ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, October 19, 2023

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

 

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்



https://clipchamp.com/watch/8352lgPce6m

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1.. ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2.. ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3.. ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் . ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4.. முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5.. த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ . க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6.. குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.. க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8.. ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே . த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9.. ஜ்ஞானம்ʼ ந ப⁴க்திர்ன தபோ ந யோக³பு³த்³தி⁴ர்ன மே சித்தஜயோ(அ)பி மாத꞉ . அந்த⁴ம்ʼ தமோ(அ)ஹம்ʼ ப்ரவிஶாமி ம்ருʼத்யோ꞉ ஸமுத்³த⁴ரேமம்ʼ வரதே³ நமஸ்தே .. 38-10..

தசகம் 38

சித்த சுத்திப்ராதான்யம்

1. அந்தர்முகோ ய: ஸ்வ,சுபேச்சயைவ
ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
ஸ பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . 

த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1..

அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன் முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.

2. ந வேதசாஸ்த்ராத், யயனேன தீர்த்த
ஸம்ஸேவயா தான, தபோ வ்ரதைர் வா
சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
வைசத்யமாதர், சவதேதி மாத ஹ!

ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . 

ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2..

தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.

3. சுத்திர் ந யக்ஞேன – யஜன் சசாங்கஹ
பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ

ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . 

ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3..

ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.

4. ஸ விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
ந கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே

ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் .
ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4..

100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.

5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
உபௌ மித: சேப,து; ராடி பாவம்
ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச

முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . 

உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5..

புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.

தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?

த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ .
க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6..

காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.

7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது

குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . 

பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.

.லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

8. க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்

க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . 

பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8..

பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.

9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
நிமார்ஷ்டி ஸ த்வன், மயதாமுபைதி

ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே .
த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9..

தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.

10. ஞானம் ந பக்திர் ந, தபோ ந, யோக
புத்திர் ந மே சித்த,ஜயோSபி மாத ஹ!
அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே

இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.

முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ விஷ்ணுமஹத்த்வம்  



37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1.. அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா . த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2.. ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ . இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3.. தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி . ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4.. ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச . ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5.. மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் . தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6.. ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ . தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7.. ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8.. ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9.. விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

தசகம் 37

விஷ்ணுமஹத்வம்

1. புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் ச கர்த்த
ஸ தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . 

ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1..

அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம் செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. “விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்” என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.

2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
மார்ஷ்டும் ச தேவ்யே,ஷ நியுஜ்யதே ஹி

அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா .
த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2..

விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.

3. ஸ ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
பத்ன்யா ச பூதைச்ச, ஸமம் கிரீசஹ
இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்

ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ .
இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3..

தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே.

பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.

4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் ச நௌதி

தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி .
ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4..

இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.

5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
ஸ்துவந்தி நாரா,யண மர்யமா ச

ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச .
ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5..

மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.

6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
நரம் ச நாரா,யண மாச்ரயந்தே

மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் .
தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6..

ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.

7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்

ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ .
தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7..

இளாவ்ருதத்தின் இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
மஹாபலிர் வா, வனமேவ நௌதி.

ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . 

வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8..

பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம்.. சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.

9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
பாதள மூலே, ச ஸலீலமாஸ்தே

ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . 

ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9..

பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.

10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே

விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . 

ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து, எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.

முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.

Saturday, September 30, 2023

vIribONi

 P: vIribONi ninnE kOri cAla marulu konnadirA

(muktAyisvara sAhitya)
sarasa vitaraNa suguNa catura tagaligina doreyanucu maguva madini dalaci
madhu virisaramula paravashamai viraha bharamunanu alasi solasi nanu galayuDakidi
taruNamani pilice parAku valadurA ikanu prANa manasAradanu sAreku rammanara
A: sarasuDau dakSiNa dvAraka sAmi shrI rAjagOpAla dEva
C: ciru navvu mOmuna
1: rA jANapai inta nIki tEDi calamA valaduraganumA celiya virALigoni
alasiyunnadira ikanu dAni nElukonumu sAmiga
2: sogasu nI hoyalu nI karuNa nI ghanatala tAnnennucunu nirantaramu
manamuna valacinadi nidu padamulAna vinu celuvuDA krpa salupa
3: sAmika ninukOri mOhamu madi mIriyunnadi jAgElarA vEra bAgAyenidi
tagunaTarA maguva rUpu maruni yEpu mukhambu sarOjamu vADi kurulanu
madhu karambugaLa mukhambu marALambu naTa hita mati rA ati maruniyala
virishara nikaramulaku veraci ninu sharaNamaniye neratanamunu doratanamunu
neravaDi viDici guriniliyA sudati mudamodana ghanamuka madavatiniyetanu tagadaya
kaligi bigi kavugiliya nerasara sada samambuga rati salupa nidi taruNamE vinavara sundara
anubandham: ciru cemaTalUraga garima mIraga tEjinekki gamakimpucura ganeravairi
ninu jUci I nelata nannentO vEDunura marukELi IdAni nElukO mA cakkani shrI rAjagOpAla dEva
||pdns rgmg rs ndpm gr sndp mpd nsrgm nsrgm pdp mndm ggrn sndn srgmp,,n|| ||smgrs pmgrs dpmgr ndp mgr sndpmgr srgm pd mpdn sr ngrn dm gm pd nns,,,|| ||ndpm grs, rgmpd mpdns rg mgrs ndn, mgrn dnpd mgrg nsrg mpdn srn s,s pd || mp, smgrg

Monday, September 25, 2023

36 ஷட்த்ரிம்ʼஶத³ஶக꞉ - மூலப்ரக்ருʼதிமஹிமா

36 ஷட்த்ரிம்ʼஶத³ஶக꞉ மூலப்ரக்ருʼதிமஹிமா  


த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச . து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1.. து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ . ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2.. ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் . த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3.. த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ . லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4.. ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய . தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5.. ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ . த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6.. ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ . தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7.. த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி . த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8.. த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச . ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9.. யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் . ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..

தசகம் 36

மூலப்ரக்ருதி மஹிமா

1. த்வமேவ மூல,ப்ரக்ருதிஸ்த்வமாத்மா
த்வமஸ்ய ரூபா, பஹுருபிணீச
துர்க்கா ச ராதா, கமலா ச ஸாவி-
-த்ர்யாக்யா ஸரஸ்வத்,யபி ச த்வமேவ

த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச .
து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1..

ப்ரம்மம் ஆத்மா என்று தொடங்கிய பதங்களால் வேதாந்தம் எதைக் காண்கிறதோ அதுதான் மூலப்ரக்ருதி. அதை ஆதி மஹத் என்றும் சொல்கிறார்கள். மூலப்ரக்ருதி ரூபமில்லாதது. ஆனால் பல உருவங்கள் எடுக்கமுடியும். இந்த மூலப்ரக்ருதியின் அவதாரங்களில் முக்யமானது 5. துர்க்கா, ராதா, லக்ஷ்மி, சாவித்ரி, சரஸ்வதி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.

2. துர்கா ஜகத் துர்க்,கதிநாசினீ த்வம்;
ஸ்ரீ கிருஷ்ண லீலா, ரஸிகாஸி ராதா;
சோபா ஸ்வரூபாSஸி, க்ருஹாதிஷு ஸ்ரீர்;
வித்யா ஸ்வரூபாSஸி, ஸரஸ்வதீ ச.

து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ .
ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2..

தன் உண்மை பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் துர்க்கா. தன்னை நம்பிச் சரண் அடைபவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள். துர்கமன் என்னும் அஸுரனை வதம் செய்தவள். அதன் காரணத்தாலும் துர்க்கா என அழைக்கப்படுகிறாள். ராதை கிருஷ்ணனின் லீலைகளை ரசிப்பவள்.கிருஷ்ணனுக்குப் பிரியமானவள்.ராஸ லீலை ஆடினவள். தன்னை ஆராதிப்பவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவள். அவர்களின் ஸமாகமத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தி ஆனது. மூவுலகத்தின் அழகும் ஒருங்கே இணைந்தவள். லக்ஷ்மி மங்கள ரூபிணி. இவள் அனுக்ரஹம் பெற்றவர்கள் ஸோபையும், காந்தியும் உடையவர்களாக இருப்பார்கள். விவசாயியின் கர்த்தகலக்ஷ்மி, வாணிபனின் வாணித்யலக்ஷ்மி. கண்களால் காணும் ஸௌபாக்யம் எல்லாம் இவள் தான். கிரஹத்தில் கிரஹலக்ஷ்மி, கிராமத்தில் கிராமலக்ஷ்மி, நகரத்தில் நகரலக்ஷ்மி. ஸரஸ்வதி வித்யா ஸ்வரூபிணி. சாஸ்த்திரம், விஞ்ஞானம், பாட்டு, படிப்பு, பேச்சு, நாட்டியம், எழுத்து எல்லாம் தருபவள். பாணினி, காத்யாயனன், பதஞ்சலி, பாதராயணன் ஆகியோர் இவளின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.

3. ஸரஸ்வதீ ஹா! ,குருசாபநஷ்டாம்
த்வம் யாஜ்ஞ வல்க்யாய ததாத வித்யாம்
த்வாமேவ வாணீ, கவசம் ஜபந்தஹ
ப்ரஸாத்ய வித்யாம், பஹவோதி ஜக்முஹு

ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் . 

த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3..

வேத வ்யாஸரின் 4 வேத சிஷ்யர்களில் யஜுர்வேத சிஷ்யன் வைசம்பாயனன். சிஷ்யர்களில் முக்யமானவர் யாக்ஞவல்கியர். குரு சாபத்தால் சகல வித்தையையும் மறந்து சூரியனைத் துதித்தார். சூரியன் குதிரை ரூபத்தில் யஜுர் வேத வித்தையைக் கொடுத்தான். இதை பலப்படுத்த தேவியின் அருள் வேண்டும் என்றார். யாக்ஞவல்கியர் ஸரஸ்வதியைத் நினத்துத் தவம் செய்தார். ஒளிமயமாக தேவி காட்சி தந்தாள். வித்தைகளை மீண்டும் பெற்றார். அம்பாள் அனுக்ரஹம் இருந்தால் குருசாபமும் ஒன்றும் செய்யாது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸரஸ்வதி கவசத்திற்கு விஸ்வஜெயம் என்றும் பெயர் உண்டு. இது வித்தைக்கு மிகவும் உகந்தது.

4. த்வம் தேவி! ஸாவித்ர்யபிதாம் ததாஸி;
ப்ரஸாததஸ்தே, கலு வேதமாதுஹு
லேபே ந்ருபாலோ,ச்வபதிஸ்தனூஜாம்
நாம்நா ச ஸாவித்ர்,யபவத் கிலைஷா

த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ .
லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4..

மத்ர தேசத்தின் ராஜா அசுவபதி. அவன் மனைவி மாலதி. புத்திரப் பேறு வேண்டி, வசிஷ்டரின் உபதேசத்தால் மாலதி ஸாவித்ரியை ஆராதித்தாள். அன்னை அருள் கிடைக்கவில்லை. பின் அசுவதி மஹாராஜாவும் புஷ்கரக்ஷேத்ரத்தில் 100 வருடம் தவம் செய்தார். அப்பொழுதும் அன்னை காட்சி தரவில்லை. மனவருத்தம் கொண்டார்கள். அப்பொழுது “லக்ஷம் காயத்ரி ஜபம் செய்” என்று அசரீரி கேட்டது. அந்த சமயத்தில் பராசரமுனிவர் அங்கு வந்தார். காயத்ரியை ஒரு தரம் ஜபித்தால் ஒரு இரவும் பகலும் செய்த பாபமும், 100 தரம் ஜபித்தால் ஒரு மாதம் செய்த பாபமும், ஒரு லக்ஷம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபமும், 10 லக்ஷம் ஜபித்தால் முன் ஜன்ம பாபமும் போகும். இதுபோல் 10 தரம் ஜபித்தால் முக்தி கிடைக்கும். அந்த தேவியை ஸ்தோத்ரம் செய் என்று சொன்னார். அசுவபதி அப்படியே ஜபித்து பூஜிக்க தேவீ அருள் செய்தாள். அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சாவித்திரி.

5. ஸா, ஸத்யவந்தம், ம்ருதமாத் மகாந்தம்
ஆ ஜீவயந்தீ ச்வசுரம் விதாய
தூரீக்ருதாந்த்யம், தனயானஸூத;
யமாத் குரோராப ச தர்மசாஸ்த்ரம்

ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய . 

தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5..

  சாவித்திரி அழகும் யௌவனமும் நிறைந்து விளங்கினாள். த்யுமத்ஸேனருடைய மகன் ஸத்யவானை மணந்தாள். ஒரு வருடம் கழித்துத் தந்தையின் கட்டளைப்படி ஸத்யவான் பழமும், விறகும் கொண்டுவர சந்தோஷத்துடன் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். விதியினால் ஸத்யவான் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தான். யமன் அவனைக் கொண்டு போக, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து போனாள்.

யமன் சொன்னான் “சாவித்திரி நீ மனித உடலுடன் என் உலகம் வரமுடியாது. உன் கணவன் ஆயுள் முடிந்துவிட்டது. கர்மபலனை அனுபவிக்க அவன் என்னுடன் வருகிறான். கர்ம பலனால் தான் ஜீவன் பிறக்கிறான். அதனாலேயே மரணமும் அடைகிறான். சுகம், துக்கம், பயம், சோகம், தேவத்தன்மைகள், ஸாலோக்யம், ஸகல சித்திகள் இவைகளையும் அடைகிறான். அஸுர, தைத்ய பிறப்புகளும் அதன் காரணமே ” என்றான். சாவித்திரி கேட்டாள்” கர்மம்என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? தேகம் என்பது எது? இந்த கர்மத்தைச் செய்பவன் யார்? அதை அனுபவிப்பவன் யார்? ஜீவன் யார்? பரமாத்மா யார்?” .

யமன் சொன்னான், வேதம் விதித்தது எதுவோ அது கர்மம். சங்கல்பமில்லாமல் செய்யும் கர்மம் உத்தமமானது. பிரம்ம பக்தன் எவனோ அவனே முக்தன். பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், சோகம், பயம் இல்லாதவன். கர்ம வடிவினரும், கர்மத்தின் வித்து போலும் இருக்கும் பகவான் கர்ம பலனைத் தருகிறார். அவர் பரமாத்மா. பரா அல்லது பராசக்தி என்பது பிரகிருதி. இந்த பிரகிருதிக்குக் காரணமானவர் பகவான்தான். தேகம் என்பது அழியக் கூடியது. கர்மத்தைச் செய்பவன் தேகீ. போகம் என்பது ஐஸ்வர்யம். பரமாத்மா போகத்தை அனுபவிக்கச் செய்பவர். உடலையும், பிராணனையும் தாங்குபவன் ஜீவன். பிரம்மம் என்பது நிர்குணமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டதாய், எங்கும் வ்யாபித்திருக்கும் பரம் பொருள். அதுதான் பரமாத்மா. மேலும் சாவித்ரி எந்த கர்மாவினால் ஜீவன் பிறக்கிறான்? என்னவாகப் பிறக்கிறான்? ஸ்வர்கம், நரகத்திற்கு எந்த கர்மம் காரணம்? எதனால் யோகி ஆகிறான்? எதனால் ரோகி ஆகிறான்? என்று பல விஷயங்களைக் கேட்டாள். தருமராஜன் இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து சிரித்தபடியே சொல்கிறார் “குழந்தாய் நீ சாவித்திரி தேவியின் ஒர் அம்சமாகப் பிறந்தவள். உன் ஞானம் ஞானிகளின் ஞானத்தைவிடச் சிறந்தது. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மியும், சிவனின் உடலில் பவானியையைப் போலும் நீ சத்யவானிடத்தில் சௌபாக்யவதியாக இருப்பாய் என்று வாழ்த்தி, நீ விரும்பும் வரத்தைக் கேள் என்றார்.

“ஸத்யவானிடம் எனக்கு 100 புத்திரர்களும், என் தந்தைக்கு 100 குழந்தைகளும், என் மாமனாருக்கு ராஜ்யலாபத்துடன் கண் பார்வையும், வேண்டும். லக்ஷம் வருஷங்கள் ஆனதும் என் கணவருடன் நானும் பரமபதம் அடைய வேண்டும்” என்று சாவித்திரி கேட்டாள். அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார் தர்மராஜன். அதன் பின் ஜீவனின் கர்ம பயனையும், அதைக் கடக்க வழியும், எந்த சக்தி அனைவரையும் காக்கிறதோ, முக்தியும் சாகா நிலையும் தருகிறதோ அந்த சக்தி பூஜை செய்யும் முறைதனையும் கூறும் படிக் கேட்டாள். அந்த யமதர்மராஜனை பலவித ஸ்தோத்ரங்களால் நமஸ்கரித்தாள். யமன் சொன்னான் “அவனவன் செய்த கர்மப்படி, ஸ்வர்கமும் நரகமும் அடைகிறான். அந்தந்த வினைகளுக்கு ஏற்ப காலஸமுத்திரம், ஜ்வாலாமுகம், தூம்ராந்தம் போன்ற 86 நரக குண்டங்களை அடைகிறான். நரகத்தில் விழாமல் பிறவித் துன்பம் ஒழிக்கும் கர்மம் என்ன? என்று கேட்டாள். பஞ்ச தேவதா பூஜையைச் செய்யும் மனிதன் நரகத்தைப் பார்க்க மாட்டான் என்றார். பரமாத்ம சேவையே மேலான சுபகர்மம் என்று பலவித தர்ம சாஸ்த்திர விளக்கங்கள் கூறினார் தர்மராஜன். ஸத்யவானுக்கு உயிர் கொடுத்து அவளுக்கு மங்கள ஆசீர்வாதம் அளித்தார். அவள் தன் கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்து முக்தி அடைந்தாள்.

6. ஸ்கந்தஸ்ய பத்னீ, கலு பாலகாதி-
-ஷ்டாத்ரி ச ஷஷ்டீதி ஜகத்ப்ரஸித்தா
த்வம் தேவஸேனா, தனதா தனானாம்
அபுத்ரிணாம் புத்ர,ஸுகம் ததாஸி

ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ . 

த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6..

மூலப்ரக்ருதியின் 5 அவதாரங்களை இதுவரை பார்த்தோம். அடுத்தது தேவஸேனா. பிரக்ருதியின் ஆறாவது அம்சத்தில் பிறந்தவள். ஆறாவதாக வருவதால் ஷஷ்டி என்றும் பெயர். குழைந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள். ஸ்கந்தனின் மனைவி. செல்வம் இல்லாதவர்க்குச் செல்வம் தருவாள். குழந்தை வேண்டுபவருக்குக் குழந்தைகளைத் தருவாள். குழந்தை இல்லாதவர்கள் இந்த தேவியை பூஜித்து ஷஷ்டி விரதம் இருந்தால் புத்திரர்கள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தையும் குணவானாக இருப்பான்.

7. ஸத்கர்மலப்தே, தனயே ம்ருதே து
ப்ரியவ்ரதோSதூ,யத பக்த வர்யஹ
தம் ஜீவயித்வா, ம்ருதமஸ்ய தத்வா
ஸ்வ பக்தவாத்ஸல்,யமதர்சயஸ்த்வம்

ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ . 

தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7..

ஸ்வாயம்புவமனுவின் புத்திரன் பிரியவிரதன். இவன் தேவி பக்தன். புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ஒரு குழந்தயைப் பெற்றான். ஆனால் அந்தக் குழந்தை உயிரில்லாமல் பிறந்தது. அனைவரும் அழுதனர். தாய் மயக்கமடைந்தாள். தந்தையோ பிராணனைவிட முயற்சி செய்தார். இப்படி அனைவரும் கலங்கி நிற்கும் பொழுது அனேககோடி ரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கருணைக் கடலாக, பக்தருக்கு அனுக்ரஹம் செய்ய ஆவல் கொண்டு அவர்கள் முன் தோன்றிய அந்த தேவியை அரசன் துதித்து, நீ யார் என்று கேட்டான். நான் பிரம்மாவின் மானஸ புத்ரி. தேவஸேனா என்று பெயர். ஸ்கந்தனின் பத்னி. சுகம், துக்கம், பயம், சோகம், மங்களம், மகிழ்ச்சி, ஸம்பத்து, விபத்து ஆகிய எல்லாம் கர்மத்தால் விளைகிறது. அந்த கர்மத்தாலேயே உயிரிழந்த புத்திரனும், சிரஞ்சீவியானவனும் தோன்றுகிறார்கள் என்று சொல்லி ஞான பலத்தால் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்து, ப்ரியவிரதனுக்கு அனுக்ரஹமும் செய்தாள்.

8. த்வமேவ கங்கா, துளசீ, தரா ச
ஸ்வா: ஸ்வதா த்வம், ஸுரபிச்ச தேவி!
த்வம் தக்ஷிணா, கிருஷ்ண,மயீ ச ராதா,
ததாஸி ராதா,மயக்ருஷ்ணதாம் ச

த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி . 

த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8..

 விஷ்ணுவின் பத்னிகளான கங்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். சாபமும் கொடுத்துக் கொண்டார்கள். அதனால் மூவரும் நதிகளாக ஆனார்கள். கங்கா கங்கை நதி ஆனாள். சரஸ்வதி அந்தர்வாணி ஆனாள். லக்ஷ்மி பத்மாநதி ஆனாள். சாபத்தால் லக்ஷ்மி மரமாக ஜனிக்க வேண்டி இருந்தது. விஷ்ணுவின் அனுக்ரஹத்தால் தர்மத்வஜரிடத்தில் பெண்ணாக துளசி என்னும் பெயரில் ஜனித்தாள். பூமியில் துளசிச் செடியாக இருந்தாள். கங்கா கோலோகத்தில் ஒரு கோபிகையாக இருந்தாள். ஒருநாள் ஏகாந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சங்கமித்தாள். ராதை அதைப் பார்த்துவிட்டாள். கிருஷ்ணன் கங்கையை காலின் அடியில் மறைத்து வைத்தான். கங்கை ஒளிந்தததால் எங்குமே ஜலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலும் தண்ணீர் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரம்மா கோலோகம் சென்றார். பீடத்தில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் ராதை ஆனார். உடனே கிருஷ்ணன் ஆனார். ராதையும் கிருஷ்ணனும் வெவ்வேறல்ல. ஒன்றுதான் என்று பிரம்மா உணர்ந்தார்.

பிரம்மாவின் கோரிக்கைப் படி கிருஷ்ணன் கங்கையை விட்டார். எங்கும் ஜலம் வந்து கஷ்டம் தீர்ந்தது. மனிதன் செய்யும் யக்ஜம், யாகம் இவைகளின் ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் அம்பாள் “ஸ்வாஹா’ ஆனாள். பித்ருக்களுக்குச் செய்யும் கர்ம பாகங்கள் கொண்டு செல்பவள் “ஸ்வதா” ஆனாள். கர்மத்தைச் செய்தவுடன் தக்ஷிணையைக் கொடுக்கும் பொழுது அவள் தக்ஷிணா தேவி ஆகிறாள். தக்ஷிணையுடன் கூடிய கர்மம் பயன் தரும். தக்ஷணை இல்லாத கர்மத்தை பலிச்சக்ரவர்த்தி புசிக்கிறார். இது அவர் பகவானின் வாமனாவதாரத்தில் பெற்ற வரம். பூ லோக பாரத்தைத் தாங்குபவள் பூமி தேவி. வஸுதையும் பூமிதான். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கவர்ந்து ஸமுத்திரத்தின் அடியில் ஒளித்தபோது பகவான் வராக ரூபம் எடுத்து அதைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் சுந்தரியாக நின்ற பூமியைக் கண்டு வராகமூர்த்தி மோஹித்து ஒரு வருட காலம் கிரீடித்தனர். கடேசன் என்னும் பிள்ளையையும் பெற்றனர். அதன் பின் தெளிவுபெற்று ஸ்ரீ தேவிக்குச் சமமான மனைவியாக நீயும் ஆனாய், அனைவராலும் பூஜிக்கப்படுவாய் என்றும் சொன்னார். தேவியும் உங்கள் ஆணைப்படி அனைத்துலகையும் வராகரூபிணியாகத் தாங்குகிறேன் என்று சொன்னாள். மேலும் முத்து, சிப்பி, சிவலிங்கம், புஸ்தகம், புஷ்பம், பூமாலை, துளசீ, ஜபமாலை, தேவி விஷ்ணு பிம்பங்கள், சந்தனம், சாலிக்ராமம், சங்கு, தீபம், யந்திரம், மாணிக்கம், பொன், வஜ்ரம், தீர்த்தம் ஆகியவைகளை ஆசனமில்லாமல் வைத்தால் அவைகளைத் தாங்கும் வல்லமையில்லாமல் நான் வருந்துவேன் என்றாள். இவைகளை உன் மீது வைப்பவர் காலசூத்திரம் என்னும் நரகத்தை அடையட்டும் என்று பகவான் சொல்லிச் சென்றார்

9. த்வம் க்ராமதேவி, நகராதிதேவி
வனாதிதேவி க்ருஹதேவதா ச
ஸம்பூஜ்யதே பக்த,ஜனைச்ச யா யா
ஸா ஸா த்வமே வாஸி, மஹானுபாவே!

த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச . 

ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9..பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளும் எல்லா மூர்த்திகளும் மூலபிரக்ருதியின் பல ரூபங்கள் தான். நகரத்தில் நகரதேவதை. கிரமத்தைக் காக்கும் கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தேவதை. வீட்டில் உள்ள பூஜை அறை, துளசி மாடம் அனைத்து பூஜையும் ஏற்பவள் அவளே. இப்படி எல்லா இடத்திலும் இருப்பது மூலப்ரக்ருதிதான்.

10. யத் யத் ச்ருதம் த்ருஷ்டம், அபி ஸ்ம்ருதம் ச
தத் தத் த்வதீயம், ஹி கலாம்சஜாலம்
ந கிஞ்சனாஸ்த்யேவ, சிவே! த்வதன்யது
பூயோபி மூல,ப்ரக்ருதே! நமஸ்தே

யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் . 

ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..

அறிவுக்கு உள்பட்ட அனைத்தும் மூலப்ரக்ருதி. எல்லா உயிர்களிலும் இருப்பது மூலப்ரக்ருதி. யாரும் யாரையும் பழிப்பதோ, நிந்திப்பதோ, இழிவாகப் பேசுவதோ, தூஷிப்பதோ கூடாது. எல்லோருக்கும் மரியாதை தரவேண்டும். அப்பொழுது மூலப்ரக்ருதியை பூஜை செய்த பலன் கிடைக்கும். மூலப்ரக்ருதியை வணங்கி ஆசிரியர் இந்த தசகம் முடிக்கிறார்.

முப்பத்தி ஆறாம் தசகம் முடிந்தது


33 த்ரயஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமகதா²

 https://www.youtube.com/watch?v=PIilbmEhWWI




33 த்ரயஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமகதா²

ஶக்ர꞉ புரா ஜீவக³ணஸ்ய கர்மதோ³ஷாத்ஸமா꞉ பஞ்சத³ஶ க்ஷமாயாம் . வ்ருʼஷ்டிம்ʼ ந சக்ரே த⁴ரணீ ச ஶுஷ்கவாபீதடா³கா³தி³ஜலாஶயா(ஆ)ஸீத் .. 33-1.. ஸஸ்யானி ஶுஷ்காணி க²கா³ன் ம்ருʼகா³ம்ʼஶ்ச பு⁴க்த்வா(அ)ப்யத்ருʼப்தா꞉ க்ஷுத⁴யா த்ருʼஷா ச . நிபீடி³தா மர்த்யஶவானி சாஹோ மர்த்யா அநிஷ்டான்யபி பு⁴ஞ்ஜதே ஸ்ம .. 33-2.. க்ஷுதா⁴(அ)ர்தி³தா꞉ ஸர்வஜனா மஹா(ஆ)பத்³விமுக்திகாமா மிலிதா꞉ கதா³சித் . தபோத⁴னம்ʼ கௌ³தமமேத்ய ப⁴க்த்யா ப்ருʼஷ்டா முனிம்ʼ ஸ்வாக³மஹேதுமூசு꞉ .. 33-3.. விஜ்ஞாய ஸர்வம்ʼ முநிராட் க்ருʼபாலு꞉ ஸம்பூஜ்ய கா³யத்ர்யபி⁴தா⁴ம்ʼ ஶிவே த்வாம் . ப்ரஸாத்³ய த்³ருʼஷ்ட்வா ச தவைவ ஹஸ்தால்லேபே⁴ நவம்ʼ காமத³பாத்ரமேகம் .. 33-4.. து³கூலஸௌவர்ணவிபூ⁴ஷணான்னவஸ்த்ராதி³ கா³வோ மஹிஷாத³யஶ்ச . யத்³யஜ்ஜனைரீப்ஸிதமாஶு தத்தத்தத்பாத்ரதோ தே³வி ஸமுத்³ப³பூ⁴வ .. 33-5.. ரோகோ³ ந தை³ன்யம்ʼ ந ப⁴யம்ʼ ந சைவ ஜனா மிதோ² மோத³கரா ப³பூ⁴வு꞉ . தே கௌ³தமஸ்யோக்³ரதப꞉ப்ரபா⁴வமுச்சைர்ஜகு³ஸ்தாம்ʼ கருணார்த்³ரதாம்ʼ ச .. 33-6.. ஏவம்ʼ ஸமா த்³வாத³ஶ தத்ர ஸர்வே நின்யு꞉ கதா³சின்மிலிதேஷு தேஷு . ஶ்ரீநாரதோ³ தே³வி ஶஶீவ கா³யத்ர்யாஶ்சர்யஶக்திம்ʼ ப்ரக்³ருʼணன்னவாப .. 33-7.. ஸ பூஜிதஸ்தத்ர நிஷண்ண உச்சைர்நிவேத்³ய தாம்ʼ கௌ³தமகீர்திலக்ஷ்மீம் . ஸபா⁴ஸு ஶக்ராதி³ஸுரை꞉ ப்ரகீ³தாம்ʼ ஜகா³ம ஸந்தோ ஜஹ்ருʼஷு꞉ க்ருʼதஜ்ஞா꞉ .. 33-8.. காலே த⁴ராம்ʼ வ்ருʼஷ்டிஸம்ருʼத்³த⁴ஸஸ்யாம்ʼ த்³ருʼஷ்ட்வா ஜனா கௌ³தமமானமந்த꞉ . ஆப்ருʼச்ச்²ய தே ஸஜ்ஜனஸங்க³பூதா முதா³ ஜவாத்ஸ்வஸ்வக்³ருʼஹாணி ஜக்³மு꞉ .. 33-9..


தசகம் 33

கௌதமகதை

1. சக்ர: புரா ஜீவ,கணஸ்ய கர்ம
தோஷாத் ஸமா: பஞ்சதச க்ஷமாயாம்
வ்ருஷ்டிம் ந சக்ரே;, தரணீ ச சுஷ்க
வாபீத டாகாதி, ஜலாசயாSSஸீது

து³꞉கா²னி மே ஸந்து யதோ மனோ மே ப்ரதப்தஸங்க⁴ட்டிதஹேமஶோபி⁴ .
விஶுத்³த⁴மஸ்து த்வயீ ப³த்³த⁴ராகோ³ ப⁴வானி தே தே³வி நமோ(அ)ஸ்து பூ⁴ய꞉ .. 33-10..

முன்னொரு சமயம் உலகத்தில் பிராணிகளுடைய துஷ்கர்ம வினையால் இந்திரன் 15 வருஷங்கள் மழை பெய்யச் செய்யவில்லை.. ஆறு, ஏரி, குளம், குட்டை ,கிணறு எல்லாம் வற்றிப் போனது.

2. ஸஸ்யானி சுஷ்காணி, ககான் ம்ருகாம்ச்ச
புக்த்வாSப்ய த்ருப்தா:, க்ஷுதயா த்ருஷா ச
நிபீடிதா மர்த்ய, சவானி சாஹோ!
மர்த்யா அநிஷ்டான்,யபி புஞ்சதே ஸ்ம

செடி, கொடி, மரம் எல்லாம் வாடிப்போயின. மனிதர்கள் பசியால் வாடினார்கள். உலர்ந்த பழங்களைச் சாப்பிட்டனர். பறவைகளையும், மிருகங்களையும் கொன்று தின்றார்கள். இறந்தவனை உயிரோடு இருப்பவன் சாப்பிட்டான். பசிக் கொடுமையால் சாப்பிடக் கூடாததையெல்லாம் சாப்பிட்டான். என்ன கொடுமை இது? அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப் படுகிறது.

3. க்ஷுதாSர்திதா: ஸர்வ,ஜனா மஹாபத்
விமுக்திகாமா, மிளிதா: கதாசிது
தபோதனம் கௌ,தமமேத்ய பக்த்யா
ப்ருஷ்டா முனிம் ஸ்வா,கமஹேதுமூசுஹு

பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் யோசித்து, தபஸையே தனமாகக் கொண்ட கௌதம முனிவரிடம் போவோம். அவர் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர். அவர் ஆஸ்ரமம் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றால் நம் வறுமையை நீக்குவார் என்று முடிவு செய்து, எல்லோரும் தத்தம் குடும்பத்துடனும், பசுக்கள், வேலைக்காரர்கள் அனைவருடனும் கௌதம முனிவரின் ஆஸ்ரமம் அடைந்தனர். கௌதமர் அவர்களை முறைப்படி உபசரித்துப் பின், ஏன் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வந்தீர்கள்? காரணம் யாது? என்று கேட்டார். பிராமணர்கள் தங்கள் குறைகளையும், வறுமை நிலையையும் துக்கத்தோடு சொன்னார்கள். கௌதமர் அதைச் சிரத்தையுடன் கேட்டார்.

4. விஞ்ஞாய ஸர்வம், முனிராட் க்ருபாலுஹு
ஸம்பூஜ்ய காயத்ர்,யபிதாம் சிவே! த்வாம்
ப்ராஸாத்ய த்ருஷ்ட்வா ச, தவைவ ஹஸ்தாலு
லேபே நவம் கா,மதபாத்ரமேகம்

கௌதமர் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பிராமணர்களே உங்கள் வரவால் என் இல்லம் சுத்தம் பெற்றது. நீங்கள் கவலையை விட்டுவிட்டு சந்தி ஜபம் செய்து ஓய்வெடுங்கள் என்று கூறினார். அதன் பின் அவர் காயத்ரி தேவியை துதித்தார். அவர் காயத்ரி உபாஸகர். ஜகன்மாதாவும், பரமகலாரூபியுமான காயத்ரி தேவி தரிசனம் தந்து, சர்வபோஷண ( அக்ஷய பாத்திரம்) பாத்திரம் ஒன்றைத் தந்து, “கௌதமா! நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையெல்லாம் இப்பாத்திரம் தரும்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.

5. துகூலஸௌவர்ண, விபூஷணான்ன
வஸ்த்ராதி காவோ, மஹிஷாதயச்ச
யத் யத் ஜனைரீப்,ஸிதமாசு தத் தத்
தத்பாத்ரதோ தேவி! ஸமுத்பபூவ

கௌதமருக்கு தேவி கொடுத்தது சர்வ போஷணப் பாத்திரம். சூரியன் பாண்டவர்களுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் தந்தார். ஆனால் அது பாஞ்சாலி உண்டபின் அன்றைய தினம் மறுபடியும் ஏதும் தராது. ஆனால் கௌதமருக்கு அம்பாள் தந்த அக்ஷய பாத்திரம், அறுசுவைப் பதார்த்தங்கள், பூஷணங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆடு, மாடு, பசு, யக்ஞத்திற்கு வேண்டிய திரவியங்கள், பாத்திரங்கள் இப்படி எதை எல்லாம் கௌதமர் விரும்பினாரோ அதை எல்லாம் எப்பொழுதும் தந்தது. காத்திருக்காமல் நினைத்த உடனே எதுவும் கிடைத்தது.

6. ரோகோ ந, தைந்யம், ந, பயம் ந சைவ,
ஜனா மிதோ மோத,கரா பபூவுஹு
தே கௌதமஸ்யோக்ர,த ப: ப்ரபாவம்
உச்சைர் ஜகுஸ்தாம், கருணார்த்ரதாம் ச

அனைத்து ஜனங்களும் கௌதமரின் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் கிடைத்தன. அசூயை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் மகிழ்வித்தார்கள். இதற்குக் காரணம் கௌதமரின் தவ சக்தியே. இதை அனைவரும் அறிந்ததால் கௌதமரின் புகழையும், பெருமையையும் பேசினார்கள். அவரின் தவ வலிமையையும் காருண்யத்தையும் பெருமையாகச் சொன்னார்கள்.

7. ஏவம் ஸமா த்வா,தச தத்ர ஸர்வே
நிந்யு:; கதாசின், மிளிதேஷு தேஷு
ஸ்ரீநாரதோ தேவி! சசீவ காயத்ரீ
ஆச்சர்ய சக்திம் ப்ரக்ருணன்னவாப

ஒரு நாள் நாரத மஹரிஷி “மகதி” என்னும் வீணையை மீட்டிக் கொண்டு, காயத்ரி தேவியின் புகழைப் பாடிக்கொண்டு, கௌதமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். சந்திரனைப் பார்த்தால் மனம் எப்படி குளிர்ச்சி அடையுமோ அப்படி நாரதரைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.

8. ஸ பூஜிதஸ்தத்ர, நிஷண்ண உச்சைர்ஹி
நிவேத்ய தாம் கௌ,தமகீர்திலக்ஷ்மீம்
ஸபாஸு சக் ராதி,ஸுரை: ப்ரகீதாம்
ஜகாம; ஸந்தோ, ஜஹ்ருஷு: க்ருதஜ்ஞாஹா

நாரத மஹரிஷியை அனைவரும் பூஜித்தார்கள். “தேவ சபையில் தேவேந்திரன் கௌதம முனிவர் எல்லோரையும் போஷிக்கும் பெருமையைச் சொல்ல, அதைக் கேட்டு நான் கௌதமரைப் பார்க்க வந்தேன்” என்று கௌதமரின் கீர்த்தியை நாரதர் பெருமையுடன் சொன்னார். இந்திராதி தேவர்களும் கௌதமரை மிகவும் புகழ்ந்தார்கள். கௌதமரின் பெருமை பூ உலகம் மட்டும் இன்றி வானுலகிலும் பரவியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

9. காலே தராம் வ்ருஷ்டி,ஸம்ருத்தஸஸ்யாம்
த்ருஷ்ட்வா ஜனா கௌ,தமமானமந்த:
ஆப்ருச்ச்ய தே ஸஜ்,ஜனஸங்கபூதா
முதா ஜவாத் ஸ்வ,ஸ்வ க்ருஹாணி ஜக்முஹு

காலம் கனிந்தது. பூமியில் மழை பொழிந்தது. செடி கொடிகள் எல்லாம் தழைக்க ஆரபித்தன. கௌதமரால் போஷிக்கப் பட்ட ஜனங்கள் அவரை வணங்கி, நன்றி கூறி, அவரவர் இல்லம் மீண்டும் திரும்பினார்கள்.

10. துக்கானி மே ஸந்து, யதோ மனோ மே
ப்ரதப்தஸங்கட்,டித ஹேமசோபி
விசுத்தமஸ்துத்; த்வயி பத்தராகோ
பவானி; தே தேவி! நமோஸ்து பூய:

மழை இல்லாமல் பசிக் கொடுமையிலும், வறுமையிலும் வாடிய ஜனங்கள் ,கௌதமர் ஆஸ்ரமம் வந்தார்கள். ஆஸ்ரம வாசம் அவர்களின் மனதைத் தூய்மை படுத்தியது. மழையின்றி அவர்கள் பட்ட கஷ்டம் ,இப்படி அனுக்ரஹமாக மாறியது. நாமும் நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுக்ரஹமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விவேகம். தங்கம் எப்படிப் பதமாகிறது? நெருப்பில் காய்ச்சி, நீரில் குளிரவைத்து, இரும்பால் அடிக்கிறார்கள். அதுபோல் என் மனமும் சுத்தமாக வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகிறார். அதற்காகத் தான் எந்த துக்கத்தைத் தாங்கவும் தயார் என்று சொல்கிறார். மனம் தெளிந்து பக்தி வளர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தேவியை வணங்குகிறார்.

முப்பத்தி மூன்றாம் தசகம் முடிந்தது