40 சத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரார்த²னா
ஆத்³யேதி வித்³யேதி ச கத்²யதே யா யா சோத³யேத்³பு³த்³தி⁴முபாஸகஸ்ய . த்⁴யாயாமி தாமேவ ஸதா³(அ)பி ஸர்வசைதன்யரூபாம்ʼ ப⁴வமோசனீம்ʼ த்வாம் .. 40-1.. ப்ரதிஷ்டி²தா(அ)ந்த꞉கரணே(அ)ஸ்து வாங்மே வதா³மி ஸத்யம்ʼ ந வதா³ம்யஸத்யம் . ஸத்யோக்திரேனம்ʼ பரிபாது மாம்ʼ மே ஶ்ருதம்ʼ ச மா விஸ்ம்ருʼதிமேது மாத꞉ .. 40-2.. தேஜஸ்வி மே(அ)தீ⁴தமஜஸ்ரமஸ்து மா மா பரத்³வேஷமதிஶ்ச தே³வி . கரோமி வீர்யாணி ஸமம்ʼ ஸுஹ்ருʼத்³பி⁴ர்வித்³யா பரா ஸா(அ)வது மாம்ʼ ப்ரமாதா³த் .. 40-3.. த்வம்ʼ ரக்ஷ மே ப்ராணஶரீரகர்மஜ்ஞானேந்த்³ரியாந்த꞉கரணானி தே³வி . ப⁴வந்து த⁴ர்மா மயி வைதி³காஸ்தே நிராக்ருʼதிர்மா(அ)ஸ்து மித²꞉ க்ருʼபார்த்³ரே .. 40-4.. யச்ச்²ரூயதே யத்க²லு த்³ருʼஶ்யதே ச தத³ஸ்து ப⁴த்³ரம்ʼ ஸகலம்ʼ யஜத்ரே . த்வாம்ʼ ஸம்ʼஸ்துவன்னஸ்தஸமஸ்தரோக³ ஆயு꞉ ஶிவே தே³வஹிதம்ʼ நயானி .. 40-5.. அவிக்⁴னமாயாத்விஹ விஶ்வதோ மே ஜ்ஞானம்ʼ ப்ரஸன்னா மம பு³த்³தி⁴ரஸ்து . நாவேவ ஸிந்து⁴ம்ʼ து³ரிதம்ʼ ஸமஸ்தம்ʼ த்வத்ஸேவயைவாதிதராமி தே³வி .. 40-6.. உர்வாருகம்ʼ ப³ந்த⁴னதோ யதை²வ ததை²வ முச்யேய ச கர்மபாஶாத் . த்வாம்ʼ த்ர்யம்ப³காம்ʼ கீர்திமதீம்ʼ யஜேய ஸன்மார்க³தோ மாம்ʼ நய விஶ்வமாத꞉ .. 40-7.. க்ஷீணாயுஷோ ம்ருʼத்யுக³தான் ஸ்வஶக்த்யா தீ³ர்கா⁴யுஷோ வீதப⁴யான் கரோஷி . ஸங்க³ச்ச²த꞉ ஸம்ʼவத³தஶ்ச ஸர்வான் பரோபகாரைகரதான் குருஷ்வ .. 40-8..ஹம்ʼ பா³லிஶபு³த்³தி⁴ரேவ த⁴ர்மானபி⁴ஜ்ஞோ(அ)ப்யபராத⁴க்ருʼச்ச . ஹா து³ர்லப⁴ம்ʼ மே கபிஹஸ்தஆக³ச்ச² பஶ்யானி முகா²ரவிந்த³ம்ʼ பதா³ம்பு³ஜாப்⁴யாம்ʼ ஸததம்ʼ நமஸ்தே .. 40-11..
தசகம் 40
இந்த 40 ஆவது தசகமும் 41 ஆவது தசகமும் நித்ய ஜபத்திற்கு உகந்தது. 40 ஆவது தசகத்தில் தேவி பாகவதத்திலுள்ள தேவீ காயத்ரீ மந்திரத்தை முதல் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து உபநிஷத் மந்திரங்களைக் குறிக்கும் பிரார்த்தனைகள். “வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இது 2 ஆவது ஸ்லோகத்தில் வருணிக்கப் படுகிறது. “ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” இது 3 ஆவ்து ஸ்லோகத்திலும் “அணிதாகரணமஸ்து” இது 4 ஆவது ஸ்லோகத்திலும், “ஸ்திரைர் அங்கை சுற்றுவாம் ஸஷ்டுதிர் வஸே தேவஹிதம் யதாது” இது 5 ஆவது ஸ்லோகத்திலும், “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத், ம்ருத்யோர் முக்ஷீய மாம் ருதாத்” என்னும் மிருத்யுஞ்ய மந்திரத்தை நினைவு கூ றும் 7 ஆவது ஸ்லோகம், இவைகள் எல்லாம் தினமும் சொல்வதற்கு உகந்தது
”ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் சதீமஹீ புத்திம் யோன: ப்ரோசோதயாது” இதுதான் தேவி காயத்ரீ.
1. ஆத்யேதி வித்யேதி, ச கத்யதே யா
யா சோதயேத் புத்தி,முபாஸகஸ்ய
த்யாயாமி தாமேவ, ஸதாSபி ஸர்வ
சைதன்ய ரூபாம், பவமோசனீ த்வாம்
அம்பாள் ஆத்யை. அவள் இல்லை என்ற காலமே இல்லை. அதனால் தான் அவள் ஆத்யை. வித்யையும் அவித்யையும் அவளே. யாரிடம் வித்யா ஸ்வ்ரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு முக்தியையும், யாரிடம் அவித்யா ஸ்வரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு பந்தத்தையும் தருகிறாள். எல்லா ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். இதுதான் தேவி காயத்ரியின் அர்த்தம்.
2. ப்ரதிஷ்டிதாSந்த:, கரணேஸ்து வாங் மே;
வதாமி ஸத்யம், ந வதாம்ய ஸத்யம்;
ஸத்யோக்திரேனம், பரிபாது மாம், மே
ச்ருதம் ச மா விஸ்,ம்ருதிமேது மாதஹ
ஒருவன் எப்படி நினைக்கிறானோ அதற்கு ஏற்ப அவன் வார்த்தைகளும் இருக்கும். வார்த்தைகள் எப்படியோ செயலும் அப்படியே. சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒன்று போல் இருந்தால் அவன் அதிர்ஷ்டசாலி. நல்ல சிந்தனை இருந்தால் தான், சொல்லும் செயலும் நல்லதாக இருக்கும். இதை இயக்கும் சக்தி நம்முடைய உள்மனம். தன்னுடைய உள்மனமும் நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். இந்த நல்ல எண்ணம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ அத்தனை அறிவும் வளரும். கேட்டதை மறந்தால் எந்த பயனும் இல்லை. அம்பாளின் அனுக்ரஹம் இருந்தால் கேட்டவைகள் மனதில் நிலைக்கும். நிறைய ஸ்ருதி வாக்யங்களின் அர்த்தம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ” வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இதற்கு இதுதான் அர்த்தம்.
3. தேஜஸ்வி மேSதீத,மஜஸ்ரமஸ்து;
மா மா பரத்வேஷ,ம திஸ்ச தேவி!
கரோமி வீர்யாணி, ஸமம் ஸுஹ்ருத்பிர்;
வித்யா பரா ஸாSவது மாம் ப்ரமாதாது
எதைக் படிக்கிறோமோ, அதாவது கற்றுக் கொள்கிறோமோ அதை இயன்றவரையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாராயணீயம், தேவீ நாராயணீயம், பகவத் கீதை எல்லாம் படித்துவிட்டு, நல்ல தத்துவங்களை அறிந்து கொண்டு, பிறரிடம் அன்பில்லாமல் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் அதனால் பயன் இல்லை. பிறரிடம் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் மன அமைதி இருக்காது. இதை அனுபவத்தில் உணரலாம். அன்பிருந்தால் மன அமைதி கிடைக்கும். தனக்கு மன அமைதி இல்லாமல் போய்விடக் கூடாது என்று ஆசிரியர் பிரார்த்திக்கிறார். எல்லோரும் ஒன்று போல் ஸத் கர்மங்களைச் செய்து ஒன்று போல் பயனைப் பெற வேண்டும். அப்பொழுதான் ஜீவசமூகத்தில் சாந்தி இருக்கும். நம்முடைய செயல் தவறாக ஆகாமல் இருக்க பரமவித்யையை அப்யாசம் செய்ய வேண்டும். பரம ஞானம் வந்தால் தவறு செய்ய மாட்டான். ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்பதன் பொருள் இதுதான்.
4. த்வம் ரக்ஷ மே, ப்ராணசரீர கர்ம
ஞானேந்த்ரியாந்த:, கரணானி தேவி!
பவந்து தர்மா, மயி வைதிகாஸ்தே;
நிராக்ருதிர்மாSஸ்து, மித: க்ருபார்த்ரே!
பிராண சக்தி ஒருவனை சக்தனாக்கும். பிராணன் துர்பலன் ஆனால் சரீரமும் மனசும் துர்பலன் ஆகும். வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, புட்டம் இவைகள் செயற்புலன்கள். காது, சருமம், கண், நாக்கு, மூக்கு இவைகள் அறிவுப்புலன்கள். சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் இவைகள் அந்தகரணத்தின் விருத்தி பேதங்கள். இவை எல்லாம் சேர்ந்தது இந்த சரீரம். இந்த ச்ரீரத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யார் செய்வது? நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம்மால் அது முடியாது. அம்பாள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்த ஸ்தோத்திரதின் ஆசிரியர் அதை அம்பாள் பொறுப்பில் விட்டு விடுகிறார். வேதம் செய்யக் கூடிய, செய்யக் கூடாத கர்மங்களைப் பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்லும் செய்யக்கூடிய கர்மங்களை நான் செய்ய வேண்டும். செய்யக்கூடாத கர்மங்களை நான் செய்யக்கூடாது. அப்படியான புத்தியை எனக்குத் தா என வேண்டுகிறார். எனக்கு அம்பாளிடம் பக்தியும், அம்பாளுக்கு என்னிடம் கருணையும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.
5. யத் ச்ரூயதே யத், கலு த்ருச்யதே ச;
ததஸ்து பத்ரம், ஸகலம் யஜத்ரே!
த்வாம் ஸம்ஸ்துவன் அஸ்த ஸமஸ்தரோக
ஆயு: சிவே! தேவ,ஹிதம் நயானி
யாரைத் திருப்தி படுத்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது அம்பாள் தான். அவள் கேட்பதும் காண்பதும் நல்லதாக இருக்க வேண்டும். அந்த தேவியிடம் தனக்கு தேவஹிதமான ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். அதாவது தான் செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் வரை ( பூஜை, பாராயணம் போன்ற கடமைகளும் ஆசைகளும்) எந்த காரணத்தாலும் அதாவது நோய் போன்றவைகளால் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுள் முடிந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறார்.
6. அவிக்னமாயாத்,விஹ விச்வதோ மே
ஞானம், ப்ரஸன்னா, மம புத்திரஸ்து;
நாவேவ ஸிந்தும், துரிதம் ஸமஸ்தம்
த்வஸேவயைவாதி,தராமி தேவி
காண்பவைகளும், கேட்பவைகளும் புதுப் புது அறிவைத் தரவேண்டும். எல்லாவிதத்திலிருந்தும் அறிவு வளர வேண்டும். அறிவு வளர வளர புத்திப் பிரகாஸமாகும். புத்தி தெளிந்தால் பாப வாஸனைகள் நசிக்கும். ஒரு கடலைக் கடக்க ஒரு கப்பல் வேண்டும். அதுபோல தேவி த்யானம் என்ற கப்பலின் உதவியால் துரித ஸாகரத்தைக் கடக்கலாம். அதாவது துன்பம் தரும் ஸம்சார ஸாகரத்தைக் கடக்கலாம்.
7. உர்வாருகம் பந்,தனதோ யதைவ
ததைவ முச்யேய, ச கர்மபாசாத்
த்வாம் த்ர்யம்பகாம் கீர்த்தி,மதிம் யஜேய;
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ
பழைய நாட்களில் பூஷணிக்காய், பறங்கிக்காய் போன்றவைகளை ஒரு உறி போன்ற கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். குளிர் சாதனப் பெட்டி இல்லாத காலம் அது. நாட்கள் பல ஆனாலும் பூசனிக்காய் ஒன்றும் ஆகாது. ஆனால் அதைக் கட்டி இருக்கும் கயிறு நைந்து போனால் பூசணிக்காய் கீழே விழுந்து உடைந்துவிடும். அதைப் போல நம்முடைய கர்மம் தீரும் வரை நாமும் பூசணிக்காய் போலத்தான். கர்மம் முடிந்ததும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று விடுவோம். கர்மம் என்ற கயிற்றிலிருந்துத் தனக்கு விமோசனம் வேண்டும் என்று ஆசிரியர் வேண்டிக் கொள்கிறார். அதாவது தன்னுடைய கர்மம் தீரும் வரை, என்னை இந்த உலகில் விட்டு வை என்று வேண்டிக் கொள்கிறார். ( கர்மம் முடியாவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டும்) தேவிக்கு மூன்று கண். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுசுக்தி. பூதம், வர்த்தமானம், பாவி (past, present, future). இப்படி எல்லாவற்றிலும் தேவியின் பார்வை இருக்கிறது. அவள் திருஷ்டி படாத இடமே இல்லை. என்னை நீ நேர்வழியில் நடத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.
8. க்ஷீணாயுஷோ ம்ருத்யுகதான் ஸ்வசக்த்யா
தீர்க்காயுஷோ வீத,பயான் கரோஷி;
ஸங்கச்சத: ஸம்,வதஸ் ச ஸர்வான்
பரோபகாரை, கரதான் குருஷ்வ
இறந்தவனுக்கும் உயிர் கொடுக்க தேவியால் முடியும். 36 ஆவது தசகத்தில் பிரியவிரதனின் இறந்த மகனுக்கு தேவஸேனா உயிர் கொடுத்தாள் என்பதைப் பார்த்தோம். எல்லோரையும் பரோபகாரர்களாக்க அன்னையால் முடியும். மனித வாழ்க்கையின் யாத்திரையிலும், அனைவருக்கும் ஒற்றுமை வேண்டும்.அந்த ஒற்றுமை உணர்வை அனைவருக்கும் உண்டாக்க அம்பாளால் முடியும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க தேவியை ஆசிரியர் வேண்டுகிறார்.
9. மர்த்யோ ஹ்யஹம் பாலிச,புத்திரேவ
தர்மானபிஞ்ஞோ, ப்யபராத க்ருச்ச;
ஹா! துர்லபம் மே, கபிஹஸ்த புஷ்ப
ஸுமால்யவத் சீர்ண,மிதம் ந்ருஜன்ம
ஒரு ஜீவன் மனிதனாகப் பிறப்பது அவனுடைய பாக்யம். அப்படிக் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை விவேகியானவன் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுள்ள மனிதர்களைத் தேடி, ஸ்வதர்மத்தைத் தெரிந்து கொண்டு, அதைத் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் ராக த்வேஷம் என்ற அழுக்கு அழியும், மனம் தூய்மை யாகும். தூய்மையான மனதில் தூய்மையான தேவி பக்தி வளரும். அவன் பரமபதம் அடைவான். இதையெல்லாம் அடையாத மனித ஜன்மம் வீண். அவன் பிறப்பு குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகும். தன் ஜன்மம் அப்படி ஆகிவிடக் கூடாது என ஆசிரியர் வேண்டுகிறார்.
10. யதா பதா வாரி, யதா ச கௌ: ஸ்வம்
வத்ஸம் ததாSSதாவது மாம் மனஸ்தே;
விச்வானி பாபானி, வினாச்ய மே யது
பத்ரம் சிவே! தேஹி ததார்த்திஹந்த்ரி!
ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீரை ஒரு குழாயின் மூலம் திறந்து விட்டால் தண்ணீர் சீராக வீணாகாமல் வரும்.அதைப் போல ஒரு பசுவை அவிழ்த்துவிட்டால் அது கன்றைத் தேடி வரும். இதைப் போல அம்பாளின் கருணையும் என்னை நோக்கி வரவேண்டும். நான் ஏதும் பாபம் செய்திருந்தால் அதையும் நீ போக்கி விடு .அது உன் கருணைக்குத் தடையாக இருக்கக் கூடாதுஎன்று பிரார்த்திக்கிறார்.
11. பஹூக்திபி: கிம்? விதிதஸ்த்வயாSஹம்
புத்ர: சிசுஸ்தே, ந ச வேத்மி கிஞ்சிது;
ஆ கச்ச பச்யானி, முகாரவிந்தம்;
பதாம்புஜாப்யாம், ஸததம் நமஸ்தே
அம்பாள் லோகமாதா. ஸகல ஜீவன்களுக்கும் அன்னை. இந்த ஸ்தோத்திரக்காரர் ஒரு குழந்தை. அவரால் அதிகமாகப் பேச முடியாது. அதனால் தேவியைக் கண்முன் வருமாறு அழைக்கிறார். எனக்கு ஒரு தரிசனம் தரகூடாதா? உன் முகத்தை ஒருமுறை காட்டக் கூடாதா? என்று கேட்கிறார். அதற்காக மனமுருகி தேவியின் பாதத்தில் நமஸ்கரிக்கிறார்.
நாற்பதாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment