ நமஸ்தே;
பத்ரே, மஹாவாணி, நமோ நமஸ்தே!
கல்யாணி! மாதங்கி! ரமே! பவானி!
ஸர்வஸ்வரூபே! ஸததம் நமஸ்தே

அம்பாள், பிரம்மம், பரமாத்மா, பலரூபம், பலநாமம், துர்க்கா, பத்ரா, கல்யாணீ, மாதங்கீ எல்லாமே ஒன்றுதான். எப்படி அழைத்தாலும் அன்னை அருள் செய்வாள். நதிகள் பலவாக ஆனாலும் அவைகள் போய்ச் சேருமிடம் ஒன்றுதான். அந்த தேவிக்கு நமஸ்காரம்.

11. யத் கிஞ்சித ஞா,தவ தேஹ! தேவீ –
-நாராயணீயம், ரசிதம் மயேதம்
அபத்ரநாசாய, ஸதாம் ஹிதாய
தவ ப்ரஸாதாய, ச நித்யமஸ்து

தேவியினுடைய அதாவது நாராயணீயின் மகத்துவத்தை வருணிக்கும் இந்த ஸ்தோத்திரத்திற்கு தேவீ நாராயணியம் என்று பெயர். ஒன்றுமே தெரியாமல் நான் இந்த ஸ்தோத்திரத்தை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நான் எழுதிய இந்த ஸ்லோகம் உலக க்ஷேமத்திற்கும் இதைப் படிப்பவர்களுக்கும் தேவியின் அருள் கிடைக்க உதவட்டும் என்று சொல்லி தேவியை நமஸ்காரம் செய்து இந்த தேவீ நாராயணீயத்தைப் பூர்த்தி செய்கிறார்.

காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா
மா ஜாது பாபம், கரவாணீ தேவி!
மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே
பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.

முற்றும்.

No comments: