38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்
https://clipchamp.com/watch/8352lgPce6m
38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்
அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி .
த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1..
ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா .
ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2..
ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ .
ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3..
ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் .
ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4..
முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் .
உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5..
த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ .
க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6..
குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ .
பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7..
க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன .
பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8..
ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே .
த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9..
ஜ்ஞானம்ʼ ந ப⁴க்திர்ன தபோ ந யோக³பு³த்³தி⁴ர்ன மே சித்தஜயோ(அ)பி மாத꞉ .
அந்த⁴ம்ʼ தமோ(அ)ஹம்ʼ ப்ரவிஶாமி ம்ருʼத்யோ꞉ ஸமுத்³த⁴ரேமம்ʼ வரதே³ நமஸ்தே .. 38-10..
தசகம் 38
சித்த சுத்திப்ராதான்யம்
1. அந்தர்முகோ ய: ஸ்வ,சுபேச்சயைவ
ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
ஸ பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச
அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி .
த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1..
அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன் முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.
2. ந வேதசாஸ்த்ராத், யயனேன தீர்த்த
ஸம்ஸேவயா தான, தபோ வ்ரதைர் வா
சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
வைசத்யமாதர், சவதேதி மாத ஹ!
ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா .
ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2..
தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.
3. சுத்திர் ந யக்ஞேன – யஜன் சசாங்கஹ
பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ
ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ .
ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3..
ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.
4. ஸ விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
ந கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே
ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் .
ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4..
100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.
5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
உபௌ மித: சேப,து; ராடி பாவம்
ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச
முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் .
உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5..
புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.
தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?
த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ .
க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6..
காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.
7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது
குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ .
பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.
.லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
8. க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்
க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன .
பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8..
பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.
9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
நிமார்ஷ்டி ஸ த்வன், மயதாமுபைதி
ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே .
த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9..
தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.
10. ஞானம் ந பக்திர் ந, தபோ ந, யோக
புத்திர் ந மே சித்த,ஜயோSபி மாத ஹ!
அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே
இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.
முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment