17 ஸப்தத³ஶத³ஶக꞉ - ஸுத³ர்ஶனகோஸலப்ராப்தி꞉
https://www.youtube.com/watch?v=7XKtfIynh74https://www.youtube.com/watch?v=7XKtfIynh74
DASAKAM 17 TAMIZH
ST0RY@5G
17 ஸப்தத³ஶத³ஶக꞉ - ஸுத³ர்ஶனகோஸலப்ராப்தி꞉
யுதா⁴ஜிதம்ʼ ஶத்ருஜிதம்ʼ ச ஹத்வா ரணாங்க³ணஸ்தா² நுதிபி⁴꞉ ப்ரஸன்னா .
ஸுபா³ஹுமுக்²யானனுக்³ருʼஹ்ய ப⁴க்தான் ஸர்வேஷு பஶ்யத்ஸு திரோத³தா⁴த² .. 17-1..
ப்ருʼஷ்டோ ந்ருʼபான் ப்ராஹ ஸுத³ர்ஶனஸ்தான் த்³ருʼஷ்டா ப⁴வத்³பி⁴꞉ க²லு ஸர்வஶக்தா .
யா நிர்கு³ணா யோகி³பி⁴ரப்யத்³ருʼஶ்யா த்³ருʼஶ்யா ச ப⁴க்தை꞉ ஸகு³ணா வினீதை꞉ .. 17-2..
யா ராஜஸீத³ம்ʼ ஸ்ருʼஜதீவ ஶக்திர்யா ஸாத்விகீ பாலயதீவ விஶ்வம் .
யா தாமஸீ ஸம்ʼஹரதீவ ஸர்வம்ʼ ஸத்³வஸ்து ஸைவான்யத³ஸத்ஸமஸ்தம் .. 17-3..
ப⁴க்தார்திஹந்த்ரீ கருணாமயீ ஸா ப⁴க்தத்³ருஹாம்ʼ பீ⁴திகரீ ப்ரகாமம் .
வஸன் ப⁴ரத்³வாஜதபோவனாந்தே சிராய மாத்ரா ஸஹ தாம்ʼ ப⁴ஜே(அ)ஹம் .. 17-4..
தாமேவ ப⁴க்த்யா ப⁴ஜதேஹ பு⁴க்திமுக்திப்ரதா³மஸ்து ஶுப⁴ம்ʼ ஸதா³ வ꞉ .
ஶ்ருத்வேத³மானம்ரமுகா²ஸ்ததே²தி ஸம்மந்த்ர்ய பூ⁴பாஶ்ச ததோ நிவ்ருʼத்தா꞉ .. 17-5..
ஸுத³ர்ஶனோ மாத்ருʼவதூ⁴ஸமேத꞉ ஸுபா³ஹுமாப்ருʼச்²ய ரதா²தி⁴ரூட⁴꞉ .
புரீமயோத்⁴யாம்ʼ ப்ரவிஶன் புரேவ ஸீதாபதிஸ்தோஷயதி ஸ்ம ஸர்வான் .. 17-6..
லீலாவதீம்ʼ ப்ராப்ய விமாதரம்ʼ ச நத்வா விஷண்ணாம்ʼ ஹதபுத்ரதாதாம் .
ஸது³க்திபி⁴꞉ கர்மக³தீ꞉ ப்ரபோ³த்⁴ய ஸ ஸாந்த்வயாமாஸ மஹேஶி ப⁴க்த꞉ .. 17-7..
ஜனேஷு பஶ்யத்ஸு ஸுத³ர்ஶனோ(அ)த்ர த்வாம்ʼ பூஜயித்வா கு³ருணா(அ)பி⁴ஷிக்த꞉ .
ராஜ்யே த்வதீ³யம்ʼ க்³ருʼஹமாஶு க்ருʼத்வா பூஜாவிதா⁴நாதி³ ச ஸம்ʼவ்ருʼத⁴த்த .. 17-8..
தஸ்மின் ந்ருʼபே த்வத்ஸத³னானி க்ருʼத்வா ஜனா꞉ ப்ரதிக்³ராமமபூஜயம்ʼஸ்த்வாம் .
காஶ்யாம்ʼ ஸுபா³ஹுஶ்ச ததா²(அ)கரோத்தே ஸர்வத்ர பேது꞉ கருணாகடாக்ஷா꞉ .. 17-9..
ந கர்மணா ந ப்ரஜயா த⁴னேன ந யோக³ஸாங்க்²யாதி³விசிந்தயா ச .
ந ச வ்ரதேனாபி ஸுகா²னுபூ⁴திர்ப⁴க்த்யைவ மர்த்ய꞉ ஸுக²மேதி மாத꞉ .. 17-10..
நாஹம்ʼ ஸுபா³ஹுஶ்ச ஸுத³ர்ஶனஶ்ச ந மே ப⁴ரத்³வாஜமுனி꞉ ஶரண்ய꞉ .
கு³ரு꞉ ஸுஹ்ருʼத்³ப³ந்து⁴ரபி த்வமேவ மஹேஶ்வரி த்வாம்ʼ ஸததம்ʼ நமாமி .. 17-11..
தசகம் 17 ஸுதர்சன கோஸலப்ராப்தி
யுதா⁴ஜிதம்ʼ ஶத்ருஜிதம்ʼ ச ஹத்வா ரணாங்க³ணஸ்தா² நுதிபி⁴꞉ ப்ரஸன்னா .
ஸுபா³ஹுமுக்²யானனுக்³ருʼஹ்ய ப⁴க்தான் ஸர்வேஷு பஶ்யத்ஸு திரோத³தா⁴த² .. 17-1..
135
1. யுத்தத்தில் ஸுதர்சனனைக் கொன்றே தீருவேன் என்று முழக்கமிட்ட யுதாஜித்தை, அன்னை வதம் செய்தாள். ஸுதர்சனனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்ருஜித்திற்கு சசிகலையை விவாஹம் செய்வதற்காகத்தான் இந்த யுத்தம் நடந்தது. ஆனால் யுத்தத்தில் அவனும் மாண்டான். இவர்களின் மரணத்திற்குக் காரணம் அம்பாளிடமும் பக்தி இல்லை, நல்ல ஸத் ஜனங்களிடமும் விரோதம். சுபாஹு பக்தியுடன் தேவியை துதித்தான். அன்னை பக்தர்களைக் காப்பாற்றினாள். யுத்தம் முடிந்ததும் அன்னை மறைந்து விடுகிறாள்.ப்ருʼஷ்டோ ந்ருʼபான் ப்ராஹ ஸுத³ர்ஶனஸ்தான் த்³ருʼஷ்டா ப⁴வத்³பி⁴꞉ க²லு ஸர்வஶக்தா .
யா நிர்கு³ணா யோகி³பி⁴ரப்யத்³ருʼஶ்யா த்³ருʼஶ்யா ச ப⁴க்தை꞉ ஸகு³ணா வினீதை꞉ .. 17-2..
2. யுத்தத்தில் யுதாஜித், சத்ருஜித் இருவரும் இறந்த பிறகு சுபாகுவும், ஸுதர்சனனும் தேவியைத் துதிக்கிறார்கள். சுபாகுவின் பக்திக்கு மெச்சிய அன்னை அவன் விருப்பப்படி காசி நகரத்தை ஒரு முக்தி க்ஷேத்ரமாக விளங்கும் படி அனுக்ரஹித்து, காசியில் சகல சம்பத்தும் இருக்கும், உலகம் உள்ளளவும் நான் இந்த காசியில் வாசம் செய்வேன் என்று சொன்னாள். உன்னை பூஜிக்காமல் இதுகாரும் நான் வாளா இருந்தேனே என வருந்திய ஸுதர்சனனிடம், அயோத்திக்குச் சென்று தன்னை முக்காலமும் கிரமப்படி பூஜித்து வரும்படிச் சொன்னாள். இதைக் கண்ட மற்ற அரசர்கள் அவர்களிடம் "நீங்கள் துதிக்கின்றீர்களே இங்கு யுத்தம் செய்த அந்தப் பெண் யார்? என்று வினவினார்கள். ஸுதர்சனன் அன்னையின் மகிமையைச் சொல்கிறார். இது தேவி பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸுதர்சனன் சொல்கிறார், சகுணையும் நிர்குணையும் அவளே. நிர்குணையான தேவியை யோகிகள் கூடப் பார்க்க முடியாது. ஆனால் சகுணையான தேவியை பக்தர்களால் காண முடியும். யுதாஜித், சத்ருஜித் ஆகிய துர் புத்தி கொண்டவர்கள் முன் கூட அன்னை காட்சி தந்தாள். ஆனால் அவர்களால் அன்னையை அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால் வணங்கவோ துதிக்கவோ செய்ய முடியவில்லை. காரணம் மனதில் பக்தி இல்லை. தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற நினைவு தான் காரணம்.யா ராஜஸீத³ம்ʼ ஸ்ருʼஜதீவ ஶக்திர்யா ஸாத்விகீ பாலயதீவ விஶ்வம் .
யா தாமஸீ ஸம்ʼஹரதீவ ஸர்வம்ʼ ஸத்³வஸ்து ஸைவான்யத³ஸத்ஸமஸ்தம் .. 17-3..
3 தேவர்களும் ப்ரம்மாவும் கூட அறிந்து கொள்ள முடியாத பெருமை உடையவள் தேவி. அப்படியிருக்க நான் என்னவென்று சொல்வேன்? அனைத்திற்கும் ஆதியான சக்தி அவள் தான். அவள் முக்குண சக்தி கொண்டவள். அவளின் ரஜோகுணத்தால் உலகம் தோன்றுகிறது. சத்வ குணத்தால் உலகம் காப்பாற்றப்படுகிறது. தமோகுணத்தால் உலகம் அழிக்கப் படுகிறது. அவளே அந்த நிர்குண பராசக்தியும் ஆவாள். வேண்டுவோர் வேண்டும் பயனைத் தரும் காரணமும் அவளே.ப⁴க்தார்திஹந்த்ரீ கருணாமயீ ஸா ப⁴க்தத்³ருஹாம்ʼ பீ⁴திகரீ ப்ரகாமம் .
வஸன் ப⁴ரத்³வாஜதபோவனாந்தே சிராய மாத்ரா ஸஹ தாம்ʼ ப⁴ஜே(அ)ஹம் .. 17-4..
4. இந்த அன்னை உலகத்திற்கே மாதா. அனைத்து ஜீவன்களும் அவளின் குழந்தைகள். அவளின் கருணைக்கு அளவே இல்லை. நம்முடைய துக்கம் துடைப்பவள், போக்குபவள் அவள் தான். தன் பக்தனுக்கு யாரும் துன்பம் தந்தால் அவர்களை அன்னை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். அவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தருவாள். காசி நகரத்தில் யுதாஜித், சத்ருஜித் இவர்களோடு யுத்தம் செய்து சுபாஹு, ஸுதர்சனன், சசிகலை இவர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். ஸுதர்சனன் சிறு வயது முதல் அர்த்தம் தெரியாமலே சொல்லி வந்த காமராஜ பீஜ மந்திரம் அவனுக்கு அன்னையின் அனுக்ரஹத்தைத் தந்தது.5.தாமேவ ப⁴க்த்யா ப⁴ஜதேஹ பு⁴க்திமுக்திப்ரதா³மஸ்து ஶுப⁴ம்ʼ ஸதா³ வ꞉ .
ஶ்ருத்வேத³மானம்ரமுகா²ஸ்ததே²தி ஸம்மந்த்ர்ய பூ⁴பாஶ்ச ததோ நிவ்ருʼத்தா꞉ .. 17-5..
5. எல்லா அரசர்களும் அந்தப் பெண் யார் என்று கேட்டதற்கு அன்னையின் மகிமை, பெருமை, சிறப்பு அனைத்தும் சொல்கிறான் ஸுதர்சனன். கண்கூடாக அவர்கள் அன்னையை யுத்த களத்திலும் பார்த்தார்கள். அனைவரும் இனி நாங்களும் தேவியை பூஜிப்போம் என்று அன்னையின் பக்தர்களாக அவரவர் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.
6. ஸுத³ர்ஶனோ மாத்ருʼவதூ⁴ஸமேத꞉ ஸுபா³ஹுமாப்ருʼச்²ய ரதா²தி⁴ரூட⁴꞉ .
புரீமயோத்⁴யாம்ʼ ப்ரவிஶன் புரேவ ஸீதாபதிஸ்தோஷயதி ஸ்ம ஸர்வான் .. 17-6..
பிறகு ஸுதர்சனன் சுபாகுவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவி சசிகலை, தாயார் மனோரமாவுடன், காசி நகரத்திலிருந்து கிளம்பி, கோஸல ராஜ்யம் வந்து சேர்கிறான். ஸுதர்சனனைக் கண்ட மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் அவர்களை வரவேற்கின்றனர். அந்த காட்சி எப்படி இருந்தது என்றால் ராம ராவண யுத்தம் முடிந்து வெற்றியுடன் திரும்பிய ராமனுக்கு அயோத்தி மக்கள் தந்த வரவேற்பு போல் இருந்ததாம்.
7. லீலாவதீம்ʼ ப்ராப்ய விமாதரம்ʼ ச நத்வா விஷண்ணாம்ʼ ஹதபுத்ரதாதாம் .
ஸது³க்திபி⁴꞉ கர்மக³தீ꞉ ப்ரபோ³த்⁴ய ஸ ஸாந்த்வயாமாஸ மஹேஶி ப⁴க்த꞉ .. 17-7..
அயோத்திக்குச் சென்ற ஸுதர்சனன், தன் தாயாரான லீலாவதியைத் தான் முதலில் நமஸ்கரித்தான். இதைப் போலவே ராமனும் அயோத்தி திரும்பியவுடன் முதலில் கைகேயியைத் தான் நமஸ்கரித்தான். லீலாவதி ஆரம்ப காலத்தில் மனோரமாவுடனும் ஸுதர்சனனிடமும் மிகவும் அன்பாகத்தான் இருந்தாள். அவள் தந்தை யுதாஜித்தால் தான் பிரச்சனைகள் வந்தது. தன் கணவனை இழந்த மனோரமா தன் மகனுடன் அன்று எப்படி அனாதையாக இருந்தாளோ, அப்படி இன்று லீலாவதியும் தன் மகனை இழந்து ,கணவனையும் இழந்து தனித்து நின்றாள். ஸுதர்சனன் அவளுக்கு ஆறுதல் சொல்லி, யுதாஜித்தும் சத்ருஜித்தும் தன்னால் யுத்தத்தில் கொல்லப் படவில்லை. தேவிதான் அவர்களை வதம் செய்தாள் என்று நிலையை விளக்கி, எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. நான் சிறிதும் இந்த ராஜ்யத்திற்கு ஆசைப்படவில்லை. நாம் வெறும் பொம்மலாட்ட பொம்மைதான். அவள் ஆட்டிவைப்பது போல் அனைவரும் ஆடுகிறோம். இதற்கு நாம் யாரும் காரணம் இல்லை என்று சொன்னான். மேலும் நான் உங்களை என் தாய் போல் கவனித்துக் கொள்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். வயதானவர்களுக்கும் துக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் சொல்வது மிக மிக உயர்ந்த குணம்.
8. ஜனேஷு பச்யதஸு, ஸுதர்சனோத்ர த்வாம் பூஜயித்வா, குருணாSபிஷிக்த ராஜ்யே த்வதீயம், க்ருஹாமாசு க்ருத்வா பூஜாவிதானா,தி ச ஸம்வ்ரு தத்த ஜனேஷு பஶ்யத்ஸு ஸுத³ர்ஶனோ(அ)த்ர த்வாம்ʼ பூஜயித்வா கு³ருணா(அ)பி⁴ஷிக்த꞉ .
ராஜ்யே த்வதீ³யம்ʼ க்³ருʼஹமாஶு க்ருʼத்வா பூஜாவிதா⁴நாதி³ ச ஸம்ʼவ்ருʼத⁴த்த .. 17-8.. ஸ்வர்ண மயமாயும் மணிமயமாயுமுள்ள சிம்மாசனம் ஒன்றைச் செய்து, வேத வாத்ய கோஷங்களுடன் தேவியை அதில் பிரதிஷ்டைச் செய்து, பூஜை செய்தான். பிரஜைகளையும் தேவியை பூஜிக்க வேண்டும் என்று சொன்னான். நவராத்ரியில் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்தான். அது போல் சுபாகுவும் காசியில் தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, பூஜித்து, மக்களையும் பூஜிக்கச் சொன்னான்.
9. தஸ்மின் ந்ருப்பே த்வத்,ஸதனானி க்ருத்வா ஜனா: ப்ரதிக்ரா,மமபூஜயம்ஸ்த்வாம் காச்யாம் ஸுபாஹுச்ச, ததாகரோத் ; தே ஸர்வத்ர பேது: கருணா கடாக்ஷாஹா
தஸ்மின் ந்ருʼபே த்வத்ஸத³னானி க்ருʼத்வா ஜனா꞉ ப்ரதிக்³ராமமபூஜயம்ʼஸ்த்வாம் .
காஶ்யாம்ʼ ஸுபா³ஹுஶ்ச ததா²(அ)கரோத்தே ஸர்வத்ர பேது꞉ கருணாகடாக்ஷா꞉ .. 17-9..
ஒரு ராஜ்யத்தில் ராஜா எப்படியோ மக்களும் அப்படியே. ராஜா தேவியை பூஜிப்பதால் அனைவரும் தேவியை பக்தியுடன் பூஜித்து வந்தனர். எல்லோரும் தேவி பக்தர்கள் ஆக ஆனார்கள். ஒவ்வொரு ஊரிலும் அன்னையின் ஆலயம் கட்டினார்கள். அதுமட்டும் இல்லாமல் பூஜையும் முறைப்படி செய்து வந்தனர். எல்லோருக்கும் அன்னையின் கருணா கடாக்க்ஷமும் கிடைத்தது. ஸுதர்சனனின் ராஜ்யமும் சுபாஹுவின் ராஜ்யமும் சிறப்பாக நடந்து வந்தன.
10. ந கர்மணா ந, ப்ரஜயா தனேன ந யோகஸாங்க்யா,தி விசிந்தயா ச ந ச வ்ரதே,னாபி ஸுகானுபூதிர் பக்த்யைவ மர்த்ய:, ஸுகமேதி மாதஹ
ந கர்மணா ந ப்ரஜயா த⁴னேன ந யோக³ஸாங்க்²யாதி³விசிந்தயா ச .
ந ச வ்ரதேனாபி ஸுகா²னுபூ⁴திர்ப⁴க்த்யைவ மர்த்ய꞉ ஸுக²மேதி மாத꞉ .. 17-10.. பக்தி இல்லாத மனிதனின் வாழ்க்கை வீண்தான். பக்தி இருந்தால் தேவியின் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். பக்தி இல்லை என்றால் எல்லாம் துக்கமயம் தான். பக்தனுக்கு எல்லாம் இன்ப மயம். பக்தியே அனைத்திலும் சிறந்தது.
11. நாஹம் ஸுபாஹுச்ச, ஸுதர்சனச்ச ந மே பரத்வாஜ,முனி: சரண்யஹ குரு: ஸுஹ்ருத், பந்துரபி த்வமேவ மஹேச்வரி த்வாம், ஸததம் நமாமி நாஹம்ʼ ஸுபா³ஹுஶ்ச ஸுத³ர்ஶனஶ்ச
ந மே ப⁴ரத்³வாஜமுனி꞉ ஶரண்ய꞉ .
கு³ரு꞉ ஸுஹ்ருʼத்³ப³ந்து⁴ரபி த்வமேவ
மஹேஶ்வரி த்வாம்ʼ ஸததம்ʼ நமாமி .. 17-11..
சுபாஹு ஒரு நல்ல பக்தன். ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்றதால் பக்தனானான். எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று இந்த கவிஞன் ஏங்குகிறார். எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை. நீதான் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என வேண்டுகிறார்.
தசகம் பதினேழு முடிந்தது.
No comments:
Post a Comment